பூட்டிய வீட்டுக்குள் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேரின் சடலங்கள் : திடுக்கிடும் பின்னணித் தகவல்கள்!!

டெல்லியில் ஒரே வீட்டிற்குள் 11 பேர் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்திற்கு மத நம்பிக்கை காரணமா என பொலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

புராரி பகுதியில் 2 அடுக்குகளை கொண்ட வீட்டில், பாவனேஷ் மற்றும் அவரது சகோதரர் லலித் பாட்டியா ஆகியோர் குடும்பத்துடன் வசித்து வந்தனர்.

பாவனேஷ் பலசரக்கு கடையும், லலித் பாட்டியா தச்சுவேலையும் செய்து வந்துள்ளனர். நேற்று காலை 7.30 மணி வரை ஆகியும் கடை திறக்கப்படாததால், அருகே உள்ளவர்கள் பாவனேஷ் வீட்டு கதவை தட்டியுள்ளனர். தகவல் அறிந்து வந்த பொலிசார் கதவை உடைத்து பார்த்தபோது 11 பேர் இறந்து கிடந்தனர்.

பாவனேஷ் தாய் நாராயன் தேவி கழுத்து அறுக்கப்பட்டு தரையில் இறந்து கிடந்தார். அவரது மகள் பிரதீபா, இரு மகன்கள் பாவனேஷ் மற்றும் லலித் பாட்டியா, பாவனேஷ் மனைவி சவிதா, அவரது 3 குழந்தைகள் மீனு, நிதி, துரவ் மற்றும் லலித் பாட்டியாவின் மனைவி டினா, மகன் ஷிவம் ஆகியோர் கண்கள், கால்கள் கட்டிய நிலையில் தூக்கில் தொங்கியபடி சடலமாக கிடந்தனர்.

வீட்டில் உள்ள பொருட்கள், பெண்கள் அணிந்திருந்த நகைகள் அனைத்தும் அப்படியே இருந்தது. கொள்ளையடிக்கும் நோக்கில் இச்சம்பவம் நடைபெறவில்லை என முடிவுக்கு வந்த பொலிசார் வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்டுள்ள சில குறிப்புகளின் அடிப்படையில், குடும்பத்தினர் அனைவரும் ஒட்டுமொத்தமாக குறிப்பிட்ட மதநம்பிக்கையை பின்பற்றியது தெரியவந்துள்ளது.

அந்த வீட்டில் கைப்பற்றப்பட்ட குறிப்பில், வாய், கண்கள், கைகளை கட்டிக்கொண்டு தற்கொலை செய்து கொண்டால் பயத்தை வென்று விடலாம், ஆலமரத்தை ஏழு நாட்கள் பயபக்தியுடன் வழிபடுங்கள், யாராவது வீட்டுக்கு வந்தால் அடுத்தநாள் இதை செய்யுங்கள் என்று குறிப்பிடப்பட்டிருந்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே குடும்பத்தினர் வளர்த்து வந்த நாய் மட்டும், மாடியில் கொண்டுபோய் விடப்பட்டுள்ளது.

கீழே இருந்த நாயை கொலையாளி மேலே கொண்டுபோய் விட்டிருக்கலாம் என்றும் பொலிசார் சந்தேகிக்கின்றனர்.

பொலிசார் கூறுகையில், இந்த குடும்பத்தை சேர்ந்த யாரோ மூவர் தற்கொலை செய்ய முடிவெடுத்துள்ளனர், ஆனால் அதன் பின்னர் குடும்பத்தினரை கொல்ல திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

நாயை மாடியில் கொண்டு போய் விட்ட நபரின் கைரேகையை சேகரித்துள்ளோம், இதனை ஆய்வு செய்தபின்னரே அது யார் என்பது தெரியவரும் என கூறியுள்ளனர்.

மதநம்பிக்கையா, கடன்தொல்லையா அல்லது வேறு எதாவது பிரச்சனைக்காக மொத்த குடும்பத்தாரும் தற்கொலை செய்து கொண்டனரா என்று பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த குடும்பத்தை சேர்ந்த யாரோ ஒருவருக்கு ஏற்பட்ட மனஉளைச்சல் காரணமாக மொத்த குடும்பத்தையும் கொலை செய்து தானும் தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இலங்கையின் தேசிய விருதை வென்ற தமிழ் இசையமைப்பாளர்!!

“ஓவியா” என்னும் படத்திற்காக, இலங்கை அரசின் சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை சிவா பத்மஜனுன் என்பவர் பெற்றுள்ளார்.

இமாலயன் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில், காண்டீபன் ரங்கநாதன் தயாரித்து, நடித்துள்ள படம் “ஓவியா”. அறிமுக இயக்குனர் கஜன் ஜெகநாதன் இயக்க, சிவா பத்மஜன் இசையமைத்துள்ளார்.

