பிறப்புறுப்பு இல்லாமல் பிறந்த பெண் : உலகில் முதல் முறையாக மீனின் தோல் மூலம் அறுவை சிகிச்சை!!

பிரேசில் நாட்டில் பிறப்புறுப்பு இல்லாமல் பிறந்த பெண்ணுக்கு உலகில் முதல் முறையாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டு மீனில் தோல்கள் மூலம் பிறப்புறுப்பு வைக்கப்பட்டுள்ளது.

Jucilene Marinho (23) என்ற இளம்பெண் பிறப்பிலேயே பிறப்புறுப்பு இல்லாமல் பிறந்தவர். மேலும் கருப்பை வாய் மற்றும் கருப்பையும் இல்லாத காரணத்தால் இவரால் குழந்தை பெற்றுக்கொள்வதும் இயலாது.

இவர் பிறக்கும்போதே Mayer-Rokitansky-Küster-Hauser (MRKH) சிண்ட்ரோம் குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்த குறைபாடு அதிகமாக பெண்களுக்குதான் ஏற்படும். இது பெண்களின் இனப்பெருக்க அமைப்பை பாதிக்கிறது. இதனால், யோனி மற்றும் கருப்பை வளர்ச்சி இல்லாமல் அப்படியே உடலினுள் உள்வாங்கி காணப்படும்.

15 வயதில் இருந்து பிரச்சனையை எதிர்கொண்ட Jucilene, தான் இந்த உலகில் பிறந்திருக்கவே கூடாது என கவலைகொண்டுள்ளார். இதுபோன்ற ஒரு குறைபாட்டால் என்னால் குடும்ப வாழ்க்கையிலும் ஈடுபட இயலாதே என வெட்கி தலைகுனிந்தேன். எனது உலகமே முடிந்துவிட்டது என நினைத்தேன்.

இந்நிலையில் தான் எனது பெற்றோரிடன் உதவியுடன் அறுவை சிகிச்சை செய்துகொள்ள முடிவு செய்தேன். மீனின் தோலமைப்பை பயன்படுத்தி பிறப்புறுப்பு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

இதற்காக Tilapia என்ற மீனின் தோல்கள் பயன்படுத்தப்பட்டன. எதற்காக இந்த மீனின் தோல்கள் பயன்படுத்தப்பட்டன என்பதற்கான காரணத்தை கூறிய மருத்துவர்கள், இந்த வகை மீனில் அதிகமாக பாக்டீரிய தொற்றுக்கள் இருக்காது. இதனை பயன்படுத்துவதால் மனிதர்களுக்கு எவ்வித வலியும் இருக்காது. இந்த தோலில் இருந்து பிறப்புறுப்பு வடிவம் வெட்டியடுக்கப்பட்டு பொருத்தப்பட்டுள்ளது.

சுமார், 3 வாரங்கள் இந்த அறுவை சிகிச்சைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது. தற்போது அப்பெண் நலமாக இருக்கிறார் என கூறியுள்ளனர்.

இதுகுறித்து அப்பெண் கூறியதாவது, இந்த அறுவை சிகிச்சையால் நான் நலமாக இருக்கிறேன். இனி எனது காதலனோடு வாழ்க்கையை சந்தோஷமாக கழிப்பேன். எனது பெற்றோரும் என்னை நினைத்து மகிழ்ச்சி கொண்டுள்ளார்கள் என கூறியுள்ளார்.

8 பெண்களை கொன்ற சைக்கோ கொலையாளி : இறுதியில் பிடிபட்டான்!!

8 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற சைக்கோ கொலையாளி இறுதியில் போலீசாரிடம் பிடிபட்டான்.

பெங்களூரு அருகே உள்ள யக்ஷந்த்புர் மற்றும் பீன்பூர் ஆகிய இடங்களில் இளம்பெண்கள் இருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டனர். மேலும் அவர்களின் நகைகளும் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.

இதே முறையில் மேலும் சில பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டதால் இதற்கு பின்னணியில் சைக்கோ கொலையாளி யாரவது காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டது.

