எரித்துக் கொல்லப்பட்ட பெண் : காதலன் கைது!!

செங்கல்பட்டு அருகே எரித்து கொலை செய்யப்பட்டவர் சென்னை பெண் என்பது தெரிய வந்துள்ளது. இதனை அடுத்து அவரது காதலன் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

கடந்த மே 28ஆம் தேதி காஞ்சிபுரம் செங்கல்பட்டு அருகே பழவேலி என்கிற ஊரில் அடையாளம் தெரியாத நிலையில் பெண்ஒருவர் எரித்து கொல்லப்பட்டு கிடந்தார்.

இந்நிலையில் அது கேரளாவில் காணாமல் போன மாணவியாக இருக்கலாம் என்கிற நோக்கில் செங்கல்பட்டு போலீசார் கேரள போலீசாரை வரவழைத்தனர்.

அவர் கேரள மாணவி இல்லை என்பது உறுதியான நிலையில் எரித்து கொல்லப்பட்ட பெண் சென்னை அண்ணா நகரை சேர்ந்தவர் என்பது தெரிய வந்துள்ளது. இந்த வழக்கில் கொலை செய்த குற்றத்திற்காக காதலன் கைது செய்யப்பட்ட நிலையில் கொலைக்கு உதவி செய்த மற்றொரு இளைஞனையும் கைது செய்திருக்கின்றனர்.

இறந்த பெண்ணின் பெயர் பொக்கிஷ மேரி என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. கொலையின் நோக்கம் குறித்த விசாரணை மேலும் தொடர்கிறது.

கர்ப்பிணி மனைவியை கொடூரமாக கொன்ற கணவன் : அடுத்து செய்த அதிர்ச்சி செயல்!!

இந்தியாவில் குழந்தை கண்முன்னால் கர்ப்பிணி மனைவியை கொலை செய்துவிட்டு கையை அறுத்து தற்கொலைக்கு முயன்ற கணவரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுடெல்லியை சேர்ந்தவர் உமேஷ் குப்தா. இவர் மனைவி ஜோதி (26). தம்பதிக்கு இரண்டு வயதில் பெண் குழந்தை உள்ள நிலையில் ஜோதி மீண்டும் கர்ப்பமானார்.
குடிபழக்கத்துக்கு அடிமையான உமேஷ் அடிக்கடி மனைவியிடம் சண்டை போட்டு வந்துள்ளார்.

இந்நிலையில் இன்று காலை மீண்டும் உமேஷுக்கும், ஜோதிக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரமடைந்த உமேஷ் கர்ப்பிணி என்றும் பாராமல் ஜோதியின் கழுத்தை நெரித்து துடிதுடிக்க கொன்றுள்ளார்.

பின்னர் தனது மணிக்கட்டை கத்தியால் அறுத்து கொண்டு ரத்த வெள்ளத்தில் சரிந்துள்ளார். இதையெல்லாம் பார்த்து கொண்டிருந்த தம்பதியின் குழந்தை அழுதுள்ளது.

அழுகை சத்தம் கேட்டு அருகிலிருந்த உறவினர்கள் வந்து பார்த்த போது இருவரும் கீழே கிடந்துள்ளனர்.

உடனடியாக இருவரும் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் ஜோதி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதை மருத்துவர்கள் உறுதி செய்தனர்.
உமேஷ் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

உமேஷும், ஜோதியும் அடிக்கடி பணம் தொடர்பான விடயத்துக்காக சண்டை போட்டு கொள்வார்கள் என தெரியவந்துள்ளது. சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள பொலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இரு பிள்ளைகளை கொன்று தாய் தற்கொலை!!

தமிழகத்தில் சாப்பாட்டில் விஷம் கலந்து கொண்டு இரு பிள்ளைகளை கொன்ற தாயின் செயல் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோட்டின் சென்னிமலை எம்பிஎம் காலனியை சேர்ந்தவர்கள் உமா மகேஸ்வரி- சுந்தர்ராஜூ தம்பதி.
இவர்களுக்கு 14 வயதில் யுவராஜா என்ற மகனும், 12 வயதில் பூஜா என்ற மகளும் இருக்கிறார்கள்.

