இலங்கையின் பிரபல தொலைகாட்சி அறிவிப்பாளர் ஒருவர் நபர் ஒருவரை கத்தியால் குத்தியுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
எடேரமுல்ல பிரதேசத்தை சேர்ந்த உடற்பயிற்சி நிலைய உரிமையாளர் மீதே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. இருவருக்கும் ஏற்பட்ட தனிப்பட்ட பிரச்சனை காரணமாக இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் இதுவரையிலும் அறிவிப்பாளருக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
காயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், தன்னை உடற்பயிற்சி நிலைய உரிமையாளர் தாக்கினார் என அறிவிப்பாளர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
உத்ரகாண்டில் சிறுவனை சிறுத்தை கொன்றதையடுத்து கிராம மக்கள் காட்டிற்கு தீ வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரகாண்ட் மாநிலம் ஹாரினாகாரி பகுதியில் காட்டையொட்டிய கிராமத்திற்குள் புகுந்த சிறுத்தை ஒன்று 7 வயது சிறுவனை கொன்று தின்று உள்ளது.
நேற்று இரவு சிறுவன் சிறுநீர் கழிக்க வெளியே சென்ற போது அவனை சிறுத்தை தாக்கியதாக தெரிகிறது. சிறுவனுடைய அலறல் சத்தம் கேட்டு சமையல் அறையில் இருந்து அவனது தாயார் ஓடிவந்துள்ளார்.
அப்போது சிறுத்தை சிறுவனை கடித்து உண்பதை பார்த்து கதறிய அவர், சிறுவனை காப்பாற்ற முயன்றார். கிராம மக்களும் ஓடி வந்து சிறுவனை காப்பாற்ற முயற்சித்தனர்.
ஆனால் அதற்குள் சிறுத்தை சிறுவனை கொன்று தின்றுவிட்டது. இதனால் ஆத்திரமும் அதிர்ச்சியும் அடைந்த கிராம மக்கள் அப்பகுதியில் உள்ள காட்டிற்கு தீ வைத்து உள்ளனர். இதையடுத்து காட்டுப்பகுதியில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.
பாகிஸ்தான் நாட்டை உலுக்கிய 7 வயது சிறுமி கொலை வழக்கில் குற்றவாளிக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நீதிமன்றம் மீண்டும் உறுதி செய்துள்ளது.
பாகிஸ்தானில் 7 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்புணர்வுக்கு இரையாக்கி கொலையும் செய்த வழக்கில் Mohammad Imran என்ற இளைஞன் சிக்கினான்.
இந்த வழக்கின் விசாரணை பல அமர்வுகளாக நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில், குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
குற்றம்சாட்டப்பட்டுள்ள Mohammad Imran 7 வயது சிறுமி உள்ளிட்ட 8 சிறுமிகளை இதுவரை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்துள்ளது நீதிமன்ற விசாரணையில் தெரிய வந்தது.
மட்டுமின்றி சர்வதேச அளவில் சிறுவர்கள் தொடர்பான பாலியல் குற்றச்சாட்டு கும்பல்களுடன் Mohammad Imran-கு தொடர்பு இருப்பதும், குறித்த இளைஞரிடம் இருந்து சிறுவர்கள் தொடர்பான பல ஆபாச வீடியோக்களும் பொலிசார் கைப்பற்றினர்.
இந்த நிலையில் தமக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது எனவும், தம்மீதான குற்றச்சாட்டுக்கு உரிய விசாரணை நடைபெறவில்லை எனவும் Mohammad Imran நீதிமன்றத்தில் தெரியப்படுத்தியிருந்தார்.
மட்டுமின்றி தமக்கு அளிக்கப்பட்டுள்ள மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த நிலையில் Mohammad Imran-கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை லஹூர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
இருப்பினும் பாகிஸ்தான் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கருணை மனு மீது தமக்கு நம்பிக்கை உள்ளதாகவும் Mohammad Imran தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 7 வயது சிறுமி Zainab Ansari மாயமானதாக உறவினர்கள் பொலிசாரின் உதவியை நாடினர்.
ஆனால் பொலிசாரின் நடவடிக்கையில் சிறுமியை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நிலையில் பஞ்சாப் மாகாணத்தில் அமைந்துள்ள Kasur நகரில் உள்ள குப்பைக்கிடங்கில் சிறுமியின் சிதைக்கப்பட்ட உடல் கண்டெடுக்கப்பட்டது.
இந்த சம்பவம் பாகிஸ்தான் முழுவதும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதுடன் பல பகுதிகளில் போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டது.
தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் குறித்த கொலை சம்பவத்தில் Mohammad Imran-கு தொடர்பு இருப்பது தெரியவந்ததுடன், விசாரணையில் குற்றத்தை ஒப்புக்கொண்டதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.
