11 பேர் தற்கொலை சம்பவத்தில் 10 ஆண்டுகளுக்கு முன் இறந்தவருக்கு தொடர்பு? வெளியான அதிர்ச்சித் தகவல்!!

டெல்லி புகாரி அருகே நடைபெற்ற தற்கொலை சம்பவம், 10 ஆண்டுகளுக்கு முன் இறந்த தந்தை நாராயணன் உத்தரவின் பேரில் அவரது மகன் லலித் தான் செயல்படுத்தியுள்ளதாக விசாரணை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

டெல்லி பிகாரி அருகே சாண்ட் நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில், கடந்த 1-ம் தேதியன்று ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் மர்மமான முறையில் இறந்து போயினர்.

அனைவரையும் பெரும் குழப்பத்தில் ஆழ்த்திய இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினரும் தொடர்ந்து பல்வேறு கட்ட விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுதொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையின்போது, வீட்டிலிருந்த குறிப்பேடு ஒன்றினை காவல்துறையினர் கண்டறிந்தனர். அதன்பேரிலே தற்போது தீவிரமான விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மர்மமான முறையில் நடைபெற்றள்ள இந்த சம்பவத்தில், நாராயணனின் மகன் லலித் பாட்டியாவுக்கு அதிக தொடர்பு இருப்பதாகவே போலீசார் கருதுகின்றனர்.

10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த தந்தையை போலவே லலித் அடிக்கடி வீட்டில் நடந்துகொள்வாராம். அதேசமயம் தந்தையின் குரலிலே அடிக்கடி பேசியும் வந்துள்ளார்.

இதனால் தந்தை தான், தன் மூலமாக குடும்பத்தை வழிநடத்தி வருகிறார் என லலித் நம்பியுள்ளார். அதனையே குடும்பத்தாரும் நம்பியதால், ஏற்பட்ட விபரிதமே 11 பேரின் தற்கொலை சம்பவம்.

இறப்பதற்கு முன் 20 சப்பாத்திகளை குடும்பத்தார் ஆன்லைனில் ஆர்டர் செய்துள்ளனர். ஆனால் தொட்டுக்கொள்ள எதையும் வாங்கவில்லை.

அந்த சப்பாத்திகளை அனைவரும் தாய் மற்றும் நாராயணன் கைகளால் மட்டுமே உண்ணவேண்டும் எனவும் அந்த குறிப்பில் எழுதப்பட்டிருந்தது.

இதுகுறித்து சப்பாத்திகளை டெலிவரி செய்யவந்த பையனுடன் காவல்துறையினர் விசாரணை மேற்கொள்ளும்பொழுது, அவர்கள் சப்பாத்திகளை வாங்கும்பொழுது இறப்பதற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை என கூறியுள்ளார்.

முன்னதாக காவல்துறையால் கைப்பற்றப்பட்ட குறிப்பேட்டில், “தற்கொலை செய்துகொண்டால் தந்தை காப்பாற்றுவார்” என குறிப்பிடப்பட்டிருந்துள்ளது.

மேலும், “கடைசி நேரத்தில் உங்கள் கடைசி ஆசையை சொல்லும்போது மேகங்களில் வெடிப்பு ஏற்படும், பூமி நகரும் என அனைவரும் சப்தமாக கத்தினால் நான் வருவேன், வந்து உங்களை காப்பேன்” என்று தந்தை சொல்வதை போல் லலித் எழுதியிருந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மர்மமான முறையில் காணாமல் போன கேரள மாணவி : 100 நாட்கள் கழித்து சிசிடிவில் சிக்கிய காட்சி!!

கேரளா மாநிலத்தில் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள வெச்சூசிரா பகுதியில் காணாமல் போன கல்லூரி மாணவி ஜெஸ்னா குறித்த சிசிடிவி காட்சிகள் கிடைத்துள்ளன.

அவரை தேடும் பணி 100 நாட்கள் கடந்துள்ள நிலையில், காவல்துறையினருக்கு ஒரு புதிய தடயம் கிடைத்துள்ளது.

அதாவது முன்டக்கயம் பகுதியில் கிடைத்த ஒரு சிசிடிவி கமெராவின் காட்சியில் ஜெஸ்னா பதிவாகியுள்ளார். அதில் கையில் ஒரு பையுடனும், தோளில் ஒரு பையுடனும் ஜெஸ்னா ஒரு கடைக்குள் செல்கிறார். இந்தக் காட்சிகளைக்கொண்டு காவல்துறையினர் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.

அதன்பின்னர் 6 நிமிடங்களுக்கு பின் ஜெஸ்னாவின் ஆண் நண்பர் ஒருவர் அந்தக் கடைக்குள் செல்கிறார். ஏற்கனவே காவல்துறையினரின் விசாரணையில், ஜெஸ்னா காணாமல் போன கடைசி நேரங்களில் இந்த ஆண் நண்பருக்கு அதிக போன் கால் செய்ததும், மெசேஜ் அனுப்பியதும் தெரியவந்துள்ளது.

ஆனால் அந்தக் கடைக்குள் இருந்து அவர்கள் இருவரும் வெளியே வரும் காட்சிகள் இல்லை. இதனால் அந்த நபர் மீது சந்தேகம் கொண்டு, காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

11 பேர் இதற்காகத் தான் தற்கொலை செய்து கொண்டனர் : சிசிடிவி காட்சிகள் மூலம் வெளியான உண்மை!!

 

இந்தியாவில் மர்மமாக இறந்து கிடந்த 11 பேரும் மூடநம்பிக்கையின் காரணமாகவே தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்பது சிசிடிவி காட்சிகள் மூலம் உறுதியாகியுள்ளது.

டெல்லி புராரி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கடந்த சில தினங்களுக்கு முன் 11 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டது. எப்போதும் போல் இது ஒரு தற்கொலையாகத் தான் இருக்கும் என்று பொலிசார் அவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துவிட்டு விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணை ஆரம்பிக்கப்பட்டவுடன், சில நம்பமுடியாத தகவல்கள் எல்லாம் வெளிவந்தன. ஆம் இவர்கள் மூடநம்பிக்கையின் காரணமாக தற்கொலை செய்து கொண்டிருப்பதாகவும், அதற்காக வீட்டில் இருந்து ஆத்மா வெளியேற 11 குழாய்களை வீட்டிற்கு வெளியில் வரும் படி செட் செய்துள்ளார்கள் எனவும் கூறப்பட்டது.

இதற்கிடையில் அந்த வீட்டில் நிறைய கடிதங்கள், டைரிகள் கைப்பற்றப்பட்டது.

அதில் எப்படி தற்கொலை செய்தால் மோட்சம் கிடைக்கும், எந்த நேரத்தில் தற்கொலை செய்ய வேண்டும் என்றெல்லாம் எழுதப்பட்டிருந்தது.

இதனால் இது கொலையா, தற்கொலையா என்று தெரியாமல் பொலிசார் குழம்பி போய் நின்றனர். மேலும் இவர்களின் உடற்கு கூறு ஆய்விலும் கொலை செய்யப்பட்டதற்கான எந்த ஒரு ஆதாரமும் இல்லை.

மூடநம்பிக்கையின் காரணமாக தற்கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகம் பொலிசாருக்கு நிலவியதால், சாமியார்கள் யாரும் தலையிட்டிருக்கிறார்களா என்ற கோணத்திலும் பொலிசார் விசாரணை மேற்கொண்டனர்.

ஆனால் இந்த சம்பவத்தில் சாமியார்களின் தலையீடு இல்லை என்று பொலிசார் உறுதி செய்தனர். இதைத் தொடர்ந்து இறந்தவர்களின் உறவினர்கள் 20 பேரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

ஆனால் அது குறித்து எந்த ஒரு தகவலும் தெரிவிக்கவில்லை. இறந்த 11 பேர் விவகாரத்தில் shared psychosis என்ற நோயின் தாக்கம் இருக்குமா என்ற சந்தேகமும் எழுந்தது.

இந்நிலையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேரும் மூட நம்பிக்கையால் தற்கொலை செய்தது பக்கத்துவீட்டில் பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி காட்சி மூலம் உறுதியாகியுள்ளது.

சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து பார்க்கையில் இதில் பிறரது குற்றம் எதுவும் இல்லை என்பது தெரிகிறது எனவும் பொலிசார் கூறியுள்ளனர்.

சிசிடிவி காட்சியின்படி 10 மணியளவில் அந்த குடும்பத்தை சேர்ந்த பெண் ஒருவர் 5 நாற்காலிகளை எடுத்து வந்துள்ளார்,

சிறுவர்கள் கயிறு எடுத்து வந்துள்ளனர். அவர்கள் சொர்க்கத்தை அடைய வேண்டும் என்ற மூடநம்பிக்கையிலே இதனை செய்துள்ளனர் என்பதை காட்சிகள் உறுதிபடுத்துகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

படுக்கை அறையில் கருகிய மனைவி, மகள் : சிலிண்டரை வெடிக்க செய்து கணவரே கொன்றாரா?

தமிழ்நாட்டில் சிலிண்டர் வெடித்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பரங்குன்றத்தை சேர்ந்தவர் ராமமூர்த்தி. பிஸ்கட் மற்றும் மிட்டாய் வியாபாரம் செய்து வந்த இவருக்கு சமீபகாலமாக தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் கடன் சுமையால் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது.

மேலும் குடிப்பழக்கமும் இருந்துள்ளதால், குடும்பத்தில் தகராறும் அடிக்கடி ஏற்பட்டு வந்துள்ளது

எல்லா வகையிலும் பிரச்சனைகள் சேர்ந்து கடும் மன உளைச்சலுக்கு ஆளான ராமமூர்த்தி குடும்பத்துடன் தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்தார்.

நேற்றிரவு 2 மணியளவில், தனது மனைவி காஞ்சனா, 6 வயது மகள் அக்‌ஷயா தூங்கி கொண்டிருந்த அறையில் சிலிண்டரை கொண்டு வந்து வைத்து, அதனை திறந்துவிட்டதுடன் தீயையும் பற்றவைத்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதனால் பக்கத்திலிருந்து மற்றொரு சிலிண்டரும் வெடித்து சிதறியது. இதில், தூங்கிக் கொண்டிருந்த ராமமூர்த்தியின் மனைவி, காஞ்சாவும் அவர்களது 6 வயது பெண் அட்ஷயாவும் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர்.

ராமமூர்த்தி படுகாயமடைந்து உயிருக்கு போராடினார். சத்தத்தை கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் அவரை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் வழியிலேயே ராமமூர்த்தி பரிதாபமாக உயிரிழந்தார்.

சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள பொலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

உத்தரவு பிறப்பிக்க 1 மணியளவில் நிகழ்ந்த மரணம் : 11 பேர் மரணத்தில் இதுவரை நடந்த முழு விவரங்கள் இதோ!!

டெல்லியில் புராரி பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11பேர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டனர்.

டெல்லியின் வடக்குப்பகுதியில் சாந்த் நகர் புராரி பகுதியைச் சேர்ந்தவர் பவனேஷ். அவரின் சகோதரர் லலித் பாட்டியா. இருவரின் குடும்பத்தைச் சேர்ந்த 11 பேரும் நேற்று வீட்டில் கைகள், கால்கள், கண்கள் கட்டப்பட்ட நிலையில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

தற்கொலை செய்துகொண்டதில் வீட்டில் வயது முதிர்ந்த பெண் நாராயண் தேவி(வயது77) தரையில் படுத்தவாறு இறந்திருந்தார். மற்ற 10 பேரும் தூக்கில் தொங்கி இருந்தனர். இதில் நாராயண் தேவியின் இரு மகன்கள் பவனேஷ் (வயது 50), லலித் பாட்டியா (45), மகள் பிரதிபா(வயது 57). மற்றொரு மகள் இங்கு இல்லை.

மூடப்பழக்கவழக்கங்களுக்கு அடிமையான குடும்பம்
வினோதமான மூடப்பழக்கங்களைக் கடைப்பிடித்த இந்தக் குடும்பத்தினர் கடவுளைத் தரிசிக்கப் போகிறோம் என்று எழுதிவிட்டு, தற்கொலை செய்துள்ளதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

அவர்கள் எழுதிய டைரியில், உடல் தற்காலிகமானது, கண்களையும், வாயையும் மூடிக்கொண்டால் பயத்தில் இருந்து விடுபடலாம் என்று எழுதி வைத்துள்ளனர்.

முக்தி அடைவது குறித்து இறந்து போன தனது தந்தை கூறியதாக லலித் தனது டைரியில் எழுதி வைத்துள்ளார். தூக்கில் தொங்கினால் தங்களை லலித்தின் தந்தையின் ஆன்மா வந்து காப்பாற்றும் என்று அவர்கள் நம்பியுள்ளனர்.

ஒரு டைரியின் கடைசி வாக்கியத்தில் கூறப்பட்டிருப்பதாவது, ஒரு கப்பில் தண்ணீர் வைக்கவும், அதன் நிறம் மாறியதும் நான் வந்து உங்களை காப்பாற்றுவேன் என்று இருந்துள்ளளது. இவை அனைத்தும் பொலிசாருக்கு கிடைத்த ஆதாரங்கள்.

முக்தி அடைவதே நோக்கம்! காட்டிக்கொடுத்த சிசிடிவி
சிசிடிவி பதிவுகள் மூலம் வெளியாட்கள் யாரும் வீட்டிற்குள் செல்லவில்லை என்பது தெரிய வந்துள்ளது

சிசிடிவி பதிவுகளில் நாராயண் தேவி குடும்பத்தை சேர்ந்த ஒரு பெண், 12 வயது த்ருவ், 15 வயது ஷிவம் ஆகியோர் பர்னிச்சர் கடைக்கு சென்று வயர்கள், ஸ்டூல்கள் வாங்கி வந்தது தெரிய வந்துள்ளது. அவர்கள் அனைவரும் திட்டமிட்டு தான் இந்த செயலை செய்துள்ளனர்.

அனைவரும் இரவு 1 மணி அளவில் இறந்துள்ளனர். நாராயண் தேவியின் இளைய மகன் லலித் சுந்தாவத்(45) உத்தரவுகள் பிறப்பிக்க அதை குடும்பத்தார் பின்பற்றியது சிசிடிவி பதிவில் தெரிய வந்துள்ளது

5 ஸ்டூல்களை வைத்து அவர்கள் தூக்கு போட்டுள்ளனர். த்ருவ் மற்றும் ஷிவம் ஆகிய சிறுவர்களை அவர்களின் பெற்றோரே கைகளை கட்டி வயரை மாட்டிவிட்டுள்ளனர்.

லலித்தின் மனைவி டினாவின் கைகளும், கண்களும் கட்டப்படவில்லை. அவர் தான் மற்றவர்களின் கைகளை பின்புறமாக கட்டி, கண்களை துணியால் கட்டியிருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. நாராயண் தேவி மட்டும் தரையில் பிணமாகக் கிடந்தார்.

இரவு 10 மணிக்கு மூத்த மருமகள் ஸ்டூல்களை கொண்டு வந்துள்ளார். இரவு 10.15 மணிக்கு த்ருவ், ஷிவம் ஆகயோர் தூக்குப் போடத் தேவையான வயர்களை கொண்டு வந்துள்ளனர். 10.39 மணிக்கு அந்த குடும்பம் ஆர்டர் செய்த 20 சப்பாதி டோர் டெலிவரி செய்யப்பட்டுள்ளது. 10.57 மணிக்கு நாராயண் தேவியின் மூத்த மகன் புவனேஷ் நாயை வெளியே அழைத்துச் சென்றுள்ளார்.

11.04 மணிக்கு புவனேஷும், நாயும் வீட்டிற்குள் சென்றுள்ளனர். ஜூலை மாதம் 1ம் தேதி காலை 5.56 மணிக்கு பால் கார்டன்களை வைத்துவிட்டு டிரக் சென்றுள்ளது. 7.14 மணிக்கு அக்கம் பக்கத்தார் வந்து பார்த்தபோது அனைவரும் இறந்து கிடந்தனர். இது தான் சிசிடிவி பதிவுகள் மூலம் தெரிய வந்துள்ளது.

காதல் கணவனை ஆணவக்கொலைக்கு பலிகொடுத்த கேரள மாணவிக்கு மனநலம் பாதிப்பு?

கேரளாவில் ஆணவக்கொலைக்கு காதல் கணவனை பறிகொடுத்த நீனுவின் மனநலம் பாதிக்கப்பட்டிருப்பதா கூறி அவளைஇழிவுபடுத்த முயல்வதாக இறந்துபோன கெவினின் தந்தை ஜோசப் கூறியுள்ளார்.

நீனு என்கிற மாற்று சமூகத்தைச்சேர்ந்த பெண்ணைத் திருமணம் செய்துகொண்ட கெவின் ஜோசப் என்ற இளைஞர் கேரள மாநிலத்தில் கடந்த மாதம் ஆணவக் கொலை செய்யப்பட்டார்.

கணவர் கொலை செய்யப்பட்ட பின், வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்த நீனு வேதனையிலிருந்து மீண்டு கல்லூரி செல்லத் தொடங்கியுள்ளார்.

வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்த அவருக்கு, கெவின் ஜோசப்பின் பெற்றோர் ஆறுதல் அளித்து, படிப்பைத் தொடங்க உதவியுள்ளனர்.

கெவினை கொலை செய்த குற்றத்திற்காக நீனுவின் தந்தை மற்றும் அண்ணனை பொலிசார் கைது செய்துள்ளனர். இந்நிலையில் தனது கணவருக்கு ஜாமீன் கோரி நீனுவின் தாய் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.

மேலும், நீனுவுக்கு மனநலம் பாதித்துவிட்டதாகவும் கூறியுள்ளார். இவரின் இந்த கருத்தை நீனுவின் மாமனார் மறுத்துள்ளார். அவளை எங்கள் மகள் போல பார்த்து வருகிறோம், அவள் நன்றாக படிக்கிறாள். அவளுக்கு மனநலம் பாதித்துவிட்டது என்று அவரது தாயார் கூறுவது அவரை இழிவுபடுத்துவதாக உள்ளது என கூறியுள்ளார்.

கேரள அரசு கெவின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி அளித்துள்ளது. நீனுவின் படிப்புச் செலவையும் அரசே ஏற்றுள்ளது. சிவில் சர்வீஸ் தேர்வெழுத வேண்டுமென்பது நீனுவின் லட்சியம்.

8 வயதில் 300 மேடைகளில் சொற்பொழிவாற்றி பிரம்மிக்க வைக்கும் சிறுமி!!

தமிழகத்தைச் சேர்ந்த 8 வயது சிறுமி ஒருவர், சுமார் 300 மேடைகளில் ஆன்மீக சொற்பொழிவு ஆற்றி ஆச்சரியப்படுத்தியுள்ளார்.

காரைக்குடியைச் சேர்ந்த சிறுமி பூஜிதா(8). 4ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் இவர், இந்த வயதிலேயே தமிழகத்தில் பல மேடைகளில் தனது பேச்சாற்றலால் அனைவரையும் ஆச்சரியபட வைத்துள்ளார்.

இவர் 1ஆம் வகுப்பு படிக்கும்போதே இவரது நினைவாற்றலைக் கண்டு வியந்த தனியார் பள்ளி ஒன்று, இவரைத் தத்தெடுத்துக்கொண்டது. அந்தப் பள்ளியில் பூஜிதா எந்தக் கட்டணமும் இன்றி 12ஆம் வகுப்பு வரை படிக்கலாம் என்று பள்ளி நிர்வாகம் அறிவித்தது.

LKG படிக்கும்போது முதன் முதலில் மேடையேறிய பூஜிதா, இதுவரை சுமார் 300 மேடைகளில் பேசியுள்ளார். அவற்றில் ஆன்மிக சொற்பொழிவு, இலக்கியக் கூடங்கள், முற்போக்கு மேடைகள் ஆகியவை அடங்கும்.

இவர் மைக்கைப் பிடித்து பேசினால், பார்ப்பவர்கள் மெய்மறந்து போவார்கள் என்று கூறுகிறார்கள். தனது பேச்சாற்றலினால் பூஜிதா 8 வயதிலேயே ‘இலக்கியச்செல்வி’, ‘முத்தமிழ்ச்செல்வி’, ‘தமிழமுது’, ‘மக்கள் பேச்சாளர்’ என பல பட்டங்களை பெற்றுள்ளார்.

பூஜிதாவின் தந்தை கணேஷ் தனது மகள் குறித்து கூறுகையில், ‘அப்போது பாப்பா பேச ஆரம்பித்து கொஞ்ச நாள் தான் ஆகியிருந்தது. தொலைக்காட்சியில் எந்தப் பாட்டைக் கேட்டாலும், வசனத்தைக் கேட்டாலும் அப்படியே திருப்பி பாடுவாள், பேசுவாள்.

நமக்கு கூட சில நேரத்தில் வரிகள் மறந்துவிடும். ஆனால், அவள் வார்த்தைகள் மாறிடாமல் மிகச் சரியாக பேசுவாள். என் மனைவி இளவரசிதான் இதனை முதலில் கவனித்தார்கள். அதன்பின்னர், பூஜிதாவின் நினைவாற்றலை சரியாக பயன்படுத்த முடிவு செய்தோம்.

அவளுக்கு திருக்குறளை முதலில் சொல்லிக் கொடுத்தோம். தனது 3வது வயதில் மேடையில் திருக்குறளை ஒப்புவித்தாள். அதன்பின் திருப்பாவை, அபிராமி அந்தாதி சொல்லி கொடுத்தோம். பெரிய பிள்ளைகள் கலந்துகொண்ட மேடையில் 20 பாடல்களை சரியாக கூறி முதல் பரிசு பெற்றாள்.

ஆன்மீகம் மட்டுமல்லாமல், சுதந்திரப் போராட்ட தியாகிகள் பற்றியும், சமூகப் பிரச்சனைகள் குறித்தும் பல மேடைகளில் பேசியிருக்கிறாள். மாறுவேடப்போட்டிகளிலும் கலந்துகொண்டு பரிசுகள் பெற்றிருக்கிறாள்.

என் மனைவியுடன் இணைந்து யோகா, தியானம் எல்லாம் செய்வாள். வீட்டில் சுட்டிவிகடன், சிறுவர் மலர் போன்ற புத்தகங்களை படிப்பாள். பூஜிதாவின் பிறந்தநாளுக்கு பிறகு அவளது வாழ்க்கையே அர்த்தமுள்ளதாக மாறிவிட்டது’ என தெரிவித்துள்ளார்.

மேலும், பூஜிதா கூறுகையில் ‘என் அப்பா, அம்மா தான் எனக்கு எல்லாம் சொல்லி கொடுத்தார்கள். எனக்கு பேசுவது ரொம்ப பிடிக்கும். என்ன சொல்லிக் கொடுத்தாலும் அப்படியே கேட்டுவிட்டு பேசிவிடுவேன்.

எனக்கு அப்துல்கலாமை ரொம்ப பிடிக்கும். பெரிய Scientist ஆக வேண்டும். அதுதான் என்னுடைய லட்சியம்’ என தனது மழலைக் குரலில் தெரிவித்துள்ளார்.

காதல் மனைவி மீது சந்தேகம் : ரயில் முன் பாய்ந்து தற்கொலை : மரணத்திற்கு முன் கண்ணீர் வாக்குமூலம்!!

ஆந்திர மாநிலத்தில் மாமியார், மனைவி கொடுமை காரணமாக இளைஞர் ஒருவர் ரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ஆந்திர மாநிலம் வியஜவாடா அருகே உள்ள ரயில் நிலையத்தில், இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்துள்ளதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே காவல்துறையினர், இளைஞரின் உடலை கைப்பற்றி பரிசோதனை மேற்கொள்ளும் பொழுது அவரது சட்டைலிருந்து, ஒரு செல்போன் கிடைத்துள்ளது.

அதனை காவல்துறையினர் ஆராயும்பொழுது, அதில் இறுதியாக எடுக்கப்பட்ட செல்பி வீடியோ ஒன்று இருந்துள்ளது.

அந்த வீடியோவில், நீ எனக்கு துரோகம் செய்துவிட்டாய், வேண்டுமென்றே பொய் வழக்கு பதிந்து என்னை காவல்நிலையத்தில் உட்கார வைத்துவிட்டாய் என கூறியதோடு, தன்னுடைய மரணத்திற்கு மனைவி, மாமியார் மற்றும் அவரது சகோதரர்களே காரணம் என குறிப்பிட்டிருந்தார்.

மேலும், என்னை மன்னித்து விடுங்கள் அப்பா, இந்த மனஅழுத்தத்தை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. உங்களை நீங்களே நன்றாக பார்த்துக்கொள்ளுங்கள் என கூறியிருந்தார்.

பின்னர் இதுகுறித்து வழக்கு பதிவுசெய்து காவல்துறையினர் தீவிரமான விசாரணை மேற்கொள்ளும்பொழுது பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

அதில், கிருஷ்ணா மாவட்டம் கிருஷ்ணாலங்கா பகுதியை சேர்ந்தவர் குருவா ரெட்டி(27). இவரும், அதே பகுதியை சேர்ந்த காயத்ரியும்(25) 10-ம் வகுப்பிலிருந்தே காதலித்து வந்துள்ளனர்.

10ம் வகுப்பு முடித்த உடனே குருவா தன்னுடைய படிப்பை நிறுத்தியுள்ளார். ஆனால் தொடர்ந்து இன்ஜினீரிங் வரை படித்து வந்த காயத்ரிக்கு பண மற்றும் பொருளுதவி செய்து வந்துள்ளார்.

இதற்கிடையில் இருவரும் கடந்த 2013-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இன்ஜினீரிங் முடித்த உடனே ஹைதராபாத்தில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் காயத்திரிக்கு வேலை கிடைத்துள்ளது.

சில நாட்களாகவே மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த குருவா, அவர் வேலைக்கு சென்றதும், “Spyhuman” என்ற அப்ளிகேஷன் மூலம் காயத்ரியின் செல்போனை ஆராய்ந்துள்ளார்.

அதில் வேறு ஒருவருடன் மனைவி நெருக்கமாக பேசியிருப்பதை தெரிந்துகொண்ட குருவா, மனைவியிடம் இதுகுறித்து கேட்டுள்ளார். இதனால் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

கடந்த 26-ம் தேதி விஜயவாடாவில் உள்ள வீட்டிற்கு வந்த காயத்ரி தனது அம்மா மற்றும் சகோதரருடன் இணைந்து தூக்க மாத்திரை சாப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட காயத்ரி மற்றும் அவரது குடும்பத்தார், குருவா மீது புகார் கொடுத்தனர். இதனடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், குருவாவிற்கு சம்மன் அனுப்பியதோடு, அவரை காவல்நிலையத்திற்கு அழைத்து விசாரித்துள்ளனர்.

இதனால் மனமுடைந்த குருவா, இறப்பதற்கு முன்னர் செல்பி வீடியோவாக தன்னுடைய மரண வாக்குமூலத்தை கொடுத்துவிட்டு ரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இந்த விவகாரம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருப்பதால்,காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்

கள்ளநோட்டுகள் அடித்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்த நடிகை அதிரடியாக கைது!!

கேரள மாநிலத்தில் குடும்பத்தாருடன் இணைந்து கள்ளநோட்டு அடித்த தொலைக்காட்சி நடிகையை பொலிசார் கைது செய்துள்ளனர்.

கள்ளநோட்டு கும்பலின் பின்னணியில் மலையாள தொலைக்காட்சி நடிகை சூரிய சசிகுமாருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது.

இதனையடுத்து அவரது பங்களா வீட்டை பொலிசார் ரகசியமாக கண்காணித்து வந்துள்ளனர். நேற்று அதிகாலை நேரத்தில் பொலிஸ் படையினர் அவரது பங்களா வீட்டில் நுழைந்து அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு கள்ள நோட்டுகள் அச்சடிக்கப்படுவது கண்டு பிடிக்கப்பட்டது.

டிகை சூரிய சசிகுமார் அவரது தாயார் ரமா தேவி தங்கை சுருதி ஆகியோரை கைது செய்தனர்.அங்கிருந்து ரூ.57 லட்சம் மதிப்புள்ள கள்ள நோட்டுகளும் கைப்பற்றபட்டது.

கடந்த 8 மாதங்களாக நவீன கருவிகள் மூலம் கள்ள நோட்டுகள் அச்சடித்து புழக்கத்தில் விட்டது விசாரணையில் தெரியவந்தது.

தற்போது இவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது, சொகுசு வாழ்க்கை வாழவும் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளவும் இவ்வாறு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

12 வயது சிறுமி கற்சிலையாக மாறப்போவதாக பரவிய செய்தியால் பரபரப்பு!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் 12 வயது சிறுமி கற்சிலையாக மாறப்போகிறாள் என்ற செய்தி பரவியதால் மக்கள் கோவிலில் குவிந்துள்ளனர்.

பழநி என்பவரின் மகள் 6 ஆம் வகுப்ப படித்து வருகிறாள். கடவுள் பக்தி அதிகம் கொண்ட சிறுமி, தனது 13 வது வயதில் கற்சிலையாக மாறிவிடுவாள் என கனவு கண்டுள்ளார்.

இந்நிலையில், 13 வது பிறந்தநாளான நேற்று சிறுமிக்கு சேலை உடுத்து அம்மன் கோயிலுக்கு அழைத்து சென்றுள்ளார். இந்த செய்தி அங்கு பரவியதால் மக்கள் அங்குகூடி ஓம் சக்தி என கூச்சமிட்டுள்ளனர், ஆனால் அப்படி எதுவும் நடக்காத காணத்தால் மக்கள் திரும்பி சென்றுள்ளனர்.

இப்படி செல்பி எடுப்பது ஆபத்தானது : எச்சரிக்கும் அதிகாரி!!

விரலை காட்டி செல்பி எடுத்து சமூக வலைதளத்தில் பதிவேற்றுவது மிகவும் தவறான விடயம் என்று ஐ.பி.எஸ்.ரூபா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சசிகலா அடைக்கப்பட்டு இருக்கும் பெங்களூர் பரப்பன அக்கிரகார சிறையில் நடக்கும் முறைகேடுகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தவர் ஐ.பி.எஸ்.ரூபா.

இந்த விடயத்தில் அவரின் அணுகுமுறை காரணமாக இந்தியா முழுக்க பலரது கவனத்தையும் தன்பக்கம் ஈர்த்தவர் இந்த பொலிஸ் அதிகாரி.

இந்த நிலையில் இவர் செல்பி குறித்து கூறிய விடயம் ஒன்று பலரது பாராட்டுதலையும் பெற்று வருகிறது.

சமூக வலைத்தளங்களில், கை விரல்கள் தெரியும்படி செல்பி எடுத்து போடக்கூடாது என்று சில தினங்களுக்கு முன்னர் தகவல் வெளியானது.

அப்படி செய்தால் நம்முடைய கைரேகை தகவல்கள் வெளியாகிவிடும் என்றும் கூறப்பட்டது. இதெல்லாம் வதந்தி என்றும் சிலர் மறுத்தனர்.

ஆனால் தற்போது இதே எச்சரிக்கையை ஐபிஎஸ் ரூபாவும் விடுத்துள்ளார். விரலை காட்டி செல்பி எடுத்து சமூக வலைதளத்தில் போடுவதும் மிகவும் தவறான விடயம் என்று ஐ.பி.எஸ்.ரூபா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

விரல்களை காட்டி செல்பி எடுப்பதில் ஆபத்து உள்ளது, சைபர் குற்றவாளிகள் உங்கள் தகவலை திருடி விடுவார்கள் என்றும் கூறியுள்ளார்.

இதற்கு அவர் விளக்கமும் அளித்துள்ளார், நம்முடைய, செல்பியில் உள்ள கை விரல்களை ஜூம் செய்து அதை ஸ்கேன் செய்து பின் அதை வைத்து நமது கை ரேகையை எடுப்பார்கள். பின் அதை வைத்து பெரிய அளவில் மோசடிகளை செய்வார்கள் என்று கூறியுள்ளார்.

மேலும் இதை வைத்து போலியான கைரேகை உருவாக்கி, தவறு நடக்கும் இடங்களில் நம்முடைய கைரேகையை விட்டு செல்ல வாய்ப்புள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

இதனால் தயவு செய்து கைரேகை தெரியும்படி புகைப்படம் போட வேண்டாம் என்று ஐபிஎஸ் ரூபா கோரிக்கை வைத்துள்ளார்.

பல்கலைக்கழகத்தில் பாரிய வன்முறையை ஏற்படுத்திய SMS : பொலிஸாரின் அதிரடி செயற்பாடு!!

பொல்கொல்ல திறந்த பல்கலைக்கழகத்தில் எஸ்.எம்.எஸ் ஒன்றினால் மாணவ குழுக்களுக்கு இடையில் மோதல் நிலை ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பல்கலைக்கழத்தின் பொறியியல் பிரிவின் இரண்டாம் வருட மாணவர்கள் குழுக்கள் இரண்டே இவ்வாறு மோதலில் ஈடுபட்டுள்ளனர். எஸ்.எம்.எஸ் ஒன்றினால் இந்த மோதல் ஏற்பட்டுள்ளதாக கட்டுகஸ்தொட்ட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சக மாணவ, மாணவியருக்கு இரண்டாம் ஆண்டு மாணவர் அனுப்பிய எஸ்.எம்.எஸ் பதிவில் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. இது விவாதமாக மாறி இறுதியில் வன்முறையாக மாறியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பல்கலைக்கழத்தின் பாதுகாப்பு பிரிவினரால் இந்த மோதலில் தலையிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனினும் பொலிஸ் அதிகாரிகளின் தலையீட்டில் மோதல் அமைதியாகியுள்ளதுடன், மாணவர்கள் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

பொலிஸ் பதிவுப் புத்தகத்தில் கையொப்பமிட்ட பின்னர் இரு குழுக்களும் பொலிஸ் நிலையத்தை விட்டு வெளியேறியுள்ளனர்.

பல்கலைக்கழகத்திற்கு இழிவுபடுத்தும் இவ்வகையான விடயங்களில் மீண்டும் ஈடுபடமாட்டோம் என மாணவர்கள் உத்தரவாதத்தை வழங்கிய பின்னரே விடுவிக்கப்பட்டுள்ளனர்.

யாழில் காணாமல் போன யுவதி பண்டாரவளையில் கண்டுபிடிப்பு! நடந்த குழப்பம் என்ன?

யாழ்ப்பாணத்தில் கடந்த இரு நாட்களுக்கு முன்னர் காணாமல் போன இளம் யுவதி ஒருவர் பண்டாரவளை பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

கடந்த இரண்ட நாட்களுக்கு முன்னர் பெற்றோருக்கு தெரியாமல் காணாமல் போயிருந்த குறித்த யுவதி பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளார்.

பண்டாரவளை பிரதேசத்தின் எல்லதொட்ட பிரதேசத்தில் சுற்றிதிரிந்த நிலையில் பண்டாரவளை பொலிஸாரினால் அவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

யாழ். தெல்லிப்பழை பகுதியை சேர்ந்த 19 வயதான செல்வத்துரை வனித்தா என்ற யுவதி இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

குறித்த யுவதி தனது பெற்றோருடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக, யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பிற்கு சென்றுள்ளார். கொழும்பில் இருந்து பதுளை நோக்கி பயணித்த பேருந்தில் பண்டாரவளைக்கு சென்றுள்ளார்.

பின்னர் பண்டாரவளை பிரதேசத்தில் சுற்றிதிரிந்த நிலையில் பொலிஸார் கண்டுபிடித்தள்ளனர். சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

நீதிமன்றில் பரபரப்பை ஏற்படுத்திய கடவுள் : இலங்கையில் நடந்த விசித்திரம்!!

கடவுளின் உத்தரவிற்கு அமைய வங்கிக் கொள்ளையில் ஈடுபட்டேன் என சந்தேக நபர் ஒருவர் நீதிமன்றில் தெரிவித்துள்ளார். இரத்தினபுரி நீதவான் நீதிமன்றின் நீதவான் சாலிய சன்ன முன்னிலையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

“கடவுள் கனவில் தோன்றி நீதிமன்றை உடைக்குமாறு பணித்தார், நான் உடைத்தேன். அதன் பின்னர் வங்கியைக் கொள்ளையிடுமாறு பணித்தார். அதன் அடிப்படையில் நான் வங்கியைக் கொள்ளையிட்டேன். இன்று நீதிமன்றிலிருந்து தப்பிச் செல்லுமாறு கடவுளே பணித்தார்.” என சந்தேக நபர் தெரிவித்துள்ளார்.

சந்தேக நபரின் இந்த கூற்றின் ஊடாக கடந்த ஜூன் மாதம் 17ம் திகதி நீதிமன்றின் வழக்குப் பொருட்கள் அடங்கிய அறை உடைத்தது யார் என்பது அம்பலமாகியுள்ளது.

நீதிமன்றின் வழக்குப் பொருட்கள் வைக்கப்பட்டிருக்கும் அறையை உடைத்து அதில் வைக்கப்பட்டிருந்த கஞ்சா போதைப் பொருள் களவாடப்பட்டிருந்தது.

கிரியல்ல பிரதேசத்தில் அரச வங்கியொன்றில் கொள்ளையிட முயற்சித்த போது இந்த சந்தேக நபரை பிரதேச மக்கள் மடக்கிப்பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்திருந்தனர்.

நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்காக கடந்த 3ம் திகதி அழைத்துச் செல்லப்பட்ட போது சந்தேக நபர் தப்பிச் செல்ல முயற்சித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சந்தர்ப்பத்தில் பொலிஸார் சந்தேக நபரை பிடித்து நீதிமன்றில் மீளவும் முன்னிலைப்படுத்தியிருந்தனர்.

கடவுளின் உத்தரவிற்கு அமைய தாம் இவ்வாறு கொள்ளையிட்டதாக குறித்த நபர் நீதவானின் எதிரில் தெரிவித்துள்ளார்.

நீதிமன்றிலிருந்து தப்பிச் செல்ல முயற்சித்த குற்றத்திற்காக குறித்த நபருக்கு இரண்டாண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

வழக்கிலிருந்து தப்பித்து கொள்ள குற்றவாளி வெளிப்படுத்திய தகவல்கள், நீதிமன்றில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கூகுள் நிறுவனம் விடுத்துள்ள அவசர எச்சரிக்கை!!

உலகம் முழுவதிலுமுள்ள இணையத்தள பாவனையாளர்களுக்கு கூகுள் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஜிமெயில் தொடர்பாகவே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஜிமெயில் ஊடாக சமர்ப்பிக்கப்படும் மற்றும் கிடைக்கப்பெறும் தகவல்களை மூன்றாம் தரப்பினர் கண்காணிக்ககூடும் என்று தெரிவித்துள்ளது.

சுற்றுலாத்திட்டம் மற்றும் விலைகள் தொடர்பான தகவல் சேவை குறித்து கூகுள் நிறுவனத்தின் மூலம், மூன்றாம் தரப்பினர் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் கூகுள் ஊடாக சமர்ப்பிக்கப்படும் மற்றும் பயன்படுத்தப்படும் தகவல்களை வாசித்தல் அதேபோன்று சமர்ப்பிக்கப்படும் தகவல்களை அழித்துவிடுவதற்கு இந்த தரப்பினருக்கு சந்தர்ப்பம் இருப்பதாக தெரியவந்துள்ளது.

இருப்பினும் இந்த அனைத்து நடவடிக்கைகளும் தமது கொள்கைக்கு முரண்பட்டதல்ல என்று கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், தமது பயனாளிகளின் தரவுகளை பயன்படுத்தும் அபாயகரமானதாக இந்த சந்தர்ப்பம் இருப்பதாக இந்த நிறுவனம் மூன்றாம் தரப்பினர் தொடர்பில் செயற்படும் முறை புதுமையானது என்று சர்வதேச விமர்சகர்கள் விமர்சித்துள்ளனர்.

ஜிமெயில் என்பது உலகப்புகழ் பெற்ற மின்னஞ்சல் சேவையாகும். உலகம் முழுவதிலும் 1.4 பில்லியன் பேர் ஜிமெயில் பயன்படுத்துவதாக விமர்சகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

கனடாவில் தமிழ் இளைஞன் சுட்டுக் கொலை : பொலிஸார் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்கள்!!

கனடா, ஸ்கார்புரோ பகுதியில் தமிழ் இளைஞன் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் புதிய தகவல்களை பொலிஸார் சேகரித்துள்ளனர்.

கடந்த மே மாதம் 27ஆம் திகதி இரவு, யோர்க் பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் 21 வயதான வினோஜன் சுதேசன் என்ற இளைஞர் இனந்தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

சுதேசன் Pickle Barrelல் தனது வேலைகளை முடித்துவிட்டு ஜிம்மிற்கு செல்ல தயாரானதாக குடும்பத்தினர் முன்னர் குறிப்பிட்டிருந்தனர்.

இந்த சம்பவத்தின் சந்தேக நபர் ஆயுதம் ஒன்றுடன் southbound பகுதியில் தப்பி ஓடுவது அவதானிக்கப்பட்டுள்ளதாக இன்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த துப்பாக்கிச்சூட்டிற்கான சரியான காரணம் இன்னமும் பொலிஸாரினால் கண்டறியப்படவில்லை. ஆனால் தவறாக அடையாளம் காணப்பட்டு அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற கூற்றினையும் பொலிஸார் நிரூபிக்கவில்லை.

சந்தேக நபர் 5 அடி ஆண் எனவும், கறுப்பினத்தவராக இருக்கலாம் எனவும், பொலிஸார் அடையாளப்படுத்தியுள்ளனர். அத்துடன் வெள்ளை நிறத்துடனான ஜெக்கட் மற்றும் காக்கி நிறத்திலான காற்சட்டை ஒன்றையும் சந்தேக நபர் அணிந்திருந்தார் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பாடசாலைக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த வாகனத்திற்கும், இந்த சம்பவத்திற்கும் இடையில் என்ன தொடர்பு இருக்கும் என தாம் விசாரித்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்வதற்காக வாகனம் அங்கு நிறுத்தப்பட்டிருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

கறுப்பு நிறத்திலான கார் ஒன்றே நிறுத்தப்பட்டிருந்ததாகவும், கொலை செய்யப்படுவதற்கு முன்னர் 40 நிமிடங்களாக அந்த கார் குறித்த பகுதியில் சுற்றியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.