இலங்கையில் 75 வீதமானோர் புகைப்பிடித்தலால் மரணம்!!

இலங்கை உட்பட சர்வதேச மட்டத்தில் நாள்தோறும் 29.4 வீதமான ஆண்கள் புகைப்பிடிக்கும் பழக்கத்தை கொண்டிருப்பதாக உலக சுகாதார மையம் தெரிவிக்கின்றது.

இது 2017ஆம் ஆண்டைக்காட்டிலும் அதிகமானது. 2017ஆம் ஆண்டு சர்வதேச ரீதியாக புகைப்பிடிப்போர் வீதம் 19.9ஆக இருந்தது. ஆக ஒரு வருடத்துக்குள் அது 10 வீதத்தினால் அதிகரித்துள்ளது.

இதன்காரணமான தொற்றாநோய் காரணங்களுக்கு புகைப்பிடித்தல் பிரதான இடத்தை வகிக்கிறது.

இதனால் வருடந்தோறும் 41 மில்லியன் மக்கள் உயிரிழக்கின்றனர். ஏனைய காரணங்களால் 71 சதவீதத்தினர் மரணமடைகின்றனர்.

புகைப்பிடித்தல் காரணமாக 30 தொடக்கம் 69 வயதானவர்களில் 85 வீதமானோர் முன்கூட்டியே மரணமடைகின்றனர்.

இதேவேளை இலங்கையில் புகைப்பிடித்தல் காரணமாக 75 வீதமானோர் மரணமடைகின்றனர் என உலக சுகாதார மையத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நடுவீதியில் யானைகள் செய்த அட்டகாசம் : 31 பேர் வைத்தியசாலையில் அனுமதி!!

இரத்தினபுரி கஹவத்தை நகரத்தில் நேற்று இரவு நடந்த பெரஹரவில் யானைகள் குழப்பம் அடைந்தமையால் ஏற்பட்ட அனர்த்தம் காரணமாக 31 பேர் காயமடைந்துள்ளனர்.

பெரஹரவில் பயணித்த ஒரு யானை முதலாவதாக குழம்பிய நிலையில் ஏனைய யானைகள் பின்னர் குழம்பியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனால் பெரஹர பார்க்க வந்த மக்கள் பதற்றமடைந்த நிலையில், நிலைமை மேலும் மோசமடைந்தள்ளது. இதன்போது காயமடைந்த மக்கள் இரத்தினபுரி மற்றும் கஹவத்தை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுக்குள் 19 பேர் பெண்கள் என தெரிவிக்கப்படுகின்றது. பெரஹர கடமைகளில் ஈடுப்பட்டிருந்த பொலிஸ் அதிகாரி ஒருவரும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மகளுக்காக கோடிக்கணக்கான சொத்துக்களை தியாகம் செய்த பெற்றோர் : நெகிழ்ச்சி சம்பவம்!!

கேரளாவில் வசிக்கும் முதிய தம்பதி தங்கள் மகளின் நலனுக்காக குடியிருக்கும் வீட்டை மறுவாழ்வு மையமாக மாற்றுவதற்கு முன்வந்திருக்கிறார்கள்.

என். கமலாசன் – சி.கே. சரோஜினி தம்பதிகள் 70 வயதை கடந்தவர்கள். இவர்களுடைய ஒரே மகள் பிரியா (39) மாற்றுத்திறனாளி ஆவார்.

தங்கள் காலத்திற்கு பிறகு பிரியா தனிமைப்படுத்தப்படுவார் என்ற கவலை அவர் பெற்றோருக்கு ஏற்பட்டது.

அதனை போக்கும் விதமாக தாங்கள் வசிக்கும் வீடு மற்றும் சொத்துக்களை அரசின் வசம் ஒப்படைக்கிறார்கள். இந்த தம்பதியருக்கு கொல்லம் மாவட்டத்திலுள்ள கயிலா கிராமத்தில் 83 செண்ட் நிலமும், வீடும் இருக்கிறது. அவற்றின் சந்தை மதிப்பு ரூ.3 கோடியாகும்.

