கணவரின் சகோதரர் செய்த மோசமான செயல் : உயிரை விட்ட இளம்பெண் : கடிதம் சிக்கியது!!

இந்தியாவில் கணவரும், அவர் சகோதரரும் தொடர்ந்து கொடுமைப்படுத்தியதால் பெண் உயிரிழந்துள்ள நிலையில் அது தற்கொலையா அல்லது கொலையா என விசாரிக்கப்பட்டு வருகிறது.

கொல்கத்தாவை சேர்ந்தவர் மிராகாங்கோ ராய் (37). இவர் மனைவி பயில் சக்கரபோர்டி (33).இவர்களுடன் ராயின் அம்மாவும், சகோதரர் மிருதுலும் (42) ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.

ராய்க்கும், பயிலுக்கும் திருமணமாகி ஒரு ஆண்டு ஆகும் நிலையில் ஆரம்பம் முதலே பயிலை ராயும், மிருதுலும் கொடுமைப்படுத்தி வந்துள்ளனர்.

இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் பயில் வீட்டில் தூக்கில் சடலமாக தொங்கியுள்ளார். சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் பயிலின் சடலத்தை கைப்பற்றிவிட்டு அங்கிருந்த கடிதத்தை கைப்பற்றியுள்ளார்கள். கடிதத்தில் கணவர் மற்றும் மிருதுல் செய்த கொடுமையை பயில் எழுதியுள்ளதாக தெரிகிறது.

இதனிடையில் பயிலை ராயும், மிருதுலும் சேர்ந்து கொலை செய்துவிட்டதாக பயில் குடும்பத்தார் குற்றஞ்சாட்டியுள்ளனர். தூக்கில் தொங்கிய பயிலின் முகத்தில் இரத்தம் உறைந்துள்ளதை வைத்து அவர்கள் சந்தேகத்தை எழுப்பியுள்ளனர்.

தற்கொலைக்கு முன்னர் பயில் எழுதிய கடிதம் மற்றும் அவர் குடும்பத்தார் அளித்த புகாரின் பேரில் ராய் மற்றும் மிருதுலை பொலிசார் கைது செய்துள்ளனர்.

பயில் செல்போனில் சில ஆடியோ பதிவுகளையும் கைப்பற்றியுள்ள பொலிசார் இது கொலையா தற்கொலையா என தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்

காலாவுக்கு ஏன் இந்தத் தடை : சீமான் விளக்கம்!!

‘காலா’ ரஜினி படம் மட்டுமல்ல, தமிழ் மண்ணிலிருந்து வெளிவரும் படம் என்பதனால் தான் கர்நாடகாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

ரஜினியின் காலா திரைப்படம் கர்நாடகாவில் வெளியாவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சீமானிடம் தென்னிந்திய ஊடகம் ஒன்று கேள்வி எழுப்பியிருந்தது. இதற்கு பதில் வழங்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவரின் அந்தச் செவ்வியில், “அமெரிக்கா போன்ற வெளிநாட்டுப் படங்கள் எல்லாம் இந்தியா முழுமைக்கும் வெளியிடப்பட்டு சிறப்பாக வர்த்தகம் செய்யப்படுகின்றன. நாம் ஒரே நாடு, ஒரே சட்டம், ஒரே வரி என்று சொல்லிக்கொள்கிறோம். ஆனால் பக்கத்து மாநிலத்தில் நமது திரைப்படங்களை வெளியிட்டு வர்த்தகம் செய்யமுடியவில்லை.

அரசியல் நிலைப்பாடுகள், கருத்து வேறுபாடுகள், மாநில எல்லைகள் இவை அனைத்தயும் தாண்டி மக்களிடையே ஒரு இணக்கமான உறவு தேவைப்படுகிறது. அதில்தான் நமக்குள் சிக்கல் ஏற்படுகிறது.

காவிரி நதிநீர் பங்கீடு என்பது உண்மையில் ஒரு பிரச்சினையே இல்லை. ஏனென்றால் ஆந்திராவும் கர்நாடகாவும் 60% நீரை எந்தச் சிக்கலுமின்றி பகிர்ந்துகொள்கின்றன.

