நடிகர் பிரபுதேவாவின் மகன் எப்படி இறந்தார் தெரியுமா? சோக பின்னணி!!

நடிகர் பிரபுதேவா மகனின் மரணம் அவரை எந்தளவு பாதித்தது என்பதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.

நடிகர், இயக்குனர், நடன இயக்குனர் என் பன்முகதன்மை கொண்ட பிரபுதேவா சினிமாவில் எவ்வளவு பிசியாக இருந்தாலும் தனது குழந்தைகளுடன் தவறாமல் நேரத்தை செலவிடுவார்.

லதா என்பவரை திருமணம் செய்த பிரபுதேவாவுக்கு மூன்று மகன்கள் இருந்தனர். அதில் மூத்தவரான விஷாலுக்கு கடந்த 2008 ஆம் ஆண்டு புற்றுநோய் ஏற்பட்டது.

ஆறு மாதங்களாக புற்றுநோய்க்கு மருத்துவமனையில் விஷால் தீவிர சிகிச்சை எடுத்து வந்துள்ளார். இந்நிலையில் அதே ஆண்டு டிசம்பர் 5-ஆம் திகதி விஷால் உயிரிழந்துள்ளார்.

மகனின் மரணம் பிரபுதேவாவை பெரிதும் பாதித்தது, பின்னர் தொழிலில் கவனம் செலுத்திய அவர் மெல்ல மெல்ல அந்த பாதிப்பிலிருந்து மீண்டார்.

இது தான் எங்கள் குழந்தை : கணவனின் இரண்டாவது திருமணத்தை தடுத்து நிறுத்திய பெண்!!

தமிழகத்தில் இரண்டாவது திருமணம் செய்ய முயற்சித்த கணவனின் திருமணத்தை முதல் மனைவி துணிச்சலாக தடுத்து நிறுத்தியுள்ளார்.

திருச்சியில் உள்ள வயலூர் முருகன் கோவிலில் கோரி மேடு பகுதியைச் சேர்ந்த மணி என்பவரின் மகன் சுரேஸ்குமாருக்கும், சுகந்தி என்பவருக்கும் திருமணம் நடைபெறவிருந்தது.

அப்போது திடீரென்று திருமணத்திற்கு வந்திருந்த பெண், மணமேடையில் இருந்த மாப்பிள்ளை பார்த்து என் வாழ்க்கையை வீணாக்கியது போல, இன்னொரு பெண்ணின் வாழ்க்கையையும் வீணாக்க விடமாட்டேன் என்று தாலி கட்டும் நேரத்தில் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. அப்போது அந்த பெண், திருமண கோலத்தில் இருந்த பெண்ணிடம் இவர் தான் என் கணவர், எங்களுக்கு திருமணமாகி 6 வருடங்கள் ஆகிவிட்டது.

எங்களுக்கு குழந்தையும் இருக்கிறது. இது தான் அந்த குழந்தை என்று கையில் இருந்த குழந்தையை காண்பித்துள்ளார்.

இந்த சம்பவம் உடனடியாக பொலிசாருக்கு தெரியவந்ததால், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிசார் சுரேஷ் குமாரை கைது செய்து விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

அதன் பின் இது குறித்து அந்த பெண் கூறுகையில், என்னுடைய பெயர் லாவண்யா எனவும், தனக்கும் சுரேசுக்கும் கடந்த கடந்த 2012-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 12-ஆம் திருமணம் நடைபெற்று முடிந்தது.

திருமணத்திற்கு பிற்கு அவர் அதிகமாக மது அருந்தி அடித்து சித்ரவதை செய்ததால், நான் என் பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டேன்.

அதுமட்டுமின்றி பெண் குழந்தை பிறந்ததால், மாமியாரும், இவரும் என்னை மொத்தமாக ஒதுக்கிவிட்டார்கள். பெற்றோர் வீட்டிற்கு சென்ற என்னை இவர்கள் அழைக்கவே வரவில்லை.

இந்நிலையில் நேற்றிரவு எனக்கு ஒரு போன் வந்தது. அப்போது உன் கணவன் இரண்டாவது திருமணம் செய்யப் போகிறார் என்று கூறினர்.