அதனை மாற்றுத்திறனாளி பெண்கள் பயன்பாட்டுக்கு ஏற்ற மறுவாழ்வு மையமாக மாற்றிக்கொள்ளும்படி வேண்டுகோள் விடுத்திருக்கிறார்கள். அதே போல கோழிக்கோட்டில் இரண்டு வீடுகளும், 15 செண்ட் நிலமும் இருக்கிறது. அதில் ஒரு வீட்டில் தற்போது வசித்து வருகிறார்கள். தங்கள் இறப்புக்கு பிறகு அதனையும் மறுவாழ்வு மையமாக மாற்றிக்கொள்ளும்படி உயில் எழுதி வைத்திருக்கிறார்கள்.

இது குறித்து கமலாசன் கூறுகையில், எங்கள் மகள் அந்த வீட்டிற்கு விரைவில் சென்றுவிடுவாள். அங்கு அவளைப் போன்றவர்களோடு மகிழ்ச்சியாக வாழும் சந்தர்ப்பம் அவளுக்கு கிடைக்கும். அதன் மூலம் எங்கள் இறப்பு அவளை பாதிக்காது என்று நம்புகிறோம்.

அவளை உறவினர்கள் வசம் ஒப்படைப்பதற்கு மனம் ஒப்புக்கொள்ள வில்லை. ஏனெனில் எங்கள் இறப்புக்கு பிறகு எங்கள் உறவினர்களிடம் அவள் நன்றாக வாழ்வாள் என்பதற்கு உத்தரவாதம் இல்லை.

எங்கள் முடிவால் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டிருக்கும் மற்ற மாற்றுத்திறனாளி பெண்களும் பலன் அடைவார்கள் என கூறியுள்ளார்.

சமூகவலைதளத்துக்கு அடிமையான மனைவி : கணவன் எடுத்த அதிரடி முடிவு!!

இந்தியாவில் மனைவி சமூகவலைதளத்துக்கு அடிமையானதால் வெறுப்படைந்த கணவர் விவாகரத்து கோரி நீதிமன்றத்தை நாடியுள்ளார்.

புதுடெல்லியை சேர்ந்தவர் நரேந்திர சிங் (30). இவருக்கு திருமணமாகி ஒரு ஆண்டு ஆகவுள்ள நிலையில் சில தினங்களுக்கு முன்னர் குடும்ப நீதிமன்றத்தை நாடி விவாகரத்து கோரினார்.

அந்த மனுவில், திருமணமான நாள் முதல் என் மனைவி சமூகவலைதளத்தில் தான் எப்போதும் மூழ்கியுள்ளார்.

எனக்கு மற்றும் என் குடும்பத்தாருக்கு நேரம் ஒதுக்குவதில்லை, இரவில் வாட்ஸ் அப்பில் ஆண் நண்பர்களுடன் வெகுநேரம் அவர் பேசுகிறார்.

இது எனக்கு தொந்தரவாக இருக்கிறது என அவரிடம் கூறினால் என்னை மிரட்டுகிறார். இதனால் எனக்கு விவாகரத்து வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து நரேந்திர சிங்கின் மனுவை நீதிமன்றம் ஏற்று கொண்டுள்ளது. இந்த மாதத்தில் நரேந்திர சிங் மற்றும் அவர் மனைவிக்கு கவுன்சிலிங் செய்ய நீதிமன்றம் தற்போது உத்தரவிட்டுள்ளது.

முல்லைத்தீவில் எரிந்த நிலையில் ஆணின் சடலம் மீட்பு!!

முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட தண்ணிமுறிப்பு அலகரைப் பகுதியில் சடலம் ஒன்று எரிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த சடலம் நேற்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த மாதம் காணாமல் போன இந்த இளைஞனை கடத்தி கொலை செய்த சந்தேகத்தின் பேரில் நெடுங்கேணி சேனைப்பிலவினை சேர்ந்த இருவரை பொலிஸார் கைது செய்து, விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.

இந்த நிலையில் காணமல் போன இளைஞனை கடத்தி கொலை செய்து, எரிக்கப்பட்ட இடத்தை சந்தேகநபர் ஒருவர் இன்றைய தினம் அடையாளம் காட்டியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன், எரிந்த சடலத்தின் எச்சங்கள் காணமல்போன இளைஞனுடையாதாக இருக்கலாம் என்று சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

சம்பவத்தில் உயிரிழந்தவர் நெடுங்கேணி சேனைப்பிலவு பகுதியினைச் சேர்ந்த 22 வயதானவர் என தெரியவந்துள்ளது.

