வவுனியாவில் நேற்று(29.06) மாலை 4 மணியளவில் தோணிக்கல் பகுதியில் கடை ஒன்றிற்கு கைக்குழந்தையுடன் சென்ற குடும்பப் பெண் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை மோட்டார் சைக்கிலில் சென்ற இருவர் அறுத்துச் சென்றுவிட்டதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
நேற்று மாலை 4 மணியளவில் லக்சபாண வீதி, தோணிக்கல் பகுதியில் வீதியால் நடந்து கடைக்கு கைக்குழந்தையுடன் சென்ற குடும்பப் பெண் அணிந்திருந்த 2 பவுண் தங்கச் சங்கிலியை மோட்டார் சைக்கிலில் சென்ற இனந்தெரியாதவர்கள் அறுத்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இதையடுத்து அப்பகுதியில் நின்றவர்களின் உதவியுடன் திருடர்களைப்பிடிப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சி பலனளிக்கவில்லை.
இதையடுத்து தனது சங்கிலியை இனந்தெரியாத மோட்டார் சைக்கிலில் சென்றவர்களினால் திருடப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மலேசியாவை சேர்ந்த இஸ்லாமிய மத குரு ஒருவர் 11 வயது சிறுமியை மூன்றாம் தாரமாக திருமணம் செய்து கொண்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்த புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வெளியான நிலையிலேயே இச்சம்பவம் வெளியுலகுக்கு தெரியவந்துள்ளது.
40 வயதான இஸ்லாமிய மதகுரு ஒருவருக்கு ஏற்கனவே இரண்டு முறை திருமணமாகியுள்ளது. இந்நிலையில் மூன்றாவதாக 11 வயது சிறுமி ஒருவரை அவர் திருமணம் செய்து கொண்டுள்ளார், இத்திருமணத்துக்கு சிறுமியின் தாயும் உடந்தையாக இருந்துள்ளார்.
மலேசியாவில் திருமணம் செய்தால் தன்னுடைய இரு மனைவிகளுக்கும் விடயம் தெரிந்துவிடும் என எண்ணிய அந்த நபர், சிறுமியை தாய்லாந்துக்கு அழைத்து சென்று திருமணம் செய்து கொண்டுள்ளார்.
மத குருவின் இச்செயலுக்கு மலேசிய மக்கள் பலர் சமூகவலைதளங்களில் கடும் கண்டங்களை தெரிவித்துள்ளனர்.
இது குறித்து தற்போது பொலிசில் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில் மூன்று அதிகாரிகள் தங்கள் விசாரணையை தொடங்கவுள்ளனர்.
முல்லைத்தீவு காட்டு பகுதியில் துப்பாக்கி சூட்டிற்கு இலக்காகி உயிரிழந்த இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
முள்ளியவளை, கற்பூரவெளி காட்டுப்பகுதியில் சடலம் ஒன்று இருப்பதாக பொலிஸ் நிலையத்திற்கு தகவல் கிடைத்ததை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு பொலிஸார் சென்றுள்ளனர்.
சம்பவத்தில் முள்ளியவளை 1ஆம் வட்டாரத்தினை சேர்ந்த 22வயதுடைய மனோகரன் கஜிந்தன் என்ற இளைஞனே உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
சடலத்தின் தலைப்பகுதியில் துப்பாக்கி சூட்டுகாயங்கள் காணப்பட்டமையினால் இந்த மரணம் தொடர்பில் சந்தேகம் எழுந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்ற நிலையில் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றின் பதில் நீதிபதி ரி.பரஞ்சோதி சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்.
பிரித்தானியாவில் மர்ம உறுப்பு இல்லாமல் பிறந்த மனிதனுக்கு அறுவை சிகிச்சையின் மூலம் “பயோனிக் உறுப்பு” பொருத்தி மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
பிரித்தானியாவின் Greater Manchester பகுதியை சேர்ந்தவர் Andrew Wardle (44). மர்ம உறுப்பு இல்லாமல் பிறந்த Andrew-விற்கு சிறுநீர்ப்பை, கருப்பைக்கு வெளியே உருவாகி இருந்தது.
