சைக்கிளை திருடுவதற்காக மரத்தை வெட்டிய திருடன்!!

ஜேர்மன் நகரமாகிய Kasselஇல் சைக்கிள் ஒன்றைத் திருடுவதற்காக பல ஆண்டுகள் வளர்ந்த ஒரு மரத்தையே திருடன் ஒருவன் வெட்டிய சம்பவம் இயற்கை ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தனது சைக்கிளை ஒரு மரத்துடன் சேர்த்து பூட்டி வைத்து விட்டு சென்ற ஒரு நபர், பின்னர் மீண்டும் அதை எடுத்துச் செல்வதற்காக வந்தபோது சைக்கிள் காணாமல் போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

அவருடைய அதிர்ச்சிக்கு காரணம் சைக்கிள் காணாமல் போனது மட்டுமல்ல அந்த சைக்கிளை எந்த மரத்தோடு சேர்த்து வைத்து பூட்டியிருந்தாரோ, அந்த மரமே காணாமல் போனதுதான். 13 வயதான அந்த மரம், 50 சென்றிமீற்றர்கள் சுற்றளவு கொண்ட மரம் என பொலிசார் தெரிவித்தனர்.

அந்த மரத்தை வெட்டியிருந்த விதத்தைப் பார்க்கும்போது, அதை வெட்டிய நபர் தொழில் ரீதியாக மரம் வெட்டும் ஒரு நபராக இருக்க வேண்டும் என்பது நன்கு தெரிகிறது, ஏனென்றால் அந்த மரத்தை எப்படி வெட்டினால் அது சைக்கிளை பாதிக்காத வகையில் விழும் என்பது வரை சரியாக கணித்து அந்த மரம் வெட்டப்பட்டிருந்தது.

சுற்றுச்சூழல் நிர்வாக அலுவலகத்தின் கணிப்புப்படி அந்த மரத்தை வெட்டியதால் ஏற்பட்டுள்ள இழப்பு 5,000 யூரோக்கள் ஆகும்.

அதே நேரத்தில் அந்த நபர் திருடிய சைக்கிளின் விலை 2,200 யூரோக்கள் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

உலகையே உலுக்கிய குழந்தையின் : தற்போதைய நிலை என்ன தெரியுமா?

தனது தாயை பொலிசார் சோதனையிடும்போது மிரண்டு, முகத்தில் பயமும் கோபமும் கொந்தளிக்க கண்ணீருடன் கதறியழும் ஒரு குழந்தையின் புகைப்படம் வெளியாகி அமெரிக்காவின் பொது ஜனம் முதல் அமெரிக்க அதிபரின் மகள் வரை அனைவரையும் அதிர வைத்தது.

அந்தக் குழந்தை ஹோண்டூராசைச் சேர்ந்த Denis Javier Varela Hernandez (32) என்பவரின் மகள், அவளது பெயர் Yanela (2).

எல்லை தாண்டி சட்ட விரோதமாக அமெரிக்காவிற்குள் நுழைந்தவர்களைக் கைது செய்து அவர்களிடமிருந்து அவர்களது குழந்தைகளைப் பிரிக்கும் டிரம்பின் நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான குழந்தைகளில் Yanelaவும் ஒருத்தி.

அவளது தாயான Sandra தனது கணவரின் விருப்பத்திற்கு விரோதமாக இன்னும் கொஞ்சம் வசதியாக வாழலாம் என்னும் எண்ணத்தில் சட்ட விரோதமாக ஏஜன்ட் ஒருவருக்கு பணம் கொடுத்து அமெரிக்காவிற்குள் நுழையும்போது பொலிசாரிடம் சிக்கினாள்.

பெற்றோர்களிடமிருந்து குழந்தைகள் பிரிக்கப்பட்டு மிருகங்கள்போல இரும்புக் கூண்டுகளுக்குள் அடைக்கப்பட்டிருந்த புகைப்படங்கள் வெளியாகி உலகெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் Yanela கண்ணீர் விட்டழும் காட்சி TIME பத்திரிகையில் அட்டைப் படமாகி பலரது கவனத்தையும் ஈர்த்தது.

பல நாடுகளிலும், ஏன் தனது குடும்பத்திலுமே பயங்கர எதிர்ப்பு தோன்றுவதைக் கண்ட டிரம்ப் வழக்கம்போல தனது நடவடிகையிலிருந்து பின்வாங்கினார்.

