அதிகரிக்கும் சமையல் எரிவாயுவின் விலை?

சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிப்பதற்கு சமையல் எரிவாயு நிறுவனங்கள் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த வாரம் கூடிய வாழ்க்கைச் செலவுக் குழுக் கூட்டத்திலும் இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த மாதம் 29 ஆம் திகதி சமையல் எரிவாயுவின் விலை குறைவடைந்தது. இருப்பினும், உலக சந்தையிலுள்ள விலை மட்டத்தை நோக்கும் போது சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட வேண்டும் எனவும் அந்நிறுவனங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

இருப்பினும், இது தொடர்பில் நுகர்வோர் அதிகார சபையினர் குறிப்பிடுகையில்,

வாயளவில் விலை அதிகரிப்பு தொடர்பில் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும், எழுத்து மூலமான கோரிக்கைகள் எதுவும் இதுவரையில் எந்தவொரு நிறுவனத்தினாலும் முன்வைக்கப்படவில்லையென குறிப்பிட்டுள்ளது.

எழுத்து மூலம் வேண்டுகோள் விடுக்கப்படும் சந்தர்ப்பத்திலேயே இது தொடர்பில் கருத்தில் கொள்ளப்படும் எனவும் நுகர்வோர் அதிகார சபை மேலும் கூறியுள்ளது.

மைத்திரியின் முடிவினை வரவேற்றுள்ள கிரிக்கெட் வீரர்!!

போதைப்பொருள் வர்த்கத்தில் ஈடுபட்டுள்ளவர்களிற்கு மரணதண்டனையை நிறைவேற்றும் முடிவு முன்னரே எடுத்திருக்கப்பட வேண்டும் என கிரிக்கெட் வீரர் திலகரட்ன தில்சான் தெரிவித்துள்ளார்.

போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்பட வேண்டும் என்ற கருத்து அதிகரித்துவருவதுடன், ஜனாதிபதியும் இது தொடர்பாக ஆராய்ந்துவருகின்றார். இந்நிலையில் இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள அவர்,

போதைப்பொருள் வர்த்கத்தில் ஈடுபட்டுள்ளவர்களிற்கு மரணதண்டனையை நிறைவேற்றும் ஜனாதிபதியின் முடிவு வரவேற்கத்தக்கது.

இந்த தீர்மானத்தை நீண்ட காலத்திற்கு முன்னர் எடுத்திருக்கவேண்டும். போதைப்பொருள் குற்றங்களிற்கு மாத்திரமல்ல சிறுவர் துஸ்பிரயோகங்கள் போன்றவற்றிற்கும் மரண தண்டனையை நிறைவேற்றவேண்டும்.

போதைப்பொருள் தொடர்பான குற்றங்களும் சிறுவர் துஸ்பிரயோகமும் அச்சப்படும் விதத்தில் அதிகரித்துள்ளன. இதன் காரணமாக மரண தண்டனையை நிறைவேற்றுவது அவசியம் என்று குறிப்பிட்டுள்ளார்.

3 லட்சத்துக்கு அழைக்கப்பட்ட பிரபல தமிழ் நடிகை விவகாரம் : பல நடிகைகள் சிக்கியது அம்பலம்!!

வட்ஸ் அப் மூலம் தமிழ் சீரியல் நடிகை ஜெயலட்சுமிக்கு பாலியல் வலை வீசப்பட்ட நிலையில் மேலும் பல நடிகைகள் பாலியல் தொழிலில் தள்ளப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

வட்ஸ் அப் மூலம் பாலியல் தொழிலுக்கு வலை வீசுவதாக நடிகை ஜெயலட்சுமி, சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

அந்த புகாரின் பேரில் ஜெயலட்சுமிக்கு வலை வீசிய பொலிசார் இதில் தொடர்புடைய கவியரசன், முருகபெருமாள் ஆகிய இருவரை அண்ணா நகரில் உள்ள காபி ஷாப்பிற்கு நைசாக வரவழைத்து பிடித்தனர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ரிலேசன்ஷிப் சர்வீஸ் என்ற பெயரில் குழு அமைத்து, நடிகைகளுக்கு பாலியல் வலை வீசி முக்கிய பிரமுகர்களுக்கு இந்த கும்பல் விருந்து படைத்துள்ளது தெரியவந்துள்ளது.

