தமிழகத்தில் இறந்து மூன்று நாட்கள் ஆன குட்டியை கீழே இறக்காமல் கண்ணீரோடு தாய்க் குரங்கு அப்பகுதியில் சுற்றி வருவது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வெளியாகி பலரது கவனத்தை பெற்றுள்ளது.
சென்னை வேலூர் மாவட்டம் ஆம்பூர் காந்தி ரோட்டில் தீயணைப்பு நிலையம் கட்டிடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த கட்டித்தின் மீது கடந்த ஞாயிற்று கிழமை தாய் குரங்கு ஒன்று இறந்த குட்டியுடன் அமர்ந்திருந்தது.
அதன் அருகில் இன்னும் பல குரங்குகள் அமர்ந்திருந்தன. அப்போது அந்த தாய் குரங்கு குட்டி குரங்கை பார்த்து வேதனையோடு கண்ணீர் வடித்ததுடன், இறந்த குட்டியுடன் அந்த குரங்கு பல்வேறு பகுதிகளில் சுற்றி திரிகின்றது.
ஒரு நொடிகூட தனது இறந்த குட்டியின் சடலத்தை விட்டு பிரியாமல் இருக்கும் தாய் குரங்கின் செயல் அப்பகுதியில் இருக்கும் பலரின் கவனத்தை பெற்றுள்ளது.
மேலும் இது தொடர்பான புகைப்படமும் இணையத்தில் வெளியாகியுள்ளது.
டெல்லியில் விமானப் பணிப்பெண்ணான அனிசியா தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் அவரது கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
டெல்லியின் பஞ்சசீல் பார்க் பகுதியை சேர்ந்தவர் அனிசியா பத்ரா, ஜேர்மன் விமான நிறுவனத்தில் பணிபுரிந்த அனிசியா, கம்ப்யூட்டர் இன்ஜினியரான மயாங்க் சிங்வியை 2 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டார்.
திருமணம் ஆனதிலிருந்தே வரதட்சணை கேட்டு அனிசியாவை, மயாங்க் கொடுமைப்படுத்தி வந்துள்ளதாக தெரிகிறது.
இதனால் இருவருக்கும் தொடர் பிரச்சனை இருந்த நிலையில், இரு தினங்களுக்கு முன் வீட்டின் மாடியிலிருந்து குதித்து அனிசியா தற்கொலை செய்து கொண்டார்.
இதற்கு முன்பாக மயாங்குக்கு, எனக்கு வாழ பிடிக்கவில்லை, தற்கொலை செய்ய போகிறேன் என மெசேஜ் அனுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக பொலிசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், அனிசியாவின் பெற்றோர்கள் மயாங்க் தன் மகளை கொன்றிருக்கலாம் என சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து வரதட்சணை கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த பொலிசார் மயாங்கை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த உலகில் வாழ பிடிக்கவில்லை, அப்பா மற்றும் அம்மாவுக்கு நீ மட்டும் தான் அண்ணா இருக்கிறாய் என்று தற்கொலை செய்து கொண்ட மாணவன் எழுதியிருந்த உருக்கமான கடிதம் சிக்கியுள்ளது.
திருப்பூர் ஊத்துக்குளி ரோடு பகுதியை சேர்ந்தவர் சிவகுமார். இவரது மகன் சஞ்சய் பிரசாந்த் (18). இவர் கோயமுத்தூர் பீளமேட்டில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த புதன்கிழமை பாலிடெக்னிக் வந்த மாணவர் சஞ்சய் பிரசாந்த் சக மாணவர்களுடன் வகுப்பறையில் பேசி கொண்டு இருந்த போது வகுப்பில் பாடம் நடத்தி கொண்டு இருந்த கம்ப்யூட்டர் ஆசிரியர் முருகன் மாணவர்கள் தன்னைப் பற்றி தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள் என நினைத்து மாணவர் சஞ்சய் மற்றும் அவரது நண்பர் ஆகியோரது ஐடி கார்டை பிடிங்கிக் கொண்டு வகுப்பில் இருந்து வெளியே செல்லுமாறு கூறியுள்ளார்.
அப்போது அவர் பெற்றோர் அழைத்து வந்தால் மட்டும் தான் வகுப்பில் சேர்த்து கொள்வேன் என்றும் கூறியுள்ளார். ஆனால் சஞ்சய் பிரசாந்த் தனது பெற்றோரை அழைத்து வரவில்லை.