இந்நிலையில் Yanelaவின் தந்தையான Denis Javier, தற்போது தனது மனைவியும் மகளும் பாதுகாப்பாக இருப்பதாகவும் நன்றாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

அவர்கள் இருவரும் சேர்ந்து விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ள செய்தி அந்தக் குழந்தைக்காக மனம் வருந்திய பல நல்ல உள்ளங்களுக்கு ஆறுதல் அளிப்பதாக உள்ளது.

தனது மகள் கண்ணீர் விட்டுக் கதறும் புகைப்படத்தை கண்டு தானும் கதறி விட்டதாகக் கூறும் Denis Javier, அமெரிக்காவிற்குள் மக்கள் நுழைவது நிற்கப்போவதில்லை என்கிறார்.

அவர்கள் அமெரிக்காவைச் சுற்றி ஒரு சுற்றுச் சுவர் எழுப்பினாலும் மக்கள் அமெரிக்காவிற்குள் நுழைவதும் போதை பொருட்கள் கடத்திக் கொண்டு செல்லப்படுவதும் நிற்கப்போவதில்லை என்கிறார் Denis Javier.

கனடாவில் நாடு கடத்தலை எதிர்நோக்கியுள்ள இலங்கையர்கள்!!

அமெரிக்காவின் இரகசியங்களை வெளியிட்ட எட்வேட் ஸ்னோடனுக்கு தங்குமிடத்தை ஏற்படுத்திக் கொடுத்தமைக்காக நாடு கடத்தலை எதிர்நோக்கியுள்ள இலங்கையர்களுக்கு அடைக்கலம் வழங்க வேண்டும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் கனடாவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இலங்கையில் இடம்பெற்ற போர் காரணமாக அஜித் டேபாகமே கன்காமலகே என்ற இலங்கையர், நாட்டில் இருந்து தப்பிச்சென்று மூன்றாம் நாடு ஒன்றுக்கு செல்வதற்காக ஹொங்கொங்கில் அடைக்கலம் பெற்றார்

இந்த சந்தர்ப்பத்தில் அமெரிக்காவின் இரகசியங்களை வெளியிட்டமைக்காக அமெரிக்காவிலிருந்து வெளியேறிய எட்வேட் ஸ்னோடனும் ஹொங்கொங்குக்கு சென்றுள்ளார்.

இதன்போது அவருக்கு குறித்த இலங்கையர் தங்குமிட வசதிகளை ஏற்படுத்திக்கொடுத்துள்ளார்.

இதனை காரணமாக கொண்டு குறித்த இலங்கையரின் அகதி அந்தஸ்து கோரிக்கை நிராகரிக்கப்படலாம் என்று அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு விரைவில் இடம்பெறவுள்ளது.

இந்த நிலையில் அவர் வழக்கில் தோல்வியடைந்தாலும் அவருக்கு அடைக்கலம் வழங்கவேண்டும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் கனடாவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

மனைவியை கழுத்தறுத்து கொன்ற கணவன் : குழந்தைகளுடன் பொலிசில் சரண்!!

தமிழகத்தில் தனது இரண்டாவது மனைவியின் மீது ஏற்பட்ட சந்தேகத்தால், கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு, குழந்தைகளுடன் பொலிசில் சரணடைந்த கணவரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே உள்ள கொண்டமநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் சிவமுருகன். அரசு போக்குவரத்துக்கழகத்தில் ஓட்டுநராக வேலை பார்த்து வரும் இவரது முதல் மனைவி உடல்நலக் குறைவால் இறந்துவிட்டார்.

அதன் பின்னர், 3 ஆண்டுகள் கழித்து கல்யாணப்பிரியா என்ற பெண்ணை, சிவமுருகன் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதியருக்கு ஒரு வயதிலும், இரண்டு வயதிலும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில், சிவமுருகனுக்கு தனது மனைவியின் நடத்தை மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதே போல், இன்று காலையும் இவர்களுக்கும் தகராறு ஏற்பட்டு வாக்குவாதம் முற்றியது.