முதலில் நான் நம்பவில்லை, அதன் பின் இங்கு வந்து பார்த்த போது தான் உண்மை புரிந்தது. என்னுடைய வாழ்க்கை சீரழிந்தது போல, அந்த பெண்ணின் வாழ்க்கையும் சீரழிந்துவிடக்கூடாது என்பதற்காக திருமணத்தை தடுத்து நிறுத்தினேன் என்று கூறியுள்ளார்.

இறப்பதற்கு முன்னதாகவே சவப்பெட்டியுடன் சென்ற நபர் : அதிர்ச்சியில் உறைந்த கிராமம்!!

மீரிகம தலாகொலயாய பிரதேசத்தில் ஹோட்டல் உரிமையாளர் ஒருவர், இறப்பதற்கு முன்னதாகவே சவப்பெட்டியை கொள்வனவு செய்து வீட்டுக்கு எடுத்துச் சென்றுள்ளார்.

வீட்டில் எவரும் மரணிக்காத நிலையில் குறித்த ஹோட்டல் உரிமையாளர் அண்மையில் சவப்பெட்டி மற்றும் மரண வீடுகளில் பயன்படுத்தப்படும் ஏனைய அலங்காரப் பொருட்கள் அனைத்தையும் மலர்சாலையொன்றிலிருந்து கொள்வனவு செய்து வீட்டுக்கு எடுத்துச் சென்றுள்ளார்.

வீட்டில் மரணம் நிகழாத நிலையல் சவப்பெட்டி வீட்டுக்கு எடுத்துச் சென்றமை குறித்து சந்தேகம் ஏற்பட்ட அயலவர்கள் இது குறித்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இந்த முறைப்பாடு தொடர்பில் விசாரணை நடத்திய பொலிஸார் வீட்டுடன் கூடிய ஹோட்டலை சோதனையிட்ட போது சவப்பெட்டி உள்ளிட்ட பொருட்களை கண்டு ஆச்சரியமடைந்துள்ளனர்.

மரணம் நிகழாத நிலையில் ஏன் இவ்வாறு சவப்பெட்டி கொள்வனவு செய்யப்பட்டது என பொலிஸார் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதன் போது, குடும்பத்தினர் தம்மை ஒழுங்காக கவனிப்பதில்லை எனவும் அவர்களை அச்சுறுத்தும் நோக்கில் சவப்பெட்டி கொள்வனவு செய்தாகவும் ஹோட்டல் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

சவப்பெட்டியொன்றை வீட்டில் வைத்திருப்பது சட்ட விரோதமான செயல் கிடையாது என்ற போதிலும், சவப்பெட்டியை மீளவும் மலர்ச்சாலையில் ஒப்படைக்குமாறு பொலிஸார் அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர்.

வீட்டில் மரணம் நிகழ்ந்துள்ளதாகவும் சடலம் கொண்டு வரப்பட்டதன் பின்னர் பெட்டியில் வைத்துக் கொள்வதாகக் கூறி ஹோட்டல் உரிமையாளர் இவ்வாறு சவப்பெட்டி உள்ளிட்ட பொருட்களை கொள்வனவு செய்ததாக மலர்ச்சாலை உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தை ரத்து செய்த விஜய் : காரணம் இதுதான்!!

பிரபல நடிகர் விஜய் இந்த ஆண்டு தனது பிறந்தநாளை கொண்டாடப் போவதில்லை என முடிவு செய்துள்ளார். வரும் ஜூன் 22-ந் தேதி நடிகர் விஜய்யின் 44 நாளாவது பிறந்த நாள் வரவுள்ளது. இதனால் விஜய்யின் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

மேலும் அன்றைய தினம், விஜய்யின் அப்பாவான எஸ்.ஏ.சந்திரசேகர் நடிப்பில் டிராபிக் ராமசாமி என்ற திரைப்படம் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் விஜய் இந்த ஆண்டு பிறந்தநாள் கொண்டாட்டம் தேவையில்லை என முடிவு செய்துள்ளாராம்.

அதற்கு அவர் தெரிவித்துள்ள காரணம் பலரது நெஞ்சைக் கரைக்கும் விதமாக உள்ளது.