இதில் நாயகியாக இலங்கையை சேர்ந்த மிதுனா என்பவரும், “ஓவியா” என்னும் சிறுமி கதாபாத்திரத்தில் சுவிக்சா ஜெயரத்னம் என்ற குழந்தையும் நடித்துள்ளனர். நிசாந்தன் மற்றும் விபின் சந்திரன் ஆகியோர் ஒளிப்பதிவு செய்ய, அனீஸ் ரஹ்மான் நடனம் அமைத்துள்ளார்.

இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன முன்னிலையில், கடந்த 22-ம் தேதி நடைபெற்ற தேசிய விருதுகள் வழங்கும் விழாவில், சிறந்த பாடலுக்கான பிரிவில், ஓவியா படத்தில் இடம்பெற்றுள்ள “அள்ளிக்கொள்ளவா” பாடல் விருதை தட்டி சென்றது.

அதனடிப்படையில் இசையமைப்பாளர் சிவா பத்மஜனுக்கு, சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதினை கலைத்துறை அமைச்சர் எஸ்.பி.நவய்நெ (S.B.Nawwine) வழங்கியுள்ளார்.

முன்னதாக தனியார் தொலைக்காட்சியின் மூலம் பிரபலமான, பாடகர் ஆனந்த் அரவிந்தக்ஷன் தான் இப்பாடலை பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

திருமணம் முடித்தவர்கள் பாலியல் துஸ்பிரயோகம் செய்யமாட்டார்களா? யாழில் நீதிமன்றம் கேள்வி!!

திருமணம் முடித்தவர்கள் பாலியல் துஸ்பிரயோகம் செய்ய மாட்டார்களா? என மல்லாகம் நீதிமன்றம் சட்டத்தரணியிடம் கேள்வி எழுப்பியுள்ளது.

வட்டுக்கோட்டையிலுள்ள தனியார் கல்வி நிலையம் ஒன்றில் பாடசாலை மாணவிகள் மூவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகிய சம்பவம் அண்மையில் மல்லாகம் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்த சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள ஆசிரியர் சார்பில் ஆஜரான சட்டத்தரணியிடம் இந்த கேள்வியை நீதிமன்று எழுப்பியிருந்தது.

“இந்த ஆசிரியர் கௌரவமான குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர், திருமணம் முடித்து பிள்ளைகளுடன் வாழ்ந்து வருகின்றார், அவர் மீது சேறு பூசும் நடவடிக்கையாகவே இந்த குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது” என்று சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, “திருமணம் முடித்தவர்கள் இவ்வாறான செயற்பாட்டை செய்யமாட்டார்களா? திருமணம் முடிக்காதவர்கள் தான் இப்படி செய்வார்களா?” என்று கேள்வி எழுப்பிய மல்லாகம் நீதவான் ஏ.ஏ.ஆனந்தராசா, சந்தேகநபரான ஆசிரியருக்கு 14 நாட்கள் விளக்கமறியல் நீடிப்பு உத்தரவை பிறப்பித்துள்ளார்.

யாழ்.வட்டுக்கோட்டையிலுள்ள தனியார் கல்வி நிலையத்துக்கு சென்ற பதின்ம வயது மாணவியை வன்புணர்ந்தமை மற்றும் மாணவிகள் சிலருக்கு பாலியல் தொல்லை கொடுத்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டில் வட்டுக்கோட்டையைச் சேந்த ஆசிரியர் ஒருவர் கடந்த 13ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மூன்று பெண்களை கத்தியால் குத்திவிட்டு தற்கொலை செய்துகொண்ட நபர்!!

மாத்தறை – ஊருபொக்க, கல்பொக்க பிரதேசத்தில் கத்தி குத்துக்கு இலக்காகி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இரண்டு பெண்கள் படுகாயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் 28 வயதான பெண் உயிரிழந்துள்ள நிலையில், 32 மற்றும் 64 வயதான ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு பெண்கள் படுகாயமடைந்து எம்பிலிபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், கத்தி குத்து தாக்குதலை மேற்கொண்ட 40 வயதான நபர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

மனநோய் முற்றியதால் இந்த கத்தி குத்து தாக்குதலை மேற்கொண்டு விட்டு தானும் தற்கொலை செய்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

கோர விபத்தில் சிக்கி உயிரிழந்த குழந்தை : இருவர் படுகாயம்!!