இதனால் ஆத்திரமடைந்த சிவமுருகன், தனது மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். அதன் பின்னர், தனது இரண்டுகுழந்தைகளையும் அழைத்துக் கொண்டு ஆண்டிப்பட்டி காவல்நிலையத்தில் சரணடைந்தார்.

சிவமுருகனிடம் வாக்குமூலம் பெற்ற பொலிசார், அவரது வீட்டிற்கு சென்று கல்யாணப்பிரியாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதனைத் தொடர்ந்து, இரண்டு குழந்தைகளையும் சிவமுருகனின் பெற்றோரிடம் பொலிசார் ஒப்படைத்தனர். மேலும், இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

ஐபோன் திருடியவனை பேஸ்புக் வைத்தே கண்டுபிடித்த கில்லாடி இளைஞர்கள் : எப்படி தெரியுமா?

தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் ஐபோன் திருடியவனை பேஸ்புக் மூலம் வைத்து கண்டுபிடித்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தின் சென்னையைச் சேர்ந்தவர் சிமியோன். இவர் சமீபத்தில் தன்னுடைய சிம்கார்டை தொலைத்துவிட்டதால், உடனடியாக சென்னையின் புரசைவாக்கத்தில் இருக்கும் ஏர்டெல் ஷோ ரூமுக்கு சென்று புதிய சிம் வாங்கியுள்ளார்.

சிம் வாங்கிய பின் கடையை விட்டு வெளியே வந்த போது சிமியோனின் விலைமதிப்புமிக்க ஐபோன் காணமல் போயுள்ளது. இதனால் கடை முழுவதும் தேடியும் கிடைக்காததால், சிமியோன் சற்று யோசித்துள்ளார்.

அப்போது அவர் உள்ளே நுழையும் போது தட்டிவிட்டு போன நபர் மீது சந்தேகம் வந்துள்ளது. அந்த சந்தேகத்தை அடிப்படையாக வைத்து சிசிடிவி காட்சிகளை போட்டுக்காட்ட சொல்லி இருக்கிறார் சிமியோன். அவர்களும் போட்டுக் காட்டி இருக்கிறார்கள்.

அதில் அந்த நபர் தான் போனை எடுத்துச் சென்றுவிட்டார் என்பது உறுதியாகியுள்ளது. ஆள் தெரிந்த போது, தப்பித்துவிட்டாரே என்று எண்ணி போது, அவர் உடனடியாக அந்த ஷோ ரூமில் போனை திருடியவரிடன் நம்பர் இருக்கிறதா என்று கேட்டுள்ளார்.

அதன் பின் அவர்கள் கொடுத்த நம்பரை ட்ரூ காலரில் போட்டு தேடி இருக்கிறார். அந்த சிம் பீகாரில் உள்ளது என தெரிய வந்துள்ளது. அதே நம்பரை வைத்து பேஸ்புக்கில் துழாவிய போது போனை எடுத்தவரின் பேஸ்புக் அக்கவுண்ட கிடைத்துள்ளது.

சிசிடிவி புட்டேஜில் உள்ள முகமும் பேஸ்புக் முகமும் பொருந்தியுள்ளது. உடனடியாக அவரது நண்பர்களை தொடர்பு கொண்டு நம்பரை கேட்டிருக்கிறார்கள்.

அவர்கள் யாரும் கொடுக்கவில்லை என்பதால், வடநாட்டு மொழியில் அவரின் நண்பர்களிடம் எங்க நண்பர் ஒருவருக்கு அவர் ஆலோசகராக இருந்தார். ஆனால் அவர் தற்போது எங்க இருக்கிறார் என்று கேட்ட பின்பு நம்பர் கொடுத்துள்ளனர்.

அதன் பின் அவரைப் பற்றி விசாரித்த போது மாதவரம் பகுதியில் இருப்பது தெரியவந்ததால், அங்கு போய் காத்துள்ளனர். ஆனால் திருடன் சிக்காததால், மறுநாள் மீண்டும் அங்கு சென்று நின்றுள்ளனர்.

திட்டமிட்ட படி திருடன் வர, அவனை பிடித்து விசாரித்த பின்னர் கடைசியாக போன் கைக்கு கிடைத்துள்ளது. இவை அனைத்தையும் சிமியோன் தனி ஒருவனாக செய்யவில்லை, இவருடைய நண்பர் ஜாபரும் உடன் இருந்து உதவியுள்ளார்.

