எழுந்து வா காதலியே : இறுதிச்சடங்கில் சடலத்தை மணந்த காதலன்!!

உயிரிழந்த காதலியின் சடலத்தை கனத்த இதயத்தோடு திருமணம் செய்து கொண்ட காதலனின் செயல் நெஞ்சை உருக்கும் விதத்தில் அமைந்துள்ளது.

நைஜீரியாவை சேர்ந்த ஒரு இளம் ஜோடி உயிருக்கு உயிராக காதலித்து வந்த நிலையில் விரைவில் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்து இருவருக்கும் நிச்சயதார்த்தம் ஆனது.

இந்நிலையில் உடல்நலக்குறைவால் காதலி திடீரென உயிரிழந்தார். இதையடுத்து சடலமாக கிடந்த தனது காதலியை திருமணம் செய்ய காதலன் கனத்த இதயத்துடன் முடிவெடுத்தார்.

அதன்படி சவப்பெட்டியில் சிவப்பு நிற புத்தாடை உடுத்தப்பட்டு காதலி படுக்க வைக்கப்பட்டிருந்தார்.

மணமகன் வெள்ளை நிற ஆடையில் இருந்தார். இதையடுத்து உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் சடலமாக கிடந்த காதலியை காதலன் திருமணம் செய்து கொண்டார்.

அப்போது காதலன் நெகிழ்ச்சியுடன் எழுந்து வா காதலியே என கூறியது அங்கிருந்தவர்களின் கண்களை குளமாக்கியது.

மீண்டும் பரபரப்பு : ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் தற்கொலை : உருக்கமான கடிதம் சிக்கியது!!

டெல்லியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் தற்கொலை செய்தது போல, ஜார்கண்டில் 6 பேர் கொண்ட குடும்பத்தார் தற்கொலை செய்து கொண்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மஹாவீர் மஹேஷ்வரி (70), என்பவரின் மனைவி கிரண் (65). தம்பதிக்கு நரேஷ் அகர்வால் (40) என்ற மகனும் ப்ரீத்தி (38) என்ற மருமகளும் இருந்தனர்.

நரேஷ் – ப்ரீத்திக்கு ஆமன் (8) மற்றும் அஞ்சலி (6) என்ற இரு குழந்தைகள் இருந்தனர். இந்நிலையில் நேற்று ஆறு பேரும் தங்கள் வீட்டில் சடலமாக கிடந்துள்ளனர்.

இது குறித்து பொலிசாருக்கு தகவல் தரப்பட்ட நிலையில் சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் ஆறு பேரின் சடலங்களை கைப்பற்றியதோடு அங்கிருந்த கடிதத்தையும் கைப்பற்றினார்கள்.

அதில், மொத்த குடும்பமும் பெரும் கடனில் இருப்பதாக எழுதப்பட்டிருந்தது. மேலும், ஒருவரை தூக்கில் இட முடியவில்லை, அதனால் கொன்றுவிட்டோம் என எழுதப்பட்டிருந்தது.

மஹாவீர் குடும்பம் சொந்தமாக உலர்ந்த பழக்கடை வைத்திருந்ததாக கூறியுள்ள பொலிசார் சம்பவம் குறித்து விசாரித்து வருகிறார்கள்.

வீடியோ எடுத்து மிரட்டியதால் கொன்றேன் : மருத்துவரை கொன்ற மாணவி பரபரப்பு வாக்குமூலம்!!

சென்னை மருத்துவர் தன்னை வீடியோ எடுத்து தொடர்ந்து மிரட்டியதால் கொலை செய்தேன் என மாணவி ஈஸ்வரி பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

திருச்சி கல்லணை காவிரிக் கரை ஓரம் கடந்த 12-ஆம் திகதி சென்னையில் பிஸியோதெரப்பிஸ்டாக பணியாற்றும் மருத்துவர் விஜயகுமார் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார்.

