ஆரோக்கியமான முறையில் பேஸ்புக்கினை பயன்படுத்த புதிய வசதி!!

தனது பயனர்கள் ஆரோக்கியமான முறையில் பேஸ்புக்கினை பயன்படுத்த ஏராளமான வசதிகளை அந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

இதன் தொடர்ச்சியாக சாவிச் சொற்களை (Key Words) அடிப்படையாகக் கொண்ட மற்றுமொரு வசதியினை அறிமுகம் செய்வது தொடர்பில் பரிசோதனைகளை மேற்கொண்டு வருகின்றது.

இவ் வசதியின் ஊடாக குறிப்பிட்ட சில சாவிச் சொற்களைக் கொண்டு அவற்றினை அடிப்படையாகக் கொண்ட போஸ்ட்களை பயனர்கள் தமது டைம் லைனில் மறைக்கக்கூடியதாக இருக்கும்.

இவ்வாறு 30 நாட்கள் வரைக்கும் மறைத்து வைத்துக்கொள்ள முடியும். அதாவது தற்காலிகமாக மாத்திரமே மறைக்க முடியும். நிரந்தரமாக மறைக்க முடியாது.

இவ் வசதி இவ் வருடம் டிசம்பர் மாதம் முதல் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

உலகின் அதிக எடைகொண்ட குண்டு சிறுவன் இப்போது எப்படி இருக்கின்றான் தெரியுமா?

உலகிலேயே அதிக எடையுடன் கூடிய குண்டு பையன் Mihir Jain, தற்போது 65 கிலோ எடையை குறைத்துள்ளான்.

இந்தியாவின் டெல்லியை சேர்ந்தவர் Mihir Jain(வயது 14), இவனது எடை 237 கிலோ, உலகிலேயே மிக அதிக எடையுடைய பையன்.

பிறக்கும்போதே வழக்கமான எடையுடன் பிறந்தாலும், துரித உணவுகள் மற்றும் பாட்டிலில் அடைக்கப்பட்ட பழச்சாறுகள் மூலம் இவனது எடை அதிகரித்துக் கொண்டே சென்றது.

ஐந்து வயதிலேயே 80 கிலோ வரை எடை அதிகரித்தது, மருத்துவரிடம் சென்றபோது தான் இவனது பிரச்சனையே பெற்றோருக்கு புரியவந்தது.

இவனது தாய் கூறுகையில், ஐந்து வயதில் தான் நாங்கள் இதனை உணர்ந்தோம்.

சிறுவயதாக இருந்ததால் அறுவைசிகிச்சையும் செய்ய முடியாது என மருத்துவர் கூறினார், அதற்கு பதிலாக மாத்திரைகள் வழங்கினார்.

அதை தொடர்ச்சியாக உட்கொண்டதால் அவனது கால்கள் பலவீனமாகின, வருடங்கள் செல்ல செல்ல ஓரிடத்திலேயே முடங்கிப் போனான்.

வறுத்த உருளைக்கிழங்கு, காய்கறி கட்லெட், அரிசி சாதம், ஐஸ்கிரீம், பதப்படுத்தப்பட்ட பழச்சாறுகள் என தொடர்ந்து சாப்பிட்டுக் கொண்டே இருந்ததால் உடல் எடை மேலும் அதிகரித்தது.

இதனால் நீரிழிவு, மூச்சுவிடுவதில் சிரமம் மற்றும் ரத்த அழுத்த பிரச்சனைகளும் வந்தது, அப்போதுதான் உடல் எடை குறைப்பு அறுவைசிகிச்சைகள் பற்றி தெரிந்து கொண்டோம்.

கடந்தாண்டு டிசம்பர் மாதம் மருத்துவர்களிடம் ஆலோசனை பெற்றோம், முதல் மூன்று மாதங்கள் டயட்டில் இருந்தான், இதன்படி ஏப்ரலில் அறுவைசிகிச்சை செய்யப்பட்டது, தற்போது 65 கிலோ வரை எடையை குறைத்துள்ளான் என தெரிவித்துள்ளார்.

முதலில் அறுவைசிகிச்சை பயந்ததாகவும், தற்போது சந்தோஷமாக இருப்பதாகவும் Mihir Jain தெரிவித்துள்ளார்.

