தாயாரின் கனவை 19 ஆண்டுகளுக்கு பின்னர் நிறைவேற்றிய இளைஞர்!!

கார்கில் போரில் வீரமரணமடைந்த தந்தை பணியாற்றிய அதே படைப்பிரிவில் 19 ஆண்டுகளுக்குப் பின்னர் பணியில் சேர்ந்து இளைஞர் ஒருவர் தனது தாயாரின் கனவை நிறைவேற்றியுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டேராடூனில் உள்ள ராணுவ பயிற்சி மையத்தில் தேர்ச்சி பெற்று, ராணுவ அதிகாரியாக வெளியே வந்துள்ளார் உத்தரப்பிரதேச மாநிலம் முசாஃபர்நகர் பகுதியைச் சேர்ந்த ஹிதேஷ் குமார் என்ற இளைஞர்.

இவரின் தந்தை பச்சன் சிங் ராஜ்புதனா ரைஃபிள்ஸ் படைப்பிரிவின் 2வது பட்டாலியனில் காஷ்மீரில் உள்ள டோலோலிங் பகுதியில் பணியாற்றி வந்த போது, கார்கில் யுத்தக்களத்தில் கடந்த 1999 ஜூன் 12ஆம் திகதி வீர மரணம் அடைந்தார்.

அப்போது பச்சன் சிங்கின் மகன் ஹிதேஷ் குமாருக்கு 6 வயதே ஆகியுள்ளது. தந்தை இறந்த நாளில் தானும் இந்திய ராணுவத்தில் ஒரு நாள் பணிக்கு சேர வேண்டும் என்று சபதமேற்றுக்கொண்டுள்ளார் ஹிதேஷ் குமார்.

19 ஆண்டுகளாக ராணுவத்தில் பணிக்கு சேர்ந்து நாட்டுக்காக உழைக்க வேண்டும் என்ற லட்சியத்துடன் இருந்த ஹிதேஷ் குமார், தற்போது டேராடூன் ராணுவ பயிற்சி மையத்தில் பயிற்சி முடித்து ராணுவ அதிகாரி ஆகியுள்ளார்.

மட்டுமின்றி தன்னுடைய தந்தை மரணம் அடைவதற்கு முன்னர் பணியாற்றிய அதே படைப்பிரிவில் ஹிதேஷ் பணியாற்ற உள்ளார்.

ராணுவ அதிகாரி பணியில் சேர்ந்த உடன் முசாஃபர்நகரில் உள்ள தந்தையின் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தினார் ஹிதேஷ்.

தன்னுடைய மற்றும் தாயாரின் 19 ஆண்டு கால கனவு தற்போது நனவாகியுள்ளதாகவும், நாட்டிற்காக பணியாற்றப்போவது பெருமையாக உள்ளதாகவும், நேர்மையுடன் பணியாற்றுவேன் என்றும் குறிப்பிட்டார்.

மலேசிய பெண்ணுக்காக என்னை ஏமாற்றிவிட்டாரே : கதறும் கலக்கப்போவது யாரு நவீனின் காதலி!!

பிரபல மிமிக்கிரி கலைஞர் தன்னை ஏமாற்றிவிட்டதாக அவரது காதலி திவ்யலட்சுமி என்பவர் பொலிசிலில் புகார் அளித்துள்ளார்.

திவ்யலட்சுமி கூறியதாவது, நான் 11 ஆம் வகுப்பு படிக்கும்போது எங்கள் இருவருக்குள்ளும் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் உயிருக்கு உயிராக காதலித்தோம்.

வழக்கம்போல எங்களின் காதலுக்கு வீட்டில் எதிர்ப்புகள் கிளம்பின. அதை எதிர்த்து நண்பர்கள் முன்னிலையில் அரக்கோணத்தில் கடந்த 2016-ம் ஆண்டு பதிவுத் திருமணம் செய்துகொண்டோம்.

அலைபாயுதே படம் போல இருவரும் அவரவர் வீட்டில் வசித்துவந்தோம். நவீனுக்காக நான் பல உதவிகளைச் செய்தேன்.

எங்களின் திருமணம் வீட்டில் தெரிந்துவிட்டது. நவீனின் தங்கைக்குத் திருமணம் முடிந்ததும் என்னை அவரின் வீட்டுக்கு அழைத்துச் செல்வதாகக் கூறியிருந்தார்.