சம்பவம் குறித்து பொலிசார் விசாரித்த நிலையில் இதில் ஈடுபட்ட மாணவி ஈஸ்வரி, தாராநல்லூர் மாரிமுத்து மற்றும் அவருடைய நண்பர்கள் மாநகராட்சி ஊழியர் கணேஷ், கும்பா (எ) குமார் உள்ளிட்டோரைக் கைது செய்துள்ளனர்.

பொலிசாரிடம் ஈஸ்வரி அளித்துள்ள வாக்குமூலத்தில், சிறுவயதிலேயே எங்கள் அம்மா இறந்ததால் அப்பா கஷ்டப்பட்டு வளர்த்தார்.

2013-ம் ஆண்டு நடந்த 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 500க்கு 498 மதிப்பெண் எடுத்து மாநிலத்திலேயே 2-வது இடம் பிடித்தேன்.

பிளஸ் 2-வில் 1183 மதிப்பெண் எடுத்து மாவட்ட அளவில் 2-ம் இடம் பெற்றேன். இந்நிலையில் சென்னையில் சி.ஏ. சேர்ந்து படித்து வருகிறேன். சி.ஏ. முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றதும், நுங்கம்பாக்கத்தில் தங்கியிருந்த நான், சென்னை பாரிமுனையில் ஒரு ஆடிட்டர் அலுவலகத்தில் வேலைக்குச் சேர்ந்தேன்.

திருச்சிக்கு, சென்னையில் இருந்து ரயிலில் வருவது வழக்கம், அப்படி வரும்போது தான் மருத்துவர் விஜயகுமார் அறிமுகமானார். ரயில் பயணத்தில் என் செல்போன் எண்ணை வாங்கிக் கொண்டவர், அடுத்தடுத்து போனில் பேச ஆரம்பித்தார்.

ஒருநாள் எனக்கு உடல்நிலை சரியில்லை. எனக்குப் போன் செய்த அவர், அவரது கிளினிக்கிற்கு கிளம்பி வருமாறு கூறினார்.

நான் அங்கு சென்ற நிலையில் என்னை சீரழித்துவிட்டார். இது குறித்து நான் அவரிடம் கேட்டபோது என்னை திருமணம் செய்து கொள்வதாக கூறினார்.

என்னை திருமணம் செய்ய விஜயகுமாரை நான் வற்புறுத்தி வந்த நிலையில் அவருக்கு ஏற்கெனவே திருமணம் ஆகி, 2 குழந்தைகள் இருப்பது தெரியவந்தது.

இந்நிலையில் என்னோடு இருந்ததை வீடியோவாக எடுத்து வைத்திருப்பதாகவும் அவரின் ஆசைக்கு மீண்டும் பணியவில்லை எனில் வீடியோவை வெளியிட்டு விடுவேன் என்றும் என்னை மிரட்டினார். இதனால் விஜயகுமாரை கொல்ல திட்டமிட்டேன்.

அதன்படி திருச்சி மாநகராட்சி துப்புரவுப் பணியாளர் மாரிமுத்துவிடம் நடந்த சம்பவத்தை கூறி உதவி கோரினேன்.

அடுத்து, மாரிமுத்து மற்றும் அவரின் நண்பர்கள் துணையுடன் திருச்சியில் விஜயகுமாரை கொல்ல முடிவெடுத்தோம்.

இதையடுத்து அவருக்கு போன் செய்து திருமணம் குறித்துப் பேச வேண்டும் என அழைத்தேன். அவரும் திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்துக்கு வந்தார்.

அங்கு அவரை மாரிமுத்துவும் அவரின் கூட்டாளிகளும் கத்தியால் குத்தி கொன்றனர் என தெரிவித்துள்ளார். தொடர்ந்து சம்பவம் குறித்து பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருமணமான ஆணுடன் காதல் : கொன்று எரிக்கப்பட்ட இளம்பெண்!!

தமிழகத்தின் ராமநாதபுரத்தில் காதலியை எரித்துக் கொன்ற வழக்கில் குற்றவாளியை பொலிசார் தேடி வருகின்றனர்.