மேலும் உடல் எடையை குறைத்து மற்ற பிள்ளைகள் போன்று தானும் பள்ளிக்கு சென்று படிக்க ஆசைப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

பணத்துக்காக தாய் வயது பெண்ணை திருமணம் செய்த இளைஞன்!!

நைஜீரியாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் வயதான பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.

நைஜீரிய இளைஞர்கள் பலர் சொகுசு வாழ்க்கை மற்றும் பணத்துக்காக வெளிநாடுகளுக்கு சென்று வயதான பெண்களை திருமணம் செய்து கொள்ளும் விடயம் அதிகரித்து வருகிறது.

அந்த வகையில் 20-களில் உள்ள ஒரு நைஜீரிய இளைஞர் அமெரிக்காவின் டெக்சாஸை சேர்ந்த வயதான பெண்ணை சமீபத்தில் திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இளைஞரும், முதிய பெண்மணியும் திருமணத்துக்கு பின்னர் தங்களது நண்பர்களுடன் பொதுவெளியில் பொழுதை கழித்துள்ளனர்.

தம்பதிகள் ஒன்றாக அமர்ந்திருக்கும் புகைப்படங்களை இணைய பயன்பாட்டாளர் ஒருவர் தனது சமூகவலைதள பக்கத்தில் தற்போது வெளியிட்டுள்ளார். இதையடுத்து குறித்த புகைப்படங்கள் அதிகளவில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

முஸ்லீம் மதத்திற்கு மாறுமாறு அடித்து கொடுமைப்படுத்திய கணவன் : மனைவி எடுத்த அதிர்ச்சி முடிவு!!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் முஸ்லீம் மதத்திற்கு மாற வற்புறுத்திய கணவரை துப்பாக்கி சுடும் வீராங்கனை விவாகரத்து செய்துள்ளார்.

இந்து மதத்தை சேர்ந்த தாரா ஷாதியோ என்ற துப்பாக்கி சுடும் வீராங்கனையை, கடந்த 2014ம் ஆம் ஆண்டு, ரஞ்சித் சிங் கோலி என்ற ரஹீப் அல் ஹசன் என்பவர் தான் ஒரு முஸ்லீம் என கூறாமல் ஏமாற்றி திருமணம் செய்துகொண்டார்.

திருமணத்திற்கு பின்னர் முஸ்லீம் மதத்திற்கு மாறும்படி தனது மனைவியை கட்டாயப்படுத்தியுள்ளார். மேலும், அடித்து கொடுமைபடுத்தியுள்ளார்.

தனக்கு உடலில் ஏற்பட்ட காயங்களை பொலிசில் காட்டி, நடந்தவை குறித்து புகார் அளித்துள்ளார். லவ் ஜிகாத் என்ற குற்றச்சாட்டு எழுந்ததால், அறிக்கை அளிக்கும்படி மாநில அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது.

தொடர்ந்து ஷாதியோவின் வேண்டுகோளை ஏற்று, இந்த வழக்கு விசாரணை சிபிஐக்கு மாற்றப்பட்டது. மேலும், ஷாதியோ 2017 ம் ஆண்டில் விவாகரத்து கேட்டு, ராஞ்சி குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இதனை விசாரித்த நீதிபதி கவுதம், ஷாதியோ கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதற்கான ஆதாரம் உள்ளதாகவும், மதம் மாற கட்டாயப்படுத்த யாருக்கும் உரிமை இல்லை எனவும் கூறி விவாகரத்து வழங்கியுள்ளார்.

கமல்ஹாசன் எடுத்த முடிவால் கவலையடைந்த அவரது இரு மகள்கள்!!

நடிகர் கமல்ஹாசனின் அரசியல் வருகை குறித்து தமிழகத்தில் பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்ற நிலையில், தனது மகள்கள் இருவரும் தனது அரசியல் வருகை குறித்து கவலைப்பட்டதாக ஆங்கில நாளிதழ் ஒன்றில் அவர் தெரிவித்துள்ளார்.

மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை ஆரம்பித்து செயல்பட்டு வரும் கமல்ஹாசன் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சி மற்றும் திரைப்படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறது.

