யாழ்ப்பாணத்தில் பிள்ளையார் விக்கிரத்திற்கு நாணயத்தாளினால் அலங்காரம் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பான புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் நேற்று முதல் பரவி வருகிறது.
இலங்கையில் பாவனையில் உள்ள 20, 50, 100, 500, 1000, 5000 ரூபா நாணயத்தாள்களைப் பயன்படுத்தி அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
எனினும் எந்தக் கோயிலில் இவ்வாறு அலங்காரம் செய்யப்பட்டது என்பது தொடர்பான தகவல்கள் வெளியாகவில்லை.
இதேவேளை நாணயத்தாள்களைச் சேதமாக்குவது குற்றம் என்று இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ள நிலையில், இந்த அலங்கார படம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
புலம்பெயர் தமிழர்கள் வசிக்கும் நாடுகளில் ரஜினியின் காலா திரைப்படம் திரையிடப்படாது என்ற உறுதி மொழியினை திரையரங்க உரிமையாளர்கள் வழங்கியுள்ளனர்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய அம்மாவட்ட மக்கள் நூறாவது நாளாக அடித்து விரட்டப்பட்டனர். நூறாவது நாள் வன்முறை வெடித்ததனால் அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த தாக்குதலின் போது, 13இற்கும் மேற்பட்டவர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இந்நிலையில் மாநில அரசாங்கத்திற்கு அழுத்தங்கள் அதிகரித்தது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி “சமூக விரோதிகள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்தனர்.” என்றார்.
இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்னர் தூத்துக்குடிக்குச் சென்ற ரஜினி அங்கு பாதிக்கப்பட்டவர்களை பார்வையிட்டதுடன், அவர்களுக்கான நிவாரண உதவினையும் வழங்கியிருந்தார்.
இதன்பின்னர் சென்னை திரும்பிய அவர், விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, பேசிய ரஜினி, இந்தப் போராட்டத்தில் சமூக விரோதிகள் புகுந்து செயற்பட்டனர். இதனால் தான் பொலிஸார் பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். எதற்கு எடுத்தாலும் போராட்டம், போராட்டம் என்று இருந்தால் தமிழ் நாடு சுடுகாடாக மாறும் என்று மிகக் கடுமையாக பேசியிருந்தார்.
இது தமிழகம் எங்கும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. சமூக வலைத்தளங்களில் ரஜினியின் இந்தக் கருத்துக்கு கண்டனங்கள் எழுந்தன.
இதனையடுத்து புலம்பெயர் தமிழ் மக்கள் வாழும் பெரும்பாலான நாடுகளில் உள்ள திரையரங்குகளில் காலா திரைப்படம் வெளியிடக் கூடாது என்றும். மக்களின் போராட்டத்தை கொச்சைப்படுத்திய ரஜினியின் செயற்பாடு ஏற்புடையதல்ல என்று அழுத்தங்கள் வலுத்தன.
இந்நிலையில் சுவிஸ் வாழ் தமிழ் மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க அந்நாட்டில் காலா திரைப்படம் திரையிடப்படமாட்டாது என திரையரங்க உரிமையாளர்கள் உறுதியளித்துள்ளனர்.
அதேபோன்று பல கோடிகளைக் கொடுத்து படத்தை கொள்வனவு செய்யும் பட விநியோகஸ்தர்களும் தமிழ் மக்களின் வேண்டுகோள்களுக்கு மதிப்பளித்து படத்தை கொள்வனவு செய்யமாட்டோம் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
ஏற்கனவே கர்நாடக மாநிலத்தில் ரஜினியின் திரைப்படம் திரையிடப்படுவதற்கு எதிர்ப்புக்கள் வெளியாகியுள்ள நிலையில் புலம்பெயர் நாடுகளிலும் தடை குறித்து வரும் செய்தியினால் படக்குழுவினர் அதிர்ச்சியில் இருக்கின்றனர்.