ராமநாதபுரத்தின் ஆலங்குளத்தை சேர்ந்தவர் வீரபாண்டி, இவரது மகள் மாலதி(வயது 20). சென்னையில் தனது தந்தையுடன் தங்கி வேலை பார்த்து வந்தார், இந்நிலையில் கடந்த மாதம் சொந்த ஊருக்கு சென்றவர் சென்னை திரும்பவில்லை.

போனும் சுவிட்ச் ஆப்பில் இருந்ததால் வீரபாண்டி பொலிசில் புகார் அளித்தனர். இதற்கிடையே கடந்த 13ம் திகதி கண்மாய் பகுதியில் பாதி எரிந்த நிலையில் சடலம் கிடப்பதாக பொலிசுக்கு தகவல் கிடைத்தது.

விசாரணையில் சடலம் மாலதி என்பதும், அடிக்கடி சிவக்குமார் என்பவருடன் போனில் பேசி வந்ததும் கண்டயறியப்பட்டது.
திருமணமாகி 2 குழந்தைகள் இருந்தும் சிவக்குமார் அதை மறைத்து மாலதியுடன் பழகி வந்துள்ளார்.

இதை தெரிந்து கொண்ட மாலதி, ஊருக்கு வந்ததும் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்தவர் கண்மாய் பகுதிக்கு அழைத்து சென்று எரித்துக் கொன்றது தெரியவந்தது.

இந்நிலையில் தற்போது தலைமறைவாகியுள்ள சிவக்குமாரை பொலிசார் தேடி வருகின்றனர்.

வெளிநாட்டுக்கு சென்ற இளம் பெண்ணுக்கு ஏற்பட்ட பரிதாபம் : காப்பாற்றுமாறு கதறும் கணவன்!!

இந்தியாவை சேர்ந்த பெண் கடந்த மார்ச் மாதம் மஸ்கட்டுக்கு பணிக்கு சென்று பல துன்பங்களை அனுபவிக்கும் நிலையில் அவரை மீட்க கணவர் உருக்கமான கோரிக்கை வைத்துள்ளார்.

பஞ்சாப்பை சேர்ந்தவர் ஹர்தேவ் சிங். இவர் மனைவி சரப்ஜீத். ஹர்தேவ் சாதாரண வேலை செய்து வந்த நிலையில் அவரின் வருமானம் குடும்பத்துக்கு போதவில்லை.

இதையடுத்து ஏஜண்ட் ஒருவர் மூலம் கடந்த மார்ச் மாதம் மலேசியாவுக்கு உதவியாளர் பணி செய்ய சரப்ஜீத் அனுப்பட்டார்.

பின்னரே தான் ஏமாற்றப்பட்டோம் என சரப்ஜீத்துக்கு தெரிந்தது. ஏனெனில் மலேசியாவுக்கு பதிலாக அவர் மஸ்கட்டுக்கு வலுக்கட்டாயமாக அனுப்பட்டார்.

அங்கு சரப்ஜீத்துக்கு அவர் முதலாளி கடுமையான வேலைகள் தந்ததோடு, சம்பளம் மற்றும் உணவுகள் கொடுக்காமல் கொடுமைப்படுத்தியுள்ளார்.

இதையடுத்து சரப்ஜீத் போலவே மஸ்கட்டில் வேறு இடத்தில் அடிமையாக சிக்கி கொண்ட பரீதா கான் என்ற பெண் பல அதிகாரிகளை பிடித்து எப்படியோ இந்தியாவுக்கு வந்து சேர்ந்துள்ளார்.

பரிதாவை மஸ்கட்டியில் பார்த்த சரப்ஜீத் தனது நிலையை எடுத்து சொல்லி தனது கணவர் ஹர்தேவ் போன் நம்பரை அவருக்கு கொடுத்துள்ளார்.