இந்நிலையில், அவர் ஆங்கில நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில், எனது அரசியல் வருகை குறித்து என இரு மகள்களான ஸ்ருதியும், அக்ஷராவும் கவலை கொண்டனர். ஆனால் இதுபோன்ற நம்பிக்கையின்மை பொதுவாய காணப்படும் ஒன்று. எனவே இதுகுறித்து கவலைகொள்ள வேண்டாம் என அவர்களிடம் நான் தெரிவித்துவிட்டேன்.

மேலும், அவர்கள் இருவரது தொழிலில் நான் தலையிட்டதில்லை. அவர்களது வாழ்க்கை முடிவை அவர்களே எடுத்துக்கொள்ளட்டும். ஏனெனில் நான் 18 வயதில் எனது வாழ்க்கையில் முடிவுகளை எடுக்க ஆரம்பித்தேன்.

அப்படித்தான் எனது பெற்றோர் என்னை வளர்த்தார்கள். அதுபோன்று அவர்களையும் வளர்த்துள்ளேன் என கூறியுள்ளார்.

சிறுநீரக கல் வலியால் துடிக்கிறேன் : பிரபல நடிகர் வெளியிட்ட புகைப்படம்!!

பிரபல திரைப்பட நடிகர் அலய் கோனி சிறுநீரக கற்கள் கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடித்து பிரபலமானவர் அலய் கோனி.

இவருக்கு சமீபத்தில் தான் மூக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றது. இந்நிலையில் கோனியின் சிறுநீரகத்தில் கற்கள் சேர்ந்ததால் அதற்கான சிகிச்சைக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்த கோனியின் சமூகவலைதள பதிவில், இந்த சிறுநீரக கல் வலி மிக மோசமாக உள்ளது என கூறியுள்ளதோடு மருத்துவமனை படுக்கையில் தான் படுத்திருக்கும் புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார்.

கொடிய விஷம் கொண்ட பாம்பு கடித்து ரத்தம் உறைந்த சிறுவனின் கடைசி நிமிடங்கள் : இறுதியில் நடந்த திருப்பம்!!

எட்டடி நீள கட்டுவிரியன் பாம்பு கடித்து ரத்தம் உறைந்த நிலையில் இறுதி நிமிடத்தில் கொண்டு வரப்பட்ட சிறுவனை அரசு மருத்துவர்கள் போராடி காப்பாற்றிய சம்பவம் நடந்துள்ளது.

வேலூர் சோளிங்கர் பகுதியை அடுத்த காளிங்காபுரத்தை சேர்ந்தவர்கள் விஜயகுமார் சரஸ்வதி தம்பதியினர். இவர்கள் மகன் சுனில் (11) . சுனில் அங்குள்ள அரசினர் பள்ளியில் 6ஆம் வகுப்பு படிக்கிறான்.

கடந்த 25ஆம் தேதி இரவு தனது தாய் தந்தையுடன் வீட்டிற்கு வெளியே படுத்து கொண்டிருந்த சுனிலை ஏதோ ஒன்று கடித்துள்ளது. வலியால் அலற தொடங்கினான் சுனில். தாயும் தகப்பனும் பார்க்கையில் அருகில் பாம்பு ஒன்று நெளிந்து கொண்டிருந்தது.

அதனை அடித்து சாக்கு பையில் போட்ட விஜயகுமார், அதற்குள் வலியால் துடித்த மகனை தூக்கி கொண்டு சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.

அங்கு முதலுதவி அளிக்கப்பட்டது இருப்பினும் சுனிலின் ரத்தம் உறைய தொடங்கியதால் உடனடியாக வேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டான்.

அதிகாலை 3.30மணிக்கு வேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட சுனிலுக்கு அங்குள்ள அரசு மருத்துவர் தேரணிராஜன் தலைமையில் தீவிர சிகிச்சை அளிக்கபட்டது.

2 நாட்கள் தொடர்ந்து மருத்துவர்கள் போராடி மரணத்தின் விளிம்பில் இருந்த சுனிலை உயிருடன் மீட்டனர். நேற்று சுயநினைவுக்கு வந்த சுனில் தனது பெற்றோருடன் பேசினான். பெற்றோர் கண்ணீர் மல்க மருத்துவர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்தனர்.

இதுபற்றி மருத்துவர் தேரணிராஜன் கூறுகையில் அரசு மருத்துவமனை மீது அனைவரும் நம்பிக்கை வைக்க வேண்டும்.

