நிறைமாத கர்ப்பிணி பெண்ணின் மார்பில் ஊசி : எனக்கு பயமாக இருக்கிறது என்று கண்ணீர்!!

தமிழகத்தில் நிறைமாத கர்ப்பிணி பெண் ஒருவர், தன் மார்பில் ஊசி இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அடுத்த கோவிந்தபுரத்தை சேர்ந்தவர் வடிவேல். கூலித்தொழிலாளியான இவருக்கு சசிகலா(26) என்ற மனைவி உள்ளார்.

இவர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 20ஆம் திகதி கும்பகோணம் அரசு மருத்துவமனையில் காய்ச்சலுக்காக சிகிச்சை பெற்றுள்ளார். அப்போது அங்கு செவிலியர்கள் கவனக்குறைவாக ஊசி போட்டதால், ஊசியின் பாதிமுனை உடைந்துள்ளது.

இதன் காரணமாக அவருக்கு கையில் தொடர்ந்து வலி ஏற்பட்டுள்ளது. அதன் பின் எக்ஸ்ரே எடுத்து பார்த்தபோது ஊசி இருப்பதை மருத்துவர்கள் ஒப்புகொண்டனர்.

இதையடுத்து கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவரை மருத்துவர்கள் உடனடியாக தஞ்சை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

அன்று இரவே அறுவை சிகிச்சை செய்து ஊசியை அகற்றியுள்ளனர். அறுவை சிகிச்சை செய்த போதும் கையில் தொடர்ந்து ஏதோ சசிகலாவை உறுதிக் கொண்டு இருந்துள்ளது.

கணவரோ அறுவை சிகிச்சை செய்ததால், அது போன்ற உணர்வு இருக்கும், பின்னர் சரியாகவிடும் என்று கூறியுள்ளார்.

இருப்பினும் வலி அதிகமானதால் மருத்துவரிடம் மீண்டு சென்று பரிசோதித்த போது தற்போது மார்பு பகுதியில் ஊசி இருப்பது தெரியவந்துள்ளது.

இதை அறிந்து அதிர்ச்சியடைந்த சசிகலா, அறுவை சிகிச்சை செய்வதாக கூறி ஏமாற்றி உள்ளனர். எனக்கு பயமாக உள்ளது என்று கண்ணீருடன் கூறியுள்ளார்.

மேலும் சசிகலாவின் கணவர் வடிவேல் கூறுகையில், கலெக்டரிடம் இது குறித்து மனு அளித்துள்ளோம். அம்மனுவில் சசிகலா தற்போது கர்ப்பமாக உள்ளார் என்று குறிப்பிட்டுள்ளோம்.

இதனால் தாய்சேய் உயிரை காக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென குறிப்பிட்டுள்ளோம் எனவும் கூறியுள்ளார்

வீதியில் நடந்த கோர விபத்து : தாய்- தந்தையின் உடலை பார்த்து கதறிய மகள்கள்!!

தமிழகத்தின் புதுக்கோட்டை அருகே நேற்று காலை நடந்த விபத்தில் தம்பதியினர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டையின் கந்தர்வக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன்(வயது 55), இவரது மனைவி பத்மா(வயது 45), மூன்று மகள்கள் உள்ளனர். இவர்கள் இருவரும் நேற்று உறவினர் வீட்டு திருமணத்தில் பங்கேற்பதற்காக பைக்கில் சென்றுள்ளனர்.

அப்போது கறம்பக்குடி அருகே சடையன்தெரு பகுதியில் சென்று கொண்டிருந்த போது அரசு பேருந்தும், பைக்கும் நேருக்கு நேர் மோதிக் கொண்டது.

இதில் பலத்த காயமடைந்த சுப்பிரமணியன் சம்பவ இடத்திலேயே பலியானார், பத்மா உயிருக்கு போராடிய நிலையில் உடனடியாக பொதுமக்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி பத்மாவும் பலியானார், இதனை தொடர்ந்து பேருந்தின் டிரைவரான துரைராஜை கைது செய்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தாய்- தந்தையின் உடலை பார்த்து மூன்று மகள்களும் கதறிய சம்பவத்தால் அப்பகுதியே சோகத்தில் மூழ்கியது.

இருட்டு அறையில் கர்ப்பிணிப் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை!!

டெல்லியில் 5 மாத கர்ப்பிணி பெண்ணை மாமியாரும்-கணவரும் சேர்ந்து கொடுமைப்படுத்திய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளனர். வரதட்சணை கேட்டு கணவரும் மாமியாரும் சேர்ந்து மருமகளை தொடர்ந்து கொடுமைப்படுத்தி வந்துள்ளனர்.