மேயோ கிளினிக் அறிக்கையின்படி உலகில் 2 கோடி மக்களில் ஒருவருக்கு மட்டுமே ஏற்படக்கூடிய, இத்தகைய பிரச்சனையால் மனமுடைந்த Andrew, மனசோர்வில் தற்கொலை செய்துகொள்ளும் அளவிற்கு கூட தள்ளப்பட்டுள்ளார்.
இறுதி முயற்சியாக தன்னுடைய வாழ்க்கையினை மாற்றி எழுத முடிவு செய்த Andrew, கடந்த 2012-ம் ஆண்டுலண்டனில் UCLH ல் உள்ள சிறுநீரக சிறப்பு நிபுணர் ஒருவரை சந்தித்து, தன்னுடைய குறைகளை பற்றி கூறியுள்ளார்.
அங்கு மருத்துவர்களுடன் கலந்தாலோசித்த சிறுநீரக நிபுணர், நிச்சயமாக சிறுநீர்ப்பை மற்றும் மர்ம உறுப்பை உருவாக்க முடியும் என Andrew-விற்கு உறுதியளித்தார். அதன்படி கடந்த வெள்ளிக்கிழமையன்று, Andrew-வின் இடது கையில் இருந்து, தோல் மற்றும் தசைகள் எடுக்கப்பட்டன. அவரது காலில் இருந்து ஒரு நரம்பு எடுத்து மர்ம உறுப்பு வெற்றிகரமாக உருவாக்கி பொறுத்தபட்டது.
இந்திய மதிப்பில் ரூ.4.48கோடி செலவில் உருவாக்கப்பட்ட பயோனிக் உறுப்பு அறுவை சிகிச்சையே உலகின் மிகவும் விலை உயர்ந்த அறுவை சிகிச்சை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து Andrew கூறுகையில், மற்றவர்களுக்கு இது ஒரு சாதாரண ஒரு விஷயம் தான். ஆனால் என்னைப் பொறுத்தவ்ரை இது ஒரு சாதனை. நான் தற்போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன். விரைவில் எனது காதலி Fedra Fabian உடன் வாழ்க்கையை துவங்குவேன் எனவும் அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
உலகக்கிண்ண கால்பந்தாட்ட போட்டியில் பிரேசிலின் வெற்றியை கொண்டாடிய பெண் பரிதாபமாக பலியாகியுள்ள சம்பவம் அவரின் நண்பர்களுக்கு மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யாவின் பல்வேறு பகுதிகளில் உலகக்கிண்ண கால்பந்தாட்ட போட்டி நடைபெற்று வருகிறது. இதில் கடந்த 27ம் திகதி செரீபியா-பிரேசில் அணிகள் மோதின. இப்போட்டியில் பிரேசில் அணி 2-0 என்ற கணக்கில் வென்று அசத்தியது.
இந்நிலையில் இப்போட்டியை பிரேசிலின் Tamra Maioch என்ற 30 வயது இளம் பெண் தன் நண்பர்களுடன் Sao Paulo மாகாணத்தின் Itatiba பகுதியில் உள்ள வீட்டில் பார்த்து ரசித்துள்ளார்.
பிரேசில் அணிக்கு இப்போட்டி ஒரு நாக் அவுட் சுற்று போன்று என்பதால், போட்டியின் ஒவ்வொரு நிமிடங்களையும் தவறாமல் Tamra Maioch பார்த்து வந்துள்ளார்.
அப்போது அவர் ஒரு கையில் மொபைல் போன், ஒரு கையில் மது ஊற்றிய நிலையில் கண்ணாடி கிளாஸ்சை வைத்துக் கொண்டு பார்த்ததாக கூறப்படுகிறது.
