வவுனியாவில் வீதியால் அச்சத்துடன் பயணிக்கும் மக்கள்!!

வவுனியா குட்செட் வீதியால் பயணிப்பவர்கள் மிகுந்த அச்சத்துடனையே பயணிக்க வேண்டிய சூழ்நிலை காணப்படுவதுடன் பொதுமக்களுக்கு எச்சரிக்கையாய் இருக்கும் படியும் அக்கிராம இளைஞர்கள் சிலர் தெரிவிக்கின்றனர்

வவுனியா குட்செட் வீதியில் பாரிய இரண்டு வளைவுகளை கொண்ட பகுதியின் அருகில் வீதியிலும் வீதியின் அருகில் உள்ள வீடுகளில் நிற்கும் உயர வளர்ந்த தென்னை மரங்கள் வீதியை நோக்கி உயரவளர்ந்து காணப்படுவதினால் அவ்வீதியில் பயணிப்பவர்கள் அச்சத்தின் மத்தியில் பயணிக்க வேண்டியுள்ளது.

மேலும் குறித்த தென்னை மரங்களில் தேங்காய்கள் மற்றும் பழுத்த தென்னை ஓலைகளும் காணப்படுவதால் பலத்த காற்று வீசும் இக்காலகட்டத்தில் பயணிப்பவர்கள் மீது குறித்த தேங்காய்கள் வீழ்வதற்கு சந்தர்ப்பங்கள் அதிகமாக உள்ளது

குறித்த வீதியானது சிறுவர்கள் முதியவர்கள் என எந்நேரமும் மக்கள் போக்குவரத்து அதிகமாக நிறைந்த வீதியாகும். இதில் இவ்வாறு அசாதாரன சூழ்நிலை காணப்படுவதற்கு நகரசபை நடவடிக்கை எடுக்கும் என கிராம இளைஞர்கள் தெரிவிப்பதுடன் நகரபிதாவிடமும் இதுபற்றி அறியப்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்தனர்.

இதேவேளை கடந்த சில தினங்களிற்கு முன் கடுகண்ணாவ பகுதியில் தென்னை மட்டை ஓலையுடன் பெண்ணொருவரின் மேல் வீழ்ந்து பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார் எனபதும் குறிப்பிடத்தக்கது.

9 மாணவிகள் உட்பட 18 மாணவர்கள் வைத்தியசாலையில்!!

வெலிமடை – வங்கியகும்புற மத்திய மகா வித்தியாலய மாணவர்கள் 18 பேர் நேற்று குளவி கொட்டுக்கு இலக்காகி பொரலந்தை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பிரதேசத்தில் நிலவி வருகின்ற பலத்த காற்று காரணமாக, பாடசாலைக்கு அருகிலுள்ள மரமொன்றிலிருந்த குளவி கூடு கலைந்து மாணவர்களை கொட்டியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதன்போது குளவி கொட்டுக்கு இலக்கான மாணவர்களுள் 9 பெண் பிள்ளைகளும் அடங்குவதாக பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.

குளவி கொட்டுக்கு இலக்கான மாணவர்கள் தொடர்ந்தும் பொரலந்தை பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வவுனியா புதூர் நாகதம்பிரான் ஆலயத்தில் பக்தர்களை மெய் சிலிர்க்க வைத்த வெள்ளை நாகம்!!

வவுனியா, புதூர் நாகதம்பிரான் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் உற்சவத்தின் போது வெள்ளை நாகம் காட்சி கொடுத்தமை பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளது.

400 ஆண்டுகள் பழமை வாய்ந்த வன்னி மண்ணின் புகழ்மிகு புதூர் நாகதம்பிரான் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் நிகழ்வு நேற்று இடம்பெற்றுள்ளது.

இந்த நிகழ்வில் கலந்து கொள்வதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்துள்ளனர்.

விசம் தீண்டியவர்களுக்கு மருந்து வழங்கும் புதூர் நாகதம்பிரான் ஆலய பொங்கல் நிகழ்வு நடைபெற்ற போது வெள்ளை நாகம் அங்கு வந்துள்ளது.

இதன்போது வெள்ளை நாகத்திற்கு பக்தர்கள் பால் மற்றும் முட்டை போன்றவற்றை படைத்து வழிபட்டுள்ளனர். சில நிமிடங்கள் அங்கிருந்த வெள்ளை நாகம் பின் அங்கிருந்து சென்றுள்ளது.

யாழ்ப்பாணத்தில் உருவாகியுள்ள மற்றுமொரு ஆபத்து : புலனாய்வுப் பிரிவு எச்சரிக்கை!!

யாழ்ப்பாணத்தில் இயங்கிய ஆவா குழுவை போன்று தனுரொக் என்ற குழு ஒன்று தலைதூக்க முயற்சிப்பதாக புலனாய்வு பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆவா குழுவில் இருந்து பிரிந்து சென்றவர்களால் இந்த குழு உருவாக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணம், கொக்குவில் பொலிஸாரினால் தனுரொக் குழுவில் இருந்து 3 பேர் கைது செய்யப்பட்டதன் பின்னர் இந்த குழுவினர் தொடர்பில் முக்கிய தகவல்கள் தெரிய வந்துள்ளது.

