வவுனியா வர்த்தக சங்கத்தின் புதிய நிர்வாகம் இளம் தலைமுறையினர் கைகளில்!!

வவுனியா வர்த்தக சங்கத்தின் புதிய நிர்வாகம் பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் இன்று இடம்பெற்றுள்ளதுடன் இளம் சமூகத்தினர் தெரிவு செய்யப்பட்டு பதவிகளும் பொறுப்பேற்கப்பட்டுள்ளன.

கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த நகரான வவுனியா மாவட்டத்தை மேலும் சிறப்பான வாடிக்கையாளர் சேவை நகராக மாற்றும் திட்டத்துடன் இன்று (01.07.2018) காலை 10 மணியளவில் வவுனியா நகரசபை வீதியில் அமைந்துள்ள வாடி வீடு மண்டபத்தில் ஆரம்பமாகிய பொதுகூட்டம் பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இப் புதிய நிர்வாகம் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி சங்கத்தினுடைய புதிய நிர்வாகத்தின் (தலைவர்) சுஜன் சண்முகராஜா, (செயலாளர்) ஆறுமுகம் அம்பிகைபாலன், (பொருளாளர்) நடராசா சுந்தரதாசன் ஆகியோர் இந் நிர்வாக சபையில் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

எதிர்பார்த்தாவாறே இளம் தலைமுறையினரையும் புதிய நிர்வாகத்திற்குள் உள்வாங்கி வர்த்தகர் சங்கத்தின் நம்பகரமான செயற்பாட்டினை மேற்கொள்வதற்கு அத்திவாரம் இட்டுள்ளதாக பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட வர்த்தக பிரமுகர்கள் சிலர் கருத்துக்களை வெளியிட்டனர்.

இக் கூட்டத்தில் முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் செ.மயூரன், வவுனியா பிரதேச செயலாளர், வவுனியா நகரசபை தலைவர், உப தலைவர், உறுப்பினர்கள், வவுனியா மாவட்ட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை தலைவர், வவுனியா மாவட்ட முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கத்தின் தலைவர், வவுனியா தனியார் பேரூந்து சங்க தலைவர், வர்த்தகர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் கர்ப்பிணிப் பெண் மீது நிதி நிறுவனம் சார்ந்தவர் தாக்குதல் : பெண் வைத்தியசாலையில்!!

 

வவுனியா ஹொரவப்பொத்தானை வீதி இலுப்பையடி சந்திக்கு அருகே நேற்று (30.06.2018) நிதி நிறுவன ஊழியரொருவர் கர்ப்பிணிப் பெண் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளார். இதனையடுத்து கர்ப்பிணிப்பெண் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

வவுனியா மில் வீதியில் அமைந்துள்ள நிதி நிறுவனத்தில் நபரொருவர் வாகனத்திற்கு லீசிங் பெற்றுள்ளார். கடந்த மூன்று மாதங்களாக மாதாந்த லீசிங் பணத்தினை செலுத்தவில்லை. அதனையடுத்து வாகனத்தினை பறிமுதல் செய்வதற்கு அனுமதியினை பெற்று பறிமுதல் செய்வதற்கு நான்கு நபர்கள் சென்றுள்ளனர்.

குறித்த வாகனத்தின் உரிமையாளர் நேற்றையதினம் மாலை வவுனியா ஹொரவப்பொத்தானை வீதி இலுப்பையடி சந்திக்கு அருகே வீதியில் வாகனத்தினை தரித்து விட்டு வர்த்தக நிலையத்திற்கு பொருட்களை கொள்வனவு செய்ய சென்றுள்ளார். இதன் போது வாகனத்தினுள் அவரது மனைவியும் (7 மாத கர்ப்பிணி) , அவரது உறவினர்களும் (பெண்கள்) இருந்துள்ளனர்.

இதன் போது திடீரென நிதி நிறுவனத்தின் வாகனத்தினை பறிமுதல் செய்யும் ஊழியர் வாகனத்தில் சாரதியின் ஆசனத்தில் ஏறி அமர்ந்துள்ளார். திடீரென நபரோருவர் வாகனத்தில் ஏறியதினால் பதட்டமடைந்த வாகனத்தின் முன்பக்கத்தில் சாரதி ஆசனத்திற்கு அருகேயிருந்த வாகன உரிமையாரின் மனைவி (7 மாத கர்ப்பிணி) இனந்தெரியாத நபர்களின் அத்துமீறலால் வாகனத்தின் திறப்பினை எடுப்பதற்கு முயன்றுள்ளார்.