வவுனியாவில் கடந்த 31.05.2018 கடத்தப்பட்ட வானிசன் என்ற 8 மாத குழந்தை புதுக்குடியிருப்பில் மீட்கப்பட்ட நிலையில் நேற்று 02.06.2018 இரவு 8.30 மணிக்கு தாயும் சேயும் வவுனியாவிற்கு பொலிசாரால் அழைத்து வரப்பட்டனர்.
குழந்தையும் தாயையும் பார்வையிட்ட வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி ரி.எம்.எஸ்.எம் தென்னக்கோன் அவர்களுடன் அளவளாவியதுடன், அவர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு பொலிசாருக்கு பணித்திருந்தார்.
குழந்தையுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் பொலிசாரின் பலத்த பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டிருந்த நிலையில் இரு பெண்களையும் குற்றத்தடுப்பு பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்ட சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்
கடத்தல் சம்பவம் இடம்பெற்றதையடுத்து வன்னி பிரதிபொலிஸ் மா அதிபரின் பணிப்புரைக்கு அமைவாக சகல பொலிஸ் நிலையங்களுக்கும் தகவல் வழங்கப்பட்டு வாகன சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்த நிலையில் நேற்று குழந்தையையும் சந்தேக நபர்களையும் மீட்டுள்ளோம்.
அத்துடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என தெரிவித்தார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த குழந்ததையின் தாயார் எனது குழந்தை துரிதமாக மீட்கப்பட்டமைக்கு வவுனியா பொலிசார்தான் காரணம் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். என்னை பழிவாங்கும் நோக்குடனே எனது குழந்தையை எனது கணவர் கடத்தினார் என தெரிவித்தார்.
வவுனியா குட்செட் வீதியில் உள்ள வீடொன்றினுள் இருந்து 8 மாத ஆண்குழந்தையான வானிஷன் எனும் குழந்தையை கடந்த (31.05.2018) அதிகாலை 2 மணியளவில் வெள்ளை வேன் ஒன்றில் வந்த நபர்கள் கடத்திச் சென்றனர்.
இச் சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வந்த நிலையில் இன்று (02.06.2018) மதியம் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலிஸார் குழந்தையினை கடத்தியவர்களை கைது செய்துள்ளதுடன் குழந்தையும் மீட்டெடுத்துள்ளனர்.
தற்போது வவுனியா பொலிஸார் மற்றும் குழந்தையின் தாயார் புதுக்குடியிருப்பு நோக்கி சென்றுள்ளனர்.
குறித்த குழந்தையின் தந்தை வெளிநாடு ஒன்றில் வசித்து வருகின்றார். தாயிற்கும் தந்தைக்கும் இடையில் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டு இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
வவுனியா கூமாங்குளம் பிள்ளையார் கோவில் வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் நேற்று (02.06.2018) இரவு 9 மணியளவில் வாள்வெட்டுத் தாக்குதலில் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் மோட்டார் சைக்கில் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
வவுனியா கூமாங்குளம் பிள்ளையார் வீதியுள்ள வீடொன்றில் இரவு 9 மணியளவில் மகேந்திரா கப்ரக வாகனத்தில் வந்த 15க்கு மேற்பட்ட இனந்தெரியாத நபர்கள் வீட்டு வளாகத்திற்குள் சென்று அங்கு நின்ற 32 வயதுடைய இளைஞன் மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொண்டதுடன் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிலினை தீயிட்டு கொழுத்தி வீட்டின் யன்னல் கண்ணாடி மீது தாக்குதல் மேற்கொண்டு வீட்டின் கதவினையுடைத்து சுமார் 7லட்சம் பெறுமதியான பணத்தினை கொள்ளையடித்துச் தப்பித்துச் சென்றுள்ளனர்.