யாழ்ப்பாணம் கொக்குவில் பிரதேசத்தில் நேற்று முன்தினம் தனுரொக் குழுவினால் இரு இளைஞர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இதனால் காயமடைந்த இளைஞர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய 3 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொக்குவில், அருகல்மடம் பிரதேசத்தில் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இரு மோட்டார் சைக்கிளில் வந்த ஐந்து பேர் கொண்ட குழுவினரால் வீதியில் பயணித்து கொண்டிருந்த இரண்டு இளைஞர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த தாக்குதல் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் யாழ்ப்பாண பொலிஸ் அதிகாரிகள் வீதி போக்குவரத்து நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த நிலையில், அந்த அதிகாரிகளினால் மோட்டார் சைக்கிள் மற்றும் அங்கிருந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தாக்குதலுக்கு தொடர்புபட்டவர்கள் ஆவா குழு மற்றும் தனுரொக் குழுவின் உறுப்பினர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது. அண்மைக்காலமாக இரு குழுக்களுக்கும் இடையில் பல முறை மோதல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக யாழ்ப்பாண பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபச்சார நடவடிக்கையில் ஈடுபட்ட பிரபல இலங்கை நடிகை கைது!!

கம்பஹா, கிடகமுல்ல பிரதேசத்தில் ஹோட்டல் என்ற பெயரில் நடத்தி செல்லப்பட்ட விபச்சார விடுதி ஒன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

நேற்று அதிகாலை இந்த விபச்சார விடுதி சுற்றிவளைக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு விபச்சார நடவடிக்கையில் ஈடுபட்ட பிரபல நடிகை உட்பட 7 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் குறித்த வீட்டில் முகாமைத்துவம் மற்றும் அடையாளப்படுத்த முடியாத நிலையில் 8 ஆண்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 30 – 40 வயதுக்கு உட்பட்டவர்கள் எனவும் நிட்டம்புவ, கனேமுல்ல, யாகொட, சியம்பலாம்பிட்டிய மற்றும் தெல்கொட ஆகிய பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

இதேவேளை, கைது செய்யப்பட்ட நடிகை பல்வேறு தொலைகாட்சி கதாபாத்திரங்களில் நடித்துள்ள நிலையில், அவர் பல சமூக சேவைகளை செய்துள்ளார்.

இந்த பெண் இதற்கு முன்னரும் அந்த இடத்தில் பணி செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வவுனியாவில் நள்ளிரவில் பக்தர்களுக்கு காட்சி கொடுத்த நாகதம்பிரான்!!(படங்கள்,வீடியோ)

வவுனியா புதூர் ஸ்ரீ நாகதம்பிரான் ஆலய வருடாந்த பொங்கல் பெருவிழா நேற்று 11.06.2018 திங்கட்கிழமை இடம்பெற்றது. மேற்படி பொங்கல் விழாவின் போதே நாகதம்பிரான் பக்தர்களுக்கு காட்சி கொடுத்த சம்பவமும் இடம்பெற்றது.

நேற்று பல லட்சக்கணக்கான பகதர்கள் கூடியிருந்த தருணம் வழிபாடுகள் இடம்பெற்று கொண்டிருந்த சமயம் நாகதம்பிரான் பக்தர்களுக்கு காட்சி கொடுத்துள்ளார் . மேற்படி சம்பவம் தொடர்பாக அன்பர் ஒருவர் முகபுத்ததில் பகிர்ந்த விடயம்..

மனிதனுக்கு மிஞ்சிய சக்தி உண்டென்பதை ஏற்கும் மனம். அதுதான் கடவுள் என்று ஏற்க மறுக்கிறதும் முன்னுக்கு பின் முறனான கடவுளர்களின் பிறப்பு பற்றி மொழிவதும் மனிதப் பண்புகளோடு பிறப்பவர்களை கடவுளாக கொண்டு கதைகள் பல சொல்வதுமாக கேட்டு கடவுளை நம்ப மறுக்கிறது மனம்.

எல்லோரும் போல கோவிலுக்கோ, பள்ளிக்கோ, தேவாலயங்களுக்கோ சென்றாலும் கடவுளை பற்றிய தேடல் தொடர்கிறது என்னுள்.

புதூர் #நாகம்பிரான் ஆலயவழிபாடு 11-06-2018 நேற்று சென்றிருந்தேன். வழமைப்போல கோவில் நுழைவாயில் போனதும் கையை கழுவிட்டு நீண்ட வரிசையில் நின்று அன்னதானத்தை முடித்துக்கொண்டு கோவிலின் செல்லும் போது ஒலி பெருக்கியில் ” நாகம்பிரான் காட்சியளிக்கிறார் சனநெரிசல் அதிகமாகி கொண்டிருக்கிறது சீராக்க காவல்துறையிர் உள்வீதிக்கு வரவும் ” என்றனர்.