எட்டடி நீள கொடிய விஷம் கொண்ட பாம்பு கடித்ததால் சுனில் இங்கு வரும்போதே ரத்தம் உறைந்து நரம்புகள் செயலிழந்து போய் வந்தான். நாங்கள் அவனை போராடித்தான் காப்பாற்றினோம் என்றது குறிப்பிடத்தக்கது.

காணாமல் போன கணவர் : 11 ஆண்டுகளுக்கு பின்னர் மனைவி செய்த அதிர்ச்சி செயல்!!

தமிழ்நாட்டில் மாயமான கணவரை கண்டுபிடித்து கொடுக்குமாறு 11 ஆண்டுகளுக்கு பிறகு மனைவி பொலிசில் புகார் கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் செம்மாம்பாளையத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் (54). இவரது மனைவி செல்வி (51). தம்பதிக்கு விஜயா என்ற மகள் உள்ள நிலையில் அவருக்கு திருமணமாகி விட்டது.

கடந்த 2007-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 1-ந் திகதி ஆறுமுகமும், செல்வியும் அங்குள்ள கோவிலுக்கு சைக்கிளில் சென்றனர்.
பின்னர் மனைவியிடம் ஆறுமுகம், நீ வீட்டுக்கு போ, நான் எனது அம்மா வீட்டுக்கு போய் வருகிறேன் என கூறியுள்ளார்.

ஆனால் அதன் பின்னர் ஆறுமுகம் வீடு திரும்பவில்லை. கடந்த 11 ஆண்டுகளாக மாயமான கணவரை பல இடங்களில் தேடி தேடி பிறகு அப்படியே மறந்து விட்டார் செல்வி.

இந்நிலையில் திடீரென கணவர் நினைப்பு வந்த செல்வி காவல் நிலையத்துக்கு சென்று தனது கணவரை காணவில்லை, கண்டுபிடித்து கொடுங்கள் என கூறியுள்ளார்.

புகார் மனுவில், 11 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன கணவரை கண்டுபிடித்து கொடுங்கள் என்று செல்வி எழுதி இருப்பதை பார்த்து பொலிசார் திடுக்கிட்டனர்.

இது குறித்து அவரிடம் விசாரித்த போது நான் உலக நடப்பு தெரியாதவள். வெளி உலகம் பத்தி எனக்கு அவ்வளவாக தெரியாது காணாமல் போன என் கணவர் வருவார், வருவார் என இத்தனை ஆண்டுகளாக காத்திருந்தேன், ஆனால் அவர் வரவில்லை.

அதனால் புகார் அளிக்க தற்போது வந்தேன் என கூறியுள்ளார். புகாரை பெற்ற பொலிசார் தங்களது விசாரணையை தொடங்கியுள்ளனர்.

விமான விபத்தில் பலியான பெண் : தந்தையிடம் பேசிய கடைசி வார்த்தைகள்!!

மும்பையில் நேற்று குடியிருப்பு பகுதியில் சிறிய ரக விமானம் ஒன்று விழுந்து விபத்துக்குள்ளானதில் ஐந்து பேர் பலியாகினர்.

Juhu விமான நிலையத்திலிருந்து இரண்டு விமானிகள் உட்பட நால்வருடன் பயிற்சிக்காக Beechcraft King Air C90 என்ற விமானம் மும்பை விமான நிலையத்துக்கு புறப்பட்டது.

இதில் எதிர்பாராதவிதமாக காட்கோபர் பகுதி சர்வோதயா நகரில் நேற்று பிற்பகல் 1.30 மணியளவில் விபத்துக்குள்ளானது, இதில் ஐந்து பேர் பலியாகினர்.

விசாரணையில், குறித்த விமானம் கடந்த 2009ம் ஆண்டு உத்தரபிரதேச அரசிடம் இருந்து மும்பையின் யுவி ஏவியேஷன் நிறுவனத்துக்கு விற்பனை செய்யப்பட்டு இருந்தது.

கடந்த 10 ஆண்டுகளாகவே விமானம் பறப்பதற்கு எந்தவொரு தகுதிச்சான்றையும் பெறவில்லை என தெரியவந்துள்ளது.

இந்நிலையில் விபத்தில் பலியான Surabhi Gupta என்ற பெண், காலை தனது தந்தையுடன் போனில் பேசியுள்ளார்.

