10 வயதில் கூட்டுப்பாலியல் துஸ்பிரயோகம் : 16 வருடங்களுக்குப் பின் கிடைத்த நீதி!!

புத்தளம் பிரதேசத்தில் கடந்த 2002ஆம் ஆண்டு கூட்டுப் பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்ட சிறுமிக்கு 10 வருடங்களுக்குப் பின் நேற்று நீதி கிடைத்துள்ளது.

இந்த சம்பவத்தில் குற்றவாளிகளாக இனங்காணப்பட்ட இருவருக்கு 10 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சம்பத் அபயகோன் நேற்று தீர்ப்பளித்துள்ளார். அத்துடன் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 100,000 ரூபாய் நட்ட ஈடு வழங்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.

2002ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 26ஆம் திகதி 10 வயதுடைய சிறுமி ஒருவரை இரு நபர்கள் சேர்ந்து கூட்டுப்பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உள்ளாக்கியிருந்தனர்.

இது தொடர்பான வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வந்த நிலையில் 16 வருடங்களுக்குப்பின் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழில் இன்னொருவரின் உயிரை காப்பாற்ற போராடியவர் பரிதாபமாக மரணம்!!

யாழ்ப்பாணத்தில் நோயாளி ஒருவரை கூட்டுச் சென்றவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அரியாலையில் மாமரத்தில் இருந்து வீழ்ந்தவரை முச்சக்கர வண்டியில் ஏற்றிச் சென்றவர் ஏக்கத்தில் உயிரிழந்தார்.

எனினும் மரத்தால் வீழ்ந்தவர் ஆபத்தான நிலையில் யாழ்ப்பாணம் போதான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அரியாலையை சேர்ந்த 78 வயதான பொன்னுத்துரை சிங்கராசா என்பவரே உயிரிழந்துள்ளார்.

முதியவர் ஒருவரை அழைத்து மாமரத்தில் ஏற்றி மாங்காய் நேற்றுப் பறித்துள்ளார். மரத்தில் ஏறியவர் கை தவறி கீழே வீழ்ந்துள்ளார். உடனடியாக அவரை வைத்தியசாலைக்கு முதியவர் கொண்டு சென்றுள்ளார்.

வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் இருவரும் உரையாடியுள்ளனர். வைத்தியசாலையை அண்மித்தபோது, காயமடைந்தவரும், முதியவரும் மயக்கமடைந்துள்ளனர். முச்சக்கர வண்டிச் சாரதி இருவரையும் வைத்தியசாலையில் சேர்த்துள்ளார்.

மரத்தில் இருந்து வீழ்ந்தவர் மயக்கமுற்ற நிலையிலும் அவரை அழைத்து வந்த முதியவர் இதய பலவீனத்தினால் ஏக்கத்தின் காரணமாக உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் இறப்பு விசாரணையை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிறேம்குமார் மேற்கொண்டார்.

பத்து ஆண்டுகளாக பாலியல் கொடுமை : இளம் இலங்கைப் பெண்ணுக்கு நடந்த கொடுமை!!

பத்து வருடங்களாக இளம் யுவதியை கொடுமைப்படுத்தி, துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கி, அந்த யுவதியை மீது திராவகம் வீசியதாக கூறப்படும் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் காலி அலுவலக பொறியிலாளர் ஒருவரை எதிர்வரும் 2 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாத்தறை பிதான நீதவான் பவித்ரா சஞ்ஜீவனி பத்திரன நேற்று உத்தரவிட்டுள்ளார்.

அக்குரஸ்ஸ பரதுவ பரகாஹேன பிரதேசத்தை சேர்ந்த 45 வயதான அசங்க விராஜ் ஏக்கநாயக்க என்ற பொறியியலாளரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

தற்போது 18 வயதாகும் அந்த யுவதி கொடுமைகளை தாங்கி கொள்ளாது ஒரு வாரத்திற்கு முன்னர் சந்தேக நபருக்கு சொந்தமான தோட்டத்தில் இருந்து தப்பிச் சென்று காலி பிராந்திய சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தின் பொறுப்பதிகாரி வருணி கேஷலா போகாவத்தவுக்கு தொலைபேசி அழைப்பை எடுத்துள்ளார்.