ஆனால் நமக்குள் 16% நீரை பகிர்ந்துகொள்வதில் தான் இவ்வளவு சிக்கலும் ஏற்படுகிறது. இதற்காகவே திட்டமிட்டு ஒரு இனப்பகையை உருவாக்குவதாகவே நாங்கள் நினைக்கிறோம். எளிமையாகப் பேசி இணக்கமான ஒரு உறவை தமிழகம் மற்றும் கர்நாடக மக்களுக்கிடையே ஏற்படுத்த முடியாதா என்ன?

‘காலா’ திரைப்படத்திற்கு கர்நாடகாவில் தடை என்பது போன்ற நிகழ்வுகள் மேலும் மேலும் வன்மத்தைக் கூட்டிக்கொண்டே போகும் நீண்டகாலமாகவே தமிழ்த் திரைப்படங்களை கரநாடகாவில் திரையிடுவது பெரும்பாலும் தவிர்க்கப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் வாழும் ஒன்றரைக்கோடி தமிழர்கள் மட்டுமல்லாது எல்லையோரப் பகுதிகளில் வாழும் கன்னடர்கள் கூட தமிழ்த் திரைப்படங்களை விரும்பி பார்க்கின்றனர்.

எனவே ‘காலா’ திரைப்படத்தை கர்நாடாவில் வெளியிட தடை விதித்திருப்பது பெரிய இழப்புதான். சத்தியராஜ் நடித்த ‘பாகுபலி’ திரைப்படத்திற்கும் இதேநிலை ஏற்பட்டபோதும் நாங்கள் இதே உணர்வில் தான் இருந்தோம். அண்ணன் பொன்.இராதாகிருஷ்ணன் போன்றோர் ‘காலா’ திரைப்படத்திற்கு குரல் கொடுக்கிறார்;

ஆனால் சத்தியராஜ் நடித்த ‘பாகுபலி’ திரைப்படத்திற்கு ஏன் இதேபோல் குரல்கொடுக்கவில்லை? அவர் நடுநிலையாகத் தானே பேசியிருக்கவேண்டும்?

இப்பொழுது அவர்களுக்கு வேண்டியவர்கள் என்பதால் மட்டும் எதிர்த்து குரல் கொடுப்பதா? இது ரஜினி படம் என்று மட்டும் பார்க்கக்கூடாது; இது இந்த மண்ணிலிருந்து வெளிவரும் படம்!

‘மெர்சல்’ படத்திற்கு வராத இடையூறுகளா..? நாளை கமல் படத்திற்கோ? விஜய் படத்திற்கோ? என் படத்திற்கோ இடையூறு ஏற்பட்டாலும் இதே நிலைப்பாடுதான் எங்களுடையது” என்று குறிப்பிட்டுள்ளார்.

முகநூலில் புகைப்படம் பதிவேற்றிய மனைவியிடம் கேட்ட கணவர் : இறுதியில் நடந்த விபரீதம்!!

முகநூலில் தனது புகைப்படத்தை பதிவு செய்தது தொடர்பாக கணவன் கேட்டமையினால் மனைவியொருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

திருகோணமலை கிண்ணியா, பைசல் நகரை அண்மித்த கூபா நகரில் வசித்து வந்த ஒரு பிள்ளையின் தாயே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் கணவர் வெளிநாட்டில் இருந்து அண்மையில் நாடு திரும்பியுள்ளார். இந்த நிலையில் தனது மனைவி முகநூலில் புகைப்படம் பதிவேற்றியுள்ளமை தொடர்பில் கேட்டுள்ளார்.