இதையடுத்து இந்தியா வந்த பரீதா, ஹர்தேவை நேரில் சந்தித்து சரப்ஜீத் குறித்து கூறியதோடு இது குறித்து பெண்கள் ஆணையத்தில் புகார் அளிக்க கூறினார்.

தற்போது ஹர்தேவ் பெண்கள் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார். அவர் கூறுகையில், எங்களின் மகளை நன்றாக படிக்க வைக்கவேண்டும் என விரும்பினோம்.

அதற்கு சம்பாதிக்க தான் சரப்ஜீத் வெளிநாடு சென்றார். ஆனால் அவர் ஏமாற்றப்பட்டுள்ளார். அதிகாரிகள் தான் எப்படியாவது என் மனைவியை மீட்டுதர வேண்டும் என கோரியுள்ளார்.

கழுகில் பறந்துவந்து திருமணம் செய்த ஜோடி : வியந்துபோன மக்கள்!!

இந்தியாவில் செயற்கையாக தயாரிக்கப்பட்ட கழுகில் பறந்து வந்து மணமக்கள் திருமணம் செய்து கொண்ட வீடியோ வைரலாகியுள்ளது.

மணப்பெண்ணும், மாப்பிள்ளையும் நின்று கொண்டு வானில் இருந்து திருமண மேடைக்கு வருகின்றனர். கீழே பலரும் அதனை வியந்து பார்க்கின்றனர். கழுகில் இருந்து அவர்கள் வந்திறங்கும்போது இந்தி பாடல் இசைக்கப்படுகிறது.

மணமக்கள் பறந்து வந்து மணமேடையில் வந்து அமர்ந்ததை கீழே இருந்த விருந்தினர்கள் பார்த்து வியந்துபோயினர். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

திருமணமானதை மறைத்து இளம் பெண்ணை காதலித்த நபர் : தேடிச் சென்ற காதலி கொடூர முறையில் எரித்துக் கொலை!!

தமிழகத்தில் காதலனை பார்க்கச் சென்ற காதலி கொடூரமான முறையில் எரித்து கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் ஆலங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் வீரபாண்டி. இவரது மகள் மாலதிக்கும், கருங்குளத்தைச் சேர்ந்த சிவக்குமார் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

அது நாளைடைவில் நெருங்கி பழகும் அளவிற்கு அதிகரித்துள்ளது. ஒரு கட்டத்தில் சிவக்குமார் தான் திருமணமானவன் என்பதை மறைத்து மாலதியை காதலிப்பதாக கூறியுள்ளார்.

மாலதி சென்னையில் படித்து வந்ததால், சென்னைக்கு சென்ற சிவக்குமார் அங்கு பணியாற்றிக் கொண்டே மாலதியுடன் பழக்கத்தை தொடர்ந்துள்ளார்.

இப்படி இவர்களின் பழக்கம் சென்று கொண்டிருந்த போது, ஒரு கட்டத்தில் மாலதி, சிவக்குமாரிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளும் படி வற்புறுத்தியுள்ளார்.

ஏற்கனவே தனக்கு திருமணமாகியுள்ள நிலையில், மீண்டும் ஒரு திருமணமா என்ற பயத்தில் சிவக்குமார் தன்னுடைய சொந்த ஊருக்கு திரும்பி, மாலதியுடன் பேசுவதையே நிறுத்தியுள்ளார்.

சிவக்குமார் தன்னை தொடர்ந்து புறக்கணித்து வந்ததால், அதிர்ச்சியடைந்த மாலதி கடந்த 29-ஆம் திகதி சிவக்குமாரை தேடி அவரது சொந்த ஊரான கருங்குளத்திற்கு சென்றுள்ளார்.

அங்கு சென்ற அவர் அதன் பின் வீடு திரும்பவே இல்லை. இதனால் மாலாதியின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்து, சிவக்குமார் மீது சந்தேகம் இருப்பதாகவும் கூறியுள்ளனர்.