இதற்கு அமைய அனுராதபுரத்தில் தனியார் நிறுவனம் ஒன்றில் தொழில் புரிந்து வந்த யுவதியை அழைத்து வந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் இந்த குற்றம் தொடர்பான தகவல் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து அதிகாரிகள் அனுராபுரத்திற்கு சென்று யுவதியை காலிக்கு அழைத்து விசாரணைகளை மேற்கொண்டே போதே இந்த தகவல் தெரியவந்துள்ளது.

யுவதி தனது எட்டு வயதில் இருந்து சந்தேக நபருக்கு சொந்தமான சுமார் நான்கு ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள தேயிலை மற்றும் இறப்பர் தோட்டத்தில் தங்கியிருந்துள்ளார். யுவதியின் தாய் தோட்டத்தில் வேலை செய்து வந்துள்ளார்.

ஒரு முறை பஸ் சாரதி ஒருவர் யுவதியின் முகத்தை பார்த்தார் என்பதற்காக சந்தேக நபர் முகத்தில் திராவகத்தை வீசியுள்ளார். அதில் இருந்து தப்பிக்க யுவதி கீழே குனிந்ததால், திராவகம் யுவதியின் முதுகில் பட்டுள்ளது.

இதனையடுத்து சந்தேக நபர் மருத்துவர் ஒருவரை வீட்டுக்கு அழைத்து காயத்திற்கு சிகிச்சையளித்துள்ளார்.

கொடுமை தாங்காது யுவதி கடந்த வருடம் வீட்டில் இருந்து தப்பியோடியுள்ளார். சந்தேக நபர் பத்திரிகையில் பகிரங்க விளம்பரத்தை செய்து பொலிஸாரின் உதவியுடன் யுவதியை அழைத்து வந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த வாரம் யுவதி வீட்டில் இருந்து தப்பியோடியுள்ளதுடன் சந்தேக நபர் அது குறித்து அக்குரஸ்ஸ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். இதனையடுத்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர். யுவதி வழங்கிய தகவல்களுக்கு அமைய சந்தேக நபரான பொறியியலாளரை பொலிஸார் நேற்று

இலங்கையில் நவீன வசதிகளுடன் அறிமுகமாகும் முச்சக்கர வண்டி!!

இலங்கையில் குளிரூட்டல் வசதிகளை கொண்ட புதிய முச்சக்கர வண்டி ஒன்று அறிமுகப்படுத்தி வைப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

இது தொடர்பில் கடற்றொழில் மற்றும் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சர் மற்றும் பொருளாதாரம் தொடர்பான இராஜாங்க அமைச்சர் திலிப் வெதஆராச்சி சீனா மற்றும் மலேசிய பிரதிநிதிகள் அடங்கிய குழுவுடன் விசேட கலந்துரையாடல் ஒன்றை நேற்று நடத்தியுள்ளனர்.

பால் மற்றும் மரக்கறிகளை கொண்டு செல்லும் போது ஏற்படும் பாதிப்புகளை குறைத்து கொள்வதற்கும், திறன் தன்மையில் சிக்கல் ஏற்படாமல் இருப்பது தொடர்பிலும் இந்த கலந்துரையாடலில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறான பொருட்கள் கொண்டு செல்வதற்கு வசதியான வாகனம் ஒன்றை அறிமுகப்படுத்தி வைப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

அதற்கமைய குளிரூட்டல் வசதிகளை கொண்ட முச்சக்கர வண்டி ஒன்றை விரைவில் இலங்கையில் அறிமுகப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளது

இலங்கைக்கு சீனா கொடுத்துள்ள அதிர்ச்சி!!

