வவுனியாவில் புதையல் தோண்ட முயற்சி!!

வவுனியா பட்டக்காடு, மரக்காரம்பளை வீதியில் நேற்று மாலை புதையல் தோண்டுவதற்கு மேற்கொண்ட முயற்சி பொலிசாரின் தலையீட்டினால் தடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

நேற்று மாலை வவுனியா பட்டக்காடு மரக்காரம்பளை வீதியிலுள்ள பகுதி ஒன்றில் ஏற்கனவே புதையல் தோண்டப்பட்டுள்ளது. எனினும் எவ்விதமான பொருட்களும் கிடைக்கவில்லை.

இதையடுத்து நேற்று மாலை அப்பகுதியில் புதையில் தோண்டுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து அங்கு சென்ற பொலிசார் அப்பகுதியில் எவரும் இவ்வாறான முயற்சியில் ஈடுபடவில்லை என்பதைக்கண்டறிந்துள்ளனர்.

இதையடுத்து சற்று நேரம் பாதுகாப்புக்கடமைகளை மேற்கொண்ட பின்னர் அங்கிருந்து பொலிசார் விலகிச் சென்றுள்ளனர்.

இப்பகுதியில் புதையல் இருப்பதாகத் தெரிவித்து அண்மையில் ஒரு குழுவினரால் புதையல் தோண்டப்பட்டுள்ளமை என்பது குறிப்பிடத்தக்கது.

 

வவுனியாவில் மர்மப் பொருள் மீட்பு!!

வவுனியாவில் நேற்று(07.07) இரவு மரக்காரம்பளை பகுதியிலிருந்து இரும்புப் பெட்டகம் ஒன்றினை மீட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

நேற்று இரவு பொலிசாரின் அவரச தொலைபேசி அழைப்புக்குக்கிடைத்த தகவல் அடிப்படையில் சென்ற பொலிசார் மரக்காரம்பளை பகுதியிலிருந்து கைவிடப்பட்ட இரும்பு பாதுகாப்புப் பெட்டகம் ஒன்றினை மீட்டுள்ளனர்.

முற்றிலும் மூடப்பட்ட நிலையிலிருந்து மீட்கப்பபட்ட இரும்புப் பெட்டகத்தினுள் பொருட்கள் எவையும் மறைத்து வைக்கப்பட்டிருகலாம் என்றும் புதையல் தோண்டும் நபர்களினால் இது மீட்கப்பட்டிருக்கலாம் அதனை எடுத்துச் செல்ல முடியாத நிலையில் கைவிட்டுச் சென்றிருக்கலாம் என்ற சந்தேகத்தில் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியா இளைஞன் ஆசியன் சம்பியன் சிப் போட்டியில் விளையாட தெரிவு!!

ஐந்து நாடுகள் பங்கு கொள்ளும் ஆசியன் சம்பியன் சிப் போட்டியில் விளையாடுவதற்காக பங்களாதேஸ் தலைநகர் டாக்கா செல்லும் இலங்கை கூடைப்பந்தாட்ட தேசிய அணியில் வவுனியா இளைஞனும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை கூடைப்பந்தாட்ட தேசிய அணியின் 18 வயதிற்குட்பட்ட ஆண்கள் பிரிவில் வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தைச் சேர்ந்த கந்தவநேசன் கவிலவன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

தடகளம், பூப்பந்து, கூடைப்பந்து போன்ற விளையாட்டுக்களில் மாகாண மட்டத்தில் பலபதக்கங்களைப் பெற்று தேசிய ரீதியிலும் கபிலவன் விளையாடியிருந்தார்.

