கனடாவில் தமிழ் இளைஞன் சுட்டுக் கொலை : பொலிஸார் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்கள்!!

கனடா, ஸ்கார்புரோ பகுதியில் தமிழ் இளைஞன் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் புதிய தகவல்களை பொலிஸார் சேகரித்துள்ளனர்.

கடந்த மே மாதம் 27ஆம் திகதி இரவு, யோர்க் பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் 21 வயதான வினோஜன் சுதேசன் என்ற இளைஞர் இனந்தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

சுதேசன் Pickle Barrelல் தனது வேலைகளை முடித்துவிட்டு ஜிம்மிற்கு செல்ல தயாரானதாக குடும்பத்தினர் முன்னர் குறிப்பிட்டிருந்தனர்.

இந்த சம்பவத்தின் சந்தேக நபர் ஆயுதம் ஒன்றுடன் southbound பகுதியில் தப்பி ஓடுவது அவதானிக்கப்பட்டுள்ளதாக இன்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த துப்பாக்கிச்சூட்டிற்கான சரியான காரணம் இன்னமும் பொலிஸாரினால் கண்டறியப்படவில்லை. ஆனால் தவறாக அடையாளம் காணப்பட்டு அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற கூற்றினையும் பொலிஸார் நிரூபிக்கவில்லை.

சந்தேக நபர் 5 அடி ஆண் எனவும், கறுப்பினத்தவராக இருக்கலாம் எனவும், பொலிஸார் அடையாளப்படுத்தியுள்ளனர். அத்துடன் வெள்ளை நிறத்துடனான ஜெக்கட் மற்றும் காக்கி நிறத்திலான காற்சட்டை ஒன்றையும் சந்தேக நபர் அணிந்திருந்தார் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பாடசாலைக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த வாகனத்திற்கும், இந்த சம்பவத்திற்கும் இடையில் என்ன தொடர்பு இருக்கும் என தாம் விசாரித்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்வதற்காக வாகனம் அங்கு நிறுத்தப்பட்டிருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

கறுப்பு நிறத்திலான கார் ஒன்றே நிறுத்தப்பட்டிருந்ததாகவும், கொலை செய்யப்படுவதற்கு முன்னர் 40 நிமிடங்களாக அந்த கார் குறித்த பகுதியில் சுற்றியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழில் மீண்டும் வாள்வெட்டு : இளைஞர்கள் இருவர் வைத்தியசாலையில் அனுமதி!!

யாழ்ப்பாணத்தில் இருவேறு இடங்களில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் காயமடைந்த இளைஞர்கள் இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவங்கள் நேற்று இரவு இடம்பெற்றுள்ளன. இதில் யாழ். கொக்குவில் மேற்கு பகுதியில் வீடொன்றுக்குள் புகுந்த நபர்கள் வாள்வெட்டு தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

இதில் 24 வயதான இளைஞர் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதேவேளை, குப்பிளான் தெற்கு பகுதியிலும் நேற்று இரவு வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதில் இதில் 15 வயது பாடசாலை மாணவர் ஒருவர் காயமடைந்துள்ளார். இவர் தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியா இளைஞனின் கின்னஸ் சாதனை முயற்சிக்கு கிடைத்த வெற்றி!(படங்கள்,காணொளி)

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தின் பழைய மாணவனும் இயந்திரவியல் பொறியியளாலருமான கனகேஸ்வரன் கணேஸ்வரன் என்ற இளைஞனே உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டு மின்சார பொருளான பிளக் ‘பொய்ன்ற்’ (‘நீள் மின் இணைப்பு பொருத்தி’)(Power Strip) தயாரிப்பில் உலகில் அதிக நீளமான ‘மின் இணைப்பு பொருத்தி’ (Power Strip) தயாரித்து சாதனை படைக்கும் முயற்சியில் ஈடுபட்டு   கின்னஸ்  சாதனை படைத்துள்ளார் .

மேற்படி  சாதனை முயற்சி  வவுனியா தமிழ் மத்திய கல்லூரி மண்டபத்தில் கல்லூரியின் அதிபர் எஸ்.அமிர்தலிங்கம் தலைமையில்  (28.02.2018) அன்று  இடம்பெற்றிருந்தது .