தொடர்ந்து விளையாடிய பிரேசில் அணி வெற்றி பெற்றதால், வெற்றியை தன் நண்பர்களுடன் Tamra Maioch கொண்டாடும் போது, நிலைதடுமாறியுள்ளார்.
இதனால் அவர் வைத்திருந்த கண்ண்டாடி கிளாஸ் கீழே விழ, உடனே இவர் அங்கிருக்கும் காபி டேபிளை பிடித்து நிற்க முயன்றுள்ளார்.
ஆனால் எதிர்பார்தவிதமாக கிழே விழுந்த கண்ணாடி கிளாஸ் மீது விழுந்துள்ளார். கீழே விழுந்த கண்ணாடி கிழாஸ் உடைந்திருந்ததால், அந்த கண்ணாடி துகள் அவரின் கழுத்தை பதம் பார்த்துள்ளது.
இதனால் உடனடியாக அதிகப்படியான இரத்தம் வெளியேறியுள்ளது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சக நண்பர்கள் அருகிலிருந்த துணியை எடுத்து இரத்ததை நிறுத்துவதற்கு முயன்றுள்ளனர்.
ஆனால் தொடர்ந்து இரத்தம் வெளியேறியதால், அவர்கள் உடனடியாக ஆம்புலன்சிற்கு தெரிவித்துள்ளனர். வீட்டிற்கு வந்து பார்த்த போது அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இந்த சம்பவத்தை அறிந்து இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள பொலிசார், அவரின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழகத்தில் கடனை கேட்டு வங்கி நெருக்கடி கொடுத்ததால் தாய் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட கயிற்றிலே மகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பொன்னியம்மன்மேட்டைச் சேர்ந்த தம்பதி பிருத்விராஜ்-இந்திராணி. இவர்களுக்கு தியாகராஜன் என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
ஐ.டி கம்பெனியில் வேலை பார்த்து வரும் பிருத்விராஜ் தனியார் வங்கியின் கிரெடிட் கார்ட் மூலம் 2 கோடி ரூபாய் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன் பிருத்விராஜ் காலமாகிவிட்டதால், அவர் வாங்கிய கடனை திருப்பி செலுத்தும் படி தனியார் வங்கி மகன் தியாகராஜன் மற்றும் மனைவி இந்திராராணிக்கு நெருக்கடி கொடுத்துள்ளது.
தொடர்ந்து சமாளித்து வந்த நிலையில் திடீரென்று இந்திரராணி வீட்டில் தனியாக இருந்த போது, மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
பணி முடிந்து வீட்டிற்கு திரும்பிய தியாகராஜ் அம்மா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதைப் பார்த்து, அம்மாவை இறக்கி கட்டிலில் வைத்துவிட்டு, அதே கயிற்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இரண்டு தினங்களாக இருவருமே போன் எடுக்காத காரணத்தினால் சந்தேகமடைந்த பிருத்விராஜின் மகள் வீட்டிற்கு வந்து பார்த்த போது இருவரும் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்து பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார் இரண்டு பேரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தாயும், மகனும் ஒரே கயிற்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரான்சில் தேவாலயத்தின் மீது ஒருவர் திடீரென்று ஏறியதால், அந்த நபரை பொலிசார் மீட்டுள்ளனர்.
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள Saint-Eustache தேவலாயத்தின் மீது ஏறிய நபர், அங்கு சிக்கியிருந்த காத்தாடியை எடுப்பதற்காக கூரையின் மீது ஏறியுள்ளார்.
இந்த தகவல் உடனடியாக பொலிசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தெரிவிக்கப்பட்டதால், அப்பகுதியில் பொலிசார் குவிக்கப்பட்டனர்.
இதையடுத்து தேவலாயத்தின் மீது மேலே ஏறிய நபரை மீட்ட பொலிசார் அவரிடம் விசாரணை மேற்கொண்ட போது, தேவாலயத்தின் கூரையில் தன்னுடைய காத்தாடி சிக்கிக் கொண்டதாகவும், அதன் காரணமாகவே ஏறியதாகவும் கூறியுள்ளார்.