போலீஸ் விசாரணையில் கொலையாளி யார் என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை. ஆகவே அக்கம்பக்கதினர் கூறியதை வைத்தும் , சிசிடிவி கேமராவில் தென்பட்ட காட்சிகளை வைத்தும் குற்றவாளியை பிடிக்க போலீசார் முயன்றனர்.

இறுதியாக குற்றவாளியை கண்டுபிடித்த போலீசார் உடனடியாக கைது செய்யாமல் அவனது நடவடிக்கைகளை கண்காணித்தனர்.

கடந்த 28ஆம் தேதி அன்று பெங்களூரு புறநகர் பகுதியில் அவனை சுற்றி வளைத்து கைது செய்தனர்.

முதற்கட்ட விசாரணையில் அவனது பெயர் துரை என்றும் கோவையை சேர்ந்தவன் என்றும் தெரிய வந்துள்ளது.

இதுவரை 8 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற நிலையில் இன்னும் எத்தனை பேரை அவன் இப்படி கொன்றிருக்கிறான் எந்தெந்த ஊர்களில் இது போல கொடூர சம்பவம் நடந்திருக்கிறது என்றும் போலீசார் அவனை விசாரித்து வருகின்றனர்.

விசாரணையை தொடர்ந்து பெங்களூரு மற்றும் கர்நாடக உள்புற மாவட்டங்களில் இது போன்ற கொலைகளை செய்ததாக அவன் ஒப்பு கொண்டிருக்கிறான். மேலும் விசாரணை தொடர்கிறது.

வவுனியாவிலுள்ள அலுவலகம் ஈரப்பெரியகுளத்திற்கு இடமாற்றம் : தடுத்து நிறுத்த விவசாயிகள் கோரிக்கை!!

மன்னார், வவுனியா பிராந்திய தென்னை பயிர்ச் செய்கை காரியாலயத்தினை ஈரப்பெரியகுளம் பகுதிக்கு இடமாற்றம் செய்ய நடவடிக்கை இடம்பெற்று வருகின்றன.

இவ் அலுவலகத்தினை வவுனியா மாவட்ட செயலகத்திலுள்ள ஒரு பகுதியில் அமைத்துத்தருமாறு விவசாயிகள் கோரியுள்ளார்கள். விவசாயிகள் மேலும் தெரிவிக்கும்போது,

வவுனியா தெற்கு சிங்கள பிரதேச செயலகப்பிரிவிலுள்ள ஈரப்பெரியகுளம் பகுதியில் அரை ஏக்கர் காணியில் தென்னை பயிர்ச்செய்கை அலுவலகத்தினை நிரந்தரமாக அமைப்பதற்கு ஒதுக்கப்பட்டுள்ளதுடன் அங்கு கொண்டு செல்வதற்கு பெரும்பான்மை இனத்தவர்களினால் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதனால் வவுனியா நகரப்பகுதியிலுள்ள தென்னை பயிர்ச் செய்கை அலுவலகத்திற்கு ஈரப்பெரியகுளம் செல்லவேண்டிய நிலை எற்பட்டுள்ளது.

இதனை தடுத்து நிறுத்தவதற்கு வன்னி மாவட்ட அரசியல் பிரமுகர்கள் நடவடிக்கை மேற்கொள்வதுடன் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியிலிருந்து இவ் அலுவலகத்தினை ஈரப்பெரியகுளம் பகுதிக்கு மாற்றுவதற்கு தேசியக்கட்சி ஒன்று மும்முரமாக நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் விவசாயிகள் குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளனர். இதனால் விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தற்போது தென்னை பயிர்ச் செய்கை காரியாலயமானது தாண்டிக்குளம் பகுதியில் அமைந்துள்ளது. அக்காரியலாயத்திற்கான அலுவலகம் ஒன்றினை மாவட்ட செயலகத்திலிருந்து பெற்று வழங்குமாறும் இக்காரியலாயம் ஈரப்பெரியகுளம் பகுதிக்கு செல்வததைத்தடுத்து நிறுத்த முன்வருமாறு மக்கள் பிரதிநிதிகளிடம் விவசாயிகள் கோரியுள்ளார்கள்.