இதனால் பொலிசார் சிவக்குமாரை அழைத்து விசாரித்த போது, மாலதியுடன் பேசிப் பழகியதையும், அவர் தன்னை சந்திப்பதற்காக சென்னையில் இருந்து புறப்பட்டு வந்ததையும் ஒப்புக் கொண்ட அவர், மாலதி தஞ்சாவூர் சென்றிருப்பதாகவும் அவரை திருப்பி அழைத்து வந்து ஒப்படைப்பதாகவும் பொலிசாரிடம் கூறியதால், அவரை கைது செய்யாமல் விசாரிக்காமல் பொலிசார் அவரை விடுவித்துள்ளனர்.

அதன் பின் பின் சிவக்குமார் போன் சுவிட்ச் ஆப் ஆகியுள்ளது. இதனால் விசாரணையை பொலிசார் தீவிரப்படுத்திய போது, சிவகுமாருக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருப்பது தெரியவந்துள்ளது.

இதைத் தொடர்ந்து சிவகுமார் ஊரான கருங்குளம் கிராமத்தின் கண்மாய் பகுதியில் முற்றிலும் எரிக்கப்பட்ட எலும்புக் கூடு கிடப்பதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

அங்கு சென்று பொலிசார் பார்த்த போது, எலும்புக் கூடுகளுக்கு அருகில், மாலதி அணிந்திருந்த சால்வை மற்றும் வளையல்கள் கிடந்துள்ளன.

இருப்பினும் எரிக்கப்பட்டு எலும்புக் கூடாக இருப்பது மாலதி தான் என்பதை உறுதிப்படுத்த பொலிசார் மரபணு சோதனைக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.

தலைமறைவாகியுள்ள சிவக்குமாரை பொலிசார் தேடி வருகின்றனர். அவரை கைது செய்தால் மட்டும் தான் உண்மை தெரியவரும் என்று கூறப்படுகிறது.

மேலும் முதலில் புகார் அளித்த போதே பொலிசார் உரிய விசாரணை மேற்கொண்டு இருந்தால், சிவக்குமார் தப்பித்திருக்க முடியாது என்று உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

காதலி சொன்ன அந்த வார்த்தை : கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு காதலன் தற்கொலை!!

தமிழகத்தில் காதலி திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்ததால், ஆத்திரத்தில் காதலன் அவரை கத்தியால் குத்தி கொலை செய்துவி

காதலி சொன்ன அந்த வார்த்தை : கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு காதலன் தற்கொலை!!

தமிழகத்தில் காதலி திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்ததால், ஆத்திரத்தில் காதலன் அவரை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ள இ.ரெட்டியாபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ் இவரது மகளான பொன் மகாலட்சுமி துாத்துக்குடி மாவட்டம் வானரமுட்டி தனியார் ஆசிரியர் பயிற்சி பள்ளியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார்.

இவரும் அதே ஊரை சேர்ந்தவர் முத்துப்பாண்டி மகன் மதன்குமார் மதுரை சட்டக்கல்லுாரியில் 2-ஆம் ஆண்டு படித்து வருபவரும் பள்ளி பருவத்திலிருந்தே காதலித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் திடீரென்று முத்துப்பாண்டி மகாலட்சுமியை திருமணம் செய்ய மறுத்துள்ளார். இதனால் இருவரும் பிரிந்துவிட்டதாக கூறப்படுகிறது.

இருப்பினும் காதலியின் நினைவில் இருந்த அவர் சமீபத்தில் மகாலட்சுமியை சந்தித்து நான் உன்னை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறேன் என்று கூறியுள்ளார்.

இதைக் கேட்ட மகாலட்சுமியோ நேரத்துக்கு ஒரு பேச்சு பேசும் நீ எனக்கு வேண்டாம் எனக்கு ஏற்கனவே மாப்பிள்ளை பார்த்துவிட்டார்கள் என்று கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த முத்துப்பாண்டி சம்பவ தினமான நேற்று பிற்பகல் வேளையில் மகாலட்சுமி தண்ணீர் பிடித்து சென்று கொண்டிருந்த போது, அவரை வழிமறித்து கத்தியால் குத்தியுள்ளார்.