அவருக்காக நான் விஸ்காம் படித்தேன். பிரபல தனியார் தொலைக்காட்சியில் வாய்ப்பு வாங்கிக் கொடுக்க உதவி செய்தேன்.

அதில் மிமிக்ரி கலைஞராக நடித்த நவீனுக்குப் பெயரும் புகழும் கிடைத்தது. பல நிகழ்ச்சிக்காக வெளிநாடுகளுக்குச் சென்றார்.

அப்போதுதான் மலேசியாவைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் அவருக்குப் பழக்கம் ஏற்பட்டது. அந்த பெண், நவீனைத் திருமணம் செய்துகொள்ள விரும்பினார். அவரிடம் நவீன் எனது கணவர் என்று கூறியபோதும் அவர் அதைக் கேட்கவில்லை.

தற்போது நவீன் மீது பொலிசில் புகார் அளித்துள்ளேன், எனக்கு நீதி கிடைக்கும் வரை என்னுடைய போராட்டம் தொடரும் என கூறியுள்ளார்.

இந்நிலையில் நவீன், திவ்யலட்சுமியை எனக்குத் தெரியும். ஆனால், அவரை நான் திருமணம் செய்துகொள்ளவில்லை. என்னை அவர் ஏமாற்றிவிட்டார். எனக்கும் அவருக்கும் திருமணம் நடந்ததாக அவர் பொய் சொல்கிறார். சட்டப்படி அந்தப் பிரச்னையைச் சந்தித்துவருவதாக கூறியுள்ளார்

கணவனின் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொன்ற மனைவி!!

காஞ்சிபுரம் பக்கத்தில் உள்ள ஓரிக்கை எனும் பகுதியில் கணவன் தலையில் மனைவி அம்மிக்கல்லை போட்டு கொன்ற சம்பவம் நடந்துள்ளது.

இப்பகுதியை சேர்ந்த திருமுருகன் கூலி தொழிலாளி, குடிப்பழக்கமும் உண்டு. இவரது மனைவி சுந்தரி மற்றும் இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

வேலைக்கு சரியாக செல்லாத திருமுருகன் தினமும் குடித்து விட்டு சுந்தரியை அடிப்பது வழக்கம். நேற்று அதிகாலை அதே போல குடித்து விட்டு சுந்தரியிடம் வாக்குவாதம் செய்திருக்கிறார்.

இதனால் கோபமடைந்த சுந்தரி அருகில் இருந்த அம்மிக்கல்லை எடுத்து திருமுருகன் தலையில் போட்டிருக்கிறார்.

அதனால் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் திருமுருகன் உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் காஞ்சிபுரம் காவல்துறையினர் திருமுருகனின் சடலத்தை கைப்பற்றினர்.

கைது செய்யப்பட்ட சுந்தரி தற்போது காவல்துறை விசாரணையில் உள்ளார்.

யாழில் பிரபல கல்லூரி மாணவி தற்கொலை!!

யாழில் பிரபல கல்லூரி மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று பிற்பகல் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. யாழ். சுன்னாகம் பகுதியை சேர்ந்த மாணவி ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்கொலைக்கான காரணம் எதுவும் வெளியாகவில்லை. குறித்த மாணவி யாழில் பிரபல கல்லூரி ஒன்றில் உயர்தரத்தில் கற்றுவருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இவரை தெரியுமா? கண்டுபிடித்து தருமாறு கோரும் பொலிஸார்!!

குற்றச் செயல் ஒன்றுடன் தொடர்புடை சந்தேக நபரை கைதுசெய்ய பொலிஸார் பொதுமக்களின் உதவியை கோரியுள்ளனர். கண்டி வத்தேகம பிரதேசத்தை வசிப்பிடமாக கொண்ட சந்தேக நபரை கைதுசெய்யவே பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

கே.பி. சாகர ஸ்வர்ணமால் என்ற 24 வயதான இந்த நபர் வசித்து வந்த இடத்தில் இருந்து தப்பிச் சென்று தலைமறைவாகியுள்ளார். சந்தேக நபரின் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளனர்.