அம்பாந்தோட்டை துறைமுக சூழலில் இலங்கை கடற்படையினருக்கு இடவசதிகளை வழங்க நிர்மாணிக்கப்பட்டுள்ள இறங்குதுறையை பயன்படுத்த, துறைமுகத்தை குத்தகைக்கு எடுத்துள்ள சீன நிறுவனம் 52 மில்லியன் ரூபாவை குத்தகை தொகையாக வழங்குமாறு கோரி, இலங்கை கடற்படையினருக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அம்பாந்தோட்டை துறைமுகத்தை குத்தகைக்கு வழங்கியதால், நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு எவ்வித அச்சுறுத்தலும் ஏற்படாது என நல்லாட்சி அரசாங்கம் கூறினாலும் இறங்குதுறையை பயன்படுத்த 52 மில்லியன் ரூபாவை செலுத்துமாறு அறிவித்துள்ளதன் மூலம் நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆபத்துக்கு உள்ளாகியிருப்பது உறுதியாகி இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

இலங்கை கடற்படையினரை பயன்படுத்தி அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு பாதுகாப்பு வழங்குவதற்கு பதிலாக சீன நிறுவனம் கடற்படையினரிடம் குத்தகை பணத்தை கேட்டுள்ளமை தொடர்பாக நல்லாட்சி அரசாங்கம் முழு நாட்டு மக்களிடமும் மன்னிப்பு கோர வேண்டும் எனவும் நாமல் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் படுகொலை செய்யப்பட்ட யாழ். பெண் : பொலிஸார் வெளியிட்ட திடுக்கிடும் தகவல்!!

கொழும்பு – கொட்டாஞ்சேனை பகுதியில் வீடொன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட பெண் கழுத்தறுக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், யாழ்ப்பாணத்தில் இருந்து வந்த நபர்களே இந்த கொலையினை செய்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் ஊரெழுவைச் சேர்ந்த 35 வயது மதிக்கத்தக்க பெண்ணே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண் கணவனைப் பிரிந்து வாழும் நிலையில், கொழும்பு – கொட்டாஞ்சேனை பகுதியில் உள்ள வீடொன்றில் பணிப் பெண்ணாக இருந்துள்ளார்.

அந்த பெண் வேலை செய்யும் வீட்டில் வைத்தே நேற்று கொலை செய்யப்பட்டுள்ளார். கழுத்தில் கத்தியால் வெட்டப்பட்டே குறித்த பெண் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்திலிருந்து சென்ற ஒருவரோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்டவர்களோ இந்த கொலையை செய்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவம் குறித்து கோப்பாய் மற்றும் கொழும்பு – கொட்டாஞ்சேனை பொலிஸார் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

கொழும்பில் ஏற்பட்ட கோர விபத்தில் காதலன் பலி : பலரின் மனங்களை உருக வைத்த காதலி!!

கொழும்பு புறநகர் பகுதியில் ஏற்பட்ட கோர விபத்தில் முச்சக்கரவண்டியின் சாரதியான இளைஞன் பரிதாபமாக உயிரிழந்தார்.

கடவத்தை அதிவேக நெடுஞ்சாலை நுழைவாயில் வீதி சமூக்ஞையை அவதானிக்காமல் பயணித்த மோட்டார் வாகனம் ஒன்று, முச்சக்கர வண்டியில் மோதியமையினால் பாரிய விபத்து ஏற்பட்டிருந்தது.

இந்த அனர்த்தம் காரணமாக 23 வயதுடைய இளைஞன் உயிரிழந்ததுடன், அவரது காதலி மற்றும் சகோதரன் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

எனினும் காதலன் உயிரிழந்த விடயம் அறியாமல் காதலி சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

ராகம வைத்தியசாலையில் சிக்சை பெறும் காதலி தனது காதலனுக்காக கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடித்தையும் உயிரிழந்த இளைஞனின் கையில் வைத்து இறுதி அஞ்சலி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அந்த கடிதத்தில், நீங்கள் தான் இந்த உலகிலேயே சிறந்தவர். இப்படி ஒன்று நடக்கும் என்று நினைத்து பார்க்கவில்லை. சண்டையிட்டு கொண்டாலும் ஒரு நாளும் ஒருவரை ஒருவர் பார்க்காமல் இருந்ததில்லை. காயமடைந்தமையினால் 3 நாட்களாக உங்களை பார்க்காமல் உள்ளேன்.

நீங்கள் எப்போது சந்தோஷமாக இருக்க வேண்டும். எனது மூச்சுக்காற்றை கொடுத்தாவது உங்களை காப்பாற்றுமாறு கடவுளிடம் வேண்டிக்கொள்கின்றேன். நன்றாக சாப்பிடுகள். நன்றாக மூச்சுவிடுங்கள். உங்களுக்கு என்ன நடந்தாலும், நான் விட்டு செல்ல மாடேன்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தனது காதலன் உயிரிழந்தமை தெரியாமல் காதலி எழுதிய உருக்கமான வரிகள், உறவினர்கள் மற்றும் நண்பர்களை பெரிதும் கவலை அடையச் செய்துள்ளது.