மேலும் இதே நபர் தான் கடந்த 2015-ஆம் ஆண்டு ஒருதடவை இதே தேவாலயத்தில் ஏறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் ரத்தம் வடியும் முகத்துடன் நபர் ஒருவர் காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை மண்ணடியைச் சேர்ந்தவர் சையது இப்ராஹிம். இவர் கடந்த மாதம் தன்னுடைய மகளுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்பதற்காக லண்டனில் பணிபுரியும் முகமது அஸ்லாம் என்பவருடன் நிச்சயதார்த்தம் செய்துள்ளார்.
அதன் பின் முகமது அஸ்லாம் லண்டனில் பணி புரியவில்லை என்பதை அறிந்தவுடன், திருமணத்தை நிறுத்தியுள்ளார். ஆனால் இது குறித்து அஸ்லாம் அவரிடம் தகராறில் ஈடுபட்டதால், இப்ராஹிம் உடனடியாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதையடுத்து பொலிசார் முகமது அஸ்லாமை கைது செய்து, சிறையில் அடைத்துள்ளனர்.
இந்த தகவலை அறிந்த அஸ்லாமின் உறவினர்கள் மண்ணடியில் இருக்கும் சையது இப்ராஹிம்மை கொடூரமாக தாக்கியுள்ளனர்.
இதனால் அவர் ரத்தம் வடிந்த முகத்துடன் காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வந்ததால் பரபரப்பு நிலவியது.
இரத்தம் வடிந்த முகத்துடன் வந்ததால், பொலிசார் முதலில் அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு, தாக்குதல் நடத்தப்பட்டது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
சமையல் எரிவாயுவின் விலை நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், 138 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.
இதற்கமைவாக 12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயுவின் விலை நேற்று (29) நள்ளிரவுடன் 138 ரூபாவால் குறைக்கப்பட உள்ளதாக நுகர்வோர் அதிகார தெரிவித்துள்ளது.
இந்நிலையில், 12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயு 1676.00 ரூபாவிலிருந்து 1,538 ரூபாவாக குறைக்கப்படுவதாக சபை தெரிவித்துள்ளது
குறிப்பிட்ட விலையிலும் பார்க்க கூடுதலான விலைக்கு எரிவாயுவை விற்பனை செய்வோருக்கெதிராக சட்ட நடவடிககை மேற்கொள்ளப்படும் என்று நுகர்வோர் அதிகார சபைத் தலைவர் தெரிவித்துள்ளார்
மட்டக்களப்பு – வாகரை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, மாங்கேணி பாம் கொலனி பகுதியில், 12 வயதுடைய சிறுமி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.
கடந்த 12ம் திகதி இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில், சம்பவம் தொடர்பில் 14 மற்றும் 15 வயதுடைய சிறுவர்கள் இருவரை நேற்று கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கடந்த 12ம் திகதி ஆடு மேய்க்கச் சென்ற, 12 வயது சிறுமியை குறித்த பகுதியை சேர்ந்த இரண்டு சிறுவர்கள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளனர். எனினும், பாதிக்கப்பட்ட சிறுமி பயம் காரணமாக இதனை வெளியில் தெரிவிக்காமல் இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில், தனக்கு ஏற்பட்ட விபரீத நிலை தொடர்பாக நேற்று தெரிவித்ததையடுத்து, உறவினர்கள் உடனடியாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
இதனையடுத்து பொலிஸார் சந்தேகத்தின் பேரில் 14 மற்றும் 15 வயதுடைய இரண்டு சிறுவர்களை கைது செய்துள்ளதுடன், பாதிக்கப்பட்ட சிறுமியை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் பதவி விலக வேண்டும் என வடமாகாண சபை எதிர்க்கட்சி தலைவர் தவராசா கோரிக்கை விடுத்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு மாகாண அமைச்சராகப் பதவி வகித்த பா.டெனீஸ்வரனை, முதல்வர் விக்னேஸ்வரன் பதவி நீக்கியது செல்லாது என மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்துள்ளது. குமுதுனி விக்ரமசிங்க மற்றும் ஜகத் டி சில்வா உள்ளிட்ட நீதிபதிகள் குழாம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளனர்.