கணவன்- மனைவி கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழ உமா மகேஸ்வரி பிள்ளைகளுடன் தனியாக வசித்து வந்தார்.

அப்போது அதே பகுதியை சேர்ந்த சத்தியநாதன் என்பவருடன் உமா மகேஸ்வரிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று இருவருக்கும் சண்டை எழ, அழுதுக் கொண்டிருந்த உமா மகேஸ்வரி மன உளைச்சலில் குழந்தைகளை கொன்றுவிட்டு தற்கொலை செய்ய முடிவெடுத்தார்.

இதன்படி நேற்றிரவு 11 மணியளவில் விஷ சாப்பாட்டினை குழந்தைகளுக்கு கொடுத்துவிட்டு தானும் சாப்பிட்டுள்ளார்.

ஒரு கட்டத்தில் விஷத் தாக்கம் தாங்காமல் உமா மகேஸ்வரி கதறி அக்கம்பக்கத்தினர் மூன்று பேரையும் மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கே சிகிச்சை பலனின்றி உமா மகேஸ்வரி, யுவராஜ் இறந்து போக பூஜா உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார், வழக்கு பதிவு செய்த சென்னிமலை பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நான் உன்னை காதலிக்கிறேன் : பள்ளி மாணவியிடம் காதலை சொன்ன ஆசியருக்கு நேர்ந்த கதி!!

இந்தியாவில் பள்ளி மாணவியிடம் ஆசியர் ஒருவர் காதலிப்பதாக கூறியதால், அவரை சக மாணவர்கள் அடித்து உதைத்துள்ளனர்.

மகாராஷ்டிராவின் நாசிக் நகரில் உள்ள பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வரும் ஒருவர், அங்கு படிக்கும் பள்ளி மாணவியிடம் நான் உன்னை காதலிப்பதாக கூறியுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த அந்த மாணவி உடனடியாக தனது நண்பர்களிடம் இது குறித்து கூறியுள்ளார். இதைக் கேட்டு ஆத்திரமடைந்த அந்த மாணவர்கள் உடனடியாக அந்த ஆசிரியரை கண்மூடித்தனமாக அடித்து உதைத்துள்ளனர்.

இது குறித்த தகவல் பொலிசாருக்கு உடனடியாக தெரிவிக்கப்பட்டதால், அவர்கள் பள்ளிக்கு விரைந்து மாணவர்களிடமிருந்து ஆசிரியரை மீட்டு வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஒருவார காதலை நம்பி கொழும்பிலிருந்து சென்ற பெண்ணுக்கு ஏற்பட்டுள்ள பரிதாப நிலை!!

திருகோணமலை – உப்புவெளி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் தனது காதலியிடமிருந்து 16 இலட்சம் ரூபாவை திருடிய காதலன் தலைமறைவாகியுள்ளார்.

கையடக்க தொலைபேசி மூலம் ஒரு வாரமாக காதலித்து வந்த கொழும்பு – பேலியகொட, கெமுனு மாவத்தையைச் சேர்ந்த 38 வயதுடைய பெண்ணுக்கே இந்த நிலை ஏற்பட்டுள்ளது.இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

கொழும்பு – பேலியகொட, கெமுனு மாவத்தையைச் சேர்ந்த குறித்த பெண், நபர் ஒருவரை தொலைபேசி மூலம் ஒருவார காலமாக காதலித்து வந்துள்ளார்.

இதையடுத்து இருவரும் கொழும்பிலிருந்து திருகோணமலையை சுற்றிப்பார்க்க காரில் சென்றுள்ளனர். திருகோணமலை, அலஸ்தோட்டம் பகுதியில் பிரபல ஹோட்டல் ஒன்றில் இரவு வேளையில் இருவரும் மது அருந்தி விட்டு உறங்கியுள்ளனர்.

