பேஸ்புக் காதலனுக்கு நேர்ந்த துயரம் : மறக்க முடியாமல் தற்கொலை செய்து கொண்ட இளம் பெண்!!

தமிழகத்தில் காதலன் இறந்த துக்கம் தாங்க முடியாமல் இளம் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாகப்பட்டினத்தைச் சேர்ந்தவர் தென்னவன்(24). திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் இன்ஜினியரிங் படித்து வரும் இவர், சென்னை பூந்தமல்லியில் உள்ள தனியார் கல்வி நிறுவனத்தில் ஐ.ஏ.எஸ் தேர்வுக்கு படித்து வந்துள்ளார்.

இவருக்கும் சென்னையைச் சேர்ந்த கவிதா, சட்டக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருபவருக்கும் பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஆரம்பத்தில் நண்பர்களாக இருந்தவர்கள், நாளைடைவில் காதலர்களாக மாறினர்.

இந்நிலையில் கடந்த நவம்பர் மாதம் 2ம் திகதி கவிதாவிற்கு பிறந்த நாள் என்பதால் ஒரு விழா நடத்தப்பட்டுள்ளது. அந்த விழாவில் தென்னவன் பங்கேற்றுள்ளார்.

அப்போது தென்னவனை பெற்றோரிடம் கவிதா தன்னுடைய நண்பர் என்று அறிமுகப்படுத்தியுள்ளார். இதையடுத்து கடந்த மே மாதம் 3ம் திகதி கார்த்திகாவின் பெற்றோர், கேரளா மாநிலம் பாலக்காட்டுக்கு தாத்தாவின் துக்க நிகழ்ச்சிக்குச் சென்றுள்ளனர்.

இதையடுத்து கார்த்திகா தன்னுடைய காதலன் தென்னவனை வீட்டிற்கு வரும் படி அழைத்துள்ளார். வீட்டிற்கு வந்த நேரத்தில் தென்னவனுக்கு திடீரென்று வலிப்பு ஏற்பட்டதால், அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கபப்ட்டார்.

அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.

இந்த சம்பவத்தை அறிந்த தென்னவனின் தந்தை ரவிச்சந்திரன் காவல்நிலையத்தில் தன் மகனின் சாவில் மர்மம் இருப்பதாகவும் அது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் புகார் மனு அளித்திருந்தார். இதனால் பொலிசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்துள்ளனர்.

காதலன் இறந்த துக்கத்தில் மனம் உடைந்து காணப்பட்ட அஸ்வினியை திருவொற்றியூர் சக்திபுரத்தில் உள்ள உறவினர் ராமச்சந்திரன் என்பவரது வீட்டில் பெற்றோர் தங்க வைத்தனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ராமச்சந்திரன் தனது குடும்பத்துடன் உறவினர் வீட்டு சுபநிகழ்ச்சிக்கு சென்றுள்ளார்.

வீட்டில் தனியாக இருந்த அஸ்வினி, யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இந்த சம்பவத்தை அறிந்த பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காதலன் இறந்த துக்கம் தாங்காமல் அஸ்வினி தற்கொலை செய்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

திருமணம் முடிந்த மறு நிமிடமே இறந்த மணப்பெண் : அதிர்ச்சி சம்பவம்!!

இந்தியாவில் திருமணம் முடிந்த மறு நிமிடமே மணப் பெண் மாரடைப்பு காரணமாக இறந்து போன சம்பவம் திருமணத்தில் வந்திருந்தவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானாவின் மெகபூப் நகர் மாவட்டத்தில் உள்ள அச்சம் பேட்டையில் வெங்கடேஷ் மற்றும் லட்சுமிக்கு திருமணம் நடைபெற்றுள்ளது.

திருமணத்திற்காக அங்கு அனைவரும் கூடியிருந்தனர். அப்போது திருமணம் முடிந்ததால், வெங்கடேஷ் மற்றும் லட்சுமியை அருந்ததி நட்சத்திரம் பார்ப்பதற்காக அழைத்துச் சென்றுள்ளனர்.