சென்னையைச் சேர்ந்த இவர்கள் இருவரைப் பற்றி தான் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பேசப்பட்டு வருகிறது.

நடிகர் விஜய் இதற்காக வெட்கப்பட வேண்டும் : அன்புமணி ஆவேசம்!!

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் 62வது படத்துக்கு சர்கார் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இப்படத்தை சன்பிக்சர்ஸ் தயாரிக்கிறது, நேற்று இப்படத்தின் First Look வெளியானது.

அதில் கருப்பு நிற உடையுடன் காட்சியளிக்கும் நடிகர் விஜய் புகைப்பிடித்துக் கொண்டிருக்கிறார், பின்புறத்தில் ஒரு நகரம் காட்டப்படுகிறது.

First Look வெளியான உடனே சர்ச்சையும் தொடங்கிவிட்டது, அதாவது நடிகர் விஜய் இனிமேல் புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடிக்க மாட்டேன் என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாசுக்கு உறுதி அளித்திருந்தார்.

இதனை கண்டுகொள்ளாமல் விஜய் நடித்துள்ளதற்கு அன்புமணி ராமதாஸ் டுவிட்டரில் கடுமையாக சாடியுள்ளார். அதில், தனது புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் புகைப்பிடிக்கும் காட்சிகளை விளம்பரப்படுத்துவதற்கு நடிகர் விஜய் வெட்கப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

பொலிஸ் சீருடை அணிந்த விவகாரம் : புழல் சிறையில் அடைக்கப்பட்ட நடிகை!!

தொலைக்காட்சி நடிகை நிலானி, பொலிஸ் சீருடையில் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து கருத்து தெரிவித்து வெளியிட்ட வீடியோ பதிவு, சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது குறித்து வடபழனி பொலிசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக இருந்த நிலானியை தேடி வந்தனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் குன்னூரில் இருந்த நிலானியை கைது செய்தனர்.

குன்னூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பிறகு அவரை நேற்று சென்னை வடபழனி பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். பின்னர் நிலானியை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினர்.

நிலானியை ஜூலை மாதம் 5ம் திகதிவரை நீதிமன்ற காவலில் அடைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து நடிகை நிலானியை பொலிசார் புழல் சிறையில் அடைத்தன

சாமர்த்தியமாக 2000 பேரின் உயிரை காப்பாற்றிய சிறுமி : குவியும் பாராட்டுகள்!!

கடந்த 15ம் திகதி திரிபுராவின் அகர்தலாவின் தலாய் அருகே அம்பாசாவில் நிலச்சரிவால் ரயில்வே தண்டவாளம் பழுதடைந்திருந்தது.

இதனை அறியாமல், சுமார் 2000 ஆயிரம் பேருடன் ரயில் ஒன்று தண்டவாளத்தில் வந்தது. இதனை அறிந்த பழங்குடியின 9 வயது சிறுமி சோமதி மற்றும் தந்தை டெப்பார்மா தங்களது சட்டையை காட்டி ரயிலை நிறுத்தி விபத்தை தடுத்தனர்.

சம்பவத்தையறிந்த அமைச்சர் சுதீப்ராய் பர்மா தனது வீட்டிற்கு 2 பேரையும் அழைத்து பாராட்டி உணவளித்தார். மேலும், 2000 ஆயிரம் பேரின் உயிரை காப்பாற்றிய சிறுமிக்கு பாராட்டுகள் குவிந்துள்ளன.

நிறைமாத கர்ப்பிணியை கொன்றது ஏன் : கணவனின் திடுக்கிடும் வாக்குமூலம்!!

தமிழகத்தில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை கொடூரமாக கொன்றுவிட்டு நாடகமாடிய கணவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டத்தின் பூவனூர் கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசன்(வயது 25), ஓட்டுநராக பணியாற்றி வந்துள்ளார்.

இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஜெயந்திக்கும் காதல் மலர்ந்துள்ளது, இவர்கள் நெருங்கி பழகவே, கர்ப்பமாகியுள்ளார் ஜெயந்தி. இது தெரிந்ததும் மருந்துகள் வாங்கி கொடுத்து சீனிவாசன் கர்ப்பத்தை கலைத்துள்ளார்.