தூத்துக்குடியில் உரிமைக்காக போராடிய 13 அப்பாவி பொதுமக்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். பலர் அடிபட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்த சூழ்நிலையில், நான் பிறந்தநாள் கொண்டாடுவது சரியாக இருக்காது என விஜய் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொழும்பில் பொலிஸாருக்கு பயந்த நபருக்கு ஏற்பட்ட கதி!!

கொழும்பில் பொலிஸாருக்கு பயந்து மாடியில் இருந்து குதித்த நபர் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். கொள்ளுப்பிட்டி முகாந்திரம் வீதியிலுள்ள மாடி வீட்டில் இருந்து குறித்த நபர் குதித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நபர் ஒருவரை கைது செய்ய சென்ற சந்தர்ப்பத்தில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

சந்தேக நபரை நேற்று கைது செய்ய சென்ற சந்தர்ப்பத்தில் மாடி வீட்டின் இரண்டாவது மாடியில் இருந்து கீழே குதித்துள்ளார்.சந்தேக நபரின் ஒரு காலின் எலும்பு முறிந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது குறித்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

சம்பவம் தொடர்பில் கொள்ளுப்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கடலில் 20 அடி உயரத்திற்கு எழும்பும் இராட்சத அலைகள்!!

 

ராமேஸ்வரம் தீவுப்பகுதியில் பலத்த காற்று வீசுவதன் காரணமாக தனுஸ்கோடி பகுதியில் கடல் அலைகள் சுமார் 20 அடி உயரத்திற்கு எழும்புவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால் சுற்றுலா பயணிகள் கடற்கரை பகுதிக்கு செல்ல பொலிஸார் தடை விதித்துள்ளதுடன், தனுஸ்கோடி பகுதியில் பலத்த காற்று காரணமாக மணல் புயல் வீசி வருவதால் சாலைகள் அனைத்தும் மணலால் மூடப்பட்டுள்ளன.

இதனையடுத்து அரிச்சல் முனைப்பகுதிக்கு செல்ல வரும் சுற்றுலா பயணிகள் தனுஸ்கோடி பகுதியுடன் தடுத்து நிறுத்தப்பட்டு ராமேஸ்வரத்திற்கு அனுப்பபட்டு வருகின்றனர்.

ஆனால் சுற்றுலா வரும் மக்கள் ஆபத்தை உணராமல் ராட்சத அலைகளுடன் செல்பி எடுத்து கொள்ளவதாகவும், இதிலிருக்கும் அபாய தன்மையை கருத்தில் கொண்டு இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் எனவும் பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும் பாம்பன் பகுதிகளில் பலத்த காற்று வீசி வருவதால் பாம்பன் பாலத்தை கடந்து செல்லும் புகையிரதங்கள் அனைத்தும் சிறிது நின்று செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

யாருமில்லா வீட்டுக்குள் நடந்த மோதல் : பெண்ணொருவரின் அதிரடி செயற்பாடு!!

வீட்டிற்கு நுழைந்த திருடனை தைரியமாக பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்த பெண் ஒருவர் தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது.

வீட்டிற்குள் நுழைந்து அலுமாரியை திறந்து பொருட்கள் திருடி கொண்டிருந்த திருடனை, குறித்த பெண் தனியாக பிடித்து வீட்டிற்கு வெளியே இழுந்து வந்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார்.

கொடெல்ல, ரனபியகம பிரதேசத்தில் வாழும் பெண் ஒருவரே இந்த செயலை செய்துள்ளார்.

குறித்த பெண் வர்த்தக நடவடிக்கைகளுக்காக வெளியே சென்றிருந்தார். வீடு திரும்பும் போது வீட்டின் பின் பக்க ஜன்னல் திறந்திருந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த பெண் வீட்டினுள் சத்தம் இல்லாமல் சென்றுள்ளார். இதன் போது திருடன் ஒருவர் அலுமாரியை திறந்து பொருட்கள் தேடி கொண்டிருந்தார். திடீரென பாய்ந்து அவரது சட்டையை பிடித்து திருடனை வீட்டிற்கு வெளியே இழுத்து வந்துள்ளார்.

சந்தேக நபர் வீட்டிற்கு வெளியே வந்த போது திருடன், பெண்ணின் பிடியில் இருந்து தப்பியுள்ளார். உடனடியாக பெண் பொலிஸாருக்கு தொலைபேசி அழைப்பேற்படுத்திய போது மறைந்திருந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் புதையல் தோண்ட முற்பட்ட மூவர் விசேட அதிரடிப்படையினரால் கைது!!

வவுனியா ஈரட்டைபெரியகுளம் பகுதியில் புதையல் தோண்டுவதற்குரிய பொருட்களுடன் வானில் பயணித்த மூவரை நேற்று (10.06.2018) விசேட அதிரடிப்படையினர் கைது செய்ததுடன் அவர்களிடமிருந்த பொருட்களையும் கைப்பற்றியுள்ளர்.

கண்டியிலிருந்து வானில் பயணித்த மூவர் நேற்றையதினம் வவுனியா நகரில் சந்தேகத்திற்கிடமான முறையில் வவுனியா நகர் முழுவதும் பயணித்துள்ளனர்.

இதனையடுத்து மாலை ஈரட்டைபெரியகுளம் எரிபொருள் மீள்நிரப்பு நிலையத்திற்கு அருகே குறித்த வாகனத்தினை விசேட அதிரடிப்படையினர் திடீர் சேதனை மேற்கொண்டபோது வானிலிருந்து ஸ்கானர் இயந்திரத்தினை கைப்பற்றியுள்ளனர்.

அதன் பின்னர் விசேட அதிரடிப்படையினர் கைது செய்யப்பட்ட 38,49,42 வயதுடைய மூவரையும் அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட தொலைபேசிகள், வான் என்பவற்றை ஈரட்டைபெரியகுளம் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

மேலதிக விசாரணைகளை ஈரட்டைபெரியகுளம் பொலிஸார் மேற்கொண்டுவருவதுடன் இன்றையதினம் சந்தேகநபர்களை மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஆயர்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

வீட்டில் சிங்கம் வளர்ப்பது உண்மையா : புகைப்படத்தை வெளியிட்ட அப்ரிடி!!

பாகிஸ்தான் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான அப்ரிடி தன் வீட்டில் சிங்கம் வளர்ப்பதை உறுதி செய்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

பாகிஸ்தான் அணியில் நட்சத்திர வீரராக வலம் வந்தவர் சயித் அப்ரிடி. இவர் கடந்த 2017-ஆம் ஆண்டு அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெற்றார்.

சமீபத்தில் லண்டனில் நடந்த மேற்கிந்தியத்தீவுகள் எதிரான ஐசிசி வேர்ல்டு லெவன் போட்டியோடு சர்வதேச கிரிக்கெட்டில் பங்கேற்பதில் இருந்தும் விடை பெற்றார்.

இந்நிலையில் அப்ரிடி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், தனது நான்கு மகள்களுடன் இருப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டிருந்தார்.

அதில், இதில் ஒரு மகளோடுஉடற்பயிற்சிக்கூடத்தில் இருப்பதுபோன்றும், அடுத்த படத்தில் அப்ரிடி வீட்டில் வளர்க்கும் மானுக்கு பாலூட்டுவது போன்றும், மற்றொரு படத்தில் அப்ரிடியின் மகள் அஜ்வா நிற்பது போலவும், அவருக்குப் பின்னால் ஒரு பெரிய சிங்கம் படுத்திருப்பதுபோலவும் இருந்தது.

அப்ரிடியின் மகளுக்குப் பின்னால் சிங்கம் படுத்திருக்கும் காட்சியைப் பார்த்த இணையவாசிகள் சிலர் அதற்கு கருத்து தெரிவித்துள்ளனர்.

அதில் ஒருவர், உண்மையிலேயே சிங்கம் வளர்க்கிறீர்களா அப்ரிடி? வீட்டில் ஆபத்தான விலங்கு சிங்கத்தை வளர்ப்பது தவறு, குழந்தையுடன் சிங்கத்தை பழகவிடாதீர்கள், மானையும், சிங்கத்தையும் ஒன்றாக வளர்க்காதீர்கள், நீங்கள் செய்வது சட்டப்படி தவறு என்று குறிப்பிட்டிருந்தார்.

திருமணம் செய்ய மறுத்த காதலனை கடத்திக் கொன்ற இளம்பெண் : திடுக்கிடும் சம்பவம்!!

இந்தியாவில் திருமணம் செய்ய மறுத்த கள்ளக்காதலனை கடத்தி கொன்ற பெண்ணின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தின் கொல்கத்தாவை சேர்ந்தவர் சகி செளத்ரி. திருமணமான இவருக்கு அஜய் கர் (25) என்ற இளைஞருடன் சில மாதங்களுக்கு முன் தொடர்பு ஏற்பட்ட நிலையில் இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்தனர்.

இந்நிலையில் சகிக்கு பல ஆண்களுடன் தொடர்பு இருப்பதை அறிந்த அஜய் அவருடனான தொடர்பை திடீரென நிறுத்தி கொண்டார். இதையடுத்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அஜய்யிடம், சகி வற்புறுத்தியுள்ளார்.

இதற்கு அஜய் மறுத்துவிட்ட நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் அவர் ரயில்வே தண்டவாளத்தில் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு அஜய் உயிரிழந்த நிலையில் சகி தான் அஜய்யை கொலை செய்ததாக அவரின் தாய் பொலிசில் புகார் அளித்தார்.

இதையடுத்து அஜய்யை கொன்றதாக சகி மற்றும் அவர் ஆண் நண்பர் பிஸ்வாஜித்தை பொலிசார் கைது செய்தனர். இருவரிடமும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

எனக்கு அந்த அதிர்ஷ்டம் இல்லை : நடிகர் சிவகார்த்திகேயனின் கவலை!!

ஒவ்வொரு நொடியும் தந்தையின் நினைவுடன் வாழ்ந்து வருவதாக நடிகர் சிவகார்த்திகேயன் உருக்கமாக தெரிவித்துள்ளார்.

டுவிட்டரில் நடிகர் சிவகார்த்திகேயனின் ரசிகர் ஒருவர் மறைந்த அவரின் தந்தை புகைப்படத்தை எடிட் செய்து வெளியிட்டார்.

அதை பார்த்த சவுந்திரராஜன் என்ற சிறை அதிகாரி, உயிரிழந்த நாளில் சிவகார்த்திகேயன் அப்பா எனது அதிகாரியாக இருந்தார்.

நான் தான் கடைசியாக அவருக்கு தண்ணீர் கொடுத்தேன், அவருக்கு கீழ் பணியாற்றியதை பெருமையாக கருதுகிறேன் என குறிப்பிட்டார்.

என் தந்தை மறைந்து 15 ஆண்டுகளுக்கு பிறகும் அவரை பேசுகிறீர்கள் என்றால் அது அவர் பெருமையையும் உங்கள் நல்ல மனதையும் காட்டுகிறது.

இதற்கு மறுப்பதிவிட்ட நடிகர் சிவகார்த்திகேயன், என் தந்தை மறைந்து 15 ஆண்டுகளுக்கு பிறகும் அவரை பேசுகிறீர்கள் என்றால் அது அவர் பெருமையையும் உங்கள் நல்ல மனதையும் காட்டுகிறது.

ஒவ்வொரு நொடியும் அவர் நினைவுகளுடன் வாழ்கிறேன், என் ரோல் மாடலான அப்பாவுடன் சேர்ந்து பல ஆண்டுகள் வாழ போதுமான அதிர்ஷ்டம் எனக்கு இல்லை என்று நினைக்கிறேன், உங்களை மிஸ் செய்கிறேன் அப்பா என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

ஆணாக மாறி காதல் திருமணம் செய்த பெண் : மனைவியிடம் சிக்கியதால் நேர்ந்த விபரீதம்!!

தமிழகத்தில் பெண்ணாக இருந்து ஆணாக மாறி காதல் திருமணம் செய்தவர் தீக்குளித்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த சுரேஷ் நாராயணன். இவரது மகன் அஷய்தேவ் (28). பெண்ணாக பிறந்த இவருக்கு ஆண் தன்மை இருந்ததால் அறுவை சிகிச்சை மூலம் ஆணாக தன்னை மாற்றிகொண்டார்.

இந்நிலையில் அஷய்தேவ், அழகுநிலையம் நடத்தி வரும் இளவரசி என்ற பெண்ணை காதல் திருமணம் செய்து கொண்டார்.