அப்போது, மோசமான நிலையில் உள்ள விமானத்தில் பயணிக்க இருப்பதாக கூறியுள்ளார், அதற்கு, யார் அனுமதி கொடுத்தது என தந்தை கேட்டுள்ளார். மேலும் இதுகுறித்து உயர்மட்ட விசாரணை நடத்தப்படும் என தான் நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் விமானப்போக்குவரத்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், சோதனை ஓட்டத்துக்கு விமானம் பறக்க வேண்டுமென்றால்கூட தகுதிச்சான்றிதழ் இன்றி பறக்கக் கூடாது.

ஆனால், இந்த விமானம் கடைசியாக 6 ஆண்டுகளாக நிறுத்திவைக்கப்பட்டு, பறந்துள்ளது, விசாரணை நடத்தி வருகிறோம்.

விமானத்தில் கருப்புப் பெட்டியை ஆய்வு செய்தபின், விபத்துக்கான காரணம் என்ன என்பது குறித்து தெரியவரும் என தெரிவித்துள்ளார்.

9ஆம் வகுப்பு மாணவி மாடியிலிருந்து குதித்து தற்கொலை : வேகமாக பரவும் அதிர்ச்சி வீடியோ!!

ஒன்பதாம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுமி ஒருவர் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதனை அங்கிருந்த ஒரு நபர் வீடியோ எடுத்ததால் அந்த வீடியோ இப்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

நேற்று மாலை 4.30 மணி அளவில் மும்பை கண்டிவாலி அருகே உள்ள தாகூர் எனும் பகுதியில் ஒன்பதாம் வகுப்பு சிறுமி ஹர்ஷிகா மாயவந்தி எட்டாவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இவரது மரணத்திற்கான காரணங்கள் இன்னமும் தெரியவில்லை.

உயிரை மாய்த்து கொள்வதற்காக தனது வீட்டிற்கு அருகில் உள்ள உயரமான குடியிருப்பு கட்டிடத்தில் ஏறிய ஹர்ஷிகா மாயவந்தி அங்கிருந்த ஜன்னல் ஒன்றின் மேல் நிற்கும்போது அப்பகுதியில் உள்ள மக்கள் பார்த்து குதிக்காதே திரும்ப மாடிக்கு செல் என்று கத்தியுள்ளனர். அந்த குரல்களை பொருட்படுத்தாத ஹர்ஷிகா அங்கிருந்து குதித்திருக்கிறார்.

இந்த சம்பவம் நடந்த போது குடியிருப்பில் இருந்த ஒருவர் இதனை வீடியோ எடுத்திருக்கிறார்.

உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இருப்பினும் கொண்டு வரும்போதே அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் கூறினர். ஹர்ஷிகாவின் உடல் பிரேதபரிசோதனைக்கு பின் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்படும் என்று தெரிய வருகிறது.

இதுபற்றி பொலிஸார் கூறுகையில் ஹர்ஷிகாவின் இறப்பிற்கான காரணம் தெரியவில்லை என்றும் அவர் தற்கொலை கடிதம் எதுவும் எழுதி வைக்கவில்லை என்றும் கூறினார். ஹர்ஷிகாவின் குடும்பத்தார் அதிர்ச்சியில் இருப்பதால் அவர்கள் இப்போது பேசும் நிலையில் இல்லை என்று தெரிவித்தனர். இந்த மரணம் பற்றிய விசாரணை தொடர்கிறது.

15 வயது தங்கையை உயிருக்கு உயிராக காதலித்த 17 வயது அண்ணன் : மரணத்தில் சிக்கிய உருக்கமான கடிதம்!!

திருச்சி மாவட்டத்தில் அண்ணன் தங்கை காதல் காரணத்தால் குடும்பத்தில் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து காதல் ஜோடிகள் தற்கொலை செய்துகொண்டனர்.

17 வயது சிறுவனுக்கு, 15 வயது சிறுமியின் மீது காதல் ஏற்பட்டுள்ளது. இவர்களது காதலை இரு வீட்டாரின் பெற்றோர் எதிர்த்தனர். மேலும் 2 பேரையும் கண்டித்தனர். தூரத்து சொந்தத்தில் இருவரும் அண்ணன்-தங்கை உறவு முறை வரும். அதனால் காதலை கைவிடும்படி அறிவுரை கூறினர்.

