வெளிநாட்டிலிருந்து யாழிலுள்ள மனைவிக்கு அனுப்பப்பட்ட பணம் : கணவனின் விபரீத முடிவு!!

வெளிநாட்டில் இருந்து பணம் வந்தமையினால் நபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மறவன்புலவைச் சேர்ந்த 47 வயதான சிவராசா சிவரூபன் என்பவரே இவ்வாறான விபரீத முடிவால் நேற்று முன்தினம் தன் உயிரை மாய்த்துள்ளார்.

வெளிநாட்டிலிருந்து பணம் வருவதால் மனைவி தன்னுடன் சந்தோசமாக இருப்பதில்லை என்று கடிதம் எழுதிவிட்டு அவர் தற்கொலை செய்து கொண்டதாக ஆரம்பகட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.

நான்கு பிள்ளைகளின் தந்தையான சிவரூபன் இவர் கொடிகாமம் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தில் பணிபுரிகிறார்.

சம்பவம் தொடர்பில் சாவகச்சேரிப் பொலிஸார் விசாரணை நடத்தினர். பிரதேச திடீர் இறப்பு விசாரணை அதிகாரி மேலதிக விசாரணைகளை நடத்தினார். யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் உடற்கூற்றுப் பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

வெளிநாடுகளிலுள்ள உறவுகள் அனுப்பும் பணம் இங்குள்ள பலருக்கும் சாதகமாகவே அமைகின்ற போதும், சில இளையோர் அத்தகைய பணத்தால் தறிகெட்டுச் செல்கிறார்கள். சமூகவிரோதச் செயல்களில் ஈடுபடுகிறார்கள் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் உட்பட பலரும் கூறி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தூக்கிட்டுக் கொண்ட 17 வயது யுவதி : ஊரையே சோகத்தில் ஆழ்த்தியுள்ள சம்பவம்!!

மட்டக்களப்பு – வெல்லாவெளி, விவேகானந்தபுரம் பகுதியில் 17 வயது யுவதியொருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

அரியநாயகம் நிருலக்ஷனி என்பவரே நேற்று மாலை தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வீட்டில் யாருமில்லாத போது தனது அறையில் குறித்த யுவதி தூக்கிட்டுக் கொண்டுள்ளார்.

இந்த சந்தர்ப்பத்தில், வீட்டிற்கு வந்த பெற்றோர் மகள் தூக்கில் தொங்குவதை அவதானித்து அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று அவரை மீட்டுள்ளனர்.

இருப்பினும், வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்ட போது மாணவியின் உயிர் பிரிந்திருந்ததாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன், மாணவியின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த சம்பவமானது அந்த பகுதியையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

சிறுமி ரெஜினாவின் விடயத்தில் மற்றுமொரு சர்ச்சை : கதறியழுத சிறுமியின் தந்தை!!

வீட்டிலிருந்த சிறுமி ரெஜினாவின் பாடசாலை சீருடையொன்றையும், பாதணியொன்றையும் பொலிஸார் வாங்கிச் சென்றதாக ரெஜினாவின் தந்தை குறிப்பிட்டுள்ளார்.

யாழ். சுழிபுரத்தில் படுகொலை செய்யப்பட்ட சிறுமி ரெஜினாவுக்கு நீதி கோரி நேற்று காலை முதல் தொடர் போராட்டமொன்று மேற்கொள்ளப்பட்டது. இந்த போராட்டத்தில் வைத்து ரெஜினாவின் தந்தை இந்த விடயத்தை தெரிவித்து கதறியழுதுள்ளார்.

எமது வீட்டில் உடுப்பு காயப்போடும் கொடியில் ரெஜினாவின் இன்னொரு பாடசாலை சீருடை இருந்தது. அதனையும், ஒரு பாதணியையும் பொலிஸார் வாங்கிக் கொண்டு போனதாக என் மகன் கூறினார்.