வவுனியா மாவட்டத்தில் ஒழுங்கான கூடைப்பந்து திடலோ, பயிற்சியாளரோ இல்லாத நிலையில் தனது விடாமுயற்சி காரணமாக குறித்த இளைஞன் கூடைப்பந்தாட்டத்தில் தேசிய அணியில் தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எதிர்வரும் 9 ஆம் திகதி 5 நாடுகள் பங்கு கொள்ளும் ஆசியன் சம்பியன் சிப்போட்டியில் விளையாடுவதற்காக பங்களாதேஸ் தலைநகர் டாக்கா செல்லவுள்ள இலங்கையின் கூடைப்பந்தாட்ட தேசிய அணியில் கபிலவன் இணைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் கல்வி கற்றுவந்த நிலையில் இலங்கைதேசிய அணியில் தெரிவாகியுள்ளமை வவுனியாவிற்கு மட்டுமன்றி வடமாகாணத்திற்கே பெருமையாகும்.

க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான அனுமதி அட்டைகள் அடுத்த வாரம் விநியோகிக்கப்படும்!!

க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான அனுமதி அட்டைகள் அடுத்த வாரம் விநியோகிக்கப்படும் என அறிவிக்கப்பட்டடுள்ளது.

குறித்த தகவலை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பி.சனத் பூஜித்த அறிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் தெரிவிக்கயைில்,

எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 6 ஆம் திகதி க.பொ.த உயர்தரப் பரீட்சைகள் ஆரம்பமாகவுள்ளன.

இந்த பரீட்சைகள் செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி நிறைவடையவுள்ளன.

இந்தப் பரீட்சைக்கான நேர அட்டவணை பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

2018ஆம் வருடம் ஆண்டு இலட்சத்து 21 ஆயிரத்து 469 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

சுவர்க்கத்தீவின் அழகிய சில புகைப்படங்கள்!!

ஆசியா கண்டத்தில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ள நாடு இலங்கை, இந்த தனி பொக்கிஷ நாட்டில் உள்ளூர் மற்றும் வெளியூர் வாசிகளின் கனவத்தை ஈர்ப்பது இயற்கை என்றால் அது மிகையாகாது.

இலங்கை ஒரு குட்டித்தீவாக இருந்தாலும் இங்கு கொட்டிக்கிடக்கும் இயற்கை வளங்களும் ஆச்சரியங்களும் உள்நாட்டவர்களையும், சுற்றுலாப்பயணிகளையும் எப்போதும் தன் பக்கம் வசப்படுத்தும் வள்ளமை கொண்டது.

நான்கு பக்கமும் சாகரம் சூழ, மத்தியில் மலைகளும், அடர்ந்த காடுகளும் அதன் நடுவே விசாலமான நீர் வீழ்ச்சிக்களும் என ஒரு குட்டி சுவர்க்கத்தையே எம் கண் முன் காட்டிவிடுவதாய் அமைந்ததுதான் எமது தீவு.

இவ்வாறு பல அற்புத பொக்கிஷங்களை உள்ளடக்கிய எமது நாட்டில் உள்ள சில இயற்கைசார் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

வான்பரப்பில் இருந்து நோக்கும்போது இந்த இடங்களின் காட்சியமைப்பு தனி அழகு கொண்டவை, அவ்வாறான புகைப்படங்களுள் சில….

மகளின் மானத்தை காக்க போராடிய தந்தை : கொடூரமாக வெட்டி கொலை செய்த கும்பல்!!

அனுராதபுரத்தில் மகளின் மானத்தை காப்பாற்ற போராடிய தந்தை கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

அனுராதபுரம், தீபான வித்தியாலயத்திற்கு வைத்து ஆயுத குழுவொன்றினால் குறித்த நபர் நேற்று கொலை செய்யப்பட்டுள்ளார்.

தனது மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த நபரை கொலை செய்யப்பட்ட தந்தை தாக்கியுள்ளார். அதற்கு பழிவாங்கும் நோக்கில் இந்த கொலை செய்யப்பட்டுள்ளதாக உயிரிழந்த நபரின் உறவினர் தெரிவித்துள்ளார்.