எனக்கு ஒரே மகிழ்ச்சி அப்போ கடவுளை பார்த்து விடலாம் என்று முட்டி மோதி உள்ளே சென்றேன். உள்ளே உள்ள பாலை மரத்தைச் சுற்றி கூடியிருந்த சனங்கள் மரத்தின் உச்சியில் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

ஒருசிலர் அதோ என்றார்கள் அதில் கொஞ்சப்பேர் அது மரக்கட்டை என்றார்கள். எனக்கு சிரிப்பு வந்து விட்டது. சிரித்து முடிக்குமுன்னே ” இதோ இதோ என்று பலரும் கூச்சலிட்டனர். ஒருசிலர் தன்னை மறந்து ஆடத்தொடங்கினர். “அரோகொரா…அரோகொரா..” என்று சத்தம் வேறு திரும்பி பார்த்தேன் வெள்ளை நிற நாகபாம்பு படமெடுத்தவாறு. உடம்பே வியர்த்துவிட்டது.

என்னை அறியாமலே கையெடுத்து வணங்கிவிட்டு புகைப்படம் எடுப்போம் என்று தொலைபேசியை எடுத்தேன். உள்ளே போய்விட்டது. வாலை மட்டுமே படம் பிடிக்கமுடிந்தது.

வவுனியா புதூர் ஸ்ரீ நாகதம்பிரான் ஆலய பொங்கல் பெருவிழா!(படங்கள்,வீடியோ)

வரலாற்றுச் சிறப்பு மிக்க புதூர் நாகதம்பிரான் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் பெருவிழா நேற்றைய தினம் லட்சக்கணக்கான பக்தர்கள் புடைசூழ இடம்பெற்றுள்ளது.

 

வவுனியா மாவட்டத்தின் புளியங்குளம் பகுதியில் உள்ள புதூர் எனும் காடும் காடு சார்ந்த இடத்தில் அமைந்துள்ள ஆலயமே புதூர் நாகதம்பிரான் ஆலயம். ஏறத்தாள நானூறு ஆண்டுகளுக்கு முந்திய வரலாற்று நீட்சி கொண்டதாக காணப்படும் இந்த ஆலயம் குறித்து பல்வேறு புதுமைகள் நிறைந்த செவிவழிக் கதைகள் நிலவுகின்றன.

குறிப்பாக ஈழத் தமிழரின் அதிக் குடிகளான நாகர்களின் மரபுவழி வழிபாட்டு முறைகளுள் ஒன்றான நாக வழிபாடு தொன்று தொட்டு கடைப்பிடிக்கப்பட்டுவந்ததன் ஓர் அங்கமாகவே இந்த ஆலயமும் வடகிழக்கின் ஏனைய நாக ஆலயங்களுள் ஒன்றாக விளங்குகின்றது.

ஈழத் தமிழரின் நாக வழிபாடுகளில் மிக முந்திய தலமாகவும், கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலத்திலிருந்து நாகதீவு அல்லது மணிபல்லவத்தீவு என்ற நாமத்துடன் விளங்கிவரும் ஆலயமாகவும் யாழ்ப்பாணம் நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலயம் விளங்குகின்றது. அதன்வழியே ஈழத்தின் பல பகுதிகளிலும் பல்வேறு நாக ஸ்தலங்கள் காணப்படுகின்றன.

கிளிநொச்சி மாவட்டம் புளியம்பொக்கணையில் அமைந்துள்ள நாகதம்பிரான் ஆலயத்திற்கும் வவுனியா மாவட்டம் புளியங்குளம் புதூரில் அமைந்துள்ள நாகதம்பிரான் ஆலயத்திற்கும் மிக நெருக்கமான தொடர்புகள் உள்ளதாக கூறப்படுகின்றது.

நாகாகர்களின் நாக வழிபாட்டு முறையிலே ஆண் தெய்வமாக நாகத்தால் பூஜிக்கப்பட்ட தம்பிரானும் பெண் தெய்வமாக நாகத்தால் பூஜிக்கப்பட்ட பூஷணியும் விளங்குகின்றனர். தம்பிரான் என்பது சிவபெருமானின் மறுபெயராகும். அதேபோல் பூஷணி என்பது உமை அம்மையின் மறுபெயராகும்.

நேர்த்திகளை நிறைவேற்றிவைக்கும் நாயகனாக விளங்கும் புதூர் நாக தம்பிரான் ஆலயத்தின் நேற்றைய பொங்கல் விழாவின்போது பல்லாயிரக்கணக்கான அடியார்கள் தமது நேர்த்திக்கடன்களைப் பூர்த்திசெய்துள்ளனர்

அதன்படி, காவடியாட்டம், பாற்செம்பு எடுத்தல், தீச்சட்டி எடுத்தல் என்பன அடியார்களின் நேர்த்திக்கடன்களாக நிறைவேற்றப்பட்டன.