ரெஜினா பாடசாலைக்கு அணிந்து சென்ற சீருடை வழமையாக போடப்படும் துணியில் தைக்கப்பட்ட சட்டை. ஆனால் வீட்டிலிருந்த சட்டை பட்டர் சில்க் துணியால் தைக்கப்பட்டது.

வீட்டிலிருந்த குறித்த சட்டை வெளியிலிருந்த கொடியில் காயப் போடப்பட்டிருந்தது. அந்த சீருடையை தான் பொலிஸார் வந்து எடுத்துக் கொண்டு போனார்கள்.

அத்துடன் வீட்டிலிருந்த பழைய பாதணியையும் எடுத்துச் சென்றுள்ளனர். ரெஜினாவுக்கு குறித்த பாதணி போட முடியாது போய்விட்டதால் அதை வைத்து விட்டு வேறு பாதணியொன்றை வாங்கிக் கொடுத்தோம் என குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை சம்பவம் தொடர்பில் 3 குழுக்கள் விசாரணைகளை மேற்கொண்டு வரும் போதும் சிறுமியின் வீட்டிற்குச் சென்று வேறு சீருடையையும் பாதணியையும் பொலிஸார் பெற்றதாக கூறும் விடயம் இடம்பெறவில்லை என வட்டுக்கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

இதேவேளை யாழ். பொலிஸ் சிரேஸ்ட அத்தியட்சகர் இந்த விடயம் தொடர்பில் ஆராய்வதற்காக பொலிஸ் அதிகாரியொருவரை அப்பகுதிக்கு அனுப்புவதாக தெரிவித்துள்ளார் என கொழும்பு ஊடகமொன்று குறிப்பிட்டுள்ளது.

பிரித்தானியாவில் பரிதாபமாக உயிரிழந்த இலங்கை இளைஞன்!!

பிரித்தானியாவில் வாழும் இலங்கையர் ஒருவர் திடீர் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

லண்டனில் விளையாட்டு பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது ஏற்பட்ட தீடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

நைனமடு பிரதேசத்தில் பிறந்து வளர்ந்து பல வருடங்களுக்கு முன்னர் பிரித்தானியா சென்ற 43 வயதான ரொஷான் சுரங்க பெரேரா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்த ரொஷான் சுரங்க பாடசாலை காலம் முதல் தேசிய மட்ட விளையாட்டு போட்டிகளில் திறமையான ஒருவராக திகழ்ந்துள்ளார். தொழிலுக்காக முதலாவதாக இத்தாலி சென்றவர் பின்னர் பிரித்தானியாவில் குடியேறினார்.

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் லண்டனில் தனது குடும்பத்தினருடன் வாழும் வீட்டிற்கு அருகில் உள்ள மைதானத்தில் விளையாட்டு பயிற்சியில் ஈடுபட்ட போது போது திடீர் சுகயீனமடைந்துள்ளார்.

இதன் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர் உயிரிழந்துள்ளார். அவரது இறுதி அஞ்சலி நடவடிக்கைகள் பிரித்தானியாவில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் மூங்கில் செய்கைக்கு ஆதரவாக பேரணி!!

வவுனியா பழைய பேருந்து நிலையத்திலிருந்து வழிப்புனர்வுப் பேரணி ஒன்று இன்று(29.06) காலை 10.30 மணியளவில் ஆரம்பமாகி மாவட்ட செயலகத்திற்குச் சென்று மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமாரிடம் மகஜர் ஒன்றினைக் கையளித்துள்ளனர்.

மூங்கிலை வளர்ப்போம் எமது வாழ்வாதாரத்தைப் பாதுகாப்போம் எனும் பொருளில் சமூக ஆர்வலர்கள், விவசாயிகள், கிராமங்களின் பொது அமைப்புக்கள் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்த வழிப்புணர்வுப் பேரணியானது பழைய பேருந்து நிலைய்திதிலிருந்து ஆரம்பமாகி பிரதான கண்டி வீதி வழியாக மாவட்ட செயலகத்தைச் சென்றடைந்தது.

