வவுனியா குட்செட் வீதியில் உள்ள வீடொன்றினுள் இருந்து 8 மாத ஆண்குழந்தையான வானிஷன் எனும் குழந்தையை கடந்த (31.05.2018) அதிகாலை 2 மணியளவில் வெள்ளை வேன் ஒன்றில் வந்த நபர்கள் கடத்திச் சென்றனர்.
இச் சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வந்த நிலையில் இன்று (02.06.2018) மதியம் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலிஸார் குழந்தையினை கடத்தியவர்களை கைது செய்துள்ளதுடன் குழந்தையும் மீட்டெடுத்துள்ளனர்.
தற்போது வவுனியா பொலிஸார் மற்றும் குழந்தையின் தாயார் புதுக்குடியிருப்பு நோக்கி சென்றுள்ளனர்.
குறித்த குழந்தையின் தந்தை வெளிநாடு ஒன்றில் வசித்து வருகின்றார். தாயிற்கும் தந்தைக்கும் இடையில் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டு இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
காரைதீவில் இடம்பெற்ற சித்திரைப் புத்தாண்டு விளையாட்டு விழாவில் சறுக்குமரம் ஏறிய போது சறுக்கி விழுந்த இளைஞரொருவர் 50 நாட்களின் பின் உயிரிழந்துள்ளார். காரைதீவை சேர்ந்த 41 வயதுடைய சாமித்தம்பி தவராசா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சித்திரை வருட விளையாட்டு விழா காரைதீவு கனகரெத்தினம் விளையாட்டரங்கில் நடைபெற்றபோது வழமையாக சறுக்குமரம் ஏறும் அவர் இம்முறையும் ஏறியிருந்தார்.
சறுக்கு மரத்தில் ஏறி மரத்தில் கட்டியிருந்த கயிற்றை எட்டிப்பிடிக்க முயற்சித்த போது பிடி தவறி தரையில் விழுந்துள்ளார்.
சம்பவத்தில் எலும்புகள் முறிந்த நிலையிலும், சிறுநீரகம் பாதிக்கப்பட்ட நிலையிலும் அவர் உடனே கல்முனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன் அங்கிருந்து மேலதிக சிகிச்சைகளுக்காக அவரை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
அங்கு சுமார் 48 நாட்கள் சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில் வீட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளார். எனினும் வீட்டுக்கு அனுப்பப்பட்டு 2 தினங்களில் (மே 31) குறித்த நபர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
கொக்கட்டிச்சோலை – மகிழடித்தீவில் குடும்பஸ்தர் ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டுள்ளார். வெளிநாட்டில் இருந்து அண்மையில் நாடு திரும்பிய 40 வயதுடைய ராஜூ என்பவரே தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
குறித்த நபரின் மனைவி வேறு ஒரு ஆணுடன் தவறான உறவை வைத்திருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தனது கணவர் வெளிநாட்டில் இருந்து அனுப்பிய பணத்தையும், நுண்கடன் மூலம் பெற்ற பணத்தையும் குறித்த ஆணுக்கு வழங்கியுள்ளார்.
இந்த நிலையில் வெளிநாட்டிலிருந்து கணவர் திரும்பி வந்தவுடன் அவர் அனுப்பிய பணம் எதுவும் இல்லாததுடன், நுண்கடன் நிதி நிறுவனங்களில் இருந்து வீடு தேடி வந்து பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார்கள்.
இந்த நிலையில் கணவர் வீட்டை விட்டு வெளியில் சென்று மீண்டும் வீடு திரும்பும் போது அவருடைய மனைவியும், குறித்த ஆணும் ஒன்றாக இருந்ததை நேரில் பார்த்துள்ளார்.
இதனால் மனமுடைந்த கணவர் வீட்டிலேயே தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டுள்ளார். சம்பவம் தொடர்பில் கொக்கட்டிச்சோலை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
வவுனியா பண்டாரிக்குளம் பகுதியிலுள்ள வீடு ஒன்றிற்குள் வவுனியாவிலுள்ள லீசிங் நிறுவன ஊழியர்கள் இருவர் அத்துமீறி உள்நுழைந்து வீட்டு உரிமையாளர்களுடன் தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளதுடன் அவர் மீது தாக்குதல் நடாத்தியுள்ளனர். இதனால் அவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
கடந்த 2015ம் ஆண்டு லீசிங் நிறுவனத்தில் பெற்றுக்கொள்ளப்பட்ட மோட்டார் சைக்கிள் ஒன்றிற்கு மாதாந்த கட்டுப்பணம் கடந்த மூன்று மாதங்களாக கட்டுப்படவில்லை. இதையடுத்து குறித்த மோட்டார் சைக்கிளை கையகப்படுத்தவதற்கு அவ்வீட்டிற்கு லீசிங் நிறுவனத்தின் ஊழியர்கள் இருவர் சென்றுள்ளனர்.
இதையடுத்து குறித்த வீட்டின் உரிமையாளர் பணம் கட்டுவதற்கு தாமதம் ஏற்பட்டதற்கான காரணங்களைத் தெரிவித்து கிளை முகாமையாளருக்கு அறிவித்துள்ளேன் சில தினங்களில் பணத்தை ஏற்பாடு செய்து கட்டிவிடுவதாகவும் மோட்டார் சைக்கில் விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது. இதன் இழப்பீட்டுப்பணம் வரவில்லை அது வந்ததும் அனைத்துப் பணங்களையும் திரட்டிக்கட்டிவிடுவதாகத் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து வாகனத்தை கையகப்படுத்த வந்த இரு ஊழியர்கள் தாகாத வார்த்தைப் பிரயோகங்களைப் பாவித்து தரக்குறைவாக அவ்வீட்டின் குடும்பத் தலைவியிடம் நடந்துகொண்டபோது இரு பகுதியிருக்குமிடையே தர்க்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் மோட்டர் சைக்கிலின் உரிமையாளர் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் கடந்த 30ஆம் திகதி அனுமதிக்கப்பட்டுள்ளார்.