வெளிநாட்டிலுள்ள இலங்கை தமிழ் குடும்பத்துக்கு கிடைத்த அதிர்ச்சி!!

அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரிய இலங்கை தமிழ் குடும்பத்தின் கோரிக்கையை அந்நாட்டு நீதிமன்றம் இன்று நிராகரித்துள்ளது.

அவுஸ்திரேலியாவின் Biloela பகுதியில் வசித்து வந்த இலங்கை தமிழ் குடும்பத்தினால் தொடர்ந்தும் அங்கு தங்கியிருப்பதற்கு அனுமதி கோரிய விண்ணப்பத்தை பெடரல் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

2018ம் ஆண்டின் ஆரம்பத்தில் பிரியா, அவரின் கணவர் நடேசலிங்கம் மற்றும் அவுஸ்திரேலியாவில் பிறந்த அவர்களின் 9 மாத குழந்தை தருணிகா, 2 வருட குழந்தை கோபிகா ஆகியோர் இலங்கைக்கு நாடு கடத்தப்படவிருந்தனர்.

இறுதி நேரத்தில் விமானத்தில் இருந்து இறக்கப்பட்ட அவர்கள், அவுஸ்திரேலியாவில் தற்காலிகமான தங்க வைக்கப்பட்டனர்.

அந்நாட்டு எல்லைப்படையினரும், பொலிஸாரும் அக்குடும்பத்தை பலவந்தமாக பிலோலவில் இருந்து அப்புறப்படுத்தி மெல்பேர்ண் நகரின் தடுப்புமுகாமில் தடுத்து வைத்தனர்.

இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரைத் தொடர்ந்து இந்த தம்பதினியர் 2012 மற்றும் 2013 ஆம் ஆண்டுகளில் தனித்தனியாக அவுஸ்திரேலியாவுக்கு சென்றுள்ளனர்.

பின்னர் இருவரும் இணைப்பு விசாவில் Biloela பகுதியில் தங்கியிருந்தனர். இந்நிலையில் கடந்த மார்ச் 4ஆம் திகதி பிரியாவின் இணைப்பு விசா முடிவடைந்த தருவாயில் தனது விசாவை புதுப்பிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

எனினும் திடீரென அவர்கள் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டதுடன், நாடு கடத்தப்படவிருந்தனர். எனினும் இறுதியில் அவர்கள் தற்காலிகமாக அவுஸ்திரேலியாவில் தங்க வைக்கப்பட்டனர்.

அதன் பின்னர் தொடர்ந்து அவுஸ்திரேலியாவில் தங்கியிருப்பதற்காக அவர்களினால் விண்ணப்பித்த விண்ணப்பத்தை அந்நாட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

ஐபிஎஸ் அதிகாரியின் உடல் அழகில் மயங்கிய பெண் : 1200 கி.மீ பயணித்தும் கிடைத்த ஏமாற்றம்!!

மத்தியப்பிரதேசம் மாநிலம் உஜ்ஜைன் மாவட்ட எஸ்.பி.யாக இருக்கும் சச்சின் அதுல்கருக்கு இந்தியா முழுவதும் அதிகமான பெண் ரசிகைகள் இருக்கிறார்கள்.

சினிமா மற்றும் கிரிக்கெட் நட்சத்திரங்களுக்கு இருக்கும் ரசிகைகள் போன்று, இவருக்கும் அதிகமான ரசிகைகள் இருக்கின்றனர். இதற்கான காரணம் இவரது தோற்றம்.

சிக்ஸ் பேக் உடற்கட்டுடன் இருக்கும் இவரது புகைப்படம் சமீபத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.

சச்சினின் புகைப்படத்தை இணையத்தில் பார்த்த பஞ்சாபை சேர்ந்த 27 வயது இளம்பெண், 1200 கிலோ மீட்டர் பயணம் செய்து மூன்று நாட்களுக்கு முன்னதாக மத்திய பிரதேசத்திற்கு வந்துள்ளார்.