இதன் பின்பு, அறைக்குள் சென்று கதவை மூடிக்கொண்ட மனைவி நீண்ட நேரமாகியும் கதவைத் திறக்காததால் கதவையுடைத்து பார்த்த பொழுது குறித்த பெண் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் விசாரணையை முன்னெடுத்த பொலிஸார், பெண்ணின் சடலத்தை திருகோணமலை மருத்துவமனையில் ஒப்படைத்ததுடன், பிரேத பரிசோதனைக்கு பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த பெண், 32 வயதுடைய ஹனீபா ஆயிஷா உம்மா என்று ஆரம்ப கட்டவிசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. இதேவேளை, இவருடைய கணவர் வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பி 21 நாள் ஆகின்றமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் அனுமதியின்றி கொண்டு செல்லப்பட்ட 5 மாடுகள் பொலிசாரால் மீட்பு!!

அனுமதியின்றி கொண்டு செல்லப்பட்ட 5 மாடுகள் ஓமந்தைப் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது. வவுனியா, ஓமந்தை ஏ9 வீதியில் வைத்து இன்று(05.06) காலை குறித்த மாடுகள் மீட்கப்பட்டுள்ளன.

உரிய அனுமதிப் பத்திரங்கள் எதுவுமின்றி புளியங்குளம் பகுதியில் இருந்து வவுனியா நோக்கி சிறிய கப் ரக வாகனத்தில் 5 மாடுகள் கொண்டு செல்லப்பட்டன.

இதனை சோதனை செய்த ஓமந்தைப் பொலிசார் குறித்த மாடுகளை மீட்டுள்ளதுடன், வாகனத்தையும் அதன் சாரதியையும் கைது செய்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா நீதவான் நீதிமன்றில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஓமந்தைப் பொலிசார் தெரிவித்தனர்.

கொழும்பில் 300 ஆபாச விடுதிகள் : தீவிர நடவடிக்கையில் பொலிஸார்!!

கொழும்பு மஹரகவில் செயற்பட்டு வரும் 300 ஆபாச விடுதிகள் பொலிஸாரினால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. மசாஜ் நிலையங்கள் என்ற போர்வையில் 300 விடுதிகள் இயக்குவதாக சட்டமா அதிபரிடம் தகவல் பெற சுகாதார அமைச்சர் தீர்மானித்துள்ளார்.

மாகாணா சுகாதார ஆணையாளரின் கோரிக்கைக்கமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மஹரகம நகர சபை எல்லையில் மாத்திரம் இவ்வாறான 300 மசாஜ் நிலையங்கள் சுற்றி வளைக்கப்பட்டுள்ளது. அங்கு மசாஜ் நிலையம் என்ற பெயரில் பல விபச்சார விடுதிகள் நடத்திச் செல்லப்பட்டுள்ளன.

மசாஜ் நிலையங்களை நீக்குவதற்கு போதுமான சட்டம் தற்போது இல்லை. இது தொடர்பில் சட்டம் ஒன்றை உருவாக்க நடவடிக்கை மேற்கொள்ள சட்டமா அதிபரிடம் தகவல் கோரப்பட்டு வருவதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

திருகோணமலையில் பயங்கரம் : விதவைப் பெண்ணை துஸ்பிரயோகப்படுத்தி கழுத்தறுத்த கொடூரம்!!

திருகோணமலை – மூதூர் பிரதேசத்தில் மிகவும் பின்தங்கிய கிராமமான பாட்டாளிபுரத்தில் பெண்ணெருவர் துஸ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டு, கழுத்தறுத்து கொலை செய்ய முயற்சித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த பெண் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வேளையில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டுள்ளார். 5 பிள்ளைகளின் தாயான விதவைப் பெண்ணுக்கே இந்த அவல நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸ் மற்றும் நீதித்துறை கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என திருகோணமலை மாவட்டத்தில் செயற்படும் பெண்கள் அமைப்பு பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பில் தெரியவருவதாவது,

குறித்த பெண் துஸ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டு கழுத்து அறுக்கப்பட் நிலையில் காணப்பட்டுள்ளார். பின்னர் குறித்த பெண்ணை பொலிஸாரின் உதவியுடன் தோப்பூர் வைத்தியசாலை ஊடாக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றது.