நபர் குறித்த தகவல் அறிந்தால், 081-247 62022 மற்றும் 071 8591063 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புக்கொண்டு அறிவிக்குமாறு பொலிஸார் கேட்டுள்ளனர்.

பிரதேசத்தில் நடைபெற்ற குற்றச் செயல் சம்பந்தமாக சீ.சீ.டி. ஒளிப்பதிவு காட்சிகள் மூலம் நடத்தப்பட்ட விசாரணைகளில் சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இலக்கம் 328/14 கும்புல்கெதர, யட்டிராவண வத்தேகம என்று சந்தேக நபரின் விலாசம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையில் தீவிரமடையும் எலிக் காயச்சல்!!

இலங்கையில் எலி காய்ச்சல் பாதிப்பு தீவிரமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த ஆண்டின் இதுவரையில் 1,574 பேர் எலி காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கம்பஹா, களுத்துறை, காலி , மாத்தறை, இரத்தினபுரி, மொனராகலை ஆகிய மாவட்டங்களில் இந்த நோய் தாக்கம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மற்றும் கேகாலையில் முறையே 92, 97 பேர் எலி காய்ச்சலால் பாதிப்படைந்துள்ளனர். ஜூன் மாதத்தில் மட்டும் 49 பேர் சிகிச்சைக்காக வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நோய் தொற்றுக்குள்ளாகிய விலங்குகளின் சிறுநீர் மூலம் எலி காய்ச்சல் பரவுகிறது. பருவமழை தொடங்கியுள்ளதால், எலி காய்ச்சல் பாதிப்பு தீவிரமடைந்துள்ளது.

இந்நிலையில், குறித்த நோய் தொடர்பில் பொதுமக்கள் சுகாதாரத்துடன், பாதுகாப்பாக இருக்குமாறு இலங்கை சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது

கனடாவில் ஏற்பட்ட விபரீதம் : கடலில் காணாமல் போன இலங்கைத் தமிழ் இளைஞன்!!

கனடாவில் இலங்கையை சேர்ந்த தமிழ் இளைஞனின் கடலில் மூழ்கி காணாமல் போயுள்ளார் என கனேடிய அரச ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.

ஒன்டாரியோ மாகாணத்தில் Bluffers Park அருகே கப்பலில் இருந்து கடலில் விழுந்த தமிழ் இளைஞர் ஒருவர் காணாமல் போயுள்ளார். இந்த சம்பவம் கனேடிய நேரப்படி நேற்றிரவு 9.42 மணியளவில் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

27 வயதான பார்த்தீபன் சுப்ரமணியம் என்ற இளைஞனே காணாமல் போயுள்ளதாக அவரது உறவினரான காண்டீபன் சுப்பையா அடையாளம் காட்டியுள்ளார்.

கனடா கடலோர காவல்படை இளைஞனை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக ரொரொண்டோ தீயணைப்பு சேவை தெரிவித்துள்ளது.

கடலோர பொலிஸார் ஹெலிகொப்டர்களை பயன்படுத்தி தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சுப்ரமணியம் தனது 10 வயதில் இலங்கையில் இருந்து கனடாவுக்கு சென்றுள்ளார் என சுப்பையா தெரிவித்துள்ளார். சுப்ரமணியத்துடன், அவரது சகோதரன் தீபன் அவருடன் வாழ்ந்து வந்துள்ளார்.

சுப்ரமணியம் சிறப்பாக நீந்த கூடியவர் அல்ல எனினும் நண்பர்களுடன் வெளியே செல்வதனை வழக்கமாக கொண்டுள்ளார் என சுப்பையா தெரிவித்துள்ளார். பாதுகாப்பு கவசம் எதுவும் அவர் அணிந்திருந்தாரா என தெரியவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சுப்ரமணியம் எனது மகன் போன்றவர் என அவர் கூறியுள்ளார். அவர் மிகவும் திறமையான ஒருவராகும். DJ இசை மூலம் தமிழ் சமூகத்தில் அவர் மிகவும் பிரபல்யமடைந்த ஒருவராகும். அவர் ஒரு சிறந்த DJ இசை கலைஞராகும்.