தென்னை பயிர்ச் செய்கை அலுவலகத்தில் விவசாயிகள் தென்னங்கன்று கொள்வனவு, காணி அபிவிருத்தி செய்யும் கடன்திட்டம், நீர்ப்பாசனம், மாட்டுத்தொடுவம், விவசாயக்காணி, உரப்பாவனை ஊடுபயிர் போன்ற மானிய அடிப்படையில் கடன்திட்டம் என்பன வழங்கிவைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ரஜினியின் காலாவிற்கு எதிராக போர்க்கொடி தூக்கிய லண்டன்வாழ் தமிழர்கள்!!

ரஜினி நடிப்பில் உருவாகியிருக்கும் காலா திரைப்படம் உலகம் முழுவதும் இந்த வாரம் வெளியாகவுள்ளது.

தூத்துக்குடி போராட்டம் சம்மந்தமாக ரஜினி தெரிவித்த கருத்துக்கள் பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ள நிலையில் காலா திரைப்படத்தை புறக்கணிக்க வேண்டுமென உலகம் முழுவதிலும் இருக்கும் பல தமிழர் அமைப்புகள் அறிவித்து கொண்டிருக்கின்றன.

இதற்கு நோர்வே, சுவிஸ் நாடுகளுக்கான திரைப்பட விநியோகித்தர்கள் ஏற்றுக்கொண்டு தமது நாடுகளில் காலா திரைப்படத்தை திரையிடவில்லை என அறிவித்துள்ளனர்.

இந்நிலையில், தமிழர்கள் செரிந்து வாழும் பிரித்தானிய திரையரங்குகள் எங்கும் “தன்மானத் தமிழர் படை” எனும் பெயரில் ரஜனியை எச்சரித்தும், காலாவை எதிர்த்தும் பரவலாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன.

இது அங்கு வாழும் தமிழ் மக்கள் மத்தியில் பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவில் குளத்தில் மூழ்கி இளைஞர் ஒருவர் பலி!!

முள்ளியவளை – மதவாளசிங்கன் குளத்தில் குளிக்கச் சென்ற இளைஞர்களில் ஒருவர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

முள்ளியவளையை சேர்ந்த 6 இளைஞர்கள் நேற்று முன்தினம் பிற்பகல் முல்லைத்தீவு, மதவாளசிங்கன் குளத்திற்கு குளிக்கச்சென்றுள்ளனர். இதன்போது குளித்துக்கொண்டிருந்தவர்களில் ஒருவர் திடீரென காணாமல் போயுள்ளார்.

அவர் குளத்தில் மூழ்கியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் குளித்துக்கொண்டிருந்த ஏனைய இளைஞர்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸாரும், பொதுமக்களும் குறித்த இளைஞனை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். இந்த நிலையில் குறித்த இளைஞனின் சடலம் நேற்று காலை மதவாளசிங்கன் குளத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளது.

முள்ளியவளை 01ம் வட்டாரம் பொன்னகரை சேர்ந்த இந்திரன் தகீசன் (வயது 21) என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இலத்திரினியல் தொழில்நுட்பம் திறமை வாய்ந்த குறித்த இளைஞனை இழப்போம் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை என்று அந்த பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து பலி கேட்கும் நீட் தேர்வு : தமிழகத்தில் இன்னொரு அனிதா!!

நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுதியுள்ளது.

தமிழகத்தின் விழுப்புரத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளியின் மகள் பிரதீபா என்ற மாணவி நீட் தேர்வில் தோல்வியடைந்த காரணத்தால் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

பிரதிபா 12 வகுப்பில் 1,125 மதிப்பெண்கள் எடுத்தவர். தற்போது நீட் தேர்வு முடிவில் அவர் 39 சதவீத மதிப்பெண்கள் மட்டுமே பெற முடிந்தது.

இதனால் விரக்தியில் அவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். பிரதீபா கடந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் 155 சதவீத மதிப்பெண்கள் எடுத்திருந்தார்.

அந்த மதிப்பெண்ணைக் கொண்டு தனியார் மருத்துவமனையில்தான் சேருவதற்கான வாய்ப்பு இருந்த நிலையில், பணம் இல்லாத காரணத்தால் அப்போது மருத்துவத்தில் சேரவில்லை.