ஆனால் அதே வேளை மற்ற சக நண்பர்கள் பெற்றோரை அழைத்து வந்ததால் அவரை வகுப்பில் அனுமதித்து உள்ளனர். ஆனாலும் சஞ்சய் பிரசாந்த் கடந்த வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பாலிடெக்னிக் வந்து உள்ளார். தன்னை எப்படியும் ஆசிரியர் உள்ளே அழைப்பார். வகுப்பறை சென்றால் திட்டுவார் என கருதி வெளியில் காத்திருந்து உள்ளார். ஆனால் ஆசிரியர் தொடர்ந்து அழைக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதையடுத்து சஞ்சாய் திருப்பூரில் உள்ள தனது வீட்டின் பாத்ரூமில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த மாணவன் சஞ்சய் எழுதியிருந்த சுமார் ஒன்றரை பக்க கடிதம் சிக்கியுள்ளது.
அந்த கடிதத்தில், அம்மா, அப்பா என்னை மன்னித்துக்கொள்ளுங்கள். எனக்கு இந்த உலகில் வாழ பிடிக்க வில்லை. இதனால் நான் உங்களை விட்டு செல்கிறேன்.
நான் எப்போதுமே தனியாக இருப்பதாக உணருகிறேன். திடீர் திடீரென்று எனது கழுத்தை யாரோ நெரிப்பது போன்று இருக்கிறது. இதனால் என்னால் படிப்பில் சரியாக கவனம் செலுத்த முடியவில்லை. உங்களிடமும் சரியாக பேச முடியவில்லை இதனால் நான் பிரிந்து செல்கிறேன்.
அன்புள்ள அண்ணா, நான் இல்லை என்று நீ கவலைப்படாதே, நான் சென்ற பின்னர் அம்மா, அப்பாவுக்கு நீ மட்டும் தான் இருக்கிறாய். என்னை பற்றி நினைத்துக்கொண்டே இருக்காதே. நன்றாக வேலை செய், அம்மா, அப்பாவை நன்றாக பார்த்துக்கொள். நான் இல்லை என்ற குறையை அவர்களுக்கு வைக்காதே.
அம்மா, அப்பா, அண்ணா மற்றும் எனது நண்பர்களை விட்டு செல்ல வருத்தமாகதான் இருக்கிறது. ஆனாலும் எனக்கு இந்த உலகத்தில் வசிக்க பிடிக்கவில்லை.
எனவே நான் செல்கிறேன். அம்மா, அப்பா என்னை மன்னித்து விடுங்கள், அண்ணனை நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள் என்று எழுதியிருந்ததாக இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வரும் பொலிஸ் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
மேலும் மாணவன் தற்கொலை செய்து கொண்டதற்கு ஆசிரியர் தான் காரணம் என்று கூறப்பட்ட நிலையி, சஞ்சய் தன்னுடைய கடிதத்தில் கல்லூரியில் நடந்த சம்பவம் குறித்து எதுவும் எழுதவில்லை எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
மாணவன் தற்கொலை செய்து கொண்டதற்கு காரணமான ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவர்கள் நேற்று வகுப்பை புறக்கணித்து சாலை மறியலில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் பிரபல சின்னத்திரை நடிகை பிரியங்கா நேற்று அவரது வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார்.
பிரபல தனியார் தொலைக்காட்சிகள் மற்றும் தமிழ் தொடர்களில் நடித்து வந்த இவர், கூடைப்பந்து வீரர் அருண்பாலாவை கடந்த சில ஆண்டுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
இந்த நிலையில், நேற்று காலை பிரியங்காவின் வீடு திறக்கப்படவில்லை. இதனால், அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் கதவைத் தட்டினர். ஆனால் அவர் திறக்கவில்லை. இதனால், ஜன்னல் வழியாக உள்ளே எட்டிப்பார்த்தபோது, படுக்கையறையில் தூக்கில் தொங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
இதனைத்தொடர்ந்து பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, விரைந்து வந்த பொலிசார் அவரை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
முதற்கட்ட விசாரணையில், பிரியங்காவுக்கு குடும்பத்தில் சில பிரச்னைகள் இருந்தது தெரியவந்துள்ளது. கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக, அவர் மன வேதனையில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
மேலும், திருமணம் முடிந்து இதுநாள் வரை பிரியங்காவுக்கு குழந்தை இல்லை. இதுவும் அவரின் தற்கொலைக்குக் காரணமாக இருக்கலாம் என்று பொலிசார் கருதுகின்றனர். இருப்பினும், பிரியங்காவின் குடும்பத்தினர் மற்றும் அருகில் வசிப்பவர்களிடம் இதுகுறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தியாவில் கணவரை கத்தியால் குத்திய மனைவி இரண்டு நாட்கள் கழித்து மாமனாரை அடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் சந்தீப். இவர் மனைவி ரோஜாலின். மூன்று நாட்களுக்கு முன்னர் சந்தீப்புக்கும், ரோஜாலினுக்கும் இடையில் சண்டை ஏற்பட்ட நிலையில் கத்தியால் கணவரை ரோஜாலின் குத்தியுள்ளார். இதையடுத்து படுகாயமடைந்த சந்தீப் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் நேற்று ரோஜாலின் தனது மாமனார் சரத்துடன் வீட்டில் இருந்த நிலையில் அவருடன் வாய்தகறாறு ஏற்பட்டது.