மேலும், சம்பவம் தொடர்பில் பொலிஸார் சந்தேகநபர்களிடம் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

மனைவி மீது சந்தேகத்தில் கணவன் ஊர் முன்னால் கொடுத்த அதிர்ச்சி தண்டனை!!

மனைவிக்கு வேறு நபருடன் தொடர்பு இருப்பதாக சந்தேகப்பட்ட கணவன் அவருக்கு மொட்டை அடித்து கொடுமைப்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலத்தில் உள்ள மஞ்சிகலப்படு கிராமத்தை சேர்ந்தவர் ஸ்ரீனிவாச ராவ். இவர் மனைவி பாக்யலட்சுமி. தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் பாக்யலட்சுமிக்கு வேறு ஆணுடன் கள்ளத்தொடர்பு இருப்பதாக ஸ்ரீனிவாச ராவுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து இரு தினங்களுக்கு முன்னர் தனது தந்தையுடன் சேர்ந்து பாக்யலட்சுமிக்கு மொட்டை அடித்த ஸ்ரீனிவாச ராவ், அவர் முகத்தில் கருப்பு மையை பூசியுள்ளார்.

பின்னர் கிராமம் முழுவதும் மனைவியை நடக்கவைத்த ஸ்ரீனிவாசராவ், இனி இது போன்ற தவறு செய்ய மாட்டேன் என பாக்யலட்சுமியை கூறவைத்துள்ளார்.

இதையெல்லாம் வேடிக்கை பார்த்த கிராம மக்கள் யாரும் பாக்யலட்சுமிக்கு உதவாத நிலையில் சிலர் பொலிசுக்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் பாக்யலட்சுமியிடம் விசாரணை நடத்தினார்கள்.

இதில் சம்மந்தப்பட்ட ஸ்ரீனிவாசராவ் மற்றும் அவர் தந்தை மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.

ரயில்களில் யாசகம் கேட்க இன்றுமுதல் தடை!!

ரயில்களில் யாசகம் கேட்போரை நீக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை இன்று தொடக்கம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ரயில் பயணிகளிடமிருந்து கிடைக்கப்பெற்ற தொடர் முறைப்பாடுகளுக்கு அமையவே இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக ரயில்வே மேலதிக பொது முகாமையாளர் விஜய சமரசிங்க குறிப்பிட்டுள்ளார்.

வவுனியாவில் கைத்துப்பாக்கியை காட்டி கொள்ளையடிக்க முயன்ற மூவர் கைது!!

வவுனியா வாரிக்குட்டியூர் கிராமத்தில் செல்வந்தர் ஒருவரின் வீட்டில் நுழைந்த மூவர் கைதுப்பாக்கியை காட்டி கொள்ளையடிக்க முயற்சித்தாக 27.06.2018 அன்று பூவரசங்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டது.

பூவரசங்குளம் பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் வவுனியா மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் தென்னக்கோனின் உத்தரவுக்கு அமைவாக மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரி கோரளகெதர மற்றும் சாஜன் ஜேசுதாசன் தலைமையில் அதிரடியாக விசாரணைகளை மேற்கொண்ட வவுனியா பொலிசார் நேற்று (01.07) மூன்று சந்தேக நபர்களை கைது செய்துள்ளதுடன் அவர்கள் கொள்ளையடிக்க பயன்படுத்தியதாக நம்பப்படும் சொகுசு கார் ஒன்றையும், கைத்துப்பாககி ஒன்றையும் கைப்பற்றியுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து பொலிசார் தெரிவிக்கையில்,
குறித்த செல்வந்தரின் வீட்டில் கொள்ளையடிக்கச் சென்றவர்கள் சொகுசுக் காரில் சென்று கைத்துப்பாக்கியை காட்டி கதவை திறக்குமாறு மிரட்டியுள்ளனர். வீட்டு உரிமையாளர் கதவை திறக்காத காரணத்தால் கொள்ளை முயற்சியை கைவிட்டு மூவரும் தப்பித்திருந்தனர்.