எஸ்.பி அலுவலகத்திற்கு சென்று சச்சின் அதுல்கரை பார்த்தே தீருவேன் என அடம்பிடித்தஅந்த பெண்ணை, பொலிசார் ரயில் நிலையத்துக்கு கூட்டிச்சென்று பஞ்சாப்புக்கு ரயில் ஏற்ற முயற்சித்துள்ளனர்.

ஆனால், போகும் வழியில் ரயிலில் இருந்து குதித்துவிடுவேன் என அந்த பெண் மிரட்டல் விடவே, பொலிசார் மனநல ஆலோசகர்களிடம் அழைத்துச் செல்ல திட்டமிட்டுள்ளனர்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த எஸ்.பி சச்சின் அதுல்கர், பொதுவான விவகாரங்கள் குறித்து என்னை சந்திப்பதில் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால், அந்த பெண் தனிப்பட்ட முறையில் சந்திக்க வேண்டும் என்கிறார். அது தவறான முறையாகும் என கூறியுள்ளார்.

அழகி பட்டம் வென்ற தமிழ்ப்பெண்!!

தமிழகத்தைச் சேர்ந்த 19 வயதான அனு கீர்த்தி வாஸ் இந்திய அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இந்திய அழகிக்கான இறுதிச் சுற்று மும்பையில் நேற்றிரவு நடைபெற்றது. அதில் போட்டியிட்ட 30 பேரில் இருந்து அழகியை கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் உள்ளிட்டோர் அடங்கிய குழு தேர்வு செய்தது.

அதில் தமிழகத்தின் சென்னையை சேர்ந்த 19 வயதான அனுகீர்த்தி வாஸ் இந்திய அழகியாக தேர்வானார். அவர் சென்னை லயோலா கல்லூரியில் பி.ஏ. பிரெஞ்ச் படித்து வருகிறார்.

நடிப்பிலும், மாடலிங்கிலும் ஆர்வம் உடைய அனு கீர்த்திவாஸ், இந்த ஆண்டு நடைபெறும் உலக அழகிப்போட்டியில் இந்தியாவின் சார்பில் பங்கேற்பார். இந்த போட்டியில் அரியானாவைச் சேர்ந்த மீனாட்சி சௌத்ரி, ஆந்திராவைச் சேர்ந்த ஷ்ரேயா ராவ் ஆகியோர் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தைப் பிடித்தனர்.

படகு கவிழ்ந்து விபத்து : 190க்கும் மேற்பட்டவர்கள் பலி?

இந்தோனேசியாவில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 190க்கும் மேற்பட்டவர்கள் காணாமால் போயுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர், தோபா ஏரியில் பயணிகளுடன் சென்ற சுமத்ரா படகு திடீரென்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் காணாமல் போனோரின் எண்ணிக்கை முதலில் 130 பேர் என அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் மூலம் 190க்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காணாமல் போனவர்களின் உறவினர்கள் வழங்கிய தகவலின் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

இந்த விபத்தில் இதுவரை 18 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். மேலும் 3 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து 3 நாட்களுக்கு முன்பு நடந்த விபத்து என்பதால் உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

படகில் 60 நபர்களை ஏற்றுவதற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எனினும், சுமத்ரா படகில் அனுமதிக்கப்பட்ட அளவை விட 3 மடங்கு ஆட்களும், பொருட்களும் ஏற்றிச்செல்லப்பட்டுள்ளனர்.

இதுவே விபத்துக்கு காரணம் என அந்நாட்டு போக்குவரத்துத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், காணாமல் போனவர்களை தேடும் பணியில் நீர் மூழ்கி கப்பல்களும், நீர் மூழ்கி வீரர்களும் நீருக்கு அடியில் இயங்க கூடிய ட்ரோன்களும் ஈடுபட்டிருப்பதாக தேசிய மீட்பு குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

வவுனியா பழைய பேருந்து நிலையம் வாகன விற்பனை சந்தையாக மாற்றம்?