கொடுமையின் உச்சகட்டமாக, 5 மாத கர்ப்பிணியான மருமகளை பூட்டப்பட்ட ஒரு தொழிற்சாலையின் இருட்டு அறைக்குள் கை-கால்களை கட்டி அடைத்து வைத்து உள்ளனர்.

பின்னர், உங்கள் மகளை காணவில்லை என பெற்றோரிடம் தகவல் தெரிவித்துள்ளனர். இது குறித்து பெண்ணின் பெற்றோர் பொலிசில் புகார் செய்து உள்ளனர்.

பொலிசார் தேடுதல் வேட்டையில் இருட்டு அறையில் கை-கால்களை கட்டி அந்த பெண்ணை அடைத்து வைத்து இருப்பது தெரியவந்தது. உடனடியாக அந்த பெண்ணை மீட்டு போலீசார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் இது குறித்து கணவன் மற்றும் மாமியார் மீது பொலிசார் வழக்குப்பதிவு செய்து மாமியாரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாகியுள்ள கணவரை பொலிசார் தேடி வருகின்றனர்.

வவுனியாவில் குரங்கின் தொல்லையைக்கட்டுப்படுத்த துப்பாக்கிகள் வழங்கிவைப்பு!!

வவுனியாவில் பல பகுதிகளில் குரங்கு மற்றும் மர அணிலின் தொல்லைகள் அதிகளவில் காணப்படுகின்றது. இதனால் வீட்டிலுள்ள கோழிகள் உட்பட ஜீவனோபாயம் அனைத்திற்கும் பெரும் சேதம் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.

இதனைக்கட்டுப்படுத்த தென்னை பயிர்ச் செய்கை அலுவலகத்தினால் துப்பாக்கிகள் வழங்கி வைக்கப்படுகின்றன.

வவுனியாவில் தேங்காய், மாங்காய் போன்றவற்றிற்கு குரங்கினால் பெரும் சேதம் எற்படுத்தியும் அழிவையும் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றது.

இதனால் குரங்கின் தொல்லையைக் கட்டுப்படுத்துவதற்கு துப்பாக்கிகள் வழங்கும் நடவடிக்கையினை வவுனியா மன்னார் பிராந்திய தென்னை பயிர்ச் செய்கை அலுவலகம் மேற்கொண்டு வருகின்றது. துப்பாக்கி பெற்றுக்கொள்பவர்களுக்கு பயிற்சிகளும் அறிவுறுத்தல்களும் வழங்கிவைக்கப்பட்டு வருகின்றன.

வவுனியா மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகில் விபத்தை ஏற்படுத்தும் விளம்பரத் தொலைக்காட்சி!!

வவுனியா பிரதான மணிக்கூட்டுக் கோபுரத்திற்கு முன்பாக விளம்பரத்தைத் தாங்கிய தொலைக்காட்சி ஒன்று காட்சிப்படுத்தப்பட்டுள்ளதால் அப்பகுதியில் பெரும் ஒளிக்திர்வீச்சு ஏற்பட்டு வாகன விபத்துக்கள் இடம்பெற்று வருகின்றன.

இதனை கட்டுப்படுத்தவதற்கு தொடர்புபட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரியுள்ளார்கள். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

வவுனியா பிரதான மணிக்கூட்டுக் கோபுரத்திற்கு முன்பாக தனியார் நிறுவனம் ஒன்றின் விளம்பரம் காட்சிப்படுத்தும் தொலைக்காட்சி அமைக்கப்பட்டு பகல் இரவில் விளம்பரம் ஒளிபரப்பாகி வருகின்றது. இதனால் இரவில் மணிக்கூட்டுக்கோபுர பகுதியில் ஒரு பக்கம் மட்டும் ஒளிவீச்சு அதிகரித்து காணப்படுகின்றது.

அப்பகுதியில் செல்லும் வாகனங்களுக்கு அதிக ஒளி பரப்புவதாலும் விளம்பரத்தைப் பார்வையிட்டு வாகனம் செலுத்துவதால் வாகனங்கள் ஒளியைவிடவும் தொலைக்காட்சியின் ஒளி அதிகம் பரப்புவதால் ஒன்றுக்கொன்று விபத்தை ஏற்படுத்தி வருகின்றன.