இந்நிலையில், நீதிமன்றின் தீர்ப்பை தார்மீகமாக ஏற்றுக்கொண்டு முதலமைச்சர் பதவி விலக வேண்டும் என வடமாகாண சபை எதிர்க்கட்சி தலைவர் தவராசா கோரிக்கை விடுத்துள்ளார்.
முன்னதாக, வடக்கு மாகாண அமைச்சராக இருந்த பா.டெனிஸ்வரன் ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு, அவரை அந்த அமைச்சு பதவியில் இருந்து முதலமைச்சர் விக்னேஸ்வரன் நடவடிக்கை எடுத்திருந்தார்.
இதனையடுத்து முதலமைச்சரின் தீர்மானத்தை இரத்துச் செய்யும் உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு கோரி டெனிஸ்வரன் மேன்முறையீடு செய்திருந்தார்.
அரசியல் சாசனத்தின்படி மாகாண அமைச்சர் ஒருவரை பதவி நீக்கும் அதிகாரம் மாகாண ஆளுநருக்கு மாத்திரமே வழங்கப்பட்டுள்ளதாகவும் தன்னை பதவி நீக்குவதற்கு முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு எந்த அதிகாரமும் இல்லை என மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
எவ்வாறாயினும் விக்னேஸ்வரன் எடுத்த தீர்மானத்துக்கு தடை உத்தரவு பிறப்பித்த நீதிமன்றம் வழக்கை எதிர்வரும் ஜூலை மாதம் 09ம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளது.
புங்குடுதீவில் வித்தியா, சுழிபுரத்தில் றெஜினா போன்ற பெண் குழந்தைகளின் காட்டுமிராண்டித்தனமான கொலைகள் இனியும் நடைபெறாது தடுப்பதற்கு அனைவரும் ஒன்றியை வேண்டும் என வடமாகாண ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார்.
அரசியல் தலைமைகள், பொது அமைப்புகள், மதத் தலைவர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் என சமூக அக்கறை கொண்ட அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
யாழ். வேம்படி மகளீர் கல்லூரியின் 180 ஆண்டு நிறைவு விழாவும், பரிசளிப்பு விழா நிகழ்வும் நேற்று காலை நடைபெற்றது. இதில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும்போது இவ்வாறு தெரிவித்தார்.
“வீண் உணர்ச்சி பேச்சுக்கள், கிளர்ச்சிகளினால் இவ்வாறான செயல்களை தடுத்து நிறுத்தி விடமுடியாது. இவை ஏன் நடைபெறுகின்றன என்பதன் பின்னணிகளை நன்கு விசாரித்து அறிந்து கொள்வது அவசியமானது.
இந்த நிகழ்வில் நான் கலந்து கொண்டிருக்கின்றபோதும் முழு நாட்டினையும் சோகத்தில் ஆற்றிய சம்பவம் றெஜினாவின் படுகொலை என நான் நினைக்கின்றேன்.
பெரியவர்களின் சண்டையில் பழியை தீர்த்துக் கொள்வதற்காக ஒன்றும் அறியாத சின்னக்குழந்தை படுகொலை செய்யப்பட்டிருக்கின்றது.
இது மிகவும் கொடூரமான சம்பவம். இதற்கு எதிராக நாம் அனைவரும் குரல் கொடுக்க வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேசிய விளையாட்டு நிகழ்விலிந்து வவுனியாவில் பாடசாலை மாணவி புறக்கணிக்கப்பட்ட விவகாரத்தில் வடக்கு மாகாண கல்வி அமைச்சர் க.சர்வேஸ்வரன் விசாரணை நடத்த உறுதிமொழி அளித்துள்ளார்.