இதன் போது கர்ப்பிணிப்பெண் மீது நிதி நிறுவனத்தில் ஊழியர் தாக்குதல் மேற்கொண்டுள்ளார். தாக்குதலுக்கு உள்ளாகிய கர்ப்பிணி பெண் சிகிச்சைக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம் வவுனியா மாவட்ட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மகிந்த வில்வ ஆராட்சி பணிப்பின் பேரில் குறித்த நிதி நிறுவனத்தில் வாகனத்தினை பறிமுதல் செய்யும் ஊழியர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இவ் விடயம் தொடர்பாக வாகனத்தின் உரிமையாளர் கருத்து தெரிவிக்கையில், நான் வாகனத்தின் லீசிங்க்கு உரிய பணத்தினை காசோலையாக வழங்கினேன். பின்னர் காசோலையில் காசு என கூறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவ்விடத்தில் அவர்களது அலுவலகத்தின் பெயர் குறிப்பிட வேண்டுமேன குறிப்பிட்டதோடு குறித்த காசோலையை ஏற்றுக்கொள்ள காலம் கடந்துவிட்டது என தெரிவித்தே எனது வாகனத்தினை பறிமுதல் செய்துள்ளனர். இருப்பினும் காசோலை மாற்றம செய்யப்பட்டு நிதி நிறுவனத்தில் கையளிக்கப்பட்டுள்ளது.

காசோலை மற்றும் பணம் ஆகியவற்றை செலுத்தியதோடு வாகனத்தை நிதி நிறுவனத்தில் ஒப்படைத்துவிட்டு மீதமுள்ள பணத்தை செலுத்தி விட்டு வாகனத்தை மீளபபெறுவதாகவும் கூறியுள்ளார்.

அதற்கு நிதி நிறுவன முகாமையாளர் வாகனத்துக்கு எந்த சேதமும் வராது என உறுதி அளித்ததாகவும் தெரிவித்தார்.

இவ்விடயத்தினை விட எனது மனைவி 7மாத கர்ப்பிணி அவர் மீது நிதி நிறுவன ஊழியர் தாக்குதல் மேற்கொண்டுள்ளார். எனது மனைவிக்கு எதேனும் நடந்தால் யார் பொறுப்பு கூறுவார். எனவே இவ் விடயத்தில் எனது மனைவி மீது தாக்குதல் மேற்கொண்டமை தொடர்பாக பொலிஸார் நீதியான நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டுமேன தெரிவித்தார்.

மில் வீதியில் அமைந்துள்ள குறித்த நிதி நிறுவனத்தின் ஊழியர் மீது இவ்வாறான பல முறைப்பாடுகள் பொலிஸ் நிலையத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் மின்சார ஒழுக்கினால் வர்த்தக நிலையம் தீப்பற்றியது!!

வவுனியா ஹொரவப்பொத்தானை வீதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையம் இன்று (01.07.2018) காலை 10 மணியளவில் திடீரென தீப்பற்றியுள்ளது.

வர்த்தக நிலையத்தில் உள்ள குளிர்சாதனப்பெட்டியில் ஏற்பட்ட மின்சார ஒழுக்கு காரணமாக தீப்பற்றியுள்ளது. அதனையடுத்து வவுனியா நகரசபையின் தீயணைப்பு படையினருக்கு வர்த்தக நிலையத்தின் உரிமையாளர்கள் தொலைபேசி மூலம் தெரியப்படுத்தியுள்ளனர்.

சிறிதாக பரவிய தீயிணை அயலவர்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். சம்பவ இடத்திற்கு அதிவிரைவாக தீயணைப்பு படையினர் விரைந்த போதிலும் அதற்கு முன்னரே தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

குளிர்சாதப்பெட்டியின் வயரில் ஏற்பட்ட மின் ஒழுக்கே இத் தீ விபத்துக்கு காரணமெனவும் எனினும் வர்த்தக நிலையத்திற்கு எவ்வித சேதங்களும் ஏற்படவில்லை என வர்த்தக நிலையத்தின் உரிமையாளர் தெரிவித்தார்.