அமெரிக்காவின் உள்ள பார் ஒன்றில் தங்கத்துகள் தூவிய கோழிக் கறியை சாப்பிட மக்கள் குவிந்து வருகின்றனர்.
அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் உள்ள பார் ஒன்றில் வாடிக்கையாளர்களை அதிகரிக்க புதிய யோசனை ஒன்றை அமல்படுத்தியுள்ளனர். அதன்படி, பாரில் பரிமாறும் சமைத்த கோழிக்கறியின் மீது 24 கரட் தங்கத்துகள்களை தூவியுள்ளனர்.
இதனால் வாடிக்கையாளர்கள் அதிகரித்துள்ளதாகவும், ஒரு முறை வருகை தந்தவர்கள் மீண்டும் மீண்டும் வருவதாகவும் பார் நிர்வாகம் கூறியுள்ளது.
தங்கம் கலந்த உணவை சாப்பிட்டால் உடலுக்கு நன்மை என்பதால் இந்த உத்தியை நடைமுறைப்படுத்தியதாகவும், வழக்கமான முறையில் செய்யும் கோழிக்கறிபோல் பொறித்து எடுக்காமல் கோழிக்கறி மீது, பரவலாக தங்க துகள்கள் தூவப்பட்டு பரிமாறப்படுவதாகவும் ஹோட்டல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கோழிக்கறியை வழக்கமாக நாம் அனைவரும் பொன்னிறமாக பொறித்து உண்ணுவோம். ஆனால் அந்த பாரில் கோழிக்கறி மீது முழுக்க முழுக்க தங்கத்துகள்களை தூவி, கோழியை தங்க உணவாக மாற்றி வாடிக்கையாளர்களுக்கு பரிமாறி வருகின்றனர்.
மேலும் 10 துண்டுகள் கொண்ட தங்க கோழிக்கறியின் விலை 3000 ரூபாய் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினரான Jess Phillipsக்கு ஒரே நாளில் 600 பலாத்கார மிரட்டல்கள் வந்துள்ளதாக தெரிவித்தார்.
Birmingham Yardley Labour நாடாளுமன்ற உறுப்பினரான Jess Phillipsக்கு ஒரே இரவில் 600 பலாத்கார மிரட்டல்கள் வந்துள்ளதாகவும் தினந்தோறும் பயங்கர மிரட்டல்களுக்குள்ளாவதாகவும் அவர் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இணைய சேவை வழங்குபவர்களுக்கு தங்கள் உண்மையான அடையாளத்தை அவர்கள் வெளிப்படுத்த வேண்டும் என்று அவர் கோரியுள்ளார்.
அதே நேரத்தில் தீமையை எதிர்த்துக் குரல் கொடுப்பவர்கள் தங்களை வெளிப்படுத்திக் கொள்ளாமலே இருப்பது நல்லது என்கிறார் அவர்.
ஒரு பெண்ணியவாதியாக நீங்கள் பேசும்போது இத்தகைய மிரட்டல்களை நீங்கள் ஏராளம் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஒரு அளவுக்கு மேல் தனக்கு வரும் மிரட்டல்களை எண்ணுவதை தான் நிறுத்தி விட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
G7மாநாட்டில் பிரித்தானிய பிரதமரான தெரசா மேயும் பெண்கள் மீதான விரும்பத்தகாத மோசமான தாக்குதல்களை தடுத்து நிறுத்த இணைய ஜாம்பவான்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது
ஆட்சி அதிகாரத்திலிருந்து தன்னை தூக்கியெறிய திட்டமிட்டதாக கூறி தனது சொந்த மாமாவை வட கொரியா ஜனாதிபதி கிம் ஜாங் உன் கொலை செய்த சம்பவம் தற்போது வைரலாகியுள்ளது.
சர்வாதிகாரி கிம் ஜாங் ஆளும் வட கொரியவில் தவறு செய்பவர்களுக்கு பல்வேறு விதமான கொடூர தண்டனை வழங்கப்பட்டு வருகிறது. அதன் வரிசையில் துரோகம் செய்ததாக எண்ணி கிம் ஜாங், அவரின் மாமாவை கொலை செய்தார்.
வடகொரியாவில் சக்தி வாய்ந்த அரசு அதிகாரியாக திகழ்ந்தவர் Jang Song-thaek (67) கிம் ஜாங்கின் மாமாவான இவர் சீனாவின் உதவியோடு அவரின் அரசை கவிழ்க்க நினைத்து அதற்கான வேலைகளில் ரகசியமாக ஈடுப்பட்டுள்ளார்.
அதோடு கிம் ஜாங் உன்-னின் சகோதரர் கிம் ஜாங் நம்-ஐ நாட்டின் தலைவராக ஆக்கவும் திட்டமிட்டுள்ளார். இந்த விடயம் சீனாவில் இருக்கும் அரசு அதிகாரிகள் மூலம் கிம் ஜாங்குக்கு தெரியவந்தது.