குறித்த பகுதியில் விளம்பரம் காட்சிப்படுத்தும் தொலைக்காட்சி அமைப்பதற்கு அனுமதி வழங்கும்போது இதனைக்கவனத்தில் கொண்டு வழங்கப்படவேண்டும்.

இவ்வாறு விபத்தை ஏற்படுத்தும் விதமாக அமைத்துள்ளதால் அவ்வீதியூடாகச் செல்வதில் பல அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளதாகவும் அதனை உடனயடியாக அவ்விடத்திலிருந்து அகற்றி வேறு ஒரு பகுதியில் அமைக்குமாறும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

பெண்ணொருவர் கொடூரமாக கொலை!!

ருவான்வெல்ல – கனந்தொட்ட – பராவத்த பகுதியில் வீடொன்றில் இருந்த பெண்ணொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார். அவரது கள்ளக்காதலனால் இன்று காலை இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

பராவத்த – கொட்டியாகும்புர பிரதேசத்தை சேர்ந்த 36 வயதான பெண்ணொருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இன்றைய தினம் அவர் ருவான்வெல்ல நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

கொல்லப்பட்ட மாணவியின் நல்லடக்கத்தில் கதறியழுத ஆயிரக்கணக்கானோர்!!

தன் தாய் மண்ணில் வாழும் மக்களுக்காக போராட்டத்தில் குதித்து துப்பாக்கி சூட்டிற்கு இலக்காகி உயிரிழந்த மாணவி ஸ்னோலினின் உடல் பெருந்திரளான மக்களின் கண்ணீருக்கு மத்தியில் நேற்று நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.

காரப்பேட்டையில் வசித்து வந்த 17 வயதேயான மாணவி ஸ்னோலின் ஸ்டெர்லைட்டால் ஏற்படும் பாதிப்புக்களை கண்முன்னே தினம் தினம் கண்டு வந்த நிலையில் கடந்த மாதம் 22ஆம் திகதி எதிர்ப்பு தெரிவித்து வீதியிலிறங்கிய மாபெரும் அணியில் பங்கு கொண்டார்.

தாயுடன் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டு தனது எதிர்ப்பினை மாணவி ஸ்னோலின் தெரிவித்திருந்தார். இவரின் இந்த ஸ்டெர்லைட்டிற்கு எதிரான குரலுடன், பல்லாயிரக்கணக்கான குரல்களும் இணைந்திருந்தன.

இதன்போது இந்த குரல்களை ஒடுக்கும் வண்ணமாக வெடித்தன துப்பாக்கிகளில் இருந்து வெளிவந்த ரவைகள். இந்த துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் மரணத்தை தழுவிக் கொண்டனர். இன்னும் பலர் குற்றுயிராய் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவத்தில் மரணத்தை அணைத்துக் கொண்டவர்களின் பட்டியலில் மாணவி ஸ்னோலினும் இணைந்து கொண்டார். சம்பவம் நடைபெற்ற இடத்திலேயே அவர் உயிர் மண்ணைவிட்டு பிரிந்த நிலையில், அதன்பின் சரியாக 12 நாட்கள் ஸ்னோலின் உடல் மருத்துவமனையில் வைக்கப்பட்டு இருந்தது.

இதேவேளை, நேற்று காலை ஸ்னோலினின் உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் அவரது வீட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இதன்பின் 20 இற்கும் மேற்பட்ட கிருஸ்தவ குருமார்களின் பங்கேற்புடன் ஆயிரக்கணக்கான மக்களின் கண்ணீருக்கு மத்தியில் ஸ்னோலினின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.

 

வவுனியாவில் 8 மாதக் குழந்தை கடத்தல் : மேலும் ஒருவர் கைது!!

வவுனியாவில் அண்மையில் குட்செட் வீதியிலுள்ள 8 மாதமான ஆண் குழந்தை ஒன்று கடத்தப்பட்டு புதுக்குடியிருப்புப் பகுதியிலிருந்து மீட்கப்பட்டிருந்தது.

சம்பவம் தொடர்பாக இரண்டு பெண்களைக் கைது செய்த பொலிசார் இன்று மேலும் ஒரு சந்தேக நபரான நந்தகோபால் கோபால் என்ற 33 வயதுடைய புதுக்குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்த ஒருவரையும் கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

அதிகாலை 2 மணியளவில் வீட்டிற்குள் நுழைந்த 6 மர்ம நபர்களினால் 8 மாதமுடைய ஆண் குழந்தை கடத்தப்பட்டு 3 தினங்களின் பின்னர் பதுக்குடியிருப்புப் பகுதியில் வைத்து மீட்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் அன்றைய தினம் இரண்டு பெண்களைக் கைது செய்த பொலிசார் அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையை அடுத்து இன்று மேலும் ஒரு நபரைக் கைது செய்துள்ளதாகவும் இவர்களிடம் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதுடன் இன்றைய தினம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

ஐந்து வயது பெண் குழந்தையை கடத்தி விற்பனை செய்த நபர்கள் கைது!!