அந்த வகையில் 2.914 மீற்றர் நீளமும், 0.074 மீற்றர் அகலமும், 0.050 மீற்றர் உயரமும் கொண்ட நீள் மின் இணைப்பு பொருத்தியை க. கணேஸ்வரன் தயாரித்து  கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார்

இவ்விளைஞனின் உலக சாதனை முயற்சியை நில அளவை திணைக்களத்தினை சேர்ந்த அரச நில அளவையாளர் பி.நிமலன் மற்றும் மின் பொறியிலாளர் கெ.ராஜ்குமார் ஆகியோர் பார்வையிட்டு பரிசோதித்ததுடன் க.கணேஸ்வரனின் உலக சாதனை முயற்சி சம்பந்தமான அறிக்கையை கின்னஸ் சாதனை சான்றிதழுக்காக அனுப்பி வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது .

மேற்படி  கின்னஸ் உலகசாதனை  தொடர்பாக  கனகேஸ்வரன் கணேஸ்வரன் தன்னுடைய  சமூக  வலைதளத்தில் பின்வருமாறு பதிவிட்டுள்ளார் .

இந்த கின்னஸ் உலக சாதனையானது
இலங்கையின் தனி ஒருவரால் நிகழ்த்தப்பட்ட தொழில்நுட்பரீதியான முதலாவது கின்னஸ் சாதனையாகவும்
வட மாகாணத்தில் நிகழ்த்தப்பட்ட தொழில்நுட்பரீதியான முதலாவது கின்னஸ் சாதனையாகவும் 
வவுனியா மாவட்டத்தில் நிகழ்த்தப்பட்ட முதலாவது கின்னஸ் சாதனையாகவும் மற்றும்
#வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் நிகழ்த்தப்பட்ட முதல் கின்னஸ் சாதனையாகவும் நிகழ்த்திக்காட்டியதில் தமிழனாக பெருமகிழ்ச்சி அடைகின்றேன்.

கின்னஸ் உலகசாதனையாளனான   வவுனியாவை  சேர்ந்த  கனகேஸ்வரன் கணேஸ்வரன் அவர்களை  வவுனியா  நெற் நிர்வாகவும்  தனது வாழ்த்துக்களையும்  பாராட்டுகளையும்  தெரிவித்து  கொள்கின்றது .

 

வவுனியாவில் இளைஞர் ஒருவர் உலக சாதனை முயற்சியில்!!(வீடியோ)

 

குழந்தைகளைக் காப்பதற்காக உயிரை இழந்த தாய் : சோக சம்பவம்!!

அமெரிக்காவில் தனது குழந்தைகளைக் காப்பாற்றுவதற்காக கடலில் குதித்த இரண்டு குழந்தைகளின் தாய் குழந்தைகளைக் காப்பாற்றி விட்டு தான் உயிரிழந்த சோகம் நிகழ்ந்துள்ளது.

San franciscoவில் வசித்து வரும் ஆர்த்தி செந்தில்வேல் தனது குடும்பத்தினருடன் Cowell Ranch State கடற்கரைக்கு சென்றிருந்தார்.

ஆர்த்தி தனது பிள்ளைகளை நிற்க வைத்து புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக வந்த பெரிய அலை ஒன்று பிள்ளைகளை இழுத்துச் சென்றது.

முன்பின் யோசிக்காத ஆர்த்தி தனக்கு பெரிய அளவில் நீச்சல் தெரியாது என்பதையும் எண்ணாமல் கடலுக்குள் பாய்ந்தார்.

அதற்குள் அவரது உறவினர்கள் அனைவரும் மனித சங்கிலி போல் வரிசையாக நின்று குழந்தைகளை மீட்டனர்.

ஆனால் அதற்குள் ஆர்த்தி கடலில் மூழ்கினார். அவரைக் கண்டுபிடிக்க இயலவில்லை. சிறிது நேரத்திற்குபின் அலை ஒன்று அவரை கரைக்கு கொண்டு வந்தது.

அவருக்கு உயிர் மீட்கும் முதலுதவி நடவடிக்கைகள் (CPR)மேற்கொள்ளப்பட்டும் அவரை காப்பாற இயலவில்லை.

சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் கலிபோர்னியா பொலிஸ் அதிகாரிகள் இந்த கடற்கரை பகுதியில் அலைகள் ஆபத்தானவை என்றும் சுற்றுலாப்பயணிகள் பாதுகாப்பாக இருக்குமாறு நினைவூட்டிக் கொள்வதாகவும் தெரிவித்தனர்.