வட தமிழீழத்தில் உள்ள பழமைவாய்ந்த ஆலயங்களில், மிகப்பெரிய மக்கள் கூட்டம் இராப்பொழுதில் அலைமோதும் திருத்தலங்களில் யாழ்ப்பாணம்-நயினாதீவு நாகபூஷணி அம்மன் (சப்பை இரதத் திருவிழா), முல்லைத்தீவு-வற்றாப்பளை கண்ணகி அம்மன் (வருடாந்த பொங்கல்), கிளிநொச்சி-புளியம்பொக்கணை நாகதம்பிரான்(வருடாந்த பொங்கல்), வவுனியா-புதூர் நாகதம்பிரான் (வருடாந்த பொங்கல்), மன்னார்-திருக்கேதீச்சரம் (சிவராத்திரி) என்பன சிறப்புற்று விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

மருத்துவமனையில் தந்தையை பார்க்கச் சென்ற மாணவன் பரிதாப பலி!!

தமிழகத்தில் மருத்துவமனையில் இருக்கும் தந்தையை பார்க்கச் சென்ற மாணவன் ரயில் சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக இறந்திருக்கும் சம்பவம் மாணவனின் குடும்பத்திற்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் தர்மலிங்கம். இவருக்கு செல்வகுமார் என்ற மகன் உள்ளார்.

இந்நிலையில் தர்மலிங்கத்திற்கு சமீபத்தில் உடல் நிலை சரியில்லாமல் போனதால், அவர் சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதனால் தந்தையை பார்ப்பதற்கு செல்வகுமார் சின்ன சேலம் ரயில் நிலையத்திற்கு சென்று சேலம்-சென்னை ரயிலில் ஏற முயன்றுள்ளார்.

அப்போது எதிர்பாரதவிதமாக ரயில் சக்கரத்தில் சிக்கிய அவர் பரிதாபமாக சம்பவ இடத்திலே பலியாகியுள்ளார். சம்பவத்தை அறிந்து விரைந்து வந்த பொலிசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பலியாகிய செல்வக்குமார் திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ.ஆங்கிலம் படித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

காதல் ஜோடியின் செயலை பார்த்து முகம் சுழித்த பொதுமக்கள்!!

மும்பையில் மக்கள் நடமாட்டாம் அதிகம் உள்ள Marine Drive பகுதியில் காதலர்கள் இருவர் நடந்துகொண்ட விதம் அங்கிருந்தவர்களை முகம் சுழிக்க வைத்துள்ளது.

கடற்கரை பகுதி மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடத்தில் காதல் ஜோடி ஒன்று, உறவில் ஈடுபட்டுள்ளனர். இதனை பார்த்த அங்கிருந்த பொதுமக்கள் முகம் சுழித்துள்ளனர். மேலும், ஒரு சிலர் குழந்தைகளோடு அங்கு வந்திருந்ததால், கோபம் கொண்டு கற்களை எடுத்து அவர்கள் மீது வீசியுள்ளனர்.

இதனைத்தொடர்ந்து அந்த காதல் ஜோடி அங்கிருந்து தப்பித்து ஒடியுள்ளது. இதுதொடர்பான வீடியோ மும்பையில் வைரலானதையடுத்து, காதல் ஜோடி குறித்து பொலிசார் விசாரணை நடத்தியதில், ஆண் நபர் வெளிநாட்டை சேர்ந்தவர் என்றும் அப்பெண் மும்பையை சேர்ந்தவர் எனவும் தெரியவந்துள்ளது.

இதனைத்தொடர்ந்து அப்பெண்ணை கண்டுபிடித்து எச்சரித்து அனுப்பியுள்ளனர்.

ஒரு மணிநேரம் உயிருக்கு போராடிய நடிகை : உதவிக்கு வராத மக்கள்!!

மலையாள நடிகை மேகா மேத்யூ, கார் கவிந்த விபத்தில் படுகாயமடைந்து கவிழ்ந்த காருக்குள் ஒரு மணி நேரமாக உயிருக்கு போராடிய சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.

இவர் கொச்சியில் இருந்து நேற்று முன் தினம் காலை தனது அண்ணன் திருமண நிச்சயதார்த்தத்துக்காக காரில் கோட்டயம் சென்று கொண்டிருந்தார். காரை அவரே ஓட்டிச் சென்றார். அப்போது மழை பெய்து கெண்டிருந்தது.

எர்ணாகுளம் அருகே முளன்துருத்தி பகுதியில் சென்றபோது எதிரே வந்த கார் மீது இவர் கார் மீது வேகமாக மோதியது. இதில் மேகாவின் கார் தலைகீழாகக் கவிழ்ந்தது. இதில் காயமடைந்த மேகா, காருக்குள் மயங்கிவிட்டார்.