ஐந்து வயது பெண் குழந்தையை கடத்தி விற்பனை செய்த சம்பவம் தொடர்பில் தலவாக்கலை – லிந்துலை நகர சபையின் தலைவர் அசோக சேப்பால மற்றும் சபை உறுப்பினர் வித்தானகே இசார, அனுருத்த மஞ்சநாயக்க உள்ளிட்ட 4 கைது செய்யப்பட்டுள்ளனர்.

நுவரெலியா காவலல்துறையினரால் நேற்று இரவு இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

2017 ஆம் ஆண்டு குறித்த குழந்தை கடத்தல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவல்துறை ஊடக அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

இந்த நிலையில் கைது செய்யப்பட்டவர்கள் இன்றைய தினம் நுவரெலியா நீதாவன் முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்படவுள்ளனர்.

தூக்கில் தொங்கிய அரசியல் பிரமுகர் : அரசியல் கொலையா?

மேற்குவங்க மாநிலத்தில் பாஜக பிரமுகர் ஒருவரின் உடல் சடலமாக தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

தவா என்கிற ஊரை சேர்ந்தவர் துலால் குமார். இவர் சடலம் புருலியா மாவட்டத்தில் மின்மாற்றி கோபுரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே இதே போல பலராம்பூர் கிராமத்தை சேர்ந்த பாஜக உறுப்பினரான த்ரிலோசன் மகாஜன் என்பவற்றின் சடலம் மரத்தில் இருந்து மீட்க்கப்பட்ட நிலையில் துலால் குமாரின் மரணம் அரசியல் கொலையாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இந்த இரு கொலைகளும் அரசியல் கொலை என்பதால் சிபிசிஐடி பொலிஸார் இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியிருக்கிறார்.

நடுரோட்டில் இளைஞனின் உயிரைக் காப்பாற்றிய பொலிஸ் : குவியும் பாராட்டுக்கள்!!

தமிழகத்தில் விபத்தில் சிக்கி சுயநினைவை இழந்த இளைஞனுக்கு மீண்டும் சுயநினைவை கொண்டு வந்த பொலிசாருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

சென்னை எழும்புர் ஆதித்தனார் சிலை ரவுண்டனா அருகே இன்று காலை அதிவேகமாக இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞர், முன்னால் சென்ற காரின் மீது மோதியதால், அவர் அந்த இடத்திலே சுயநினைவை இழந்தார்.

இதைக் கண்ட அங்கிருந்த போக்குவரத்து காவலர் சிவக்குமார், உடனடியாக அந்த இளைஞரை மீட்டு நெஞ்சுப்பகுதியில் கையை வைத்து அழுத்தி சுயநினைவை வரவழைத்தார்.

அதன் பின் அந்த நபர் ஆம்புலன்ஸ் உதவியுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு உள்ளிட்ட சில சம்பவங்களால் பொலிசார் மீது ஆத்திரத்தில் இருக்கும் மக்கள், தற்போது காவலர் சிவக்குமாரின் செயலை பாராட்டி வருகின்றனர்.

15 கோடி சொத்துக்காக கூலிப்படையை ஏவி கணவனை கொன்ற மனைவி : அதிர்ச்சி சம்பவம்!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் 15 கோடி சொத்துக்காக கூலிப்படையை ஏவி கணவனை கொலை செய்த மனைவியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம், தானே மாவட்டத்தில் கல்யான் டவுன்ஷிப் பகுதியை சேர்ந்தவர் ஷங்கர் கைக்வாட்(44). இவரது மனைவி ஆஷா கைக்வாட்(40), தனது கணவரை கடந்த மே மாதம் 18-ம் தேதியில் இருந்து காணவில்லை என்று பொலிசில் புகார் அளித்திருந்தார்.