இதையடுத்து நாட்டை சீர்குலைக்கும் முயற்சியில் Song-thaek ஈடுப்பட்டார் என கூறி அவரை கொலை செய்ய கிம் ஜாங் உத்தரவிட்டார். கடந்த 2013-ல் Song-thaek கொல்லப்பட்டார்.
இதனிடையில் கிம் ஜாங் நம் கடந்தாண்டு பிப்ரவரி மாதம் மலேசியாவில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார்.
சம்பவம் தொடர்பாக இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டு அது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
வட கொரியா தான் கிம் ஜாங் நம்-ஐ கொலை செய்தது என தென் கொரியா குற்றம் சாட்டியது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு தனது ஆட்சிக்கு ஆபத்து என்றால் கிம் ஜங் உன் யாரை வேண்டுமானாலும் கொலை செய்ய தயங்கமாட்டார் என இந்த சம்பவங்களை நினைவுபடுத்தி சமூக வலை தளங்களில் கருத்து பகிரப்பட்டு வருகிறது.
இலங்கை கிரிக்கெட் சபை (SLC) ஏற்பாடு செய்து நடாத்தும் 19 வயதின் கீழ்ப்பட்ட மாகாண அணிகளுக்கு இடையிலான மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் தொடர் கொழும்பில் செவ்வாய்க்கிழமை (12) ஆரம்பமாகவுள்ள நிலையில் இத் தொடரில் விளையாடவுள்ள மாகாண அணிகளின் விபரம் வெளியிடப்பட்டிருக்கின்றது.
நாட்டின் அனைத்துப் பாகங்களிலும் இருந்து புதிய திறமைகளை இனம்காணும் நோக்கோடு நடாத்தப்படும் இந்த கிரிக்கெட் தொடரில் வடக்கு, கிழக்கு உட்பட மொத்தமாக இலங்கையின் எட்டு மாகாணங்களினை (சப்ரகமுவ தவிர) பிரதிநிதித்துவம் செய்யும் அணிகள் பங்கெடுக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த தொடரில் மாகாணங்கள் 10 அணிகளாக பிரிக்கப்பட்டுள்ளதுடன், இந்த 10 அணிகளும் A, B என இரண்டு குழுக்களாக வகைப்படுத்தப்பட்டு போட்டிகள் இடம்பெறவுள்ளன.
இத் தொடரில் நடைபெறுகின்ற போட்டிகளுக்கு வழங்கப்படும் புள்ளிகள் அடிப்படையில் இரண்டு குழுக்களிலும் முதலிடத்தினைப் பெறும் மாகாண அணிகள் ஜூன் 23 ஆம் திகதி நடைபெறும் இறுதிப் போட்டியில் சம்பியன் யார் எனப் பார்ப்பதற்கான பலப்பரீட்சை நடத்தும்.
இந்த தொடரில் விளையாடும் வீரர்கள் 2017/18 ஆம் ஆண்டின் பருவகாலத்திற்கான பாடசாலை கிரிக்கெட் தொடரிலும், இதற்கென நடாத்தப்பட்ட பயிற்சிப் போட்டிகளிலும் வெளிக்காட்டிய திறமைகளின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றனர்.
இதன்படி, வட மாகாண அணியில் அப்பிரதேசங்களில் நடைபெற்ற பாடசாலைப் போட்டித் தொடர்களில் திறமை காட்டிய வீரர்கள் அதிகளவில் இணைக்கப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
இதற்கு யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் மதுசன், இயலரசன் ஆகியோரினையும், சென். ஜோன்ஸ் கல்லூரியின் செளமியன், அபினாஷ் போன்றோரினையும் உதாரணமாக குறிப்பிட முடியும்.
இவர்கள் பாடசாலைகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர்களோடு மட்டுமல்லாது “வடக்கின் பெரும் சமர்” என அழைக்கப்படும் வருடாந்த கிரிக்கெட் போட்டியிலும் நல்ல பதிவுகளை காட்டிய அனுபவத்தினை கொண்டிருக்கின்றனர்.
இத் தொடரில் மிகவும் பலமிக்க அணிகளாக மேல் மாகாணத்தின் மூன்று அணிகளும், தென் மாகாண அணியும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
மாகாண அணிகளுக்கு இடையிலான இத்தொடரில் வடக்கு, கிழக்கு, ஊவா மாகாண அணிகள் சிறப்பான பதிவுகளை காட்ட எதிர்பார்த்திருக்கின்றன.
எனினும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாண வீரர்கள் புற்தரை ஆடுகளத்தில் விளையாடிய அனுபவத்தினை அதிகம் கொண்டிறாமை அவர்களுக்கு பெரிதும் சவாலாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அடுத்த மாதம் இந்தியாவின் 19 வயதின் கீழ்ப்பட்ட அணி இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளவிருக்கின்றது.