இதில் கோபமடைந்த ரோஜாலின் மாமனாரை கட்டையால் அடித்து கொலை செய்துள்ளார்.
இது குறித்து பொலிசுக்கு தகவல் தரப்பட்ட நிலையில் தலைமறைவாக இருந்த ரோஜாலினை பொலிசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.
சென்னையில் காது கேளாத 11 வயது சிறுமி 17 பேரால் ஏழு மாதங்களாக பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
குற்றவாளிகள் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களது சார்பில் எந்தவொரு வழக்கறிஞரும் ஆஜராக மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பச்சிளம் குழந்தைகள், சிறுமிகள் முதல் பாட்டி வரை பாலியல் தாக்குதல்கள் தொடர்ந்த வண்ணமே உள்ளன, திரையுலகினரும் தங்களது அதிர்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
சிறுமியை சீரழித்தவர்களின் ஆணுறுப்பை அறுத்தெறியுங்கள் என்று பார்த்திபன் தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார். நடிகை கஸ்தூரி, அந்த 17 பேரும் ஆட்கள் இல்லை முகங்கள் இருக்கும் ஆணுறுப்புகள் என்கிறார். இந்த அவமானத்திலாவது தற்கொலை செய்து கொள்ளுங்கள் என காட்டமாக தெரிவித்துள்ளார் வரலட்சுமி சரத்குமார்.
சிறுமியை சீரழித்த 17 பேரை தாக்கியது தவறு தான் என்றாலும் மக்களின் உணர்வு நியாயம் தான் என்கிறார் நடிகை குஷ்பு.
நடிகர் விஷால் செய்துள்ள டுவிட்டில், பாலியல் பலாத்காரத்திற்கு மரண தண்டனை எனும் சட்டம் கொண்டு வர இன்னும் எத்தனை பேரை இழக்க வேண்டும். சென்னை சிறுமி சம்பவம் அறிந்து அதிர்ச்சியும், கோபமும் அடைந்தேன் என தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் நேற்று இருவேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின்போது தமது உடமையில் போதைப் பொருளை வைத்திருந்த நபர் ஒருவரும் ஹெரோயின் போதைப் பொருள் வியாபாரி ஒருவரையும் கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
வன்னிப்பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபரின் கீழ் செயற்படும் புலனாய்வுப் பிரிவினருக்குக்கடைத்த தகவல் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின்போது வவுனியா சுற்றுவட்ட வீதியில் தோணிக்கல் பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய நபர் ஒருவர் 40 மில்லி கிராம் ஹெரோயின்போதைப் பொருளை தனது உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை நேற்றைய தினத்தில் மரக்காரம்பளை மதுபான நிலையத்திற்கு அருகில் ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த தேக்கவத்தை பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய ஹெரோயின் போதைப் பொருள் வியாபாரி ஒருவரது உடமையில் 70 மில்லிக் கிராம் போதைப் பொருளினை வைத்திருந்ததாகத் தெரிவித்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
இருவரையும் மேலதிக விசாரணைகளுக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் இன்றைய தினம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்தனர்.
அரச உத்தியோகத்தர் ஒருவர் நாட்டின் எப் பகுதியிலும் கடமையாற்றக்கூடியவராக இருக்க வேண்டும். இதனால் பலர் தமது சொந்த இடங்களையும், வீடுகளையும், காணிகளையும் விட்டு வந்து வேறு பிரதேசங்களில் பணியாற்றுகின்றனர்.