அருந்ததி நட்சத்திரத்தைப் பார்க்கும் போது, லட்சுமி திடீரென்று வெங்கடேசனின் காலில் சரிந்து விழுந்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

லட்சுமியை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.

திருமணம் நடந்து முடிந்த உடனே மணப்பெண் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதுமட்டுமின்றி இந்த சம்பவத்தை அறிந்த பொலிசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நிர்வாணமாக ஊர்வலம் : காதல் ஜோடிக்கு நடந்த கொடூரம்!!

ராஜஸ்தானில் காதல் ஜோடி நிர்வாணமாக ஊர்வலம் அழைத்து செல்லப்பட்டது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளன.

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் அருகே உள்ள பகால் என்ற கிராமத்தில் பழங்குடி கிராமத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு 5 ஆண்டுகளுக்கு முன்பு தரூ காம்தி என்ற நபருடன் திருமணம் நடந்துள்ளது. ஆனால் அந்த இளம்பெண்ணுக்கு அதேபகுதியை சேர்ந்த ராம்லால் காம்தி என்ற நபருடன் காதல் இருந்து வந்துள்ளது.

இதை தெரிந்துகொண்ட தரூ ஊர் பஞ்சாயத்தில் புகார் அளித்தார். அதனடிப்படையில், இருவரது திருமணம் முறிக்கப்பட்டதாக பஞ்சாயத்தில் அறிவிக்கப்பட்டது. இதற்கிடையில் சம்மந்தப்பட்ட இளம்பெண் தனது காதலரையே திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டது. இதனையடுத்து இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து பேசியுள்ளனர்.

ஒரு நாள் இதனை பார்த்த முன்னாள் கணவர் தரூ காம்தி, அந்த இளம்பெண்ணை பழிவாங்க நினைத்து ஊர் பஞ்சாயத்தில் புகார் அளித்துள்ளார். பின்னர் இதனை விசாரித்த பஞ்சாயத்து தாரர்கள், இருவரையும் நிர்வாணமாக்கி கட்டி வைத்து அடித்ததோடு, ஊர்வலமாகவும் அழைத்து சென்றனர்.

இதனை ஒரு சில நபர்கள் தங்களது செல்போனில் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர். பின்னர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், தீவிர விசாரணைக்கு பின்னர் 5 பேரை கைது செய்துள்ளனர்.

இந்திய கிரிக்கெட் வீரரின் மனைவி எடுத்த அதிரடி முடிவு!!

இந்திய கிரிக்கெட் வீரர் முகம்மது ஷமியின் மனைவி ஜஹான் மீண்டும் மொடலிங் துறைக்கு திரும்ப முடிவு செய்துள்ளார்.

முகம்மது ஷமிக்கு, பல்வேறு பெண்களுடன் தொடர்பு இருப்பதாக அவரது மனைவி ஹசின் ஜஹான் சமீபத்தில் புகார் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் ஷமி தம்மை துன்புறுத்துவதாகவும் அவர் பொலிசில் புகார் அளித்த நிலையில் இது தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது. இதையடுத்து ஷமியும், ஹசினும் தற்போது பிரிந்து வாழ்கின்றனர்.

இந்நிலையில், மகளின் எதிர்கால வாழ்க்கையை கருத்தில் கொண்டு மீண்டும் மொடலிங் துறைக்கு செல்ல முடிவு செய்துள்ளதாக ஹசின் தெரிவித்துள்ளார்.

பேருந்தின் கண்ணாடியை உடைத்துக் கொண்டு உள்நுழைந்த மூங்கில்!!