மூங்கிலினால் மண்வளம் நீர்வளம் பாதிப்பதாக இருந்தால் விஞ்ஞான பூர்வமான ஆதாரங்களை முன்வையுங்கள், அவ்வாறு தைரியமிருந்தால் பகிரங்க விவாதத்திற்கு வருவதற்கு தயாராகுங்கள்.

மூங்கில் நீர் வளம் மண்வளத்தை பாதிப்பதாக கூறும் மூங்கில் எதிர்ப்பாளர்கள் ஒன்றை மறந்தவிட்டனர். பார்த்தீனியம் ஒழிப்பு என்று ஆரம்பித்தனர் அதுமட்டுமல்ல பார்த்தீனியத்திற்கு நீதிமன்ற தடை சட்டம் கூட உள்ளது குற்றப்பணம் கூட அறவிடப்பலாம். மூங்கில் செய்கை மூலம் உலகில் வல்லரசாகிய நாடுகள் எத்தனை என்பது தொயுமா? மூங்கில் வளர்த்து விற்பனை செய்வதால் ஒரு பயனாளி குடும்பம் ஒரு மாதம் உழைக்கும் வருமானம் தெரியுமா? போன்ற வாசகங்கள் அடங்கிய துண்டப்பிரசுரம் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டது.

வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமாரிடம் பேரணியினை மேற்கொண்டவர்கள் தமது கோரிக்கை அடங்கிய மகஜர் ஒன்றினைக் கையளித்துள்ளனர்.

கர்ப்பிணி பெண் என்றும் பாராமல் நண்பனின் மனைவிக்கு கயவர்கள் செய்த கொடூரம்!!

திருவாரூர் மாவட்டத்தில் இளவரசன் என்பவரின் கர்ப்பிணி மனைவியை அவரது நண்பர்கள் சேர்ந்து கற்பழித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இளவரசன் திருப்பூரில் வேலை பார்த்த போது அவருடன் ஒன்றாக வேலை செய்து வந்த அவரது நண்பர்கள் நித்தையன், பூவரசன் ஆகிய இருவரும் பேட்டையில் நடந்த கோயில் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக திருப்பூரில் இருந்து ஊருக்கு வந்தனர்.

ஊருக்கு வந்த இடத்தில் இளவரசன் வீட்டிற்கு வந்து அவரை சந்தித்து பேட்டை கோவில் திருவிழாவிற்கு வருமாறு அழைத்தனர்.

நண்பர்களின் அழைப்பை ஏற்று இளவரசன் கோவில் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக நண்பர்களுடன் புறப்பட்டு சென்றார். அங்கு சென்றதும் நித்தையனும், பூவரசனும் கோவில் திருவிழாவுக்கு காவடி கட்டும் வேலையை இளவரசனிடம் செய்யுமாறு கூறினர். இதனையடுத்து காவடி கட்டும் பணியில் அவர் ஈடுபட்டு இருந்தார்.

அப்போது நித்தையனும், பூவரசனும் அங்கிருந்து புறப்பட்டு இளவரசனின் வீட்டிற்கு வந்து அப்பெண்ணை மாறிமாறி பலாத்காரம் செய்துள்ளனர்.

ஒரு கட்டத்தில் அப்பெண்ணின் அலறல் சத்தம் கேட்ட பக்கத்துவீட்டார் ஓடி வந்துள்ளனர். உடனே அவர்கள் இருவரும் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து பொலிசில் புகார் அளிக்கப்பட்டதையடுத்து, இருவரும் கைது செய்யப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

அம்பானியின் மகனின் நிச்சயதார்தத்திற்கு லண்டனில் இருந்து வரும் உணவுகள்!!

இந்தியாவின் தொழிலதிபரும் ஆசியாவின் நம்பர் வ ன் பணக்காரருமான முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானியின் நிச்சயதார்த்தம் வருகிற ஜீன் 30 ஆம் திகதி அவர்களது ஆண்டலியா இல்லத்தில் நடைபெறவிருக்கிறது.