எனினும் பொலிசார் தாக்கிய லீசிங் நிறுவன ஊழியர்ளைக் கைது செய்யவில்லை. இவ்வாறு வீட்டிற்குள் அத்துமீறி உள்நுழைந்த லீசிங் நிறுவன ஊழியர்கள் மீது பொலிசார் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை வீடுகளுக்குள் சென்று அடாவடியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுப்பதுடன் வவுனியாவிலுள்ள லீசிங் நிறுவனத்தின் முகாமையாளரிடம் பக்கச்சார்பின்றி விசாரணை மேற்கொள்ளப்படவேண்டும் எனவும் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிலின் உரிமையாளர் கோரியுள்ளார்.
இதேவேளை இன்று (02.06) காலை 10 மணியளவில் தொலைபேசியில் அழைப்பு மேற்கொண்ட நபர் ஒருவர் பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டினை வாபஸ் பெற்றுக்கொள்ளுமாறும் தவறினால் உங்களை 4ஆம் மாடிக்கு கொண்டு சென்று விசாரிப்போம் என்றும், அவருக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.
வவுனியா பழைய பேரூந்து நிலையத்திற்கு அருகேயுள்ள உணவத்தில் இன்று (02.06.2018) காலை நபர் ஒருவர் இடியப்ப பார்சல் ஒன்றினை பெற்றுள்ளார். அதனை வீட்டிற்கு சென்று திறந்த சமயத்தில் பெண்ணொருவரின் தலைமுடி காணப்பட்டுள்ளது.
அதனையடுத்து சைவ உணவகத்திற்கு ஊடகவியலாளருடன் சென்று இடியப்ப பார்சலை திறந்து உணவகத்தின் முகாமையாளருக்கு காண்பித்த சமயத்தில் அவர் குறித்த நபரிடம் மன்னிப்பு கோரினார்.
உணவகங்களின் பேணப்பட்ட வேண்டிய விதிமுறைகள் இவ் உணவகத்தில் பேணப்படுவதில்லை குறிப்பாக அங்கு பணிபுரியும் பணியாளர்கள் தலைக்கு உறை அணிவதில்லை, கையால் உணவுகளை கையாளுக்கின்றனர் என பல குற்றச்சாட்டுக்களை பொதுமக்கள் முன்வைக்கின்றனர்.
பொதுமக்களின் நலனை கருத்தில் கொள்ள வேண்டியது உங்களின் கடமையல்லவா? வவுனியா மாவட்ட சுகாதார உத்தியோகத்தர்களே இது உங்களின் கவனத்திற்கு.
தமிழினத்தை கொச்சைப்படுத்தும் எந்த நடிகர்களின் திரைப்படத்தையும், திரையிடமாட்டோம் என உறுதி கொள்கின்றோம் எனவும் குறிப்பாக ரஜினியின் படத்தை நோர்வேவில் திரையிட மாட்டோம் என நோர்வே தமிழ் திரைப்பட விழா குழு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் நோர்வே தமிழ் திரைப்பட விழா குழுவின் இயக்குனர் வசீகரன் சிவலிங்கம் ஊடகங்களுக்கு அனுப்பிவைத்துள்ள செய்திக் குறிப்பு பின்வருமாறு.,
நோர்வே வாழ் தமிழர்கள், நடிகர் .ரஜனிகாந்த் ரசிகர்கள், மற்றும் அவருடைய நலன் விரும்பிகள் அனைவருக்கும், வணக்கம்!
எமது தாயகத்தில் இருந்து ஈழத்தமிழர்கள் புலம்பெயர்ந்து ஐந்து தசாப்தங்கள் கடந்து விட்டது. அப்படிப் புலம்பெயர்ந்த நாங்கள் எமது மொழியோடு, கலை கலாச்சாரம், பண்பாடு, வரலாறு, வலிகளையும் சுமந்த வண்ணம் இங்கே வாழ்ந்து வருகின்றோம். தமிழ்த் திரைப்படங்களின் வர்த்தக முதலீட்டின் பெரும் பங்காளர்களாக இருக்கின்றோம்.
எமது மக்களை மகிழ்விப்பதற்காக தமிழ் நாட்டில் இருந்து கடந்த மூன்று தசாப்தங்களுக்கு மேலாக தமிழ்த் திரைப்படங்கள் உலகம் முழுவதும் திரையிடப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் நாங்கள் எமது எதிர்ப்பை வெளிப்படுத்த எடுக்கின்ற சிறந்த முடிவு இது.
எமது மக்களிடம் இருந்து பெரும் கோடிகளைப் பணமாகவும், ஊதியமாகவும் பெற்று வந்த பெரிய நடிகர் ரஜனிகாந்த். அவருடைய அண்மைக்கால அரசியல் வருகையும், ஆன்மீக அரசியல் நிலைப்பாடும் எமக்கு அதிருப்தியைத் தொடர்ந்து தருகின்றது.
கடந்த சில மாதங்களாக அவருடைய “ஆன்மீக அரசியலின் அகோர முகத்தை” நேற்று (30.05.18) கொடும் கறுப்பாகவே அனைத்து தமிழக ஊடகங்களிலும் பார்த்து அதிர்ச்சியும், கோபமும் அடைந்தோம்!
கடந்த 22.05.18 அன்று தூத்துக்குடியில் நிகழ்ந்த தமிழர்கள் மீதான, இந்திய அரசின் படுகொலைக்கு ரஜனி அவர்கள் எதிர்ப்பான குரல் ஏதும் பெருங் கோபத்துடன் பதிவு செய்யப்படவில்லை.