வவுனியா கண்டி வீதியில் அமைந்துள்ள பிரபல பாடசாலையில் கல்வி கற்றுவந்த மாணவி சண்மகானந்தம் நிதர்சினி (17) தேசிய ரீதியில் இன்று (29.06) திருகோணமலையில் நடைபெறவுள்ள பழுதூக்கும் போட்டியில் கலந்து கொள்ள தகுதி பெற்றிருந்த நிலையிலும், குறித்த மாணவியின் பெயர் பரிந்துரைக்கப்படாத காரணத்தினால் தேசிய மட்டத்தில் நடைபெறும் பழுதூக்கும் போட்டியில் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டுள்ளதாக ஊடகஙகளில் செய்திகள் வெளிவந்தன.
அதனைத் தொடர்ந்து வடக்கு மாகாண சபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் பாடசாலை மற்றும் வவுனியா கல்வி வலய மட்டத்தில் தேசிய ரீதியில் நடைபெறவுள்ள பழுதூக்கும் போட்டியிலிருந்து குறித்த மாணவி புறக்கணிக்கப்பட்டமை தொடர்பாக கேட்டறிந்து கொண்டதுடன் இச்சம்பவம் தொடர்பாக குறித்த மாணவி மற்றும் பெற்றோருடனும் கலந்துரையாடியதன் பின்னர், இது தொடர்பாக விரிவான விசாரணை நடத்துமாறு வடக்கு மாகாண கல்வி அமைச்சரிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.
வடக்கு மாகாணசபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதனின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட வடக்கு கல்வி அமைச்சர் குறித்த மாணவி தேசிய ரீதியில் பழுதூக்கும் போட்டியிலிருந்து புறக்கணிக்கப்பட்டமை தொடர்பாக விசாரணை நடத்துவதாக உறுதிமொழி அளித்துள்ளார்.
போர்ப்பயிற்சியின்போது ஏவுகணை ஒன்று தவறுதலாக, ஏவப்பட்டு போர்க்கப்பலிலேயே வெடித்துச் சிதறும் காட்சி ஒன்று வெளியாகியுள்ளது.
ஜேர்மனி போர்க்கப்பல் ஒன்று போர்ப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது பயிற்சியின் ஒரு பகுதியாக ஏவுகணைகள் ஏவப்பட்டன.
அப்போது ஒரு ஏவுகணை சரியாக ஏவப்படாமல் கப்பலிலேயே வெடித்துச் சிதறிய காட்சிகள் அடங்கிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
போர்க்கப்பலிலிருந்து பட்டாசு வெடிப்பதுபோல அந்த ஏவுகணை வெடித்துச் சிதறுகிறது.
ஆர்டிக் பகுதியில் நடைபெற்ற பயிற்சியின்போது இந்த சம்பவம் நிகழ்ந்தது. சம்பவத்தில் இரண்டு கடற்படை வீரர்கள் காயமடைந்தனர்.
கப்பலின் கேப்டனான Thomas Hacken கூறும்போது ஒரு பயங்கரமான நெருப்புச் சுவரின் முன்னால் நாங்கள் நின்று கொண்டிருந்தோம், கப்பலின் தானியங்கி தீயணைப்பு அமைப்பு தண்ணீரை தெளித்ததால் பணியாளர்களால் தீயை அணைக்க முடிந்தது.
அதிர்ச்சியுற்ற இரண்டு வீரர்கள் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளார்கள் என்றார். கப்பலில் உள்ள ஏவுகணை ஏவும் பகுதி பலத்த சேதம் அடைந்துள்ளதைக் காண முடிகிறது.
ஜேர்மனி கப்பற்படையின் தலைமை ஆய்வாளர் கூறும்போது, இச்சம்பவம் மிகவும் தேவையான ஒரு அபாயம்தான், ஏனென்றால் உண்மை நிகழ்வுகளையே நாம் பயிற்சியாக சந்திக்கிறோம், இதனால் ஆபத்து நேரங்களில் செயல்படுவதற்கு தயாராக இருக்க முடியும் என்றார்.