ஏற்கெனவே, நீட் தேர்வில் தோல்வியடைந்த காரணத்தினால் அரியலூரைச் சேர்ந்த அனிதா என்ற மாணவி தற்கொலை செய்துகொண்டது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது.

இந்தநிலையில் தற்போது விழுப்புரத்தைச் சேர்ந்த மாணவி பிரதீபா தற்கொலை செய்து கொண்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

14 ஆண்டுகளாக வெளிநாட்டில் இருக்கும் மனைவி : தகவலறியாது தவிக்கும் கணவன்!!

14 வருடங்களுக்கு முன்னர் வெளிநாட்டுக்கு பணிப்பெண்ணாக சென்ற தனது மனைவியை நாட்டிற்கு அழைத்து வருவதற்குரிய ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு அவரது கணவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

லெபனானுக்கு வேலைவாய்ப்புக்காக சென்ற குறித்த பெண் தொடர்பான தகவல் எதுவும் கிடைக்கவில்லையென அவர் தெரிவிக்கின்றார். பலாங்கொட பெட்டிகல மஸ்ஹென்ன என்ற பகுதியை சேர்ந்த வசந்தா எனும் பெண் 2004ம் ஆண்டு வெளிநாடு சென்றார்.

அவ்வாறு வெளிநாட்டுக்கு சென்ற இப் பெண் 8 மாத காலமாக தொலைபேசி மூலம் தம்முடன் தொடர்பு கொண்டதாகவும் அவரது கணவரான விஜேகுமார் தெரிவிக்கின்றார்.

அதன் பின்னர் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லையெனவும் இதனால் தமது பிள்ளைகளை கவனிப்பதில் கடும் அசௌகரியங்களை எதிர்கொண்டு வருவதாகவும் அவரது கணவர் தெரிவித்துள்ளார்.

தனது மனைவி தொடர்பில் பல்வேறு அதிகாரிகளுக்கு தெரிவித்த போதும் அதற்கு உரிய பதில் கிடைக்கவில்லையெனவும் விஜேகுமார் ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார்.

இக்குழந்தைகள் இருவரும் தாய்ப்பால் அருந்தும் வயதிலேயே தாய் வெளிநாடு சென்றார். தற்போது 14 வருடங்கள் கழிந்து விட்டன. இதுவரை எவ்வித தகவல்களும் இல்லை.

வெளிநாட்டு பணியகத்திற்கு பல்வேறு தடவைகள் சென்று முறையிட்டேன் இதுவரை எவ்வித தகவல்களும் இல்லை. எனது மனைவியை மீட்டு தர வேண்டும். அல்லது பிள்ளைகளுக்கு நட்டஈடு வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

வவுனியாவில் மருந்தக களஞ்சியத்தில் தீ விபத்து : தீயணைப்புப் படையினர் விரைவு!!

 

வவுனியா வைரவப்புளியங்குளத்தில் அமைந்துள்ள இராசையா மருந்த களஞ்சியத்தில் இன்று (04.06.2018) இரவு 9.15 மணியளவில் திடீர் தீ விபத்து நகரசபை தீயணைப்பு படையினரின் உதவியுடன் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

வவுனியா வைரவப்புளியங்குளம் இராசதுரை வீதியில் அமைந்துள்ள இராசையா மருந்தகத்தின் உரிமையாளரின் இல்லத்தில் உள்ள மருந்தக களஞ்சியத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து நகரசபையின் தீயணைப்பு படையினரின் உதவியுடன் வவுனியா பொலிஸாரும் இணைந்து சுமார் 30 நிமிடங்களாக போராடி தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

களஞ்சியசாலையில் ஆயுள்வேத மருந்து தயாரித்துக் கொண்டிருந்த வேளையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக சம்பவ இடத்தில் நின்றவர்கள் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கையில் சிக்கிய பாரிய முதலை முட்டை : ஆபத்து என எச்சரிக்கை!!