இந்த சுற்றுப்பயணத்தில் பங்கேற்கும் இலங்கை அணியில் இணைவதற்கு இந்த மாகாண கிரிக்கெட் தொடரானது ஒரு வாய்ப்பினை ஏற்படுத்தி தரவுள்ளது.
இத்தொடரின் போட்டிகளை ThePapare.com ஆனது நேரடியாக (Live Broadcast) வழங்கவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
நேரடியாக ஒளிபரப்புச் செய்யப்படும் போட்டிகளை எதிர்வரும் 12 ஆம் திகதியிலிருந்து டயலொக் தொலைக்காட்சி சேவையின் அலைவரிசை 1 இலும், டயலொக் MyTV இலும், ThePapare.com இலும் காண முடியும்.
S. மதுசன் (யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி), N. மோனிக் நிதுஷன் (புனித பத்திரிசியார் கல்லூரி), M. அபினாஷ் (சென். ஜோன்ஸ் கல்லூரி), S. பானுஜன் (கொக்குவில் இந்துக் கல்லூரி), N. செளமியன் (சென். ஜோன்ஸ் கல்லூரி), Y. தினோஷன் (சென். ஜோன்ஸ் கல்லூரி), B. அஜிந்தன் (ஸ்கந்தவரோதயாக் கல்லூரி), A. தனுஷன் (ஸ்கந்தவரோதயாக் கல்லூரி), S. வரலக்ஷன் (மகாஜன கல்லூரி), A. ஜெயதர்சன் (யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி), R. ராஜ்கிளின்டன் (யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி), V. வியாஸ்காந்த் (யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி), T. விதுசன் (யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி), M. கவிலன் (புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி), K. இயலரசன் (யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி), A. இவன் ரோசந்தன் (புனித பத்திரிசியார் கல்லூரி)
கிழக்கு மாகாணம்
மிதில சரித் (உஹன மகா வித்தியாலயம்/தர்மராஜ கல்லூரி), K. தினுக்ஷன் (கோணெஸ்வரம் இந்து கல்லூரி), கவிந்து லக்ஷித (உஹன மகா வித்தியாலயம்), பசிந்து டில்ஹார (சிங்கள மஹா வித்தியாலயம், திரிகோணமலை), தினேஷ் மதுசங்க (உஹன மகா வித்தியாலயம்), L. ஆகாஷ் (மத்திய கல்லூரி, மட்டக்களப்பு), சனுர டீஷான் (டி.எஸ். சேனநாயக்க கல்லூரி, அம்பாறை), தேவ திலோக்ஷன் (மத்திய கல்லூரி, மட்டக்களப்பு), பசான் தேவ்மின (உஹன மகா வித்தியாலயம்/திரித்துவ கல்லூரி), J. பிரணாவன் (புனித மைக்கல் கல்லூரி), இஹ்ஸான் ரூஹைம் (அலிகார் கல்லூரி ஏறாவூர்), S. டிருஸ்சான் (மத்திய கல்லூரி, மட்டக்களப்பு), S. நிப்ராஸ் (வெஸ்லி கல்லூரி, கல்முனை), செவோன் நிமந்த (சிங்கள மஹா வித்தியாலயம், அம்பாறை), J. நிர்த்தீஷ் (சிவந்தா கல்லூரி, மட்டக்களப்பு)
ஹிந்தி நடிகை மனிஷா கொய்ராலா தனது வாழ்வில் நிகழ்ந்த மோசமான சம்பவம் குறித்து உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.
தமிழில் பம்பாய், இந்தியன், முதல்வன் என சில படங்களில் நடித்து புகழ்பெற்றவர் ஹிந்தி நடிகை மனிஷா கொய்ராலா. இவர் சமீபத்தில் ஹிந்தி நடிகர் சஞ்சய் தத்தின் வாழ்க்கை வரலாறு படமான ‘சஞ்சு’-வில் நடித்தார்.
இந்தப் படத்தில் சஞ்சய் தத்தின் தாய் நர்கீஸ் வேடத்தில் மனிஷா நடித்திருந்தார். ஆனால், இந்தப் படத்தில் இவர் நடித்ததற்கு ஒரு ஒற்றுமை உள்ளது.
நர்கீஸ் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறந்தார். மனிஷாவும் புற்றுநோயின் தாக்கத்தில் இருந்து சில ஆண்டுகள் போராடி மீண்டு வந்தார். எனவே, தனது வாழ்வில் புற்றுநோயினால் ஏற்பட்ட சோகம் குறித்து இசை வெளியீட்டு விழாவில் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், ‘உண்மையில் நீங்கள் திரைப்படங்களில் கண்டு ரசிக்கும் அத்தகைய உண்மையான காதலை நான் என் நிஜ வாழ்வில் காணவில்லை.