அரசியல் பிரமுகர்கள், விஐபி-க்கள் என பலருக்கும் இதில் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.

6 மணி நேரம், 12 மணி நேரம், வெளிமாநிலங்களுக்கு சென்றால் ஒரு தொகை என லட்சக்கணக்கில் பேரம் பேசி நடிகைகளை தங்களது வலைக்குள் சிக்க வைக்கிறது இந்த கும்பல்.

இப்படி பல நடிகைகளை பாலியல் தொழிலில் தள்ளியுள்ளதும் தெரியவந்துள்ளது.

பிடிபட்ட இருவரிடமும் இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பது குறித்து பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இருட்டு அறையில் வைத்து கணவன் செய்த கொடுமை : துடிதுடித்து இறந்த இளம் மனைவி!!

இந்தியாவில் மனைவியை ஒரு மாதத்துக்கும் மேலாக இருட்டறையில் அடைத்து வைத்து கணவன் கொடுமைப்படுத்திய நிலையில் மனைவி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் நஹீம்கான். இவர் மனைவி ரசியா. ரசியாவை சில காலமாக நஹீம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்துள்ளார்.

இந்நிலையில் மார்ச் மாதத்தில் டெல்லிக்கு சென்ற நஹீம் அங்கிருந்தபடியே போனில் மூன்று முறை முத்தலாக் கூறி மனைவி ரசியாவை பிரிந்துள்ளார்.

பின்னர் கடந்த ஏப்ரலில் தான் மனம் மாறிவிட்டதாக கூறி மீண்டும் ரசியாவை தனது வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார்.

ஆனால் மனம் மாறாத நஹீம், ரசியாவை அடித்து கொடுமைப்படுத்தியுள்ளார். மேலும், ஒரு மாதத்துக்கும் மேல் இருட்டறையில் எப்போதாவது மட்டும் உணவு கொடுத்து பட்டினி போட்டு அடைத்து வைத்துள்ளார்.

இதையடுத்து ரசியாவின் குடும்பத்தார் நஹீம் வீட்டுக்கு வந்து ரசியாவை மீட்டனர்.

உடல் நலம் குன்றிபோன ரசியா கணவர் கொடுமையால் நோய்வாய்ப்பட்ட நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இந்நிலையில் ரசியா தற்போது உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து நஹீம் செய்த கொடுமைகள் குறித்து ரசியா குடும்பத்தார் பொலிசில் புகார் கொடுத்தனர்.

அவர் மீது கொலை வழக்குப்பதிவு செய்துள்ள பொலிசார் டெல்லியில் உள்ள நஹீமை கைது செய்ய தனிப்படையை விரைவில் அனுப்புவோம் என தெரிவித்துள்ளனர்.

கணவனை தண்டிப்பதற்காக மனைவி செய்த அதிர்ச்சி செயல் : பரிதாபமாக இறந்த இரண்டு குழந்தைகள்!!

தமிழகத்தில் கணவனுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக குழந்தைகளை தண்ணீர் தொட்டியில் வீசி கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்ய முயற்சி செய்த சம்பவம அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் பூமலூர் பகுதியை சேர்ந்தவர் செந்தில். முன்னாள் ஊராட்சி தலைவரான இவருக்கு சிவரஞ்சனி என்ற மனைவியும் 5 வயதில் மகனும் 8 மாதத்தில் பெண் குழந்தையும் உள்ளனர்.

செந்தில் மற்றும் சிவரஞ்சனிக்கு தம்பதிக்கு அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் சம்பவ தினத்தின் போது, உள்ளூர் நேரப்படி அதிகாலை 3 மணிக்கு செந்தில் வீடு திரும்பியுள்ளார். அப்போது இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த சிவரஞ்சினி மகன் அர்சத் மற்றும் 8 மாத குழந்தை ஹர்சிதா இருவரையும் தண்ணீர் தொட்டியில் தூக்கி வீசி விட்டு, அதன் பின் தன் மீது மண்ணென்ணெய் ஊற்றி பற்ற வைத்துக்கொண்டு குழந்தைகளை வீசிய தொட்டியிலே இவரும் குதித்துள்ளார்.