 

தென்னிலங்கை பகுதியில் பெருந்தொகை முதலை முட்டைகளை பொலிஸார் மீட்டுள்ளனர். மாத்தறை, பிட்டபத்தர பீரிஸ் தோட்ட பிரதேசத்தில் இருந்து பாரிய அளவிலான முதலை முட்டைகள் நேற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

அந்தப் பகுதியிலுள்ள ஏரிக்கு அருகில் உள்ள பலா மரம் ஒன்றை சென்ற நபர் இந்த முதலை முட்டைகளை அவதானித்துள்ளார். விடயம் தொடர்பில் பிட்டபத்தர பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

பொலிஸாரினால் மிரிஸ்ஸ வனவிங்கு திணைக்களத்திற்கு அறிவிக்கப்பட்டு வனவிலங்கு அதிகாரிகள் அவ்விடத்திற்கு சென்றுள்ளனர்.

அங்கு சென்ற அதிகாரிகள் முதலை முட்டைக்கு அருகில் சென்ற போது முதலை ஒன்று ஏரியில் பாய்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அந்த இடத்தில் இருந்து 48 முட்டைகள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் அவற்றில் 44 முட்டைகள் நல்ல நிலையில் மீட்கப்பட்டுள்ளன. ஒரு வாரத்திற்கு முதலை முட்டை இருக்கும் இடத்திற்கு மக்கள் செல்வது ஆபத்து என வனவிலங்கு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

25 அடி பள்ளத்தில் வீழ்ந்த வான் : மூன்று பேர் படுகாயம்!!

தலவாக்கலை – பூண்டுலோயா பிரதான வீதியில் ஹொலிரூட் பகுதியில் வான் ஒன்று விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த மூன்று பேர் படுகாயங்களுக்குள்ளாகி லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து சம்பவம், இன்று மாலை 4.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் படுகாயங்களுக்குள்ளான ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக வைத்தியசாலையின் அதிகாரியொருவர் கூறியுள்ளார்.

பூண்டுலோயா பகுதியிலிருந்து தலவாக்கலை நோக்கி சென்று கொண்டிருந்த வான் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியள்ளது. விபத்தில் வான் கடும் சேதத்திற்குள்ளாகியுள்ளது.

குறித்த வான் அரச சார்பான நிறுவனத்திற்கு சொந்தமானது என்றும் வீதி வழுக்கியதால் சாரதியால் வானை கட்டுப்படுத்த முடியாமல் போனதால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.

இதேவேளை, இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை தலவாக்கலை போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியா நகர பிதாவிடம் மன்னிப்புக்கோரிய சிறைக்காவலர்கள்!!

வவுனியா நகரபிதாவினை அவமரியாதை செய்த சிறைக்காவலர் இன்று (04.06) வவுனியா பொலிஸ் நிலையத்தில் பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி முன்னிலையில் மன்னிப்பு கோரியிருந்ததாக வவுனியா நகரபிதா இ.கெளதமன் தெரிவித்தார். இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில்,

மே மாதம் 18ம் திகதி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனின் அழைப்பின் பேரில் வவுனியா நகரசபைக்கும் நீதிமன்றத்திற்கும் இடையில் அமைந்துள்ள ஒரு காணியொன்றினையும் பல காலம் மூடப்பட்டு இருக்கும் பாதையொன்றினையும் பார்வையிடுவதற்காக சென்றிருந்தோம்.

இதன் போது சிறைக்காவலர்கள் தங்களுக்கு நீர்ப்பிரச்சினை என்பது பெரியதொரு பிரச்சினையாக இருப்பதாக கூறியிருந்தனர். இதற்கு நீண்டகாலமாக மூடப்பட்டுள்ள பாதையினை திறந்துவிடுவதன் மூலம் இதற்கான தீர்வினை எடுக்க முடியும் என்று அவர்களிற்கு வாக்குறுதியளித்திருந்தேன்.

கடந்த 28ம் திகதி மீண்டும் நகரசபை சாரதி, செயலாளர் உடன் சென்று பார்வையிட்டுவிட்டு திரும்பும் போது ஒரு சிறைக்காவலாளி என்னை தரக்குறைவாக பேசியதுடன் நான் நகரபிதா என தெரிவித்த போதும் அதனை உதாசினப்படுத்தியதுடன் அவமானப்படுத்தியிருந்தார்.