மோதிய கார் நிற்காமல் சென்றுவிட்டது. காருக்குள் சிக்கியவர் இறந்திருக்கலாம் என்று கருதி யாரும் உதவிக்கு வரவில்லை. காருக்குள் சிக்கிக்கொண்ட மேத்யூ சுமார் ஒரு மணி நேரம் உயிருக்கு போராடியுள்ளார்.

அப்போது அங்கு வந்த புகைப்படக்காரர் ஒருவர், அந்தப் பகுதியினருடன் சேர்ந்து, அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தார். காயமடைந் திருந்த மேகா மேத்யூவிற்கு கொச்சி தனியார் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேத்யூவுக்கு ஏற்பட்ட காயம் சிறியதுதான் என்றாலும் விபத்து பெரியது. காரில் இருந்த் ஏர்பேக் அவரை காப்பாற்றியதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

வடக்கில் நுண்கடன் திட்டங்கள் ஒரு சாபக்கேடு : தற்கொலை செய்துகொள்ளும் அப்பாவி தமிழர்கள்!!

தமிழ் சகோதரர்கள் செறிவாக வாழும் பிரதேசங்களில் அண்மைக்காலமாக தற்கொலைகள் அதிகரித்துள்ளமை பெரும் கவலைக்குரிய விடயமாகும் என்று பேராசிரியர் எஸ். எல். றியாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தேசிய ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் பேராசிரியர் எஸ்.எல். றியாஸ் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். அதில் தொடர்ந்து குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

வடக்கில் முன்னாள் போராளிகளாக இருந்தவர்கள் வாழ்வாதாரத்துக்கு வழியின்றி தற்கொலை செய்து கொள்ளும் நிலையில் கிழக்கில் நுண்கடன் திட்டங்கள் அப்பாவித் தமிழர்களை தற்கொலை வரை தள்ளிச் செல்லும் அவலம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.

இதன் சமீபத்திய நிகழ்வாக நேற்று மாலை மட்டக்களப்பின் மாவடிவேம்பு பிரதேசத்தில் ஒரு இளம் குடும்பஸ்தர் தற்கொலை செய்து கொண்டிருந்தார்.

செங்கல்வாடியில் கூலிக்கு கல்அறுக்கும் மாவடிவேம்பு சம்பர் வீதியை சேர்ந்த மேகராசா யோகராசா (26) இரு பிள்ளைகளின் தந்தை ஏற்கனவே 3 நிறுவனங்களில் நுண்கடன் பெற்றநிலையில் மற்றுமொரு நுண்கடன் பெற கூட்டாக மூன்றுபேர் சேர்ந்தால்தான் கடன் கொடுப்பதாக நுண்கடன் நிறுவனங்களில் கொள்கையும் பெரிய வலைப்பின்னல் எல்லோரையும் கடனாளியாக்கும் திட்டத்திற்கு அமைய தமது மனைவியை கட்டாயப்படுத்த அவர் மறுப்பு தெரிவிக்க நேற்று மாலை தூக்கிட்டு பெறுமதிமிக்க உயிரைமாய்த்துள்ளார்.

ஏற்கனவே இவர் கூலித்தொலியாளியாக இருந்து மாதம் 36ஆயிரம் ரூபா கடன் நிறுவனங்களுக்கு செலுத்திவந்துள்ளார்.

நிரந்தர தொழில் இல்லாத இவ் ஏழைக்கு ஆசை வார்த்தைகளை காட்டி கடன் பெற தேசிய அடையாள அட்டை பிறப்பு சான்றிதழ் பிரதிகள் மற்றும் மூன்றுபேர் ஒருமித்த நிலையில் ஒப்பமிட்டால் நுண்கடன் வழங்கப்படும் என்று ஆசை காட்டி அந்த ஆசை நிராசையான நிலையிலேயே அவரின் தற்கொலை நிகழ்வு நடைபெற்றுள்ளது.

ஆரம்பத்தில் நுண்கடன் வழங்குவதற்கு பிணையாளிகளாக இரு அரச உத்தியோகத்தர்களை எதிர்பார்த்தார்கள் இதன் காரணமாக பல அரச உத்தியோகத்தர்கள் பிணையாளியாகப் போய் கடைசில் தன்னுடைய மாத சம்பளத்தை இழந்து நீதிமன்றில் அலைந்ததால் அவற்றை கருத்தில் கொண்டு கடன்பெறுபவருக்கு பிணையாளியாக முன்னிற்கும் மனப்பான்மை அற்றவர்களாக மாறிப்போனார்கள்.

இதனால் நுண்கடன் நிறுவனங்களின் மாயவலையில் விழும் அப்பாவிகள் எண்ணிக்கை வீழ்ச்சியடையத் தொடங்கியதும் நிறுவனங்களின் வருவாய் குறையத் தொடங்கியது.

இதன் பின்னர் பணத்திற்காக பிணத்தை பெறும் நிறுவனங்கள் தங்கள் சட்டதிட்டத்தை மிகவும் குறைத்து ஒவ்வொருவரிடம் எளிதாக கைவசம் கிடைக்கூடிய அடையாள அட்டை, பிறப்பு அத்தாட்சி பத்திர பிரதிகளையும் வாங்கி கடனை உடனடியாக கொடுக்கின்றார்கள்.