உடலில் தீயை பற்றிக் கொண்டு குதித்த போது, சிவரஞ்சனி அலறியதால், அக்கம் பக்கத்தினர் உடனடியாக விரைந்து வந்து குழந்தைகள் மற்றும் சிவரஞ்சனியை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

ஆனால் குழந்தை இறந்தவிட்ட நிலையில் சிவரஞ்சனிக்கு தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தவறு செய்த கணவன் செந்திலை தண்டிப்பதாக நினைத்து மனைவி சிவரஞ்சனி இப்படி ஒரு துணிகர காரியத்தை செய்துவிட்டதாக உறவினர்கள் வேதனையடைந்துள்ளனர்.

நவீனுடன் திருமணம் : காரணம் முதல் மனைவி திவ்யா தான் : பரபரப்புப் பேட்டி!!

 

தன்னை திருமணம் செய்து ஏமாற்றிவிட்டதாக பிரபல தொலைக்காட்சி புகழ் நவீன் மீது குற்றம்சாட்டினார் திவ்யலட்சுமி. நவீனுக்கு நடக்கவிருந்த திருமணத்தையும் அதிரடியாக நிறுத்தினார்.

இந்நிலையில் ஒருவர் மீது ஒருவர் குற்றம்சாட்டிவர, கிருஷ்ணகுமாரி தன்னிடம் உள்ள ஆதாரங்களை வெளிக்காட்டவுள்ளதாக பேசியுள்ளார்.

அவர் கூறுகையில், நான் பிறந்தது மலேசியா, அப்பா லாரி டிரைவர், அம்மா குடும்பத்தலைவி. நானும், என் அக்காவும் சம்பாதிச்சு தான் குடும்பத்தை காப்பாத்திட்டு இருக்கோம், சான்டி மாஸ்டர் மூலம் நவீனின் அறிமுகம் கிடைத்தது, நான் ஏற்கனவே நவீனின் மிகப்பெரிய ரசிகை.

என் அக்கா திருமணத்தின் போது நவீனின் குடும்பம் மலேசியாவுக்கு வந்தது, அப்போது தான் அவர்கள் எங்களது உறவுக்காரர்கள் என்றே தெரியவந்தது.

அவருக்கு திருமணமாகி விவாகரத்து வழக்கு நடப்பது வரை எனக்கு தெரியும், ரெண்டு பேரும் நண்பர்களாக பழகினோம், நான் தமிழ்நாட்டு வந்தபோது சான்டியின் திருமணம் நடந்தது. அப்போது எடுத்த புகைப்படத்தை பேஸ்புக்கில் போட்டேன், அதை பார்த்து திவ்யா மெசேஜ் பண்ணிரார்.

காலையில் எழுந்தா என்னையும், நவீனையும் பற்றி தவறாக போட்டிருந்தாங்க, அதைப்பார்த்து என் சொந்தக்காரரங்க கேவலமா பேச ஆரம்பிச்சிட்டாங்க, நவீன் என் அப்பா, அம்மாகிட்ட பேசி கல்யாணம் செய்துகிறதா சொன்னார், வேறு வழியே இல்லாம தான் கல்யாணம் செய்ய முடிவெடுத்தோம்.

நவீனை மாதிரி ஒரு நல்ல பையனை பார்த்தது இல்லை, திவ்யாவுக்கு தான் நன்றி சொல்லணும், என்ன பிரச்சனை வந்தாலும் நவீனை கல்யாணம் செய்வது உறுதி என தெரிவித்துள்ளார்.

எங்களுக்கும் குடும்பம் உள்ளது : 3 லட்சத்துக்கு அழைக்கப்பட்ட பிரபல தமிழ் நடிகை பேட்டி!!

தவறான மெசேஜ்களைப் பார்த்து அமைதியாகவும் பொறுமையாகவும் இருக்க வேண்டாம் என்று நடிகை ஜெயலட்சுமி தெரிவித்துள்ளார்.