வாடகை வீடுகளிலும், அரச விடுதிகளிலும் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் வசித்து வருகின்றனர். இவ்வாறு சொந்த வீடு, வாசல் இன்றி நெருக்கடிகளை எதிர்கொள்ளும் அரச ஊழியர்களுக்கும் காணிகளற்ற அரச உத்தியோகத்தர்களுக்கும் 2011ம் ஆண்டளவில் ஓமந்தை பகுதியில் உள்ள அரச காணியில் இருந்த காடுகளை வெட்டி அரச ஊழியர்களுக்கு காணிகள் பகிர்ந்தளிக்கப்பட்டன.
ஒவ்வொரு குடும்பத்திற்கும் 4 பரப்புக் காணி வீதம் பல்வேறு அரச திணைக்களங்களின் உத்தியோகத்தர்களுக்கு இந்தக் காணிகள் பகிர்ந்தளிக்கப்பட்டன.
வீடமைப்பதற்காக அரச மானியமாக 5 லட்சம் ரூபா சில குடும்பங்களுக்கு வழங்கப்பட்டும், 7 ஆண்டுகள் கடந்த நிலையிலும் இன்று காடாய் காட்சியளிக்கின்றது.
600 அரச ஊழியர்களுக்கு ஓமந்தை அரச வீட்டுத்திட்டத்தில் காணிகள் வழங்கப்பட்ட போதிலும் 65 காணிகளில் மாத்திரம் அரச ஊழியர்கள் வீடுகளை அமைத்து குடியமர்ந்துள்ளனர்.
மிகுதி 155 காணிகளில் முழுமையாக காடுகளாக காணப்படுவதுடன் , 200 காணிகளில் கிணறு மாத்திரம் கட்டப்பட்ட நிலையிலும், 130 காணிகள் வீடு மாத்திரம் கட்டப்பட்ட நிலையில் மொத்தமாக 485 காணிகள் பற்றைக்காடுகளாக காணப்படுகின்றன.
இவ் விடயம் தொடர்பாக ஓமந்தை அரச விட்டுத்திட்டத்தில் வசிக்கும் அரச ஊழியர்கள் கருத்து தெரிவிக்கையில்,
இவ் அரச வீட்டுத்திட்டத்தில் பல குறைபாடுகள் காணப்படுகின்றன. இங்கு காணிகள் வழங்கப்பட்டுள்ள அரச உத்தியோகத்தர்களுக்கு வவுனியாவில் வேறு இடங்களில் காணிகள் இருப்பதினால் இங்கு அவர்கள் வருவதில்லை
600 அரச ஊழியர்களுக்கு காணிகள் வழங்கப்பட்டிருந்த நிலையிலும் தற்போது 65 அரச ஊழியர்களே வசித்து வருகின்றோம். மிகுதி காணிகள் பற்றைக்காடுகளாக காணப்படுவதினால் நாங்கள் அச்சத்தில் மத்தியில் வாழ்ந்து வருகின்றோம்.
பாம்புகள், காட்டு உயிரினங்களின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்தே காணப்படுகின்றது. மற்றும் அனைவரும் அரச ஊழியர்கள் என்பதினால் நாங்கள் வேலைக்கு சமூகமளிக்கும் சமயத்தில் திருடர்களில் தொல்லைகள் காணப்படுகின்றது.
எனவே காடுகளாக காணப்படும் காணிகளை அரசாங்கள் மீள அவர்களிடமிருந்து கையகப்படுத்தி காணிகள், வீடுகள் அற்று வவுனியாவில் பணியாற்றும் அரச உத்தியோகத்தர்களுக்கு வழங்க வேண்டுமென விசனம் தெரிவிக்கின்றனர்.
வவுனியாவில் சொந்த நிலம், சொந்த வீடுகள் அற்ற நிலையில் பலர் வாழ்ந்து வருகின்றனர். இந் நிலையில் ஓமந்தை அரச ஊழியர் வீட்டுத்திட்டம் இந் நிலையில் காணப்படுவது மனதிற்கு வேதனையளிப்பதாக சமூக ஆர்வலர்களும் விசனம் தெரிவிக்கின்றனர்.
சிறுநீரகங்கள் இரண்டும் செயலிழந்த நிலையில் தான் பல்வேறு பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்து வருவதாகவும், தனது மருத்துவ செலவிற்காக தங்களால் முடிந்த உதவிகளை வழங்குமாறு வவுனியாவை சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தை ஒருவர் மக்களிடம் உதவி கோரியுள்ளார்.