தற்போது, அவரால் பேசமுடியாத நிலை உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த விடயத்தில் பல தவறான இளைஞர்கள் பங்குகொண்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

குறித்த பெண்ணை அவர்கள் பலாத்காரம் செய்து இறுதியில் கழுத்தை அறுத்து கொலை செய்யவும் துணிந்துள்ளார்கள்.

5 பிள்ளைகளின் தாயான குறித்த விதவைப் பெண்ணை பலர் சேர்ந்து இவ்வாறு சிதைத்து அவரைக் கொல்லத் துணிந்துள்ளமை பெண்களின் பாதுகாப்பு குறித்த கேள்வியை எழுப்பியுள்ளது. எனவும் அவ்வமைப்புக்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

இந்த சம்பவம் பல பெண்களின் பாதுகாப்பு குறித்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன. இவ்விடயத்தில் இன, மத, சாதி ஏற்றத்தாழ்வு பாராமல் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என அவ் அமைப்பு கோரிக்கை விடுக்கின்றது.

இலங்கையில் பலரின் இதயங்களை உருகச் செய்த நெகிழ்ச்சி சம்பவம்!!

இலங்கையில் பாசமாக வளர்த்த பூனை ஒன்றின் செயற்பாடு குறித்து சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்பட்டு வருகின்றன.

தனது எஜமானியின் மரணத்தை தாங்கிக் கொள்ள முடியாத பூனை, உடலத்தின் கால்கள் மீது படுத்திருந்த நெகிச்ச்சியான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. களனி பியகம பகுதியிலுள்ள வீடொன்றில் இந்த இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சிறிவதனா என்ற பெண்மணி பெருமளவு பூனைகளை வளர்ந்து வந்துள்ளார். இந்நிலையில் அண்மையில் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளார். அவருடன் மிகவும் நெருக்கமான பூனையொன்று இந்த துயரை தாங்கிக் கொள்ள முடியாமல் அவரின் உடலுக்கு அருகில் படுத்திருந்துள்ளது.

தற்காலத்தில் மனிதர்கள் கூட மனிதாபிமான செயற்படாத காலத்தில், பாசமாக வளர்த்த பூனையின் செயற்பாடு பலரை கண் கலங்க வைத்துள்ளது. இது தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் ஸ்தலத்திலேயே ஒருவர் பலி!!

வவுனியாவில் இன்று இடம்பெற்ற விபத்தில் தச்சுத் தொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் அவருடன் மோட்டார் சைக்கிலில் சென்ற மேலும் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். இவ்விபத்துச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

இன்று (05.06.2018) காலை 8.30 மணியளவில் சூடுவெந்தபுலவு பகுதியில் சபாரி மோட்டார் சைக்கிலில் தொழிலுக்குச் சென்ற தச்சுத் தொழிலாளியளான துரைச்சாமி திருநாவுக்கரசு (53 வயது) வீதியில் நின்றுகொண்டிருந்த கட்டாக்காலி மாட்டுடன் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன்,

அவருடன் மோட்டார் சைக்கிலில் சென்ற பொன்னம்பலம் ஜெயக்குமார் (48 வயது) படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொதுவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவர்கள் சென்ற மோட்டார் சைக்கில் வீதியில் நின்றிருந்த கட்டாக்காலி மாட்டுடன் மோதியே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருவதுடன் உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

விஸ்வரூபம்-2 திரைப்படத்திற்கும் தடை!!

ரஜினிகாந்தின் ‘காலா’ படத்தை வருகிற 7ம் திகதி திரைக்கு கொண்டு வருகின்றனர். தமிழகம் முழுவதும் 650-க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் இந்த படம் வெளியாகிறது.

தமிழ் படங்களுக்கு கர்நாடகாவில் நல்ல மார்க்கெட் உள்ளது. எனவே காலா படத்தை அங்கு 250க்கு மேற்பட்ட தியேட்டர்களில் திரையிட்டு 20 கோடிவரை வசூல் ஈட்ட திட்டமிட்டு இருந்தனர்.