இதற்காக பிரத்யேகமான முறையில் அழைப்பிதழ்கள் தயார் செய்யப்பட்டு உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் கொடுக்கப்பட்டுவிட்டது.

இந்நிலையில் நிச்சயதார்த்தத்திற்கு முன்பாக நேற்று மெகந்தி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பாலிவுட் நட்சத்திரங்கள் பலரும் கலந்துகொண்டனர்.

ஆகாஷ் மற்றும் ஸ்லோகாவின் நிச்சயதார்த்தத்திற்கு உணவுப்பொருட்கள் French luxury bakery Laduree – யில் தயாரிக்கப்படுகிறது.

macarons, icing sugar, ground almond போன்றவவை இங்கு பிரபலமானவை. International gourmet brands லண்டன் மற்றும் நியூயோர்க்கில் இருந்து வரவழைக்கப்படுகின்றன.

உடன்பிறந்த தம்பியை ஓட ஓட கத்தியால் குத்திய அண்ணன் : அலறியடித்து ஓடிய பொதுமக்கள்!!

அறந்தாங்கி அருகே குடும்பத்தகராறு காரணமாக உடன் பிறந்த தம்பியை, அண்ணனே நடுரோட்டில் ஓட ஓட விரட்டி குத்தி கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

அறந்தாங்கி அருகே உள்ள நாயக்கர்பட்டியை சேர்ந்தவர்கள் வெள்ளைச்சாமி மற்றும் கணேசன் (38). உடன்பிறந்த சகோதரர்களான இருவருமே ஒரே உணவகத்தில் வேலை செய்து வந்துள்ளனர். ஒரே இடத்தில் வேலை செய்தாலும், குடும்பத்தகராறு காரணமாக இருவருக்குமிடையே பேச்சு வார்த்தை கிடையாது.

இந்த நிலையில் வழக்கம்போல இன்றும் வேலையில் ஈடுபட்டிருக்கும்போது, இருவருக்குமிடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில் வாய்த்தகராறு முற்றவே, வெள்ளைச்சாமி அங்கிருந்த காய்கறி நறுக்கும் கத்தியை எடுத்துள்ளார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த கணேசன் அங்கிருந்து ஓட்டம் பிடிக்க ஆரம்பித்துள்ளார். ஆனால் அவரை விரட்டி சென்ற வெள்ளைச்சாமி, நடுரோட்டில் ஓட ஓட விட்டு கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். பட்டப்பகலில் நடந்த இந்த துயரசம்பவத்தை பார்த்த பொதுமக்கள் அனைவரும், பயத்தில் அலறியடித்து அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.

தன் உயிரை கொடுத்து மாணவர்களின் உயிரை காப்பாற்றிய சாரதி : நெகிழ்ச்சி சம்பவம்!!

மகாராஷ்டிராவில் டிரைவர் ஒருவர், தன்னுடைய உயிரை கொடுத்து பள்ளி மாணவர்களின் உயிரை காப்பாற்றியுள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது.

மகாராஷ்டிராவின் விரார் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் பேருந்து ஓட்டுநராக பணியாற்றி வருபவர் பிரகாஷ் பாட்டீல்.

தினமும் பள்ளி மாணவர்களை பேருந்தில் ஏற்றிக்கொண்டு பள்ளியில் விடுவதும், பின்னர் பத்திரமாக அவர்களை வீட்டில் சேர்ப்பதும் தான் வேலையாக செய்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த திங்கட்கிழமையன்று விரார் பகுதியில் கடுமையான மழை பெய்ததால் வேகமாகவே பள்ளி விடுமுறை விடப்பட்டது.

இதனையடுத்து, பள்ளியிலிருந்து மாணவர்களை அழைத்து செல்லும்பொழுது, கடிமான மழை பெய்ததால் வழக்கமான பாதையில் பயணிக்காமல், வேறு பாதையில் சென்றுள்ளார்.