இதேபோன்று கடந்த ஆறு மாதத்துக்கு முன்பு மீண்டும் கர்ப்பமாகியுள்ளார், இந்த முறை கர்ப்பத்தை கலைக்காமல் பெற்றோரிடம் சென்று கூறினாராம் ஜெயந்தி.

தகவல் அறிந்ததும் இருவருக்கும் திருமணம் செய்து வைத்துள்ளனர், இதனால் சீனிவாசன் கடும் கோபத்தில் இருக்க, ஜெயந்தி அவரது தாய் வீட்டில் இருந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 15ம் திகதி ஜெயந்தியை கோவிலுக்கு அழைத்து சென்றுள்ளார் சீனிவாசன். சில மணிநேரங்கள் கழித்து ஜெயந்தியின் வீட்டுக்கு போன் செய்து, ஜெயந்து வந்துவிட்டாரா என கேட்டுள்ளார்.

அவரை காணாமல் பெற்றோர்கள் பதற, எதுவும் தெரியாதது போல் இவரும் தேடியுள்ளார், அத்துடன் அருகிலுள்ள பொலிஸ் நிலையங்களிலும் புகார் அளித்துள்ளார்.

இந்நிலையில் பொலிசார் சீனிவாசனிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்த உண்மைகள் வெளிவந்துள்ளது.

அவர் அளித்த வாக்குமூலத்தில், ஜெயந்தியுடன் உல்லாசம் அனுபவித்துவிட்டு கழட்டி விட எண்ணினேன். ஆனால் பெற்றோரிடம் கூறியதால் திருமணம் நடந்துவிட்டது, எப்படியாவது அவளை கொன்றுவிட எண்ணி, ரிஷிவந்தியம் கோவிலுக்கு அழைத்துச் சென்றேன்.

அங்கிருந்து காட்டுபகுதிக்கு கூட்டிசென்று கட்டையால் அடித்துக் கொன்றேன்.

என்னை விட்டுவிடுங்க என கெஞ்சிய போதும், அவள் கட்டியிருந்த சேலையிலேயே கழுத்தை நெறித்து கொன்றுவிட்டேன்.

என்மேல் சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக தேடுவது போல் நாடகமாடினேன் என தெரிவித்துள்ளார்.

தினமும் தொல்லை : அடித்தே கொன்ற பெண் : விசாரணையில் அம்பலம்!!

சென்னையில் தினமும் பாலியல் தொல்லை கொடுத்து வந்த நபரை உறவினர்களுடன் சேர்ந்து கள்ளக்காதலி ஒருவர் அடித்துக் கொன்ற சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

வண்ணாரப்பேட்டை மாடர்ன் தெருவில் வசிப்பவர் அருண், இவரது கள்ளக்காதலி ஜோதி. தினமும் குடித்துவிட்டு வரும் அருண், ஜோதிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த ஜோதி, அருணை கொல்ல திட்டம் தீட்டினார். இதன்படி சம்பவத்தினத்தன்றும் குடிபோதையில் இருந்த அருணை, ஜோதி மற்றும் அவரது உறவினர்கள் இணைந்து அடித்துக் கொன்றுள்ளனர்.

இதுதொடர்பான வழக்கில் பொலிசார் விசாரணை நடத்தியதில் உண்மைகள் வெளிவந்துள்ளது. இதனை தொடர்ந்து ஐந்து பேரை கைது செய்த பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரத்தம் கொட்டுகிறது… சாகப்போகிறேன் : தயவுசெய்து தண்ணீர் தாருங்கள் : கொடூர சம்பவம்!!

உத்திரபிரதேசத்தில் நபர் ஒருவர் பசுவதை செய்ததாக கூறி அவரை கிராமத்து மக்கள் கொடூரமாக அடித்துள்ள சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.

Pilakhuwa மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 45 வயதுடைய நபர் ஒருவர் பசுவதை செய்ததாக கூறி, அவரை அந்த கிராமத்து மக்கள் சுற்றிவளைத்தனர்.

தான் அவ்வாறு செய்யவில்லை என்ற அந்நபர் கூறியபோதும், அதனை ஏற்க மறுத்த சிலர் கொடூரமாக அடித்து உதைத்துள்ளனர்.

இதில் வலி தாங்க முடியாத அவர், என்னை விட்டுவிடுங்கள் என்றும் தயவுசெய்து எனக்கு குடிப்பதற்கு தண்ணீர் கொடுங்கள்….எனது உயிர் போகிறது என கெஞ்சியுள்ளார்.