இது தொடர்பாக பொலிசில் முறைப்பாடு செய்திருந்தேன். மேலும் சிறைக்காவலரின் இச்செயலுக்கு கண்டனம் தெரிவித்து பாரளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபை தலைவர் வவுனியா நகரசபை உறுப்பினர்கள், பொது அமைப்புக்கள் வர்த்தகர் சங்கம் என்பவற்றால் கண்டன ஆர்ப்பாட்டங்கள் செய்யப்பட்டிருந்தன.

இந் நிலையில் நீண்ட நாட்களின் பின்னர் சிறைக்காவலர்கள் வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் முன்னாள் என்னிடம் மன்னிப்பு கோரியிருந்தனர். இதனை நான் மனிதாபிமான ரீதியில் மன்னிப்பளித்திருந்தேன்.

குறிப்பாக இரண்டு கிழமைகளுக்கு முன்பு கூட சிறைக்காவலர்களின் நடத்தைகள் மற்றும் கைதிகளை நடாத்தும் விதங்கள் தொடர்பாக வவுனியா சட்டத்தரணிகளால் ஆர்ப்பாட்டம் ஒன்றும் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

வவுனியாவின் நகர பிதாவான என்னிடமே இவ்வாறு நடந்துகொள்ளும் இவர்கள் சிறைக்கைதிகளிடமோ அல்லது வேறு யாருடனோ எவ்வாறு நடந்து கொள்வர் என்பது ஒரு கேள்விக்குறியாகவே இருக்கின்றது என தெரிவித்தார்.

வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு இராணுவ வீரர்கள் உட்பட இரு சிறுவர்கள் வைத்தியசாலையில்!!

வவுனியா ஈரற்பெரியகுளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு இராணுவ வீரர்கள் உட்பட இரு சிறுவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் பற்றி அறியவருவதாவது..

இன்று (04.06) மாலை 6 மணியளவில் வவுனியா ஈரற்பெரியகுளம் பகுதியில் (சிங்கள பிரதேச சபை முன்பாக) வவுனியா நோக்கி பயணித்து கொண்டிருந்த இராணுவ ஜீப் வண்டி ஒன்று அதே திசையில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த இரண்டு சிறுவர்கள் சமநிலை தடுமாறி வீதியின் குறுக்கே துவிச்சக்கர வண்டி பயணித்த போது சிறுவர்கள் மீது மோதுவதை தவிர்ப்பதற்காக இராணுவ ஜீப் வண்டி அருகில் இருந்த மின் கம்பத்துடன் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது

இதில் சிறுவர்கள் இருவரும் சிறு காயங்களுக்கு உள்ளாகி வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் இரண்டு இராணு வீரர்கள் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலதிக விசாரணைகளை ஈரற்பெரிய குளம் பொலிசாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

 

புதிய சாதனையில் இணைந்த ஆப்கானிஸ்தானின் ரஷீத்கான் : முதலிடத்தில் நீடிக்கும் இலங்கை வீரர்!!

வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில் 3 விக்கெட் கைப்பற்றியதன் மூலம், குறைந்த டி20 போட்டியில் 50 விக்கெட்டுகள் கைப்பற்றிய 2வது வீரர் என்ற சாதனையை ஆப்கானிஸ்தான் வீரர் ரஷீத்கான் படைத்துள்ளார்.

வங்கதேசத்திற்கு எதிராக நேற்று நடந்த டி20 போட்டியில், 45 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ரஷீத்கான் 13 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதன்மூலம் டி20 போட்டிகளில் 50 விக்கெட்டுகளை அவர் கடந்தார். ரஷித்கான் இந்தப் போட்டியில் முதல் விக்கெட்டை கைப்பற்றியபோது, குறைந்த போட்டிகளில் 50 விக்கெட்டுகளை வீழ்த்திய 2வது வீரர் என்ற சாதனையை படைத்தார்.

ரஷீத்கான் 31 போட்டிகளில் 52 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். தென் ஆப்பிரிக்காவின் இம்ரான் தாஹிரும் தனது 31வது போட்டியில் 50வது விக்கெட்டை வீழ்த்தியதால், ரஷீத்கான் அவருடன் இரண்டாவது இடத்தை பகிர்ந்துள்ளார்.