இதன் போது வீட்டினுள் யன்னல் அருகில் உறங்கிக்கொண்டிருந்த 2 மாத கைக்குழந்தை தயார் கட்டிப்பிடித்து காப்பாற்றியுள்ளனர். அத்துடன் காயமடைந்த குறித்த இளைஞன் சிகிச்சைக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
வவுனியாவில் கடந்த 31.05.2018 கடத்தப்பட்ட வானிசன் என்ற 8 மாத குழந்தை புதுக்குடியிருப்பில் மீட்கப்பட்ட நிலையில் இன்று 02.06.2018 இரவு 8.30 மணிக்கு தாயும் சேயும் வவுனியாவிற்கு பொலிசாரால் அழைத்து வரப்பட்டனர்.
குழந்தையும் தாயையும் பார்வையிட்ட வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி ரி.எம்.எஸ்.எம் தென்னக்கோன் அவர்களுடன் அளவளாவியதுடன், அவர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு பொலிசாருக்கு பணித்திருந்தார்.
குழந்தையுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் பொலிசாரின் பலத்த பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டிருந்த நிலையில் இரு பெண்களையும் குற்றத்தடுப்பு பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்ட சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்
கடத்தல் சம்பவம் இடம்பெற்றதையடுத்து வன்னி பிரதிபொலிஸ் மா அதிபரின் பணிப்புரைக்கு அமைவாக சகல பொலிஸ் நிலையங்களுக்கும் தகவல் வழங்கப்பட்டு வாகன சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்த நிலையில் இன்று குழந்தையையும் சந்தேக நபர்களையும் மீட்டுள்ளோம்.
அத்துடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என தெரிவித்தார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த குழந்ததையின் தாயார் எனது குழந்தை துரிதமாக மீட்கப்பட்டமைக்கு வவுனியா பொலிசார்தான் காரணம் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். என்னை பழிவாங்கும் நோக்குடனே எனது குழந்தையை எனது கணவர் கடத்தினார் என தெரிவித்தார்.
வவுனியா தமிழீழ விடுதலை இயக்கத்தின் மாவட்ட பொறுப்பாளர் கிறிஸ்டி குகராஜாவின் நினைவுத்தூபி மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
வவுனியா வைரவப்புளியங்குளம் யங்ஸ்ரார் மைதானத்திற்கு அருகே அமைந்துள்ள தமிழீழ விடுதலை இயக்கத்தின் வவுனியா மாவட்ட பொறுப்பாளரும் மத்திய குழு உறுப்பினருமாக கிறிஸ்டி குகராஜா (குகன்) நினைவுதூபியின் மீது இன்று(02.06 மதியம் இனந்தெரியாத நபர்கள் கல்வீச்சு தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
அவ்விடத்தில் பரவலாக கற்கள் காணப்படுவதுடன் இக் கல்வீச்சு தாக்குதலில் நினைவுத்தூபியின் கண்ணாடி பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
கடந்த 2013 ம் ஆண்டு மாகாண சபை தேர்தல் நேரமும் இந் நினைவுத்தூபி சேதமாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
வவுனியா குட்செட் வீதியில் உள்ள வீடொன்றினுள் புகுந்து 8 மாத ஆண் குழந்தையான வானிஷன் எனும் குழந்தையை கடந்த (31.05.2018) அதிகாலை 2 மணியளவில் வெள்ளை வேன் ஒன்றில் வந்த நபர்கள் கடத்திச் சென்றனர்.
இச் சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வந்த நிலையில் இன்று (02.06.2018) மதியம் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலிஸார் குழந்தையினை கைப்பற்றியதுடன் இரண்டு பெண்களை கைது செய்துள்ளனர்
தற்போது வவுனியா பொலிஸார் மற்றும் குழந்தையின் தாயார் புதுக்குடியிருப்பு சென்று குழந்தையை மீட்டுள்ளனர்.
வவுனியா பூந்தோட்டம் அருள்மிகு ஸ்ரீ லக்ஷ்மி சமேத நரசிங்கர் ஆலய வருடார்ந்த பொங்கல் விழா எதிர்வரும் 16-06-2018 (சனிக்கிழமை) அன்று நடைபெறவுள்ளது.