பின்னர் மறுநாள் காலை எழும்பி பார்த்த போது காதலரை காணவில்லை எனவும், தன்னிடம் இருந்த 16 இலட்சம் பணத்தை திருடிவிட்டு சென்றுள்ளதாகவும் பாதிக்கப்பட்ட பெண் உப்புவெளி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

குறித்த பெண்ணிடம் அழைத்து வந்தவரின் கையடக்க தொலைபேசி மாத்திரமே இருந்ததாகவும் அவர் பற்றிய விபரங்கள் அதில் இல்லை எனவும் பொலிஸ் வாக்குமூலத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனாலும் உப்புவெளி பொலிஸார் அந்த முறைப்பாட்டை அடுத்து ஹோட்டலில் பொறுத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கெமராவை பயன்படுத்தி விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

கையடக்கத் தொலைபேசி மூலமாகவோ அல்லது வட்சப், வைபர் மற்றும் இணையங்களின் மூலம் காதலிக்கும் பெண்கள், ஆண்கள் விடயத்தில் கவனமாக இருக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

காணாமல்போன நபர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு!!

ஹொரவபொத்தானை குளத்திற்கு அருகிலுள்ள மரமொன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்ட சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது. குறித்த சடலம் நேற்று மாலை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், ஹொரவபொத்தானை – மெதவாச்சி சந்தியில் வசித்து வந்த போகுல லியனகே சுமேத பெரேரா (31 வயது) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

தனது சகோதரரை காணவில்லையென ஹொரவபொத்தானை பொலிஸ் நிலையத்தில் கடந்த 30ஆம் திகதி சுதந்த பெரேராவினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் குளத்திற்கு அருகிலுள்ள மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமொன்று காணப்படுவதாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், சகோதரரை காணவில்லையென முறைப்பாடு செய்த உறவினர்களிடம் காண்பித்து அந்த சடலம் போகுல லியனகே சுமேத பெரேராவினுடையது என உறுதிப்படுத்தியுள்ளனர்.

மேலும் தற்பொழுது சடலம் அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான விசாரணைகளை ஹொரவபொத்தானை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

நீரில் மூழ்கி நபரொருவர் பரிதாபமாகப் பலி!!

வெலிகந்த – போவத்த பிரதேசத்தில் நபரொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். போவத்த எப்.சி கால்வாயில் நேற்று நீராட சென்ற வேளையே அவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நியபேபொல – மெதவல பிரதேசத்தை சேர்ந்த 59 வயதான நபரே உயிரிழந்துள்ள நிலையில், பிரதேச பரிசோதனை இன்றைய தினம் இடம்பெறவுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிகந்த காவல்துறை மேற்கொண்டு வருகிறது.  போவத்த எப்.சி கால்வாயில் நேற்று நீராட சென்ற வேளையே அவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

10 வயதுச் சிறுமியை முச்சக்கர வண்டியிலிருந்து தள்ளிவிட்ட இளைஞர்கள்!!

திருகோணமலை – உப்புவெளி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் பத்து வயது சிறுமி ஒருவரை முச்சக்கர வண்டியில் ஏற்றிச் சென்று சென்று தள்ளி விட்ட இரு சந்தேகநபர்களையும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதன்படி குறித்த சந்தேகநபர்களை இம்மாதம் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் எம்.எச்.எம்.ஹம்ஸா நேற்று உத்தரவிட்டார்.

ஆத்திமோட்டை, எட்டாம் வட்டாரம், நிலாவெளி, பகுதியைச் சேர்ந்த 20, மற்றும் 21 வயதுடைய இருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக உப்புவெளி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த சிறுமி தனியார் வகுப்புக்குச் சென்று விட்டு, வீட்டுக்கு சென்ற வேளையில் முச்சக்கர வண்டியில் ஏற்றிச் சென்று தள்ளி விட்டுள்ளதாக சந்தேகநபர்களுக்கெதிராக சிறுமியின் பெற்றோர்களினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த முறைப்பாட்டை அடுத்து குறித்த சந்தேகநபர்கள் 1ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையை உலுக்கிய காதல் : பரிதாபமாக உயிரிழந்த காதலி : உடல் அவயங்களை இழந்த காதலன்!!

காலியில் பாடசாலை மாணவர்கள் இருவர் தற்கொலை செய்து கொள்ள முயன்றமை அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

பாடசாலை மாணவி ஒருவரும் மாணவன் ஒருவரும் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொள்ள முயற்சித்துள்ளனர். இந்த தற்கொலை முயற்சியில் பாடசாலை மாணவி உயிரிழந்த நிலையில் மாணவன் படுகாயமடைந்து வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டார்.

கொழும்பில் இருந்து காலி நோக்கி பயணித்த ரயிலில் 15 வயதுடைய மாணவி மற்றும் மாணவனே இவ்வாறு தற்கொலை செய்து கொள்ள முயற்சித்துள்ளனர்.

ஹிக்கடுவ, வெவல்கொட சந்தியில் கடந்த முதலாம் திகதி இரவு 11 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த அனர்த்தத்தில் 15 வயதான சானி சசிகலா என்ற மாதம்பே, அம்பலங்கொட பிரதேசத்தை சேர்ந்த மாணவியே உயிரிழந்துள்ளார்.

விபத்தில் காயமடைந்த மாணவனின் ஒரு கை உடலை விட்டு பிரிந்துள்ள நிலையில், முழங்காலுக்கு கீழ் கால்கள் நீக்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலை தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சம்பவம் தொடர்பில் உயிரிழந்த மாணவியின் தாயார் மனோஷா ஜயராணி டி சில்வப சாட்சி வழங்கியுள்ளார்.

“உயிரிழந்திருப்பது எனது ஒரே மகள். அவர் 10ஆம் வகுப்பில் கல்வி கற்கின்றார். கற்கை நடவடிக்கைகளில் சிறந்த நிலையில் காணப்பட்டார். கடந்த காலங்களில் மகளிடம் கையடக்க தொலைபேசி ஒன்று இருந்ததனை அவதானித்தேன். நான் இது தொடர்பில் அவரிடம் கேட்ட போது மதுசங்க என்ற காதலன் இருப்பதாக கூறினார்.

பின்னர் நான் அவரை எச்சரித்தேன். தொலைபேசியையும் அவரிடம் இருந்து வாங்கினேன். பின்னர் 31ஆம் திகதி இரவு மகளின் கையில் இன்னுமொரு தொலைபேசியை கண்டேன். நான் அதனையும் எடுத்தேன். முதலாம் திகதி காலை அவர் பாடசாலை செல்ல ஆயத்தமாகினார். பாடசாலை சீருடைக்குள் கருப்பு நிற ஆடை ஒன்றை அவர் அணிந்திருந்தார்.

அதன் கண்ட நான் கண்டித்தேன். மகள் கறுப்பு நிற ஆடையை நீக்கினார். பின்னர் பாடசாலைக்கு சென்றார். கணவர் வீட்டிற்கு வந்தவுடன் நான் இந்த விடயங்களை அவரிடம் கூறினேன். இதனால் கணவர் பாடசாலைக்கு சென்றுள்ளார்.

பாடசாலை ஆசிரியருடன் பேசும் மகள் பாடசாலைக்கு வரவில்லை என்பதனை அறிந்து கொண்டோம். மகளை தேட ஆரம்பித்தோம். கஹவ சந்தியில் உள்ள கடற்பரையில் அவரது பாடசாலை புத்தக பையை மீட்டோம்.

கணவர் மகளை தேடிச் சென்றார். இதன் போது மகள் மற்றும் சிறுவன் ஒருவர் ரயிலில் பாய்ந்த விடயத்தை அறிந்து கொண்டோம்… என தாயார் குறிப்பிட்டுள்ளார்.

சிறுவர்களான இருவரும் தற்கொலைக்கு முயன்றமை அந்தப் பகுதி மக்களிடமே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

கிரிக்கெட் விளையாடுவதற்காக மாணவர்கள் செய்த ஆபத்தான செயல் : பற்றி எரிந்த மைதானம்!!

 

களுத்துறை மாவட்டத்தில் உள்ள மைதானத்தில் கிரிக்கெட் விளையாடுவதற்காக மாணவர்கள் செய்த ஆபத்தான செயல் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

குறித்த பகுதியில் மழை பெய்த காரணத்தினால் மைதானத்திர் நீர் நிரம்பி ஈரமாக இருந்துள்ளது. நிலம் ஈரமாக இருந்தால் கிரிக்கட் விளையாடுவதற்கு சிரமம் ஏற்படும் என்ற காரணத்தினால், குறித்த நிலத்தை உலர வைக்கும் முயற்சியில் மாணவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இதற்காக குறித்த மைதானத்திற்கு எரி பொருளை ஊற்றி அதை பற்ற வைத்துள்ளார்கள்.

இதன்போது மைதானம் பற்றி எரியும் காணொளி சமூகவலைத்தளங்களில் பரவுவதுடன், இவர்கள் ஆபத்தான முறையை பின்பற்றுவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

 

வடக்கில் தொடரும் சமூக விரோதச் செயல்கள்!!

வடக்கில் முன்னர் ஒருபோதும் இல்லாதவாறு குற்றச் செயல்கள் அதிகரித்து வருவதாக வடபகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இதனால் நிம்மதியாக வாழ முடியாத சூழலே உருவாகி வருவதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

வாள்வெட்டுக்களின் அட்டகாசங்கள் வழிப்பறி கொள்ளையர்களின் அச்சுறுத்தல்கள் போதைவஸ்துக்கு அடிமையான இளைஞர்களின் சமூக விரோதச் செயல்கள் என பல்வேறு குற்றச் செயல்கள் அன்றாடம் அரங்கேறி வருவதாக தமிழ் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இவை அனைத்துக்கும் மேலாக வவுனியாவில் இடம்பெற்ற கடத்தல் சம்பவம் ஒன்று பெரும் பீதியை கிளப்பியுள்ளது. வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த எட்டு மாதக் ஆண்குழந்தை ஒன்று வானில் வந்த குழுவினரால் கடத்திச் செல்லப்பட்டுள்ளது.

வவுனியா குட்ஷெட் வீதி முதலாம் ஒழுங்கையில் வியாழனன்று அதிகாலை இரண்டு மணியளவில் இச்சம்பவம் அரங்கேறியுள்ளது. லண்டனில் உள்ள கணவனே இந்தக் கடத்தலை மேற்கொண்டுள்ளதாக அவரது மனைவி பொலிஸில் முறையிட்டுள்ளார்.

இது ஒரு குடும்பப் பிரச்சினை என்பதற்கு அப்பால் சமூக ரீதியில் அதன் தாக்கம் குறித்து சிந்திப்பது அவசியமாகின்றது. ஒரு சிலர் பணபலத்தால் எதையும் செய்ய முடியும் என்ற மமதையில் இவ்வாறான சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

எவ்வாறிருப்பினும் உறங்கிக் கொண்டிருந்த எட்டுமாதக் குழந்தை ஒன்று வான் ஒன்றில் வந்தவர்களால் கடத்திச் செல்லப்பட்ட விடயம் மிகவும் கொடூரமானது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இத்தகைய சக்திகள் பணத்துக்காகவும் இதர சலுகைகளுக்காகவும் எதையும் எப்பொழுதம் செய்யும் என்பதையே இது எடுத்துக் காட்டுகிறது.

எனவே சம்பந்தப்பட்ட கடத்தல் காரர்களை பாதுகாப்புக்கு பொறுப்பானவர்கள் துரிதமாகக் கண்டுபிடித்து அவர்களை சட்டத்தின் முன்னிறுத்த வேண்டியது அவர்களின் பொறுப்பாகும்.

இதேவேளை வடக்கில் இடம்பெறும் அதிகளவிலான குற்றச்செயல்களுக்கு வெளிநாடுகளிலிருந்து அனுப்பி வைக்கப்படும் பணமே காரணம் என பொதுவான குற்றச்சாட்டொன்று இருந்து வருகின்றது.

குறிப்பாக வெளிநாடுகளில் மிகுந்த கஷ்டங்களுக்கும் நெருக்கடிகளுக்கும் மத்தியில் உழைக்கும் பணத்தை தங்கள் உறவினர்களுக்கு அவர்கள் அனுப்பி வைக்கின்றனர். எனினும் பெரும்பாலான இளைஞர்கள் தமது சொகுசு வாழ்க்கைக்கு அந்தப் பணத்தை வாரி இறைப்பதுடன் சர்வசாதாரணமாக குற்றச் செயல்களிலும் ஈடுபடுகின்றனர் என பெரும்பாலான வடபகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

அநேகமான இளைஞர், யுவதிகள் இன்று புதிய புதிய மோட்டார் சைக்கிள்களில் பவனி வருவதுடன் மது மற்றும் போதைவஸ்துக்கு அடிமையாவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் பெற்றோர் பலர் சொல்லொண்ணா துன்பங்களுக்கும் கஷ்டங்களுக்கும் ஆளாகியுள்ளனர்.

வளர்ந்த பிள்ளைகளை எவ்வாறு நல்வழிப்படுத்துவது சரியான பாதையில் அவர்களை இட்டுச் செல்வது என்ற மனப்போராட்டங்களுக்கும் ஆளாகியுள்ளனர்.

விரும்பியோ விரும்பாமலோ தமிழீழ விடுதலைப் புலிகளின் காலகட்டத்தில் யுத்தம் நிலவிய போதிலும் சட்டவிரோத செயற்பாடுகள் கட்டுக்கடங்கிய நிலையிலேயே காணப்பட்டன.

புலிகளின் கட்டுப்பாடுகள் காரணமாக இளைஞர், யுவதிகள் தன்னிச்சையான செயற்பாடுகளில் ஈடுபட பெரிதும் தயங்கினர். குறிப்பாக வாள்வெட்டுகள், கோஷ்டி சண்டைகள், போதைவஸ்து வியாபாரம் என்பன இடம்டபெற்றமைக்கான சான்றுகள் இல்லையென்றே கூறலாம்.

எனினும் வடக்கில் இன்று இவையனைத்தும் சர்வசாதாரணமாக காணப்படுகின்றன. நாட்டுக்குள் கேரள கஞ்சா கடத்தி வரப்படுவதற்கான பிரதான மார்க்கமாக வடபகுதி இருந்து வருவது மிகவும் கவலைக்கும் வேதனைக்கும் உரிய செயலாகும்.

குறிப்பாக தலைமன்னார் மார்க்கமாக வந்தடையும் கேரள கஞ்சா அங்கிருந்து யாழ்ப்பாணத்துக்கு கொண்டு வரப்பட்டு இதர பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுவதாக கூறப்படுகின்றது.

அந்தவகையில் கடந்த காலங்களில் பெருந்தொகையான கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டது. அதுமாத்திரமன்றி கோடிக்கணக்கான ரூபா பெறுமதியான கஞ்சா மூட்டைகள் கடலில் கைவிடப்பட்ட நிலையில் தலைமன்னார் பகுதியில் கரையொதுங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

இதனிடையே யாழ்ப்பாணத்திலுள்ள பிரபல கல்லூரிகளுக்கு அண்மையில் போதைப்பொருட்கள் போதை மாத்திரைகள் என்பன விற்பனை செய்யப்படுவதாகவும் இதற்கு உயர்வகுப்பு மாணவர்கள் பலர் அடிமைகளாகி வருவதாகவும் கூறப்படுகிறது.

கொழும்பிலிருந்தும் வடபகுதிக்குச் சென்றுள்ள குழுவினரே இத்தகைய செயற்பாடுகளில் ஈடுபடுவதாக பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர் கவலை தெரிவிக்கின்றனர்.

அதுமாத்திரமன்றி இதனைக் கட்டுப்படுத்த பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் அதிகாரிகள் தயங்குவதாகவும் தமக்கு எதிராக மாணவர்கள் செயற்படுவார்கள் என்ற அச்சமே அதற்குக் காரணம் என்று தெரிவிக்கப்படுகிறது.

வடக்கு கிழக்கில் மாணவர்களை குறிவைத்து இத்தகைய செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றனவா என்ற சந்தேகமும் மக்கள் மத்தியில் அதிகரித்தே காணப்படுகின்றது.

பிரதானமாக இளம் வயதினர் மத்தியில் அதிகளவில் பணப்புழக்கம் உள்ளமை இத்தகைய சமூக விரோத செயற்பாடுகளுக்கு துணை போவதாக அமைந்துள்ளது. எனவே பெற்றோர் வயது வந்த தமது பிள்ளைகள் தொடர்பில் மிகவும் அவதானத்துடன் இருப்பது அவசியமாகும்.

அவர்களின் நடவடிக்கைகள், நண்பர்களின் சேர்க்கை தொடர்பில் கூடிய கவனம் செலுத்துவது தீய வழியில் அவர்கள் செல்லாதிருப்பதனை உறுதிசெய்யக் கூடியதாக இருக்கும்.

வடபகுதியைப் பொறுத்தமட்டில் நாட்டின் இதர பகுதிகளில் இல்லாத அளவுக்கு பெரும் எண்ணிக்கையான இராணுவத்தினர் குவிக்கப்பட்டிருப்பதுடன் சகல பிரதேசங்களிலும் பொலிஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

இருந்த போதிலும் சமூக விரோத செயற்பாடுகள் எந்தவகையிலும் குறைந்தபாடில்லை. சாதாரணமாக பெண்கள் வீதியில் செல்வதற்கு கூட அஞ்சும் நிலைமையே காணப்படுகின்றது.

இவ்வாறான போக்குகளை மாற்றியமைத்து மக்களின் உண்மையான பாதுகாப்பை உறுதிசெய்வது பாதுகாப்புக்கு பொறுப்பானவர்களின் பிரதான கடமையாகும்.

-தமிழ்வின்-

வவுனியாவில் 41 குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவிகள் வழங்கி வைப்பு!!

வவுனியாவில் 41 குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவிகள் வவுனியா மக்கள் வங்கிக்கு முன்பாக அமைந்துள்ள கால்நடை வைத்திய அதிகாரி பணிமனையில் நேற்று (02.06.2018) காலை 9.40 மணியளவில் வடமாகாண சபை உறுப்பினர் ப.சத்தியலிங்கம் அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது.

இறம்பைக்குளம், பண்டாரிக்குளம், ஈச்சங்குளம், மரக்காரம்பளை, பூவரசங்குளம், நெளுக்குளம் ஆகிய பகுதிகளை சேர்ந்த வறிய மற்றும் பெண் தலமைத்துவ குடும்பங்களை சேர்ந்த 41 குடும்பங்களுக்கு 7720 ரூபா பெறுமதியான 25 கோழிக்குஞ்சுகளும் உணவுப்பாத்திரங்களுமே வழங்கி வைக்கப்பட்டன

இந் நிகழ்வில் நகரசபை உறுப்பினர் தி.செந்தில்ரூபன், வவுனியா தெற்கு பிரதேச சபை உறுப்பினர் போ.மங்களநாதன், தமிழரசு கட்சியின் உறுப்பினர்கள், வடமாகாண சபை உறுப்பினர் ப.சத்தியலிங்கத்தின் இணைப்பாளர் பா.சிந்துஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.​

ஒரே இடத்தில் 6 மணி நேரம் அமர்ந்திருந்தால் இறப்பு நிச்சயம் : அபாய எச்சரிக்கை!!

ஒரே இடத்தில் ஆறு மணித்தியாலங்களுக்கு மேலாக தொடர்ந்தும் அமர்ந்திருப்பது இறப்பைத் துரிதப்படுத்தும் ஆபத்தான செயல் என்று மருத்துவ ஆய்வொன்றில் கண்டறியப்பட்டுள்ளதாக கொழும்பு மருத்துவ பீட சிறுவர் நோய் சிறப்பு வைத்திய நிபுணர் வைத்திய கலாநிதி புஜித விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இவ்வாறு அமர்ந்திருப்பவர்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் நூற்றுக்கு 48 வீதமான ஆண்களும் 94 வீதமான பெண்களும் இறப்பதற்கான ஆபத்தை அதிகம் கொண்டவர்களாக காணப்படுவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

இதனால், ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்து கடமையாற்றுவதை தவிர்ந்து கொள்ள வேண்டும் எனவும், ஒவ்வொரு 30 நிமிடங்களுக்குப் பின்னரும் ஒரு முறை நடக்க வேண்டும் எனவும் மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

சிறுவர்களும் ஒரே இடத்தில் இருந்து விளையாடுவது மற்றும் அமர்ந்திருப்பது என்பவற்றை தவிர்ந்து கொள்ள வேண்டும் எனவும் வைத்திய நிபுணர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தலைகீழாக மாறும் யாழ்ப்பாணம் : பெண்ணின் மோசமான செயல் : பரிதவித்த மகள்!!

யாழ்ப்பாணத்தில் மோசமான முறையில் செயற்பட்ட பெண்ணொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். சிறைச்சாலைக்குள் வெற்றிலையுடன் கஞ்சா கொண்டு சென்ற குற்றச்சாட்டில் குடும்பப் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண்ணை நீதிமன்றில் ஆஜர்படுத்திய வேளையில், விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்று முன்தினம் யாழ்ப்பாணத்தில் நடந்துள்ளது.

முல்லைத்தீவை சேர்ந்த பெண் ஒருவது தனது பதின்ம வயது மகளுடன் சிறைச்சாலைக்குச் சென்றுள்ளார். அங்குள்ள தனது கணவரைச் சந்திக்கவே அவர் சென்றுள்ளார்.

இதன்போது அவர் கொண்டு சென்ற வெற்றிலை சரைக்குள் கஞ்சா இருந்ததை சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் கண்டுபிடித்தனர்.

தாய் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவருடன் சென்ற மகள் பெரும் அசௌகரியத்திற்கு முகங்கொடுத்துள்ளார்.

என்ன செய்வது?, யாருடன் வீட்டுக்கு செல்வது என்று தெரியாமல் மகள் தவித்ததாக அங்கிருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

குழந்தையை பார்க்க முடியவில்லை : இரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட பொலிஸ்!!

தமிழகத்தில் விடுமுறை தராத காரணத்தினால் பொலிசார் ஒருவர் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

தேனி மாவட்டம் போடிநாயக்கனூரைச் சேர்ந்தவர் மோகன். திருப்பூர் மாநகர காவல் ஆயுதப்படை பிரிவில் காவலராகப் பணியாற்றி வரும் இவருக்கு மனைவியும் 3 மாத குழந்தையும் உள்ளனர்.

மோகன் பொலிஸ் அதிகாரியாக வேலை பார்த்து வருவதால், அவர் மட்டும் திருப்பூரில் சிறுபூலுவப்பட்டி என்ற பகுதியில் வாடகைக்கு வீடெடுத்து தங்கியுள்ளார்.

இந்நிலையில் நேற்று மோகன், வஞ்சிபாளையம் அருகே உள்ள ரயில்வே தண்டவாளத்தில் பிணமாக கிடந்ததை அறிந்த ரயில்வே பொலிசார் சம்பவ இடத்திற்கு சென்று, அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

அதன் பின் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், விடுமுறையே கிடைக்காமல், தொடர்ந்து பணியாற்ற வேண்டிய சூழலில் இருந்ததால், ஊருக்குச் சென்று தன் குழந்தையை பார்க்க முடியாததால் மோகன் பெரும் வேதனையில் இருந்துள்ளார்.

அதுமட்டுமின்றி விடுமுறை கேட்கும்போதெல்லாம் அதிகாரிகள் மறுத்து வேறு பணி கொடுத்து டார்ச்சர் செய்ததால் மனம் உடைந்து காணப்பட்ட இவர், ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்திருக்கலாம் என்று பொலிசார் கூறியுள்ளனர்.

15 நாட்களேயான குழந்தையின் தாய் உட்பட இரு பெண்கள் கொடூரமாக கொலை!!

கொஸ்கம – சீதாவக பகுதியில் கூரிய ஆயுதம் ஒன்றினால் தாக்கப்பட்டு இரு பெண்கள் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்று காலை இடம்பெற்றுள்ளதுடன், இதில் 34 வயதுடைய பெண் ஒருவரும் 78 வயதான அவருடைய பாட்டியுமே உயிரிழந்துள்ளனர்.

கொலை செய்யப்பட்ட 34 வயதான பெண், 15 நாட்களேயான குழந்தையின் தாய் என்பதும் தெரியவந்துள்ளது. பண கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட தகராறே இந்த கொலைக்கு காரணம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

மேலும், குறித்த பெண்களின் உறவினரே இந்த கொலையை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர்களின் சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த கொலை தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.