வவுனியா பழைய பேருந்து நிலையத்தில் இன்று முதல் வாகனங்கள் லீசிங் நடவடிக்கைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பலரும் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

பழைய பேருந்து நிலையமானது கடந்த ஜனவரி முதல் வடமாகாண முதலமைச்சரின் உத்தரவிற்கு அமைவாக மூடப்பட்டு புதிய பேருந்து நிலையத்தில் பேருந்துச் சேவைகள் இடம்பெற்று வருகின்றன.

இந்நிலையில் பழைய பேருந்து நிலையம் பொதுமக்களின் நடமாட்டமின்றி வெறிச்சோடிக்காணப்படுகின்றது.

இந்நிலையில் இன்று பேருந்து நிலையத்திற்குள் லீசிங் நிறுவனங்கள் தமது வாகன விற்பனைச் செயற்பாட்டினை விரிவுபடுத்தி வியாபார நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த 40 வருடமாக பேருந்து நிலையமாக செயற்பட்டு வந்த பழைய பேருந்து நிலையம் தற்போது வவுனியா நகரசபையின் அனுமதியுடன் இவ்வாறு பல தேவைகளுக்குப்பயன்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் பாலியல் குற்றம்சாட்டப்பட்டவர் வைத்தியர் இல்லையாம்!!

வவுனியாவில் யுவதி ஒருவரை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டவர் பதிவுசெய்யப்பட்ட வைத்தியரல்ல என மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

நேற்றுமுந்தினம் தனது வைத்திய நிலையத்திற்கு ஆய்வு அறிக்கைகளை எடுத்துச் செல்லும் பணியாள யுவதியை குறித்த வைத்தியர் பாலியல் துன்புறுத்தல் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து குறித்த வைத்தியர் நேற்றைய தினம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப் படுத்தப்பட்டு ஒரு வார விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் நீதிமன்றினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

வைத்தியர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் வவுனியா மருத்துவ அதிகாரிகள் சங்கம் ஊடகங்களிற்கு ஓர் அறிக்கையினை வழங்கியுள்ளனர்.
குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

”அண்மையில் வெளிவந்த பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட வைத்தியர் என குறிப்பிட்ட செய்தி தொடர்பானது…”

குறிப்பிட்ட நபர்

1) அரச வைத்தியசாலை எதிலும் பணியாற்றுகின்ற வைத்தியர் அல்ல

2) ஆங்கில வைத்தியம் செய்வதற்கு தகுதி அற்றவர் எனவும்

3) அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் அங்கத்தவர் இல்லை எனவும் இவரை வைத்தியர் என குறிப்பிட்டு முழு வைத்திய சமூகத்தையும் கொச்சை படுத்துவதாக செய்தி அறிக்கை அமைந்துள்ளது.

எனவே இது தொடர்பான மாற்றத்தினை செய்தி அறிக்கையில் மேற்கொள்ளுமாறு வவுனியா அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் சார்பாக கேட்டுகொள்கிறோம்

என குறித்த ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கதறியழுத சிறுமி : அமைச்சுப் பதவியிலிருந்து விலகுவதாக தெரிவித்த சரத் பொன்சேகா!!

எதிர்வரும் 3 மாதத்தில் சிங்கராஜா வனத்தில் உள்ள யானைகளுக்கு வேறு இடமொன்று வழங்கப்படாவிட்டால் அமைச்சுப் பதவியிலிருந்து விலகுவதாக அமைச்சர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

சிங்கராஜா வனத்திலுள்ள யானைகளை அங்கிருந்து வேறு இடத்திற்கு மாற்றுவது தொடர்பிலான கலந்துரையாடலொன்று நேற்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது ரக்குவானை ரஜவத்த கிராம மக்களை சந்தித்த அமைச்சர் சரத் பொன்சேகா இது தொடர்பில் பேசியுள்ளார்.

கலந்துரையாடலின் போது சிறுமியொருவர், சென்ற வருடம் யானை இரண்டு பேரை கொன்று விட்டது. அதில் ஒருவர் எனது அப்பா. அப்பா இறந்துவிட்டதால் என்னால் கல்வி நடவடிக்கைகளை தொடர முடியாதுள்ளது என தெரிவித்து கதறியழுதுள்ளார்.

இதனையடுத்து அமைச்சர் சரத் பொன்சேகா கூறுகையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை ஜனாதிபதி என்னுடன் கதைத்திருந்தார்.