மகளின் பிறந்தநாளை மரண நாளாக மாற்றிய தந்தை : சந்தேகத்தால் கோடாறியால் அடித்துக்கொலை!!

ஆந்திராவில் பிறந்தநாள் கொண்டாடிவிட்டு வீடு திரும்பிய மகளை கோடாறியால் அடித்து கொலை செய்து தந்தையை பொலிசார் கைது செய்துள்ளனர்.

Chandarlapadu கிராமத்தை சேர்ந்த சந்திரிகா என்பவர் கல்லூரியில் பயின்று வருகிறார். இவர் நேற்றுதான் தனது 18 வது பிறந்தநாளை நண்பர்களுடன் சேர்ந்து கொண்டாடியுள்ளார். பிறந்தநாளை கொண்டாடிவிட்டு வீடு திரும்பிய சந்திரிகா, தனது செல்போனில் ஆண் நண்பர் ஒருவருடன் பேசியுள்ளார்.

மேலும், அவரது செல்போனிலும் ஆண் நபர் ஒருவரின் புகைப்படம் இருந்துள்ளது. இதனைப்பார்த்த தந்தை, எதனையும் தனது மகளிடம் விசாரிக்காமல் தனது மகள் வேறு ஒரு ஆணுடன தொடர்பில் இருக்கிறார் என சந்தேகம் கொண்டு கோடாறியை எடுத்து மகளின் தலையில் அடித்து கொலை செய்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக தந்தையை பொலிசார் கைது செய்துள்ளனர்.

5 மாத குழந்தையின் கழுத்தறுப்பு : ரத்த வெள்ளத்தில் கிடந்த கொடூர சம்பவம்!!

திருவள்ளூரில் ஐந்து மாத குழந்தையின் கழுத்தையும் காதையும் அறுத்து அவர்கள் வீடு வாசலில் எறிந்த மர்ம நபரை பொலிசார் தேடி வருகின்றனர்.

திருவள்ளூரில் உள்ள பாண்டூர் எனும் பகுதியில் மேற்குறிப்பிட்ட கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. அங்குள்ள ஒரு வீட்டில் நுழைந்த மர்ம ஆசாமி ஒருவன் அங்கிருந்த ஐந்து மாத குழந்தையை தூக்கி சென்றிருக்கிறான்.

அதன்பின் அக்குழந்தையின் கழுத்தையும் காதையும் அறுத்த அந்த நபர், குழந்தையை அதே வீட்டின் வாசலில் போட்டு விட்டு போயிருக்கிறான்.

குழந்தையை தேடி கொண்டிருந்த குடும்பத்தார் உயிருக்கு ஆபத்தான நிலையில் வாசலில் கிடந்த குழந்தையை பார்த்து அலறியிருக்கின்றனர்,

அவசரமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட குழந்தைக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த கொடூர செயலை செய்தவன் யார் அவன் நோக்கம் என்ன என்பதை காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

எச்சிலை நக்கு : காதல் திருமணம் செய்த இளைஞரின் தந்தைக்கு நேர்ந்த கொடூரம்!!

இந்தியாவில் இளைஞர் உயர் சாதி பெண்ணை மணந்ததால் பெண் வீட்டார் இளைஞரின் தந்தையிடம் செய்த மோசமான செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தின் புலந்த்ஷஹரை சேர்ந்தவர் ஸ்ரீ கிருஷ்ணா. இவரின் மகன் சிவக்குமார் (21), ரசியா (18) என்ற பெண்ணை காதலித்த நிலையில் அவருடன் சில தினங்களுக்கு முன்னர் ஓடி போயுள்ளார்.

இது குறித்து ரசியாவின் குடும்பத்தார் பொலிசில் புகார் அளித்த நிலையில் பொலிசார் இருவரையும் கண்டுப்பிடித்தனர். ஆனால் வாழ்ந்தால் சிவக்குமாருடன் தான் வாழ்வேன் என ரசியா உறுதியாக இருந்ததால் நீதிமன்றம் மூலம் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

ஆனால் சிவக்குமார் தங்களை விட தாழ்ந்த ஜாதி என்பதால் இத்திருமணத்தை ரசியா குடும்பத்தினரால் ஏற்று கொள்ளமுடியவில்லை. இதையடுத்து இருவரையும் பிரிக்க அவர்கள் முயன்றுள்ளனர்.