ஆனால் காலா படத்துக்கு கர்நாடகாவில் திடீரென்று தடை விதிக்கப்பட்டுள்ளது. காவிரி பிரச்சினையில் கர்நாடகாவுக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ள ரஜினிகாந்தை கண்டிக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுத்து இருப்பதாக கன்னட அமைப்புகளும் திரைப்பட வர்த்தக சபையும் அறிவித்து உள்ளன.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் நடிகர் பிரகாஷ்ராஜ் நடத்திய சமரச பேச்சுவார்த்தை வெற்றிபெறவில்லை. இதனால் காலா படத்தை கர்நாடகாவில் திரையிட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் காவிரி பிரச்சினையில் கர்நாடகத்துக்கு எதிராக கருத்து தெரிவித்ததாக கமல்ஹாசன் படத்துக்கும் அங்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து கர்நாடக திரைப்பட வர்த்தகசபை தலைவர் கோவிந்து கூறும்போது,

“ரஜினிகாந்த், கமல்ஹாசன் படங்களை தவிர மற்ற படங்களை கர்நாடகாவில் திரையிட எந்த ஆட்சேபனையும் இல்லை” என்றார். இதனால் விரைவில் திரைக்கு வர உள்ள கமல்ஹாசனின் விஸ்வரூபம்-2 படத்தையும் அங்கு திரையிட முடியாத நிலைமை ஏற்பட்டு உள்ளது.

இந்த படம் விஸ்வரூபம் படத்தின் இரண்டாம் பாகமாக தயாராகி உள்ளது. நாயகிகளாக பூஜா குமார், ஆண்ட்ரியா நடித்துள்ளனர். கமல்ஹாசனே கதாநாயகனாக நடித்து இயக்கி உள்ளார்.

தணிக்கை குழுவினர் படத்துக்கு யூஏ சான்று அளித்துள்ளதாக கூறப்படுகிறது. ஆகஸ்டு 15ம் திகதி சுதந்திர தினத்தையொட்டி படத்தை திரைக்கு கொண்டு வர பரிசீலிக்கின்றனர்.

இந்த நிலையில் கர்நாடாகத்தில் விஸ்வரூபம்-2 படத்துக்கு தடை விதித்துள்ளதால் படக்குழுவினர் அதிர்ச்சியில் உள்ளனர்.

90 வயது முதியவரை திருமணம் செய்து கொண்ட அழகிய இளம்பெண் : வெளியான காரணம்!!

90 வயது முதியவரை இளம் பெண்ணொருவர் திருமணம் செய்து கொண்டுள்ள நிலையில் சமுகவலைதளங்களில் கடும் விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளார்.

கானா நாட்டை சேர்ந்த இளம் பெண்ணான அஸ்லோம் ஜியோனிஸ்ட் 90 வயது முதியவர் ஒருவரை திருமணம் செய்துள்ளார்.

மாநில அளவிலான அழகி போட்டியில் கலந்து கொண்டு ஜெயித்துள்ள அஸ்லோம் முதியவரை திருமணம் செய்து கொண்டது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கணவருடன் தான் இருக்கும் புகைப்படங்களை அஸ்லோம் சமுகவலைதளங்களில் தொடர்ந்து பதிவேற்றும் நிலையில் விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளார்

ஆனால் அதை பற்றியெல்லாம் அவர் கவலைப்படவில்லை. அஸ்லோம் கூறுகையில், நான் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன்.

என்னை ஆசிர்வதித்த கடவுளுக்கு நன்றி, எங்கள் காதலுக்கு வயதில்லை. நம்மை உண்மையாக நேசிப்பவருடன் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என கூறியுள்ளார்.

காதலுக்காக ஆணவக் கொலை செய்யப்பட்ட இளைஞர் : குடும்பத்தார் செய்த நெகிழ்ச்சியான செயல்!!

இந்தியாவில் காதலுக்காக கெளரவ கொலை செய்யப்பட்ட இளைஞரின் குடும்பத்தார் இப்தார் விருந்து அளித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியை சேர்ந்த அங்கித் சக்சேனா என்பவர் ஷெஸாதி என்ற இஸ்லாமிய பெண்ணை காதலித்து வந்தார். இந்த காதலுக்கு ஷெஸாதி குடும்பத்தார் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் கடந்த பிப்ரவரி 1-ஆம் திகதி அவர் குடும்பத்தினர் அங்கித்தை கொலை செய்தனர்.