இருவரும் சேர்ந்து சில மாதங்கள் வாழ்ந்த நிலையில் அஷய்தேவுக்கு தாம்பத்ய உறவில் நாட்டம் இல்லாதது இளவரசிக்கு தெரியவந்தது.

இது குறித்து சந்தேகமடைந்து அஷய்தேவிடம் விசாரித்த நிலையில் அவர் பெண்ணாக இருந்து ஆணாக மாறியது இளவரசிக்கு தெரிந்தது. இதனால் கணவரிடம் சண்டை போட்டு கொண்டு இளவரசி அவரை பிரிந்து சென்றார்.

இதையடுத்து இளவரசியை சேர்ந்து வாழ அஷ்ய்தேவ் அழைத்தும் அவர் வரவில்லை. இதன் காரணமாக மனமுடைந்த அஷய்தேவ் தன் உடல் மீது பெட்ரோல் ஊற்றி தீவைத்து கொண்டார்.

வலியால் துடித்த அவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள பொலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஜீன்சுக்குள் பாம்பு ஏறியது தெரியாமல் பைக் ஓட்டிச் சென்ற இளைஞர் : அடுத்து நடந்தது என்ன?

இந்தியாவில் ஜீன்சுக்குள் பாம்பு ஏறியது கூட தெரியாமல் பைக் ஓட்டிச்சென்ற இளைஞர் உடையை கழற்றி வீசியதால் உயிர் தப்பியுள்ளார்.

கர்நாடக மாநிலத்தை சேர்ந்த வீரேஷ் காதேமணி என்பவர் தனது பைக்கில் சந்தைக்குச் சென்றுள்ளார்.

பைக்கை மெதுவாக ஓட்டிச் சென்ற வீரேஷ் தனது காலில் ஏதோ ஒன்று ஊர்வதை உணர்ந்துள்ளார். இருப்பினும் சரியாக கவனிக்காத அவர் தண்ணீர் பட்டு பேன்ட் நனைந்திருக்கும் என எண்ணி பைக்கை தொடர்ந்து ஓட்டிச் சென்றார்.

பின்னர் சந்தையில் பொருட்களை வாங்கிய வீரேஷ் வீடு திரும்புகையில் பேண்டின் கால்பகுதியில் பாம்பின் வால் பகுதியைக் கண்டு அதிர்ந்துள்ளார்.

இதையடுத்து பைக்கில் இருந்து குதித்து பக்கத்திலிருந்த கடைக்குள் ஓடி தனது பேண்டை கழற்றி வீசினார்.

அப்போது பேண்டினுள் இருந்த 2 அடி நீளம் கொண்ட பழுப்பு நிற பாம்பு வெளியே வந்து விழுந்தது. அதை அருகிலிருந்தவர்கள் பிடிக்க முற்பட்டபோது , பக்கத்திலிருந்த கழிவுநீர் தொட்டிக்குள் புகுந்து தப்பித்து விட்டது.

இந்நிலையில் பைக்கை மரத்திற்கு அருகே வீரேஷ் நிறுத்தியதும், அதன் இஞ்சினில் ஏறிய பாம்பு பைக்கை ஓட்ட ஆரம்பித்ததும் சூடேறியதால் அவர் ஜீன்சுக்குள் சென்றதும் தெரியவந்தது.

அடித்துத் துன்புறுத்தி சித்திரவதை : இரண்டாவது மாடியிலிருந்து குதித்த பெண்!!

அரேபிய நாடான ஓமனில் வீட்டு வேலை செய்து வந்த பெண் ஒருவர் அந்த வீட்டாரின் சித்திரவதை தாங்க முடியாமல் வீட்டின் இரண்டாவது மாடியிலிருந்து குதித்து தப்பியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சீஜா. இவர் ஓமன் நாட்டில் உள்ள மஸ்கட் பகுதியில் காவல்துறை அதிகாரி ஒருவரின் வீட்டில் பணிப்பெண்ணாகக் கடந்த 2016-ம் ஆண்டு முதல் வேலை செய்துவருகிறார். இவரின் கணவர் பிஜுமோன் என்பவரும் அதே பகுதியில் மின்சார ஊழியராகப் பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில் சீஜா பணிபுரியும் வீட்டில் அவருக்குத் தொடர்ந்து ஊதியம் வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. மேலும், அவருக்கு அந்த வீட்டின் உரிமையாளர் உணவும் முறையாக வழங்காமல், அடித்துத் துன்புறுத்தி சித்திரவதை செய்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், அந்த வீட்டிலிருந்து தப்பிக்க இரண்டாவது மாடியிலிருந்து குதித்த சீஜா, இடுப்புக்கு கீழ்பகுதி முழுவதும் செயல் இழந்த நிலையில் மீட்கப்பட்டார். இதையடுத்து, அவர் ஓமன் நாட்டில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