இலங்கை வீரர் அஜந்த மெண்டீஸ் 26 ஆட்டத்தில் 50 விக்கெட்டுகள் வீழ்த்தியதால், அவர் முதல் இடத்தில் நீடிக்கிறார்.

கண்ணீர் விட்டு கதறிய அகதி பெண்ணின் சோகக்கதை!!

மியான்மரில் ஏற்பட்ட இனப்பிரச்சனை காரணமாக அங்கிருந்து தப்பித்து, தங்கள் குடும்பத்தினருடன் வங்கதேசத்தில் சரணடைந்த அகதிகள் அங்கு சந்திக்கும் பிரச்சனைகள் ஏராளம்.

வங்கதேச முகாம்களில் இவர்களுக்கு போதிய வசதிகள் கிடையாது. இருப்பிடம், உணவு இல்லாவிட்டால் கூட பரவாயில்லை ஆனால், அங்குள்ள பெண்களும், சிறுமிகளும் கட்டாயத்தின் அடிப்படையில் பாலியல் தொழிலுக்கு உட்படுத்தப்படுகிறார்கள்.

இங்கேயிருக்கும் அகதி முகாம்களில் பாலியல் தொழிலுக்காக பெண்களை கடத்துவது பெரும்பாலும் அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான். அகதிகளில் அதிகம் பாதிக்கப்படுவது பெண்களும், சிறுமிகளும்தான். அதுவும் அவர்களுக்கு இழைக்கப்படும் பாலியல் வன்கொடுமைகளோ சித்தரவதைகளின் உச்சகட்டம்.

வெளிநாடுகளில் வேலை, தலைநகர் டாக்கா மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஹோட்டலில் வேலை வாங்கித்தருவதாக தங்களுக்கு ஆசை காட்டப்படுவதாக ரோஹிஞ்சா அகதிகள் கூறுகின்றனர்.

மேலும், அதிக முகாம்களை பாதுகாக்கும் பாதுகாப்பு அதிகாரிகளாலே இப்பெண்கள் பாலியல் துன்பறுத்தல்களுக்கு ஆளாகிறார்கள்.

சமீபத்தில், Uma Suleiman என்ற அகதி பெண் தனக்கு பிறந்த குழந்தையை தனக்கு வேண்டாம் என கண்ணீர் விட்டு கதறுகிறார். இதற்கு அவர் சொல்லும் காரணம் பரிதாபத்தை ஏற்படுத்துகிறது.

எனது வயது 30. எனக்கு 5 குழந்தைகள் உள்ளனர். எனது கணவர் சில ஆண்டுகளுக்கு முன்னர் இறந்துவிட்டதால் விதவையான நான் இந்த குழந்தைகளோடு தப்பித்து வங்கதேசம் வந்தேன்.

இங்கு முகாம்களில் நான் சந்தித்த சித்ரவகைள் ஏராளம். அதிகாரி ஒருவர் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளான நான், அதனால் கர்ப்பமானேன். மேலும் இங்குள்ள பெண்களை போதைகளுக்கு அடிமையாக்கி பாலியல் துன்புறுத்தல்கள் செய்கிறார்கள்.

கர்ப்பமான நான் குழந்தை பெற்றெடுத்தேன். இந்த குழந்தையின் தந்தையாக நான் யாரை சொல்வேன். ஏற்கனவே எனக்கு 5 குழந்தைகள் உள்ள நிலையில், முதல் பிள்ளைக்கு 16 வயதாகிறது. அப்படியிருக்கையில் அப்பா யாரென்று தெரியாத இக்குழந்தையை வளர்த்தால் அவனது எதிர்காலம் என்னவாகும் என கண்ணீர் சிந்தியுள்ளார்.

ரகசியங்களை வெளியிடாதே : மெர்க்கலை எச்சரித்த இளவரசர் ஹரி!!

பிரித்தானிய அரச குடும்பத்தின் மருமகளாகியுள்ள மெர்க்கல், அதிகம் பேசும் தன்மை கொண்டவர் என்பதால் அரச குடும்பத்து விடயங்களை தனது நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளக்கூடாது என இளவரசர் ஹரியால் எச்சரிக்கப்பட்டுள்ளார் என நடிகையும், மெர்க்கலின் தோழியுமான Millie Mackintosh கூறியுள்ளார்.