ஆனால், இதனை யாரும் காதில்வாங்கிகொள்ளாமல் ரத்தம் கொட்டிய நிலையிலும், அவனை அடித்து உதைத்ததில் அந்நபர் சுயநினைவு இழந்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார் அந்த நபரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால், அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இப்படி ஒரு மனிதாபிமானமற்ற செயலில் ஈடுபட்ட நபர்களில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் எஞ்சிய நபர்களை தேடி வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

உத்திரப் பிரதேச மாநிலத்தில் பசுப் பாதுகாவலர்கள் என கூறிக்கொண்டு அப்பாவிகள் மீது நிகழ்த்தப்படும் வன்முறைகள் தொடர்கதையாகியுள்ளது.

கடந்த ஆண்டு முகமது அக்லக் என்பவர் வீட்டில் மாட்டுக்கறி வைத்திருந்ததாக கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒட்டுமொத்த இலங்கையர்களின் இதயங்களையும் கனக்க செய்த நிஜ காதல் : பலரின் கண்களில் கண்ணீர்!!

அண்மையில் கோர விபத்தில் உயிரிழந்த இளைஞனை திருமணம் செய்யப் போவதாக காயப்பட்டுள்ள காதலி கதறும் காட்சி ஒட்டுமொத்த இலங்கையர்களின் இதயங்களை கனக்கச் செய்துள்ளது.

கடந்த வாரம் கடவத்தை அதிவேக நெடுஞ்சாலைக்கு பிரவேசிக்கும் சந்தியில் இடம்பெற்ற கோர விபத்தில் காதலன் உயிரிழந்த நிலையில், காதலி படுகாயம் அடைந்துள்ளார். இந்நிலையில் உயிரிழந்த காதலனின் இறுதி கிரியைகள் நேற்று நடைபெற்றன.

உயிரிழந்த காதலனின் சடலத்தை பார்வையிட்ட காதலி கதறி கண்ணீர் விடும் போது கூறிய வார்த்தைகள் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

காதலனின் சடலத்தை இறுதியாக காண்பிப்பதற்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த காதலி அழைத்து செல்லப்பட்டிருந்தார்.

தனது காதலனை சவப்பெட்டியில் பார்த்த காதலி கண்ணீர் விட்டு கதறி அழுது கூறிய வார்த்தைகள் மனதை நெகிழச் செய்கின்றன.

“என்னை இவரோடு செல்ல விடுங்கள், அல்லது இப்பொழுதே திருமணம் செய்து வையுங்கள். விவாக பதிவாளரை உடனடியாக அழைத்து வாருங்கள். நான் எனது காதலரை திருமணம் செய்ய வேண்டும்” என அனைவரிடமும் கேட்டு கண்ணீர் விட்டுள்ளார்.

இதேவேளை, நேற்று முன்தினம் தனது காதலனுக்கு எழுதிய கடிதமும் இணையத்தில் வெளியாகி இருந்தது.

‘ உங்களை பார்த்து மூன்று தினங்கள் கடந்த விட்டது. எனது அம்மா உள்ளிட்ட அனைவரும் உங்களை காண விரும்புகின்றனர்’ என கடிதம் ஒன்றை எழுதி அனுப்பி வைத்துள்ளார். இந்த கடிதமே இணையத்தில் பரவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

வவுனியா பூந்தோட்டம் மகாவித்தியாலய பழைய மாணவர்களின் பொதுக்கூட்டத்திற்கு அழைப்பு!!

வவுனியா பூந்தோட்டம் மகாவித்தியாலயத்தின் பழைய மாணவர்களின் பொதுக்கூட்டம் எதிர்வரும் 01.07.2018 (ஞாயிற்றுக்கிழமை) காலை 10மணியளவில் பாடசாலை மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறவுள்ளதாகவும் அனைத்து பழையமாணவர்களையும் வருகைதருமாறு பாடசாலை நிர்வாகம் அறிவித்துள்ளது.

ஆயிரக்கணக்கானோருக்கு மத்தியில் தீயில் இறங்கிய சிறுவர்கள்!!