நோட்டன் – மஸ்கெலியா பிரதான வீதியின், எடிட் பிரதேசத்தில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் இருவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

காயமடைந்த இருவரும் லக்ஷபான பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நோட்டன் பகுதியிலிருந்து பயணித்த இ.போ.சபைக்கு சொந்தமான பேருந்து மீது எடிட் பிரதேசத்தில் வைத்து மூங்கில்கள் சரிந்து விழுந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன்போது மூங்கிளொன்று பேருந்தின் முன் கண்ணாடியை உடைத்துக் கொண்டு பேருந்திற்குள் நுழைந்ததாலேயே இருவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

பலத்த காற்று வீசியதாலேயே பிரதான வீதியின் அருகில் உள்ள மூங்கில்கள் உடைந்து பேருந்து மீது விழுந்துள்ளதாக விசாரணைகளை மேற்கொள்ளும் நோட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஆற்றிலிருந்து பெண்ணொருவரின் சடலம் மீட்பு!!

நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கெசல்கமுவ ஓயாவிற்கு நீர் வழங்கும் கிளை ஆறான சென். ஜோன்டிலரியிலிருந்து பெண்ணொருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த சடலம் இன்று காலை மீட்கப்பட்டதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த ஆற்றில் சடலமொன்று கிடப்பதாக அப்பகுதியிலுள்ள தேயிலைமலைக்கு சென்று கொண்டிருந்த தொழிலாளர்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.

30 அல்லது 35 வயது மதிக்கத்தக்க பெண்ணொருவரது சடலமே மீட்கப்பட்டுள்ளதாகவும், எனினும் இது தொடர்பில் மேலதிக தகவல்கள் கிடைக்கவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் சடலம் நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பிரான்ஸில் இலங்கை தமிழ் மாணவி சாதனை : வரலாற்றில் முதற்தடவையாக வாய்ப்பு!!

பிரான்ஸில் இலங்கை தமிழ் பெண்ணொருவர் சாதனை படைத்துள்ளார்.

பிரான்ஸின் LORRAINE மாகாணத்தில் முதல் தடவையாக இலங்கைத் தமிழ்ப்பெண் ஒருவர் வைத்தியராக தெரிவாகி உள்ளார்.

2018 ஆம் ஆண்டுக்கான மருத்துவர்களுக்கான பட்டமளிப்பு விழா கடந்த மாதம் 23ம் திகதி நடைபெற்றது. நான்சி பல்கலைக்கழகத்தின் மருத்துவபீட மாணவர்கள் 300 பேருக்கு வைத்தியர் பட்டம் வழங்கப்பட்டது. இதில் இலங்கையை சேர்ந்த சிநேகிதா ஸாகரியும் ஒருவராக பட்டம் பெற்றார்.

இவர் பிரான்ஸ் மெட்ஸ் நகரில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களான சுந்தரவடிவேல்பிள்ளை சந்திரவதனி புதல்வி ஆவார்.

இலங்கையில் ஆரம்ப கல்வியை ஆங்கில மொழியில் தொடர்ந்த சிநேகிதா, பிரான்ஸிற்கு குடிபெயர்ந்த நிலையில் பிரெஞ்சு மொழியில் தனது படிப்பினை தொடர வேண்டிய நிலை ஏற்பட்டது.

2008ம் ஆண்டு மெட்ஸ் நகரிலிருந்த கல்லூரிகளிலிருந்து தெரிவு செய்யப்பட்ட 28 சிறந்த மாணவர்களில் ஒருவராகத் தெரிவு செய்யப் பட்டு GASTON-HOFFMANN விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

தானொரு வைத்தியராக வர வேண்டும் என்ற கனவோடு தீவிரமாக படித்தமையினால் இன்று அது நனவாகி உள்ளதாக சிநேகிதா குறிப்பிட்டுள்ளார்.

பிரான்ஸின் LORRAINE மாகாணத்தில் ஒரு இலங்கைத் தமிழ்ப்பெண் ஒருவர் வைத்தியராக வந்திருப்பது இதுவே முதற் தடவையாகும்.