நரிகினி என்ற கிராமம் அருகே பேருந்து சென்று கொண்டிருந்த பொழுது, பலத்த மழையின் காரணத்தால் பேருந்தை நிறுத்தியுள்ளார்.

அப்போது மூன்று மாணவர்களின் பேருந்தில் இருந்து இறங்கியுள்ளனர், இதில் எதிர்பாராதவிதமாக பள்ளத்தில் சிக்கவே, சற்றும் யோசிக்காமல் அவர்களை காப்பாற்றிய ஓட்டுநரால் மேலே வர இயலவில்லை.

தண்ணீரில் அளவு அதிகரித்ததால், பிடிமானத்தை இழந்த பிரகாஷ் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளார்.

உயிருக்கு போராடிய பிரகாஷை பார்த்த சிறுவர்கள் மூன்று பெரும், “மாமா மாமா” என சத்தமிட்டு உதவிக்கு அழைத்துள்ளனர். ஆனால் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளத்தில் வேகமாகவே பிரகாஷ் மாயமானார்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவலர்கள், தீவிரமான தேடுதல் வேட்டைக்கு பின்னர் ஒரு கிமீ தூரத்தில் பிரகாஷ் உடலை கண்டெடுத்தனர்.

பிரகாஷ் மிகவும் நல்ல குணம் படைத்தவர், அவரை நம்பியே அவரது குடும்பம் இயங்கி வந்தது, அவரது மனைவி Pranali, மகள் Neha (16) மற்றும் மகன்கள் Harshal (13), Pratik (11) ஆகியோருக்கு, அரசு ஏதாவது உதவி செய்ய வேண்டும் என அவரது அண்ணன் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

சொந்த வீட்டிலேயே கொல்லப்பட்ட நபர் : மகள்கள், மனைவியே திட்டம் தீட்டியது அம்பலம்!!

இந்தியாவில் கூலிப்படையை ஏவி தந்தையை திட்டம் தீட்டி கொன்ற மகள்கள் மற்றும் மனைவி கைது செய்யப்பட்டுள்ளனர்.

உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர் Meharbaan Ali, இவரது மனைவி Zahida Begum மற்றும் நான்கு மகள்கள் உள்ளனர். சப் இன்ஸ்பெக்டரான இவர், கடந்த சில நாட்களுக்கு முன் காணாமல் போனார்.

பொலிசார் விசாரணை நடத்தியதில், இவர்களது வீட்டிலிருந்து வெறும் 250 மீற்றர் தொலைவில் பாதாள சாக்கடையிலிருந்து சடலமாக மீட்கப்பட்டார்.

சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது, இவரது குடும்பத்தினர் மீது பொலிசுக்கு சந்தேகம் எழுந்தது.

இதனையடுத்து இவரது மனைவியின் செல்போனை ஆய்வு செய்த போது ஒரு நம்பருக்கு தொடர்ந்து போன் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

குறித்த நபரை பிடித்து விசாரித்ததில் உண்மையை ஒப்புக்கொண்டார்.

Meharbaan Ali இறந்துவிட்டால் பென்ஷன் பணம் கிடைக்கும் என்பதற்காவும், அதிக கட்டுப்பாடுகளை விதித்ததால் மனைவி மற்றும் மகள்களே திட்டம் போட்டு கொன்றதும் தெரியவந்துள்ளது.

சம்பவதினத்தன்று பணிமுடிந்து வீட்டுக்கு வந்தவரை கூலிப்படை வைத்து கொன்றுள்ளனர், அன்றைய தினம் மாலையே அவரது சடலத்தை பாதாள சாக்கடையில் போட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.