பிரபல சீரியல் நடிகையான ஜெயலட்சுமிக்கு வாட்ச் அப்பில் பாலியல் தொழில் செய்தால் லட்சக்கணக்கில் பணம் கிடைக்கும் என ஒரு மெசேஜ் வந்தது.

இது குறித்து ஜெயலட்சுமி அளித்த புகாரின் பேரில் கவியரசன், முருகப்பெருமாள் ஆகிய இருவரை பொலிசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இது குறித்து பேசிய ஜெயலட்சுமி, இவ்வளவு தைரியமாக மெசேஜ் அனுப்பியவர்களுக்கு எந்தவித பயமும் இல்லை.

நான் கொடுத்த புகாரின் பேரில் கைதானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நம்புகிறேன்.

நடிகைகளுக்கும் குடும்பம் இருக்கிறது. நடிப்பு என்பது எங்களுடைய தொழில் மட்டும்தான். சாதாரண மக்களைப் போல போராட்டமும் இருக்கிறது.

எல்லா நடிகைகளையும் ஒரே மாதிரியாக சிலர் பார்க்கின்றனர். எனவே நடிகைகளே, இந்தப் பிரச்னைகளுக்கு இனி அமைதியாக இருக்காதீர்கள்

நமக்கு உதவிசெய்ய பொலிஸ், நண்பர்கள் இருக்கிறார்கள். நடிப்பு என்பது நமக்குத் தொழில் என்பதை சமுதாயத்துக்குத் தெரியப்படுத்துவோம்.

எல்லா நடிகர்கள், நடிகைகள் சொகுசாக வாழவில்லை. எனக்கு நடிப்பு மூலம் போதிய வருமானம் இல்லை என்பதால் இன்ஷூரன்ஸ் ஏஜென்ட்டாக உள்ளேன். அதோடு, ஜூனியர் அட்வகேட்டாகவும் பணியாற்றுகிறேன் என கூறியுள்ளார்.

பலம்வாய்ந்த தென்னாபிரிக்காவை வீழ்த்தி அசத்தல் வெற்றி பெற்ற இலங்கை அணி!!

தென்னாபிரிக்க அணியுடனான முதலாவது டெஸ்ட் போட்டியில் 278 ஓட்டங்களினால் இலங்கை அணி வெற்றியை தனதாக்கியது.

இலங்கை அணியின் பிரபல வீரர்களான டில்ருவான் பெரேரா மற்றும் ரங்கன ஹேரத்தின் சிறப்பான பந்து வீச்சின் மூலம் இலங்கை அணி வெற்றியை தனதாக்கியது.

இந்நிலையில் தென் ஆப்ரிக்கா அணிக்கு 352 ஓட்டங்கள் வெற்றி இலக்காக இருந்த நிலையில், தென் ஆப்ரிக்க அணி இரண்டாவது இனிங்சில் 73 ஓட்டங்களுக்கு சகல விக்கட்களையும் இழந்தது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, முதல் இனிங்சில் 287 ஓட்டங்களை பெற்றுக் கொண்டதுடன், திமுத் கருணாரத்ன 158 ஓட்டங்களை பெற்று கொடுத்தார்.

இந்நிலையில், தென் ஆப்ரிக்க அணி முதல் இனிங்சில் 126 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக் கொண்டது.

இரண்டாவது இனிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 190 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

இதற்கமைய, தென் ஆப்ரிக்கா அணிக்கு 352 ஓட்டங்கள் வெற்றி இலக்காக இருந்த நிலையில், 73 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்ட நிலையில், இலங்கை அணி 278 ஓட்டங்களினால் முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றியை தனதாக்கியது.

டில்ருவான் பெரேரா 06 விக்கட்களையும், ரங்கன ஹேரத் 03 விக்கட்களையும் கைப்பற்றி இலங்கை அணியின் வெற்றிக்கு வழவகுத்தமை குறிப்பிடத்தக்கது.