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் கிருஷ்ணா கொழும்பில் சுட்டுப் படுகொலை!!

நவோதய மக்கள் முன்னணியின் தலைவரும் கொழும்பு மாநகர சபை உறுப்பினருமான கிருஷ்ணா சுட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். இன்று காலை 7.20 மணிக்கு இவர் சுட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

செட்டியார் தெருவில் உள்ள அவரது காரியாலயத்திற்கு முன்பாக இன்று காலை இனந்தெரியாத நபர்களால் சுட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

1 979ஆம் ஆண்டு ஜூலை மாதம் 28ஆம் திகதி பிறந்த இவர் தனது 39ஆவது வயதில் உயிரிழந்துள்ளார். இவருடைய சடலம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இலங்கையின் பிரபல பாடகி கொலை செய்யப்பட்டமைக்கான காரணம் என்ன : பொலிஸார் வெளியிட்ட தகவல்கள்!!

இலங்கையின் பிரபல சிங்கள பாடகி கொலை செய்யப்பட்ட நிலையில் நேற்று சடலமாக மீட்கப்பட்டார். இந்த கொலைச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் பல விடயங்களை கண்டுபிடித்துள்ளனர்.

உயிரிழ்ந்த பாடகிக்கும், அவரின் கணவருக்கும் இடையில் நீண்டகாலமாக முறுகல் நிலை காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாணந்துர அருக்கொட பிரதேசத்திலுள்ள பாடகியின் வீட்டில் நேற்றிரவு 8.45 மணியளவில் குத்தி கொலை செய்யப்பட்ட நிலையில் அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.

கணவனாலேயே பாடகி கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கும் அதேவேளை, அந்தப் பகுதியை விட்டு அவர் தப்பிச் சென்றுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

கொலையாளியை கைது செய்ய பாணந்துர தெற்கு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

51 வயதான மூன்று பிள்ளைகயின் தாயான பிரியானி ஜயசிங்க என்ற பிரபல பாடகியே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

வவுனியாவில் பல வாள்வெட்டு மற்றும் மோதல் சம்பவங்கள் : 10 பேர் கைது, 7 பேர் வைத்தியசாலையில்!!

வவுனியாவில் நேற்றையதினம் பல வாள்வெட்டு மற்றும் மோதல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ள நிலையில் பலர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவங்கள் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, தாண்டிக்குளம் பகுதியில் மாலை 7 மணியளவில் மதுபோதையில் மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞர்கள் அப்பகுதியில் நின்று கொண்டிருந்த இளைஞர்கள் மீது வாள் வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்த தாக்குதல் சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ள நிலையில் அவர் சிகிச்சைகளுக்காக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக பூந்தோட்டம், பெரியார்குளம் மற்றும் தோணிக்கல் பகுதிகளை சேர்ந்த 10 இளைஞர்களை வவுனியா குற்றதடுப்பு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அத்துடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடமிருந்து ஒரு வாள், கோடரி, கேபிள்கள் மற்றும் 3 மோட்டார்சைக்கிள்கள் என்பனவற்றை பொலிஸார் மீட்டுள்ளனர்.

இதேவேளை, மதீனா நகர் பகுதியில் இரு நபர்களுக்கு இடையில் ஏற்பட்ட கைகலப்பில் காயமடைந்த இருவரும் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளனர்.

அத்துடன், நேற்றைய தினம் மதுபோதை காரணமாக ஏற்பட்ட மோதல் சம்பவங்களில் 7 பேர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையின் விபத்துபிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் குறித்த மோதல் சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளை வவுனியா பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

தேங்காய் ஒன்றினால் காப்பாற்றப்பட்ட பல உயிர்கள் : இலங்கையில் நடந்த அபூர்வ நிகழ்வு!!