இதையடுத்து, இனியும் சிவக்குமார் ஊரில் இருந்தால் அவர் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பதை உணர்ந்த ஸ்ரீ கிருஷ்ணா அவரை ஊரை விட்டு வேறு இடத்துக்கு அனுப்பியுள்ளார்.

இதனால் கிருஷ்ணா மீது ஆத்திரத்தில் இருந்த ரசியா குடும்பத்தார் அவரை ஊர் எல்லைக்கு அழைத்து வந்துள்ளனர். அங்கு நூற்றுக்கணக்கானவர்கள் இருந்த நிலையில் கிருஷ்ணாவை தரையில் அடித்து உட்காரவைத்துள்ளனர்.

பின்னர் அவர் எச்சிலை கீழே துப்ப வைத்து அவரையே அதை நக்க வைத்து கொடுமைப்படுத்தியுள்ளனர். இதையடுத்து ஊரை விட்டே கிருஷ்ணா தனது குடும்பத்துடன் போக ரசியா குடும்பத்தார் மிரட்டி அடித்துள்ளனர்.

சம்பவம் குறித்து தகவலறிந்த பொலிசார் கிருஷ்ணாவை மீட்டனர். இது தொடர்பாக ரசியா தந்தை உட்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளதுடன் இருவரை பொலிசார் கைது செய்துள்ளார்கள்.

கேரளாவை உலுக்கிய ஆணவப் படுகொலை : மூளையாக இருந்தவர் சிக்கினார்!!

கேரளாவில் உயர் சாதி பெண்ணை காதலித்து திருமணம் செய்ததற்காக கெவின் பி ஜோசப் என்ற தலித் கிறிஸ்துவர் கடந்த மே மாதம் 27ம் திகதி ஆணவப் படுகொலை செய்யப்பட்டார்.

கோட்டயம் அருகே நாட்டாசேரி நீலமங்கலம் பகுதியைச் சோ்ந்த தலித் கிறிஸ்தவ இளைஞரான கெவின் ஜோசப். இவரும், கொல்லம் அருகே தென்மலை பகுதியைச் சோ்ந்த நீனுவும் கடந்த மூன்று ஆண்டுகளுக்காக காதலித்து வந்தனர்.

இவர்களது காதலுக்கு நீனுவின் குடும்பத்தினர் சம்மதம் தெரிவிக்கவில்லை, பணம் தருகிறோம் என பேரம் பேசியும் சாதகமாக அமையவில்லை.

பல்வேறு மிரட்டல்களுக்கு மத்தியில் நீனுவும், கெவினும் கடந்த மே மாதம் 24ம் திகதி பதிவு திருமணம் செய்து கொண்டனர். இதனை தொடர்ந்து நீனுவை, பெண்கள் விடுதியில் கெவின் தங்கவைத்துள்ளார், அவரும் அனீஷ் என்ற உறவினர் வீட்டில் தங்கியுள்ளார்.

இந்நிலையில் அதேமாதம் 27ம் திகதி அனீஷின் வீட்டுக்கு வந்த நீனுவின் அண்ணன் மற்றும் அவரது நண்பர்கள் அனீஷ் மற்றும் கெவினை அடித்து காரில் தூக்கிச்சென்றனர்.

அனீஷை பாதி வழியில் இறக்கிவிடப்பட்ட நிலையில், கெவின் நிலை தெரியாமல் போனது.

இதனையடுத்து நீனு, காவல்நிலையத்துக்கு புகார் அளிக்க சென்றும் அலட்சியம் காட்சியுள்ளனர், இந்நிலையில் மறுநாள் மிக கொடூரமாக கொல்லப்பட்ட நிலையில், கால்வாயில் பிணமாக மீட்கப்பட்டார்.

கேரளா முழுவதும் பரபரப்பை கிளப்பிய இந்த வழக்கில், நீனுவின் உறவினர்களுக்கு சாதகமாக இருந்த பொலிஸ் உயரதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

இந்நிலையில் இச்சம்பவத்துக்கு மூளை காரணமாக இருந்தது நீனுவின் தாய் ரெஹ்னா தான் என அனீஷ் குற்றம்சாட்டியுள்ளார்.