Meharbaan Ali இறந்துவிட்டால்,

குடும்பத்தில் ஒருவருக்கு அரசாங்க வேலை கிடைக்கும்.
மாதந்தோறும் மனைவிக்கு பென்ஷன் வரும்
பணியில் இருக்கும் போது இறந்ததால் உதவி கிடைக்கும்.
இந்த மூன்று காரணங்களுக்காகவே குடும்பத்தினர் திட்டம் போட்டு கொன்றதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

திருமணமாகிய 2 மாதத்தில் கணவன் மாயம் : விரக்தியில் மனைவி தீக்குளிப்பு!!

திருவள்ளூர் அருகே திருமணமான இரண்டே மாதங்களில் கணவன் வேறு ஒரு பெண்ணுடன் மாயமாகியுள்ளதை பொறுத்துக்கொள்ள முடியாமல், மனைவி தீக்குளித்து தற்கொலை செய்துள்ளார்.

வேலூர் மாவட்டம் புதுப்பட்டு கிராமத்தை சேர்ந்த தங்கராஜுக்கும், வேலூரை சேர்ந்த அவரது அத்தை மகள் அர்ச்சனா தேவிக்கும் கடந்த ஏப்ரல் 20-ம் தேதி திருமணம் நடந்துள்ளது. திருமணத்திற்கு முன்பு வரை அவரது சொந்த ஊரில் கோமதி என்ற பெண்ணை காதலித்து வந்த தங்கராஜ், திருமணத்திற்கு பின்பும் கோமதியுடன் இணைப்பில் இருந்துள்ளார்.

இது அர்ச்சனாவுக்கு தெரியவரவே, தங்கராஜை கண்டித்துள்ளார். ஆனால் இதனை பொருட்படுத்தாத தங்கராஜ், தினமும் அர்ச்சனாவுடன் வார்த்தை மோதலில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இதற்கிடையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அத்தை வீட்டிற்கு சென்ற தங்கராஜ், அங்கு அர்ச்சனாவை அவரது வீட்டில் விவிட்டுவிட்டு, தன்னுடைய உள்ளூர் காதலி கோமதியுடன் மாயமாகியுள்ளார்.

இதனை தெரிந்துகொண்ட அர்ச்சனா காவல்துறையில் புகார் அளித்துள்ளார். ஆனால் கால்துறையின் அலட்சியம் காரணமாக எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளாத நிலையில், திடீரென அர்ச்சனா வீட்டின் பின்புறம், மண்ணெண்ணெய்யை ஊற்றிக்கொண்டு தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இதனை பார்த்த பொதுமக்கள் விரைந்து சென்று காப்பாற்ற மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், அர்ச்சனாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

முல்லைத்தீவில் மூதாட்டி ஒருவர் செய்த துணிகர செயல்!!

முல்லைத்தீவு – செல்வபுரத்தில் 80 வயது மூதாட்டி ஒருவரின் துணிகரமான செயல் அப்பகுதியில் பெரிதும் பேசப்படுகின்றது.

குறித்த மூதாட்டி அவரது மகளுடன் வாழ்ந்து வந்துள்ளார். மகள் ஆசிரியர் தொழில் செய்து வருகின்றார். இந்த நிலையில் மூதாட்டி தனது மகனை பார்க்க செல்வதற்கு மகள் அனுமதி கொடுப்பதில்லை என தெரியவருகின்றது.

இதனால் மகள் பாடசாலை சென்ற சந்தர்ப்பத்தில் மூதாட்டி மகளுடைய வீட்டை விட்டு வெளியேறி நடக்க முடியாத நிலையில் வீதியில் இருந்து சிரமப்பட்டுள்ளார்.

இதன்போது வீதியால் சென்றவர்களிடம் தனது மகனின் வீட்டிற்கு செல்வதற்கு உதவிசெய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், அப்பகுதியில் சென்ற ஒருவர் குறித்த மூதாட்டியின் மகனை அழைத்துவந்து மூதாட்டியை மகனிடம் ஒப்படைப்பதற்கு உதவியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தரையில் வீழ்ந்து தீப்பிடித்த வானூர்தியின் திகில் காட்சிகள்!!