வீட்டு உரிமையாளரின் முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்டு ராஜகிரிய, வெல்லம்பிட்டிய மற்றும் மன்னார் பிரதேசங்களை சேர்ந்த 27, 30, 37 வயதுடைய மூன்று பேரை கைது செய்துள்ளதாக தெரிவித்த பொலிசார் கைப்பற்றப்பட்ட கைத்துப்பாக்கியானது போலியானது என்பதுடன் இவர்கள் மூவரும் பல குற்றச்செயல்களுடன் சம்பந்தப்பட்டுள்ளதாகவும் சந்தேக நபர்களை இன்று (02.07) நீதிமன்றத்தில் பூவரசங்குளம் பொலிசார் முன்னிலைப்படுத்தவுள்ளதாகவும் மேலும் தெரிவித்தனர்.

சிறுமியை துஷ்பிரயோகம் செய்த கொடூரன் : நிர்வாணமாக ஊர்வலம் வரவைத்த ஊர்மக்கள்!!

நாகாலாந்தில் சிறுமி ஒருவரை துஷ்ப்ரயோகம் செய்த 29வயது ஆணை அந்த ஊர் மக்கள் வித்யாசமான முறையில் போலீசிடம் ஒப்படைத்தனர்.

லோங்க்யா போம் (26) என்பவன் நாகலாந்து பகுதியில் ஒரு சிறுமியை பாலியல் துஷ்ப்ரயோகம் செய்தான். இதனால் கொதிப்படைந்த ஊர் மக்கள் அவனை நிர்வாண படுத்தி ஊரை சுற்றி ஊர்வலம் வரவைத்து அதன் பின் பொலிஸிடம் ஒப்படைத்தனர்.

பாதிக்கப்பட்ட சிறுமியும் இந்த நபரும் பக்கத்து வீட்டில் வசித்து வந்தனர். இந்த தகவல் அறிந்தது, சிறுமியின் குடும்பத்தார் உறவினர்களிடம் இதுபற்றி கூறினர்

அதன்பின் அங்கிருந்த பெண்கள் அமைப்பு ஒன்று கடந்த கடந்த 29ஆம் தேதி குற்றவாளியை பிடித்தனர். அதன்பின் அவனை நிர்வாணப்படுத்தி ஊர் முழுதும் சுற்றி வரவைத்து பின்னர்தான் அந்த குற்றவாளியை பொலிஸிடம் ஒப்படைத்துள்ளனர்.

இது பற்றி வழக்கு பதிந்த போலீசார் குற்றவாளியை விசாரித்து வருகிறார்கள்.

ஒன்றுமறியாத சிறுமிகளை மற்றும் பெண்களை தங்களது இச்சைக்கும் வக்கிரத்துக்கும் பயன்படுத்துவதும் அதன் பின் அவர்களை கொல்வதும் என பல கொடூரங்கள் செய்து வரும் இது போன்ற நபர்களுக்கு இந்த தண்டனை உளவியல் ரீதியான சிறந்த தண்டனை என்று சொல்ல தோன்றுகிறது.

அம்மா எனக்கு வாழபிடிக்கவில்லை : தற்கொலை செய்துகொண்ட 14 வயது சிறுமியின் கடிதம்!!

மும்பை கண்டிவாலி அருகே உள்ள தாகூர் எனும் பகுதியில் ஒன்பதாம் வகுப்பு சிறுமி ஹர்ஷிகா மாயவந்தி எட்டாவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இவரது தற்கொலை வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது.

உயிரை மாய்த்து கொள்வதற்காக தனது வீட்டிற்கு அருகில் உள்ள உயரமான குடியிருப்பு கட்டிடத்தில் ஏறிய ஹர்ஷிகா மாயவந்தி அங்கிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார்.

ஹர்ஷிகா இதற்கு முன்பும் தற்கொலைக்கு முயன்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. படிப்பில் சிறந்த மாணவியான ஹர்ஷிகா எதற்காக இந்த முடிவை எடுத்தார் என்பது குறித்து பெற்றோர் குழப்பத்தில் உள்ளனர்.