அனுராதபுரம், வன்னியன்குளம் பிரதேசததை சேர்ந்த 45 வயதான சுஜீவ பிரசந்த குமார ஹெட்டிஆராச்சி என்ற 3 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 10 மாதங்களுக்கு முன்னர் திருமண வைபவத்தில் வைத்து சுஜீவவின் மகன்கள் மற்றும் அந்த பிரதேசத்தை சேர்ந்த நபர் ஒருவருக்கும் இடையில் மோதல் ஒன்று ஏற்பட்டுள்ளது. இந்த மோதலை தடுக்க சுஜீவவின் மகள் தலையிட்டுள்ளார். அந்த சந்தர்ப்பத்தில் மோதலில் ஈடுபட்ட நபர், சுஜீவவின் மகளை நிர்வாணமாக்கி, துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்துள்ளார். இதன் போது சுஜீவ அந்த நபரை தாக்கியுள்ளார்.

இந்நிலையில் நேற்று மாலை 3 மணியளவில் சுஜீவவின் வாகனத்தை பழுது பார்ப்பதற்காக பழுது பார்க்கும் இடத்திற்கு கொண்டு சென்றுள்ளார். அந்த மோட்டார் வாகனம் செயலிழந்துள்ளதாக கூறி நபர் ஒருவர் வாகனத்தை தீபானி பாடசாலைக்கு அருகில் கொண்டு சென்றுள்ளார்.

அந்த இடத்தை வாகனம் சென்றடைந்தவுடன் ஆயுதத்துடன் மோட்டார் வாகனத்தில் வந்த 4 பேர் அவரை வெட்டி கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

தன்னிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சித்தவரே தந்தையை கொலை செய்திருக்கலாம் என உயிரிழந்தவரின் மகள் குற்றம் சுமத்தியுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

வவுனியா பூந்தோட்டம் பெரியார்குளம் கிராமத்தில் உள்ள ஆறுமுகநாவலர் சிலை உடைப்பு!!

வவுனியா பூந்தோட்டம் பெரியார்குளம் ஆறுமுகநாவலர் வீதியில் உள்ள ஆறுமுக நாவலரின் திருவுருவ சிலையினை காடையர்கள் சிலர் உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். இச்சம்பவம் நேற்று (06.07.2018) மாலை 6.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுதியில் தினமும் இரவு வேளைகளில் இளைஞர்கள் ஒன்றினைந்து மது வருந்துவதாகவும், அவர்களுக்குள் இடம்பெற்ற தகாராறு காரணமாக உடைத்து இருக்கலாம் என சந்தேகப்படுவதாக அப்பகுதி வாழ் மக்கள் சிலர் கருத்து தெரிவிக்கின்றனர்.

வீட்டுத் தோட்டத்தில் அதிசயமான தென்னை மரம்!!

சாலியவெவ யாய ஹதே பிரதேசத்தில் உள்ள வீட்டுத் தோட்டம் ஒன்றில் தென்னை மரம் ஒன்று மூன்று கிளைகளுடன் வளர்ந்துள்ளது.

மூன்று கிளைகளிலும் காய்கள் காய்பதாக அதன் உரிமையாளரான ஈ.எஸ். சோமாவதி தெரிவித்துள்ளார்.

20 வயதான இந்த தென்னை மரம் தனி மரமாக வளர்ந்துள்ளதுடன், பல வருடங்களுக்கு முன்னர் அதில் கிளைகள் முளைத்துள்ளதாகவும் அதன் உரிமையாளர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, கிளைகள் மூலம் சிறந்த தேங்காய் அறுவடை கிடைப்பதாகவும், தற்போது, மரத்தின் கிளை ஒன்றிலும் கிளை வளர்ந்து வருவதாகவும் ஈ.எஸ். சோமாவதி கூறியுள்ளார்.

நடுவானில் திடீரென தோன்றிய உருவம் : அதிர்ச்சியில் மயங்கிய இளைஞன் : என்ன உருவம் தெரியுமா?