எமது 13 மேற்பட்ட இனிய தமிழ் உறவுகளின், அற்புதமான உயிர்களின் சாவீட்டில் “ஒரு நடிகனாக போனால் அது அவர்களுக்கு மகிழ்ச்சியாக அமையும்” என்று மிகவும் கீழ்த்தனமான சிந்தனையில் தன்னை வெளிப்படுத்திய இவரின் சிந்தனையை வன்மையாக கண்டிக்கின்றோம்!
இவற்றின் வெளிப்பாடாக நோர்வே நாட்டில் இனிமேல் தமிழர்களை, தமிழினத்தை கொச்சைப்படுத்தும் எந்த நடிகர்களின் திரைப்படத்தையும், திரையிடமாட்டோம் என உறுதி கொள்கின்றோம்.
இத்தனை வருடங்களாக, எவ்வளவு பெரிய இனப்படுகொலைகளுக்குப் பின்பும் ஈழத்தனுக்காக குரல் கொடுக்காத நடிகர் ரஜனிகாந்த் இன்று தமிழ் நாட்டு மக்களை, அவர்களுடைய உணர்வுகளை, போராட்டங்களை தொடர்ந்து போராடிவரும் மக்களை வார்த்தைகளால் நோகடித்தும், சாகடித்தும் வருகின்றார்!
தமிழகத்தையும் சுடுகாடாய் மாற்றும் இந்திய அரச இயந்திரங்களோடு அவர்களுக்கு வெளிப்படையாகவும், மறைமுகமாகவும் தனது ஆதரவை வெளிப்படுத்திவரும் ஒருவர் சொல்கிறார் ” போராட்டம் போராட்டம் என்று போனால் தமிழ் நாடே சுடுகாடாகுமாம்” எவ்வளவு பெரிய கொடுமையான வார்த்தை!
இவருடைய திரைப்படங்களை, இவரைப் போன்று தமிழர்கள் மீதான வன்மத்தை வெளிக்காட்டும் எந்த நடிகர்கள், நடிகைகள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் உடைய திரைப்படங்களையும் இனிமேல் இங்கே திரையிடமாட்டடோம்!
கடந்த 15 வருடங்களுக்கு மேலாக தமிழ்த் திரைப்படங்களை இங்குள்ள நண்பர்களுடன் இணைந்து திரையிட்டு வந்தேன். “காலா” திரைப்படத்தில் இருந்து சில தீர்க்கமான முடிவுகளை எடுக்கும் காலம் வந்து விட்டது!
இப்போது நாங்கள் இணைந்தே திரைப்படங்களை இங்கே திரையிடுகின்றோம் எமது ஒற்றுமையை வெளிப்படுத்த இதற்கு எனது நண்பர்களும் முழு ஆதரவு வழங்க முன்வந்துள்ளார்கள்!
விசேடமாக ஐரோப்பிய வாழ் தமிழர்கள் நாம் முதலில் இணைந்து இந்த வரலாற்று சிறப்புமிக்க பாடத்தை ரஜினிக்கு புகட்டுவோம் !
உலகம் முழுவதும் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் ஒவ்வொருவரும் உறுதியாக விழித்தெழவேண்டும்!
வேலூர் கோட்டை வளாகத்தை திறந்தவெளி பாராக மாற்றியதுடன், போதையில் கோட்டை மேல் நின்று கும்மாளமடித்த கல்லூரி மாணவிகளை பார்த்து சுற்றுலா பயணிகள் முகம் சுளித்தனர்.
கலி முத்தி போச்சு என்று நாகரீகத்தின் பேரால் நடக்கும் அநாகரீக சம்பவங்களை பார்த்து நமது பெரியவர்கள் அலுத்துக் கொண்ட வரத்தைகளை உதிர்ப்பதுண்டு.
அதேபோன்ற ஒரு சம்பவம் வேலூர் கோட்டை வளாகத்தில் நடந்து, அது வீடியோ காட்சிகளாக வாட்ஸ்அப், முகநூல் மூலம் வைரலாக பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய சுதந்திர போராட்டத்திற்கு வித்திட்ட வரலாற்று சிறப்பு மிக்க வேலூர் கோட்டை வெளி பூங்கா அகழியை ஒட்டி அமைந்துள்ள கோட்டை மதில் மீது மூன்று கெண்கள் ஒரே சிரிப்பும் கும்மாளமுமாக நடனமாடுகின்றனர்.
அவர்களில் ஜீன்ஸ் பேண்ட்டும், வெள்ளை நிற டி சர்ட்டும் அணித்த ஒரு பெண்ணின் கையில் பீர் பாட்டில் இருக்கிறது. அவர் ஓவென சத்தமிட்டு பீர் பாட்டில் மூடியை தனது பற்களால் கடித்து திறந்து பீரை குடிக்கின்றார்.
இரண்டு மடங்கு பீரை குடிக்கும் அந்த பெண் செல்போனில் படம் எடுக்கும தனது சக தோழியை பார்த்து எதுக்குடி வீடியோ எடுக்குற என்று கேட்கிறார். அதற்கு படம் எடுக்கும் அந்த மாணவி சும்மாதான் எடுக்கிறேன் என்கிறார்.
அதற்கு அடியே அதை யாருக்காவது அனுப்பிட போற ஜாக்கிரதை என்று கூறுகிறார்.
யாருக்கும் அனுப்ப மாட்டேன் என்று கூறும் அவர் தொடர்ந்து படம் எடுக்கதில் முனைப்பு காட்டுகிறார். அவருக்க மற்ற மூன்று மாணவிகளும் பாட்டிளை ஒருசேர பிடித்தும் பாட்டிலை மாறி மாறி வாங்கி குடித்தும் வீடியோ எடுக்க ஊக்கப்படுத்துகின்றனர்.
ஒருவழியாக பீர் பாட்டிலை காலி செய்யும் அவர்கள் போதையில் தள்ளாடி நடனமாடுகின்றனர். அப்போது கோட்டையை சுற்றி பார்க்க வந்த சுற்றுலா பயணிகள் இவர்களை பார்த்து முகம் சுளித்தபடி சென்றனர்.
இந்த காட்சிகள் அனைத்தையும் அவர்கள் தைரியமாக செல்போன் மூலம் பதிவு செய்வது தான் வேடிக்கை.
இந்த வீடியோ தான் இப்பொழுது வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இது போன்ற மாணவிகளின் நடத்தையை காணும் போது பெற்றவர்கள் தங்கள் பிள்ளைகளின் அன்றாட நடவடிக்கைகளை கண்காணிப்பது எவ்வளவு அவசியம் என்பதை பெற்றோருக்கு உணர்த்துவதுடன், இன்றைய மாணவர் சமுதாயத்துக்கு கல்வியுடன், ஒழுக்கம், வாழ்வியல் சார்ந்த பாடங்களையும் கற்பிக்கப்பட வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகிறது.
இன்றயைக்கு இது போன்று நடக்கும் சில பெண்களின் நிலைக்கு யார் காரணம்? சமூகத்தை இது எங்கு கொண்டு போய் விடும்? என்பது சமூக ஆர்வலர்களின் கேள்வியாக உள்ளது.
இலங்கைக் கிரிக்கெட் சபையை இலங்கைக் கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் குமார் சங்ககாரவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் நேற்றுக் கூடிய ஐ.தே.கவின் மத்திய செயற்குழுவிலேயே இவ்வாறு முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இவ்விடயத்தை நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் அல்லது அமைச்சரவையில் முன்மொழிவதற்கும் இதன்போது தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர மற்றும் இலங்கைக் கிரிக்கெட் சபைத் தலைவர் திலங்க சுமதிபால ஆகியோரின் நிர்வாகத்தின்கீழ் இலங்கைக் கிரிக்கெட் சபை பெரும் சீரழிவை எதிர்கொண்டிருக்கின்றது என இதன்போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கடந்த வாரம் தமிழகத்தை மாத்திரம் அல்லாது தமிழர் வாழும் பகுதிகளில் எங்கிலும் பெரிதும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த விடயம் தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டு சம்பவம்.
பலரின் உரியை குடித்த கோர துப்பாக்கிச்சூட்டு சம்பவமாக இது பார்க்கப்பட்டதுடன், பல எதிர்ப்புக்களை கிளப்பிவிட்டிருந்தது இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம்.
இந்நிலையில், கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் தென்னிந்திய நடிகர் ரஜினிகாந்த் தூத்துக்குடிக்கு விஜயம் மேற்கொண்டிருந்துடன், அங்கிருந்த இளைஞர் ஒருவர் ரஜினிகாந்த்தை பார்த்து யார் நீங்கள் என்று வினவியிருந்தமை அடுத்த கட்ட அதிர்வலைகளை தோற்றுவித்திருந்தது.
அதனை அடுத்து ரஜினிகாந்த் வெளியிட்ட கருத்துக்கள் மீண்டும் ஒரு சர்ச்சைக்கு கொண்டு சென்றுள்ளது.
சமூக விரோதிகளின் ஊடுருவலே கலவரத்திற்கு காரணம். போராட்டம் நடைபெற்றால் தமிழகம் சுடுகாடாக மாறும் என்ற ரஜினியின் கருத்துக்களால் உலக வாழ் தமிழர்கள் உச்சக்கட்ட வெறுப்படைந்துள்ளார்கள் என குறிப்பிடப்படுகின்றது.
இந்நிலையில், தூத்துடிக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி போராட்டம் மேற்கொண்ட மக்களை தீவிரவாதிகள் என்று ரஜினிகாந் ஊடகவியலாளர்களிடம் கூறியதைத் தொடர்ந்து, ரஜினிகாந்த் நடித்து வெளிவருகின்ற ‘காலா’ என்ற திரைப்படத்தைப் புறக்கணிப்பதற்கு நோர்வே வாழ் தமிழர்கள் தீர்மாணம் எடுத்திருந்தார்கள்.
இதன்படி தமிழினத்தை கொச்சைப்படுத்தும் எந்த நடிகர்களின் திரைப்படத்தையும், திரையிடமாட்டோம் என உறுதி கொள்கின்றோம் எனவும் குறிப்பாக ரஜினியின் படத்தை நோர்வேவில் திரையிட மாட்டோம் என நோர்வே தமிழ் திரைப்பட விழா குழு அறிவித்துள்ளத.
இது தொடர்பில் நோர்வே தமிழ் திரைப்பட விழா குழுவின் இயக்குனர் வசீகரன் சிவலிங்கம் ஊடகங்களுக்கு அனுப்பிவைத்துள்ள செய்திக் குறிப்பில்,
நோர்வே வாழ் தமிழர்கள், நடிகர் .ரஜனிகாந்த் ரசிகர்கள், மற்றும் அவருடைய நலன் விரும்பிகள் அனைவருக்கும், வணக்கம்!
எமது தாயகத்தில் இருந்து ஈழத்தமிழர்கள் புலம்பெயர்ந்து ஐந்து தசாப்தங்கள் கடந்து விட்டது. அப்படிப் புலம்பெயர்ந்த நாங்கள் எமது மொழியோடு, கலை கலாச்சாரம், பண்பாடு, வரலாறு, வலிகளையும் சுமந்த வண்ணம் இங்கே வாழ்ந்து வருகின்றோம். தமிழ்த் திரைப்படங்களின் வர்த்தக முதலீட்டின் பெரும் பங்காளர்களாக இருக்கின்றோம்.
எமது மக்களை மகிழ்விப்பதற்காக தமிழ் நாட்டில் இருந்து கடந்த மூன்று தசாப்தங்களுக்கு மேலாக தமிழ்த் திரைப்படங்கள் உலகம் முழுவதும் திரையிடப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் நாங்கள் எமது எதிர்ப்பை வெளிப்படுத்த எடுக்கின்ற சிறந்த முடிவு இது.
எமது மக்களிடம் இருந்து பெரும் கோடிகளைப் பணமாகவும், ஊதியமாகவும் பெற்று வந்த பெரிய நடிகர் ரஜனிகாந்த். அவருடைய அண்மைக்கால அரசியல் வருகையும், ஆன்மீக அரசியல் நிலைப்பாடும் எமக்கு அதிருப்தியைத் தொடர்ந்து தருகின்றது.
கடந்த சில மாதங்களாக அவருடைய “ஆன்மீக அரசியலின் அகோர முகத்தை” 30.05.18 அன்று கொடும் கறுப்பாகவே அனைத்து தமிழக ஊடகங்களிலும் பார்த்து அதிர்ச்சியும், கோபமும் அடைந்தோம்!
கடந்த 22.05.18 அன்று தூத்துக்குடியில் நிகழ்ந்த தமிழர்கள் மீதான, இந்திய அரசின் படுகொலைக்கு ரஜனி அவர்கள் எதிர்ப்பான குரல் ஏதும் பெருங் கோபத்துடன் பதிவு செய்யப்படவில்லை!.
எமது 13 மேற்பட்ட இனிய தமிழ் உறவுகளின், அற்புதமான உயிர்களின் சாவீட்டில் “ஒரு நடிகனாக போனால் அது அவர்களுக்கு மகிழ்ச்சியாக அமையும்” என்று மிகவும் கீழ்த்தனமான சிந்தனையில் தன்னை வெளிப்படுத்திய இவரின் சிந்தனையை வன்மையாக கண்டிக்கின்றோம்!
இவற்றின் வெளிப்பாடாக நோர்வே நாட்டில் இனிமேல் தமிழர்களை, தமிழினத்தை கொச்சைப்படுத்தும் எந்த நடிகர்களின் திரைப்படத்தையும், திரையிடமாட்டோம் என உறுதி கொள்கின்றோம்.
இத்தனை வருடங்களாக, எவ்வளவு பெரிய இனப்படுகொலைகளுக்குப் பின்பும் ஈழத்தனுக்காக குரல் கொடுக்காத நடிகர் ரஜனிகாந்த் இன்று தமிழ் நாட்டு மக்களை, அவர்களுடைய உணர்வுகளை, போராட்டங்களை தொடர்ந்து போராடிவரும் மக்களை வார்த்தைகளால் நோகடித்தும், சாகடித்தும் வருகின்றார்!
தமிழகத்தையும் சுடுகாடாய் மாற்றும் இந்திய அரச இயந்திரங்களோடு அவர்களுக்கு வெளிப்படையாகவும், மறைமுகமாகவும் தனது ஆதரவை வெளிப்படுத்திவரும் ஒருவர் சொல்கிறார் ” போராட்டம் போராட்டம் என்று போனால் தமிழ் நாடே சுடுகாடாகுமாம்” எவ்வளவு பெரிய கொடுமையான வார்த்தை!
இவருடைய திரைப்படங்களை, இவரைப் போன்று தமிழர்கள் மீதான வன்மத்தை வெளிக்காட்டும் எந்த நடிகர்கள், நடிகைகள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் உடைய திரைப்படங்களையும் இனிமேல் இங்கே திரையிடமாட்டடோம்!
கடந்த 15 வருடங்களுக்கு மேலாக தமிழ்த் திரைப்படங்களை இங்குள்ள நண்பர்களுடன் இணைந்து திரையிட்டு வந்தேன். “காலா” திரைப்படத்தில் இருந்து சில தீர்க்கமான முடிவுகளை எடுக்கும் காலம் வந்து விட்டது!
இப்போது நாங்கள் இணைந்தே திரைப்படங்களை இங்கே திரையிடுகின்றோம் எமது ஒற்றுமையை வெளிப்படுத்த இதற்கு எனது நண்பர்களும் முழு ஆதரவு வழங்க முன்வந்துள்ளார்கள்!
விசேடமாக ஐரோப்பிய வாழ் தமிழர்கள் நாம் முதலில் இணைந்து இந்த வரலாற்று சிறப்புமிக்க பாடத்தை ரஜினிக்கு புகட்டுவோம் !
உலகம் முழுவதும் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் ஒவ்வொருவரும் உறுதியாக விழித்தெழவேண்டும்! உலகம் முழுவதும் தமிழர்களாய் ஒன்றிணைவோம்! என குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேபோன்று சுவிற்சர்லாந்து வாழ் தமிழர்களும் ‘காலா’ திரைப்படத்தைப் புறக்கணிப்பது என்று தீர்மானம் எடுத்துள்ளார்கள்.
காலா திரைப்படத்தை தமிழ் மக்கள் புறக்கணிக்கவேண்டும் என்ற பிரச்சாரங்கள் சமூகவலைத் தளங்கள் வழியாகவும், குறுஞ்செய்திகள் ஊடாகவும் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அமெரிக்காவில் மூளைச்சாவு அடைந்த மகனை காப்பாற்ற தாய் ஒருவர் போராடி வரும் சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர் ரூம்பா பானர்ஜி. அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் வசித்து வரும் இவருக்கு அரீன் சக்ரவர்த்தி என்ற மகன் உள்ளார்.
இந்நிலையில் கடந்த 14-ஆம் திகதி இவர்களின் வீடு திடீரென்று தீ விபத்தில் சேதமடைந்தது.
அப்போது வீடு எரிவதைக் கண்ட அரீன் சக்ரவர்த்தி நெருப்பின் பிரம்மிப்பை கண்டு அதை நெருங்கி போனதால் புகை அவரது உடம்பிற்குள் பரவிச்சென்றது. இதனால் சிறுவனது உறுப்புகள் பெரிதும் பாதிக்கப்பட்டது.
ஏற்கனவே ஆடிசம் நோயால் பாதிக்கப்பட்ட சக்ரவர்த்தி, இதன் காரணமாக மயங்கிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அப்போது அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் சிறுவன் மூளைச்சாவு அடைந்துவிட்டதாகவும், இதனால் சிறுவனை காப்பாற்றுவது கடினம் என்றும் கூறியுள்ளனர்.
ஆனால் தற்போது மகனை உயிர் காக்கும் கருவிகளுடன், உயிருடன் வைத்திருக்க வேண்டி தாய் ரூம்பா, பிடல்பியா மருத்துவமனை மருத்துவர்களுடன் போராடி வருகிறார்.
இவரது போராட்டம் இரண்டு மாத காலமாக தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.
அவுஸ்திரேலியாவில் தமது மொத்த சொத்துக்களையும் ஏழைகளுக்கு தானமாக வழங்கிய இளம் வயது மில்லியனர் மரணமடைந்துள்ளார்.
அவுஸ்திரேலியாவில் தொழில் மற்றும் வர்த்தகத்தில் தனக்கான முத்திரை பதித்து வளர்ச்சி கண்டவர் இளம் வயது மில்லியனரான அலி பானட். இவரது ஆடம்பரமான வாழ்க்கைமுறை பல நேரங்களில் செய்தியாகவும் வெளிவந்ததுண்டு.
இந்த நிலையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் மருத்துவ சோதனையில் இவருக்கு புற்று நோய் தாக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.
இது அவரது வாழ்க்கையை புரட்டிப்போட்டது. மட்டுமின்றி அடுத்த 7 மாதங்களில் மரணம் ஏற்படலாம் எனவும் மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.
இந்த நிலையில் தமது சொத்துக்கள் முழுவதையும் ஏழைகளுக்கு தானமாக வழங்க விரும்பிய அலி பானட், உடனடியாக அதற்கான பணியிலும் ஈடுபட்டார்.
மட்டுமின்றி தமது நிறுவனங்கள் அனைத்தையும் விற்பனைக்கும் வைத்தார். மேலும் தமது ஆடம்பர கார்கள், விலை உயர்ந்த வீட்டு உபயோக பொருட்கள் என அனைத்தையும் விற்று அதில் சேகரித்த மொத்த பணத்தையும் தானம் செய்துள்ளார்.
பின்னர் ஆப்பிரிக்காவின் தோகோ நகருக்கு சென்ற அவர் அங்கு இஸ்லாமிய பள்ளிவாசல் ஒன்றை கட்டி, உள்ளூர் சிறார்களுக்கு என பாடசாலை ஒன்றையும் நிறுவினார்.
தோகோவில் தங்கியிருந்த காலகட்டத்தில் அறக்கட்டளை ஒன்றை நிறுவிய பானட், இயலாதவர்களுக்கு உதவும் நோக்கில் அதை விரிவு படுத்தவும் தமது நண்பர்களுக்கு கோரிக்கை வைத்தார்.
மட்டுமின்றி தமது அறக்கட்டளையின் மூலம் 200 ஆதரவற்ற விதவைகளுக்கு தங்கும் இல்லம் ஒன்றை எழுப்பவும், 600 ஆதரவற்ற சிறுவர்களுக்கான பாடசாலை மற்றும் மருத்துவமனை ஒன்றை நிறுவவும் ஏற்பாடு செய்தார்.
இவரது நல்ல நோக்கம் கருதி பலர் நிதி உதவியும் அளித்துள்ளனர். தற்போது வரை இவரது அறக்கட்டளையில் சுமார் 736,000 பவுண்ட்ஸ் நிதி திரட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
7 மாதங்கள் மட்டுமே உயிர் வாழ்வார் என மருத்துவர்கள் அறுதியிட்டு கூறியிருந்த நிலையில் அலி பானட் 2 ஆண்டுகளுக்கும் மேலாக உயிர் வாழ்ந்து தமது 32வது வயதில் மரணமடைந்துள்ளார்.
யாழில் மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள், கணவன் கண்முன்னே மனைவியின் பெறுமதியான தங்கச் சங்கிலியை அறுத்துச் சென்ற சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் யாழ். வடமராட்சி துன்னாலைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, “குறித்த தம்பதியினர், சந்தையில் பொருட்கள் கொள்வனவில் ஈடுபட்டிருந்த நிலையில், மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பியுள்ளனர்.
இதன்போது அவர்களை பின் தொடர்ந்த அடையாளம் தெரியாத நபர்கள், பெண் அணிந்திருந்த பெறுமதியான தங்கச் சங்கிலியை அறுத்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் நெல்லியடிப் பொலிஸ் நிலையத்தில் தம்பதியினரால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், பொலிஸார் விசாரணைகள் முன்னெடுத்துள்ளனர்.
இலங்கையில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மஞ்சள் காமாலை நோய் பரவும் அபாயம் உள்ளதாக தொற்றுநோய் தொடர்பான சுகாதார கல்வி மற்றும் மேம்படுத்தல் பிரிவு பணிப்பாளர் வைத்திய கலாநிதி பபா பலிஹவர்த்தன மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சேறு நிறைந்த நிலங்களில் நிற்பதை பொதுமக்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
இந்த நோய்க்கான அறிகுறிகளான தலைவலி, காய்ச்சல், மூட்டு வலி என்பன தென்பட்டால் உடனடியாக அரச மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சைகளை பெற்றுக்கொள்ளுமாறு வைத்தியர் பபா பலிஹவர்த்தன பொதுமக்களுக்கு அறிவித்துள்ளார்.
முக்கியமாக கால்களில் காயங்கள் உள்ளவர்கள் இதனை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை தென்னிலங்கையில் வைரஸ் காய்ச்சல் தீவிரமடைந்திருந்த நிலையில், இது நாட்டின் மற்றைய பகுதிகளுக்கும் பரவும் அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இவ்வாறான சந்தர்ப்பத்தில் தற்பொழுது மஞ்சள் காமாலை நோய் பரவும் அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஒரு முறை புகைப்பிடித்தால் உங்களின் ஆயுளில் பதினான்கு நிமிடங்களை இழக்கிறீர்கள். அதே சமயத்தில் நீங்கள் பிடிக்கும் புகையால் உங்களுக்கு அருகிலுள்ள குடும்ப உறுப்பினர்களோ அல்லது நண்பர்களோ அல்லது பொதுமக்களோ அவர்களும் இந்த பதினான்கு நிமிடத்தை புகைபிடிக்காமலேயே இழக்கிறார்களாம்.
அதனால் புகைப்பிடிக்காதீர்கள். புகை பிடிக்கவும் அனுமதிக்காதீர்கள். என்று உலக புகையிலை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற விழிப்புணர்வு விழாவில் மருத்துவர்கள் தெரிவித்தனர். மே மாதம் 31 ஆம் திகதி உலக புகையிலை ஒழிப்பு தினமாக கடைபிடிக்கப்படுகிறது.
ஒவ்வொரு சிகரெட்டிலும் நான்காயிரத்திற்கும் மேற்பட்ட நச்சுப்பொருள்கள் உள்ளன. இதில் ஐம்பது நச்சுப்பொருள்கள் புற்றுநோயை உருவாக்கும் தன்மையைக் கொண்டவை. தொடர்ச்சியான புகைப்பிடிக்கும் பழக்கமுடையவர்கள், தன்னுடைய நண்பர்களிடமிருந்து அவர்கள் புகைத்த சிகரெட்டை வாங்கி புகைப்பவர்கள், ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு என்று எல்லை வகுத்துக் கொண்டு புகைப்பவர்கள் என அனைவருக்கும் பக்கவாதம், மாரடைப்பு, பார்வை திறன் குறைபாடு, வாய், நுரையீரல், குடல் மற்றும் மூச்சுக்குழாய் ஆகிய பகுதிகளில் புற்றுநோய் போன்ற பாதிப்புகள் ஏற்படும்.
புகைப்பிடிக்கும் பழக்கமுள்ளவர்களின் ஆயுள் பாதியாக குறையும். புகைபிடிப்பவர்களுக்கு ஏற்படும் அனைத்து பாதிப்புகளும், நோய்களும், புகைபிடிப்பவர்களின் அருகில் இருப்பவர்களுக்கும் ஏற்படும். இன்றைய திகதியில் தெற்காசியா முழுவதும் புகைப்பிடிக்கும் பழக்கமுள்ளவர்களின் எண்ணிக்கை 40 சதவீதத்திலிருந்து 31 சதவீதமாக குறைந்திருப்பதாக ஒரு ஆய்வு சொல்கிறது. இந்நிலை மேலும் குறையவேண்டும் என்று வைத்தியர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
‘கோரா’, இலங்கை பொலிஸ் திணைக்களத்தால் மிக உயர்வாக மதிக்கப்பட்டு அவர்களின் நம்பிக்கையை வென்றதுதான் ‘கோரா’ என்ற பொலிஸ் மோப்ப நாய். பொலிஸ் திணைக்களத்தில் எட்டு வருடங்கள் சேவை புரிந்த நிலையில் அது சில தினங்களுக்கு முன்னர் திடீரென உயிரிழந்து விட்டது.
இந்த நாயின் மோப்பம் பிடிக்கும் திறன் பொலிஸ் திணைக்களத்தை மட்டுமல்ல, ஊடகவியலாளர்களுக்கே சவால் விடுவதாக அமைந்து விடும். ஆனால், ஊடகத்துறையினரும் விருப்பத்துடன் அடிக்கடி உச்சரிக்கும் பெயர்தான் ‘கோரா’.
எட்டு வயதான இந்த மோப்ப நாய் குற்றச் செயல்களைக் கண்டுபிடிப்பதில் மிகக் கெட்டிக்காரன். அனைத்துவிதமான போதைப் பொருட்கள், இரத்தக் கறையுடன் தொடர்புடைய குற்றச் செயல்கள், கொள்ளை, திருட்டு,போன்ற விடயங்களில் சம்பந்தப்பட்டோரையும் குற்றச் செயல்களுடன் தொடர்புபட்ட ஆயுதங்கள் உட்படலான அனைத்தையும் மோப்பம் பிடித்துக் கண்டுபிடிப்பதில் மிகக் கெட்டித்தனமாகச் செயற்பட்டு பொலிஸாரின் கடமைகளை இலகுபடுத்தி விடும்.
களைக்காமல், சளைக்காமல் கிலோ மீற்றர் கணக்கில் ஓடிச் சென்று சந்தேக நபர்களைக் கௌவிப்பிடித்துக் காட்டிக் கொடுத்து விட்டு எவ்வித அகங்காரமும் பெருமையும் வெற்றி மமதையும் கொள்ளாது ஓய்வெடுக்கும்.
இப்படியான ஒரு நாய் திடீரென உயிரிழந்தமை பலராலும் அனுதாபத்துடன் பார்க்கப்படுகிறது. அதேவேளை, இன்னொரு சாராருக்கு தங்களது எதிரி ஒழிந்தான் என்ற மகிழ்ச்சிப் பெருக்கு.