இந்த கொலையை தொடர்ந்து அந்த பகுதியில் பதட்டம் நிலவிய நிலையில் அங்கித்தின் குடும்பத்தார் இதை மத சண்டையாக மாற்ற வேண்டாம் என கோரிய நிலையில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.

தற்போது 4 மாதங்கள் கழித்து அமைதி வேண்டி அங்கித்தின் குடும்பத்தினர் தங்கள் பகுதியில் இப்தார் விருந்தளித்துள்ளனர்.

இது குறித்து கூறிய அங்கித்தின் தந்தை யஷ்பால், இந்த இர்பார் விருந்துக்கு அனைத்து தரப்பிடமிருந்து நல்ல வரவேற்பு கிடைத்தது.

எங்கள் எண்ணம் ஒன்று தான், எங்களுக்கு நாங்கள் வாழும் பகுதியில் அமைதி நிலவ வேண்டும், எனக்கு எந்த மத நம்பிக்கையை சேர்ந்தவர்கள் மீதும் காழ்ப்புணர்ச்சி இல்லை.

தொடர்ந்து இந்த அறக்கட்டளை சார்பாக விநாயக சதுர்த்தி, நவராத்திரி போன்ற பண்டிகளைகளும் கொண்டாடப்படும் என கூறியுள்ளார்.

இலங்கையில் இதய மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட பெண்ணுக்கு அதிஷ்டம்!!

இலங்கையின் முதன்முறையாக இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்ட பெண்ணுக்கு இலவசமாக வீடு ஒன்று வழங்கப்பட்டுள்ளது.

2017ஆம் ஆண்டு ஜுலை மாதம் 7ஆம் திகதி இலங்கை வரலாற்றில் முதன்முறையாக 34 வயதான புஷ்பாகுமாரி இதயமாற்று சிகிச்சை செய்து கொண்டார்.

புஷ்பகுமாரியின் ஆரோக்கியத்தை கருத்திற் கொண்டு சுவாத்தியமான வீடு ஒன்றை வழங்குமாறு வைத்தியர்கள் ஆலோசனை வழங்கியுள்ளார்கள்.

இதனடிப்படையில் நாச்சாதுவ பிரதேச செயலார் சரத் விஜேசிங்க, உடனடியாக புஷ்பாகுமாரிக்கு வீடு ஒன்றை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

அதற்கமைய புதிய முழுமையான வீடு ஒன்று புஷ்பகுமாரிக்கு நேற்றையதினம் வழங்கப்பட்டுள்ளது.

இலங்கையின் வரலாற்றில் முதன்முறையாக மேற்கொள்ளப்பட்ட இதய மாற்று சத்திர சிகிச்சை வெற்றியளித்தமை, இலங்கை வைத்தியத்துறையில் ஏற்பட்ட பாரிய முன்னேற்றமாக கருதப்படுகிறது.

மனநலம் குன்றிய மகளுக்கு பாலியல் தொல்லை : நெஞ்சை உருக்கும் நிகழ்வு!!

தனது மகளுக்கு பாலியல் தொல்லை தந்தவர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்காத நிலையில் தாய் ஒருவர் மகளுடன் ஆட்சியர் அலுவலகம் முன்பு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.

வால்பாறை முடிஸ் பகுதியை சேர்ந்தவர் முருகானந்தவல்லி. இவர் கணவர் மற்றும் மனநலம் குன்றிய மகளுடன் கெஜமுடிஸ் பகுதியில் வசித்து வந்தார். வேலைக்கு செல்லும் முருகானந்தவள்ளி வீட்டில் தனியாக மகளை விட்டு விட்டு செல்லும் வழக்கம் வைத்திருக்கிறார்.