இந்நிலையில் தற்கொலை செய்துகொள்வதற்கு முன்னர், கடிதம் ஒன்றை எழுதி அதனை சகமாணவனிடம் கொடுத்து தனது பெற்றோரிடம் இதனை கொடுத்துவிடுமாறு தெரிவித்துள்ளார்.

அந்த கடிதத்தில், அம்மா எனக்கு நீண்ட நாட்கள் வாழபிடிக்கவில்லை. நான் உடல்நலம் சரியில்லாமல் இருக்கிறேன், அதனால் தற்கொலை செய்துகொள்ளப்போகிறேன் என எழுதியுள்ளார்.

மாணவியின் தற்கொலை குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சுற்றுலா சென்ற 5 பேரை அடித்தே கொன்ற பொதுமக்கள் : அதிர்ச்சி தரும் காரணம்!!

இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் குழந்தை கடத்தல் கும்பல் என கருதி 5 பேரை பொதுமக்கள் அடித்துக் கொன்றுள்ள சம்பவம் தேசிய அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.

நாடு முழுவதும் குழந்தை கடத்தும் கும்பல் களமிறங்கியிருப்பதாக வெளியான சமூக வலைதள வதந்தியை நம்பி இந்த கொடூரம் அரங்கேறியுள்ளது.

மகாராஷ்டிரத்தில் துல மாவட்டம் ரயின்பாதா கிராமத்தில் 5 பேரை பொதுமக்கள் அடித்துக் கொன்றுள்ளனர். இவர்கள் ஐந்து பெறும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள். இந்த கொலையில் ஈடுபட்ட மக்கள் யார் என்று விசாரிக்கப்பட்டு வருகிறது.

இவர்கள் அங்கு சுற்றுலா சென்றவர்கள் என்பதும், குழந்தை கடத்தல் கும்பல் இல்லை என்பதும் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்த ஆண்டு துவக்கத்தில், உங்கள் குழந்தைகளை ஒரு கும்பல் கடத்துகிறது, பாதுகாப்பாக இருங்கள் என்று ஒரு வட்ஸ் அப் தகவல் தீயாக பரவியது.

மர்ம கும்பல் ஒன்று குழந்தைகளை கடத்தி விற்பதாக வெளியான இந்த வட்ஸ் அப் வதந்தி காரணமாக கடந்த 5 மாதங்களில் மட்டும் 23 பேர் இந்தியா முழுக்க கொலை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

200 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விழுந்த பேருந்து : 40 பேர் பரிதாபமாக பலி!!

உத்திரகாண்ட் மாநிலத்தில் பேருந்து ஒன்று 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் 40 பேர் பரிதாபமாக பலியாகியுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உத்திரகாண்ட் மாநிலம் பௌன் பகுதியிலிருந்து ராம்நகர் நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்று, Gween என்ற கிராமம் அருகே சென்று கொண்டிருந்தபொழுது, எதிர்பாராதவிதமாக 200 அடி பள்ளத்தில் தவறி விழுந்துள்ளது.

இதனையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், தீவிரமான மீட்பு பணியில் ஈடுபட்டு காயமடைந்தவர்களை Dhumakot மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், விபத்தில் 40 பேர் பலியாகியுள்ளதாகவும், ஏராளமானோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதகவும் தெரிவித்துள்ளார். மேலும் விபத்திற்கான காரணம் குறித்தும் தீவிரமான விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் அம்மாநில முதல்வர் விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு தன்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார். மேலும் இறந்தவர்களின் உறவினர்களிடம் இழப்பீடு தொகையாக ரூ.2 லட்சம் வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.

யாழில் ஆவா – தனுரொக் குழுவுக்கு இடையில் பாரிய மோதல்!!

யாழ்ப்பாணம் – ராமநாதன் வீதியில் ஆவா குழுவின் முன்னாள் உறுப்பினரின் வீட்டின் மீது பாரிய தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நேற்று இரவு இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வீட்டு உரிமையாளர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். தனுரொக் குழு உறுப்பினர்கள் சிலர் இந்த தாக்குதலை மேற்கொண்டிருக்கலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

முகத்தை மூடியிருந்த 4 பேர் வாள் மற்றும் ஆயுதங்களுடன் மோட்டார் சைக்கிள் இரண்டில் வருகைத்தந்துள்ளனர். அவ்வாறு வந்தவர்கள் வீட்டின் ஜன்னல் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளதுடன், வீட்டில் உள்ள பொருட்களுக்கு தீ வைத்து அழித்துள்ளனர்.