எஜமானரை காப்பாற்ற தன்னுயிரை தியாகம் நாய் : நெகிழ்ச்சியூட்டு சம்பவம்!!

தன்னை வளர்த்த முதியவர் மற்றும் தன்னுடன் இருந்த மாடு உயிருக்கு போராடிய நிலையில் தன்னுயிரையும் பொருட்படுத்தாமல் மின்வயரை கடித்து இழுத்து நாயும் உயிரிழந்த சம்பவம் கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகேயுள்ள கல்கொண்டான்பட்டியில் நேற்று மாலை பெய்த மழையின் காரணமாக அங்குள்ள மின் வயர் ஒன்று அறுந்து கிடந்துள்ளளது.

இன்று காலை அவ்வழியாக சென்ற கல்கொண்டான்பட்டியைச் சேர்ந்த மொக்குசு என்ற முதியவரும் அவர் வளர்த்த நாய்யுடனும் தனது தோட்டத்தில் மாடு மேய்க்க சென்றுள்ளனர்.

இந்நிலையில் அறுந்து கிடந்த மின்வயரை மாடு மிதித்ததாக் மின்சாரம் பாய்ந்து துடித்தது. இதனை கண்ட முதியவர் மாட்டை காப்பாற்ற முயன்ற போதும் அவர் மீதும் மின்சாரம் தாக்கியது.

இதனையறிந்த முதியவரின் வளர்ப்பு நாய் அவர்களை காப்பாற்ற முயல்வதாக மின்வயரை கடித்து இழுத்த நிலையில் நாயின் மீதும் மின்சாரம் தாக்கி பரிதாபமாக மூவரும் உயிரிழந்தனர்.

தகவலறிந்து சம்ப இடத்திற்கு விரைந்து வந்த உறவினர்கள் பொலிசாருக்கு தகவல் அளித்தனர்.

உத்தப்பநாயக்கனூர் பொலிசார் வழக்குப் பதிவு செய்து உடல்களை கைப்பற்றி உடற்கூறு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் சம்பவம் நடந்த இடத்தை உசிலம்பட்டி கோட்டாச்சியர் முருகேசன், உசிலம்பட்டி காவல்துணைக் கண்காணிப்பாளர் கல்யாணக்குமார் நேரில் விசாரனை நடத்தி இறந்தவரின் குடும்பத்தினருக்கு அரசின் நிவாரணமாக 1 லட்சம் நிதி வழங்கப்படும் என உசிலம்பட்டி கோட்டாச்சியர் உறுதியளித்தார்.

இணையத்தை ஸ்தம்பிக்க வைத்த ஒற்றை புகைப்படம்!!

உலக அளவில் புகழ்பெற்ற ஆபாசப்பட நடிகைகளின் முகங்கள் வரையப்பட்ட கேரள தனியார் பேருந்து ஒன்றின் புகைப்படம் இணையவாசிகளை ஸ்தம்பிக்க வைத்துள்ளது.

கேரள மாநிலத்தின் வர்க்கல நகரில் தனியாரால் இயக்கப்படும் ஒருசில பேருந்துகளில் இளைஞர்களை கவரும் நோக்கில் உலக அளவில் புகழ்பெற்ற ஆபாசப்பட நடிகர்களான Mia Khalifa, Johnny Sins, Jordi El Nini, Kortney Kane மற்றும் Sunny Leone ஆகியோரது புகைப்படங்களை ஓவியமாக தீட்டியுள்ளனர்.

இதற்கு அப்பகுதி இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளதாக குறித்த தனியார் பேருந்து நிறுவனர் ஷெரின் தெரிவித்துள்ளார்.

கல்லூரி மாணவர்கள் பொதுவாக சன்னி லியோன் புகைப்படத்தை பதாகையாக வடிவமைத்து பேருந்தின் பின்னால் இணைப்பதை வாடிக்கையாக செய்து வந்துள்ளனர்.

இதனையடுத்தே ஆபாசப்பட நடிகர்களின் புகைப்படங்களை பேருந்தின் வெளிப்புறம் முழுவதும் ஓவியமாக வரையும் திட்டத்தை செயல்படுத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஓவியங்களை வரைய மொத்தம் 20 நாட்கள் ஆனது எனவும் சுமார் 2.6 லட்சம் செலவானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே குறித்த பேருந்தின் புகைப்படம் இணையத்தில் பலரது கவனத்தையும் ஈர்த்த நிலையில், பிரபல ஆபாசப்பட நடிகர் Johnny Sins தமது டுவிட்டர் பக்கத்திலும் இதை பகிர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாதியில் நிறுத்தப்பட்ட கல்யாணம் : விரக்தியில் மணமகன் எடுத்த விபரீத முடிவு!!