கெவின் கடத்தப்படுவதற்கு ஒருநாள் முன்பாக ஆலப்புழா வந்த ரெஹ்னா, கெவினை மிரட்டியதாகவும், மற்றொரு உறவினர் வந்து சமாதானப்படுத்தி அழைத்து சென்றதாகவும் கூறியுள்ளார்.

இதை பொலிசிடம் தெரிவித்தும் ரெஹ்னாவை குற்றவாளிகள் பட்டியலில் சேர்க்க பொலிசார் மறுத்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் விசாரணையில் நீனுவின் குடும்பத்துக்கு பொலிஸ் அதிகாரிகள் துணை போவதால், சிபிஐ விசாரணை நடத்தவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

மனைவி செருப்பால் அடித்ததால் கணவன் எடுத்த அதிர்ச்சி முடிவு!!

இந்தியாவில் குடும்பத்தார் முன்னிலையில் மனைவி செருப்பால் அடித்ததால் அவமானமடைந்த கணவர் தற்கொலை செய்து கொண்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் கிஷோர் (22). இவர் மனைவி ஷாமலா. கணவன் மனைவி இடையில் கடந்த வாரம் குடும்ப சண்டை ஏற்பட்ட நிலையில் இருவரும் காவல் நிலையத்துக்கு சென்று ஒருவர் மீது ஒருவர் புகார் அளித்தனர்.

இதையடுத்து இருவரையும் சமாதானம் செய்யும் நோக்கில் பொலிசார் அவர்களுக்கு கவுன்சிலிங் கொடுத்தார்கள்.

இந்த சமயத்தில் கிஷோரின் குடும்பத்தினரும் உடனிருந்தனர், அப்போது திடீரென கோபமடைந்த ஷாமலா கணவர் கிஷோரை அவர் குடும்பத்தார் முன்னிலையில் காவல் நிலையத்திலேயே செருப்பால் அடித்துள்ளார்.

இதனால் அவமானமடைந்த கிஷோர் உடனடியாக தனது வீட்டுக்கு வந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதனிடையில் பொலிசாரின் தவறான நடவடிக்கை தான் கிஷோர் தற்கொலைக்கு காரணம் என கூறி அவரின் உறவினர்கள் போராட்டம் நடத்தினார்கள்.

இதையடுத்து பொலிஸ் உயர் அதிகாரிகள் அவர்களை சமாதானப்படுத்தியதோடு சம்பவம் குறித்து விசாரித்து வருகிறார்கள்.

இலங்கையில் பேஸ்புக் நட்பால் கோடீஸ்வர வர்த்தகரின் மகளுக்கு நேர்ந்த பரிதாபம்!!

நீர்கொழும்பு பிரதேசத்தில் கோடீஸ்வர வர்த்தகர் ஒருவரின் மகளை கடத்திச் சென்று ஒரு கோடி ரூபாய் கப்பம் கோரியதாக கூறப்படும் விளையாட்டு ஆலோசகர் ஒருவரை நீர்கொழும்பு குற்ற விசாரணைப் பிரிவினர் இன்று கைதுசெய்துள்ளனர்.

கடத்திச் சென்றமை, கப்பம் கோரியமை மற்றும் பாலியல் துஷ்பிரயோகம் செய்தமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் நீர்கொழும்பை சேர்ந்த 25 வயதான நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

திருமணம் செய்யும் வயது பூர்த்தியாகாத வர்த்தகரின் மகளுக்கும் சந்தேக நபருக்கும் இடையில் முகநூல் ஊடாக காதல் தொடர்பு இருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மனைவி வெளிநாட்டில் : மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவரின் மோசமான செயற்பாடு!!

திருகோணமலை சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 13 வயதுடைய சிறுமியொருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குடும்பஸ்தர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த சந்தேகநபரை நேற்று மாலை கைது செய்துள்ளதாக சூரியபுர பொலிஸார் தெரிவிக்கின்றனர். 9ம் கட்டை, சூரியபுர பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் திருமணம் முடித்து மூன்று பிள்ளைகள் உள்ள நிலையில் மனைவி வெளிநாடு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், அயல் வீட்டிலுள்ள பதின் மூன்று வயதுடைய சிறுமியொருவரை சந்தேகநபர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் குறித்து சிறுமி பெற்றோரிடம் தெரிவித்ததையடுத்து, பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டுக்கமைய சந்தேகநபரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சிறுமி வைத்திய பரிசோதனைக்காக கந்தளாய் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சந்தேகநபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்து பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

பேஸ்புக்கினால் சிக்கிய திருடன்!!