தென்னாபிரிக்க அணியின் இரண்டாம் இன்னிங்ஸில் கைப்பற்றிய மூன்று விக்கெட்டுக்களோடு இப்போட்டியில் மொத்தமாக 5 விக்கெட்டுக்களை சாய்த்த ரங்கன ஹேரத் டெஸ்ட் போட்டிகள் வரலாற்றில் அதிகூடிய விக்கெட்டுக்களை கைப்பற்றிய வீரர்கள் வரிசையில் மொத்தமாக 423 விக்கெட்டுக்களுடன் ஒன்பதாவது இடத்திற்கு முன்னேறியிருந்தார்.

போட்டியின் ஆட்ட நாயகன் விருது இரண்டு இன்னிங்ஸ்களிலும் சிறப்பான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய திமுத் கருணாரத்னவுக்கு வழங்கப்பட்டது.

தமது விருந்தினர்களை முதல் டெஸ்ட் போட்டியில் தோற்கடித்திருக்கும் இலங்கை, கொழும்பில் நடைபெறவுள்ள தொடரின் இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில் வரும் வெள்ளிக்கிழமை (20) மோதுகின்றது.

இலங்கையில் அதிசய பலா மரம்!!

இலங்கையில் அபூர்வ பலா மரம் ஒன்று வளர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடுகன்னாவ, லகபுவ பிரதேசத்தை சேர்ந்த ஜயவர்தன என்பவரின் வீட்டிலேயே இந்த மரம் வளர்ந்துள்ளது.

ஜயவர்தன என்பவரின் தாத்தாவின் தாத்தாவால் இந்த மரத்தின் கன்று நாட்டப்பட்டுள்ளது.

கிட்டத்தட்ட 250 வருடங்களாக தங்கள் தோட்டத்தில் வளரும் இந்த அபூர்வ பலா மரத்தினால் இன்னமும் பலர் பயன் பெறுகின்றனர்.

வருடத்திற்கு இரண்டு முறை இந்த மரத்தில் பலா காய்கள் காய்ந்து தொங்கும் எனவும், இதனை வீதியில் செல்வோர் பறித்து செல்வதாக ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

வழமையை விடவும் மிகவும் அதிகமான பலாப்பழங்கள் இந்த மரத்தில் காய்ப்பதே சிறப்பு அம்சமாகும்.

250 வருடங்களுக்கு பழைமையான ஒரு மரத்தில் இன்றும் பலன் பெறுவதென்பது ஒரு அபூர்வ விடயமாகவே கருதப்படுகின்றது.

இலத்திரனியல் கடவுச்சீட்டினால் இலங்கைக்கு ஏற்பட்ட பாரிய நட்டம்!!

இலங்கையில் இலத்திரனியல் கடவுச்சீட்டு வெளியிடுவதில் தொடர்ந்து சிக்கல் நிலைமை காணப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த கடவுச்சீட்டு ஒப்பந்தம், வெளிப்படைத்தன்மை இல்லாமல் மற்றும் கொள்முதல் விதிகளை மீறி பிரித்தானிய நிறுவனத்திற்கு வழங்க அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளது.

இதன் காரணமாக இலங்கைக்கு வருடத்திற்கு 214 கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த ஒப்பந்தம் 20 அல்லது 25 வருடங்களுக்கு வழங்கப்படவுள்ளமையினால், பொதுமக்களின் 5300 கோடி ரூபாய் பணத்திற்கு நட்டம் ஏற்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.

கடந்த 2003ஆம் ஆண்டில் இருந்து குடிவரவு குடியகல்வு திணைக்களத்திற்கு வெளிநாட்டு கடவுச்சீட்டு வழங்குவதற்கு குறைந்த கட்டணம் பெற்ற நிறுவனத்திற்கு இந்த ஒப்பந்தம் வழங்காமல், பிரித்தானிய நிறுவனத்திற்கு வழங்ககப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

மேலதிக வகுப்பிற்காக சென்ற மாணவனுக்கு நேர்ந்த கதி : பெற்றோரின் உருக்கமான கோரிக்கை!!

கிளிநொச்சி – முழங்காவில் பகுதியில் விபத்திற்கு உள்ளாகி பாதிக்கப்பட்டிருகின்ற மாணவனின் சிகிச்சைக்கு உதவுமாறு அவரது பெற்றோர் உருக்கமான கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளனர்.