இதைக் கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இருப்பினும் மகாலட்சுமி ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

காதலியை குத்தி கொலை செய்த முத்துப்பாண்டி தன்னுடைய வீட்டிற்கு சென்று சேலையை கட்டி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் குறித்து பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கண்ணீர் சிந்த வைத்த 9 வயது சிறுமியின் உருக்கமான கோரிக்கை!!

காணாமல்போனோர் அலுவலகத்தின் அதிகாரிகள், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுடன் கலந்துரையாடுவதற்காக அவர்களை நேற்று கிளிநொச்சி மாவட்ட கூட்டுறவுச் சபை மண்டபத்திற்கு அழைத்திருந்தனர்.

இதன்போது, 9 வயது சிறுமி ஒருவர், அருட்தந்தையுடன் சரணடைந்த எனது அப்பாவை தேடித்தாருங்கள் என உருக்கமான கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.

தான் இதுவரை அப்பாவின் முகத்தை பார்க்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். இதனால், அங்கிருந்த அனைவரும் கண்ணீர் சிந்தியுள்ளனர்.

குறித்த சிறுமியின் தந்தையான திலக் என்பவர் விடுதலைப் புலிகளின் திரைப்பட பிரிவில் கடமையாற்றியவர்.

கடந்த 2009ஆம் ஆண்டு மே மாதம் அருட்தந்தை பிரான்சிஸ் ஜோசப்புடன் விடுதலை புலிகளின் உறுப்பினர்கள் உட்பட பலர் சரணடைந்திருந்தனர். இதன் போது, திலக் என்பவரும் சரணடைந்திருந்தார்.

இதேவேளை, அதிகாரிகளை நோக்கி நகர்ந்த உறவுகள் இராணுவத்தால் கைது செய்யப்பட்ட, சரணடைந்த உறவுகளை மீட்டுத்தருமாறு கோரி ஒப்பாரியிட்டு அழுது புலம்பியுள்ளனர்.

அவுஸ்திரேலியாலிருந்து நாடு கடத்தப்படவுள்ள தமிழ் இளைஞன்!!

அவுஸ்திரேலியாவின் சிட்னியிலிருந்து தமிழ்க்குடும்பம் ஒன்றின் தந்தையான தமிழ் இளைஞர் ஒருவர் இன்று திங்கட்கிழமை பலவந்தமாக நாடுகடத்தப்படவுள்ளார்.

அகதி தஞ்சகோரிக்கையுடன் 2012 இல் அவுஸ்திரேலியா வந்தடைந்த 30 வயதான திலீபன் 2016 இல் இன்னொரு அகதி தஞ்சகோரிக்கையுடன் வந்தடைந்த பெண்ணை திருமணம் செய்து வாழ்ந்துவந்தார். இவர்களுக்கு கடந்த ஆண்டு செப்ரம்பரில் மகள் ஒருவர் பிறந்துள்ளார்.

எனினும் இவ்வாண்டின் ஆரம்பத்தில் விலாவுட் தடுப்புமுகாமுக்கு அழைத்துச்செல்லப்பட்ட திலீபன் இதுநாள் வரை தொடர்ந்து தடுத்துவைக்கப்பட்டிருக்கிறார்.

கடந்த கிழமை இவரது மனைவிக்கும் மகளுக்கு ஐந்து வருட தற்காலிக வதிவிடவுரிமை வழங்கப்பட்டிருந்த நிலையில், இவரது பலவந்தமான நாடுகடத்தல் அதிர்ச்சிகரமான செய்தியாக அமைந்துள்ளது.

தொடர்ச்சியான சித்திரவதைகள் மற்றும் துன்புறுத்தல்கள் பற்றிய செய்திகள் வந்துகொண்டிருக்கின்றபோதும், அவுஸ்திரேலிய குடிவரவுத்துறை அமைச்சர் பாராமுகமாக இருப்பதாக தமிழ் அகதிகள் சபை குற்றஞ்சாட்டியுள்ளது.