காரைதீவு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய வருடாந்த தீ மிதிப்பு நிகழ்வு இன்று நடைபெற்றுள்ளது. ஆலய பூசகர் கு.லோகேஸ் தலைமையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ இந்த நிகழ்வு சிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த தீ மிதிப்பு நிகழ்வில் பெரியவர்களுடன், சிறுவர்களும் இணைந்து தீயில் இறங்கிய காட்சியானது அனைவரது கவனத்தையும் பெற்றிருந்தது.

இதேவேளை ஆலயத்தின் வருடாந்த தீமிதிப்பு சடங்கு கடந்த 13ஆம் திகதி கடலில் இருந்து தீர்த்தம் எடுத்து வரப்பட்டு கதவு திறத்தலுடன் ஆரம்பமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கிளிநொச்சியில் புலியை கொன்றவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!!

கிளிநொச்சியில் கிராமம் ஒன்றுக்குள் வந்த சிறுத்தை புலி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் அரசாங்கம் விசாரணை நடத்தி வருவதாக அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் அமைச்சர் இதனை கூறியுள்ளார்.

அதேவேளை சிறுத்தை கொலை செய்யப்பட்டமை தொடர்பாக சட்டத்தை செயற்படுத்தி, பொறுப்புக் கூற வேண்டியவர்களை கைது செய்ய வேண்டும் என புத்தசாசன அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா வலியுறுத்தியுள்ளார்.

கிளிநொச்சியில் உள்ள கிராமம் ஒன்றுக்குள் புகுந்து மக்களை தாக்கிய சிறுத்தை ஒன்றை கிராம மக்கள் நேற்று அடித்து கொன்றுள்ளனர்.

இந்த சம்பவம் விலங்குகள் பாதுகாப்பு ஆர்வலர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

ஜேர்மனியில் கூரிய ஆயுதத்துடன் இலங்கை தமிழ் இளைஞன் கைது!!

 

ஜேர்மன் மியுனிச் நகரின் பிரதான ரயில் நிலையத்தில் இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

கூரிய கத்தியுடன் திரிந்த இலங்கை தமிழ் இளைஞன் கடந்த செவ்வாய்க்கிழமை காலை அந்நாட்டு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கூர்மையான கத்தியுடன் நபர் ஒருவர் சுற்றிதிரிவதனை அவதானித்த பயணி ஒருவர், உடனடியாக பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.

3 நிமிடத்திற்குள் சம்பவ இடத்திற்கு வந்த 12 பொலிஸ் அதிகாரிகளை கொண்ட குழுவினர் குறித்த நபரை சுற்றிவளைத்துள்ளனர்.

குறித்த நபரிடம் கத்தியை கீழே போடுமாறு ஜேர்மன் மற்றும் ஆங்கில மொழியில் பல முறை கூறிய போதிலும் சந்தேகநபர் அதனை செவிமடுக்கவில்லை. முன்நோக்கி வந்த நபரை பின்னால் இருந்த பொலிஸ் அதிகாரி பாய்ந்து பிடித்துள்ளதுடன், மிளகு தூள் கொண்ட புகை ஒன்றை அவரது முகத்தில் தூவுவதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

அதன் பின்னர் குறித்த நபர் கத்தியை அங்கும் இங்கும் அசைத்து குத்த முயற்சித்துள்ளார். எனினும் அனைத்து பொலிஸ் அதிகாரிகளும் இணைந்து குறித்த நபரை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட 32 வயதுடைய நபர் போலந்தில் கல்வி கற்றும் இலங்கை தமிழ் மாணவன் என தெரியவந்துள்ளது.

பின்னர் கைது செய்யப்பட்ட இளைஞனிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் அவர் ஜேர்மன் ஊடாக பிரான்ஸ் சென்று அங்கிருந்து கனடா செல்ல முயற்சித்துள்ளார் என தெரியவந்துள்ளது.

குறித்த இலங்கை மாணவனுக்கு எதிராக, சட்டத்தை மீறி பொலிஸ் அதிகாரிக்கு எதிராக செயற்பட்டமை மற்றும் ஆயத சட்டத்தை மீறியமை ஆகிய குற்றச்சாட்டின் கீழ் வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளது.

இந்நிலையில் அவரது மனரீதியான நிலைமை தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை பெற்றுகொள்வதற்காக வைத்திய பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளன.