கொட்டகலை பிரதேச சபைக்கு முன்பாக உள்ள பலசரக்கு கடை ஒன்றின் மூன்று இலட்சத்து இருபதாயிரம் ரூபாய் பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த கொள்ளை சம்பவம் இன்று நள்ளிரவு 1 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இதேவேளை, குறித்த பலசரக்கு கடையில் கொள்ளை சம்பவத்தை நிகழ்த்தியவர் நூதனமான முறையில் அங்கு பொருத்தப்பட்டிருந்த சீ.சீ.டீ.வீ காணொளியை உடைத்தெறிந்து விட்டு கடைக்குள் நுழைந்துள்ளார்.
மிகவும் சூட்சமான முறையில் கடையில் இருந்த பணத்தை கொள்ளையிட்டு சென்றுள்ளார். இதேவேளை, பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.
இலங்கையில் வரலாற்று சிறப்புமிக்க பிரதேசத்தில் அதிசய கிணறு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வரலாற்று தொல்பொருளியல் பெறுமதியை கொண்ட புத்தளம் வனாத்தவில்லு பகுதியில் கிணறு அடையாளம் காணப்பட்டுள்ளது.
தப்போவ விவசாய நிலத்தை சுத்தப்படுத்தி கொண்டிருக்கும் போது திடீரென பல நூறு வருடங்கள் பழைமையான கிணறு ஒன்று தோன்றியுள்ளது.
மயிலன்குளம் பிரதேசத்தை சேர்ந்த கருணாவத்தி என்பவர் பயிரிடும் நடவடிக்கைக்காக நிலத்தை சுத்தப்படுத்தினார். இதன்போது, 8 – 10 அங்குல அளவு களிமண்ணினால் நிறைவு செய்யப்பட்ட சட்டி போன்ற துண்டு ஒன்று கிடைத்துள்ளது.
அந்த இடத்தை ஆராய்ந்து பார்க்க மண்வெட்டியால் வெட்டி பார்க்கும் போது அந்த இடத்தில் சிறிய அளவிலான கிணறு ஒன்று தோன்றியுள்ளது.
பின்னர் பிரதேச மக்கள் இணைந்து அந்த கிணற்றை சுத்தப்படுத்தியுள்ள நிலையில் அங்கிருந்து தொல்பொருளியல் பொருட்களும் கிடைத்துள்ளது. இந்த கிணறு சுமார் 8 அடியை ஆழத்தை கொண்டுள்ள போதிலும், அது 40 அடி ஆழத்தை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த கிணறு வறட்சியின் போது நீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக தோண்டப்பட்டிருக்கலாம் எனவும், நிலத்தடி நீர் வருவதனால் குடிநீர் பெற இது சிறந்த கிணறாக இருக்கும் என கருதப்படுகின்றது. இந்த கிணற்றில் உள்ள நீர் இளநீர் போன்று சுவையாக உள்ளதாக அந்தப் பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் மயில்குளம் பிரதேசத்தில் குவெனி கிராமம் எனப்படும் தம்பன்த்திய என்ற இடம் 30 கிலோ மீற்றர் தூரத்திலேயே அமைந்துள்ளது.
வரலாற்று தொல்பொருளியல் பெறுமதியை கொண்ட இந்த அரிய வகை கிணறு தொடர்பில் தொல்பொருளியல் அதிகாரிகள் கவனம் செலுத்தியுள்ளனர்.
இந்த கிணற்றிற்கு 500 ஆண்டுகளுக்கும் அதிக பழைமையான வரலாறு உள்ளதாக தொல்பொருளியல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வவுனியா, செட்டிகுளம் பகுதியில் தாயும் மூன்று பிள்ளைகளும் நஞ்சருந்தியநிலையில் உறவினர்களால் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று காலை இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
வவுனியா, செட்டிகுளம், மெனிக்பாம் 3 பகுதியில் உள்ள வீடு ஒன்றில் கணவன் காலை வேலைக்கு சென்ற நிலையில் மனைவி தனது மூன்று பிள்ளைகளுக்கும் நஞ்சு மருந்தினைசோடாவுடன் கலந்து வழங்கியதுடன், தானும் அதனை அருந்தியுள்ளார்.
இதன்போது இரண்டாவது மகனான 6 வயது சிறுவன் தனது அம்மம்மாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டுஅம்மா சோடாவுடன் ஏதோ கலந்து தந்து விட்டார் எனத் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து அங்கு விரைந்து சென்ற உறவினர்கள் அவர்கள் நால்வரையும் மீட்டு செட்டிகுளம் வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக வவுனியாவைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து, 40 வயதான தாய் மற்றும்12 வயது, 6 வயது, 1 1/2 வயது பிள்ளைகள் மூவரும் ஆபத்தான நிலையில் அவசரசிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான விசாரணைகளைசெட்டிகுளம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
வவுனியா வேப்பங்குளம் பகுதியில் கிணற்றில் இருந்து இளைஞர் ஒருவர் சடலமாக இன்று (20.06) மீட்கப்பட்டுள்ளார்.
வவுனியா வேப்பங்குளம் ஆறாம் ஒழுங்கையில் விளையாட்டு மைதானத்திற்கு அருகிலுள்ள கிணற்றிலிருந்தே சடலம் மீட்கப்பட்டுள்ளது.
கிணற்றில் சடலமாக காணப்பட்டவர் சத்தியசீலன் டிலக்சன் வயது (22) என உறவினர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சம்பவ இடத்திற்கு வருகை தந்திருந்த வவுனியா பொலிசார் கிணற்றிலிருந்து சடலத்தை எடுப்பதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதுடன், இளைஞனின் மரணம் தொடர்பாக விசாரணைகளை ஆரம்பித்துள்ள நிலையில் சடலமாக காணப்படட இளைஞனின் பாதணிகள் மற்றும் மோட்டார் சைக்கிளையும் மீட்டுள்ளனர்.
குறித்த இளைஞன் நேற்றைய தினம் வீட்டில் சண்டையிட்டு சென்றதாகவும் குடும்ப தகராறு காரணமாகவே தற்கொலை செய்திருக்கலாம் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
பிரித்தானியாவில் நபர் ஒருவர் மனைவி மீது கொண்ட சந்தேகத்தால் அவரை 16 ஆண்டுகள் வீட்டுக்குள் சிறை வைத்து கொடூரமாக சித்திரவதைக்கு உட்படுத்திய சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
பிரித்தானியாவின் பிர்மிங்ஹாம் பகுதியில் குடியிருக்கும் 47 வயது அஜிஸ் ரெஹ்மான் என்பவரே தனது மனைவியை நீண்ட 16 ஆண்டுகள் வீட்டுச்சிறை வைத்து கொடூரமாக தாக்கி சித்திரவதைக்கு உட்படுத்தி வந்தவர்.
தினசரி தனது மனைவியை தாக்கி கொடுமைப்படுத்தி வந்த அஜிஸ் ரெஹ்மான், ஒருமுறை கூட அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவில்லை என கூறப்படுகிறது.
2000 முதல் 2016 ஆம் ஆண்டு வரையான காலகட்டத்தில் நடந்த இச்சம்பவத்தின்போது ஒருமுறை கூட தனது மனைவியை அஜிஸ் ரெஹ்மான் அவரது குடும்பத்தினரை சந்திக்க அனுமதிக்கவில்லை என தெரிய வந்துள்ளது.
ரெஹ்மான் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளிநாடு சென்ற நிலையில் முதன்முறையாக ஜீனித் பீபி அங்கிருந்து தப்பியுள்ளார்.
பின்னர் அதிகாரிகளிடம் தமது நிலையை விளக்கிய அவர் கணவர் ரெஹ்மான் மீதும் புகார் அளித்துள்ளார்.