சிவனொளிபாதமலைக்கு யாத்திரை செல்வோரில் பலர் போதைப் பொருட்களைக் கொண்டு செல்வது வழக்கமான விடயம். அவ்வாறானவர்கள் பொலிஸாரைக் கண்டு அச்சமடையாவிட்டாலும் இந்த ‘கோரா’ வைக் கண்டால் வியர்த்து விறுவிறுத்து போய் விடுவார்கள்.
சிவனொளிபாதமலை யாத்திரை காலத்தில் அங்கு செல்லும் அனைத்து வாகனங்களையும் இந்த நாயைக் கொண்டே பொலிஸார் சோதிப்பர். அப்போது அதன் மோப்ப சக்தியிலிருந்து எந்தப் போதைப் பொருளும் தப்பிவிட முடியாது.
இதன் மூலம் பொலிஸ் திணைக்களத்துக்கு அதிக வருமானத்தையும் இந்த நாய் பெற்றுக் கொடுத்தது.
கூகுளில் ‘கோரா மோப்ப நாய்’ என டைப் செய்து தேடினால் இந்த நாயின் சாதனைப் பட்டியலை அறிந்து கொள்ள முடியும்.
மோப்ப நடவடிக்கைகளின் போது மனிதருக்கு எவ்வித அச்சுறுத்தலையும் ஏற்படுத்தாமலும் மிகக் கண்ணியமாகவும் இந்த நாய் நடந்து கொள்ளுமாம்.
இறுதியாக ஹட்டன் பொலிஸ் வலயத்தில் 3 வருடங்கள் சேவையாற்றிய நிலையில் ‘கோரா’ இரண்டு தினங்களுக்கு முன்னர் திடீரென உயிரிழந்து விட்டது.
கண்டியிலுள்ள மோப்ப நாய்கள் பயிற்சி வழங்கும் தலைமை பொலிஸ் நிலையத்துக்கு பயிற்சிக்காக அழைத்து சென்ற போதே இது உயிரிழந்தது. இதன் மரணத்துக்கான காரணம் உடனடியாகத் தெரிய வராத நிலையில் அதன் உடல் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
இதனையடுத்து, ‘கோரா’ புற்று நோய் காரணமாகவே உயிரிழந்துள்ளதாக பேராதனைப் பல்கலைக்கழக மருத்துவ பிரிவு அறிக்கை வெளியிட்டதன் மூலம் பல சந்தேகங்களுக்கு தீர்வு கிடைத்தது.
இந்த ‘கோரா’ மோப்ப நாயின் இறுதிக்கிரியைகள் இன்று ஹட்டன் பொலிஸ் நியைத்தில் பொலிஸாரின் மரியாதையுடன் இடம்பெற்றுள்ளது.
இயக்குநர் செல்வம் சுப்பையா உலகம் முழுவதும் வாழும் தமிழர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். ராமேஸ்வரம் படத்தின் இயக்குநரான செல்வம் சுப்பையா, “வெளிநாடுகளில் வாழும் ஈழத்து உறவுகளுக்கும், உலகத்தமிழ் உறவுகளுக்கும் ‘ராமேஸ்வரம்’ (யாழ்ப்பாணத்தில் இருந்து முப்பத்தாறு மைல்) திரைப்படத்தின் இயக்குநரான நான் உங்களிடம் ஒரு வேண்டுகோள் வைக்கிறேன்.
ஈழத்தில் நமது உரிமைக்காக நாம் யுத்தம் செய்தபோது, நமது யுத்தத்தை ஆதரித்தும், சிங்களர்களை எதிர்த்தும் தமிழகத்தில் பலர் தங்களின் உயிரை தாங்களே மாய்த்துக் கொண்டனர்.
இந்தியத் தமிழன், ஈழத்தமிழன் மற்றும் உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் பாகுபாடற்று ஒடுக்கப்படும் ஒரு சிக்கலான காலகட்டத்தில் தமிழர்களாகிய நாம் வாழ்கிறோம்.
நாம் தூக்கிப் பிடித்த, வார்த்தெடுத்த, கொடிகட்டி, போஸ்டர் ஒட்டி, பாலூற்றி வளர்த்த கன்னட கண்டக்டர் நமது சூப்பர் ஸ்டாரின் தூத்துக்குடி பேச்சைக் கேட்டிருப்பீர்கள். என்ன செய்வது, ஏற்றிவிட்டது நாம்தானே? தமிழன் வஞ்சிக்கப்படுவது வழக்கமானதாகிவிட்டது.
உறவுகளே… எதிர்ப்பைக் காட்டவும், வெறுப்பை உணர்த்தவும் நாம் ஒன்றும் செய்ய வேண்டாம். பிடிக்காதவர்களையும் பிடிக்காததையும் ஏற்றுக்கொள்ள இயலாததையும் உதாசீனப்படுத்துவதே உலகின் மிகப்பெரிய தற்காப்பு ஆயுதம். ரஜினியின் திரைப்படம் பார்க்காவிட்டால் தமிழன் செத்துப்போக மாட்டான். செத்தே போனாலும்கூட தவறில்லை.
நானும், என் குடும்பமும் இனிமேல் ரஜினியின் திரைப்படங்களைப் பார்க்க மாட்டோம் என்று நான் உறுதியளிக்கிறேன். உறவுகளே… நீங்களும், உங்களைச் சார்ந்தவர்களும் இந்த உறுதியை ஏற்று, தமிழன் எதற்காகவும் மண்டியிட மாட்டான், தேவையெனில் மாண்டு போவான் என்பதை உலகிற்கும் துரோகிகளுக்கும் உணர்த்துங்கள்” என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.