வவுனியா – செட்டிகுளம், துடரிக்குளம், வீதியில் வசிக்கும் சூசை ஜேசுராசா (றொபின்) என்பவருக்கு அவசரமாக சிறுநீரகம் தேவைப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில், கடந்த 2008ம் ஆண்டு சிறுநீரக நோய் ஏற்பட்டுள்ளதுடன், 2016ம் ஆண்டு இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்துள்ளன.
வாரத்தில் இரண்டு நாட்கள் வவுனியா பொது வைத்தியசாலையில் இரத்தத்தை சுத்திகரித்து வருவதாக இவர் தெரிவித்துள்ளார்.
எனது பிள்ளைகளை படிப்பிக்கவும், எனது வைத்திய செலவுகளுக்கும் பொருளாதாரம் போதாமையாக உள்ளது.
மேலும், எனது நிலைமையை புரிந்து எனக்கு சிறுநீரகம் தானம் செய்யவும் அல்லது மாற்று சிறுநீரகம் சிகிச்சைக்கு தேவையான பண உதவிகள் வழங்குமாறு அன்பாக கேட்டுக்கொள்கிறேன் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்புகளுக்கு :- 077 5872262 / 025 5723751
வங்கி கணக்கு :- மக்கள் வங்கி
பெயர் :-சூசை யேசுராசா
கணக்கு இலக்கம் :- 356-2-001-3-1-1605392
வடமாகாண மக்களின் நலனை கருத்தில் கொண்டு இலவச நோயாளர் காவு வண்டி சேவையினை செயற்படுத்த வட மாகாண சுகாதார அமைச்சர் ஜீ.குணசீலன் திட்டமிட்டிருந்தார்.
அந்த வகையில் கொழும்பிலிருந்து புறப்பட்ட ஐம்பது நோயாளர் காவு வண்டிகள் நேற்று (18.07.2018) மாலை வவுனியாவை வந்தடைந்தன. பின்னர் இரவு 8 மணியளவில் வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி புறப்பட்டன.
யாழ்ப்பாணத்தில் நாளையதினம் இடம்பெறவுள்ள நிகழ்வு ஒன்றில் வைத்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு இவ் வண்டிகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
வடக்கு மாகாணத்தில் 21 நோயாளர் காவு வண்டிகள் சேவையில் ஈடுபடவுள்ளன. மிகுதி 29 நோயாளர் காவு வண்டிகள் ஊவா மாகாணத்தில் சேவையில் ஈடுபடவுள்ளன.
வவுனியாவில் மூன்று, மன்னாரில் மூன்று, முல்லைத்தீவில் மூன்று, மாங்குளத்தில் இரண்டு, கிளிநொச்சியில் நான்கு, யாழ்ப்பாணத்தில் ஏழு நோயாளர் காவு வண்டிகள் சேவையில் ஈடுபடவுள்ளதாக ஒருங்கிணைப்பாளர் தெரிவித்தார்.
24 மணிநேரமும் நோயாளிகள் 1990 என்ற இலக்கத்திற்கு அழைப்பினை மேற்கொண்டு நோயாளர் காவு வண்டி சேவையினை இலவசமாக பெற்றுக்கொள்ள முடியும்.
வவுனியா வைரவப்புளியங்குளம் புகையிரத வீதியில் நேற்று (18.07.2018) இரவு 8.15 மணியளவில் துவிச்சக்கரவண்டியினை திருட முற்பட்ட நபர் பொதுமக்களினால் நையப்புடைக்கப்பட்டு வவுனியா பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
வவுனியா வைரவப்புளியங்குளம் புகையிரத நிலைய வீதியில் அமைந்துள்ள மரக்கறி வியாபார நிலையத்திற்கு ஒருவர் தனது துவிச்சக்கரவண்டியினை வீதியில் தரித்து விட்டு சென்றுள்ளார்.
இதன் போது அந்த துவிச்சக்கரவண்டியினை 25 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் அபகரித்துச் செல்ல முற்பட்டுள்ளார்.
இதனை அவதானித்த நபர் ஒருவர் இளைஞனை மடக்கிப் பிடித்துள்ளார். இதன் போது குறித்த இளைஞனை அவ்விடத்தில் நின்ற நபர்கள் நையப்புடைத்துள்ளார்கள்.
பின்னர் வவுனியா பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து குறித்த இளைஞன் வவுனியா பொலிஸாரினாள் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டார்.
சீதுவை பகுதியிலுள்ள மண் மேட்டில் இருந்து பெருந்தொகை நாகப் பாம்புகள் மீட்கப்பட்டுள்ளன.