 

மட்டக்களப்பு – தும்பங்கேணி, பழுகாமம் சந்தியில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு வயது சிறுவன் உயிரிழந்துள்ளதுடன் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

தும்பங்கேணி, பழுகாமம் சந்தியில் இன்று காலை டிப்பர் வாகனமும் முச்சக்கரவண்டியும் மோதுண்டதன் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

பலாச்சோலையில் இருந்து களுவாஞ்சிகுடிக்கு சென்ற முச்சக்கரவண்டியும், சம்மாந்துறையில் இருந்து கொக்கட்டிச்சோலைக்கு சென்ற டிப்பர் வாகனமும் மோதிய நிலையில் முச்சக்கரவண்டி இழுத்துச் செல்லப்பட்டதாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.

இதன்போது குறித்த முச்சக்கரவண்டியில் பயணித்தி இரண்டு வயது சிறுவன் ஸ்தலத்திலேயே உயிரிழந்ததாகவும் சிறுவனின் தாயாரும் முச்சக்கரவண்டி சாரதியும் படுகாயமடைந்ததாகவும் வெல்லாவெளி பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சடலம் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் படுகாயமடைந்தவர்களும் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

இரண்டு வாகனங்களினதும் வேகமே விபத்து காரணம் என தெரிவித்த பொலிஸார் இச்சம்பவம் தொடர்பில் டிப்பர் வாகனத்தின் சாரதியை கைது செய்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பெண்ணை துஷ்பிரயோகம் செய்து விட்டு 10 ஆண்டுகளாக மறைந்திருந்த நபா்!!

காலியில் பெண் ஒருவர் துஷ்பிரயோகம் செய்து விட்டு 10 ஆண்டுகளுக்கும் அதிக காலம் உருவத்தை மாற்றி மறைந்திருந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

முச்சக்கர வண்டி சாரதியான இந்த நபர் நேற்று காலி, கோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரால் 2008ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதி, பாதிக்கப்பட்ட பெண்ணை விடுதிக்கு அழைத்து சென்று துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த முச்சக்கர வண்டி சாரதி பாதிக்கப்பட்ட பெண்ணுடன் காதல் ஒன்று தொடர்பு ஒன்றும் வைத்திருந்துள்ளார். எனினும் பலவந்தமாக அந்த பெண்ணை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார்.

பின்னர் இது தொடர்பில் பெண் காலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். எனினும் சந்தேக நபர் பாணந்துறை பிரதேசத்திற்கு தப்பி சென்று மறைந்திருந்துள்ளார்.

7 வருடங்களின் பின்னர் அந்த பிரதேசத்தில் பெண் ஒருவரை திருமணம் செய்த நபர் ஹபராதுவ பிரதேசத்தில் வசித்து வந்துள்ளார்.

அவர் தனது உருவத்தை மாற்றி முச்சக்கர வண்டி சாரதியாக செயற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எனினும் இந்த நபர் தொடர்பில் தகவல் கண்டுபிடித்த புலனாய்வு பிரிவினர் நேற்று கைது செய்துள்ளனர்.

யாழில் மற்றுமொரு பயங்கரம் : கணவனின் கண் முன்னே மனைவி கொடூரமாக பாலியல் துஷ்பிரயோகம்!!

யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை சங்கரத்தை பகுதியில் கணவனின் கண்முன்னே மனைவியை கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்த திருடர்கள், வீட்டில் இருந்த நகைகள், பணம் என்பவற்றையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

வட்டுக்கோட்டை சங்கரத்தை பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்குள் நுழைந்த திருடர்கள், இந்த கொடூரத்தை அரங்கேற்றி விட்டுச் சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த வீட்டிற்குள் நுழைந்த இரு திருடர்கள் கணவனை கடுமையாக தாக்கியதுடன் அவரின் வாய் மற்றும் கைகளை கதிரையுடன் சேர்த்து கட்டி வைத்துள்ளார்கள்.

பின்னர் மனைவியை தாக்கி அவர் அணிந்திருந்த நகைகளை பறித்ததுடன் அங்கிருந்த ஒரு தொகை பணத்தையும் அபகரித்துள்ளார்கள்.

தொடர்ந்து மனைவியின் வாயை கட்டி வைத்து அவரை மிகவும் கொடூரமான முறையில் துஷ்பிரயோகம் செய்துள்ளார்கள்.

குறித்த பெண்ணின் உடல் உறுப்புக்கள் அனைத்திலும் கத்தியால் வெட்டி காயப்படுத்தியதுடன் வாய், தலை என்பவற்றில் பலமாக தாக்கி காயம் ஏற்படுத்தியுள்ளார்கள்.

அதிகாலையில் புகுந்த திருடர்கள் சுமார் 3 மணி நேரம் வரை அவர்களை சித்திரவதை செய்துவிட்டு அங்கிருந்து இருவரும் தப்பிச்சென்றுள்ளனர்.