இதனையடுத்து அதே ஆண்டு ஜூலை மாதம் ரெஹ்மான் பொலிசாரால் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து நடந்த விசாரணையின் முடிவில் அஜிஸ் ரெஹ்மானுக்கு 3 ஆண்டுகள் மற்றும் 9 மாதங்கள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.
ஜாம்பியாவில் சிறுத்தையிடம் சிக்கிய ராட்சத பல்லி ஒன்று தன்னுடைய உயிரைக் காப்பாற்றிக் கொள்ள போராடிய சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.
கிழக்கு ஆபிரிக்காவின் ஜாம்பியாவில் உள்ள வனவிலங்கு பூங்காவிற்கு Frangeskides என்ற சுற்றுலாப்பயணி சக சுற்றுலாப்பயணிகளுடன் சபாரி ஜீப்பில் சென்றுள்ளனர்.
அப்போது அங்கிருந்த சிறுத்தை ஒன்று, ராட்சத பல்லியை அடித்து சாப்பிடுவதற்காக முயற்சி செய்துள்ளது.
ஆனால் பல்லி தன்னுடைய வாலை வைத்து சிறுத்தையின் முகத்தில் தொடர்ந்து அடித்ததால், சிறுத்தை தடுமாறியது.
சிறுத்தையிடமிருந்து தப்பித்துவிட வேண்டும் என்று பல்லி தொடர்ந்து போராடிக் கொண்டிருந்த நிலையில், சிறுத்தை பல்லியின் கழுத்தை பிடித்து கடித்து சென்றுவிட்டது.
அந்த சிறுத்தையின் அருகே இன்னொரு சிறுத்தையும் நின்றிருந்தது. இது தொடர்பான வீடியோவை Frangeskides வீடியோவாக எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளார்.
கணவன் தகாத உறவு வைத்திருப்பதாக சந்தேகப்பட்ட பிரபல முன்னாள் தொலைக்காட்சி தொகுப்பாளினி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஆந்திரா விஜயவாடாவில் உள்ள தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக இருந்தவர் தேஜஸ்வினி (25) இவர் பவன் குமார் என்பவரை காதலித்து 5 வருடங்களுக்கு முன் திருமணம் செய்தார்.
முதலில் பெற்றோர் எதிர்த்ததால் வெளிநாடு சென்ற இத்தம்பதி அவர்கள் சம்மதித்த பின் சொந்த ஊருக்கு திரும்பினார். பவன் தனது பெற்றோர் மற்றும் மனைவியுடன் கிருஷ்ணா மாவட்டத்தில் வசித்து வந்தார்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களாகவே இவர்களுக்கு இடையில் பிரச்சனை நடைபெற்று வந்திருக்கிறது. பவன்குமார் தகாத உறவில் இருப்பதாக சந்தேகப்பட்ட தேஜஸ்வினி அவர் ஊரில் இல்லாத நேரத்தில் படுக்கையறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அக்கம்பக்கத்தினர் வந்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். காவல்துறை தேஜஸ்வினியின் சடலத்தோடு ஒரு கடிதத்தையும் கைப்பற்றினர்.
அதில் பவனுக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பதாகவும் தன்னை மன ரீதியாக பவன் சித்ரவதை செய்ததையும் விரிவாக குறிப்பிட்டிருக்கிறார் தேஜஸ்வினி. இது பற்றிய விசாரணை தொடர்கிறது.
டெல்லியில் பட்டப்பகலில் நடைபெற்ற கொலை சம்பவத்தை பார்த்து அச்சத்தில் அந்த இடத்தில் இருந்து மக்கள் ஓடியுள்ளனர்.
டெல்லியில் தாதாக்கள் நேற்று காலை துப்பாக்கியால் மோதிக்கொண்ட சம்பவத்தில் 4 பேர் கொல்லப்பட்டனர். 6 பேர் படுகாயமடைந்தனர்.
டெல்லியின் வடக்கு பகுதியில் உள்ள புராரியில் நேற்று காலை 10.15 மணி அளவில் ஜிம்முக்கு சென்றுவிட்டு வந்த முகுல் (16), ஜிதேந்தர், ஹிமன்சு, சுரிந்தர் ஆகியோர் தங்களது ஸ்கார்பியோ காருக்குத் திரும்பினர்.
திடீரென்று எதிரே வந்த இன்னொரு சொகுசு காரில் இருந்த முகமூடி அணிந்த ரவுடிகள் அவர்களை நோக்கி சரமாரியாகச் சுட்டனர். இதைக் கண்டதும் காருக்குள் சென்றவர்கள் தப்பியோடினர். அருகில் உள்ள தெருவில் மறைந்திருந்து அவர்களும் பதிலுக்குச் சுட்டனர்.
இந்தத் துப்பாக்கிச் சண்டையில் முகில் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் அந்தப் பகுதியைச் சேர்ந்த 3 பேரும் பலியாயினர். முகுலில் உறவினர்களான ஜிதேந்தர், ஹிமன்சு, சுரிந்தர் ஆகியோர் படுகாயமடைந்தனர்.
பட்டப்பகலில் நடந்த இந்தச் சம்பவத்தால் மக்கள் அலறியடித்து ஓடினர். பின்னர் பொலிசசார் வந்து படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த சம்பவம் குறித்து பொலிசார் கூறியதாவது,
கோகி என்ற ரவுடிக்கும் சுனில் என்கிற தில்லுவுக்கும் அதிகார போட்டி. அவன் கோஷ்டியை சேர்ந்த ஒருவன் கொல்லப்பட்டால், பதிலுக்கு இவன் கோஷ்டியை சேர்ந்த ஒருவன் கொல்லப்படுவது வழக்கம்.
இது தொடர்ந்து கொண்டே இருக்கிறது. தில்லு தற்போது சிறையில் இருக்கிறான்.
தில்லுக்கும் கோகிக்குமான மோதல் பல வருடங்களுக்கு முன்பிருந்தே தொடர்கிறது. 2014-ம் ஆண்டு டெல்லி அலிபூர் கல்லூரியில் நடந்த தேர்தலில் இரண்டு பேரும் ஒவ்வொரு வேட்பாளருக்கு ஆதரவளிக்க அன்றிலிருந்து அதிகமானது இவர்கள் மோதல். இதுவரை இரண்டு தரப்பிலும் 14 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.
நேற்றைய மோதலில் சுட்டுக்கொல்லப்பட்ட முகுலின் தாய்மாமா தீபக் என்ற ராஜூ. கோகியின் உறவுப் பெண்ணுடன் தொடர்பில் இருந்தார். இதன் காரணமாக ஏற்பட்ட மோதலில் ராஜூவைத் தீர்த்துக்கட்டினான் கோகி.
இதற்குப் பழி வாங்க சபதம் எடுத்திருந்தான், முகுல். முகுலுக்கு வயது 16-தான்! இது கோகிக்குத் தெரியவந்தது. அவன் துப்பாக்கியைத் தூக்கும் முன், நாம் அவனைத் தீர்த்துவிடுவோம் என்று நினைத்தான் கோகி. முகுலையும் அவனோடு இருக்கும் கூட்டத்தையும் கூண்டோடு காலி பண்ண முடிவு செய்து அதற்காகத் திட்டம் போட்டான்.
அவர்களின் நடமாட்டத்தை சில நாட்களாக கவனித்தான். தினமும் காலையில் ஜிம்முக்குச் சென்று வருவதை அறிந்து அங்கேயே தீர்த்துகட்ட முடிவு செய்தான்.
கோகியின் திட்டம் முகுலும் தெரியவந்ததால் எப்போதும் ஆட்களோடு பாதுகாப்பாகவே இருந்தான். இதற்காக புல்லட் புரூப் காரையும் பயன்படுத்தியுள்ளான்.
அதையும் மீறி நேற்றைய சம்பவத்தில் முகுலை போட்டுத்தள்ளிவிட்டான் கோகி. தாதா கோகி மீது பல்வேறு கொலை வழக்குகள் உள்ளன. 2016-ம் ஆண்டு பொலிஸ் கஸ்டடியில் இருந்து தப்பிய கோகி இன்றுவரை தலைமறைவாகவே இருக்கிறான்.
தமிழகத்தில் குடி போதையில் பணம் கேட்டு தகராறு செய்த கணவனை மனைவி வெட்டி கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள புலவன்குடியிருப்பு கிராமத்தைச் சேர்ந்தவர் ஜனார்த்தனன். கூலித்தொழிலாளியான இவருக்கு ராஜாமணி என்ற மனைவியும், இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர்.
ஜனார்த்தனன் மதுவுக்கு அடிமையாகியதால் தினமும் குடித்துவிட்டு வீட்டில் மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இந்நிலையில் சமீபத்தில் வேலைக்கு செல்லாத காரணத்தினால் அவர் தன் மனைவியிடம் குடிப்பதற்கு பணம் கேட்டுள்ளார்.
குடிக்க வேண்டாம் என்று மனைவி கண்டித்த போதும், ஜனார்த்தனன் அவரின் பேச்சை கேட்காமல் மனைவியிடமிருந்து பணத்தை வாங்கிக் கொண்டு மது அருந்தியுள்ளார்.
இதைத் தொடர்ந்து நேற்று இரவும் குடிபோதையில் மனைவியுடன் தகராறு செய்ததுடன் வீட்டிலிருந்து பணத்தையும் எடுத்துச் சென்று மது அருந்தியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த ராஜாமணி காலையில் அவர் வந்தவுடன் இது குறித்து கேட்டுள்ளார். அப்போது இருவரின் வாக்குவாதம் ஒரு கட்டத்தில் தகராறில் போய் முடிந்ததால் கோபத்தில் இருந்த மனைவி ராஜாமணி, அருகில் இருந்த மண்வெட்டியால் கணவரை வெட்டியுள்ளார். இதில் அவர் சம்பவ இடத்திலே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் பொலிசாருக்கு தெரியவந்ததால், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிசார் ஜனர்த்தனின்உடலை மீட்ட பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும் ராஜாமணியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
இலங்கையின் வடக்கு, கிழக்கு பகுதிகளுக்கு பயணம் செய்து அங்கு பல மனிதநேயப் பணிகளை பிரான்ஸ் பல்கலைக்கழக பொறியியல் பீட மாணவர்கள் முன்னெடுத்திருந்தனர்.
IOSF (Institut D optique sans frontieres) என்ற மனித நேய அமைப்பை உருவாக்கி சேவைகளை முன்னெடுத்து வரும் குறித்த மாணவர்களில், ஆங்கில பெண்கள் இலங்கையரின் கவனத்தை ஈர்த்துள்ளனர்.
குறித்த பெண்கள் சேலை அணிந்து புகைப்படம் எடுத்துள்ளனர். வெளிநாட்டு பெண்களாக இருந்தாலும் தமிழர் மீதும், தமிழ் கலாச்சாரத்தின் மீதும் அதிக பற்று கொண்டவர்களாக காணப்படுகின்றனர்.
ஆங்கிலேயரின் வருகையின் போது தமிழர் நாகரிகப் பண்பாட்டில் பலவித மாறுதல்கள் ஏற்பட்டபோதும் அவர்கள் தமிழர் நடை, உடை பாவனையில் மிகவும் கவர்ந்தவர்களாக இருக்கின்றனர்.
ஆங்கிலேயப் பெண்கள் சேலை அணிந்து வருவது அதிசயமல்ல தமிழ் தலைமுறை தலைகீழாக தடம்புரண்டு வருவதுதான் கவலையாக உள்ளது.