இன்று அதிகாலை 1.30 மணியளவில் சுப்ரமணியத்தின் நண்பர்கள் வீட்டுக்கு வந்து, சுப்ரமணிம் காணாமல் போயுள்ளதாகவும் அவர் கப்பலில் இருந்து விழுந்து விட்டதாகவும் தெரிவித்தனர். இதனை இலங்கையில் உள்ள சகோதரனுக்கு அறிவித்ததாக சுப்பையா தெரிவித்துள்ளார்.

அவர் என்னை மிகவும் நேசித்தார். என்னிடம் எந்த நேரமும் பேசி கொண்டே இருப்பார் என சுப்பையா குறிப்பிட்டுள்ளார்.

எப்படியிருப்பினும் சுப்ரமணியம் இதுவரையில் கண்டுபிடிக்கப்படவில்லை என கனேடிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உடற்பயிற்சிக் கூடத்துக்குள் புகுந்த பெண் செய்த மோசமான செயல் : வைரலாகும் வீடியோ!!

கனடாவில் உடற்பயிற்சி கூடத்துக்குள் புகுந்த பெண் அங்குள்ள உபகரணங்களை அடித்து உடைத்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

டொரண்டோவில் அமைந்துள்ள குட் லைப் பிட்னஸ் என்ற உடற்பயிற்சி கூடத்துக்குள் 38 வயதான பெண் வந்துள்ளார். அங்கு அவர் உறுப்பினராக இல்லாத நிலையில் ஊழியர்கள் பெண்ணை வெளியில் போகும்படி கூறியுள்ளனர்.

இதையடுத்து கோபமடைந்த பெண் அங்கிருந்த ஒரு உடற்பயிற்சி உபகரணத்தை எடுத்து கண்ணாடிகள், மற்ற உபகரணங்களை அடித்து உடைத்தார்.

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் அவரை தடுத்து நிறுத்தி பொலிசுக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் குறித்த பெண்ணை கைது செய்த நிலையில் அவருக்கு அபராதமும் விதித்துள்ளனர்.

அந்த பெண் ஏன் இப்படி கோபமடைந்து மோசமாக நடந்து கொண்டார் என்ற விபரம் இன்னும் தெரியவில்லை.

ஆபாசப் படத்தால் வந்த விளைவு : சிறுமியை கடித்துக் குதறிய மிருகங்கள்!!

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் 13 வயது சிறுவன் ஒருவன் ஆபாசப் படம் பார்த்தன் விளைவாக 3 வயது சிறுமியை கொலை செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிஸ்ராக் பகுதியில் உள்ள கோவிலுக்கு அருகில் மறைவான இடத்தில் 3 வயது சிறுமியின் சடலம் மீட்கப்பட்டது. சிறுமியின் கழுத்துப் பகுதியில் காயங்கள் இருந்துள்ளன. மேலும், சிறுமியுடைய காலின் ஒருபகுதியை அங்குள்ள மிருகங்கள் கடித்துத் தின்றுள்ளன.

இந்தக் கொலையில் முன்விரோதம் காரணமா? பாலியல் வன்புணர்வா? என பல்வேறு கோணங்களில் காவல்துறை விசாரணை நடத்திவந்தது.

உயிரிழந்த சிறுமியின் தந்தை அளித்த புகாரின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டார். சம்பவம் நடந்த தினத்தன்று சிறுமியை 13 வயது சிறுவன் அழைத்துச்செல்வது சிசிடிவி காட்சிகளில் பதிவாகி உள்ளன.

இந்நிலையில், சிறுவனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவன்தான் குற்றவாளி என்பது நிரூபணமாகி உள்ளது. குற்றவாளியான சிறுவன் தனது மாமாவின் செல்போனில் ஆபாச படத்தைப் பார்த்துள்ளான். இதனால் சலனம் ஏற்பட சிறுமியை தனியாக அழைத்துச்சென்ற வன்புணர்வு செய்ய முயற்சித்துள்ளான்.

ஆனால், சிறுமி அதற்கு அனுமதிக்காத நிலையில், அவளது கழுத்தை நெறித்துக் கொன்றுவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளான். தற்போது சிறுவன் சிறார் பள்ளியில் அடைக்கப்பட்டுள்ளான்.

மின்னல் தாக்கி இளம் வீரர் பலி : மைதானத்திலேயே இறந்த துயரம்!!