இதேவேளை பலவந்தமான நாடுகடத்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாளை திங்கட்கிழமை காலை 7 மணிக்கு விலாவுட் தடுப்புமுகாமுக்கு முன்பாக ஆர்ப்பாட்ட நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள பெண்!!

இலங்கையில் நிறைவேற்றப்படவுள்ள மரண தண்டனைக்கான அலுகோசு பதவியை ஏற்பதற்கு தயாராக இருப்பதாக பெண்ணொருவர் அறிவித்துள்ளார்.

சிலாபம், ஆரச்சிகட்டுவ பிரதேசத்தை சேர்ந்த 71 வயதான எல்.பீ.கருணாவத்தி என்பவரே இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.

போதைப்பொருள் வர்த்தகர்களுக்காக மரண தண்டனை நிறைவேற்றுவது என்றால் சம்பளம் இல்லாமல் இந்த பதவியை ஏற்பதற்கு தான் தயார் என தெரிவித்துள்ளார்.

கோடி கணக்கான பெறுமதி கொண்ட போதை பொருட்கள் மற்றும் வேறு போதை மருந்துகளை இலங்கைக்கு கொண்டு வந்து எதிர்கால சந்ததியை வீணடிக்கும் இவ்வாறான வர்த்தகர்களை தராதரம் பாராமல் அழித்து விட வேண்டும்.

சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பிலான குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தர்ம தீவாக இருந்த இந்த நாட்டை மரண தீவாக மாற்ற ஒரு போதும் இடமளிக்க கூடாதென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பலரும் அச்சம் காரணமாக இந்தப் பதவிக்காக வர தயங்கும் போது. 70 வயதான கருணாவத்தியின் அறிவிப்பு பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு சிறையில் தண்டனை அனுபவித்து வரும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றுமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழில் வானத்தில் பறந்த எலும்புக்கூடுகள் : பிரம்மித்து நின்ற மக்கள்!!

யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற பட்டம் விடும் போட்டியில் உள்ளூர் மற்றும் வெளியூரை சேர்ந்த பெருந்திரளானோர் கலந்து கொண்டிருந்தனர். இதன்போது விதவிதமான வடிவங்களில் அமைக்கப்பட்ட பட்டங்கள் வானில் பறந்தன.

இந்த சந்தர்ப்பத்தில் எலும்புக்கூடு போன்று வடிவமைக்கப்பட்டிருந்த பட்டங்கள் வானில் பறந்த போது அனைவரும் பிரம்மிப்பில் ஆழ்ந்தனர்.

யாழ். அரியாலை சரஸ்வதி விளையாட்டு கழகத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு குறித்த பட்டம் விடும் போட்டி நடத்தப்பட்டிருந்தது.

சரஸ்வதி சன சமூக விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் அரியாலை திறந்த வெளி விளையாட்டரங்கில் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கொழும்பு ஹோட்டலில் நடந்த விபரீதம் : பிரபல நடிகைக்கு நேர்ந்த அவலம்!!

இலங்கையின் சிங்கள நடிகை ஒருவர் மீது பாரிய தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இரவு நேர விருந்திற்காக சென்ற பிரபல நடிகை பியூமி ஹன்சமாலிக்கும் வேறு சிலருக்கும் இடையில் மோதல் நிலை ஏற்பட்டுள்ளது.

அங்கு குறித்த நடிகை தகாத வகைகளில் பேசியவாறு அங்குள்ளவர்களுடன் மோதலில் ஈடுபட்டதனை நபர் ஒருவர் காணொளியாக பதிவிட்டு இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

தன்னை தாக்கியதாக கூறி தகாத வார்த்தைகளினால் அவர் அங்கிருந்தவர்களை திட்டியுள்ளார். கொழும்பு ஹோட்டல் ஒன்றிலேயே இந்த மோதல் நிலை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

கிரிபத்கொட ஹோட்டலிலும் இதற்கு முன்னர் அவர் இவ்வாறு இந்த மோதலை ஏற்படுத்தி கொண்டுள்ளார் என குறிப்பிடப்படுகின்றது.

ஆவேசமாக துள்ளிக் குதித்த பிரான்ஸ் ஜனாதிபதி!!

உலகக் கிண்ண கால்பந்தாட்ட சுற்றுத்தொடரின் இறுதிப் போட்டியில் பிரான்ஸ் அணியின் வெற்றியை கண்டு பிரான்ஸ் நாட்டின் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான் ஆவேசமாக துள்ளிக் குதித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

பிரான்ஸ் அணியின் வெற்றியை வீரர்களுடன் பிரான்ஸ் ஜனாதிபதி மழையிலும் உற்சாகமாக கொண்டாடி வருகிறார்.

வெற்றி உறுதியானதும் மைதானத்தில் துள்ளி குதித்த காட்சி அனைவர் மத்தியிலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதன் போது, எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது.

இதேவேளை, 20 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்ஸ் அணி மீண்டும் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் பாடசாலை மாணவி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு!!

வவுனியா உக்குளாங்குளத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் இன்று (16.07.2018) அதிகாலை 4 மணியளவில் 19 வயதுடைய உயர்தர மாணவி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கடந்த புதன்கிழமை வவுனியா பண்டாரிக்குளம் விபுலானந்தா கல்லூரியில் உயர்தர மாணவர்களுக்கான பிரியாவிடை நிகழ்வு இடம்பெற்றுள்ளது. அதன் பின்னர் குறித்த மாணவி வீட்டாருடன் முன்னர் போல் இல்லாமல் சற்று வித்தியாசமாக அனுகியுள்ளார் (கவலையடைந்த நிலையில்).

இந் நிலையில் நேற்றிரவு வீட்டில் தனியறையில் உறங்கியுள்ளார். வழமை போன்று தங்கையை எழுப்புவதற்கு இன்று அதிகாலை சகோதரன் அறைக்கு சென்ற சமயத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார்.

இதனையடுத்து பண்டாரிக்குளம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

வவுனியா இந்து அன்பக இரு யுவதிகளுக்கு அன்பகத்தின் பொறுப்பாளர் தலைமையில் திருமணம்!!

 

தாய், தந்தையினை இழந்த நிலையில் வவுனியா வேப்பங்குளம் இந்து அன்பகத்தில் வசித்து வந்த இரு யுவதிகளுக்கு அன்பகத்தின் பொறுப்பாளர் சாமி அம்மா தலைமையில் நேற்று (15.07.2018) திருமணம் இடம்பெற்றது

மதுசா என்ற யுவதி 7 வருடங்களாகவும் கீர்த்தி என்ற யுவதி 5 வருடங்களாகவும் வவுனியா வேப்பங்குளம் இந்து அன்பகத்தின் வசித்து வந்துள்ளனர். இவர்கள் திருமண வயதினை அடைந்தமையினால் அன்பகத்தின் பொறுப்பாளர் சாமி அம்மாவின் ஏற்பாட்டில் திருமணம் இடம்பெற்றது.

மதுசா என்ற யுவதிக்கு தமிழ் சேவைக்கால ஆலோசகர் திரு திருமதி உதயகுமார் அவர்களும் அவரது துணைவியாரும் தாய் தந்தையாகவும் கீர்த்தி என்ற யுவதிக்கு பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அவர்களும் அவரது துணைவியாரும் தாய் தந்தையாக பொறுப்பேற்று திருமணத்தினை நடத்தி வைத்தனர்.

இந் திருமண நிகழ்வில் இரு மணமகன் வீட்டாரின் உறவினர்களும், வவுனியா மாவட்ட சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகளும் , பொதுமக்கள் , அன்பகத்தில் உள்ள சிறார்களும் கலந்து கொண்டிருந்தனர்.