கடந்த மாதம் ஒருநாள் அப்படி வேலைக்கு சென்ற பின் அதே பகுதியை சேர்ந்த மூக்கன் இவரது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறான். மகள் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்து மகளை மீட்டுள்ளனர்.

இதற்கு பின் இந்த விடயம் தொடர்பாக பொலிஸிடம் புகார் அளித்திருக்கிறார் முருகானந்தவள்ளி . காவல்துறையினர் மூக்கன் மீது வழக்கு பதிவு செய்து 1000 ரூபாய் அபாரதத்தோடு மூக்கனை வெளியே விட்டு விட்டது.

அதற்கு பின் ஆட்சியர் அலுவலகத்திலும் இது குறித்து புகார் எழுப்பியும் தகுந்த நடவடிக்கை எடுக்காததால் மனமுடைந்த முருகானந்தவள்ளி பாதிக்கப்பட்ட தன் மகளுடன் ஆட்சியர் அலுவலகம் முன் தீ குளிக்க மண்ணெண்ணையுடன் வந்திருக்கிறார்.

அவரை சோதனை செய்தபோது மண்ணெணெய்யை பறிமுதல் செய்தனர். அதன்பின் நடந்த விவரங்களை கூறிய முருகானந்தவள்ளி தனக்கு நியாயம் கிடைக்கும் வரை ஆட்சியர் அலுவலகத்தை விட்டு போக போவதில்லை என தங்கள் துணிகளோடு ஆட்சியர் அலுவலகத்தின் முன் போராட்டம் நடத்தியுள்ளார்.

நண்பனை கொடூரமாக கொன்று தானும் தற்கொலை செய்த இளைஞர்!!

சென்னையில் தனது சிறுவயது நண்பனை கொன்ற இளைஞர் தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.

பிரபு(28) என்பவரும் சரவணன்(30) என்பவரும் நல்ல நண்பர்கள். சிறுவயது முதல் ஒன்றாக பழகியவர்கள். ஒரே இடத்திலும் வேலை செய்து வந்துள்ளனர்.

இருவரின் நட்பும் நெருக்கமாகி இருவரும் எங்கு போனாலும் இணைபிரியாமல் சென்று வந்துள்ளனர்.

6 மாத்துக்கு முன்னாள் இவர்கள் இருவருக்குமிடையே மனக்கசப்பு ஏற்பட்டு, அந்த பிரச்சனை பெரிதாகியுள்ளது. இந்நிலையில் நேற்றிரவு பிரபு மட்டும் கடையில் இருந்துள்ளார். அப்போது சரவணன் ஒரு முடிவோடு பிரபுவுடன் பேசி சண்டையிட்டுள்ளார்.

இதில் ஒரு கட்டத்தில் கோபமடைந்த சரவணன் பிரபுவின் வாய், காது, கையை கத்தியால் வெட்டியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் பிரபு சம்பவ இடத்திலேயே பலியானார். நண்பனை கொன்ற சரவணனும் அதே இடத்தில் மின்விசிறியில் தூக்கு மாட்டிக்கொண்டு தற்கொலை செய்துக்கொண்டார்.

காலையில் கடையை திறக்கவந்த பெண் ஊழியர் இரண்டு ஊழியர்களும் பிணமாக கிடப்பதையும் பார்த்து அலறி அடித்து உரிமையாளருக்கு கூற அங்கு வந்த கடையின் உரிமையாளர் பொலிசாருக்கு தகவல் தெரிவிக்க சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பிரபு பேசாமல் ஒதுங்கி போனதால் சரவணனுக்கு ஏற்பட்ட ஆத்திரத்தில் இந்த முடிவை எடுத்ததாகவும் தெரியவந்துள்ளது.

காதலியை தாக்கி ரத்தகாயங்களுடன் புகைப்படம் எடுத்த காதலன் : அதிர்ச்சிக் காரணம்!!

லண்டனில் தனது காதலியை 16 மாதங்கள் ஒரே வீட்டில் அடைத்து வைத்து சித்ரவதை செய்து ரத்த காயங்களுடன் புகைப்படம் எடுத்து இணையத்தில் பதிவு செய்துள்ளார் காதலன்.