இந்தியாவில் மின்னல் தாக்கியதில் இளம் கிரிக்கெட் வீரர் மைதானத்திலேயே பலியான சம்பவம் நடந்துள்ளது.

மேற்குவங்க மாநிலத்தின் ஹீக்ளி மாவட்டத்தில் உள்ள செரம்போரை சேர்ந்தவர் தேபாப்ரதா பால்(வயது 21).

சகலதுறை வீரரான இவர், கிரிக்கெட்டில் பயிற்சி பெறுவதற்காக தெற்கு கொல்கத்தாவில் உள்ள அகடமியில் பயிற்சி பெற்று வந்தார்.

நேற்று மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, மின்னல் தாக்கியதில் சுருண்டு விழுந்தார்.

உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது, ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இதை மட்டும் செய்யுங்கள் : தூக்கில் தொங்கிய இளம் பெண்ணின் உருக்கமான கடிதம்!!

இந்தியாவில் இளம் பெண்ணொருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் உருக்கமான கடிதத்தை பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.

ஹைதராபாத்தை சேர்ந்தவர் சுஷ்மா (27). இவர் கடந்த ஐந்து ஆண்டுகளாக மும்பையில் தங்கி பங்கு சந்தை வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்தார்.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் சுஷ்மா சொந்த ஊருக்கு வந்த நிலையில் ஒரு ஹொட்டலில் அறை எடுத்து தங்கியுள்ளார்.

இரண்டு நாட்களாக அறையை விட்டு சுஷ்மா வெளியில் வராத நிலையில் சந்தேகமடைந்த ஹொட்டல் ஊழியர்கள் பொலிசுக்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் சுஷ்மாவின் அறை கதவை உடைத்து பார்த்த போது அவர் தூக்கில் சடலமாக தொங்கியுள்ளார்.

சுஷ்மாவின் அருகில் கடிதம் ஒன்று இருந்த நிலையில் பொலிசார் கைப்பற்றியுள்ளனர். அதில், என்னை நம்பிய வாடிக்கையாளர்களின் முகத்தை என்னால் பார்க்க முடியவில்லை.

நான் மன அழுத்ததுக்கு ஆளான நிலையில் அதற்கான மருந்துகள் சாப்பிட்டு வந்தேன், அது எனக்கு தற்காலிக தீர்வை தான் கொடுத்தது.

என் உடல் உறுப்புகளை தானம் செய்யுமாறு என் பெற்றோரை கேட்டு கொள்கிறேன் என எழுதியுள்ளார். சம்பவம் குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வவுனியாவில் தேர்தல் வாக்குறுதியை காப்பாற்றிய 11 வயது தமிழ் மாணவன்!!

பாடசாலைகளில் மாணவர் நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்படுகின்றது. கடந்த இரண்டு ஆண்டுகளில் பல பாடசாலைகளில் மாணவர் நாடாளுமன்றம் அமைக்கப்பட்டிருக்கின்றது.

வவுனியா மாவட்டத்தின் கனகராயன் குளம் மகாவித்தியாலத்துக்கான மாணவர் நாடாளுமன்றத் தேர்தல் அண்மையில் நடைபெற்றிருந்தது.

தரம் 6 இல் கல்வி பயிலும் மாணவன் மாதுளனும், மாணவர் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தான்.

தரம் 6 இன் மூன்று பிரிவு வகுப்பறைகளுக்கும் தும்புத் தடியும், குப்பைக் கூடையும் வழங்குவேன் என்று தேர்தல் வாக்குறுதி வழங்கியிருந்தான்.

தேர்தலில் வெற்றி பெற்றதும், முதல்வேலையாக தான் வழங்கிய வாக்குறுதியை மாணவன் நிறைவேற்றியுள்ளான்.

தமிழர்களுக்கு அரசியல் ரீதியாக சிறந்த தலைமைத்துவம் இல்லை, தமிழ் அரசியல்வாதிகள் தாங்கள் வழங்கும் வாக்குறுதிகளிலிருந்து வழுவுவதையே வாழ்க்கையாகக் கொண்டிருக்கின்றார்கள் என்று பலமான குற்றச்சாட்டுக்கள் சரளமாக எழுப்பப்பட்டு வருகின்றன.