முழங்காவில் பகுதியில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 25ஆம் திகதி மேலதிக வகுப்புக்காக சென்ற 16 வயதான திருச்செல்வம் கஜேந்திரன் என்ற மாணவன் விபத்தில் சிக்கி படுகாயமடைந்துள்ளார்.

இதனையடுத்து அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று தற்போது பெற்றோரின் பராமரிப்பில் வீட்டில் இருந்து வருகின்றார்.

இவருக்கான மேலதிக சிகிச்சை மேற்கொள்ள வேண்டியிருப்பதனால் அதற்கான நிதியுதவி இன்மை மற்றும் குடும்ப வறுமை காரணமாக பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்து பெற்றோர் உதவி கோரியுள்ளனர்.

பாடசாலை சீருடையுடன் காதலனைத் தேடிச் சென்ற மாணவி : ஏற்க மறுத்த பெற்றோர்!!

அநுராதபுர மாவட்டத்தில் தம்புத்தேகம பிரதேசத்தில் அமைந்துள்ள பாடசாலையில் உயர்தரத்தில் படிக்கும் 18 வயதுடைய மாணவியை அவருடைய பெற்றோர் மனமுவந்து பொலிஸார் ஊடாக காதலனிடம் ஒப்படைத்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

பாடசாலைக்குச் செல்வதாகக் கூறி குறித்த மாணவி வீட்டிலிருந்து சென்றுள்ளார். எனினும் பாடசாலை செல்லாமல் சீருடையுடன் நொச்சியாகமத்திலுள்ள தனியார் பஸ் நிலையத்தில் தனது காதலனுடன் இருக்கும் போது, குறித்த பாடசாலையின் இரண்டு ஆசிரியர்கள் மற்றும் பாடசாலையில் புத்தமதத்தினைப் போதிக்கும் பௌத்த பிக்குவும் பிடித்து தம்புத்தேகம பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

இதனையடுத்து, மாணவியின் பெற்றோர் மற்றும் குறித்த இளைஞனின் பெற்றோரை விசாரணைக்கு வருமாறு பொரிஸார் அழைத்துள்ளனர்.

விசாரணையின் பின்னர் குறித்த மாணவியை பொலிஸார் தனது பெற்றோரிடம் ஒப்படைத்தபோது, அவர்கள் அம்மாணவியை ஏற்க மறுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஏனென்றால் தனது மகளுக்கு காதல் விவகாரத்தில் பல முறை அறிவுரை செய்ததாகவும் அதற்கு அவள் கீழ்ப்படியவில்லை எனவும் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், பெற்றோர் ஏற்றுக்கொள்ள மறுத்ததால் அம்மாணவி 18 வயதுடையவர் என்பதால், அவரது காதலனிடம் ஒப்படைக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

லண்டனின் வெம்ப்லி (Wembley) பகுதியில் இலங்கை தமிழ் இளைஞர் படுகொலை!!

லண்டனின் வெம்ப்லி (Wembley) பகுதியில் கடந்த செவ்வாய் கிழமை இடம்பெற்ற உதைப்பந்தாட்ட போட்டியை பார்வையிட சென்ற இலங்கையின் வடபகுதி இளைஞர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.

உயிரிழந்த இளைஞரின், 22 வயதுடைய நண்பரே இவ்வாறு கொலை செய்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உதைப்பந்தாட்ட போட்டியை பார்வையிட சென்ற குறித்த இலங்கை இளைஞர்கள் இருவருக்குள் ஏற்பட்ட மோதலே உயிரிழப்புக்கான காரணம் என்றும் ஆரம்பக்கட்ட விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை லண்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, இலங்கையில் அண்மை காலமாக வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில் புலம்பெயர் தேசமான லண்டனிலும் இதன் தாக்கம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பாரிய மரத்திற்குள் காத்திருந்த அதிர்ச்சி : வியப்பை ஏற்படுத்திய சம்பவம்!!

மஹியங்கனை ரஜமஹா விகாரைக்கான அபிவிருத்தி திட்டத்திற்காக மரம் ஒன்று வெட்டி ஒதுக்கப்பட்டுள்ளது.