இதுதொடர்பாக பொலிசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. தனக்கு சொந்தமாக இருந்த ஏராளமான சொத்துக்களை ஆஷாவின் பெயருக்கு ஷங்கர் ஏற்கனவே எழுதி வைத்திருந்தார். அவரிடம் இருந்த 15 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்தையும் தனது பெயருக்கு மாற்றித்தருமாறு ஆஷா வற்புறுத்தி வந்துள்ளார்.

அது தந்தையின் மூலம் தனக்கு கிடைத்த சொத்து என்பதால் அதை ஆஷாவுக்கு எழுதித்தர ஷங்கர் மறுத்து விட்டதாக தெரிகிறது. எனவே, அந்த சொத்தினை அடைய ஆசைப்பட்ட ஆஷா, கூலிப்படையினரின் துணையுடன் கணவர் ஷங்கரை கொன்றுவிட திட்டம் தீட்டினார்.

இதற்காக, கூலிப்படையை சேர்ந்த ஹிமான்ஷு துபே என்பவரை தொடர்புகொண்ட ஆஷா, கணவரை தீர்த்துக்கட்ட 30 லட்சம் ரூபாய் பேரம்பேசி, 4 லட்சம் ரூபாயை முன்பணமாக கொடுத்துள்ளார்.

இதன்படி, கணவனை தனியாக ஒரு இடத்துக்கு அழைத்து சென்று குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்துள்ளார். கணவன் மயங்கியவுடன் ஏற்பாடு செய்திருந்த கூலிப்படை நபர்களை வரவழைத்து இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்துவிட்டு, உடலை ஒதுக்குப்புறமான இடத்தில் வீசியுள்ளனர்.

பின்னர், எதுவும் நடக்காதது போல பொலிசில் புகார் அளித்துள்ளார். தற்போது இந்த குற்றத்திற்காக ஆஷா மற்றும் இந்த கொலையில் உடந்தையாக இருந்த ஹிமான்ஷு துபே ஆகியோரை கைது செய்து பல்வேறு குற்றப்பிரிவுகளின் கீழ் பொலிசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சுட்டுக் கொல்லப்பட்ட வைத்தியரின் இறுதிக் கிரிகைகள்!!

காசா எல்லைப் பகுதியில் கொல்லப்பட்ட தன்னார்வ தொண்டு நிறுவன வைத்தியரின் இறுதிக்கிரியைகளில் ஆயிரக்கணக்கான பாலஸ்தீனர்கள் கலந்து கொண்டனர்.

21 வயதான ரசான் அல் நஜர் என்ற தன்னார்வ தொண்டு வைத்தியர், கடந்த வௌ்ளிக்கிழமையன்று இஸ்ரேல் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்த கொலை தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக இஸ்ரேல் இராணுவம் அறிக்கையொன்றினூடாக தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் பாலஸ்தீனர்களுக்கிடையில் இடம்பெறும் மோதல்களினால் வாரந்தோரும் 119 பேர் வரை கொல்லப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதெல்லாம் தெரியாமலே அவர் இறந்து விட்டாரே : ரகுவரனின் மனைவி ரோகினி வருத்தம்!!

நடிகர் ரகுவரன் இன்று உயிரோடு இல்லை. அவருக்கு மொழி கடந்தும் மிகத் தீவிரமான ரசிகர்கள் இருப்பதை அவ்வப்போது சில பிரபலங்கள் சிலாகித்துப் பேசும் போது அறிய முடிகிறது.

எனினும், அவர் உயிரோடிருக்கையில் அவரது திரைப்படங்களில் அவரது ஒவ்வொரு அசைவுமே ரசிகர்களால் பெரும் ஆராவாரத்துடன் ஏற்றுக்கொள்ளப்பட்டு ரசிக்கப்பட்டமை குறித்து அவருக்கு பெரிதாக எதுவும் தெரியாது என அவரின் மனைவியும் நடிகையுமான ரோகினி கூறியுள்ளார்.

ஒருவேளை ரசிகர்கள் தன்னை இத்தனை ஆராதிக்கிறார்கள் என்று அறிந்திருந்தால் அவர் மிகவும் மகிழ்ந்திருப்பார். ஆனால், அவருக்கு அப்போது அதெல்லாம் தெரியாது.

நானும், அவரது நண்பர்களும் அவரிடம் அவரது நடிப்புத்திறனைப் பற்றி சிலாகித்துப் பேசுவோம் தான், ஆனால் அவருக்கு அது போதவில்லை. அவரது மரணத்திற்குப் பிறகு ரசிகர்கள் திரையில் ரகுவரனைக் கண்டதுமே ஆர்ப்பரித்துக் கொண்டாடுவதைக் காணும் போது, இதெல்லாம் தெரியாமலே அவர் இறந்து விட்டாரே என்று சில நேரங்களில் மனம் கனத்துப் போகிறது.
என ரோகினி தெரிவித்துள்ளார்.