இதனால் கடன் பெறும் கிராமப் புற அப்பாவி ஏழைகள் நிறுவனங்களை நோக்கி படையெடுப்பது அதிகரித்துள்ளது. அதிலும் செங்கலடி பிரதேசபகுதி கிராமங்களில் தேடிதேடி நுண்கடனை கொடுத்து பல ஆயிரம் குடும்பங்களை நடுத்தெருவிற்கு கொண்டு வந்துள்ளனர்.

இரு மாதம் முன் இறந்த வந்தாறு மூலையைச் சேர்ந்த 19 வயது பிரதீபா என்ற பெண்ணின் வயதையும் தொழிலையும் பார்க்காமல் 10 இலட்சம் மேல் கடன் கொடுத்திருந்தார்கள் என்ற தகவல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்துகின்றது.

கடன்பெறும் இளம் வயது ஆண், பெண்ளை கண்டபடி திட்டினால் ஒன்று தம்முடைய காதில் கையில் இருக்கும் ஆபரணத்தை விற்று கடன் கட்டுவார்கள் அல்லது அதற்கு மேல போனால் தூக்குதான் ஒரே வழி.

மட்டக்களப்பில் இப்படித்தான் நுண்கடன் நிறுவனங்கள் தமிழ்சமூகத்தின் இளம் பரம்பரையை எமனுக்கு பலிகொடுத்துக்கொண்டிருக்கின்றார்கள்.

ஏலவே மூன்று தசாப்த யுத்தம் காரணமாக அனைத்தையும் இழந்து நிர்க்கதி நிற்கும் நிலையில் வாழும் மக்கள் தங்கள் பொருளாதார பிரச்சினைகளை தீர்க்க வேறு வழியின்றி நுண் கடன் நிறுவனங்களை நாடவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.

அவர்களின் வாக்குகளைக்கொண்டு மக்கள் மன்றங்களுக்குத் தெரிவான நாடாளுமன்ற உறுப்பினர்களும் மாகாண சபை உறுப்பினர்களும் தங்கள் பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் இருந்து சுயதொழில் கடன்களை வழங்கி தாம் பிரநிதித்துவம் செய்யும் மக்களின் வறுமையைப்போக்கலாம் என்பதை அறியாமல் நடந்துகொள்வதன் காரணமாக நட்டாற்றில் விடப்பட்ட அப்பாவி மக்கள் நுண்கடன் நிறுவனங்களின் வாசற்படி நாடி மரண சாசனங்களில் கைச்சாத்திட்டு கடன்பெறத் துணிகின்றார்கள்.

கடைசியில் அதனைத் திருப்பிச்செலுத்த முடியாது தற்கொலையை யும் நாடி உயிரை மாய்த்துக்கொள்கின்றார்கள். எனவே இவ்வாறான நிலையில் இனியும் தமிழ் மக்கள் தங்கள் அரசியல் பிரதிநிதிகளை நம்பிக்கொண்டிருப்பதில் பலன் கிடைக்கப்போ வதில்லை.

அதற்குப் பதிலாக அவ்வப் பிரதேசங்களின் இளைஞர்கள் முன்வந்து இவ்வாறான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முன்வரவேண்டும்.

உங்கள் பகுதியில் உள்ள விளையாட்டு கழங்கள் ஊடாகவோ அல்லது கிராம முன்னேற்றச் சங்கங்கள் ஊடாகவோ அல்லது இளைஞர் கழகங்கள் ஊடாகவோ அணி திரண்டு பொதுமக்கள் மத்தியில் இவை தொடர்பில் விழிப்புணர்வு ஏற்படுத்துவது முதலாம் கட்ட நடவடிக்கையாகும்.

அதன் பின்னர் சுழற்சி முறைக் கடன் பொறிமுறையொன்றை உருவாக்கி அதன் ஊடாக குறுகிய கால கடன்களை வழங்கி தம் பிரதேச மக்களின் வாழ்வில் ஒளியூட்ட முன்வர வேண்டும்.

மறுபுறத்தில் தமிழ் மக்களின் இளைய தலைமுறை மதுவுக்கும், மாதுவுக்கும், போதைப் பொருள் பாவனைக்கும் உள்ளாக்கப் படுவதை தயவு செய்து தடுத்து நிறுத்தி அவர்களை ஆக்கபூர்வமான வழிகளில் ஊக்குவிக்கவேண்டும்.

குடும்பத்துக்காக உழைக்கும் நபர்களாக மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அப்போது இவ்வாறான பொருளாதார பிரச்சினைகளை தவிர்த்துக்கொள்வதுடன் அநியாயமாக பலியாகும் உயிர்களையும் பாதுகாத்துக்கொள்ள முடியும்.