களுத்துறையில் தேங்காய் ஒன்றினால் பல உயிர்கள் காப்பாற்றப்பட்ட அபூர்வ சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

வலல்லாவிட்ட பிரதேசத்தில் திடீரென ஏற்பட்ட கடும் காற்று காரணமாக பாரியளவில் மரங்கள் உடைந்து விழுந்துள்ளன. இதன்போது வலல்லாவிட்ட அவித்தாவ வீதியில் ஊழியர்களினால் வீதி நிர்மாணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

காற்றினால் விழுந்து கிடந்த தேங்காய் ஒன்றை கண்ட சாரதி ஒருவர் அதனை எடுப்பதற்காக பவுசர் ஒன்றின் உதவியாளரை கீழே இறக்கியுள்ளார்.

அந்த தேங்காய் எடுக்க சென்ற சந்தர்ப்பத்தில் பவுசரின் வேகம் குறைக்கப்பட்டு முன்னால் சென்றுள்ளது. இதன் போது, அங்கிருந்த பாரிய மரம் ஒன்று பவுசர் மீது உடைந்து விழுந்துள்ளது.

இந்த அனர்த்தம் காரணமாக யாரும் காயமின்றி அதிஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர்.

அந்த மரம் பவுசர் மீது விழவில்லை என்றால் அருகில் இருந்த கடை மற்றும் வீடுகள் மீது விழுந்து பாரிய உயிர் சேதங்களை ஏற்படுத்தியிருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது. அந்த தேங்காய் தான் இந்த உயிர்களை காப்பாற்றியுள்ளதாக பவுசரின் சாரதி தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டில் இலங்கை அகதி ஒருவர் பரிதாபமாக பலி!!

தமிழகம், மானாமதுரையில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கை அகதி ஒருவர் பரிதாபமாக பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மானாமதுரை – மூங்கில் ஊரணியில் உள்ள அகதிகள் முகாமில் வசித்து வரும் ஐம்பது வயதான நல்லையா பிரகாஷ்குமார் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நேற்று முன்தினம் இரவு 7:00 மணிக்கு பனிக்கனேந்தலில் இருந்து சைக்கிளில் முகாமிற்கு திரும்பிய இவர், அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தமிழக ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாகன விபத்தில் இருவர் படுகாயம்!!

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாங்காட்டு பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளார்.

நேற்று காலை மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியில் வேகமாக சென்ற சிறிய ரக வாகனம் வேகத்தினை கட்டுப்படுத்தமுடியாமல் மின்சார தூணில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

காத்தான்குடியில் இருந்து கல்முனை நோக்கி சென்ற வாகனமே இவ்வாறு விபத்திற்குள்ளானதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது குறித்த வாகனத்தில் பயணித்த சாரதி உட்பட இருவர் படுகாயமடைந்த நிலையில் செட்டிபாளையம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த விபத்தினால் சிறிய ரக வாகனம் கடுமையான சேதத்திற்குள்ளாகியுள்ளதுடன் விபத்து காரணமாக பிரதேசத்தில் மின்சார தடையும் ஏற்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு வந்த களுவாஞ்சிகுடி பொலிஸார் விபத்து தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்கொலை செய்தது ஏன்? இளம்பெண்ணின் இறுதி வார்த்தைகள்!!

இந்தியாவின் நொய்டாவில் உள்ள பிரபல மாலிலிருந்து இளம்பெண் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பில் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உத்திரபிரதேசத்தை சேர்ந்தவர் ஷிவானி(வயது 25), தற்போது நொய்டாவில் தங்கி வேலைபார்த்து வருகிறார்.

இந்நிலையில் நொய்டாவின் பிரபல மாலில் நேற்று மூன்றாவது மாடியிலிலிருந்து குதித்து இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.

உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றும், பலனில்லாமல் போனது.