இந்த நிலையில் நேற்று காலை 2 பேரும் பள்ளிக்கு சென்ற பின் மாலையில் பஸ்சில் அல்லூர் மேற்கு தெரு பஸ் நிறுத்தம் அருகே வந்து இறங்கினர். பின்னர் 2 பேரும் கடியாக்குறிச்சி அருகில் உள்ள ரெயில்வே தண்டவாள பாதை அருகே சிமெண்டு கட்டையில் புத்தக பையை வைத்து விட்டு பேசி உள்ளனர்.

காதலுக்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியதால் தற்கொலை செய்யும் முடிவை அவர்கள் எடுத்தனர். வாழ்வில் தான் இணைய முடியவில்லை, ஒன்றாக இணைந்து சாவோம் என்ற முடிவில் தற்கொலை செய்துகொண்டனர்.

இவர்களது பையில் உருக்கமான கடிதம் ஒன்று இருந்தது. அதில் நாங்கள் 2 பேரும் தீவிரமாக காதலித்து வந்தோம். அண்ணன்-தங்கை உறவு முறை எனக்கூறி எங்களது காதலுக்கு எதிர்ப்பு வருகிறது.

சேர்ந்து தான் வாழ முடியவில்லை. அதனால் தற்கொலை செய்து கொள்கிறோம். எங்களது முகத்தை யாரும் பார்க்க வேண்டாம்” என்று எழுதி அதில் 2 பேரும் கையெழுத்திட்டிருந்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

ட்ரம் ஒன்றினுள் பிணமாக கண்டுபிடிக்கப்பட்ட இளம்பெண் : கொலைகாரனைத் தேடும் பொலிசார்!!

அவுஸ்திரேலியாவில் காணாமல் போன ஒரு இளம்பெண் ட்ரம் ஒன்றினுள் அழுகிய நிலையில் பிணமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த Larissa Beilby (16), Brisbaneஇலுள்ள பெண்கள் விடுதி ஒன்றிலிருந்து சில நாட்களுக்கு முன் காணாமல் போனாள்.

அவளை பொலிசார் தீவிரமாக தேடி வரும் நிலையில் Gold Coastஇல் வசித்து வரும் ஒரு பெண் வழக்குக்கு உதவிகரமான ஒரு தகவலை அளித்தார்.

கருப்பு நிற ட்ரக்கில் வந்த ஒரு நபர் அவரது வீடு அமைந்துள்ள பகுதி வழியாக சென்றதாகவும் அவனது ட்ரக்கின் பின்புறம் ட்ரம் ஒன்றிலிருந்து ஒரு கை வெளியே தொங்கிக் கொண்டிருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

தேடுதல் வேட்டையைத் தொடர்ந்த பொலிசார், Stapylton பகுதியில் அந்த ட்ரக் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதைக் கண்டனர்.

அந்த ட்ரக் மிகவும் மோசமான நிலையில் காணப்பட்டதோடு அதில் துப்பாக்கியால் சுடப்பட்ட துளைகளும், குண்டுகளும்கூட காணப்பட்டன.

அந்த ட்ரக்கிலிருந்த ட்ரம்மை சோதனையிட்டபோது அதில் அழுகிய நிலையில் ஒரு பெண்ணின் உடல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

பொலிசார், Zlatko Sikorsky (34) என்ற மனிதன்தான் அவளைக் கொலை செய்து ட்ரம்மில் அடைத்திருக்க வேண்டும் என்று கருதுகின்றனர்.

Zlatko Sikorsky ஏற்கனவே போக்குவரத்து விதிகளை மீறியதற்காக பொலிசாரால் பல முறை தண்டிக்கப்பட்டவன்.

இந்நிலையில் அவனுக்கும் Larissaவுக்கும் என்ன தொடர்பு என்றும் எப்படி தொடர்பு ஏற்பட்டது என்றும் தெரியவில்லை என்று தெரிவித்துள்ள பொலிசார், ஆனால் அவர்களுக்குள் தொடர்பு இருப்பது மட்டும் நிச்சயம் என்று தெரிவித்தனர்.