காலம்காலமாக தமிழ் அரசியல் தலைமைகளினதும், தமிழ் அரசியல்வாதிகளினதும் போக்குகள் இவ்வாறு இருப்பதனால்தான் இன்னமும் விடிவு கிடைக்காத இனமாக தமிழினம் அழுது கொண்டிருக்கின்றது.

இவ்வாறானதொரு சூழலில், தேர்தல் வாக்குறுதி என்பது வெறுமனே வாக்குகளைக் கவர்வதற்கான உத்திதான் என்று இருக்கின்ற நிலைமையில், அதையும் தாண்டி 11 வயது மாணவன் அதை நிறைவேற்றிக் காண்பித்து, நல்லதொரு முன்னுதாரணத்தை வழங்கியிருக்கின்றான்.

தமிழ் அரசியல்வாதிகள் அந்த மாணவனிடம் பாடம் கற்க வேண்டும். தமிழ் அரசியல்வாதிகளையும் தாண்டி, ஆட்சிக்கு வருவதற்காக, தமிழ் மக்களின் வாக்குளை அள்ளுவதற்காக, வாக்குறுதிகளை அள்ளி வீசிய நல்லாட்சி அரசுக்கும், 11 வயது மாணவனின் செயற்பாடு நல்லதொரு பாடம்தான்.

இளையோர், பாடசாலை மாணவர்கள் போதைக்கு அடிமையாகிச் சீரழிந்து கொண்டிருக்கின்றனர் என்று குற்றச்சாட்டுக்கள் தொடர்ச்சியாகச் சுமத்தப்பட்டு வருகின்றது.

அந்தச் சமுதாயத்தின் எதிர்காலம் எப்படி அமையப் போகின்றது என்று எண்ணி தலையைப் பிய்க்கும் இந்தச் சூழலில், வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றும் மனப்பாங்கு கொண்ட மாணவர் நாடாளுமன்ற பிரதிநிதிகளும் வளர்ந்து வருகின்றார்கள் என்பது ஆறுதலான செய்தியே.

இளம் சமூகத்தின் பிறழ்வான நடத்தைகளை மாத்திரம் வெறுமனே விமர்சித்துக் கொண்டிருக்காமல், அவர்களின் ஆக்கபூர்வமான, மூத்தோருக்கே வழிகாட்டுகின்ற செயல்களையும் பாராட்ட வேண்டியது அவசியமாகும்.

பாராட்டுக்கள் நிச்சயம் மாணவர் சமூகத்தின் மனதில் மாற்றங்களையும் உருவாக்கும்.வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றும் நல்லதொரு பிரதிநிதிகள் எதிர்காலத்தில் தமிழர் அரசியலுக்கு வர வேண்டும்.

தம்மால் எது முடியுமோ அதை வாக்குறுதிகளாக வழங்கும் தலைவர்கள் வரவேண்டும்.

11வயது மாணவனின் செயற்பாடு, எதிர்காலத்தில் தமிழர் அரசியல் அவ்வாறான பிரதிநிதிகளை, தலைவர்களை பெற்றுக் கொள்ளும் என்ற நம்பிக்கையை விதைக்கின்றது.

-தமிழ்வின்-

யாழில் தேரை இழுத்த JCB இயந்­தி­ரம் : அநீதியை தாங்க முடியாமல் மூதாட்டி மரணம்!!

யாழ். வரணி வடக்கு சிமில் கண்ணகை ஆலய வருடாந்த தேர் உற்சவ திருவிழாவில் அப்பகுதி மக்களுக்கு சாதியின் பெயரால் இழைக்கப்பட்ட அநீதியை தாங்க முடியாமல் மூதாட்டி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. யாழ். வரணியை பிறப்பிடமாக கொண்ட 80 வயதுடைய மூதாட்டிக்கே இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

வரணி வடக்கு சிமில் கண்ணகை ஆலயத்தின் தீவிர பக்தையான குறித்த மூதாட்டி, இவருடைய உறவினர்களால் பரம்பரை பரம்பரையாக மேற்கொண்டு வரும் திருவிழாவில் கலந்து கொண்டிருந்தார்.