வகுப்பறையிலே தங்கி பாடம் எடுத்த ஆசிரியர் : ஆனந்த கண்ணீர் சிந்த விட்ட மாணவர்கள்!!

பிரேசிலில் இரண்டு மாதங்களாக பள்ளி நிர்வாகம் சம்பளம் தராத காரணத்தினால், மாணவர்கள் தங்களுடைய பணங்களை ஆசிரியருக்கு கொடுத்த சம்பவம் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

பிரேசிலில் ஆசிரியர் ஒருவருக்கு பள்ளி நிர்வாகம் சம்பளம் தர முடியாத சூழ்நிலையில் இருந்ததால், அவர் வகுப்பறையிலே தங்கி மாணவர்களுக்கு பாடம் சொல்லி கொடுத்து வருகிறார்.

ஆசிரியருக்கு சம்பளம் கொடுக்கப்படுவதில்லை என்பதை அறிந்த அந்த மாணவர்கள் உடனடியாக தாங்கள் சேமித்து வைத்திருந்த பணங்களை எடுத்துக் கொண்டு வந்து ஆசிரியரிடம் கொடுத்துள்ளனர்.

அந்நாட்டு மதிப்பு படி சுமார் 1,505 ரியாலை மேஜையின் மீது வைத்துள்ளனர். இதைக் கண்டு முதலில் வாங்க மறுத்த அவர் அதன் பின் மாணவர்களிடன் அன்பு மிகுதியைக் கண்டு ஆனந்த கண்ணீர் வடித்தார். இதைக் கண்ட மாணவர்கள் அவரை அரவணைத்து சமாதானம் கூறி தேற்றினர்.

இரண்டாவது திருமண ஆசைக்கு இணங்க மறுத்ததால் பெண் உயிரோடு எரித்துக் கொலை!!

சென்னை அண்ணா நகரை சேர்ந்த பெண் ஒருவர் செங்கல்பட்டு பழவேலி அருகே எரித்து கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

அடையாளம் காண முடியாத அளவிற்கு கருகியிருந்ததால் உடலுக்கு சொந்தக்காரரை கண்டுபிடிப்பதில் தாமதம் ஏற்பட்டது. கேரளாவில் காணாமல் போன மாணவி ஜேசா வாக இருக்கலாம் என்கிற அடிப்படையில் கேரளா பொலிஸார் வந்து பார்த்து விட்டு ஜேசா மூக்கு குத்தியிருக்க மாட்டார் என்பதால் இது ஜேசா இல்லை என்று உறுதி செய்தது.

இந்நிலையில் சென்னை அண்ணாநகரை சேர்ந்த பொக்கிஷ மேரியை காணவில்லை என்று அவரது பெற்றோர் புகார் அளித்ததால், அவர்களை அழைத்து சென்று சடலத்தை அடையாளம் காண சொன்னது காவல்துறை.

இறந்து போன சடலம் கடந்த ஞாயிறன்று காணாமல் போன தங்கள் மகள்தான் என்று பெற்றோர் உறுதி செய்தனர்.

பொக்கிஷ மேரி எதற்காக பழவேலி சென்றார் அவர் கடத்தப்பட்டாரா என்று விசாரணை செய்ததில் அவர் அண்ணா நகரை சேர்ந்த பாலா என்பவரை எட்டு வருடமாக காதலித்ததாகவும் பாலாவிற்கு ஏற்கனவே திருமணம் ஆகியிருந்தது என்பதால் இரண்டாம் திருமணம் செய்து கொள்ள பொக்கிஷ மேரி மறுத்ததாகவும் தெரிய வந்துள்ளது.

இதனால் தனது இரண்டாம் திருமண கனவு கலைந்து போன ஆத்திரத்தில் காதலன் பாலா பொக்கிஷ மேரியை பழவேலிக்கு அழைத்து சென்று தன் நண்பன் உதவியுடன் உயிரோடு எரித்துக் கொலை செய்ததாக தெரியவந்துள்ளது.

தற்போது கைது செய்யப்பட்டுள்ள இவ்விருவரும் சிறையில் இருக்கின்றனர். காதலின் பெயரால் நடந்த கொடூரம் அப்பகுதி மக்களை உறைய செய்திருக்கிறது.