பிரபல மாடல் அழகி மர்த்தா டோலக் என்பவர் மைக்கல் குட்வின் என்பவரை காதலித்து வந்துள்ளார். தனது காதலி சமூகவலைதளங்களில் பதிவேற்றம் செய்யப்படும் புகைப்படங்களுக்கு மோசமான விமர்சனங்கள் வந்துள்ளன.

இதனால், இவர்கள் இருவருக்குமிடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இனிமேல் புகைப்படத்தை பதிவேற்றம் செய்ய வேண்டாம் என காதலன் கண்டித்துள்ளார்.

ஆனால், மர்த்தா இதனை கண்டுகொள்ளவில்லை. இதனால் காதலியை தனிவீட்டில் கடந்த 18 மாதங்களாக அடைத்து வைத்து சித்ரவதை செய்துள்ளார்.

தனது காதலியை தாக்கி ரத்தகாயங்களுடன் அவருடன் செல்பி எடுத்து, அந்த புகைப்படங்களை பதிவேற்றம் செய்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து காதலன் கைது செய்யப்பட்டுள்ளார், மீட்கப்பட்ட மர்த்தா இதுகுறித்து தெரிவிக்கையில்… தன்னை அடைத்து வைத்த அறையில் ஜன்னல்கள் இல்லாமல் இருந்ததாலும், பொருத்தப்பட்ட இரண்டு கதவுகளும் திறக்கமுடியாத வகையில் அடைக்கப்பட்டிருந்ததாலும் தன்னால் தப்பிக்க முடியாமல் போனது என கூறியுள்ளார்.

முன்னாள் காதலியை சுட்டு கொன்று காதலனும் தற்கொலை முயற்சி : அதிர்ச்சி வீடியோ!!

தாய்லாந்தில் தனது முன்னாள் காதலியை அவளது தோழியின் கண் முன்னே ஒருவர் சுட்டுக் கொல்லும் அதிர்ச்சி வீடியோ வெளியாகியுள்ளது.

Pukkapong Chittarom (24) என்னும் அந்த நபர் அந்தப் பெண்ணை நான்கைந்து வருடங்களாகக் காதலித்துள்ளான். Natchareeya (21) என்னும் அந்தப் பெண் பின்னர் அவனது காதலை முறித்துக் கொண்டாள், அவனோடு அதற்குப் பின் அவள் பழக விரும்பவும் இல்லை.

மூன்றாமாண்டு கல்லூரி மாணவியான Natchareeya தனது தோழியுடன் வகுப்புக்கு செல்வதற்காக செல்லும்போது தனது முன்னாள் காதலனைக் கண்டதும் நின்றிருக்கிறாள். அவன் அவளுடன் பேச முயல அவளோ பேச மறுத்து தொடந்து நடக்க முயன்றிருக்கிறாள்.

அப்போது துப்பாக்கியை எடுத்து அவன் Natchareeyaவை நெஞ்சில் சுட்டிருக்கிறான். Natchareeya அந்த இடத்திலேயே சுருண்டு விழுந்து இறக்க அவளது தோழி பயந்து ஓடியிருக்கிறாள்.

அவளது அருகில் சென்ற Pukkapong அவளைக் கட்டியணைத்திருக்கிறான். அவள் இறந்து விட்டாள் என்பது தெரிந்ததும் துப்பாக்கியை வாய்க்குள் வைத்து அவனும் தன்னையே சுட்டுக் கொண்டான்.

ஆனால் துரதிருஷ்டவசமாக குண்டு அவனது கன்னம் வழியே வெளியேற அவன் உயிர் பிழைத்துவிட்டான்.

அவன் சர்வ சாதரணமாக தனது முன்னாள் காதலியை சுட்டுக் கொல்லும் காட்சிகள் CCTVகெமராவில் பதிவாகியுள்ளன. அவனை மருத்துவமனையில் அனுமதித்துள்ள பொலிசார் விசாரணை நடத்த உள்ளனர்.