இந்நிலையில் அவரது உடலில் எழுதியிருந்த தற்கொலை குறிப்பில், தன்னுடைய மரணத்திற்கு யாரும் காரணமில்லை என்றும், காதலன் தன்னை கண்டுகொள்ளாததால் மனமுடைந்து காணப்பட்டதே இதற்கு காரணம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைதொடர்ந்து மாலுக்கு ஷிவானி மட்டும் தனியாக வந்தாரா? அல்லது வேறு ஏதும் பிரச்சனையா என்பது குறித்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ய பொலிசார் முடிவெடுத்துள்ளனர்.

நெற்றியில் சந்தன பொட்டு வைத்த முஸ்லீம் சிறுமிக்கு நேர்ந்த கதி!!

கேரளாவில் பள்ளி ஒன்றில் படித்து வந்த முஸ்லீம் மாணவி நெற்றியில் சந்தப்பொட்டு வைத்ததற்காக அவரை பள்ளியில் இருந்து நிர்வாகம் நீக்கியுள்ளது.

மதரசா என்ற பள்ளியில், எட்டாம் வகுப்பு படிக்கும் ஹென்னா, குறும் படத்தில் நடிப்பதற்காக நெற்றியில் சந்தன பொட்டு வைத்துள்ளார். இதற்காக அவரை பள்ளியில் இருந்து நிர்வாகம் நீக்கியுள்ளது.

இதுகுறித்து அவரது தந்தை தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். நல்லவேளை என் மகள் கல் வீச்சு தண்டனையில் இருந்து தப்பி விட்டார்.

ஹென்னா அனைத்து துறையிலும் ஆர்வம் உடையவர். படிப்பிலும் சுட்டி. கலை விழாக்களில் பல்வேறு பரிசுகளை பெற்றவர். வகுப்பில் முதலிடத்தில் இருப்பவர். மதரசா பொது தேர்வில் ஐந்தாம் இடம் பிடித்தவர் என பதிவிட்டுள்ளார்.

இத்தகவலை, 2,800 பேர் ஷேர் செய்துள்ளனர். சமூக வலை தளங்களில் இந்த விஷயம் வேகமாக பரவி வருகிறது.

விபச்சார கும்பலிடம் சிக்கிய இளம் நடிகை அதிரடியாக மீட்பு!!

இந்தியாவின் மராட்டிய மாநிலத்தில் விபச்சார கும்பலிடம் சிக்கிய இளம் நடிகையை பொலிசார் அதிராடியாக மீட்டுள்ளனர்.

மராட்டிய மாநில தலைநகர் மும்பை அருகே அமைந்துள்ள பஞ்சரா ஹில் பகுதில் செயல்பட்டுவரும் நட்சத்திர ஹொட்டல் ஒன்றில் விபச்சாரம் நடப்பதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து சம்பவப்பகுதிக்கு விரைந்த பொலிசார் அந்த ஹொட்டலில் இருந்து 24 வயது மதிக்கத்தக்க இளம் நடிகை உள்ளிட்ட பெண்களை மீட்டுள்ளனர்.

பொலிஸ் நடவடிக்கையின்போது தப்பியோட முயன்ற இரு நபர்களை பொலிசார் கைது செய்துள்ளனர்.

மட்டுமின்றி விபச்சாரத்தில் ஈடுபட்டிருந்த அரசு ஊழியர் ஒருவரையும் பொலிசார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள ஜனார்தனன் ராவு, இளம் நடிகைகள் மற்றும் துணை நடிகைகளை மட்டுமே கொண்டு இந்த தொழிலை செய்து வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மும்பை மற்றும் ஐதராபாத்தில் உள்ள பல துணை நடிகைகள் இவரது கட்டுப்பாட்டில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

விபச்சாரத்தில் ஈடுபடும் துணை நடிகைகளுக்கு வாரம் ஒரு லட்சம் ஊதியமாக வழங்கி வருவதாகவும், வாடிக்கையாளர்களிடம் இருந்து தலா 20,000 ரூபாய் கட்டணமாக ராவு பெற்றுவருவதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.