ரத்தொழுகம வீட்டிற்கு அருகில் மண் மேட்டிற்குள் மறைந்திருந்த 37 குட்டிகளுடன் மிகவும் நீளமான பாம்பு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட பாம்பும் அதன் குட்டிகளும் காட்டில் விடுவிக்கப்பட்டுள்ளன. இதன் போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று பேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
5 அடி நீளமான இந்தப் பாம்பு நாஜா நாஜா என்ற விஞ்ஞான பெயரில் அழைக்கப்படுகிறது.
இலங்கையில் வாழும் நாகப்பாம்பு ஒரு தடவையில் 10 தொடக்கம் 30 முட்டைகளை இடும் என வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அனைத்து முட்டைகளும் உடைந்து பாம்புகள் வெளியாகும் சந்தர்ப்பங்கள் ஓரளவு குறைவு. எனினும் இதுவொரு அபூர்வ சம்பவம் எனவும் பேஸ்புக்கில் வீடியோ வெளியிட்டவர் குறிப்பிட்டுள்ளார்.
வவுனியா நகரசபைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வியாபார நிலையங்கள், விடுதிகள், வாகன திருத்துமிடங்களை பதிவு செய்யும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வவுனியா நகரசபைத் தலைவர் இ.கௌதமன் தெரிவித்துள்ளார்.
வவுனியா நபகரசபையின் 4 ஆவது அமர்வு நேற்றைய தினம் நகரசபையில் இடம்பெற்றது. இதன்போது உறுப்பினர்கள் தெரிவித்த கருத்துக்கு பதில் அளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
வவுனியா நகரப்பகுதியில் உள்ள சில வீடுகளில் விபச்சாரம் இடம்பெறுவதாக நகரசபை உறுப்பினர் பாயிஸ் சபையின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.
இதன்போது நகரசபை உறுப்பினர் ரி.கே.இராஜலிங்கம், சில விடுதிகளிலும் விபச்சாரம் இடம்பெறுகின்றன என சுட்டிக்காட்டியதோடு சில விடுதிகள் போதியவசதிகள் இன்றி இயங்குவதாகவும் இவற்றை நகரசபை கவனத்தில் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.
இதன்போது பதில் அளித்த நகரசபைத் தலைவர் இ.கௌதமன், வவுனியா நகரில் உள்ள வர்த்தக நிலையங்கள், விடுதிகள், வாகன திருத்துமிடங்கள் என்பவற்றை பதிவு செய்யும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அவர்கள் விண்ணப்பப் படிவத்தை பெற்று பதிவு செய்யும் போது குறித்த விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்படும்.
அத்துடன் வீதிகளில் வைத்து வாகனங்களை திருத்தும் வாகன திருத்துமிடங்களுக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக பாதிக்கப்பட்டமையால் பல்வேறு நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது.
கோளாறு காரணமாக பிரதான ரயில் வீதியில் வேறு ரயில்கள் பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக அலுவலகம் செல்வோர் பெரிதும் பாதிக்கப்பட்டது.
இன்று அதிகாலை அம்பேபுஸ்ஸ பிரதேசத்தில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. இதனால் ரயில் வீதியில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் கோளாறு ஏற்பட்ட ரயில் சீர்செய்யப்பட்டு மீண்டும் பயணத்தை ஆரம்பித்தது. இதன்போது ஏனைய ரயில்களில் பயணிக்க காத்திருந்தோரும் இதே ரயில் பயணித்துள்ளனர்.
ரயிலின் இயந்திரம் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் மக்கள் ஏறியிருந்து பயணத்தை மேற்கொண்டனர்.
மிகவும் ஆபத்தான முறையிலும், உயிருக்கு ஆபத்து ஏற்படும் வகையிலும், மக்கள் ரயிலில் பயணித்த புகைப்படங்கள் சில ஊடகங்களில் வெளியாகியுள்ளன.
கிளிநொச்சி – கல்மடு குளத்தில் ஆண் ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது.
கல்மடு குளத்தில் தொழிலுக்குச் சென்ற 63 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தையான சுந்தரம் புலேந்திரன் நேற்று காணாமல் போயுள்ளதாக தர்மபுரம் பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அவர் இன்று அதிகாலை குளத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, சடலமாக மீட்கப்பட்டவர் யாழ்ப்பாணம் – கரவெட்டியைச் சேர்ந்தவர் என்றும், இது தொடர்பாக தர்மபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.