கன்னியாகுமரி அருகே திருமணம் பாதியில் நின்றதால் மனமுடைந்த மணமகன், நள்ளிரவில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே பாறவிளை பகுதியில் வசித்து வருபவர் கூலித்தொழிலாளி பினு(31). நீண்ட நாட்களாகவே திருமணத்திற்கு பெண் கிடைக்காததால் மனமுடைந்து இருந்த பினுவிற்கு, கோழிப்போர்விளை பகுதியில் பெண் கிடைத்தது.

இதனால் மகிழ்ச்சியில் திளைத்த பினுவின் குடும்பம் உடனடியாக திருமண வேலைகளை பார்க்க ஆரம்பித்தனர். அதன்படி திருமணம் நிச்சயிக்கப்பட்டு, மண்டைக்காடு பகுதியில் உள்ள ஆலயத்தில் நேற்று திருமணம் நடக்கவிருந்தது.

இதில் கலந்துகொள்வதற்காக உறவினர்கள், நண்பர்கள் என ஏராளமானோர் வருகை தந்திருந்தனர். வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அனைவரும் மகிழ்ச்சியாக இருந்தவேளையில், திடீரென சினிமாவில் வரும் ஒரு வசனம் போல, “திருமணத்தை நிறுத்துங்கள்” என குரல் ஒலித்துள்ளது.

இதனையடுத்து பதறிப்போன குடும்ப உறுப்பினர்கள், என்ன நடக்கிறது என விசாரிக்கையில், வந்திருந்தவர்கள் குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள் எனவும், மணப்பெண்ணுக்கு 16 வயது மட்டுமே நிரம்பியுள்ளதால்,தற்போது திருமணம் செய்யக்கூடாது என கூறியுள்ளனர். மேலும், இதனை மீறி திருமணம் செய்தால் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவீர்கள் என பினு குடும்பத்தாரை எச்சரித்துள்ளனர்.

சிறுமிக்கு 18 வயது நிரம்பியவுடனே, திருமணம் மற்றும் அதுதொடர்பான சடங்குகள் நடத்தப்படும் என பினு வீட்டார் உறுதியளித்ததையடுத்து சிறுமியை அழைத்துக்கொண்டு அதிகாரிகள் அங்கிருந்து கிளம்பினார்.

ஒருபுறம் விழாக்கோலத்தில் இருந்த நிகழ்வு, திடீரென அமைதி மயமாக மாற, மறுபுறம் நீண்ட நாட்களுக்கு பிறகு நடக்கவிருந்த திருமணமும் நின்றுவிட்டதே என பினு மனமுடைந்துள்ளார். இதனால் இரவு முழுவதும் சோகமாகவே இருந்த பினு, யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

விடிந்ததும் காலையில் அறையை திறந்தபொழுது பினு சடலமாக தூக்கில் தொங்குவதை பார்த்து கதறி அழுத குடும்பத்தார், உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவலர்கள் உடனடியாக பினுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பெற்றோர்களின் தவறான முடிவால் திருமணம் தடைபட்டதோடு, இளைஞர் ஒருவரும் தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ள சம்பவமானது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இரத்தம் சொட்ட சொட்ட காவல்நிலையத்திற்கு ஓடி வந்த பொலிஸ் : என் கவுண்டரில் ரவுடி சுட்டுக் கொலை!!

தமிழகத்தில் காவலரை வெட்டிய ரவுடியை பொலிசார் எண்கவுண்டரில் சுட்டுத்தள்ளியுள்ளனர்.

சென்னை ராயப்பேட்டை தர்கா குடிசை மாற்று வாரிய குடியிருப்பு அருகே நேற்றிரவு சிலர் குடித்துவிட்டு தகராறு செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் வந்துள்ளது.

இதனால் அப்பகுதியின் E2 ராயப்பேட்டை காவல்நிலைய முதல்நிலை காவலர் ராஜவேலு ரோந்து பணியில் சென்றுள்ளார்.

