கணவனை வீட்டுக்குள் சிறை வைத்த மனைவி : இலங்கையிலும் இப்படி நடக்குமா?

அம்பலன்கொடயில் கணவனை நான்கு மணி நேரம் வீட்டுக்குள் சிறை வைத்த மனைவி தொடர்பில் தகவல் வெளியாகி உள்ளது.

சனி மாற்றம் என தொலைகாட்சியில் அறிவிக்கப்பட்டதனை தொடர்ந்து வீட்டுக்குள் கணவனை, மனைவி சிறை வைத்துள்ளார்.

கணவர் மீன்பிடி தொழில் ஈடுபட்டு வரும் ஒருவராகும். அவர் தனது தொழிலுக்காக அம்பலன்கொட துறைமுகத்திற்கு காலை நேரத்தில் சென்றுள்ளனர்.

கணவர் சென்று சற்று நேரத்தில் தொலைகாட்சியில், அன்றைய தினம் பிற்பகல் 12.30 மணியளவில் சனி மாற்றம் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டதனை அவதானித்த மனைவி, உடனடியாக கணவனை தொலைபேசியில் அழைத்துள்ளார். உடனடியாக வீட்டிற்கு வருமாறு கூறி விட்டு அழைப்பை துண்டித்துள்ளார்.

தகவல் ஒன்றும் அறியாமல் கணவர் அவசரமாக வீட்டிற்கு சென்றுள்ளார். கணவன் வீட்டிற்கு வந்தவுடன் வீட்டின் ஜன்னல் மற்றும் கதவுகள் அனைத்தையும் அவர் பூட்டியுள்ளார். ஒன்றும் புரியாமல் நின்ற கணவர் என்ன பிரச்சினை என மனைவியிடம் கேட்டுள்ளார்.

இன்று பிற்பகல் 12.30க்கு சனி மாற்றம் ஏற்படுவுள்ளது. உங்களுக்கும் சனி உள்ளது. அதனால் 2.30 வரை வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டாம் என மனைவி கூறியுள்ளார்.

செய்து கொண்டிருந்த வேலையை பாதியிலே விட்டு வந்தமையினால் கணவர் வெளியே செல்ல வேண்டும் என கூறிய போதிலும், கணவனை வீட்டிற்கு பூட்டிவிட்டு மனைவி சாவிகளை மறைத்துள்ளார்.

பின்னர் இந்த சனி மாற்றம் தொடர்பில் தொலைகாட்சியில் என்ன கூறுகின்றார்கள் என பார்த்த கணவர் கடும் கோபமடைந்துள்ளார். பிற்பகல் 12.30 மணிக்கு சனி மாற்றம் என்ற பெயரில் ஒரு படம் ஒளிபரப்பப்படும் என விளம்பம் செய்யப்பட்டுள்ளது.

இதனால் கோமடைந்த கணவர், மனைவியை கடுமையாக திட்டிவிட்டு மீண்டும் தொழிலுக்கு சென்றுள்ளார்.

இலங்கை போன்ற நாடுகளிலும் மூடநம்பிக்கை மக்கள் மத்தியில் மேலோங்கி உள்ளமை கவலைக்குரிய விடயம் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் வாகனங்கள் வைத்திருப்போருக்கு அதிர்ச்சித் தகவல்!!

இலங்கையில் வாகனங்களை வைத்திருப்போரிடம் வரி அறவிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு வருமான திணைக்களம் தெரிவிததுள்ளது.

வருமான வரி கொள்ளைகயை விரிவுபடுத்தும் நடவடிக்கை ஒன்று அரச கொள்ளையாக அமுல்படுத்தவுள்ளதாக உள்நாட்டு வருமான ஆணையாளர் அய்வன் திசாநாயக்க தெரிவித்தள்ளார்.

இந்த நடவடிக்கையை முன்னோக்கி கொண்டு செல்வதற்காக வாகனங்கள் வைத்திருக்கும் அனைவரும் வருமானம் உள்ள நபராக கணக்கிடப்பட்டுள்ளனர்.

வாகனம் வைத்திருப்பவர்கள் வரி செலுத்த கூடிய அளவு வருமானம் கொண்டவர்களாக கருதி அவர்களிடம் வரி அறவிடும் நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உள்நாட்டு வருமான ஆணையாளர் இந்தத் தகவலை வெளியிட்டார்.

இதேவேளை வெளிநாடுகளுக்கு அடிக்கடி சுற்றுலா பயணம் மேற்கொள்பவர்களிடமும் வரி அறவிடப்படவுள்ளதாக ஆணையாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் பேருந்துகளில் பயணிக்கும் பெண்களுக்கு நடக்கும் கொடுமைகள்!!

இலங்கை போக்குவரத்து சேவைக்கு சொந்தமான பேருந்தில் பயணித்த பெண்களிடம், தவறான முறையில் நடந்து கொண்ட இளைஞர் ஒருவர் தப்பிச் செல்ல முயற்சித்து போது விபத்துக்குள்ளாகியுள்ளார்.

தப்பிச் செல்லும் போது பேருந்தில் இருந்து விழுந்த இளைஞன் படுகாயமடைந்த நிலையில், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கொள்ளுப்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பெண்களிடம் தவறாக நடந்து கொண்ட போது, பெண்கள் கத்தி கூச்சலிட ஆரம்பித்துள்ள நிலையில், பேருந்தின் பின்பக்க கதவினால் கீழே இறங்கி தப்பி ஓட முயற்சித்த போதே இவ்வாறு காயமடைந்துள்ளார்.

புறக்கோட்டையில் இருந்து மத்துகம வரை பயணித்த பேருந்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

எனினும் காயமடைந்த இளைஞனை பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைப்பதற்கு பயணிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இளைஞனை கைது செய்த பொலிஸார் அவரை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

பேருந்தில் உள்ள பயணிகள் தன்னை பிடித்து தாக்குவார்கள் என்ற அச்சத்தில் தான் பேருந்தில் இருந்து குதித்ததாக சந்தேக நபர் பொலிஸாரிடம் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த இளைஞன் பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

வவுனியாவில்  மாணவர்களினால் வீதி விபத்துக்களை தடுப்பது தொடர்பான விழிப்புணர்வுப் பேரணி!!

வீதி விபத்துக்களை தடுக்கும் நோக்கில் வவுனியா போக்குவரத்து பொலிஸாரின் ஏற்பாட்டில் வவுனியா பட்டானிச்சூர் முஸ்ஸிம் மகா வித்தியாலய மாணவர்களினால் இன்று (06.07.2018) காலை 7.30 மணியளவில் விழிப்புணர்வுப் பேரணி இடம்பெற்றது.

வவுனியா முஸ்ஸிம் மகா வித்தியாலயத்திற்கு முன்பாக ஆரம்பமாக விழிப்புணர்வுப் பேரணியானது மன்னார் வீதியூடாக பட்டானிச்சூர் 5ம் ஒழுங்கையடிக்கு சென்று மீண்டும் மன்னார் வீதியூடாக குருமன்காடு சந்தியடிக்கு சென்று மீண்டும் மன்னார் வீதியூடாக பாடசாலையை சென்றடைந்தது.

இப் பேரணியில் வவுனியா போக்குவரத்து பொலிஸார், வவுனியா நகரசபை உறுப்பினர்கள், பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் , 500க்கு மேற்பட்ட பாடசாலை மாணவர்கள் கலந்து கொண்டனர்.

வவுனியா நகரசபையினரால் வீதிகளுக்கான மின்விளக்குகள் பொருத்தும் நடவடிக்கை ஆரம்பம்!!

வவுனியா நகரசபையின் எல்லைக்குள் இருக்கும் 10 வட்டாரங்களிற்கும் 40 மின்விளக்குகள் வீதம் 400 மின்விளக்குகளை பொருத்தும் பணிகள் நகரபிதாவின் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

முதல்கட்டமாக வட்டாரம் ஒன்றுக்கான(தாண்டிகுளம்) வீதி விளக்குகள் பொருத்தும் பணிகளை நகரபிதா கெளதமன் ஆரம்பித்து வைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வவுனியா வைத்தியசாலையில் கரடியின் தாக்குதலுக்குள்ளாகிய இருவர் அனுமதி!!

மன்னார் இரணை இலுப்பைக்குளம் காட்டுப்பகுதியில் நேற்று முன்தினம் (04.07.2018) கரடியின் தாக்குதலுக்குள்ளாகி இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மன்னார் இரணை இலுப்பைக்குளம் காட்டுப் பகுதியில் கடந்த 04.07.2018 அன்று மதியம் 3 மணியளவில் விலங்குகளை வேட்டையாடுவதற்கு இருவர் சென்றுள்ளனர்.

இதன் போது மாலை 6 மணியளவில் கரடியின் தாக்குதலுக்குள்ளாகி 40, 46 வயதுடைய இருவர் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக அனுராதபுரம் ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

வவுனியாவில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவி!!

வவுனியா மாவட்டத்தின் செட்டிகுளம், நெடுங்கேணி பிரதேச செயலகத்தற்கு உட்பட்ட கிராமங்களில் வசிக்கும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பெண்தலைமைத்துவ, அங்கவீனமான 04 குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் முகமாக ஆடுவளர்ப்பிற்காக ஆடுகள் வழங்கிவைக்கப்பட்டன.

வடமாகாண சபை உறுப்பினரின் வேண்டுகோளிற்கமைவாக கனடா மாதகல் நலன்புரி ஒன்றியத்தின் நிதியுதவியில் இந்த உதவிகள் வழங்கிவைக்கப்பட்டன.

செட்டிகுளம் பிரதேசத்தில் 02 குடும்பங்களிற்கும், நெடுங்கேணியில் 02 குடும்பங்களுக்குமாக நான்கு குடும்பங்களுக்கான உதவிகள் வடமாகாண சபை உறுப்பினர் ப.சத்தியலிங்கத்தின் சார்பில் அவரது இணைப்பாளர் பா.சிந்துஜனால் நேற்று (05.07.2018) பயனாளிகளிடம் கையளிக்கபபட்டன.

வவுனியாவில் சுற்றுலா மையம் மற்றும் சிறுவர் பூங்கா திறந்துவைப்பு!!

வவுனியா தமிழ் தெற்கு பிரதேசசபையின் ஆளுகைக்கு உட்பட்ட கல்நாட்டினகுளம் பகுதியில் வடமாகாணசபையின் குறித்து ஒதுக்கப்பட்ட 8.41மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட சுற்றுலா மையம் மற்றும் சிறுவர் பூங்கா நேற்று (05.07.2018) காலை 10 மணியளவில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனினால் மக்கள் பாவனைக்கு திறந்து கையளிக்கப்பட்டுள்ளது.

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச தவிசாளர் து.நடராஜசிங்கம் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் முதன்மை விருந்தினராக கலந்துகொண்டு சுற்றுலா மையத்தினையும் சிறுவர் பூங்காவினையும் உத்தியோகபூர்வமாக திறந்துவைத்தார்.

வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடமாகாண சபை உறுப்பினர்களான ப.சத்தியலிங்கம், ஜி.ரி.லிங்கநாதன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான வினோ நோகராதலிங்கம், சிவநாதன் கிஸோர், வவுனியா நகரசபை தவிசாளர் இ.கௌதமன், நகரசபை உறுப்பினர்கள், தமிழ் தெற்கு பிரதேசசபை உப தவிசாளர், செயலாளர், உறுப்பினர்கள், அப்பகுதி பொதுமக்கள், எனப்பலரும் கலந்துகொண்டனர்.

80 வயதான தந்தையை வீதியில் கைவிட்டுச் சென்ற மகன்!!

கதிர்காமம், கந்தசுரிந்துகம, ராஜமாவத்தை வீதியில் எரிபொருள் நிரப்பும் நிலையம் ஒன்றுக்கு எதிரில் 80 வயதான முதியவரை அவரது மகன் கைவிட்டுச் சென்றுள்ளார்.

வயதான இந்த முதியவரை இன்று அதிகாலை 4 மணியளவில் அவரது மகன் குறித்த இடத்தில் இறக்கிவிட்டுச் சென்றுள்ளார்.

மகனுடன் முச்சக்கர வண்டியில் வந்த இந்த முதியவரை இறக்கி விட்ட அவரது மகன், தான் வரும் வரை அங்கு இருக்குமாறு கூறி சென்றதாக முதியவர் பிரதேசவாசிகளிடம் கண்ணீருடன் கூறியுள்ளார்.

இளமை காலத்தில் கமத்தொழில் செய்து வந்துள்ள இந்த முதியவருக்கு நான்கு ஆண் பிள்ளைகள் இருப்பதாகவும் விவசாயம் செய்து தாம் அவர்களை வளர்த்தாகவும் குறிப்பிட்டுள்ளார்.

சிந்திக்கும் திறன் குறைந்து காணப்படும் முதியவர் தனது மகன் திரும்பி வரும் வரை எரிபொருள் நிலையத்தில் காத்திருந்த போதிலும் சென்ற மகன் திரும்பவில்லை.

பிரதேசவாசிகள் முதியவர் குறித்து கதிர்காமம் வைத்தியசாலை மற்றும் பொலிஸாருக்கு தெரியப்படுத்தியுள்ளனர். கதிர்காமம் வைத்தியசாலை அதிகாரிகள், முதியவரை கதிர்காமம் முதியோர் இல்லத்தில் ஒப்படைத்துள்ளனர்.

கனடாவில் காணாமல் போன யாழ். இளைஞன் சடலமாக மீட்பு!!

கனடாவில் கடலில் காணாமல் போன யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழ் இளைஞன் சடலமாக பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளார்.

கனடா, ஒன்டாரியோ ஏரிக்குள் விழுந்து காணாமல் போன 27 வயதான பார்த்தீபன் சுப்ரமணியம் என்ற இளைஞனின் சடலமே நேற்று மீட்கப்பட்டுள்ளது.

கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் ஒன்டாரியோ மாகாணத்தில் Bluffers Park அருகே கப்பலில் இருந்து கடலில் விழுந்த தமிழ் இளைஞன் காணாமல் போயிருந்த நிலையில் நேற்று அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.

பார்த்தீபன் தனது நண்பர்களுடன் கடலுக்கு சென்றிருந்த சந்தர்ப்பத்தில் கடலில் தவறி விழுந்ததாக பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் சுமார் ஒருமாத கால தீவிர தேடுதலின் பின்னர் அவரின் சடலத்தை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். இது குறித்து பார்த்தீபனின் உறவினர்களுக்கு பொலிஸார் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளனர்.

அவரது இறுதிக்கிரிகைகள் எதிர்வரும் ஜுலை 8 ஆம் திகதி நடைபெறும் என குடும்பத்தினரால் அறிவிக்கப்பட்டுள்ளது.

யாழ். கைதடியைப் பிறப்பிடமாக கொண்ட பார்த்தீபன் சுப்ரமணியம், தனது பத்து வயதில் கனடாவுக்கு சென்றுள்ளார்.

இசைத்துறையில் DJ கலைஞராக செயற்பட்ட பார்த்தீபன் சுப்ரமணியம் கனடாவில் அதிக தமிழர்களால் நன்கு அறியப்பட்ட ஒருவர் என அவரது நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவின் முதலாவது கின்னஸ் சாதனையாளரை நேரில் சென்று சந்தித்த பா.சத்தியலிங்கம்!!

கின்னஸ் சாதனை படைத்துள்ள வவுனியாவைச் சேர்ந்த பொறியியலாளர் கனகேஸ்வரன் கணேஸ்வரனுக்கு வடமாகாண முன்னாள் அமைச்சர் பா.சத்தியலிங்கம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கணேஸ்வரனின் வீட்டுக்கு இன்று காலை நேரில் சென்று தமது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

வவுனியவைச் சேர்ந்த இளம்பொறியிலாளரான கனகேஸ்வரன் கணேஸ்வரன் உலகின் மிக நீளமான மின்சாரசுற்றை உருவாக்கி கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தின் பழைய மாணவனான இவர் மிருதங்க கலைஞர் கனகேஸ்வரன், வயலின் கலைஞர் சௌதாமணி தம்பதிகளின் புதல்வனாவார்.

மேலும், வவுனியா மாவட்டத்தின் முதலாவது கின்னஸ் சாதனையாளரை கௌரவித்தமையை பெருமையாக கருதுவதாக முன்னாள் மாகாண அமைச்சர் சத்தியலிங்கம் தெரிவித்தார்.

வறுமையிலும் சாதனை படைத்த கிளிநொச்சி மாணவர்கள்!!

கிளிநொச்சி கல்வி வலயத்தில் உள்ள கிராமத்து பாடசாலையான இராமநாதபுரம் கிழக்கு அ.த.க பாடசாலையின் மாணவர்கள் தேசிய மட்ட பளுத் தூக்குதல் போட்டியில் சாதனை படைத்துள்ளனர்.

கடந்த வாரம் தேசிய மட்ட பளுத் தூக்குதல் போட்டி திருகோணமலையில் இடம்பெற்றது. இதல் நாடளாவிய ரீதியிலிருந்து பல பாடசாலைகள் பங்குபற்றியிருந்தன.

இந்தப் போட்டியில் கிளிநொச்சி இராமநாதபுரம் கிழக்கு அ.த.க பாடசாலை மாணவர்களும் கலந்துகொண்டனர்.