இதன்போது ஆலயத்தின் தேர் JCB இயந்­தி­ரம் மூலம் இழுக்­கப்­பட்­டதை வன்­மை­யா­கக் கண்டித்துள்ளார்.

இதனால் குறித்த மூதாட்டி கடந்த மூன்று தினங்­க­ளாக மன உளைச்­ச­லுக்கு உள்­ளான நிலை­யில் காணப்­பட்­ட நிலையில், உற­வி­னர்களுடன் உரை­யா­டிக் கொண்­டி­ருந்த போது திடீரென மயங்கி வீழ்ந்­துள்­ளார்.

மூதாட்டியை வரணி வைத்தியசாலைக்கு எடுத்­துச் செல்­லப்­பட்­ட பின்­னர் சாவ­கச்­சேரி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வ­ழி­யில் உயி­ரி­ழந்­துள்­ளார்.

யாழ். வரணி வடக்கு சிமில் கண்ணகை ஆலய வருடாந்த தேர் உற்சவத்தின் போது முதலாவது சமூக வர்க்கத்தினர் என தம்மை தாமே அடையாளப்படுத்திய சிலர் குறித்த தேரின் வடத்தை பிடித்து இழுக்கும் உரிமை ஏனைய பக்தர்களுக்கு இல்லை என தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் குறித்த தேரை இழுக்கும் சக்தி அந்த நபர்களிடம் காணப்படவில்லை. இதனால் அவர்கள் jcb இயந்திரம் மூலம் தேர்வடம் பிடித்து இழுத்திருந்தமை உலக வாழ் மக்கள் அனைவருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது.

தாமரை கோபுரத்திலிருந்து விழுந்து உயிரிழந்த இளைஞனின் சோகமான குடும்பப் பின்னணி!!

தாமரை கோபுரத்தில் இருந்து வீழ்ந்து இறந்த கிளிநொச்சி மாணவன் கோணேஸ்வரன் நிதர்சனின் உடலை கிளிநொச்சிக்கு இலவசமாக கொண்டு வருவதாக தெரிவித்து பின்னர் முப்பதாயிரம் ரூபாாவை பெற்றுக்கொண்டுள்ளனர் என உறவினர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கடந்த எட்டாம் திகதி கொழும்பு தாமரை கோபுரத்திலிருந்து வீழ்ந்து மரணமான மாணவனின் உடலை கிளிநொச்சி அக்கராயன் பிரதேசத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு வருவதற்கு இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் வாகனத்தை இலவசமாக ஏற்பாடு செய்து தருவதாக பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளார்.

பின்னர் சற்று தாமத்தித்து மாணவனின் குடும்பத்தினரிடம் தொடர்பு கொண்டு பிரதேச சபை உறுப்பினர் வாகனத்திற்கான எரிபொருளை மாத்திரம் வழங்குமாறு கோரியிருந்தார் இதற்கு குடும்பத்தினர் சம்மதித்திருந்தனர்.

இதன் பின்னர் வாகனம் கொழும்பு சென்று மாணவனின் உடலை ஏற்றிக்கொண்டு கிளிநொச்சி அக்கராயன்குளத்தில் உள்ள அவரது வீட்டுக்கு வந்து சேர்ந்த பின்னர் வாகன கூலியாக முப்பதாயிரத்தை வழங்குமாறு கூறி பணத்தையும் பெற்றுச் சென்றுள்ளனர்.

வழமையாக கொழும்பிலிருந்து கிளிநொச்சிக்கு இவ்வாறான ஒரு தேவைக்கு வாகனத்தை பிடிப்பதாக இருந்தால் இருபதாயிரம் ரூபாவுக்கு பிடித்திருக்க முடியும் என்றும். இதனை விட தங்களின் நிலைமையினை கருத்தில் கொண்டு பலர் மாணவனின் உடலை கொண்டுவருவதற்கு உதவ தயாராக இருந்த நிலையில் இவர்கள் இப்படி நடந்து கொண்டது கவலையளிக்கிறது எனத் தெரிவித்த உறவினர்கள்.

ஆரம்பத்திலேயே தங்களிடம் உண்மையை கூறியிருந்தால் தாங்கள் அதற்கேற்ற ஒழுங்கை மேற்கொண்டிருப்போம் எனவும் தெரிவித்தனர்.