திருமணம் என்ற பந்தத்தின் பெயரால் காதலையும், அன்பையும், மரியாதையையும் எதிர்பார்த்து நான் ஏமாந்து விட்டேன். என்னால் பந்தத்தின் பெயரால் சுயமரியாதையை இழந்து வாழ முடியாது.
எனக்கான மரியாதை மிக முக்கியம். திரைவாழ்விலும் சரி, தனிப்பட்ட வாழ்விலும் சரி, மரியாதையற்ற இடத்திலோ, உறவிலோ என்னால் இருக்கவே முடியாது.
அப்படிப்பட்ட உறவு எனக்கு தேவையில்லை என்பதே, என் வாழ்வில் நான் கண்டடைந்த மிக மோசமான உண்மை’ என தெரிவித்துள்ளார்.
கேரளாவில் காதலித்தது ஒரு குற்றம் கருதி ஒரு குடும்பத்தை ஊரே ஒதுக்கி வைத்துள்ள உண்மை சம்பவம் நடந்துள்ளது.
கேரளாவில் இடுக்கி பகுதியில் சுசனிக்குடி என்ற பகுதி உள்ளது. சாலை வசதி இல்லாத மலைப்பகுதியில் அமைந்துள்ள இந்த ஊருக்கு வனத்துறையினரின் அனுமதி பெற்றே செல்ல வேண்டும்.
அங்கு முதுவான்மார் என்ற சமூகத்தை சேர்ந்தவர்கள் வசித்து வருகிறார்கள். 50 ஆண்டுகளுக்கு முன்பு வரை பெரிய கிராமமாக இருந்த இந்த பகுதியில் இப்போது மக்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டது. அங்கிருந்து வெளியேறியவர்கள் தீர்த்தமலைகுடி என்ற இடத்தில் குடியேறினார்கன்.
அங்குள்ள மக்கள் மலையாளமும், தமிழும் கலந்த முதுவான்மார் மொழியில் பேசுகிறார்கள். அங்கிருந்துதான் அழகர்சாமி குடும்பம் நான்கு வருடங்களுக்கு முன்பு ஊர்விலக்கு செய்து வெளியேற்றப்பட்டிருக்கிறது.
அழகர்சாமியின் மகள் ஷைலா படித்து முடித்ததும் பீகாரில் நர்ஸ் வேலை கிடைத்தது. அந்த மாநிலத்தை சேர்ந்த ராம்பிரவேஷ் என்பவர், அக்காளை காதலித்தார்.
அவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ள விரும்பியதை எங்கள் சமூகத்தை சேர்ந்தவர்களிடம் சொன்னோம். முதலில் அமைதியாக கேட்டவர்கள் பின்பு ஒன்று சேர்ந்து எதிர்த்தார்கள். அடுத்து எங்கள் சமூகத்தை சேர்ந்த ஒருவரை அவசரமாக தயார்செய்து அவரை என் அக்காளுக்கு திருமணம் செய்துவைக்கும்படி கட்டாயப்படுத்தினார்கள்.
அந்த நபர் பள்ளிக்கூடத்திற்குகூட செல்லாதவர். அவரை திருமணம் செய்தால் அதோடு அக்காளின் வாழ்க்கை முடிந்து போகும் என்பதால் நாங்கள் சம்மதிக்கவில்லை.
ஒரு குடும்பத்தை அவர்கள் ஊர்விலக்கு செய்துவிட்டால், பின்பு அவர்களுக்கும் முதுவான் சமூகத்தினருக்கும் எந்த தொடர்பும் இருக்காது. வசிக்கும் வீட்டைவிட்டும் வெளியேறிவிடவேண்டும். அந்த சமூகத்தோடு இணைந்து வாழும் குடும்பத்தினர் வீடுகளுக்கோ, உறவினர்கள் வீடுகளுக்கோ செல்ல முடியாது. அவர்களிடம் பேசவும் கூடாது.
குடும்பத்தில் யாராவது இறந்துபோனாலும் அவரை பார்க்கவும் அனுமதிகிடையாது. ஊர்விலக்கப்பட்ட குடும்பத்தினரோடு, அந்த சமூகத்தினர் யாராவது தொடர்பு வைத்திருந்தாலும் அவர்களும் தண்டிக்கப்படுவார்கள் அதனால் கடுமையான நெருக்கடிக்குள் அழகர்சாமி சிக்கினார்.
என் மகள் எந்த தப்பும் செய்யவில்லை. அவள் விரும்பியவரோடு வாழ அவளுக்கு இருக்கும் உரிமையை யார் தடுக்க முடியும்? என்பதற்காக, தனது மகள் ஆசைப்பட்டவரை திருமணம் செய்துவைத்துள்ளார்.
இதன் காரணத்தால் அழகர்சாமியின் குடும்பமே ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளது.