ஹத்தரிலியத்த நகரத்தில் உள்ள வர்த்தக நிலையத்தில் இளைஞர் ஒருவருக்கு சொந்தமான 15 ஆயிரம் ரூபாய் பெறுமதியான கண்ணாடி ஒன்றை திருடிய மாணவன் பேஸ்புக் பதிவினால் சிக்கியுள்ளார்.

அந்த கண்ணாடியை திருடிய மாணவன் அதனை அணிந்து புகைப்படம் எடுத்துள்ளார். பின்னர் அதனை பேஸ்புக்கில் பதிவிட்டமையினால் கையும் களவுமாக சிக்கியுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த இளைஞரின் பெறுமதியான கண்ணாடி கடந்த வாரம் முச்சக்கர வண்டியில் வைத்து விட்டு சென்ற நிலையில் யாரோ ஒருவரால் திருடப்பட்டுள்ளது.

எனினும் யாரால் திருடப்பட்டது என தெரியாமல் இருந்த நிலையில், காணாமல் போன கண்ணாடிக்கு சமமான கண்ணாடி அணிந்து பாடசாலை மாணவன் ஒருவர் புகைப்படம் எடுத்து பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.

பின்னர் அந்த மாணவனை தேடி சோதனையிட்ட போது தனது கண்ணாடி என இளைஞன் கண்டுபிடித்துள்ளார்.

மாணவனிடம் விசாரித்த போது குற்றச்சாட்டுக்களை அவர் ஏற்றுக்கொண்டுள்ளார். பின்னர் கண்ணாடியை இளைஞனிடம் மாணவன் ஒப்படைத்துள்ளார்.

யாழில் சிறுமி கொலை : 17 வயது இளைஞர்கள் இருவர் கைது!!

யாழ்ப்பாணம் – சுழிபுரத்தில் கழுத்து நெரிக்கப்பட்டு சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் சிறுமியின் கொலையுடன் நேரடியாக தொடர்புடைய 17 வயதான இளைஞர்கள் என வடக்கு பிராந்தியத்திற்கான சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.

கடந்த 27ஆம் திகதி 6 வயதான மாணவியின் கொலை தொடர்பில் கைது செய்யப்பபட்ட 22 வயதுடைய இளைஞர் சிறுமியின் உறவினர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 25ஆம் திகதியின் சிறுமியின் சடலம் கிணற்றில் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையில் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என தெரியவந்துள்ளது.

இந்நிலையல் பொலிஸார் தொடர்ந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கைக்கு கிடைத்த பேரதிஷ்டம் : கொட்டிக்கிடக்கும் பொக்கிஷங்கள்!!

இந்திய பெருங்கடல் எல்லை ஊடாக மேலும் 16 லட்ச சதுர கிலோ மீற்றர் கடல் பிரதேசம் விரைவில் இலங்கைக்கு கிடைக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதற்காக கடல் ஆய்வு தொடர்பான விஞ்ஞானிகள் மற்றும் வல்லுநர்கள் கலந்துரையாடல் மேற்கொண்டு வருவதாக குறிப்பிடப்படுகின்றது.

ஐக்கிய நாடுகளின் கடல் சட்டம் தொடர்பான சர்வதேச மாநாட்டிற்கமைய இலங்கைக்கு சட்டரீதியான உரிமை கிடைக்கவுள்ளது. இந்தக் கடல் பிரதேசம் இலங்கை போன்று 23 மடங்கு பெரியதாகும்.

அதற்கமைய இந்த பாரிய அளவு கடல் எல்லையில் உள்ள பெற்றோலியம் எரிவாயு மற்றும் மதிப்புமிக்க எரிவாயு வகைகளை பயன்படுத்தல், அகழ்வு செய்தல் மற்றும் விற்பனை செய்தல் ஆகிய அனைத்து உரிமையும் இலங்கைக்கு கிடைக்கும் என குறிப்பிடப்படுகின்றது.