இது தொடர்பில் இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் கிளிநொச்சி கிளையின் செயலாளர் சேதுபதியை தொடர்பு கொண்டு வினவிய போது மாணவனின் உடலை கிளிநொச்சிக்கு கொண்டு வருவற்கு வாகனத்தை பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் கோரியிருந்தார்.

அவரிடம் நான் தெளிவாகவே வாகன கூலி முப்பதாயிரம் எனத் தெரிவித்திருந்தேன். அதனையே நாங்கள் பெற்றுக்கொண்டோம். எங்களுக்கும் மாணவனின் குடும்பத்தினருக்கும் இடையில் எவ்வித தொடர்பாடலும் கிடையாது என்று தெரிவித்தார்.

மரணமான மாணவன் கிளிநொச்சி மத்திய கல்லூரியில் இவ்வருடம் உயிரியல் தொழில்நுட்ப பிரிவில் பரீட்சைக்கு தோற்ற இருக்கும் மாணவன். இவரது குடும்பம் பொருளாதார ரீதியாக பின்தங்கிய நிலையில் காணப்படுகின்றனர்.

இரண்டு சகோதரிகளும் ஒரு சகோதரனும் குடும்பத்தில் காணப்படுகின்றனர். தந்தை சிறு தொழில் முயற்சி ஒன்றில் ஈடுபடுகின்றார்.

தாய் சமீபத்தில் ஆசிரிய தொழிலுக்குள் உள்வாங்கப்பட்டுள்ளார். மாணவன் தனது பொருளாதார தேவைகளை நிறைவு செய்து கொள்வதற்காகவே தொழிலுக்குள் சென்ற நிலையில் இவ் விபரீதம் ஏற்பட்டுள்ளது.

யாழில் சேலைக்காக உயிரை மாய்த்த மாணவி : அதிர்ச்சியில் உறைந்து போன உறவினர்கள்!!

யாழ்ப்பாணத்தில் மாணவி ஒருவர் தற்கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஆலயத் தேர்த் திருவிழாவுக்குச் சேலை வாங்கித் தராததால் விரக்தியடைந்த 18 வயதான மாணவி இவ்வாறு உயிரிழந்துள்ளார். இந்த அனர்த்தம் கொடிகாமம் எருவனில் நேற்று இடம்பெற்றுள்ளது.

வரணி சிட்டிவேரம் கண்ணகை அம்பாள் ஆலயத்தின் தேர்த் திருவிழா நேற்று முன்தினம் நடைபெற்றது. சக தோழிகள் சேலையுடன் வருவதால் தனக்கு சேலை வாங்கித் தருமாறு தாயாரிடம் கேட்டுள்ளார்.

எனினும் அதற்கு தாயார் மறுத்துள்ளமையினால் மாணவி திருவிழாவுக்குச் செல்லவில்லை.

நேற்று வீட்டிலுள்ளவர்கள் கோவிலுக்கு சென்றிருந்த நிலையில், விரக்தியடைந்த மாணவி தற்கொலை செய்துள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

ஆலயத்திலிருந்து வீடு திரும்பிய குடும்பத்தினர் மாணவி தவறான முடிவெடுத்துள்ளமை கண்டு அதிர்ச்சியடைந்து கொடிகாமம் பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.

பொலிஸார் அங்கு வந்து சடலத்தை மீட்டு சாவகச்சேரி மருத்துவமனை சவச்சாலையில் ஒப்படைத்துள்ளனர்.

கொழும்பு பிரதான வீதியில் சற்று முன்னர் கோர விபத்து : சம்பவ இடத்திலேயே மூவர் பலி!!

கலேவெல – கொழும்பு பிரதான வீதியில் சற்று முன்னர் இடம் பெற்ற வாகன விபத்தில் சம்பவ இடத்திலேயே மூவர் பலியாகியுள்ளனர்.

பார ஊர்தி ஒன்றும், முச்சக்கர வண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதிக்கொண்டமையினால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. முச்சக்கர வண்டியில் பயணித்த மூவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களின் சடலம் கலேவெல வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. விபத்து தொடர்பான மேலதிக விசாரனைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர் குறிப்பிடத்தக்கது.