கிளிநொச்சி மாவட்டம் பூநகரி பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட நாச்சிக்குடா பிரதேசத்தில் கிருஷ்ணர் வானத்தில் தோன்றி அருளாட்சி புரிந்திக்கிறார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது என்னவென்றால், கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரு கிறிஸ்தவ வாலிபன் நாச்சிக்குடா கடற்கரையில் இரவு மீன் பிடிக்க செல்வதற்காக வலைகளை உலர வைக்க சென்றிருக்கிறான்.

அப்போது அந்த வாலிபன் வானத்திலே கிருஷ்ணர் அவதாரம் தோன்றியிருந்ததை அவதானித்திருக்கிறான் உடனே தனது கைத்தொலைபேசியை எடுத்து அதை புகைப்படம் எடுத்திருக்கிறான்.

அதை அவர்களின் ஊர் கிறிஸ்தவ பங்குத்தந்தையிடம் காட்டியிருக்கிறான் அப்போது தான் அவனுக்கு தெரிந்திருக்கிறது அவன் படபிடித்தது கிருஷ்ணரின் உருவத்தை என்று.

இதே போல் இதே கிருஷ்ணர் உருவத்தை கடல் பகுதியில் நின்றிருந்த பிறிதொரு நபரும் அவதானித்திருக்கிறார்.

அவர் கிருஷ்ணணின் உருவத்தை வானில் கண்ட அதிர்ச்சியில் மயக்கமடைந்தி வீழ்ந்திருக்கிறார் பின் அந்த இடத்தால் வந்த கடற்படையினர் அவரை மீட்டு நினைவு தெளிய வைத்த பின் நடந்த சம்பவத்தை கூறியிருக்கிறார். இந்த விடயம் தற்போது பூநகரி பிரதேத்தில் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

ஏன் இப்படி திடீரென கிருஷ்ணபகவான் அருளாட்சி புரிந்தார் என பலதப்பட்ட கேள்விகளை உருவாக்கி மக்களை அச்சத்துக்கு உள்ளாக்கியிருக்கிறது.

இரு பிள்ளைகளின் தந்தை வெட்டிக்கொலை!!

அநுராதபுரம் – விஜயபுர பிரதேசத்தில் குடும்பஸ்தரான வர்த்தகரொருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். கூரிய ஆயுதங்களுடன் வந்த குழுவினர் இந்த நபரை வெட்டிக்கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விஜயபுர ராகுல மாவத்தையில் வசித்து வந்த 45 வயதான இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

கொலை செய்யப்பட்ட நபர் வாகனங்களை விநியோகித்து வருவதுடன், வாகனங்களை பழுதுபார்க்கும் தொழில் நிலையம் ஒன்றையும் நடத்தி வந்துள்ளார்.

நேற்று மாலை மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் தனது வாகனத்தை பழுது பார்க்க வருமாறு கூறி அநுராதபுரம் தீபானி கல்லூரிக்கு எதிரில் அழைத்துச் சென்றுள்ளார்.

அப்போது அங்கு கூரிய ஆயுதங்களுடன் இருந்த நபர்கள், வர்த்தகரை வெட்டியுள்ளனர்.

வெட்டு காயங்களுக்கு உள்ளாகி படுகாயமடைந்த வர்த்தகர் அநுராதபுரம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளதாக அனுராதபுரம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்களை கைது செய்ய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கையர்களை வியப்பில் ஆழ்த்திய வித்தியாசமான திருமணம்!!

இலங்கையில் நடந்த திருமணம் வைபவம் ஒன்று நாட்டு மக்களை வியப்பில் ஆழ்த்தும் வகையில் அமைந்துள்ளது.

தற்போது உலகக் கிண்ண காற்பந்தாட்ட போட்டிகள் ரஷ்யாவில் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக உலகமெங்கும் உலகக் கிண்ண காற்பந்தாட்ட காய்ச்சல் ரசிகர்களை தொற்றியுள்ளது.

இலங்கையில் உள்ளவர்களும் காற்பந்து போட்டிகளுக்கு தீவிர ரசிகர்களாக மாறியுள்ளனர்.