சிங்கராஜா வனத்திலுள்ள யானைகள் தொடர்பில் தற்போதைய நிலை என்ன? என்று கேட்டார். அப்பொழுது நிலைமையை முழுமையாக விளக்கினேன்.

இதனையடுத்து, யானைகளை மாற்றுவதற்கான வேறு இடமொன்றை தருவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன என்னிடம் தெரிவித்தார்.

ஜனாதிபதி கூறியபடி வேறு இடமொன்று தரப்படாவிட்டால் நான் அமைச்சுப் பதவியில் இருக்க மாட்டேன்.

பிரதி அமைச்சர் பாலித தெவரப்பெருமவும் தனது பதவியை துறப்பதாக என்னிடம் தெரிவித்துள்ளார் என சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.

யாழில் பாடசாலை மாணவியை கண்மூடித்தனமாக தாக்கிய அதிபர்!!

யாழ்ப்பாணம் – கொடிகாமம், கச்சாய் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில், கூட்டத்திற்கு பெற்றோரை அழைத்து வராத மாணவ மாணவிகளை பாடசாலை அதிபர் கடுமையாக தாக்கியுள்ளார்.

இதில் மாணவி ஒருவர் கடுமையாக பாதிக்கப்பட்டதுடன், வீடு செல்லும் வழியில் அவர் மயங்கி விழுந்துள்ளார்.

இந்த நிலையில் குறித்த மாணவி சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இதன்போது மாணவியின் உள்ளங்கையில் கண்டல் காயங்கள் இருப்பதை அவதானித்த வைத்தியர் இது குறித்து வினவியுள்ளார்.

“பெற்றோர் கூட்டத்திற்கு பெற்றோரை அழைத்து வராத மாணவர்களை பாடசாலை அதிபர் மைதானத்தில் வைத்து முச்சக்கர வண்டியின் கம்பி ஒன்றால் கடுமையாக தாக்கினார் என்றும், இதனால் ஏற்பட்ட காயங்களே இது” என்றும் மாணவி குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து மாணவியின் தந்தை இவ்விடயம் தொடர்பாக பொலிஸ் அவசர பிரிவு இலக்கத்திற்கும், தென்மராட்சிக்கு பொறுப்பான உதவி பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்திலும் முறைப்பாடு செய்துள்ளார்.

நண்பி மீது ஏற்பட்ட ஆசை : சீகிரியவில் சீனப் பெண்ணொருவரின் மோசமான செயற்பாடு!!

சீகிரியவில் தனது நண்பியின் பணத்தை திருடியதாக குற்றம் சாட்டப்படும் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 25 வயதான சீன நாட்டு பெண்ணை சீகிரிய பொலிஸார் நேற்றைய தினம் கைது செய்துள்ளனர்.

சீன நாட்டு பெண்கள் மூவர் சீகிரிய பிரதேசத்தில் உள்ள சுற்றுலா ஹோட்டலில் அறை ஒன்றில் தங்கியிருந்தனர். அங்கு பெண்ணொருவரின் ஒரு லட்சத்து 68 ஆயிரம் பணமும் 2520 யுவான் பணமும் காணாமல் போயுள்ளதாக ஹோட்டல் முகாமையாளருக்கு அறிவித்துள்ளார்.

ஹோட்டல் முகாமையாளர் இது தொடர்பில் சீகிரியா பொலிஸாரிடம் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டிற்கமைய, பொலிஸ் அதிகாரிகள் குறித்த ஹோட்டலில் சோதனையிட்டுள்ளனர்.

எனினும் அங்கு எவ்வித தகவல்களையும் கண்டுபிடிக்க முடியாத நிலையில் இந்த பெண்கள் அங்கிருந்து வெளியேற ஆயத்தமாகியுள்ளனர். அங்கு திடீரென நண்பியின் பையை சோதனையிட்ட போது அவரது பையில் இந்த பணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பின்னர் அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், தனது நண்பியிடம் அதிக பணம் இருந்தமையினால் அதனை பார்க்க ஆசையாக இருந்ததாகவும், இதனால் திருடியதாகவும், குறிப்பிட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட பெண் இன்றைய தினம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.