இரண்டு வீரர்களுக்கு லேசான காயங்கள் ஏற்பட்ட நிலையில் போர்க்கப்பல்கள் ஜேர்மனியின் Wilhelmshavenஇலுள்ள துறைமுகத்துக்கு திரும்பின.
12 வயதில் திருமணமாகி, கணவன் குடும்பத்தாரால் கொடுமைப்படுத்தப்பட்ட கல்பனா சரோஜ், வெற்றியாளராக வலம்வந்து கொண்டிருக்கிறார்.
Kamani Tubes Limited, Kalpana Builders and Developers, Kalpana Saroj & Associates உட்பட ஆறு நிறுவனங்களின் தலைவராக இருப்பவர் கல்பனா சரோஜ். இவரது ஆண்டு வருமானம் 2000 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.
ஏழை குடும்பத்தில் பிறந்து, 12 வயதிலேயே திருமணம் செய்து வைக்கப்பட்ட கல்பனா சாதனையாளராய் மிளிர்கிறார்.
மகாராஷ்டிராவின் அகோலா மாவட்டத்தில் 1958ம் ஆண்டு பிறந்தார், ஏழாம் வகுப்பு படிக்கும் போதே திருமணம் செய்து வைத்துவிட, தானேவில் வசித்துள்ளார்.
ஆறு மாதங்களில் கணவன் குடும்பத்தார் துன்புறுத்த ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப்போனாராம் கல்பனா.
ஒருநாள் தந்தை வந்து பார்த்ததும், அதிர்ச்சியில் உறைந்துபோய் தன் மகளை வீட்டுக்கு அழைத்துக் கொண்டு சென்றுள்ளார்.
அங்கேயோ சமுதாயத்தில் பல்வேறு கேளி, கிண்டலுக்கு ஆளான கல்பனா தற்கொலை செய்ய முடிவெடுத்தார். ஒருவழியாக அவரை காப்பாற்றிய குடும்பத்தினர், ஆறுதல் தந்து தேற்றினர்.
பின்னர் குடும்பத்தாரின் சம்மதத்துடன் மும்பை வந்த கல்பனா ரூ.60 சம்பளத்தில் வேலைக்கு சேர்ந்தார். படிப்படியாக முன்னேறிய கல்பனா, வங்கியில் ரூ.50,000 கடன்பெற்று சிறிய கடையை தொடங்கினார்.
மும்பையிலேயே வீடு வாடகைக்கு எடுத்து தன் குடும்பத்தாரையும் தன்னுடன் தங்கவைத்துக் கொண்டார். இதற்கிடையே கல்பனாவின் சகோதரி இறந்துவிட, அதிகம் சம்பாதிக்க வேண்டும் என எண்ணம் தீவிரமானது.
1978-ம் ஆண்டில், வேலையற்றவர்களுக்கு உதவும் வகையில் சுஷிக்ஷித் பெரோஸ்கார் யுவக் சங்கத்னா (Sushikshit Berozgar Yuvak Sanghatana) என்ற அமைப்பைத் தொடங்கினார்.
அந்த அமைப்பில் 3000 பேர் சேர்ந்தனர், அவர்களுக்கு வேலை கிடைக்க வழி செய்யப்பட்டது.
மரச்சாமான்கள், துணிக்கடை, ரியல் எஸ்டேட் என பல்வேறு போராட்டங்களுக்கு மத்தியில் வெற்றி பாதையை நோக்கிய பயணிக்க தொடங்கினார்.
இதனை தொடர்ந்து காமானி டியூப்ஸ் என்ற நலிவடைந்த நிறுவனத்தை எடுத்து அதற்கு மீண்டும் புத்துயிர் ஊட்டினார், இதனால் கல்பனாவின் வாழ்வில் புதிய திருப்பம் ஏற்பட்டது. அவருடைய ஒட்டு மொத்த நிறுவனங்களின் இப்போதைய ஆண்டு வருவாய் 2000 கோடி ரூபாய்.