அத்துடன் நுண்கடன் வழங்கும் நிறுவனங்களின் பேரினவாத நிகழ்ச்சி நிரலின் ஒரு அம்சமாக சீரழிக்கப்படும் இளைய சமுதாயத்தினர் மத்தியில் இஸ்லாமியர்களுக்கு எதிரான இனவாதப்போக்கு தீவிரம் பெற்று வருவதையும் காணக்கூடியதாக உள்ளது.

இதுவும் கவலைக்குரிய விடயமாகும். இதற்கும் ஒரு முடிவு கட்டப்பட்டு இரு இனங்களின் நல்லிணக்கம் வலுப்பட்டு பரஸ்பரம் ஒத்தாசை செய்துக் கொள்ளக் கூடிய சூழல் எம் மத்தியில் ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும் பேராசிரியர் எஸ்.எல். றியாஸ் தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் விநோத முறையில் அமைக்கப்படும் வீடுகள் : அப்படி என்ன வினோதம்?

கிளிநொச்சி, கண்டாவளைப் பிரதேசத்தில் மணலுக்குப் பதிலாக கிரவல் மண் கொண்டு அமைக்கப்படுகின்ற மாதிரி வீட்டினை பல்வேறு தரப்பினரும் சென்று பார்வையிட்டு வருகின்றனர்.

யுத்தத்தின் பின்னரான மீள்குடியமர்வைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கான வீட்டுத் திட்டங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

கிளிநொச்சி மாவட்டம், கண்டாவளைப் பிரதேசத்தில் இதுவரை ஐயாயிரத்து 268 வீடுகள் அமைக்கப்பட்டுள்ள போதும், 2036 குடும்பங்களுக்கான வீட்டுத் தேவைகள் காணப்படுகின்றன.

இந்நிலையில் தற்போது வீடு கட்டுவதற்கு தேவையான மணலுக்குப் பதிலாக கிரவல் மண்ணைக் கலந்து வீடு அமைக்கும் வகையில் கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் மாதிரி வீடுகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

கிளிநொச்சி, கண்டாவளைப் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட புன்னைநீராவிக் கிராமத்தில் குறித்த கிரவல் மண்ணைப் பயன்படுத்தி அமைக்கப்பட்டு வருகின்ற வீட்டினை பல்வேறு தரப்பினரும் சென்று பார்வையிட்டு தமது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை குறித்த வீட்டினை பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் மற்றும் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் சென்று பார்வையிட்டுள்ளதுடன், குறித்த வீட்டுத் திட்டம் தொடர்பில் தமக்கு பூரண திருப்தி இல்லை என்றும் அவர் தனது கருத்தினை பதிவு செய்துள்ளார்.

இதேவேளை கபிரட் நிறுவனத்தினால் அமைக்கப்பட்டு வருகின்ற இந்த வீடு யாரையும் வற்புறுத்தி வழங்கப்படவில்லை.

குறித்த வீடு தொடர்பில் மக்களுக்கு தெளிவூட்டப்பட்டு அவர்களின் விருப்பத்தின் பெயரிலே வழங்கப்படுவதாக அந்த நிறுவனத்தின் பிரதிநிதி தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் புதையல் அகழ்வில் ஈடுபட்ட ஏழு பேர் கைது!!

வவுனியா – நெடுங்கேணி பகுதியில் தொல்பொருட்களை பெற்றுக்கொள்ளும் நோக்கில் புதையல் அகழ்வில் ஈடுபட்ட ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த நபர்கள் இன்று அதிகாலை விஷேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், சந்தேகநபர்கள் நெடுங்கேணி, பட்டனைக்குளம் வனப்பகுதியில் புதையல் அகழ்வில் ஈடுபட்டுக் கொண்டிருந்ததுடன், அவர்களிடம் இருந்து புதையல் அகழ்விற்காக பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் மற்றும் பூஜை பொருட்களும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்டவர்கள் வவுனியா மற்றும் மாத்தளை ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

மேலும், சந்தேகநபர்கள் வவுனியா நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதுடன், நெடுங்கேனி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இறந்து விட்டதாக சொன்ன தாய் மீண்டு வந்து புகார் கொடுத்த அவலம்!!

சொத்திற்காக உயிரோடு இருக்கும் தாயை இறந்ததாக பொய் சொல்லி இறப்பு சான்றிதழ் வாங்கிய மகனும் பேரனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திண்டுக்கல் அருகில் உள்ள பொன்னுமதுரை புதுப்பட்டியை சேர்ந்தவர் மருதயம்மாள். இவருக்கு வயது எண்பத்தி ஐந்து. இவருக்கு இரு மகள்களும் ஒரு மகனும் இருக்கின்றனர்.

மகனது பெயர் வெள்ளை சாமி. அனைவரையும் திருமணம் செய்து கொடுத்த மருதயம்மாளிற்கு 3 ஏக்கர் நிலம் சொந்தமாக இருந்தது. அதில் விவசாயம் செய்து வரும் வருமானத்தில் பேத்திகளோடு வாழ்ந்து வந்தார்.