இந்த சம்பவத்தில் 59 வயதான பெண்ணும் அவருடைய கணவரும் பாதிக்கப்பட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இக் கொடூர சம்பவம் தொடர்பாக அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் இருப்பதுடன், இவ்வாறான சம்பவங்களுக்கு விசனம் வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை, திருடர்கள் இருவரும் அரைக்காற்சட்டையும் ரிசேட்டும் அணிந்து முகத்தை மூடி துணி கட்டியிருந்தனர். கைகளுக்கு குளோஸ் போட்டிருந்தனர் தெரிவிக்கப்படுகின்றது.

வவுனியாவில் காணாமல்போன இளைஞன் சடலமாக மீட்பு!!

வவுனியா நெடுங்கேணி சேனப்புலவு பகுதியில் கடந்த மாதம் காணாமல்போன இளைஞனின் சடலம் நேற்று ஒட்டுசுட்டானில் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளதுடன் சந்தேக நபர்கள் இருவரையும் பொலிசார் கைது செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

கடந்த 17.05.2018 அன்று காலை 10.30 மணியளவில் நெடுங்கேணிக்கு கடைக்குச் சென்றுவருவதாகத் தெரிவித்து விட்டுச் சென்ற இராஜகோபால் கஜமுகன் என்ற 22 வயது மகன் வீடு திரும்பவில்லை என்று அவரது தாயாரால் நெடுங்கேணி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எனினும் கடந்த மாதம் 23ம் திகதி இளைஞனின் மோட்டார் சைக்கில் வீட்டிற்கு அருகிலிருந்து உறவினர்களினால் மீட்கப்பட்டுள்ளது. இதையடுத்து பொலிசார் மோட்டார் சைக்கிலினை நீதிமன்றத்தில் முற்படுத்தி மேலதிக விசாரணைகளை துரிதப்படுத்தினார்கள்.

நேற்று குறித்த இளைஞனின் சடலம் ஒட்டுசுட்டான் தண்ணிமுறிப்பு காட்டுப்பகுதியிலிருந்து உருக்குலைந்த நிலையில் கைகள், கால் பகுதிகளின் எலும்புகள் சதையின்றி உடலின் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த இளைஞனின் கடத்தல் மற்றும் கொலையுடன் தொடர்புபட்டுள்ளதாகத் இரு இளைஞர்களைக் கைது செய்த பொலிசார் அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது சந்தேக நபர்களில் ஒருவருடைய மனைவியுடன் குறித்த இளைஞன் தொடர்பு வைத்துள்ளதாகவும் இதனாலேயே சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும் சந்தேக நபர் பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.

விசாரணைகளை மேற்கொண்ட பொலிசார் நேற்று மாலை கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களையும் நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய போது எதிர்வரும் 12ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.

மெஸ்ஸியின் உலகக்கிண்ண கனவுக்கு ஆப்பு வைத்த பிரான்ஸ் : முக்கிய அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி!!

உலகக்கிண்ண கால்பந்தாட்ட போட்டியில் பிரான்ஸ் அணிக்கு எதிரான தோல்விக்கு பின் அர்ஜெண்டினா அணியின் நட்சத்திர வீரர் மெஸ்ஸி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருப்பது அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்யாவில் நடைபெற்று வரும் உலகக்கிண்ண கால்பந்தாட்ட தொடரில் பலம் வாய்ந்த அணிகள் தொடரை விட்டு வெளியேறுகின்றன, கத்து குட்டி அணிகள் எல்லாம் சிறப்பாக விளையாடி அடுத்தடுத்த சுற்றுக்கு முன்னெறி வருவது கால்பந்தாட்ட ரசிகர்களுக்கு வியப்பை ஏற்படுத்தி வருகிறது.

அப்படி இந்த உலகக்கிண்ணம் தொடர் துவங்குவதற்கு முன்பே பலம் வாய்ந்த அணிகளின் வரிசையில் இருந்த அர்ஜெண்டினா அணி, பிரான்ஸ் அணிக்கு எதிரான நாக் அவுட் சுற்றில் பரிதாபமாக தோல்வியடைந்து தொடரை விட்டு வெளியேறியது.

இந்த அணியில் பெரிதும் நம்பப்பட்ட மெஸ்ஸியின் மாயாஜாலம் ஒன்றும் எடுபடவில்லை.