மும்பையில் தனியாா் நிறுவனத்துக்கச் சொந்தந்தமான சிறிய ரக வானூர்தி ஒன்று வானில் பறந்து கொண்டிருந்த போது திடீரென கட்டுமான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த இடத்தில் வீழ்ந்து நொறுங்கியது.

தரையில் விழுந்த உடன் வானூர்தி தீப்பிடித்து எரியத் தொடங்கியதால் மீட்பு பணிகளை மேற்கொள்ள சிரமம் ஏற்பட்டது.

இதனைத் தொடா்ந்து தீயணைப்பு வீரா்களின் உதவியுடன் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

12 இருக்கைகள் கொண்ட சிறிய ரக வானூர்தியில் விமானி உள்பட 4 போ் உயிாிழந்திருப்பதாக கூறப்படுகிறது.

மும்பை வானூர்தி நிலையத்திற்கு 3 கிலோ மீற்றருக்கு அப்பால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. விபத்துக்குள்ளான வானூர்தி இதற்கு முன்னா் உத்தரபிரதேச அரசின் கட்டுப்பாட்டில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

டொலரின் பெறுமதி 200 ரூபாய் வரை அதிகரிக்கும்?

அரசாங்கம் முன்னெடுத்து வரும் பொருளாதார கொள்கைகள் காரணமாக அமெரிக்க டொலரின் பெறுமதி 200 ரூபாய் வரை அதிகரிப்பதை தவிர்க்க முடியாது என கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

நிதியமைச்சு மக்களின் பணத்தை வரை முறையின்றி பயன்படுத்து தொடர்பான தகவல்களை தகவல் அறியும் சட்டத்தின் கீழ் பெற்றுக்கொள்ள இன்று நிதியமைச்சு வந்திருந்த பந்துல குணவர்தன, ஊடகங்கவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே இதனை கூறியுள்ளார்.

சிங்கப்பூருடனான சுதந்திர வர்த்தக உடன்படிக்கை செயற்படுத்தப்பட்டால், இந்த நிலைமை மேலும் அதிகரிக்கும்.

தற்போதைய அரசாங்கம் பதவிக்கு வரும் போது கடனை செலுத்த போதுமான வருமானம் இருக்கவில்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறியது உண்மைக்கு புறம்பானது என்றும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கடந்த அரசாங்கம் கடன்களுக்கான தவணை பணத்தை செலுத்திய பின்னர் வருமானத்தில் ஓரளவு பணம் சேமிக்கப்பட்டிருந்தது எனவும் பந்துல குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.

யாழில் பெண் ஒருவர் கழுத்து வெட்டப்பட்டு கொலை : பிச்சைக்காரன் கைது!!

யாழ். மானிப்பாயில் பிச்சை எடுக்க வந்தவர்களாலேயே குறித்த பெண்மணி கொலை செய்யப்பட்டுள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

குறித்த சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் 35வயதுடைய நபர் ஒருவர் மானிப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று காலை சுமார் 8 மணியளவில் பிச்சைக்காரன் ஒருவர்வீட்டிற்குச் சென்று பிச்சை கேட்டுள்ளார். அப்போது, அந்த மூதாட்டி 100 ரூபாய் காசுகொடுத்துள்ளார்.

அந்த காசினை வாங்கிக் கொண்டு போன பிச்சைக்காரன் 30நிமிடங்களின் பின்னர் மீண்டும் அந்த வீட்டிற்குச் சென்று மூதாட்டியை கத்தியால்குத்திக் கொலை செய்துள்ளான்.

பின்னர் வீட்டிலுள்ள மற்றைய வயோதிபப் பெண் மூதாட்டியை வந்து பார்த்த போது, மூதாட்டிகழுத்து அறுக்கப்பட்ட நிலையில், இரத்தத்துடன் காணப்பட்டுள்ளார்.

பதறிய வயோதி பெண், பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.அந்த தகவலின் பிரகாரம் சம்பவ இடத்திற்குச் சென்ற மானிப்பாய் பொலிஸார்விசாரணைகளை முன்னெடுத்தனர்.