அதே நேரத்தில் கிடைத்த உடல் Larissaவுடையதுதானா என்பதும் பிரேதப் பரிசோதனைக்குப் பின்னரே தெரிய வரும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வரும் பொலிசார் அவன் 966 WKB என்ற எண்ணுள்ள சில்வர் நிற Holden Commodore காரில் தப்பியிருக்கலாம் என்றும் அவனைக் குறித்து தகவல் அறிந்தோர் பொலிசாருக்கு தெரிவிக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

பக்கத்துக்கு வீட்டில் வசித்த அக்காவை முகநூலில் தேடிய தங்கை : நெகிழ்ச்சியான பாசப்போராட்டம்!!

அமெரிக்காவில் அடுத்த வீட்டில் இருந்த அக்காவை முகநூலெங்கும் தேடிய தங்கை பற்றிய சுவாரசிய சம்பவம் நடைபெற்றுள்ளது.

அமெரிக்காவில் வசித்து வரும் ஹிலாரி கிளாரிசை அவரது பெற்றோர்கள் சிறு வயதில் வேறொருவருக்கு தத்து கொடுத்துள்ளனர்.

வளர்ந்து திருமணம் ஆன பின் தனது குடும்பத்தாரை சந்திக்கும் ஆசை ஹிலாரிக்கு ஏற்பட்டுள்ளது.

தனது மரணத்திற்கு முன் தனது குடும்பத்தாரை சந்திக்க வேண்டும் என்று தனது கணவருடன் அமெரிக்க முழுவதும் அலசியிருக்கிறார் ஹிலாரி.

தான் தத்து கொடுக்கப்பட்ட போது தரப்பட்ட ஆவணங்களின் உதவியுடன் தனது அக்கா பெயர் டான் ஜான்சன் என்பதை கண்டுபிடித்த ஹிலாரி அந்த பெயரில் உள்ள முகநூல் பக்கமெங்கும் தேடினார். இருப்பினும் அவரால் அவரது அக்காவை கண்டுபிடிக்க முடியவில்லை.

அமெரிக்க விஸ்கான்ஸின் பகுதியில் குடியேறினார். அங்குதான் அவரது அக்கா வசிப்பதாக ஆவணங்களில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இவருக்கும் அக்காவிற்கும் உருவ ஒற்றுமை இருந்தாலும் இருவருக்கும் மிகப்பெரிய வயது வித்யாசம் இருந்தது. ஆகவே உருவ ஒற்றுமை வைத்து கண்டுபிடிக்க சிரமமாக இருந்திருக்கிறது.

இந்நிலையில் ஹிலாரியின் கணவர் தனது பக்கத்துக்கு வீட்டு பெண் ஒருவரை பார்த்த போது ஹிலாரியின் உருவ ஒற்றுமை அவரிடம் இருந்துள்ளது, இதனை ஹிலாரியிடம் கூறியிருக்கிறார்.

உடனடியாக பேச முடியாமல் சில நாட்கள் ஹாய் ஹலோ சொல்லி காலம் கடத்திய ஹிலாரி ஒருநாள் அவரது வீட்டிற்கு சென்று பேசும்போது அவரது பெயரை கேட்டிருக்கிறார்.

டான் ஜான்சன் என்று பதில் வந்தது, அவரது தந்தையின் பெயரை கேட்க அதற்க்கு பதில் சொன்ன டான் ஜான்சனை பார்த்து ஓவென்று ஆனந்தத்தில் கத்தியபடி அவரை கட்டிபிடித்திருக்கிறார் ஹிலாரி.

அதன் பின் டானுக்கு 18 வயது இருக்கும்போது தத்து கொடுக்கப்பட்ட சகோதரி தான்தான் என்று கூறியிருக்கிறார்.

இதனால் எதிர்பாராத சந்தோஷத்திற்கு ஆளான டான் ஜான்சன் “இது என் வாழ்வில் எதிர்பாராத சந்திப்பு. இந்த பந்தம் இறுதி வரை இனி தொடரும் ” என்று கூறி நெகிழ்ந்திருக்கிறார்.

தங்கையின் இந்த தேடுதலையும் பாசத்திற்கான போராட்டத்தையும் அமெரிக்க ஊடகங்கள் பாராட்டி வருகின்றன.

தங்கம் வழங்காமையினால் கணவனின் சடலத்தை ஏற்க மறுத்த மனைவி!!