விசேடமாக கடல் மட்டத்தின் உரிமை இலங்கைக்கு கிடைக்கும் எனவும் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் இந்த பாரிய கடல் எல்லையில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான சந்தர்ப்பமும் இலங்கைக்கு கிடைக்கும்.

இந்த மாநாட்டிற்கமைய இலங்கைக்கு புதிதாக கிடைக்கவுள்ள இந்த கடல் உரிமை தொடர்பில் தற்போதும் அதிகாரிகள் மற்றும் நிபுணர்கள் கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருகின்றனர்.

வாகனத்தின் வேகத்தை குறைக்க பொலிஸாரின் வித்தியாசமான கண்டுபிடிப்பு!!

போக்குவரத்து சட்டங்களை மீறி வேகமாக பயணிக்கும் வாகனங்களின் வேகத்தை குறைக்க பொலிஸார் புதிய கண்டுபிடிப்பு ஒன்றை மேற்கொண்டுள்ளனர். முந்தலம பொலிஸாரினால் விசேட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முந்தலம பொலிஸ் பிரிவிற்கு சொந்தமான வீதியில் பொலிஸ் அதிகாரிகளுக்கு சமமான உருவங்கள் பொருத்தப்பட்டுள்ளன.

புத்தளம் பொலிஸ் பிரிவு பொறுப்பதிகாரியின் உத்தரவிற்கமைய புத்தளம் – கொழும்பு பிரதான வீதியின் கிரியன்கல்லியில் இருந்து கரிக்கட்டி வரையான வீதியில் இவ்வாறு பொலிஸ் அதிகாரிகளின் உருவ பதாகை பொருத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனை பார்த்தால் பொலிஸ் அதிகாரிகள் நிற்பது போன்று காட்சியளிப்பதனால் வாகனங்களின் வேகம் குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் வயோதிபர் படுகாயம்!!

வவுனியா புளியங்குளம் பகுதியில் இன்று(30.06) பிற்பகல் இடம்பெற்ற விபத்து ஒன்றில் வயோதிபர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வவனியா பொது வைத்தியசாலையின் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

இன்று பிற்பகல் 12 மணியளவில் புளியங்குளம் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு முன்பாக மோட்டார் சைக்கில் ஒன்றில் கடைக்குச் சென்ற வயோதிபர் ஒருவரை பின்னால் வந்த கார் மோதியுள்ளது.

இதில் படுகாயமடைந்த வயோதிபர் உடனடியாக வவுனியா பொது வைத்தியசாலையில் விபத்துப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
புளியங்குளம் பகுதியைச் சேர்ந்த மைக்கல் டேவிட் என்ற 68 வயது வயோதிபரே இவ்வாறு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவரது இரு கால்களுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதுடன் சிகிச்சை பெற்று வருகின்றார். மேலதிக விசாரணைகளை புளியங்குளம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவில் 5 போத்தல் சட்டவிரோத கசிப்புடன் ஒருவர் கைது!!

வவுனியா ஓமந்தை பொலிஸ் பிரிவில் நேற்று (29.06) சட்டவிரோத கசிப்பு 5 போத்தல்களை தனது உடமையில் வைத்திருந்த குடும்பஸ்தர் ஒருவரை வன்னிப்பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபரின் தலைமையின் கீழ் செயற்படும் போதை ஒழிப்பு பிரிவினர் கைது செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், நேற்று பிற்பகல் ஓமந்தை பொலிஸ் பிரிவின் பாலமோட்டை, குஞ்சுக்குளம் பகுதியில் சட்விரோதமான கசிப்பு நடவடிக்கை இடம்பெற்று வருவதாக வன்னிப்பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபரின் தலைமையில் கீழ் செயற்படும் போதை ஒழிப்புப்பிரிவினருக்கு கிடைத்த தகவல் அடிப்படையில்,

அங்கு சென்று சோதனை நடவடிக்கை மேற்கொண்டபோது அப்பகுதியைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான 38வயதுடைய நபர் ஒருவர் தனது உடமையில் 5 போத்தல் சட்டவிரோத கசிப்பு வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நபரை மேலதிக விசாரணைகளுக்காக ஓமந்தை பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளின் பின்னர் இன்று நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்துள்ளார்.