அவரின் கால்பந்து வித்தை கிளப் அணிகளுக்கு விளையாடுவதில் மட்டும் தான் இருந்துள்ளது. ஆனால் அவர் பிறந்த அர்ஜெண்டினா நாட்டின் உலகக்கிண்ண போட்டி வெற்றிக்கு உதவாமலேயே போய்விட்டது

மெஸ்ஸி முதன் முறையாக 2006-ஆம் ஆண்டு அர்ஜெண்டினா அணிக்காக விளையாடினார். அதன் பின் 2014-ஆம் ஆண்டு இவர் தலைமையிலான அணி உலகக்கிண்ணப் போட்டியில் விளையாடியது. ஆனால் கிண்ணத்தை பெற்றுத் தர முடியவில்லை.

இதனால் அவர் தன்னுடைய ஒய்வை அறிவித்தார். அதன் பின்னர் ஓய்வு முடிவிலிருந்து பின்வாங்கி மீண்டும் விளையாடத்துவங்கினார்.

இந்நிலையில் தனது ஓய்வு உலகக் கிண்ண போட்டியின் முடிவைப் பொறுத்து அமையும் என தெரிவித்திருந்தார். ஆனால் பிரான்ஸ் அணியுடன் ஏற்பட்ட தோல்வியின் காரணமாக அதன் விரக்தியை வெளிப்படுத்தும் வகையில் தன் ஓய்வை மெஸ்ஸி மீண்டும் அறிவித்துள்ளார்.

மெஸ்ஸியின் இந்த அறிவிப்பு ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தாலும், மீண்டும் அவர் விளையாட வேண்டும் என்று தான் ரசிகர்கள் விரும்புகின்றனர்.

கணவருடன் சேர்ந்து மது போதையில் மிதந்த மனைவி : அடுத்து நிகழ்ந்த சோகம்!!

பிரித்தானியாவை சேர்ந்த பெண் கணவருடன் சேர்ந்து மது அருந்திய போது உயிரிழந்த நிலையில், கணவர் மற்றவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கிரேட்டர் மான்செஸ்டரை சேர்ந்தவர் ஸ்டுஅர்ட் பிஷப் (46). இவர் மனைவி பவுலா (37). இருவரும் கடந்தாண்டு அக்டோபர் மாதம் ஸ்பெயினுக்கு சுற்றுலா சென்றுள்ளனர்.

சுற்றுலா சென்ற இடத்தில் இருந்த இரண்டு மது கூடங்களில் பிஷப்பும், பவுலாவும் மது அருந்திய பின்னர் ஹொட்டல் அறைக்கு திரும்பியுள்ளனர்.

பின்னர் காலையில் பிஷப் எழுந்து பார்த்த போது பவுலா சடலமாக கிடந்துள்ளார்.

பவுலாவின் பிரேத பரிசோதனை முடிவில் அவர் அதிகளவு மது குடித்ததால் அந்த நச்சு உடலில் கலந்து இதயம் செயலிந்து உயிர் பிரிந்தது தெரியவந்தது.

இது குறித்து பிஷப் கூறுகையில், பவுலா கொஞ்சம் பீர் வகை மற்றும் இரண்டு கிளாஸ் வைன் மது மற்றும் ஐரீஸ் காபியை தான் குடித்தார்.

ஆனால் அவர் ரத்தத்தில் 15 யூனிட் அளவில் மது இருப்பது தெரியவந்தது, இதை என்னால் நம்ப முடியவில்லை. நான் எல்லோருக்கும் கூறுவது ஒன்று தான், வேறு நாடுகளுக்கு போனால் மது விடயத்தில் கவனமாக இருங்கள்.

ஏனெனில் பிரித்தானியா போல மதுவின் அளவு பல நாடுகளிலும் சரியான அளவு கணக்கிடப்படுவதில்லை.

என் மனைவியை நான் அதிகம் மிஸ் செய்கிறேன், அவரில்லாமல் வாழ்வது கடினமாக உள்ளது என வேதனை தெரிவித்துள்ளார்.

என் வாழ்க்கையை நாசமாக்கி விட்டனர் : காதலி கொலை வழக்கில் தேடப்படும் முதல் குற்றவாளி பேட்டி!!

காதலி கொல்லப்பட்ட வழக்கில் தேடப்படும் முதல் குற்றவாளியான Santoro என்பவன் தனது வாழ்க்கையே நாசமாகி விட்டதாக பேட்டி அளித்திருக்கிறான்.

கடந்த ஏப்ரல் மாதம் சிட்னியில் உள்ள லேன் கோவ் ஆற்றில் Cecilia Haddad 38 எனும் பெண்மணி சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

இவர் கண்டெடுக்கப்பட்ட அடுத்த நாளே இவரது காதலன் Santaro பிரேசில் நாட்டிற்கு தப்பியோடி விட்டான்.