அங்கு மரத்தின் ஓட்டையில் பாரிய பாம்பு ஒன்று தனது 28 முட்டைகளை பாதுகாத்துள்ள நிலையில் மஹியங்கனை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து அந்த பாம்பு மற்றும் முட்டைகளை கிராதுருகோட்டையில் அமைந்துள்ள வனவிலங்கு திணைக்கள அதிகாரிகளிடம் அறிவித்து, பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.

மரத்தை வெட்டி கீழே சாய்த்த போது மரம் ஆடியமையினால் பாம்பு பதற்றமடைந்து மரத்திற்கு வெளியே வந்துள்ளது. அதனை அவதானித்த மரம் வெட்டும் நபர் மஹியங்கனை பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.

அங்கு வந்த பொலிஸார், வனவிலங்கு அதிகாரிகள் தாய் மற்றும் முட்டைகளை பாதுகாப்பாக எடுத்துள்ளனர். அவ்வாறு மீட்கப்பட்ட பாம்பு சுமார் 12 அடி நீளமானதென தெரிவிக்கப்படுகின்றது.

வவுனியாவில் திடீரென ஏற்பட்ட காட்டுத்தீ : பல ஏக்கர் காணி சேதம்!!

வவுனியா குருந்துபிட்டி பகுதியில் குடியிருப்புக்கு பின்பாகவுள்ள காட்டுப்பகுதி தீப்பற்றி எரிந்துள்ளது. இன்று மதியம் 1 மணியளவில் தீ பிடித்ததுடன் காற்றின் வேகம் அதிகரித்ததால் எல்லா இடங்களுக்கும் தீ பரவியது.

இதனால் அந்தப் பகுதி முழுவதும் புகைமூட்டமாக காட்சியளித்தது. சம்பவ இடத்திற்கு விரைந்த இரட்டைபெரியகுளம் பொலிஸார், வவுனியா நகரசபை தீ அணைப்பு பிரிவினர் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

தீவிபத்தில் 10 ஏக்கர் அளவிலான காட்டுப்பகுதி தீயில் கருகின எனத் தெரிவிக்கப்பட்டது. தீ பரவலுக்கான காரணம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியா கற்குழி பகுதியில் வீட்டின் கதவுடைத்து நகை,பணம் திருட்டு : ஒருவர் கைது!!

வவுனியா கற்குழி பகுதியில் கடந்த சில வாரங்களுக்கு முன் வீட்டின் கதவினையுடைத்து நகைகள், பணம் , தொலைபேசி என்பவற்றை திருடிச்சென்ற நபரை வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வவுனியா கற்குழி பகுதியில் அமைந்துள்ள ஆலயமொன்றில் திருவிழா இடம்பெற்றுள்ளது. திருவிழாவிற்கு வீட்டார் சென்றிருந்த சமயத்தில் அவ் வீட்டின் கதவினையுடைத்து கைத்தொலைபேசி, பணம் என்பன திருடப்பட்டுள்ளது.

திருவிழா முடிவடைந்த பின்னர் வீட்டார் வீடு திரும்பிய சமயத்தில் கதவுடைத்து திருடப்பட்டுள்ளதை அவதானித்துள்ளனர். அதனையடுத்து வீட்டார் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைபாட்டினை மேற்கொண்டனர்.

முறைப்பாட்டினையடுத்து விசாரணைகளை மேற்கொண்ட வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸார் யாழ்ப்பாணம் , மானிப்பாய் பகுதியினை சேர்ந்த 26வயதுடைய ( ஒரு பிள்ளையின் தந்தை) நபரொருவரை சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் வீடுகளுக்கு சென்று தேங்காய் பிடிங்கிக் கொடுக்கும் வகையில் வீடுகளுக்கு சென்று வீட்டில் உள்ள பொருட்களை பார்வையிட்டதன் பின்னர் பிரிதொரு தினத்தில் வந்து களவாடி செல்வதாகவும் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு , திருட்டுச் சம்பவ குற்றச்சாட்டில் பல தடவைகள் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தவரெனவும் இவரை மேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா மாவட்ட நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தவுள்ளதாக வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்தனர்.