இந்நிலையில் மகன் வெள்ளைச்சாமி மற்றும் பேரன் ஜெகநாதனும் சேர்ந்து மருதயம்மாளை அந்த நிலத்தை தங்களுக்கு எழுதி கொடுக்க சொல்லி வற்புறுத்தினர்.

அதற்கு மருதாயம்மாள் மறுத்திருக்கிறார். அதனால் ஆத்திரம் அடைந்த வெள்ளைசாமியும் ஜெகநாதனும் மருதாயம்மாள் இறந்து விட்டதாக போலியாக சான்றிதழ் கொடுத்து போலியாக வாரிசு சான்றிதழையும் பெற்று மகன் ஜெகநாதன் பெயரில் அந்த நிலத்தை மாற்றி விற்று விட்டனர்.

தனது நிலம் விற்கப்பட்டதை அறிந்த மருதயம்மாள் அதிர்ந்து போனார். ஆரம்பத்தில் போனது போகட்டும் விற்ற பணத்தில் என் மகள்கள் இருவருக்கும் ஆளுக்கு ருபாய் 20000 கொடுத்து விடு என்று மகனிடம் கெஞ்சியிருக்கிறார்.

அதனை மகன் ஏற்றுக் கொள்ளாததால் தீர்க்கமான முடிவுடன் கடந்த வாரத்தில் திண்டுக்கல் எஸ் பி இடம் மகனின் பேரில் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் வெள்ளைசாமியையும் ஜகநாதனையும் பொலிஸார் கைது செய்தனர்.

தனக்கு சொந்தமான நிலத்தை தனது அனுமதியின்றி எட்டு லட்சத்திற்கு விற்க நினைத்த மகனை பொலிஸிடம் பிடித்து கொடுத்த மருதாயம்மாள் தனது பேத்தி வீட்டில் இருந்தாலும் இன்னமும் கூலி வேலை செய்து அதில்தான் கஞ்சி குடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நித்தியானந்தா பீடத்தில் உள்ள என் மனைவியை மீட்டுத்தாருங்கள் : கதறும் கணவன்!!

தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் நித்யானந்தா பீடத்தில் இருக்கும் எனது மனைவியை மீட்டு கொடுக்கும் படி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.

நாமக்கல் மாவட்டம் வடுகம் முனிப்பம்பாளையத்தைச் சேர்ந்தவர் ராமசாமி. விவசாயியான இவர் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை கொடுத்துள்ளார்.

அதில், என் மனைவியும், மகனும் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு பெங்களூருவில் உள்ள நித்யானந்த பீடத்திற்கு சென்றதாகவும், அங்கு சென்ற என் மனைவி இன்று வரை வீடு திரும்பவில்லை எனவும், இதனால் உடனடியாக மீட்டு தர நடவடிக்கை எடுக்கும் படி குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், கடந்த 8 மாதங்களுக்கு முன்பு எனது மனைவியும், மகனும் நித்தியானந்தா பீடம் சென்றனர். சென்ற அவர்கள் பல மாதங்களாக வராத காரணத்தினால், பீடத்திற்கு சென்ற நான் என் மகனை மீட்டு வந்துவிட்டேன். ஆனால் மனைவியை மீட்க முடியவில்லை.

இதனால் தினந்தோறும் பல பிரச்சனைகளை சந்திக்கிறேன். அவள் வாங்கிய வங்கி கடனையும் அடைக்க முடியாமல் தவிக்கிறேன் என்று கூறியுள்ளார்.

பொலிஸ் நிலையத்துக்கு சென்று இரண்டு இளம்பெண்கள் செய்த செயல் : அதிர்ந்த பொலிசார்!!

இந்தியாவில் இரண்டு பெண்கள் தாங்கள் ஒருவரை ஒருவர் காதலிப்பதாக கூறி காவல் நிலையத்துக்கு சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தின் மதுராவை சேர்ந்த இரண்டு இளம் பெண்கள் அழகு நிலையம் ஒன்றில் சேர்ந்து வேலை செய்யும் நிலையில் அவர்களுக்குள் தவறான உறவு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து இருவரும் திருமணம் செய்து கொள்ள எண்ணி குடுமப்த்தாரிடம் அனுமதி கேட்டுள்ளனர். இதை கேட்ட குடும்பத்தார் அதிர்ந்த நிலையில் திருமணத்துக்கு மறுத்துள்ளனர்.

பின்னர் இரு பெண்களும் காவல் நிலையத்துக்கு சென்ற நிலையில் தங்களுக்கு திருமணம் செய்துவைக்க கோரியுள்ளனர்.

இந்தியாவில் ஓரின சேர்க்கை திருமணம் என்பது சட்டவிரோதம் என்பதால் இரு பெண்களுக்கும் அது குறித்து பொலிசார் கவுன்சிலிங் கொடுத்தனர்.

இதன்பின்னர் இருவரும் அவரவர் குடும்பத்தாருடன் அனுப்பி வைக்கப்பட்டார்கள்.