ஆனால் குறித்த வீட்டு உரிமையாளர், எவ்வித நஷ்ட ஈடும் வழங்காமல் சீஜாவை ஓமனிலிருந்து, அவருடைய சொந்த ஊரான கேரளாவுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

தற்போது மேல்சிகிச்சைக்குப் பணமின்றி தவித்துவரும் சீஜா குடும்பத்தினர், இந்த நிலைமைக்கு காரணமான வீட்டு உரிமையாளரிடமிருந்து உரிய நஷ்ட ஈடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதற்கு காரணம் ஈழத் தமிழர்கள் தான் : நடிகர் ராதாரவி அதிரடி!!

உலகம் முழுவதும் தமிழர்களை தெரிகிறது என்றால் அதற்கு ஈழ தமிழர்கள் தான் காரணம் என நடிகர் ராதாரவி கூறியுள்ளார்.

நடிகர் ராதாரவி சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில், தமிழனுக்காக குரல் கொடுப்பவர்களிடம் நீ தமிழனா என கேட்கிறார்கள்.

அரசியல் தற்போது கேலிக்கூத்தாக மாறிவிட்டது. தமிழ்நாட்டில் பெரியார், ராஜகோபாலசாரியார், காமராஜர் போன்ற நல்ல அறிவாளிகள் இருந்தார்கள்.

அரசியலில் சினிமா புகழை வைத்து எம்.ஜி.ஆர் போல் ஆகிவிடலாம் என தற்போது பலர் நினைக்கிறார்கள்.

ஆனால் அது போல ஆகமுடியுமா என்பது நமக்கு தெரியாது. உலகம் முழுவதும் தமிழர்களை தெரிகிறது, இதற்கு காரணம் ஈழ தமிழர்கள் தான் என கூறியுள்ளார்.

10 ஆம் வகுப்பு மாணவனை கொடூரமாக கொலை செய்த மர்ம நபர்கள் : பெற்றோர் அதிர்ச்சி!!

தமிழகத்தில் 10-ஆம் வகுப்பு மாணவன் ஒருவர் கொடூரமான முறையில் அடித்து கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் சோளிங்கர் பகுதியில் உள்ள ராஜீவ்காந்தி நகரில் வசித்து வருபவர் நரசிம்மன். இவருக்கு 10-ஆம் வகுப்பு படிக்கும் கார்த்திக் என்ற மகன் உள்ளார்.

இந்நிலையில் நேற்று விளையாடச் சென்ற கார்த்திக் வெகு நேரமாகியும் வீடு திரும்பாத காரணத்தினால், பெற்றோர் அந்த பகுதி முழுவதும் தேடியுள்ளனர்.

இதையடுத்து இன்று காலை வீட்டிற்கு அருகிலுள்ள ஏரியில், கார்த்திக் ரத்தகாயங்களுடன் சடலம் இருப்பதை கண்ட அப்பகுதி மக்கள் பொலிசாருக்கு தெரிவித்ததுடன், பெற்றோருக்கும் இது குறித்து தெரிவித்துள்ளனர். இதைக் கேட்டு பெற்றோர் அதிர்ச்சியடைந்து அங்கு சென்றுள்ளனர்.

அதன்பின் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிசார், மாணவனை பார்த்த போது, அவனின் உடல் அருகே ரத்தகறையுடன் வாலி ஒன்று இருந்துள்ளது.

இதனால் மாணவன் கொடூர முறையில் அடித்து கொலை செய்யப்பட்டிருப்பது பொலிசார் உறுதி செய்தனர். இதையடுத்து மாணவனின் உடலை கைப்பற்றிய பொலிசார் இந்த கொலையை செய்தது யார்? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.