யாழ்ப்பாணம் காரைநகர் பகுதியில் நேற்று வீசிய புழுதிப்புயல் காரணமாக மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
தற்போது ஏற்பட்ட காலநிலை மாற்றத்தினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக வானிலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
யாழ்ப்பாணம் முழுவதும் தற்போது அதிகளவான காற்று வீசி வருகின்றது. இந்நிலையில் காரைநகர் பகுதியில், நேற்று புழுதிப் புயல் வீசியதாகவும், இதனால் வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டதாகவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
எனினும் இதுவரை சேத விபரங்கள் ஏற்பட்டதாக எந்தவிதமான தகவல்களும் வெளியாகவில்லை.
சென்னையில் மனம்நலம் பாதிக்கப்பட்ட மகனை கவனிக்க முடியாத காரணத்தால் கருணைகொலை செய்துவிட்டதாக தந்தை கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை திருவொற்றியூர் பகுதியைச் சேர்ந்த நவசுதீன் என்பவர் சமோசா விற்பனை செய்து வருகிறார். இவருக்கு 21 வயதில் முகமது உஷேன் என்ற மகன் இருக்கிறார்.
ஏழ்மை நிலையிலும் மனநலம் பாதிக்கப்பட்ட மகனை தன்னோடு வைத்தே வளர்த்து வந்திருக்கிறார்.
இந்நிலையில் , இன்று திருவொற்றியூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் தமது மகனை கருணை கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார் சம்சுதீன்.
இதனையடுத்து அவரை வருவாய் துறையினர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அங்கு அவரிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்களை நவசுதீன் தெரிவித்துள்ளார்.
கடந்த 10ம் திகதி தமது மகனை ஆடு அறுக்கும் கத்தியால் அறுத்து கொலை செய்து விட்டு, அஜாக்ஸ் மாணிக்கம் நகர் பின்புறம் உள்ள ரயில்வே தண்டவாளம் மழை நீர் கால்வாயில் சடலத்தை வீசி சென்றதாகவும், இது குறித்து யாரிடமும் தகவல் தெரிவிக்காமல் இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
கடந்த 10ம் திகதி அந்த சடலத்தை கைப்பற்றிய திருவொற்றியூர் பொலிசார், அரசு ஸ்டேன்லி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்த பின், சடலத்தின் புகைப்படத்தை பொது இடங்களில் ஒட்டி அடையாளம் காண முயற்சித்துள்ளனர்.
புகைப்படத்தை பார்த்த முகமது உசேனின் உறவினர்கள் திருவொற்றியூர் பொலிசாரிடம் தகவல் தெரிவித்த நிலையில், தானாக வந்து சரணைடைந்துள்ளார் சம்சுதீன்,
மேலும் .தமக்கு பின் தமது மகனை பார்த்துக்கொள்ள யாரும் இல்லாததால், தானே கருணைக் கொலை செய்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மகனை கொலை செய்ததற்காக தந்தை நவசுதீனை கைது செய்த திருவொற்றியூர் பொலிசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஹங்வெல்ல, வெலிகன்ன பகுதியில் வெட்டுக்காயங்களுடன் தாய் மற்றும் மகளின் சடலங்களை பொலிஸார் இன்று மீட்டுள்ளனர்.
68 வயதுடைய ரூபசிங்க ஆரச்சிகே மேரி ராணி மற்றும் 38 வயதுடைய செனரத் லியனகே லக்மினி ஶ்ரீயாகாந்தி ஆகியோரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கணவனே, தன் மனைவி மற்றும் மனைவியின் தாய் ஆகியோரை வெட்டிக்கொலை செய்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இந்த கொலை நேற்று இரவு இடம்பெற்றிருக்கலாம் எனவும், சாமர யசோத பண்டார எனும் நபரே இந்த கொலையை செய்திருக்க கூடும் எனவும் பொலிஸார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
கொலை செய்யப்பட்ட பெண்ணின் 4 மாத குழந்தையை சடலத்திற்கு அருகில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாகவும், குழந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் குறித்து ஹங்வெல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.