அதனால் இவனை சந்தேகித்த போலீசார் இவனை ஒரு சர்வதேச குற்றவாளி என்று அறிவித்துள்ளனர். தேடப்படும் குற்றவாளியான santaro தற்போது ரியோ டி ஜெனீரோவில் தனது குடும்பத்தாரோடு வசித்து வருகிறான்.

இவனை கைது செய்ய சர்வதேசத்தில் உள்ள காவல்துறையினரும் முயன்று வருகின்றனர். இந்நிலையில் பத்திரிகை ஒன்றிற்கு பேட்டி அளித்த குற்றவாளி தனது வாழ்க்கையே இந்த கைது உத்தரவால் நாசமாகி விட்டதாக தெரிவித்திருக்கிறார். தன் மேல் கைது வாரண்ட் இருப்பது தனக்கு தெரியும் என்று கூறும் santaro அங்கு வந்தால் மக்கள் என்னை அடித்து துன்புறுத்துவார்கள் என்று கூறுகிறார்.

தான் மிகுந்த குழப்பத்தில் இருப்பதாகவும் ஒரு பக்க கதையை கேட்டு மக்கள் தன் மேல் கோபமாக இருப்பதாகவும் போன் மூலம் மிரட்டுவதாகவும் இவர் கூறியிருக்கிறார்.

கொலை செய்யப்பட்ட Cecilia Haddad மிக சிறந்த படிப்பாளி மற்றும் அறிவாளி என்று கூறப்படுகிறது. சிறந்த தொழித்தவராகவும் இருந்த ஹடாட் santario வை பள்ளி படிப்பின் போது நட்பாக சந்தித்து பழகியிருக்கிறார், அதன் பின் பல வருடங்களுக்கு பின் இருவருக்கும் திருமணமான நிலையில் மீண்டும் இவர்கள் நட்பு தொடர்ந்திருக்கிறது.

அந்த சமயத்தில்தான் இந்த கொலை நிகழ்ந்துள்ளதாக பாதிக்கப்பட்டவர் குடும்பத்தார் தெரிவித்தனர். ஹடாட்

சடலமாக மிதந்த ஆற்றில் பூங்கொத்துகள் வீசி அவரது குடும்பத்தார் அஞ்சலி செலுத்தினர்.

சர்வதேச முறையில் தேடப்படும் குற்றவாளி என்பதாலும் சிவப்பு எச்சரிக்கை கொடுக்கப்பட்டதாலும் இந்த கொலை குற்றம் விடயமாக பிரேசில் போலீசார் விரைவில் santaro வை கைது செய்வார்கள் என்று அறியப்படுகிறது.

20 அடி தூரம் வரை தூக்கியெறியப்பட்ட நான்கு வயது குழந்தை : விளையாட்டுக்கூடம் வெடித்ததால் ஏற்பட்ட சோகம்!!

இங்கிலாந்தில் Norfolk எனும் இடத்தில கடற்கரையோரம் குழந்தைகள் விளையாடும் பவுன்சிங் கூடாரம் ஒன்று திடீரென வெடித்தது. அதே சமயத்தில் சிறு குழந்தை ஒன்று 20 மீட்டர் உயரத்திற்கு தூக்கி எறியப்பட்டாள்.

இந்த விபத்தை நேரில் பார்த்த பல பொதுமக்கள் பயத்தில் உறைந்து நின்றனர். உடனடியாக காவல்துறைக்கும் அம்புலன்சிற்கும் தகவல் கொடுத்தனர்.

விரைந்து வந்த போலீசார் விபத்தில் பாதிக்கப்பட்ட 4 வயது பெண் குழந்தையை அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனாலும் அந்த குழந்தை இறந்து விட்டது.

இந்த சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் கூறும்போது என் வாழ்வில் இதுவரை இப்படி ஒரு பயங்கர சம்பவத்தை பார்த்ததில்லை என்கிறார்.

குழந்தைகள் விளையாடும் காற்று நிரப்பப்பட்ட பலூன் போன்ற கோட்டை ஒன்றில் அந்த குழந்தை வெயில் கொளுத்தும் நேரத்தில் விளையாடி இருக்கிறது. அதிக வெயிலால் அந்த கோட்டை வெடித்து அதில் இருந்தகுழந்தை தூக்கியெறியப்பட்டு விட்டாள். தயவு செய்து குழந்தைகளை வெயில் நேரங்களில் இது போன்ற இடங்களுக்கு விளையாட அனுப்பாதீர்கள் . குழந்தையின் குடும்பத்தாருக்கு என் இரங்கல்கள் என்று அவர் கூறினார். இந்த விபத்து பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

41 வயது நபரை திருமணம் செய்து கொண்டது ஏன் : 11 வயது சிறுமி சொன்ன காரணம்!!