நுவரெலியாவில் இதய நோயினால் உயிரிழந்த தனது கணவனின் சடலத்தை ஏற்றுக்கொள்ள மனைவி மறுத்துள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

சடலத்தை ஏற்க வைத்தியசாலை வந்த போதும், தனது கணவர் அணிந்திருந்த தங்க நகைகளை காணவில்லை என கூறிய சடலத்தை ஏற்க மறுத்துள்ளார்.

ஹற்றனைச் சேர்ந்த பெண்ணொருவரே இவ்வாறு நடந்து கொண்டதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நுவரெலியா நகரத்தில் உள்ள பிரபல ஆலயத்தில் பூஜை நடத்துபவராக பணியாற்றிய 53 வயதான நபர் ஒருவரே உயிரிழந்தார். மனைவி சடலத்தை ஏற்காமல் வீட்டிற்கு திரும்பி சென்றுள்ளமையினால் உறவினர் ஒருவர் சடலத்தை கொண்டு செல்ல முயற்சித்த போதிலும், அது முடியாமல் போயுள்ளது.

இந்த நிலையில், உயிரிழந்தவர் தங்கியிருந்த அறையில் பை ஒன்றில் அவர் அணிந்திருந்த தங்கம் கிடைத்துள்ள நிலையில், அடுத்த நாள் மனைவி சடலத்தை வீட்டிற்கு கொண்டு சென்றுள்ளார்.

காணாமல்போன குடும்பஸ்தரின் சடலம் மீட்பு!!

திருகோணமலை – இலுப்பைக்குளம் கிராமசேவகர் பகுதிக்கு உட்பட்ட சிறுப்பிட்டி கிராமத்தில் காணாமல்போன குடும்பஸ்தரொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சிறுப்பிட்டி கிராமத்தை சேர்ந்த இராசரட்ணம் பிரபு எனும் 33 வயதுடைய குடும்பஸ்தர் நேற்று அதிகாலை 4 மணியளவில் வேலைக்கு சென்றுள்ளார்.

எனினும் அவர் காலை 10 மணி வரையில் வீடு திரும்பாமையினால் உறவினர்கள் தேட ஆரம்பித்துள்ளனர்.

இதன்போது அவர் பயணம் செய்த மோட்டர்சைக்கிள் இலுப்பைக்குளம், கன்னியா வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததை அவதானித்த உறவினர்கள் சம்பவம் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.

இதனையடுத்து மோப்பநாயின் உதவியுடன் தேடுதல் மேற்கொள்ளப்பட்ட போது, ஆடுமேய்க்க சென்ற ஒருவரின் தகவலின் அடிப்படையில் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் குறித்த சடலம் இராசரட்ணம் பிரபுவினுடையது என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, சடலத்தை பார்வையிடுவதற்காக நேரில் திருகோணமலை நீதிமன்ற பதில் நீதவான் ஏ.எம்.அப்துல் முஹீத் சென்று பார்வையிட்துடன், சட்ட வைத்திய பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லுமாறும் பொலிஸாருக்கு கட்டளை பிறப்பித்தார்.

குறித்த நபரை கொலை செய்துதான் இவ்வாறு வயல் பகுதியில் போட்டிருப்பதாகவும், உறவினர்கள் நீதவான் முன்னிலையில் குறிப்பிட்டனர்.

மேலும், பிரேத பரிசோதனைகளை தீவிரப்படுத்துமாறும் பின்னர் சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைக்குமாறும் பதில் நீதவான் ஏ.எம்.அப்துல் முஹீத் கட்டளையிட்டார்.

வீட்டில் தனியாக உறங்கிக் கொண்டிருந்த 7 வயதுச் சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்!!

7 வயதான சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக கூறப்படும் 48 வயதான நபரை கைது செய்துள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கோட்டுகச்சி – தங்கஹாவெல பிரதேசத்தை சேர்ந்த நபரே கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் வயலுக்கு சென்று வீட்டுக்கு திரும்பிய போது பாதிக்கப்பட்ட சிறுமி வீட்டில் தனியாக உறங்கிக் கொண்டிருந்துள்ளார்.

இந்த நிலையில் சந்தேகநபர் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். சிறுமியின் பெற்றோர் சம்பவத்தை அறிந்து புத்தளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட சிறுமி சிகிச்சைக்காக புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சந்தேகநபர் புத்தளம் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளார்.