இந்நிலையில் காற்பந்து மீதான தீவிரத்தை வெளிப்படுத்தும் வகையில் ஜோடி ஒன்று தமது திருமணத்தை செய்துள்ளது.

கலாச்சார ஆடைகளை அணியாது, காற்பந்து போட்டியாளர்களாக மைதானம் ஒன்றில் வைத்து திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

எனினும் திருமணம் செய்து கொண்டவர்கள் தொடர்பில் தகவல் வெளியாகாத நிலையில் அவர்களின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.

வவுனியா மாவட்ட அரசாங்க அதிபராக ஹனிபா கடமைகளைப் பொறுப்பேற்றார்!!

 

வவுனியா மாவட்டத்தின் 37வது அரசாங்க அதிபராக இன்று காலை(06.07) 11.30 மணியளவில் ஜ.எம்.ஹனிபா தமது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.

இந்நிகழ்வு இன்று காலை வவுனியா மாவட்டச் செயலகத்தில் முன்னாள் அரசாங்க அதிபர் சோமரத்தின விதாரன பத்திரன தலைமையில் இடம்பெற்றது.

காலை 11 மணியளவில் தேசிய கொடியேற்றலுடன் ஆரம்பமான நிகழ்வு சர்வமத பிரார்த்தனையின் பின்னர் புதிய மாவட்ட அரசாங்க அதிபர் உத்தியோகபூர்வமாக மாவட்ட செலயகத்தில் கையொப்பமிட்டு தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.

தனது குடும்ப உறுப்பினர்களுடன் வருகை தந்த புதிய அரசாங்க அதிபரை மாவட்ட செயலக அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், கிழக்கு மாகாண அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் எனப்பலரும் வரவேற்றுள்ளதுடன் கடமைகளைப் பொறுப்பேற்கும் நிகழ்விலும் கலந்துகொண்டனர்.

வவுனியாவில் சட்டவிரோதமாக மாட்டு இறைச்சி அறுத்த ஒருவர் கைது!!

வவுனியாவில் இன்று காலை 7 மணியளவில் சட்டவிரோதமான முறையில் வீடு ஒன்றில் மாடு அறுத்து இறைச்சியாக்கிய அதனை விற்பனை செய்வதற்கு முயன்றபோது சம்பவ இடத்தில் வைத்து சந்தேக நபர் ஒருவரைக் கைது செய்துள்ளதாக வன்னிப்பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபரின் கீழ் செயற்படும் போதை ஒழிப்புப்பிரினர் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

இன்று (06.07) காலை 7மணியளவில் பட்டக்காடு பகுத்தியில் உள்ள வீதியில் வீடு ஒன்றில் சட்டவிரோதமான முறையில் மாடுகள் அறுத்து விற்பனை செய்யப்பட்டு வருவதாக வன்னிப்பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனின் கீழ் செயற்படும் போதை ஒழிப்புப்பிரிவினருக்குக்கிடைத்த இரகசியத் தகவல் கிடைத்தது.

இதன் அடிப்படையில் அப்பகுதியைச் சுற்றிவளைத்து மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையின்போது சட்டவிரோதமான முறையில் மாடு அறுத்த சந்தேக நபர் ஒருவருடன் பெருமளவு இறைச்சியையும் பொலிசார் மீட்டுள்ளதாகவும் இப்பகுதியில் தொடர்ச்சியாக ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் இவ்வாறு சட்டவிரோதமான முறையில் மாடு அறுத்து விற்பனை செய்யப்பட்டு வருவதும் தற்போது பொலிசாருக்குத் தெரியவந்துள்ளது.

இதையடுத்து கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் கைப்பற்றப்பட்ட இறைச்சிகளையும் சந்தேக நபரையும் மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்துள்ளார்.

யாழில் வியப்பை ஏற்படுத்திய பேரீச்சம்பழ மரம்!!

மத்திய கிழக்கு நாடுகளைப் போன்று யாழ்ப்பாணத்திலும் பேரீச்சம்பழ மரம் ஒன்று அதிக பழங்களை காய்ந்துள்ளது.