 

மலேசியாவைச் சேர்ந்த 41 வயது நபர் 11 வயது சிறுமியை திருமணம் செய்து கொண்டது, மலேசியாவில் பெரும் பூதாகர பிரச்சனையாக கிளம்பியுள்ளது.

Che Abdul Karim என்ற 41 வயது இஸ்லாமிய நபர் 11 வயது சிறுமியை தாய்லாந்தில் திருமணம் செய்து கொண்டதாக கூறப்பட்டு அவர் தொடர்பான புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவியது. இந்த சம்பவம் மலேசியாவில் வாழும் பெரும்பாலான இஸ்லாமியே மக்களுக்கே கோபத்தை ஏற்படுத்தியது.

ஏற்கனவே இரண்டு மனைவிகள் 6 குழந்தைகள் இருக்கும் நிலையில் இது இவருக்கு தேவையா? என்று பலரும் சமூகவலைத்தளங்களில் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

அதுமட்டுமின்றி இந்த திருமணத்திற்கு ஒத்துழைக்க கூடாது என்று எதிர்ப்பு குரல்களும் வந்தன.

ஆனால் Che Abdul Karim நான் அந்த சிறுமியின் பெற்றோரின் சம்மதத்தின் அடிப்படையிலே திருமணம் செய்து கொண்டதாகவும், அவர் இன்னும் 5 ஆண்டுகள் அதாவது 16 வயது ஆகும் வரை அவருடைய பெற்றோருடனே இருப்பார் எனவும் கூறியுள்ளார்.

மலேசியாவில் 18 வயதுக்கும் குறைந்த பெண்களை திருமணம் செய்து கொள்வது குற்றம், ஆனால் இஸ்லாமிய சட்டத்தின் படி ஒரு பெண்ணை திருமணம் செய்ய வேண்டும் என்றால் குறைந்தது 16 வயதாவது இருக்க வேண்டும், அதற்கும் குறைவான வயதில் திருமணம் செய்ய வேண்டும் என்றால் அவர்களின் sharia நீதிமன்றத்தில் அனுமதி பெற வேண்டும் என்று கூறப்படுகிறது.

ஆனால் இந்த விவகாரம் மலேசியாவில் பெரிய பூதாகரமாக வெடித்துள்ளதால், இது குறித்து மலேசிய அரசாங்கம் விசாரணை மேற்கொள்ளும் படி உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருமணம் செய்து கொண்ட 11 வயது சிறுமியிடம் கேட்ட போது, நான் Che Abdul Karim-ஐ விரும்புவதாகவும், அவர் ஒரு நல்ல மனிதன் எனவும் கூறியுள்ளார்.

தொடர்ந்து கூறுகையில், என் மீது பலரும் கோபமாக இருக்கிறார்கள், எப்படி இந்த திருமணத்திற்கு ஒத்துக் கொண்டாய் என்று, என்னை விரும்பும் நபரை நான் நேசிக்கிறேன், அவரை விவாகரத்து செய்யமாட்டேன்.

எனக்கு தெரியும் நான் ஒரு சிறுமி, ஆனால் அவரை எனக்கு வெகுநாட்களாக தெரியும். அவருடைய குழந்தைகள் என்னுடைய நண்பர்கள் நான் அவரை நேசிக்கிறேன், விட்டுத்தரமாட்டேன் என்று சிறுமி கூறியுள்ளார்.

ஆசையாக வளர்த்த மகளை தந்தை கோடாரியால் அடித்து கொலை செய்தது ஏன் : விசாரணையில் வெளியான தகவல்!!

இந்தியாவில் மகள் காதலனுடன் ஓடிப் போய் திருமணம் செய்து கொள்ள திட்டம் தீட்டுவதாக கருதி தந்தை கோடாரியால் அடித்து கொலை செய்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திரபிரதேச மாநிலத்தின் Krishna மாவட்டத்தில் அமைந்திருக்கும் Chandarlapadu என்ற பகுதியில் தன்னுடைய 22 வயது மகளான Chandrika-ஐ அவரது தந்தை Kotaiah கோடாரியால் தலையில் அடித்து கொலை செய்தார்.

மகளை தந்தையே அடித்து கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், தந்தையை கைது செய்த பொலிசார் அவரிடம் மேற்கொண்ட முதல் கட்ட விசாரணையில் சில தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதில், சந்திரிகா அதே மாவட்டத்தில் இருக்கும் தனியார் கல்லூரி ஒன்றில் B. Pharmacy படித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் தன்னுடைய பிறந்த நாளை கடந்த வெள்ளிக் கிழமை தன் சக நண்பர்களுடன் கொண்டாடிவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார்.