அப்போது அங்கு 5-க்கும் மேற்பட்ட ரவுடிகள் மது அருந்திக் கொண்டிருந்ததைப் பார்த்த அவர், இங்கிருந்து செல்லுமாறு கூறியுள்ளார்.

ஆனால் அங்கிருந்த சுமார் 10-க்கும் மேற்பட்டோர் காவலரை கத்தியால் சரமாரியாக தாக்கியுள்ளனர். அவரை தலையில் கத்தியால் வெட்டியுள்ளனர்.

இதனால் தலையில் பலத்த வெட்டுக் காயமுடன் ரத்தம் வடிந்த நிலையில் ராகவேலு காவல்நிலையத்திற்கு ஓடி வந்துள்ளார்.

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த மற்ற காவலர்கள் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு, அதிகாலை தாக்குதல் நடத்தியவர்கள் பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இந்த அதிரடி தேடலில் ரவுடி ஆனந்தன் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர். இருப்பினும் ஆனந்தன் உள்ளிட்ட 4 முக்கிய குற்றவாளிகள் தப்பிச் சென்றுள்ளனர்.

தப்பிச் சென்ற அவர்களை பொலிசார் தொடர்ந்து தேடி வந்துள்ளனர்.

இந்நிலையில் அவரை பிடிக்கச் சென்றபோது, மற்ற காவலர்களை ஆனந்தன் கத்தியால் வெட்ட வந்ததாக கூறப்படுகிறது.

அப்போது தங்களை காப்பாற்றிக்கொள்ள காவலர்கள், ரவுடி ஆனந்தனை தற்காப்பிற்காக என்கவுண்டர் செய்துள்ளதாகவும், இந்த சம்பவம் மத்திய கைலாஷ் செண்ட்ரல் பாலிடெக்னிக் அருகே நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீட்டில் சடலமாக கிடந்த 11 பேரும் தற்கொலை செய்து கொண்டதற்கு இது தான் காரணமா?

இந்தியாவில் 11 பேர் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் சாமியாரின் தலையீடு இல்லை என்று பொலிசார் கூறியுள்ளனர்.

டெல்லி புராரி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் 11 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டது. முதலில் இவர்கள் அனைவரும் தற்கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், இவர்களின் உறவினர் ஒருவர் அவர்கள் தற்கொலை செய்திருக்க வாய்ப்பில்லை, நிச்சயம் இது ஒரு கொலையாகத்தான் இருக்கும் என்று கூறியிருந்தார்.

இதற்கிடையில் பொலிசார் நடத்திய விசாரணையில், அந்த வீட்டில் நிறைய கடிதங்கள், டைரிகள் கைப்பற்றப்பட்டது. அதில் எப்படி தற்கொலை செய்தால் மோட்சம் கிடைக்கும், எந்த நேரத்தில் தற்கொலை செய்ய வேண்டும் என்றெல்லாம் எழுதப்பட்டிருந்தது.

இதனால் இது கொலையா, தற்கொலையா என்று தெரியாமல் பொலிசார் குழம்பி போய் நிற்கின்றனர். மேலும் இவர்களின் உடற்கு கூறு ஆய்விலும் கொலை செய்யப்பட்டதற்கான எந்த ஒரு ஆதாரமும் இல்லை.

அதுமட்டுமின்றி இந்த சம்பவத்தில் சாமியார்கள் யாரும் தலையிட்டிருக்கிறார்களா என்ற கோணத்திலும் பொலிசார் விசாரணை மேற்கொண்டனர்.

ஏனெனில் டைரிகள் மற்றும் கடிதங்களில் சொர்க்கத்திற்கு எப்படி செல்வது போன்று குறிப்பிட்டிருந்ததால், மூடநம்பிக்கை காரணமாக செய்திருக்கலாம் என்று பொலிசார் சந்தேகமடைந்தனர்.

இந்நிலையில் இந்த சம்பவத்தில் சாமியார்களின் தலையீடு இல்லை என்று பொலிசார் கூறியுள்ளனர். பொலிசார் இறந்தவர்களின் உறவினர்கள் 20 பேரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

ஆனால் அது குறித்து எந்த ஒரு தகவலும் தெரிவிக்கவில்லை. இறந்த 11 பேர் விவகாரத்தில் shared psychosis என்ற நோயின் தாக்கம் இருக்குமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

shared psychosis என்றால் ஒருவர் மூடநம்பிக்கையோ அல்லது வேறு ஏதேனும் பற்றி மற்றொருவரிடம் தொடர்ந்து கூறிக் கொண்டிருக்கும் போது அவர்களும் அதற்கு அடிமையாகிவிடுவார்களாம்.