காரைநகர் திக்கரை முருகமூர்த்திகோவில் வீதியில் உள்ள வீடொன்றில் உள்ள பேரீச்சம் பழ மரத்திலேயே இந்த அபூர்வ நிகழ்வு ஏற்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் பல்வேறு பகுதிகளில் நீண்ட காலமாக பேரீச்சை மரம் வளர்ந்து வருகின்ற போதிலும், அவை எதுவும் காய்ந்து குலுக்கவில்லை.

எனினும் காரைநகர் பகுதியில் பேரீச்சை மரம் காய்ந்து குலுக்குவது அந்தப் பகுதி மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய கிழக்கு நாடுகள் போன்ற வெப்பவலய நாடுகளின் பெரும் பொருளாதாரப் பயிர்ச்செய்கையாக பேரீச்சம்பழம் விளங்குகிறது.

இலங்கை போன்ற பருவக்காற்று மழைக் காலநிலை நிலவுகின்ற நாடுகளில் பேரீச்சை காய்த்துப் பழுப்பது அபூர்வமான நிகழ்வு என பலரும் கருத்து வெளியிட்டுள்ளனர்.

கதிர்காமத்திற்கு பாதயாத்திரை சென்ற நபர் திடீர் மரணம்!!

கதிர்காமத்திற்கு பாதயாத்திரை சென்ற யாத்திரிகர் ஒருவர் குமுக்கனில் நேற்று திடீரென மரணமடைந்துள்ளார்.

இவர் காரைதீவைச் சேர்ந்த சின்னவன் மேசிலார் என அழைக்கப்படும், 70 வயதுடைய எஸ்.விஜயசிங்கம் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

காட்டுப்பாதை திறந்த முதல் நாள் தனது மகளுடன் கதிர்காமத்திற்கு பயணித்துள்ளார். அன்றிரவு வாகூரவட்டையில் தங்கிய அவர்கள் மறுநாள் குமுக்கனைச் சென்றடைந்த போது இச்சம்பவம் இடம்பெற்றிருக்கிறது.

இவருடைய சடலம் பாணமை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற பின்னர் பிரேதபரிசோதனை மற்றும் விசாரணைக்காக பொத்துவில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

மேலும், பிரேதபரிசோதனை மற்றும் மரணவிசாரணை இடம்பெற்ற பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு காரைதீவு இந்து மயானத்தில் அடக்கம் செய்யப்பட உள்ளது.

கனடாவில் இலங்கை தமிழர்கள் உட்பட 8 பேர் கொலை : மேலும் மனித எச்சங்கள் மீட்பு!!

கனடாவில் இலங்கை தமிழர்கள் இருவர் உட்பட்ட 8 பேரின் தொடர் கொலைகள் தொடர்பில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேகநபரின் காணிகளில் இருந்து மேலும் பல மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன.

கனேடிய டொரன்டோ பொலிஸார் இந்த தகவலை தெரிவித்துள்ளனர். இது தொடர்பான தேடுதல் கடந்த சில நாட்களாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் நேற்று மனித எச்சங்கள் மீட்கப்பட்டதாக கனேடிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

2010ஆம் ஆண்டு முதல் கனேடியரான புரூஸ் மெக்ஆத்தர் என்பவர் 8 கனடாவுக்கு குடியேறிகளாக சென்ற இரண்டு இலங்கையர்கள் உட்பட்ட 8 பேரை கொலை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கு விசாரணை ஜூலை 23ஆம் திகதி நடைபெறும்போது மெக்ஆத்தர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

இதற்கு மத்தியிலேயே அவரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் அவருக்கு சொந்தமான டொரன்டோ நகரின் இடம் ஒன்றில் தோண்டுதல் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதன்போது நேற்று பல மனித எச்சங்கள் மீட்கப்பட்டு அவை இரசாயன பகுப்பாய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளன.