இதெல்லாம் தெரியாமலே அவர் இறந்து விட்டாரே : ரகுவரனின் மனைவி ரோகினி வருத்தம்!!

நடிகர் ரகுவரன் இன்று உயிரோடு இல்லை. அவருக்கு மொழி கடந்தும் மிகத் தீவிரமான ரசிகர்கள் இருப்பதை அவ்வப்போது சில பிரபலங்கள் சிலாகித்துப் பேசும் போது அறிய முடிகிறது.

எனினும், அவர் உயிரோடிருக்கையில் அவரது திரைப்படங்களில் அவரது ஒவ்வொரு அசைவுமே ரசிகர்களால் பெரும் ஆராவாரத்துடன் ஏற்றுக்கொள்ளப்பட்டு ரசிக்கப்பட்டமை குறித்து அவருக்கு பெரிதாக எதுவும் தெரியாது என அவரின் மனைவியும் நடிகையுமான ரோகினி கூறியுள்ளார்.

ஒருவேளை ரசிகர்கள் தன்னை இத்தனை ஆராதிக்கிறார்கள் என்று அறிந்திருந்தால் அவர் மிகவும் மகிழ்ந்திருப்பார். ஆனால், அவருக்கு அப்போது அதெல்லாம் தெரியாது.

நானும், அவரது நண்பர்களும் அவரிடம் அவரது நடிப்புத்திறனைப் பற்றி சிலாகித்துப் பேசுவோம் தான், ஆனால் அவருக்கு அது போதவில்லை. அவரது மரணத்திற்குப் பிறகு ரசிகர்கள் திரையில் ரகுவரனைக் கண்டதுமே ஆர்ப்பரித்துக் கொண்டாடுவதைக் காணும் போது, இதெல்லாம் தெரியாமலே அவர் இறந்து விட்டாரே என்று சில நேரங்களில் மனம் கனத்துப் போகிறது.
என ரோகினி தெரிவித்துள்ளார்.

வகுப்பறையிலே தங்கி பாடம் எடுத்த ஆசிரியர் : ஆனந்த கண்ணீர் சிந்த விட்ட மாணவர்கள்!!

பிரேசிலில் இரண்டு மாதங்களாக பள்ளி நிர்வாகம் சம்பளம் தராத காரணத்தினால், மாணவர்கள் தங்களுடைய பணங்களை ஆசிரியருக்கு கொடுத்த சம்பவம் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

பிரேசிலில் ஆசிரியர் ஒருவருக்கு பள்ளி நிர்வாகம் சம்பளம் தர முடியாத சூழ்நிலையில் இருந்ததால், அவர் வகுப்பறையிலே தங்கி மாணவர்களுக்கு பாடம் சொல்லி கொடுத்து வருகிறார்.

ஆசிரியருக்கு சம்பளம் கொடுக்கப்படுவதில்லை என்பதை அறிந்த அந்த மாணவர்கள் உடனடியாக தாங்கள் சேமித்து வைத்திருந்த பணங்களை எடுத்துக் கொண்டு வந்து ஆசிரியரிடம் கொடுத்துள்ளனர்.

அந்நாட்டு மதிப்பு படி சுமார் 1,505 ரியாலை மேஜையின் மீது வைத்துள்ளனர். இதைக் கண்டு முதலில் வாங்க மறுத்த அவர் அதன் பின் மாணவர்களிடன் அன்பு மிகுதியைக் கண்டு ஆனந்த கண்ணீர் வடித்தார். இதைக் கண்ட மாணவர்கள் அவரை அரவணைத்து சமாதானம் கூறி தேற்றினர்.

இரண்டாவது திருமண ஆசைக்கு இணங்க மறுத்ததால் பெண் உயிரோடு எரித்துக் கொலை!!

சென்னை அண்ணா நகரை சேர்ந்த பெண் ஒருவர் செங்கல்பட்டு பழவேலி அருகே எரித்து கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

அடையாளம் காண முடியாத அளவிற்கு கருகியிருந்ததால் உடலுக்கு சொந்தக்காரரை கண்டுபிடிப்பதில் தாமதம் ஏற்பட்டது. கேரளாவில் காணாமல் போன மாணவி ஜேசா வாக இருக்கலாம் என்கிற அடிப்படையில் கேரளா பொலிஸார் வந்து பார்த்து விட்டு ஜேசா மூக்கு குத்தியிருக்க மாட்டார் என்பதால் இது ஜேசா இல்லை என்று உறுதி செய்தது.

இந்நிலையில் சென்னை அண்ணாநகரை சேர்ந்த பொக்கிஷ மேரியை காணவில்லை என்று அவரது பெற்றோர் புகார் அளித்ததால், அவர்களை அழைத்து சென்று சடலத்தை அடையாளம் காண சொன்னது காவல்துறை.

இறந்து போன சடலம் கடந்த ஞாயிறன்று காணாமல் போன தங்கள் மகள்தான் என்று பெற்றோர் உறுதி செய்தனர்.

பொக்கிஷ மேரி எதற்காக பழவேலி சென்றார் அவர் கடத்தப்பட்டாரா என்று விசாரணை செய்ததில் அவர் அண்ணா நகரை சேர்ந்த பாலா என்பவரை எட்டு வருடமாக காதலித்ததாகவும் பாலாவிற்கு ஏற்கனவே திருமணம் ஆகியிருந்தது என்பதால் இரண்டாம் திருமணம் செய்து கொள்ள பொக்கிஷ மேரி மறுத்ததாகவும் தெரிய வந்துள்ளது.

இதனால் தனது இரண்டாம் திருமண கனவு கலைந்து போன ஆத்திரத்தில் காதலன் பாலா பொக்கிஷ மேரியை பழவேலிக்கு அழைத்து சென்று தன் நண்பன் உதவியுடன் உயிரோடு எரித்துக் கொலை செய்ததாக தெரியவந்துள்ளது.

தற்போது கைது செய்யப்பட்டுள்ள இவ்விருவரும் சிறையில் இருக்கின்றனர். காதலின் பெயரால் நடந்த கொடூரம் அப்பகுதி மக்களை உறைய செய்திருக்கிறது.

திமிங்கலத்தின் வயிற்றில் இருந்த பொருளைக் கண்டு அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள்!!

தாய்லாந்தில் திமிங்கலத்தின் வயிற்றில் 80 பிளாஸ்டிக் பைகள் இருப்பதைக் கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

தாய்லாந்து நாட்டின் தென் சோங்லா மாகாணத்தில் உள்ள கடற்கரையில், உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் திமிங்கலம் ஒன்று கடந்த திங்கள்கிழமை கரை ஒதுங்கியுள்ளது.

இதைக் கண்ட அங்கிருந்த மக்கள் உடனடியாக இது குறித்து மருத்துவ குழுவுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன் பின் அப்பகுதிக்கு வந்த மருத்துவ குழுவினர் திமிங்கலத்தை மீட்டெடுத்து சிகிச்சை அளித்து வந்தனர்.

தொடந்து 5 நாள்கள் திமிங்கலத்துக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சையின் போது பிளாஸ்டிக் பைகளை கக்கிய திமிங்கலம் சற்றும் நேரத்தில் உயிரிழந்தது.

இதனால் மருத்துவர்களின் 5 நாட்கள் போராட்டம் வீணானது. இருப்பினும் திமிங்கலத்தை மருத்துவர்கள் உடற்கூறு ஆய்வு செய்த போது, திமிங்கலத்தின் வயிற்றின் உள்ளே இருந்த பொருளைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

அதாவது திமிங்கலத்தின் வயிற்றில் சுமார் 80 பிளாஸ்ட்டிக் பைகளை எடுத்துள்ளனர். பிளாஸ்டிக் பைகளை விழுங்கியதன் காரணமாக உணவு உண்ண முடியாமல் திமிங்கலம் அவதிப்பட்டு கரை ஒதுங்கியுள்ளது என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

உலகின் மிகவும் கவர்ச்சிகரமான பாட்டி இவர் தான் : வயது எத்தனை தெரியுமா?

 

பிரித்தானியாவைச் சேர்ந்த பெண் ஒருவர் உலகின் மிகவும் கவர்ச்சிகரமான பாட்டி என்று பெயரை பெற்றுள்ளார்.

பிரித்தானியாவின் Bolton பகுதியைச் சேர்ந்தவர் Carrie Hilton. 36 வயதான இவருக்கு இவர் பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் 17 வயதான இவரின் மூத்த மகள் கடந்த ஜனவரி மாதம் பெண் குழந்தை பெற்றெடுத்தார்.

இதன் மூலம் Carrie Hilton பாட்டியானார். Carrie Hilton-ன் கவர்ச்சிகரமான புகைப்படங்களைக் கண்டு சமூகவலைத்தளங்களில் இவருக்கு என்று ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.

இவரை தற்போது வரை 15,000-க்கும் மேற்பட்டோர் பின் தொடர்ந்து வருவதால், அவர்கள் இவரை உலகின் கவர்ச்சிகரமான பாட்டி என்று கூறி வருகின்றனர்.

இது குறித்து அவர் கூறுகையில், ஆம் நான் தான் உலகின் மிகவும் கவர்ச்சிகரமான பாட்டி என்று கூறுவேன். எனக்கு நிகராக இங்கு போட்டியிட யாரும் கிடையாது.

என்னுடைய அழகிற்கு மட்டும் தற்போது வரை 13,000 பவுண்ட் வரை செலவு செய்துள்ளதாகவும், அதில் முக்கியமாக மார்பகம் மற்றும் பின்னழகிற்கே அதிக செலவு ஆகியுள்ளதாகவும் கூறியுள்ளார்.

கிக் பாக்சிங்கில் பிளாக் பெல்ட் வெற்றியாளரான இவர் ஆறு முறை சர்வதேச அளவிலான போட்டிகளில் வெள்ளிப்பதக்கங்களை வென்று குவித்துள்ளார்.

தற்போது ஊடகம் ஒன்றி மேலாளர் பணியில் இருக்கும் இவரை இணையவாசிகள் பலர் என்னுடன் டேட்டிங் வரும் படி கூறுவதாகவும், ஒரு சிலர் தன்னை திருமணம் செய்து கொள்ளும் படி கூறுவதாகவும், மேலும் சிலர் உறவு வைத்துக் கொள்வதற்கு அழைப்பதாகவும் Carrie Hilton கூறியுள்ளார்.

அவுஸ்திரேலியாவின் 47 வயதைச் சேர்ந்த Gina Stewart தான் முதலில் மிகவும் கவர்ச்சிகரமான பாட்டி என்று கூறப்பட்டிருந்த நிலையில் தற்போது இணையவாசிகள் இவரை கவர்ச்சிகரமான பாட்டி என்று கூறிவருதால், தற்போது இவர் தொடர்பான புகைப்படம் தான் இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

டீ விற்று மாதம் ஒரு லட்சம் வருமானம் : மிரளவைக்கும் இளைஞர்!!

இந்தியாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் டீ வியாபாரம் செய்து மாதம் ஒரு லட்சம் வரை சம்பாதிப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் வசிக்கும் ரகுவீர் சிங் சவுத்ரி என்ற இளைஞர் ஓன்லைன் மூலமே டீ விற்பனை செய்கிறார்.

ரகுவீரிடம் ஓடர் செய்த சில நிமிடங்களில் வீடு தேடி சூடான டீ சப்ளை செய்யப்படுகிறது. ஆரம்பத்தில் ரகுவீர் சிங் ஒன்லைன் வர்த்தக நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்திருக்கிறார். ஒன்லைன் மூலம் வாடிக்கையாளர்கள் ஓடர் செய்யும் பொருளை சைக்கிள் மூலம் வீடு தேடி சென்று வினியோகிக்கும் பணியை செய்திருக்கிறார்.

சைக்கிள் சவாரியின்போது ஏற்படும் களைப்பை போக்க ஆங்காங்கே டீ அருந்தி ஆசுவாசப் படுத்திக்கொள்வதை வழக்கமாக கொண்டிருந்திருக்கிறார். அப்போதுதான் தான் கொண்டு சேர்க்கும் பொருட்களை போலவே டீயையும் வீடு தேடி சென்று சப்ளை செய்யும் எண்ணம் உதயமாகி இருக்கிறது.

இதையடுத்து செல்போனை மட்டும் முதலீடாக வைத்து ஒன்லைன் டீ வியாபாரத்தில் ரகுவீர் களமிறங்கினார்.15 நிமிடங்களில் வீடு தேடி டீ கொண்டு வந்து தருகிறேன் என்று ஒன்லைன் மூலம் விளம்பரம் செய்த நிலையில் மக்களை அது ஈர்த்தது.

பின்னர் நண்பர்களின் துணையுடன் வியாபாரத்தை விரிவுபடுத்தி விட்டார். பிரபலமான கடைகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு டீ கொடுத்து வரவேற்கும் வழக்கம் இருப்பதால் அந்த நிறுவனங்களில் மொத்தமாக ஓடர் வாங்கி டீ சப்ளை செய்து வருகிறார்.

தற்போது 4 இடங்களில் டீ சப்ளை செய்வதற்கான மையங்களை நிறுவியிருக்கும் ரகுவீர் இதன் மூலம் மாதம் ஒரு லட்சம் வரை சம்பாதிக்கிறார்.

வவுனியாவில் தபால் ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு : மக்கள் திண்டாட்டம்!!

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தபால்துறை ஊழியர்கள் மேற்கொண்டு வரும் பணிப் பகிஸ்கரிப்பு போராட்டத்தால் வவுனியாவில் தபால்துறை முடங்கிக் காணப்படுகின்றது.

தகுதிகாண் காலம் நிறைவடைந்த 11வகுப்பு அஞ்சல் சேவை உத்தியோகத்தர்களின் நியமனங்களை உடனடியாக உறுதி செய், 2018 ஜனவரி 10ம் திகதி வாக்குறுதியளித்த கெபினெட் பத்திரிகைக்கு உடனடியாக ஒப்புதல் வழங்கு, கணிணி தொழிநுட்ப கோளாறுகளை உடனடியான சீர் செய், 2012 பொறுப்பு பரீட்சையை நடைமுறைப்படுத்தல் பொறுப்புக் கொடுப்பனவை உடனடியாக பெற்றுக்கொடு,

பொறுப்பு பரீட்சையில் சித்தியடைந்த 1ம் வகுப்பு உத்தியோகத்தர்களுக்கு எம்.என் – 7 வேதன மட்டத்தினைப் பெற்றுக் கொடு, விரிவுரையாளர் கொடுப்பனவை புதிய சம்பளத்திற்கு பெற்றுக்கொடு என்ற கோரிக்கையினை முன்வைத்து இன்று 2018 ஜீன் 04 நள்ளிரவு 12 தொடக்கம் 05 நள்ளிரவு 12 வரையிலான இரண்டு நாட்கள் அடையாள வேலை நிறுத்தம் மேற்கொண்டுள்ளனர்.

இதன் காரணமாக வவுனியா பிரதான தபால் நிலையம் உட்பட அனைத்து தபால் நிலையங்களும் மூடப்பட்டு காணப்படுகின்றது.

ஊழியர்கள் பணியில் இன்மையால் பல்வேறு தேவைகளுக்காகவும் தபால் நிலையங்களுக்கு வருபவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்வதை காணக்கூடியதாக உள்ளது.

எண் ஜோதிடப் பலன்கள் படி இந்த ஜூன் மாத அதிஷ்டக்காரர்கள் இவர்கள் தானாம்!!

இந்த மாதம் எண்கணிதப்படி உங்களுக்கு எப்படி என்று பார்ப்போம். 1, 10, 19, 28 ஆகிய திகதிகளில் பிறந்தவர்களுக்கு:எதைப் பற்றியும் கவலைப்படாமல் திடமானமுடிவுடன் எந்த வேலையையும் செய்து முடிக்கும் திறமை உடைய ஒன்றாம் எண் அன்பர்களே இந்த மாதம் காரியங்களில் தாமதமான போக்கு காணப்படும்.

உங்கள் வார்த்தைக்கு வெளிவட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். உங்களது உடமைகளை கவனமாக பார்த்துக் கொள்வது நல்லது. வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் வேகமான போக்கு காணப்படும். கிடப்பில் இருந்த கடன்கள் பைசலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து செல்வது நல்லது.

செய்யும் வேலை பற்றி மனதில் திருப்தியற்ற எண்ணம் உண்டாகும். குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்கள் உங்களுக்கு மனவருத்தத்தை தருவதாக இருக்கலாம். அனுசரித்து செல்வது நன்மையை தரும். பெண்களது பொருள்களை கவனமாக பாதுகாத்துக்கொள்வது நல்லது. வீண்பிரச்சனைகளில் தலையிடாமல் ஒதுங்கிவிடுவது நன்மை தரும். மாணவர்களுக்கு கல்வியில் அதிக கவனம் செலுத்துவது நன்மை தரும். கவனமாக அடுத்தவர்களிடம் பழகுவது நல்லது.

பரிகாரம் : ஞாயிற்றுக்கிழமை அன்று சிவனுக்கு இலுப்பை எண்ணை தீபம் ஏற்றி வழிபடுவது கவலையை போக்கும். வீண் அலைச்சல் குறையும். வேலைபளு நீங்கும்.

2, 11, 20, 29 ஆகிய திகதிகளில் பிறந்தவர்களுக்கு:மனதிற்கு முக்கியத்துவம் அளித்து வாழ்க்கையில் பரிணமிக்கும் இரண்டாம் எண் அன்பர்களே இந்த மாதம் விரும்பாத இடமாற்றம் உண்டாகலாம்.

குறிக்கோள் இன்றி வீணாக அலைய நேரிடும். செலவும் அதிகரிக்கும். சகோதரர்கள் மூலம் நன்மை உண்டாகும். மனோதைரியம் கூடும். புதிய நட்பு கிடைக்கும். எதிலும் எச்சரிக்கையாக இருப்பது நன்மைதரும். தொழில், வியாபாரத்தில் எதிர்பாராத தடங்கல்கள் வரலாம். பணவரத்து இருந்தாலும் தேவை அதிகரிக்கும்.

புதிய வாடிக்கையாளர்கள் கிடைக்க பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நினைத்ததை சாதிக்க வேண்டும் என்ற வேகத்தில் பணிபுரிவார்கள். சிலருக்கு புதிய பதவி அல்லது புதிய பொறுப்புகள் கிடைக்க பெறுவார்கள். குடும்பத்தில் விருந்தினர்கள் வருகை இருக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள்.

திருமண முயற்சிகள் சாதகமான பலன் தரும். பெண்களுக்கு அடுத்தவர்களின் வேலைக்காக வீணாக அலைய நேரிடும். மனோ தைரியம் அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற முழுமூச்சாக பாடுபடுவீர்கள். புதிய நட்பு கிடைப்பதுடன் அவர்களது ஆலோசனையும் வெற்றிக்கு உதவும்.

பரிகாரம் : திங்கட்கிழமை அன்று பெருமாளை தரிசித்து வணங்கி வர எதிர்பார்த்த காரிய அனுகூலம் உண்டாகும். கொடுக்கல் வாங்கல் சீர்படும்.

3, 12, 21, 30 ஆகிய திகதிகளில் பிறந்தவர்களுக்கு : புதுமையான சிந்தனைகளும், சிறந்த கற்பனையாற்றலும் உடைய மூன்றாம் எண் அன்பர்களே இந்த மாதம் மனதில் இருக்கும் கவலைகள் அகலும்.

திடீரென்று கோபம் வரும். ஏதாவது ஒரு வகையில் அடுத்தவரிடம் வீண் பேச்சு கேட்க நேரலாம். மற்றவர்கள் செய்கைகளால் மனவருத்தம் உண்டாகலாம். நீண்டநாள் இழுபறியாக இருந்து வந்த பிரச்சனை முடிவுக்கு வரும். தொழில் வியாபாரத்தில் இருந்து வந்த பின்தங்கிய நிலை மாறும். வியாபார போட்டிகள் தடை தாமதங்கள் நீங்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் சாமர்த்தியமாக செயல்பட்டு மேல் அதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவார்கள். குடும்பத்தில் அமைதி குறைவது போல் தோன்றும் சகோதரர்கள் வழியில் ஏதாவது பிரச்சனை தலைதூக்கலாம். விருப்பமான நபரை சந்தித்து மகிழ்வீர்கள். பெண்கள் வீண் பேச்சுக்களை குறைத்து செயலில் கவனம் செலுத்துவது நல்லது. பணவரத்து திருப்தி தரும். மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு கல்வியில் முன்னேற்றம் காண்பீர்கள். எதிர்ப்புகள் விலகும்.

பரிகாரம் : விநாயக பெருமானை தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து வழிபட எல்லா நன்மைகளும் உண்டாகும். மனகஷ்டம் தீரும்.

4, 13, 22, 31 ஆகிய திகதிகளில் பிறந்தவர்களுக்கு : எப்பொழுதும் பரபரப்பாக காணப்படும் நான்காம் எண் அன்பர்களே நீங்கள் சூழ்நிலைக் கேற்றவாறு செயல்படுவதில் வல்லவர்.

இந்த மாதம் பணவரவு கூடும். செய்யும் காரியத்தில் மனதிருப்தி கிடைக்கும். அடுத்தவர்களுக்காக எந்த பொறுப் பையும் ஏற்காமல் இருப்பது நல்லது. மற்றவர்களுக்காக வீண் அலைச்சல், செலவு செய்ய வேண்டி இருக்கும். தொழில் வியாபாரம் திருப்திகரமாக நடந்தாலும் எதிர்பார்த்த லாபம் குறைய லாம்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் எவ்வளவு உழைத்தாலும் எதிர்பார்த்த பலன் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். குடும்பத்தில் இருந்த பிரச்சனை தீரும். வாழ்க்கை துணையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குடும்பம் சம்பந்தப்பட்ட காரியங்கள் சரிவர நடக்காமல் தடைதாமதம் ஏற்படலாம். பெண்களுக்கு மனத்திருப்தியுடன் காரியங்களை செய்து முடிப்பீர்கள்.

பணவரத்து கூடும். மாணவர்களுக்கு: எதிர்கால கல்வி பற்றி எடுத்த முடிவுகள் மனதிருப்தியை அளிக்கும். அலைச்சல் அதிகரிக்கும்.

பரிகாரம் : பிரத்தியங்கரா தேவியை வணங்கி வர எதிர்ப்புகள் அகலும். துன்பங்கள் நீங்கும்.

5, 14, 23 ஆகிய திகதிகளில் பிறந்தவர்களுக்கு : புத்திக்கூர்மையும் சமயோசித புத்தியும் கொண்ட ஐந்தாம் எண் அன்பர்களே இந்த மாதம் மனதில் இருந்த டென்ஷன் குறையும். உடல் ஆரோக்கியம் உண்டாகும்.

விரும்பிய படி காரியங்கள் நடக்கும். நீண்ட தூர தகவல்கள் நல்ல தகவல்களாக இருக்கும். தொழில் வியாபாரம் முன்னேற்றம் காணப்படும். லாபம் எதிர்பார்த்தபடி இருக்கும். புதிய வாடிக்கையாளர்கள் ஏற்படுவதுடன் அவர்களால் நன்மையும் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் ஏற்கனவே செய்த வேலைகளுக்கு இப்போது பாராட்டும் பண உதவியும் கிடைக்க பெறலாம்.

குடும்பத்தில் இருந்த டென்ஷன் குறைந்து சந்தோஷமான நிலை காணப்படும். மகிழ்ச்சியான உறவு நிலவும். பிள்ளைகளின் நடத்தை மனதுக்கு நிம்மதியை தரும். பெண்களுக்கு எதிர்பார்த்த தகவல்கள் நல்ல தகவல்களாக வந்து சேரும். டென்ஷன் குறையும். மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் பற்றி இருந்த டென்ஷன் நீங்கும். புதிய நட்புகள் மூலம் உதவி கிடைக்கும்.

பரிகாரம் : நடராஜ பெருமானை பூஜித்து வணங்கி வர எல்லா பிரச்சனைகளும் நல்ல முடிவுக்கு வரும். மன அமைதி கிடைக்கும்.

6, 15, 24 ஆகிய திகதிகளில் பிறந்தவர்களுக்கு : எழுத்தாற்றலும், பேச்சாற்றலும் கொண்ட ஆறாம் எண் அன்பர்களே இந்த மாதம் எதிர்பார்த்த நல்ல பலன்கள் உண்டாகும்.

திறமையான பேச்சின் மூலம் காரியங்களை சாதிப்பீர்கள். எதிர்த்து செயல்பட்டவர்கள் விலகிச் சென்று விடுவார்கள். தெய்வ பிரார்த்தனை மனதுக்கு நிம்மதியையும், ஆறுதலையும் தரும். பணவரத்து கூடும். அரசாங்க காரியங்கள் சாதகமாக பலன் தரும். தொழில் வியாபாரம் லாபகரமாக நடக்கும்.

தொழில் விரிவாக்கம் தொடர்பான திட்டங்கள் செயல்படுத்த முயற்சி மேற்கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலைபளு குறைந்து உற்சாகமாக காணப்படுவார்கள். எடுத்த காரியம் வெற்றி பெறுவதால் மேல் அதிகாரிகளிடம் பாராட்டு கிடைக்கும்.

குடும்பத்தில் ஒற்றுமை காணப்படும். உறவினர்கள், நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். பெண்களுக்கு வாக்கு வன்மையால் காரியங்கள் வெற்றி பெறும். ஆன்மிக எண்ணங்கள் அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வி பற்றிய மனசஞ்சாரம் நீங்கி நிம்மதி உண்டாகும். பெரியோர் பாராட்டு கிடைக்கும்.

பரிகாரம் : ஆண்டாள் தாயாரை வணங்கி வர காரிய வெற்றி உண்டாகும். செல்வ சேர்க்கை ஏற்படும்.

7, 16, 25 ஆகிய திகதிகளில் பிறந்தவர்களுக்கு:எந்த ஒரு பிரச்சனையாக இருந்தாலும் அதை ஒரு நடுநிலைமையுடன் கையாளும் திறன் படைத்த ஏழாம் எண் அன்பர்களே நீங்கள் தீர்க்கமான எண்ணமுடையவர்கள் இந்த மாதம் பணவரவு திருப்தி தரும்.

ஆனால் வீண் செலவுகளை தவிர்ப்பது நன்மை தரும். எந்த ஒரு வேலையையும் செய்யும் முன் அதில் உள்ள நல்லது கெட்டதை ஆராய்ந்து செய்வது நல்லது. பயன் தராத முயற்சிகளை தவிர்ப்பது நன்மை தரும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் மிகவும் சாமர்த்தியமாக செயல்படுவது நன்மை தரும்.

தொழில் போட்டிகள் உண்டாகலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் குறிக்கோளற்ற வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது நன்மை தரும். பெண்கள் பயன்தராத முயற்சிகளை கைவிட்டு எந்த ஒரு வேலையையும் ஆராய்ந்து செயல்படுவது வெற்றியை தரும். மாணவர்களுக்கு எதிர்கால நலன் கருதி எந்த காரியத்தையும் செய்வது நன்மை தரும்.

பரிகாரம் : விநாயகர் அகவல் படித்து வினாயகரை வணங்க எல்லா நலன்களும் உண்டாகும். காரிய அனுகூலம் கிடைக்கும்.

8, 17, 26 ஆகிய திகதிகளில் பிறந்தவர்களுக்கு:எந்த நிலையிலும் தன்னம்பிக்கையுடன் செயல்படும் எட்டாம் எண் அன்பர்களே நீங்கள் பிடிவாத குணத்தை தளர்த்திக் கொண்டால் எதிலும் முன்னேற்றம் காண முடியும்.

இந்த மாதம் எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். வெளியூர் பயணங்கள் சாதகமான பலன் தரும். தொழில் வியாபாரம் மூலம் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். தொழில் வியாபார வளர்ச்சிக்கு தேவையான ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் புத்திசாதுரியத்தால் அலுவலக வேலைகளை திறமையாக செய்து முடித்து மதிப்பும் மரியாதையும் கிடைக்க பெறுவீர்கள்.

குடும்பத்தில் நிம்மதியான சூழ்நிலை காணப்படும். வீடு, வாகனங்கள் புதுப்பிக்க அல்லது புதிதாக வாங்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். பெண்களுக்கு மன குழப்பம் நீங்கி தெளிவான சிந்தனை மேலோங்கும். பயணங்கள் வெற்றியை தரும். மாணவர்கள் புத்தி சாதூரியத்தால் எதிலும் வெற்றி பெறுவீர்கள். மற்றவர்களின் பாராட்டும் கிடைக்கும்.

பரிகாரம் : முத்துக்குமரனை வணங்கி வர உடல் ஆரோக்கியம் உண்டாகும். எதிர்ப்புகள் விலகும்.

9, 18, 27 ஆகிய திகதிகளில் பிறந்தவர்களுக்கு : மற்றவர்களின் கட்டாயத்திற்காக எந்த காரியத்தையும் செய்யாத ஒன்பதாம் எண் அன்பர்களே நீங்கள் எதையும் ஆராய்ந்து செய்வதில் கெட்டிக்காரர்.

இந்த மாதம் எந்த இடத்தில் பேசும் போதும் கவனமாக பேசுவது நல்லது. வாக்குறுதிகளை கொடுப்பதை தவிர்ப்பது நன்மை தரும். விருப்பத்திற்கு மாறாக காரியங்கள் நடக்கலாம். மனம் தளராமல் இருப்பது நல்லது. வீண் ஆசைகள் தோன்றலாம். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் பார்ட்னர்களை அனுசரித்து செல்வது வியாபார வளர்ச்சிக்கு உதவும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகள் சக ஊழியர்களிடம் அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. குடும்ப விஷயத்தில் அந்நிய நபர்களின் தலையீட்டை தவிர்ப்பது நல்லது. வாழ்க்கை துணையின் உடல் நலத்தில் கவனம் தேவை. பெண்களுக்கு எந்த நிலையிலும் மனம் தளராது காரியங்கள் செய்வது வெற்றியை தரும். வாக்குறுதிகளை தவிர்க்கவும். மாணவர்கள் யாருக்கும் உத்திரவாதம் அளிக்காமல் இருப்பது நல்லது. கல்வியில் கூடுதல் கவனம் தேவை.

பரிகாரம் : ஆஞ்சநேயரை வணங்கி வர எல்லா காரியங்களும் தடை நீங்கி சாதகமான பலன் தரும்.

வவுனியாவில் புலமைப் பரிசில் கருத்தரங்கிற்கு வந்த மாணவர்கள் ஏமாற்றம்!!

வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் தனியார் ஊடக நிறுவனம் ஒன்றின் ஏற்பாட்டில் நடைபெறவிருந்த புலைமைப்பரிசில் கருத்தரங்கு நேற்று (03.06) ரத்து செய்யப்பட்டதன் காரணமாக மாணவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

குறித்த தனியார் நிறுவனத்தின் கல்வி பணித்திட்டத்தினூடாக வடமாகாணத்தில் நடைபெற்றுவரும் புலமைப்பரிசில் பரிட்சையில் தோற்றவுள்ள மாணவர்களுக்கான ஒரு நாள் கருத்தரங்கு நிகழ்விற்கு வடக்கு மாகாண கல்வி அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.

வவுனியா, செட்டிக்குளம், பாவற்குளம் மற்றும் ஆண்டியா புளியங்குளம் போன்ற தூரப் பிரதேசங்களிலிருந்து வந்திருந்த மாணவர்களும், பெற்றோரும் விசனத்துடன் திரும்பிச் சென்றதை காணக்கூடியதாக இருந்தது.

புலைமைப்பரிசில் கருத்தரங்கு நடத்தும் குறித்த நிறுவனத்தின் பொறுப்பற்ற தன்மை காரணமாக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களும் பெரும் சிரமங்களை எதிர்கொண்டிருந்தனர்.

08.05.2018 வடக்கு கல்வி அமைச்சிடம் அனுமதி கோரியிருந்த குறிப்பிட்ட ஊடகநிறுவனம் 30.05.2018 வவுனியா தெற்கு கல்வி வலயத்தினூடாக அனைத்து பாடசாலைகளுக்கும் 03.06.2018 புலைமைப்பரிசில் கருத்தரங்கு நடைபெறுமென அறிவித்தல் வழங்கியுள்ளது.

கல்வி கருத்தரங்கு நிகழ்வு ரத்து செய்யப்பட்டமை தொடர்பாக பாடசாலைகளுக்கு வவுனியா தெற்கு கல்வி வலயமோ, குறித்த ஊடக நிறுவனமோ அறிவித்தல் எதனையும் வழங்கியிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சகோதரி முன்னிலையில் 15 வயது மாணவி ஒருவர் செய்த காரியம்!!

புத்தளம் , நவகத்தேகம – முல்லேகம பிரதேசத்தினை சேர்ந்த 15 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் தனது உடலுக்கு தீ வைத்து தற்கொலை செய்து கொள்ள முயன்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு தீ வைத்து தற்கொலை செய்து கொள்ள முயன்ற குறித்த மாணவி தற்போது சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நவகத்தேகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று மதியம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த மாணவி தனது சகோதரியின் முன்னிலையில் இவ்வாறு தற்கொலை செய்து கொள்ள முயன்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மாணவியின் உடலில் சிறிதளவில் தீ பரவியுள்ளதன் காரணமாக, மாணவி நவகத்தேகம பிரதேச வைத்தியசாலையில் இருந்து, மேலதிக சிகிச்சைக்காக புத்தளம் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பாக நவகத்தேகம பொலிஸார், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இரண்டு மனித கடத்தல்காரர்களுடன் 5 சட்டவிரோத குடியேறிகள் வடக்கு கடற்பரப்பில் கைது!!

சட்டவிரோத குடியேறிகள் ஐவருடன், இரண்டு மனித கடத்தல்காரர்களை வடக்கு கடற்பரப்பில் கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

காங்கேசன்துறையிலிருந்து 11 கடல் மைல் தொலைவில் வைத்து நேற்று காலை அவர்கள் கைது செய்யப்பட்டனர் என கடற்படை தெரிவித்துள்ளது. இரண்டு கடத்தல்காரர்களுடன் இரண்டு பெண்கள், இரண்டு ஆண்களுடன் சிறுவன் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக டிங்கி படகின் ஊடாக கடல் மார்க்கமாக இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். அவர்கள் பயணித்த டிங்கி படகும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைதுசெய்யப்பட்டவர்கள் மேலதிக விசாரணைகளுக்காக கைப்பற்றப்பட்ட டிங்கி படகுடன் காங்கேசன்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

இலங்கை கடலில் சிக்கிய அதிஷ்டம் : மட்டற்ற மகிழ்ச்சியில் மீனவர்கள்!!

 

சிலாப கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர்கள் மிக்க மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வழமைக்கு மாறாக பெருந்தொகை மீன்கள் பிடிபட்டுள்ளதுடன், இதுவொரு அபூர்வ நிகழ்வு என மீனவர்கள் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளனர்.

பருவ மழை ஆரம்பித்த போதிலும் பல்வேறு வகை மீன்கள் பாரியளவு திடீரென சிக்கியுள்ளதாக சிலாபம் மீனவர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த இரண்டு நாட்களில் பாரியளவு மீன்களை மீனவர்களால் பிடிக்க முடிந்துள்ளது.

நேற்றையதினம் ஹெர்ரிங் என்ற ஒரு வகை கடல் மீன் அதிகளவு கிடைத்துள்ளது. இதன்மூலம் மிகப்பெரிய தொகை மீன்களை விற்க முடிந்துள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த மீன் வகை ஒரு கிலோ கிராம் 200 – 300 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக மீனவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு முன்னர் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இந்த அளவு மீன் சிக்கியதில்லை எனவும், இதுவொரு அபூர்வ விடயம் எனவும் சிலாபம் மீனவர்கள் கூறியுள்ளனர்.

உலகையே அலர வைத்துள்ள அதிர்ச்சி காட்சி : சர்ச்சையில் சிக்கியுள்ள வைத்தியர்!!

அமெரிக்காவில் கையில் கத்தியுடன் நடனமாடிக்கொண்டே அறுவை சிகிச்சை செய்த மருத்துவரால் நோயாளி மூளைச்சாவு அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

விண்டெல் என்பவர் ஜொர்ஜியா பகுதியில் வசித்து வருகிறார். தோல் மருத்துவரான இவர் நோயாளிகளுக்கு அழகுக்காக செய்யப்படும் காஸ்மெடிக் அறுவை சிகிச்சை செய்யும் காணொளிகளை வெளியிட்டுள்ளார்.

அதில் கொடுமை என்னவென்றால் நோயாளிகளுக்கு மயக்க நிலையில் இருக்கும்போது அறுவை சிகிச்சைக்கு நடுவே நடனம் ஆடிக் கொண்டும் ஹிப் ஹாப் பாட்டு பாடிக் கொண்டும் அவர் காணொளிகளை பதிவு செய்துள்ளார். அதோடு அவற்றை சமூக வலைத்தளங்களிலும் அவர் பதிவிட்டுள்ளார்.

அதில் ஒரு காணொளியில் தானே பாடல் வரிகளை உருவாக்கி ‘நான் இங்கு வெட்டப்போகிறேன்’ என பாடிக்கொண்டே மயக்க நிலையில் இருக்கும் நோயாளியின் கிழிக்கப்பட்ட வயிற்றுப் பகுதியை காண்பிக்கிறார்.

இந்நிலையில் காணொளியை பார்த்து அதிர்ச்சி அடைந்த பலரும் கையில் கத்தியுடன் நடனமாடும் இவரது காணொளிகளை பகிர்ந்தனர்.

முன்னதாக 2016ல் திருமணம் நடைபெறவிருந்த நிலையில் தொப்பையை குறைக்க அறுவை சிகிச்சைக்கு சென்றவருக்கு இவரது செயல்பாடுகளால் இதய செயல்பாடு நின்றுவிட்டு அவர் மூளைச்சாவு அடைந்துள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் விசாரணையில் அறுவை சிகிச்சை செய்ய உரிமம் இவர் பெறவில்லை என தெரிய வந்துள்ளது. இதையடுத்து இவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பஸ்ஸில் சென்ற பல்கலைக்கழக மாணவனின் கை துண்டாகி விழுந்த விபரீதம்!!

பெல்மடுல்ல பிரதேசத்தில் பஸ்ஸில் சென்ற பல்கலைக்கழக மாணவனின் கை துண்டாகியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த சம்பவம் இரத்தினபுரி – பதுளை வீதியில், பெல்மதுளை, சன்னஸ்கம கிரிவெல்தெனிய சந்தியில் இன்று பிற்பகல் நடந்துள்ளது. சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் மாணவனின் கை​யே இவ்வாறு துண்டாகியுள்ளது.

குறித்த மாணவன் தனது கையை பஸ் ஜன்னலுக்கு வெளியில் வைத்தவாறு வந்துள்ளார். இதன்போது பாரவூர்தி ஒன்று கை பகுதியை மோதுண்டதால் மாணவனின் கை வேறாக சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மாணவன் கையுடன் இரத்தினபுரி வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

காதலிக்காக நண்பனை கொடூரமாக கொலை செய்த சிறுவன்!!

சென்னை கோயம்பேட்டியில் காதலியைக் கிண்டல் செய்த காரணத்தால் நண்பனையே 17 வயது சிறுவன் கொலை செய்த சம்பவம், கோயம்பேடு பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மெக்கானிக்காக வேலை பார்த்து வரும் கணேஷ் என்பவர் தனது நண்பன் ரமேஷின் (17) காதலியை கிண்டல் செய்துள்ளார். இதுகுறித்து காதலி தனது காதலனிடம் புகார் அளித்துள்ளார்.

இதனால் கோபம் கொண்ட கணேஷ் தனது நண்பனை கொலை செய்ய முடிவு செய்துள்ளார். இதனைத்தொடர்ந்து சம்பவம் நடைபெற்ற அன்று இருவரும் சென்று மது அருந்தியுள்ளனர்.

பின்னர், வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கணேஷை குத்தியுள்ளார். இதில் நிலைகுலைந்து கணேஷ் விழுந்துவிடவே, கழுத்தை கொடூரமாக அறுத்துவிட்டு, விபத்தில் இறந்துவிட்டதாக பொலிசில் தெரிவித்துள்ளார் ரமேஷ்.

ஆனால், பிரேத பரிசோதனையில் கணேஷ் கொலைசெய்யப்பட்டதாக தெரியவரவே, 17 வயது சிறுவன் ரமேஷை கைது செய்துள்ளனர்.

17 வயது சிறுவனைக் கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கீழ்ப்பாக்கம் கெல்லீஸிலுள்ள கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர்.

எரித்துக் கொல்லப்பட்ட பெண் : காதலன் கைது!!

செங்கல்பட்டு அருகே எரித்து கொலை செய்யப்பட்டவர் சென்னை பெண் என்பது தெரிய வந்துள்ளது. இதனை அடுத்து அவரது காதலன் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

கடந்த மே 28ஆம் தேதி காஞ்சிபுரம் செங்கல்பட்டு அருகே பழவேலி என்கிற ஊரில் அடையாளம் தெரியாத நிலையில் பெண்ஒருவர் எரித்து கொல்லப்பட்டு கிடந்தார்.

இந்நிலையில் அது கேரளாவில் காணாமல் போன மாணவியாக இருக்கலாம் என்கிற நோக்கில் செங்கல்பட்டு போலீசார் கேரள போலீசாரை வரவழைத்தனர்.

அவர் கேரள மாணவி இல்லை என்பது உறுதியான நிலையில் எரித்து கொல்லப்பட்ட பெண் சென்னை அண்ணா நகரை சேர்ந்தவர் என்பது தெரிய வந்துள்ளது. இந்த வழக்கில் கொலை செய்த குற்றத்திற்காக காதலன் கைது செய்யப்பட்ட நிலையில் கொலைக்கு உதவி செய்த மற்றொரு இளைஞனையும் கைது செய்திருக்கின்றனர்.

இறந்த பெண்ணின் பெயர் பொக்கிஷ மேரி என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. கொலையின் நோக்கம் குறித்த விசாரணை மேலும் தொடர்கிறது.