இதனால் இந்த 11 பேர் மரணம் விவகாரத்தில் யாரேனும் மூடநம்பிக்கை மிகுந்தவர் இருந்தாரா அல்லது தற்கொலைப் பற்றி தொடர்ந்து கூறிக் கொண்டே மற்றவர்களை மாற்றினாரா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதில் சம்பவத்தில் இறந்தவர்களை கடைசியாக அதாவது அவர்கள் இறப்பதற்கு ஒரு நாளுக்கு முன்பு டெலிவரி பையன் 20 ரொட்டிகளை டெலிவரி செய்துள்ளான்.

அவனே இறந்தவர்களை கடைசியில் பார்த்துள்ளான் என்பதால் அவனிடமும் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முல்லைத்தீவில் சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்ய முற்பட்ட இளைஞன் கைது!!

புதுக்குடியிருப்பு 2 ஆம் வட்டாரம் கோம்பாவில் பகுதியில் வசித்துவரும் பாடசாலை சிறுமி ஒருவரை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உற்படுத்த முயன்ற குற்றச்சாட்டில் அதே இடத்தினை சேர்ந்த இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 01 ஆம் திகதி கோம்பாவில் பகுதியில் வசித்துவரும் 16 வயது நிரம்பாத சிறுமி ஒருவரை அவருடைய வீட்டிற்கு அருகில் உள்ள மற்றுமொரு வீட்டிற்கு அழைத்து சென்று குறித்த சிறுமியை 24 வயதுடைய இளைஞன் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உற்படுத்த முயற்சித்துள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தின் பின்னர் குறித்த இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

புதுக்குடியிருப்பு பொலிஸார் குறித்த நபரை நேற்று முன்தினம் (02.07) முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியுள்ளார்கள்.

இதன்போது குறித்த இளைஞனை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளதுடன் பாதிக்கப்பட்ட சிறுமியின் மருத்துவ பரிசோதனை அறிக்கையினை நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்கள்.

மாடுகளை திருடியவருக்கு சிறைத்தண்டனை!!

திருகோணமலை சேருவில பிரதேசத்தில் இரண்டு பசு மாடுகளை திருடிய இருவருக்கு மூன்று மாதம் கட்டாய சிறைத்தண்டனை விதித்து மூதூர் நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம்.சம்சுதீன் இன்று உத்தரவிட்டார்.

ஈச்சிலம்பற்று, கருக்காமுனை பகுதியைச் சேர்ந்த 36 மற்றும் 42 வயதுடைய இருவருக்கே இவ்வாறு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த நான்கு வருடங்களுக்கு முன்னர் சேருவில பிரதேசத்தில் இரண்டு பசு மாடுகளைத் திருடி விற்பனை செய்த வழக்கு மூதூர் நீதிமன்றில் நடைபெற்று வந்த நிலையிலே இருவரையும் குற்றவாளிகளாக இணங்கண்டு மூன்று மாதம் கட்டாய சிறைத்தண்டனை விதித்து உத்தரவிட்டார்.

வவுனியா அரசாங்க அதிபராக கடமையேற்று குறுகிய காலத்திற்குள் இடமாற்றமா?

வவுனியாவில் புதிதாக கடமையேற்று கடமையாற்றி வரும் அரசாங்க அதிபர் சோமரத்னவிதான பத்திரனவுக்கு இடமாற்றம் வழங்கப்படவுள்ள நிலையில் புதிய அரசாங்க அதிபராக முஸ்லிம் ஒருவரை நியமிக்க அமைச்சரவைப் பத்திரம் வழங்கப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வடக்கு , கிழக்கின் சில மாவட்டங்களுக்கு அரசாங்க அதிபர்களாக தொடர்ந்தும் சிங்கள இனத்தைச் சேர்ந்தவர்களே அரசாங்க அதிபர்களாக நியமிக்கப்படுகின்றமை தொடர்பில் பல தரப்பினராலும் அதிருப்தி தெரிவிக்கப்பட்டு வருகின்றது.

வவுனியா அரசாங்க அதிபராக சோமரத்ன விதான பத்திரன நியமிக்கப்பட்டு மிகவும் குறுகிய காலத்திற்குள் மீண்டும் புதிய அரசாங்க அதிபர் நியமிக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இந்த நிலையில் தற்போது வவுனியாவின் அரசாங்க அதிபர் ஒரு தமிழர் நியமிக்கப்பட வேண்டியமை தொடர்பில் தமிழ் அரசியல் தலைமைகள் தமது நடவடிக்கைகளை முன்னெடுப்பார்களா என மக்கள் எதிர்பார்த்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு பணம் அனுப்பப்படுகிறதா? மக்களுக்கு எச்சரிக்கை!!

இலங்கையில் உள்ளவர்களை மோசடியான முறையில் ஏமாற்றி பணம் பறிக்கும் கும்பல் தொடர்பில் பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.

சீட்டிழுப்பு ஒன்றில் பெருந்தொகை பணப் பரிசு வென்றுள்ளதாக கூறி நபர் ஒருவரிடம் 96000 ரூபாய் பணம் மோசடி செய்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மெனராகலை மெதகம பிரதேசத்தில் பொலிஸாரினால் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெளிநாடு ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சீட்டிழுப்பில் கிடைத்த பரிசை துறைமுகத்தில் விடுவித்து கொள்வதற்கு பணம் அவசியம் என கூறி சந்தேக நபர் பணம் மோசடி செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மின்னஞ்சல் ஊடாக பணப் பரிசு தொடர்பில் பாதிக்கப்பட்ட நபருக்கு தகவல் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் பாதிக்கப்பட்டவர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

அதற்கமைய கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பஸ்ஸர பிரதேசத்தை சேர்ந்த 25 வயதுடையவர் என முதற்கட்ட விசாரணையின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

இதேவேளை, பேஸ்புக் ஊடாகவும் அறிமுகமாகும் நபர்கள் இலங்கையிலுள்ள பல பெண்களை ஏமாற்றி பெருந்தொகை பணம் பறித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

வவுனியா இளைஞனுக்கு தேசிய அளவில் கிடைத்த கௌரவம்!!

தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் நடத்திய வருடாந்த தேசிய விருதுப் போட்டியில் அறிவிப்பாளர் நிகழ்வில் வவுனியா இளைஞன் தேசிய மட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் நடத்திய வருடாந்த தேசிய விருதுப் போட்டியில் வவுனியாவைச் சேர்ந்த ஜெகநாதன் சோபிதன் மாகாண மட்டத்தில் அறிவிப்பாளர் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பெற்று தேசிய மட்டப் போட்டிக்கு தகுதிபெற்றுள்ளார்.

தேசிய இளைஞர்கள் சேவைகள் மன்றம் நடாத்திய வருடாந்த தேசிய விருது வழங்கும் போட்டி கடந்த புதன்கிழமை வவுனியாவில் நடைபெற்றது.

வவுனியா மாவட்டத்தில் திறமை வாய்ந்த இளைஞர், யுவதிகளை இனங்கண்டுகொள்ளும் வகையில் போட்டிகள் நடைபெற்றது. வவுனியா மாவட்டத்தில் அறிவிப்பாளர் போட்டியில் போட்டியிட்ட ஜெகநாதன் சோபிதன் மாவட்ட ரீதியாக இரண்டாம் இடத்தை பெற்று மாகாண போட்டிக்கு தகுதி பெற்றார்.

மாகாண மட்ட போட்டிகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையில் நடைபெற்றது. மாகாண மட்டத்தில் நேர்த்தியான செய்திவாசிப்பு, மொழி உச்சரிப்பு, குரல் வளம் என்பன மிகவும் அவதானம் செலுத்தப்பட்டது. மாகாண மட்டத்திலும் ஜெகநாதன் சோபிதன் இரண்டாம் இடத்தை பெற்றுக் கொண்டார்.

மேலும் அவர் கொழும்பு மகரகமவில் அமைந்துள்ள தேசிய இளைஞர்கள் சேவைகள் மன்றத்தில் நடைபெறவுள்ள தேசிய மட்ட போட்டியில் பங்பற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் மாணவர்கள் மொட்டையடிக்கப்பட்ட விவகாரம் : முறைப்பாடுகள் ஏதும் கிடைக்கப்பெறவில்லை : வளாகத்தின் முதல்வர்!

வவுனியா யாழ் வளாகத்தின் இரண்டாம் வருட விஞ்ஞான பீட மாணவர்களால் கடந்த 21.06.2018 அன்று கனிஸ்ட மாணவர்களுக்கு மொட்டையடிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட மாணவர்களிடமிருந்து முறைப்பாடுகள் ஏதும் கிடைக்கப்பெறவில்லை என வவுனியா யாழ் வளாகத்தின் முதல்வர் ரி.மங்களேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வவுனியா பூங்கா வீதியில் அமைந்துள்ள யாழ் பல்கலைக்கழகத்தில் இன்று (03.07) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்..

இச்சம்பவம் தொடர்பாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கோரிக்கையை ஏற்று விரிவான விசாரணை ஒன்றையும் ஆரம்பித்துள்ளோம். பகிடி வதை குறித்து ஊடகங்களில் வெளிவரும் செய்திகளால் பல்கலைக்கழகத்திற்கு அபகீர்த்தி ஏற்படுவதாகவும் தெரிவித்தார்..

பகிடி வதைகுறித்து வளாகத்தில் கல்வி கற்றுவரும் மாணவர்கள் அவர்களின் பெற்றோர்கள் முறைப்பாடுகள் எதனையும் மேற்கொண்டிருக்கவில்லை என சுட்டிக்காட்டினார்.

பகிடிவதை குறித்து தகவல்கள் கிடைக்கப்பெற்று விசாரணைகள் மேற்கொள்ளப்படும்போது மாணவர்கள் விசாரணைக்கு ஒத்துழைப்பதில்லை. அதன் காரணமாக பகிடிவதை சட்டங்கள் இருந்தும் விசாரணைகளை மேற்கொண்டு அவர்களுக்கு தண்டனை வழங்குவதில் சிக்கல்கள் ஏற்படுகிறது என குறிப்பிட்டார்.

மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதால் பிரயோக விஞ்ஞான பீட அவையின் தீர்மானத்தின் பிரகாரம் மாணவர்கள் உள்வாங்கப்படுவார்கள் என தெரிவித்தார்.

வடக்கில் அதிகரிக்கும் குற்றச்செயல்களை தடுக்க வவுனியாவில் அவசர கலந்துரையாடல்!!

வடக்கில் அதிகரிக்கும் குற்றச்செயல்களை கவனத்தில் கொண்டு வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் க.பரந்தாமன் தலைமையில் இன்று(03.07) அவசர கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.

வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் க.பரந்தாமன், தனது பிரிவில் குற்றச்செயல்களை தடுக்கும் வகையில் இந்த கலந்துரையாடலை ஏற்பாடு செய்துள்ளார்.

இதன்போது குறித்த பிரதேச செயலக பிரிவிலுள்ள அனைத்து கிராம அலுவலர்கள், பாடசாலை அதிபர்கள், முச்சக்கரவண்டி சங்கங்களின் தலைவர் மற்றும் அங்கத்தவர்கள், சிகையலங்கார சங்கங்களின் தலைவர் மற்றும் அங்கத்தவர்களுடனும் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதில், கருத்து தெரிவித்த வவுனியா வடக்கு பிரதேச செயலாளர், நாம் அனைவரும் சமூக பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். இணைந்து செயல்படுகின்ற போதே குற்றச்செயல்களை குறைத்துக்கொள்ள முடியும்.

இதற்காக ஜனாதிபதி செயலகத்தினால் பிரதேச செயலக பிரிவில் நடைமுறைப்படுத்தப்படுகின்ற போதையற்ற இனிய வாழ்வு திட்டத்தை ஒவ்வொரு கிராம அலுவலர் பிரிவுகளிலும் வலுவாக அமுல்படுத்தி போதையற்ற வாழ்வு வாழ்வதற்கு மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்.

கிராம அலுவலர்கள் அனைவரும் பிரிவிலுள்ள அனைத்து சட்டரீதியற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீதும் தங்களுக்கு வழங்கப்பட்ட சமாதான நீதிவான் என்ற பதவியின் பிரகாரம் சட்டரீதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

குற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இதேவேளை, கிராம அலுவலர்களினால் குற்றவாளிகள் தொடர்பான வரிசை அறிக்கையினை கிரமமாக பேணுவதுடன், குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் தொடர்பான தகவல்களை நீதிமன்றத்திற்கும், தனக்கும் அறிக்கையிடுமாறு வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.