பகல் நிகழ்வுகளாக பறவைக் காவடிகள், செடில் காவடிகள், பால்க்காவடிகள், பால்ச்செம்பு, தீச்சட்டி, கரகாட்டம் என்பன காலை 9 மணியளவில் வவுனியா சிந்தாமணி பிள்ளையார் ஆலயத்திலிருந்து ஆரம்பமாகி வவுனியா நகர வீதிவழியாக பூந்தோட்டம் நரசிங்கர் ஆலயத்தினை வந்தடையும். தொடர்ந்து அன்னதானம் வழங்கப்படும்.
அன்றைய தினம் இரவு நிகழ்ச்சிகளாக கலை நிகழ்ச்சிகள், கரகாட்டம், வானவேடிக்கைகள், மற்றும் சிறப்பு நிகழ்வாக தென்னிந்திய பின்னணிப் பாடகர்கள் ஜித்தின் ராஜ் (ஓமேல ஒரு கண்ணு பாடல் புகழ் ), சூப்பர் சிங்கர் புகழ் பிரியா ஜேர்சன் , கலக்கப்போவது யாரு புகழ் தகௌபீக், இவர்களுடன் இணைந்து இலங்கையின் முன்னணி இசைக்குழுவான பிரசாத்தின் ஸ்ருதிலயா இசைக்குழு வழங்கும் மாபெரும் இன்னிசை நிகழ்வும் இடம்பெறும். அத்தோடு இலங்கையின் முதல்தர ஒலி ஒளி அமைப்பாளர்களான கலிபோனியா சவுண்ட்ஸ் நிறுவனத்தினரின் அதிரடி ஒலி ஒளி மற்றும் கண்கவர் மின்விளக்குகளுடன் இவ் இசை நிகழ்ச்சி இடம்பெறவுள்ளமை விசேட அம்சமாகும்.
இந்நிகழ்வுகள் அனைத்தையும் இணையத்தளம் மூலமாக நாள் முழுவதும் நேரடி ஒளிபரப்பினை மேற்கொள்ளுவதற்கான ஏற்பாடுகளை வவுனியாநெற் இணையத்தளக் குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
தொடர்ச்சியாக ஐந்து ஆண்டுகளாக இவ் ஆலயத்தின் பொங்கல் விழா நிகழ்வுகளை வெற்றிகரமாக நேரடியாக ஒளிபரப்பிய வவுனியா நெற் இணையத்தளம் இம்முறை நவீன ஒலி, ஒளி சாதனங்களுடன் மிகத் துல்லியமான HD தரத்துடன் நேரடி ஒளிபரப்பினை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது.
ஸ்கொட்லாந்தில் 150 உயரம் கொண்ட ராட்சஷ கிரேன் மீது நின்று கொண்டு காதல் ஜோடி திருமணம் செய்து கொண்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
பேரி என்ற இளைஞரும், கேட் என்ற பெண்ணும் காதலித்து வந்த நிலையில் திருமணம் செய்ய முடிவெடுத்தார்கள்.
எல்லோரையும் போல சாதாரணமாக திருமணம் செய்யக்கூடாது என முடிவெடுத்த அவர்கள் வித்தியாசமான முறையை கையாண்டனர்.
அதன்படி 150 அடி உயரம் கொண்ட கிரேன் மீது ஏறி நின்று திருமணம் செய்ய முடிவெடுத்தனர்.
இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில் நண்பர்கள் புடைச்சூழ திருமணம் செய்து கொண்டனர். திருமணத்துக்கு பின்னர் புதுமண ஜோடிகள் முத்தம் கொடுத்து மகிழ்ந்தார்கள்.
இது குறித்து கேட் கூறுகையில், இந்த வித்தியாச திருமண யோசனை என் கணவருடையது தான்.
அவர் எல்லாவற்றையும் புதிய கோணத்தில் தான் செய்யவிரும்புவார் என கூறியுள்ளார்.
தம்பதிகள் திருமணம் செய்ய உதவியாக இருந்த கிரேன் நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்தது எனவும் ஸ்காட்லாந்தின் மிகவும் தனித்துவமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக திகழ்ந்து வரும் இடத்தில் கிரேன் வைக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
சென்னையில் முதல் திருமண நாளன்று காதல் மனைவியை குத்திக் கொன்று விட்டு கணவனும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் நடந்துள்ளது.
ஆவடி அருகே பட்டாபிராமம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன், இவரது மனைவி மதுமிதா. இவர்கள் கடந்தாண்டு யூன் மாதம் 1ம் திகதி பெற்றோர்கள் சம்மதத்துடன் காதல் திருமணம் செய்து கொண்டனர்.
மதுமிதா தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த நிலையில், வெங்கடேசன் வேலை இல்லாமல் இருந்துள்ளார். இதனால் இருவருக்கும் கருத்து வேறுபாடு இருந்துள்ளது, நேற்றைய தினம் திருமண நாளின் போது இதேபோன்று வாய்த்தகராறு முற்றிய நிலையில், கோபத்தில் வெங்கடேசன் மதுமிதாவை குத்திக் கொன்றுள்ளார்.
மனைவியை கொன்று விட்ட பயத்தில் தற்கொலைக்கு முயன்றுள்ளார், வலி தாங்க முடியாமல் வெங்கடேசன் கதறித்துடிக்க விரைந்து வந்த அக்கம்பக்கத்தினர் இருவரையும் மீட்டுள்ளனர்.
இதனை தொடர்ந்து பட்டாபிராமம் பொலிசார் இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
வழியிலேயே மதுமிதா உயிரிழந்த நிலையில், வெங்கடேசனுக்கு சிகிச்சை நடந்து வருகிறது, தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
மறைந்த நடிகர் சந்தனின் மனைவி மன அழுத்தத்தால் அசிட் குடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் தற்போது உயிரிழந்துள்ளார்.
கன்னட திரையுலகில் நடிகராகவும், தொலைக்காட்சி தொகுப்பாளராகவும் வலம் வந்த சந்தன் கடந்த வாரம் கார் விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.
கணவர் மரணத்தால் மன அழுத்தத்தில் இருந்த அவர் மனைவி மீனா சில தினங்களுக்கு முன்னர் தனது மகன் துஷர் (13) கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு தானும் ஆசிட் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மீனாவுக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி தற்போது பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
சந்தனின் மொத்த குடும்பமும் உயிரிழந்துள்ளது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
தமிழ்நாட்டில் காதல் திருமணம் செய்து கொண்ட பெண் கணவரால் கழுத்து அறுத்து கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்ரீபெரும்புதூரை சேர்ந்த பானுபிரியா, கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் சதீஷ் என்ற இளைஞரை பெற்றோர் எதிர்ப்பை மீறி காதலித்து சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டார்.
சில மாதங்கள் கடந்த நிலையில் மகளின் எதிர்காலம் கருதி அவர்களது திருமணத்தை பானுபிரியாவின் பெற்றோர் ஏற்றுக் கொண்டனர். மகளையும், மருமகனையும் தங்கள் வீட்டின் முதல் மாடியில் குடிவைத்தனர்.
வீட்டோடு மாப்பிள்ளையான சதீஷ் வேலைக்கு செல்லாமல், மது அருந்திவிட்டு போதையில் ஊதாரியாக சுற்றி வந்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் வீட்டு சுமை பானுப்பிரியா தலையில் விழுந்த நிலையில் அவர் வேலைக்கு சென்று சம்பாதித்து குடும்பத்தை காப்பாற்றினார்.
இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் மாடியிலிருந்து வெகுநேரமாக பானுப்பிரியா கீழே வரவில்லை.
இதனால் சந்தேகமடைந்த பெற்றோர் மேலே சென்று பார்த்த போது அங்கு பானுப்பிரியா கத்தியால் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில், ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தார்.
சம்பவம் குறித்து பொலிசாருக்கு தகவல் தரப்பட்ட நிலையில் பானுப்பிரியாவை கொன்றது சதீஷ் தான் என தெரியவந்தது. அவரை பொலிசார் கைது செய்து விசாரித்ததில் திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.