கலந்து கொண்டவர்களில் இருபது வயது பெண்கள் பிரிவில் 63 கிலோ பிரிவில் றஜீபா புவனரஞ்சன் வெண்கலப் பதகத்தையும், பதினேழு வயது பெண்கள் 75 கிலோ பிரிவில் துர்க்கா சுரேந்திரன் வெண்கலப் பதகத்தையும், 17 வயது ஆண்கள் 50 கிலோ பிரிவில் மோகனதாஸ் பாவலன் நான்காம் இடத்தினையும் பெற்றுக்கொண்டனர்.

இதேவேளை, பல்வேறு வசதிவாய்ப்புகள் அற்ற நிலையில் கல்வி செயற்பாடுகளை முன்னெடுத்துவரும் பாடசாலையிலிருந்து சென்ற தங்களின் பிள்ளைகளை சாதனையாளர்களாக மாற்றிய அதிபர், ஆசிரியர்களுக்கு பெற்றோர்கள் நன்றி தெரிவித்தனர்.

திருமணமான இரண்டே நாட்களில் பரிதாபமாக பலியான இளைஞன்!!

மாத்தறை – வெலிகமை ஹேன்வல பிரதேசத்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளும் தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதியதில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

வெலிகமை தப்பரதொட்ட பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதான இளைஞனே விபத்தில் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த இளைஞன் இரண்டு நாட்களுக்கு முன்னரே திருமணம் செய்து கொண்டுள்ளார் என குறிப்பிடப்படுகின்றது.

மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து சென்ற மற்றுமொரு நபர் படுகாயமடைந்த நிலையில் மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்து சம்பவம் குறித்து வெலிகமை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

முள்ளிவாய்க்காலில் வீட்டு முற்றத்தில் தாய் ஒருவருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!!

முள்ளிவாய்க்கால் மேற்கு பகுதியில் அபாயகரமான வெடிகுண்டு ஒன்று இன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முள்ளிவாய்கால் மேற்கு கிராமத்தில் வசிக்கும் தாய் ஒருவர் தனது வீட்டு முற்றத்தில் மரம் ஒன்று நடுவதற்காக கிடங்கு ஒன்றை தோண்டியுள்ளார். இதன்போது ஒரு பெரிய குண்டு மீட்கப்பட்டுள்ளது.

எனினும் குறித்த மர்ம பொருள் அபாயகரமான வெடிகுண்டு என்று அறியாத அந்த தாய் குறித்த குண்டை எடுத்துச் சென்று வேலி ஓரத்தில் வைத்துவிட்டு அயலவர்களுக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

இந்த நிலையில் குறித்த மர்ம பொருள் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இதையடுத்து இன்று பகல் அங்கு சென்ற பொலிஸார் குறித்த மர்மப் பொருள் அபாயகரமான வெடிகுண்டு என்று உறுத்திப்படுத்தியுள்ளனர்.

மேலும் குறித்த வெடிகுண்டை அங்கிருந்து பாதுகாப்பாக அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

11 பேர் மர்ம மரண விவகாரம் : குடும்பத்தில் உயிரோடு இருக்கும் ஒரே பெண் பரபரப்புப் பேட்டி!!

டெல்லியில் 11 பேர் மர்மமாக இறந்த விடயத்தில் புதிய திருப்பமாக அந்த குடும்பத்தில் கடைசியாக உயிரோடு இருக்கும் பெண் ஒருவர் தன் குடும்பம் குறித்து பேட்டி அளித்துள்ளார்.

புராரி பகுதியில் இரு தினங்களுக்கு முன்னர் ஒரு வீட்டிலிருந்து 11 சடலங்கள் கைப்பற்றப்பட்டதோடு, பொலிசாருக்கு கடிதங்கள் மற்றும் டைரிகள் சிக்கியது.

அதில், எப்படி தற்கொலை செய்தால் மோட்சம் கிடைக்கும் என்று குறிப்புகள் உள்ளது. எதோ ஒரு மத சடங்கிற்காக இவர்கள் இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதை வைத்து பொலிஸ் தீவிரமாக விசாரித்து வருகிறது.

இதில் நிர்மலா தேவி என்ற 77 வயது பெண்ணும் தற்கொலை செய்துள்ளார். இந்நிலையில் அவரின் மகள் சுஜாதா தற்போது பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.

சுஜாதா மட்டுமே தற்போது அந்த குடும்பத்தில் உயிரோடு இருக்கும் பெண்ணாவார்.

அவர் கூறுகையில், என்னுடைய குடும்பம் தற்கொலை செய்ய கூடியது அல்ல. எங்கள் வீட்டில் யாருக்கும் அவ்வளவு மோசமான மூட நம்பிக்கை இல்லை.