வீட்டிற்கு வந்த அவர் தான் ஒரு பையனை காதலிப்பதாகவும், அவரையே கல்யாணம் செய்ய கொள்ள விரும்புவதாகவும் பெற்றோரிடம் கூறியுள்ளார்.

ஆனால் இதற்கு பெற்றோர் சம்மதம் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து மறுநாள் மாலை நேரத்தில் சந்திரிக்கா தன்னுடைய காதலனுடன் போனில் பேசிக் கொண்டிருந்துள்ளார்.

அப்போது வெளியில் சென்று வீட்டிற்கு திரும்பிய அவரின் தந்தை கோட்டையா மகள் போனில் பேசுவதைக் கண்டு ஆத்திரமடைந்துள்ளார்.

அதுமட்டுமின்றி திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளதால், ஓடிப் போய் திருமணம் செய்து கொள்ள திட்டம் தீட்டுவதாக கருதி, வீட்டில் இருந்த கோடாரியை எடுத்து மகளின் தலையில் தாக்கியுள்ளார்.

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவரின் தாய் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். ஆனால் சந்திரிகா இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் சந்திரிகாவின் தாத்தாவையும் கைது செய்துள்ளதாகவும், அதுமட்டுமின்றி சந்திரிகாவின் தாயிடமும் பொலிசார் விசாரணை மேற்கொள்ளவிருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும் உள்ளூர் ஊடகம் ஒன்று சந்திரிகா காதலித்தது வேறொரு சமூகத்தை சேர்ந்த பையன் எனவும், இதன் காரணமாகவே ஆத்திரத்தில் கோட்டையா இப்படி ஒரு சம்பவத்தை செய்திருப்பதாகவும், இது ஒரு ஆணவக் கொலையாகவும் இருக்கலாம் என்று தெரிவித்துள்ளது.

இலங்கையில் இன்று முதல் யூரோ 4 எரிபொருள் விநியோகம்!!

இலங்கையின் எரிபொருள் சந்தையில் இன்று முதல் யூரோ 4 என்ற வகை எரிபொருள் விநியோகிக்கப்படவுள்ளதாக பெற்றோலியத்துறை அமைச்சு அறிவித்துள்ளது.

இதனையடுத்து இன்று முதல் ஒக்டெய்ன் 95 பெற்றோல் மற்றும் டீசல் என்பன விநியோகிக்கப்படாது என்று அமைச்சின் செயலாளர் அறிவித்துள்ளார்.

யூரோ 4 டீசலை பயன்படுத்துவதன் மூலம் அதிக புகை வெளியாவதை கட்டுப்படுத்த முடியும் என்றும் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில் யூரோ 4 எரிபொருள் ஒரு வாரத்துக்குள் நாட்டின் அனைத்து எரிபொருள் நிலையங்களுக்கும் விநியோகிக்கப்பட்டு விடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சிறுமி றெஜினா கொலையில் புதிதாக வெளிவந்த திடுக்கிடும் தடயப் பொருட்கள்!!

சிறுமி றெஜினாவின் படுகொலை விவகாரம் நாளுக்கு நாள் மக்கள் மத்தியில் பாரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகின்றது.

சிறுமியின் கொலை தொடர்பில் பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டிருந்த நிலையில் தொடர்ந்து பொலிஸார் விசாரணைகளை தீவிரப்படுத்தியிருந்தனர்.

இந்நிலையில், நேற்று 12 மணியளவில் றெஜினாவின் உள் பெனியன், தலைமுடிக்கு போடும் கிளிப் மற்றும் பூல்பான்ட் என்பன பற்றைக்குள்ளிருந்து மீட்கப்பட்டுள்ளது.

வீட்டில் இருந்து சுமார் 600 மீற்றர் தூரத்தில் இருந்து இவை மீட்கப்பட்டுள்ளது. கிராம இளைஞர்கள் இன்று காலை 10.30 மணிதொடக்கம் தேடுதலில் ஈடுபட்டுள்ளனர். இதன்போதே மேற்படிப் பொருட்களைக் கண்டுபிடித்துள்ளனர்.

மேலும், இப்பொருட்களை பெற்றோர் அடையாளம் காட்டியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து பொலிஸார் மோப்ப நாயுடன் வந்து தேடுதலில் ஈடுபட்டனர்.

எனினும், சிறுமியின் பாடசாலைச் சீருடை, ரை, சப்பாத்து என்பன மீட்கப்படவில்லை.

இதேவேளை, கடந்த 25ஆம் திகதி மாலை கிணறு ஒன்றில் இருந்து சிறுமி றெஜினாவின் சடலம் மீட்கப்பட்டிருந்ததுடன், சம்பவம் தொடர்பில், சந்தேகத்தின் பேரில் ஆறு பேரை கைதுசெய்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.