அமெரிக்க நடிகையான மெர்க்கலுக்கு பிரித்தானியாவில் உள்ள 6 தோழிகளில் Millie Mackintosh என்ற நடிகையும் ஒருவர். இவருக்கு திருமணத்திற்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.

மேலும், மெர்க்கலின் மணப்பெண் தோழியாக இவர் இருக்கப்போகிறார் எனற செய்திகள் கூட வெளியாகின. திருமணம் முடிந்த பின்னர், ஹரி – மெர்க்கல் தம்பதியினரின் புகைப்படத்தை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், அரச குடும்பத்து ரகசியங்களை வெளிவட்டார நபர்களிடம் எக்காரணம் கொண்டும் பகிர்ந்துகொள்ளக்கூடாது என ஹரி, மெர்க்கலை எச்சரித்துள்ளார் என Millie Mackintosh கூறியுள்ளார்.

மேலும், எந்த ஒரு விடயத்தையும் ஒன்றுக்கு இரு முறை மெர்க்கலிடம் ஹரி எடுத்துகூற மாட்டார். எந்த ஒரு விடயமாக இருந்தாலும் ஒருமுறை கூறியதோடு விட்டுவிடுவார் என கூறியுள்ளார்.

நிறைமாத கர்ப்பிணி பெண்ணின் மார்பில் ஊசி : எனக்கு பயமாக இருக்கிறது என்று கண்ணீர்!!

தமிழகத்தில் நிறைமாத கர்ப்பிணி பெண் ஒருவர், தன் மார்பில் ஊசி இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அடுத்த கோவிந்தபுரத்தை சேர்ந்தவர் வடிவேல். கூலித்தொழிலாளியான இவருக்கு சசிகலா(26) என்ற மனைவி உள்ளார்.

இவர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 20ஆம் திகதி கும்பகோணம் அரசு மருத்துவமனையில் காய்ச்சலுக்காக சிகிச்சை பெற்றுள்ளார். அப்போது அங்கு செவிலியர்கள் கவனக்குறைவாக ஊசி போட்டதால், ஊசியின் பாதிமுனை உடைந்துள்ளது.

இதன் காரணமாக அவருக்கு கையில் தொடர்ந்து வலி ஏற்பட்டுள்ளது. அதன் பின் எக்ஸ்ரே எடுத்து பார்த்தபோது ஊசி இருப்பதை மருத்துவர்கள் ஒப்புகொண்டனர்.

இதையடுத்து கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவரை மருத்துவர்கள் உடனடியாக தஞ்சை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

அன்று இரவே அறுவை சிகிச்சை செய்து ஊசியை அகற்றியுள்ளனர். அறுவை சிகிச்சை செய்த போதும் கையில் தொடர்ந்து ஏதோ சசிகலாவை உறுதிக் கொண்டு இருந்துள்ளது.

கணவரோ அறுவை சிகிச்சை செய்ததால், அது போன்ற உணர்வு இருக்கும், பின்னர் சரியாகவிடும் என்று கூறியுள்ளார்.

இருப்பினும் வலி அதிகமானதால் மருத்துவரிடம் மீண்டு சென்று பரிசோதித்த போது தற்போது மார்பு பகுதியில் ஊசி இருப்பது தெரியவந்துள்ளது.

இதை அறிந்து அதிர்ச்சியடைந்த சசிகலா, அறுவை சிகிச்சை செய்வதாக கூறி ஏமாற்றி உள்ளனர். எனக்கு பயமாக உள்ளது என்று கண்ணீருடன் கூறியுள்ளார்.

மேலும் சசிகலாவின் கணவர் வடிவேல் கூறுகையில், கலெக்டரிடம் இது குறித்து மனு அளித்துள்ளோம். அம்மனுவில் சசிகலா தற்போது கர்ப்பமாக உள்ளார் என்று குறிப்பிட்டுள்ளோம்.

இதனால் தாய்சேய் உயிரை காக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென குறிப்பிட்டுள்ளோம் எனவும் கூறியுள்ளார்