மது மற்றும் கஞ்சா போதைக்கு அடிமையான சதீஷ், தனது அன்றாட செலவுக்கு மனைவியின் கையை எதிர்பார்த்துள்ளார். மேலும், உடன் வேலை செய்வோரிடம் பானுப்பிரியா பேசுவதை கண்டு பானுபிரியாவின் நடத்தை மேல் சதீஷுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் பானுப்பிரியாவை அடித்து உதைப்பதை வாடிக்கையாக்கியதாக கூறப்படுகின்றது.
சம்பவதன்று வேலை முடிந்து வீட்டுக்கு வந்த பானுப்பிரியாவிடம் ஏற்பட்ட தகராறில் அவர் கழுத்தை பெல்டால் இறுக்கி சதீஷ் கொன்றுள்ளார்.
மேலும், அவர் பிழைத்து கொள்ளக்கூடாது என்பதற்காக கத்தியாலும் கழுத்தை அறுத்தது தெரியவந்துள்ளது.
காஞ்சிபுரத்தில் எரித்து கொல்லப்பட்ட இளம்பெண் கேரள மாணவி அல்ல என்பது தெரிய வந்துள்ளதால் வழக்கில் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
கேரளாவை சேர்ந்த ஜேசா எனும் கல்லூரி மாணவியை 50 நாட்களாக காணவில்லை. தேடுதலில் சிரமம் ஏற்பட்டதால் ஜேசா பற்றிய தகவல் கொடுப்பவர்களுக்கு 2 லட்ச ரூபாய் பரிசு கொடுப்பதாக கேரளா அரசு அறிவித்திருந்தது. இருப்பினும் வழக்கில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
இந்நிலையில் காஞ்சிபுரம் செங்கல்பட்டு அருகே பழவேலி எனும் ஊரில் கடந்த மே மதம் 28ஆம் தேதி இளம்பெண் ஒருவர் எரித்து கொலை செய்யப்பட்டிருந்தார்.
இதுபற்றி வழக்கு பதிவு செய்த செங்கல்பட்டு காவல்துறை ஒருவேளை இறந்தவர் ஜேசாவாக இருக்கலாம் என சந்தேகித்து கேரளா போலீசாரை காஞ்சிபுரம் வரவழைத்தனர்.
இருப்பினும் அவரது உடலை அடையாளம் காண வந்த அவரது அண்ணன் ஜேசன் எரிந்து கிடந்த பெண்ணின் சடலத்தை பார்த்து இவர் தனது சகோதரி ஜேசா இல்லை என்று கூறினார். இருப்பினும் DNA சோதனை மேற்கொள்ள தான் உடன் படுவதாக சகோதரர் கூறியிருக்கிறார்.
இதனை அடுத்து இந்த வழக்கில் புது திருப்பம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் எரித்து கொலை செய்யப்பட்ட பெண் யார் என தமிழக பொலிஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விக்கெட் கீப்பர் சாஹா விலகிய நிலையில் தினேஷ் கார்த்திக் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஆப்கானிஸ்தான் அணிக்கு ஐசிசி முதல்முறையாக டெஸ்ட் கிரிக்கெட் அந்தஸ்து வழங்கியுள்ள நிலையில் தனது முதல் போட்டியை இந்தியாவுக்கு எதிராக விளையாடவுள்ளது. இப்போட்டி வரும் 14-ஆம் திகதி பெங்களூரில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் ஐபிஎல் தொடரில் இந்திய வீரர் சாஹாவுக்கு விரலில் காயம் ஏற்பட்ட நிலையில் அவர் இந்த டெஸ்ட் தொடரிலிருந்து விலகியுள்ளார்.
இதையடுத்து தினேஷ் கார்த்திக் அவருக்கு பதிலாக அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் கலக்கிய தினேஷ் கார்த்திக் ஆப்கானிஸ்தான் தொடரிலும் அசத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது
இந்தியாவில் தம்பியுடன் சேர்ந்து கணவரையும், மாமனாரையும் கொலை செய்த பெண்ணின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுடெல்லியை சேர்ந்தவர் சிய ராம் (65). இவர் மகன் வினோத் (25) திருமணமான வினோத் தனது மனைவி பூஜா மற்றும் இரு குழந்தைகளுடன் வசித்து வந்தார்.
இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் சிய ராமும், வினோத்தும் தங்கள் வீட்டு பக்கத்தில் உள்ள முட்புதரில் காயங்களுடன் சடலமாக கிடந்துள்ளனர்.
சடலத்தை கைப்பற்றிய பொலிசார் இது குறித்து பூஜாவிடம் விசாரித்தனர். முதலில் திருடர்கள் தன்னுடயை கணவர் மற்றும் மாமனாரை கொலை செய்திருக்கலாம் என பூஜா கூறினார்.
ஆனால் அவர் பேச்சில் சந்தேகமடைந்த பொலிசார் அவரிடம் நடத்திய விசாரணையில் இருவரையும் கொன்றதை ஒப்பு கொண்டார்.
பூஜா அளித்துள்ள வாக்குமூலத்தில், எனக்கும் என் உறவுக்கார இளைஞர் அஜய் என்பவருக்கும் தொடர்பு ஏற்பட்டது. இதை என் கணவர் கண்டுப்பிடித்த நிலையில் எங்களுக்குள் அடிக்கடி சண்டை ஏற்பட்டது.
இரு தினங்களுக்கு முன்னர் நான் அஜயுடன் போனில் பேசுவதை பார்த்த சியராமும், வினோத்தும் என்னை கண்டித்ததோடு அடித்து உதைத்தனர்.
இதையடுத்து என் தம்பி கிம்பலுடன் சேர்ந்து இருவரையும் கொல்ல முடிவெடுத்தேன்.
அதன்படி வீட்டில் தனியாக இருந்த மாமனார் சியராமை தோசை கல்லால் அடித்து பின்னர் கழுத்தை நெரித்து கொன்றோம்.
பின்னர் வீட்டுக்கு போதையில் வந்த வினோத் தலையில் கல்லை போட்டு கொன்றுவிட்டு இரு சடலங்களையும் முட்புதரில் போட்டோம் என கூறியுள்ளார். இதையடுத்து பூஜாவையும், கிம்பலையும் பொலிசார் கைது செய்துள்ளனர்.
வவுனியா ஹொரவப்பொத்தானை வீதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையமொன்று நகரசபையின் அனுமதியின்றி கட்டப்பட்டுள்ளதாக தெரிவித்து கடந்த 22.03.2018 அன்று வவுனியா நகர சபை செயலாளரின் தலைமையில் குறித்த கட்டட வேலைகள் நிறுத்தப்பட்டதுடன் கட்டட வேலைகளிற்காக பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் கைப்பற்றப்பட்டன.
இந் நிலையில் இன்றைய தினம் (02.06.2018) மூடப்பட்டிருந்த வர்த்தக நிலையம் திறக்கப்பட்டு வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
வவுனியா நகரசபையில் பொதுமகன் ஒருவர் முறைப்பாடு செய்தமையடுத்து குறித்த வர்த்தக நிலையத்திற்கு விரைந்த வவுனியா நகரசபை ஊழியர்கள் குறித்த வர்த்தக நிலையத்தினை மூடுமாறு உத்தரவு பிறப்பித்தனர். அதனையடுத்து குறித்த வர்த்தக நிலையம் மூடப்பட்டது.
இவ் விடயம் தொடர்பாக வவுனியா நகரசபையின் தலைவர் கெளதமனிடம் வினவிய போது, இவ் வர்த்தக நிலையத்திற்கு நாங்கள் இதுவரையில் அனுமதி வழங்கவில்லை. இன்று இவ் வர்த்தக நிலையம் அத்து மீறியே திறக்கப்பட்டுள்ளது. இன்றையதினம் சனிக்கிழமை என்பதனால் வருகின்ற திங்கட்கிழமை குறித்த வர்த்தக நிலைய உரிமையாளர் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.