ஆனால் யாரோ இவர்களை கொலை செய்து இருக்கிறார்கள். பொலிஸ் அவர்களை கைது செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.

மர்ம மரணத்தில் 6 பேரின் உடல்கள் பரிசோதனை செய்யப்பட்டு, தற்போது பிரேத பரிசோதனை முடிவுகள் வெளியாகி உள்ளது. அதன்படி இவர்கள் கொலை செய்யப்பட்டதற்கு வாய்ப்புகள் மிகவும் குறைவு என்று கூறியுள்ளனர். ஆனால் முழுமையாக பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகவில்லை.

இதனிடையில், இந்த குடும்பத்தில் இருந்த புராரியின் தந்தை சில வருடங்களுக்கு முன் மரணம் அடைந்துள்ளார். அவர் இவர்களின் கனவில் வந்து இப்படி தற்கொலை செய்ய சொன்னதாகவும் கூறப்படுகிறது.

சிறுமியாக இருக்கும் போதே பாலியல் துன்புறுத்தல் : நவீன் குறித்து திவ்யா வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்!!

சிறுமியாக இருக்கும் போது நவீன் வீட்டுக்கு சென்ற போது அவர் தனக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்தார் என திவ்யலட்சுமி கூறியுள்ளார்.

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்க போவது யாரு நிகழ்ச்சி மூலம் பிரபலமான நவீன் தன்னை திருமணம் செய்துவிட்டு பின்னர் தன்னை ஏமாற்றியதாக திவ்யா என்ற பெண் புகார் கூறினார். மேலும் கிருஷ்ணகுமாரி என்ற பெண்ணுடன் அவர் தொடர்பில் இருப்பதாகவும் தெரிவித்தார். ஆனால் திவ்யாவை தான் திருமணமே செய்யவில்லை என நவீன் மறுப்பு தெரிவித்தார்.

இந்நிலையில் திவ்யா சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில், எனக்கு நவீனை கடந்த 2007-லிருந்தே தெரியும். அப்போது நவீனின் அம்மா என் அம்மாவிடம் கடன் வாங்கிய நிலையில் அவரால் பணத்தை திரும்பி தரமுடியவில்லை.

அதற்கு பதிலாக நவீன் தங்கை எனக்கு டியூசன் எடுத்தார், அதற்காக அவர் வீட்டுக்கு தினமும் செல்வேன். அப்படி நவீன் வீட்டுக்கு செல்லும் போது அவருடன் நல்ல நட்பு ஏற்பட்டது.

அப்போது 2008-ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஒருநாள் நவீன் வீட்டுக்கு சென்றேன், அப்போது நவீனை தவிர வீட்டில் யாருமில்லை.

அந்த சமயத்தில் நவீன் எனக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்தார், ஆனால் அவர் மீது எனக்கு காதல் இருந்ததால் அதை நான் தடுக்கவில்லை.

மேலும், என்னை நவீன் திருமணம் செய்து கொள்வார் என நினைத்தேன், ஆனால் என்னை அவர் வெறுக்க ஆரம்பித்தார்.
பின்னர் எப்படியோ என்னை பதிவு திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்துக்கு முன்னர் பல சமயம் அவருக்கு நான் பண உதவி செய்துள்ளேன், அவர் தங்கை திருமணத்துக்கு கூட ஒன்றரை லட்சத்தை என் அம்மா கொடுத்தார். எங்களிடம் நவீன் பணம் கேட்டு அழுததால் கொடுத்தோம்.

இந்நிலையில் கிருஷ்ணகுமாரியுடன் தொடர்ந்து டப்ஸ்மேஸ் செய்ய நவீன் ஆரம்பித்தார்.

ஏன் அவருடன் இவ்வளவு நெருக்கம் காட்டுகிறீர்கள் என நான் கேள்வி கேட்ட போது அவரை தான் நான் திருமணம் செய்யவுள்ளேன் என கூறி அதிர வைத்தார்.

அதே போல கிருஷ்ணகுமாரி என்னிடம் மோசமாக பேசுவதை வழக்கமாக கொண்டார். அவரை போல மோசமான பெண்ணை பார்த்ததில்லை.

என் பெயரை கெடுக்கும் வகையில் என் புகைப்படங்களை மார்பிங் செய்து நவீன் வெளியிட்டுள்ளார்.

இனியும் இது போல தொடர்ந்தால் நான் சாவதை தவிர வேறு வழியில்லை என அழுது கொண்டே கூறியுள்ளார்.