தாக்குதலுக்குள்ளான வீட்டு உரிமையாளரின் ஒரு மகன் ஆவா குழுவுடன் தொடர்புப்பட்டு செயற்படுவதனால் கைது செய்யப்பட்டு பிணையில் உள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மானிப்பாய் பிரதேசத்தில் இயங்கும் தனுரொக் குழு உறுப்பினரின் வீட்டிற்கு கடந்த 28ஆம் திகதி அதிகாலை பெட்ரோல் குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்தது. இந் நிலையில், ஆவா குழுவினர் அந்த தாக்குதல் மேற்கொண்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

எதிர்வரும் 4ஆம் திகதி நாட்டின் அனைத்து பாடசாலைகளும் மூடப்படக்கூடிய சாத்தியம்!!

எதிர்வரும் 4ஆம் திகதி நாட்டின் அனைத்து பாடசாலைகளும் மூடப்படக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றதாக தெரிவிக்கப்படுகிறது.

அதிபர்கள், ஆசிரியர்கள், கல்வியல் பீட விரிவுரையாளர்கள் மற்றும் கல்வி நிர்வாக சேவை அதிகாரிகள் எதிர்வரும் 4ஆம் திகதி பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளனர்.

இந்த பணிப்புறக்கணிப்பு மேற்கொள்ளப்பட்டால் பாடசாலை செயற்பாடுகள் ஸ்தம்பிதமடையும் என தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், அரசியல் பழிவாங்கல்களுக்கு உள்ளானதாக கூறி தகுதியற்ற 1000 பேருக்கு பதவி உயர்வு வழங்கப்படுவதனை எதிர்த்து இந்தப் போராட்டம் நடத்தப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், இந்த பதவி உயர்வுகளுக்கு அரச சேவை ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கட்டுநாயக்க விமான நிலையம் வந்த வெளிநாட்டவரின் உடலில் சிக்கிய மர்மம்!!

கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த வெளிநாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஒரு கோடி 13 லட்சம் ரூபா பெறுமதியான கோக்கேனை வயிற்றுக்குள் வைத்துக் கொண்டு, இலங்கை வந்த வெளிநாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

58 கொக்கேன் உருண்டைகளை விழுங்கியவாறு இலங்கை வந்த பிரேசில் நாட்டவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

கோக்கேன் உருண்டைகளை வெளியே எடுப்பதற்காக நீர்கொழும்பு வைத்தியர்கள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

பிரேசிலில் இருந்து டோஹாவுக்கு சென்று அங்கிருந்து கட்டார் விமான சேவைக்கு சொந்தமான விமானத்தில் நேற்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

இந்த நபர் தொடர்பில் கிடைக்கப் பெற்ற முறைப்பாடுகளுக்கமைய அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட வரை இன்று முதல் 7 நாட்களுக்கு தடுத்து வைத்து விசாரணை செய்ய, நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் அனுமதி பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

கிளிநொச்சியில் பிள்ளைகளைத் தேடி கதறி அழுது மயங்கி வீழ்ந்த தாய்!!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் கிளிநொச்சி மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இன்று 500வது நாளை எட்டியுள்ளது.

இந்நிலையில், வடக்கு, கிழக்கை சேர்ந்த 8 மாவட்டங்களின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஒன்று சேர்ந்து கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் இன்றைய தினம் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.

இதன்போது காணாமல் போன தனது பிள்ளையை தேடித்தருமாற கோரி கதறி அழுத தாய் ஒருவர் மயங்கி வீழ்ந்துள்ளார். இதனால் அந்த பகுதியில் சற்று பதற்ற நிலை ஏற்பட்டிருந்தது.

கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் 20ம் திகதி கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட இந்த போராட்டம் எவ்வித தீர்வும் இன்றி தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகிறமை குறிப்பிடத்தக்கது.