காடுகளை நம்பித்தான் எங்கள் சமூக மக்கள் வாழ்வார்கள். காடுகளை திருத்தி விவசாயம் செய்வார்கள். நாங்கள் எங்கள் விவசாய பூமியையும், சொந்த வீட்டையும் விட்டுவிட்டு வெளியேறி வாடகை வீட்டில் வசிக்கிறோம். கூலி வேலைபார்த்துதான் வாழ்க்கையை ஓட்டுகிறோம்.
ஊர் விலக்கப்பட்ட பின்பு என் கணவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அவர் மருத்துவமனையில் இருந்தபோதும் எங்கள் சமூகத்தை சேர்ந்த யாரும் வந்து பார்க்கவில்லை. எங்கள் சொந்த வீடும் அங்கு உருக்குலைந்துபோய் கிடக்கிறது என்கிறார் அழகர்சாமியின் மனைவி கன்னியம்மா.
இந்தியாவில் 70 ஆண்டுகளாக உணவு, தண்ணீரின்றி காற்றை மட்டும் சுவாசித்து வழும் துறவியைக் கண்டு விஞ்ஞானிகள் வியப்படைந்துள்ளனர்.
குஜராத் மாநிலம் மெஹ்சானா மாவட்டம், சரோட் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரஹலாத் ஜனி. 88 வயதான இவர் மாதாஜி என அழைக்கப்படுகிறார்.
சிவப்பு உடை மட்டுமே பெரும்பாலும் அணியும் பழக்கம் கொண்ட இவர் கடந்த, 70 ஆண்டுகளாக, உணவு, தண்ணீர் இன்றி, காற்றை மட்டும் சுவாசித்து உயிர் வாழ்ந்து வருவதாகவும், இவரைப் பார்த்து விஞ்ஞானிகள் ஆச்சரியமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இது உண்மையா இல்லை பொய்யா என்பதை அறிந்து கொள்வதற்காக கடந்த 2010-ஆம் ஆண்டு நாட்டின், பாதுகாப்பு ஆராய்ச்சி, மேம்பாட்டு அமைப்பான, டி.ஆர்.டி.ஓ. மற்றும் ராணுவ உடற்கூறியல் அமைப்பு இணைந்து இவரை கண்காணித்தனர்.
அதன்படி, ஒரு தனி அறையில், இவரை 15 நாட்கள் தங்க வைத்து தீவிரமாக கண்காணித்தனர்.
அதன் பின், அவருக்கு பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்ட போது, அவர் பட்டினியாக இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இது குறித்து அவர் கூறுகையில், கடவுளின் அருளால் தியானத்தின் வாயிலாக தனக்கு சக்தி கிடைப்பதாக கூறியுள்ளார்.
இவருடைய ஆசிரமத்திற்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் சென்று ஆசி பெற்று வருவார்கள் எனவும் கூறப்படுகிறது.
பிரபல நடிகை முன்முன் தத்தாவின் தந்தை உடல்நலக்குறைவால் மரணமடைந்துள்ளார். தமிழில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான மும்பை எக்ஸ்பிரஸ் திரைப்படத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை முன்முன் தத்தா.
இவர் பல இந்தி திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். சிறுவயதில் தான் அனுபவித்த பாலியல் கொடுமைகள் குறித்து முன்முன் கடந்தாண்டு ஊடகத்தில் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில் முன்முன்னின் தந்தை சில காலமாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். சில நாட்களுக்கு முன்னர் அவருக்கு அறுவை சிகிச்சையும் நடந்திருந்தது. ஆனாலும் நோய் பாதிப்பிலிருந்து மீளாத அவர் திடீரென நேற்று மரணமடைந்தார்.
தந்தையின் மரணம் குறித்து அதிகம் கேட்க வேண்டாம் எனவும், தன்னை தனிமையில் விடும்படியும் முன்முன் கோரிக்கை வைத்துள்ளார்.
இந்தியாவில் மனைவியை கொலை செய்த கணவர் பொலிசில் சரணடைந்த நிலையில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
ஒடிசா மாநிலத்தின் பசூதேவ்பூரை சேர்ந்தவர் பிரபுல்லா பரிக். இவர் மனைவி ஜெயந்தி (28). சமீபகாலமாக ஜெயந்திக்கு வேறு நபருடன் தொடர்பு இருப்பதாக பரிக்குக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் ஜெயந்தியுடன் ஏற்பட்ட தகராறில் கோடாரியால் அடித்து அவரை பரிக் கொலை செய்துள்ளார். பின்னர் நேராக காவல் நிலையத்துக்கு சென்று சரணடைந்துள்ளார்.
பொலிசாரிடம் பரிக் அளித்துள்ள வாக்குமூலத்தில், திருமணமான நபருடன் ஜெயந்திக்கு கள்ளத்தொடர்பு இருந்தது.