அதன்போது, மல்லாகம் நீதிமன்ற நீதிபதி சம்பவஇடத்திற்கு வந்து சடலத்தினைப் பார்வையிட்டதுடன், சடலத்தினை யாழ்.போதனாவைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைக்குமாறு உத்தரவிட்டார்.

இதன்போது, பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்ட ஆரம்ப கட்ட விசாரணையின் போது,யாழ்ப்பாணம் ஆணைக்கோட்டைப் பகுதியைச் சேர்ந்த மனநிலை பாதிக்கப்பட்ட சுமார் 35வயதுடைய ஜெயனாந்தன் சுதர்சன் என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட நபரிடம் மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தவுள்ளதாகவும் மானிப்பாய்பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், கொலைச் சம்பவம் இடம்பெற்ற வீட்டிற்கு அருகில் உள்ளவீட்டில் சி.சி.ரி.வி கெமரா பொருத்தப்பட்டுள்ளது.

அந்த வீட்டின் சி.சி.ரி.விகாணொளிகளைப் பெறுவதற்கான நீதிமன்ற அனுமதிகளைப் பெறும் நடவடிக்கைகள்முன்னெடுக்கப்பட்டு வருகின்றதாகவும் மானிப்பாய் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

யாழில் பெற்றோல் குண்டு தாக்குதல் : அதிகாலையில் அட்டூழியம் செய்த வாள்வெட்டுக் குழு!!

யாழ்ப்பாணம் – மானிப்பாய், லோட்டன் வீதி இந்துக் கல்லூரிக்கு முன்பாக உள்ள வீட்டுக்குள் புகுந்த கும்பல், பெற்றோல் குண்டுத் தாக்குதல் மற்றும் வாள்வெட்டு என பெரும் அட்டூழியத்தில் ஈடுபட்டு தப்பிச் சென்றுள்ளது. இந்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.

வாள்வெட்டுக் கும்பலால் அந்த வீட்டின் மீது நடத்தப்படும் இரண்டாவது பெரும் தாக்குதல் இதுவாகும். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

10 பேர் கொண்ட கும்பல் வாள்களுடன் வந்து, அந்த வீட்டில் பெற்றோல் குண்டு தாக்குதலை மேற்கொண்டது. அதனால் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் தீப்பற்றி எரிந்துள்ளது.

வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புக் கமராக்களையும் அடித்து நொருக்கியுள்ளது.

கதவை கொத்தி சேதப்படுத்தி, வீட்டின் குடும்பத் தலைவருக்கு வாளால் வெட்டியுள்ளனர். இதனால் அவரது வயிறுப் பகுதியில் வெட்டு விழுந்துள்ளது.

மேலும், வீட்டின் தளபாடங்களை நொருக்கிய கும்பல் நீண்ட நேர அட்டூழியத்தை அரங்கேற்றி அங்கிருந்து வாள்களுடன் அச்சமின்றி வீதியால் சென்றுள்ளதாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கு முன்னரும் அந்த வீட்டுக்குள் புகுந்த கும்பல், மாணவியின் புத்தகங்களை தீயிட்டு எரித்து பெரும் அட்டூழியத்தில் ஈடுபட்டு தப்பித்திருந்தது.

அந்த குடும்பத்தலைவரின் மகன், ஆவா குழுவைச் சேர்ந்தவர்களைக் காட்டிக்கொடுத்தார் என்பதை பழிதீர்க்கும் வகையிலேயே இவ்வாறு அந்த குடும்பத்தை இலக்கு வைத்து தாக்குதல்கள் நடத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸாருக்கு உடனடியாக தகவல் வழங்கப்பட்டது. எனினும் அவர்கள் சம்பவ இடத்துக்கு வருவதில் தாமம் ஏற்பட, வாள்வெட்டுக் கும்பல் அங்கிருந்து தப்பித்தது சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.