குறித்த நபருடன் என் மனைவி ஆபாச நிலையில் இருக்கும் வீடியோவை அவர் செல்போனில் பார்த்து நான் அதிர்ச்சியடைந்தேன்.
மனைவி எனக்கு செய்த துரோகம் தாங்காமல் ஆத்திரத்தில் அவரை கொலை செய்தேன் என கூறியுள்ளார்.
இந்நிலையில் ஜெயந்தியிடம் வரதட்சணை கேட்டு தொடர்ந்து கொடுமைப்படுத்திய நிலையிலேயே அவரை பரிக் கொலை செய்துள்ளதாக ஜெயந்தி குடும்பத்தார் குற்றஞ்சாட்டியுள்ளனர். சம்பவம் குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோடி ரூபாய் கொடுத்தாலும் மிமிக்ரி கலைஞர் நவீனை விவாகரத்து செய்ய முடியாது என திவ்யலட்சுமி கூறியுள்ளார்.
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்க போவது யார் மூலம் பிரபலமான நவீன் தன்னை திருமணம் செய்து ஏமாற்றிவிட்டதாக திவ்யலட்சுமி என்ற பெண் பொலிசில் புகார் அளித்துள்ளார்.
அதாவது கடந்த 2016-ல் நவீனும் தானும் திருமணம் செய்து கொண்டதாகவும் பின்னர் பேரும் புகழும் கிடைத்த பின்னர் மலேசியாவில் உள்ள பெண்ணுடன் அவருக்கு தொடர்பு ஏற்பட்டதாகவும் கூறியிருந்தார்.
ஆனால் திவ்யலட்சுமியை தான் திருமணம் செய்யவில்லை என நவீன் கூறினார்.
இதனிடையில் திவ்யலட்சுமியிடம் நவீனை விவாகரத்து செய்ய பேரம் பேசப்படுவதாக கூறப்பட்டது. இது குறித்து தற்போது பேசிய திவ்யலட்சுமி, இரண்டாவது திருமணத்துக்காக என்னிடம் பேரம் பேசுகின்றனர்.
கோடி ரூபாய் கொடுத்தாலும் என்னால் அவருக்கு விவாகரத்து வழங்க முடியாது என திட்டவட்டமாக கூறியுள்ளார்.
இந்தியாவில் ஆண் நண்பரை சந்தித்து விட்டு வீட்டுக்கு வந்த பெண் பேஸ்புக் நேரலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொல்கத்தாவை சேர்ந்தவர் மெளசுமி மிஸ்திரி (17). பனிரெண்டாம் வகுப்பு மாணவியான இவர் தனது ஆண் நண்பருடன் ஏற்பட்ட சண்டையை அடுத்து தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதை பேஸ்புக் நேரலையில் செய்துள்ளார்.
மெளசுமியின் தாய் சம்பா வேலைக்கு சென்ற நிலையில் வீட்டில் தனியாக இருந்த அவர் இம்முடிவை எடுத்துள்ளார்.
இந்நிலையில் மெளசுமியின் மரணத்துக்கு அவர் ஆண் நண்பர் தான் காரணம் என கூறியுள்ள அவர் தாய், மகளின் இரண்டு செல்போன்களை பொலிசிடம் ஒப்படைத்துள்ளார்.
சம்பா கூறுகையில், சம்பவம் நடந்த அன்று மெளசுமிக்கு நிறைய போன் வந்தது, போனில் பேசியபின்னரும், மெசேஜ் அனுப்பிய பின்னரும் அவர் மன அழுத்தத்தில் காணப்பட்டார்.
பின்னர் வெளியில் சென்று ஆண்நண்பரை சந்தித்து விட்டு வீட்டுக்கு வந்த நிலையில் தற்கொலை செய்துள்ளதாக கூறியுள்ளார்.
இதையடுத்து பொலிசார் இரண்டு செல்போன்களை ஆராய்ந்து அதிலிருந்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.
A 17-year-old West Bengal student ends life; live streams suicide on Facebook. pic.twitter.com/D1g00NZgUO
இந்தியாவின் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ஒரு தமிழ்ப் பெண்ணுக்கு நேர்ந்த அவலம் குறித்து அறிந்துகொண்டால் அடுத்த முறை பேஸ்புக்கில் தகவல் பதிவிட தயங்குவீர்கள்.
தமிழகத்தைச் சேர்ந்த பிரேமலதா என்பவர் தனது சகோதர் லோகித் மற்றும் குடும்பத்தினருடன் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் RT நகர் பகுதியில் குடியிருந்து வருகிறார்.
வாரஇறுதியையொட்டி சொந்த ஊரான தமிழகத்தின் கோபிச்செட்டிபாளையத்தில் உள்ள குலதெய்வம் கோவிலுக்கு குடும்பத்துடன் செல்வதாக தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்துவிட்டு ஊருக்கு கிளம்பிச் சென்றுள்ளார் பிரேமலதா.
ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2 மணியளவில் மீண்டும் பெங்களூருவில் உள்ள தனது வீட்டுக்கு திரும்பி வந்த போது அவருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.
வீட்டின் முன்கதவு உடைக்கப்பட்டிருந்தது, வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனம் காணாமல் போயிருந்தது, வீடே அலங்கோலமாக இருந்துள்ளது,
வீட்டில் இருந்த 5 லட்ச ரூபாய் மதிப்பிலான நகைகள் மற்றும் 57,000 ரூபாய் ஆகியவற்றை கொள்ளையர்கள் திருடிச் சென்றதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர் நேற்று RT நகர் காவல்நிலையத்தில் இது தொடர்பாக புகார் அளித்துள்ளார்.
தனது பேஸ்புக் பதிவைக்கண்ட யாரோ ஒருவர் தான் இத்திருட்டில் ஈடுபட்டிருக்க வேண்டும் என சந்தேகிப்பதாக பிரேமலதா தனது புகாரில் தெரிவித்துள்ளார்.
மேலும், அண்டை வீடுகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கமராக்கள் இயங்காததால் கொள்ளையர்கள் சிக்கிக்கொள்ளாமல் தப்பிக்க அது வாய்ப்பாக மாறியுள்ளது என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பேஸ்புக் உள்ளிட்ட பல்வேறு சமூக வலைத்தளங்களும் நம்முடைய நிகழ்நேர அனுபவங்கள் மற்றும் தகவல்களை பகிர வாய்ப்பாக இருந்தாலும், அத்தளங்களில் பகிரப்படும் தகவல்கள் தவறாக பயன்படுத்தப்படுவதும் தற்போது அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இலங்கையின் வரலாற்றில் முதன் முறையாக இந்து விவகார அமைச்சின் பிரதி அமைச்சராக இஸ்லாமியர் ஒருவரை நியமித்துள்ளது இந்த நல்லாட்சியில் தான் என்பது பெரும் கவலைக்குரிய விடயம் என ஸ்ரீ தமிழீழ விடுதலை இயக்கத்தின்(சிறிரெலோ) செயலாளர் நாயகம் ப.உதயராசா கண்டனம் தெரிவித்துள்ளார்
இன்றைய தினம் (12.06.2018) வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் அவர்கட்கு இந்து விவகார பிரதி அமைச்சு வழங்கப்பட்டதையடுத்து அதனை கண்டிக்கும் முகமாக ஸ்ரீ தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகம் ப.உதயராசா ஊடகங்களிற்கு அறிக்கை ஒன்றை வழங்கியுள்ளார்.
குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது
இந்து பாரம்பரியத்தை அறியாதவர்களுக்கும் இந்துக்கள் தெய்வமாக வழிபடும் கோமாதாவை வெட்டி வியாபாரம் செய்யும் நபர்களுக்கும் இந்த பதவியை வழங்கியதென்பது இலங்கையில் வாழும் அனைத்து இந்து மக்களையும் இந்த நல்லாட்சி அரசு புறக்கணிப்பதாகவே கருத்தில் கொள்ளவேண்டியுள்ளது
கடந்த 2015 ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் பெரும்பான்மையான தமிழர்களின் வாக்குகளை பெற்று ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட இலங்கை சோசலிச குடியரசின் மேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இலங்கை தமிழர்களின் பெருமதிப்பை பெற்றவர்.
ஆனால் இன்று இந்து விவகார பிரதி அமைச்சராக இஸ்லாமியர் ஒருவரை தெரிந்தெடுத்திருப்பது வேதனைக்குரிய விடயமென்பதுடன் இந்துக்கள் மத்தியில் பெரும் அவப்பெயரை ஜனாதிபதிக்கு எடுத்துக்கொடுத்துள்ளது. நாட்டின் தலைவர் இதனை சிந்திக்காமல் செய்துள்ளாரா என்பது கேள்விக்குறியாக உள்ளது.
இதேவேளை பெளத்த விவகார அமைச்சு அல்லது முஸ்லிம் விவகார அமைச்சுக்களை வேறு ஒரு இனத்தவருக்கு வழங்கியிருக்க முடியுமா? அல்லது அந்த இனத்தவர்கள் இதை ஏற்றுக்கொள்வார்களா? தமிழர்கள் மீது மாத்திரம் இவ்வாறான செயற்பாடுகளை செய்வதால் நல்லாட்சி என கூறிய இந்த அரசும் தமிழர்கள் மீது தொடர்ந்து அடக்கு முறையை பிரயோகிப்பதாகவே தெரிகின்றது.
எனவே இந்த அமைச்சுப்பதவியினை பற்றி ஜனாதிபதி அவர்கள் மீள்பரிசீலனை செய்யவேண்டும் என்பதை தாம் வலியுறுத்துவதாகவும் ப.உதயராசா தமது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.