சட்டவிரோதமாக நாட்டில் நுழைந்து இந்தியரை திருமணம் செய்த அரேபிய பெண்!!

சவுதி அரேபியாவில் சிறு நிறுவனத்தின் முதலாளிக்கு ஓட்டுநராக இந்தியாவைச் சேர்ந்த ஒருவர் வேலை பார்த்து வந்துள்ளார். முதலாளியின் மகளை கவர்ந்து காதலில் விழ வைத்துள்ளார்.

கடந்த பிப்ரவரி மாதம் இந்தியாவிற்கு திரும்பிய இளைஞனை நினைத்து வருந்தியுள்ளார் அந்த அரேபிய பெண். காதலால் தவித்து வந்த பெண் காதலனை தேடும் பணியில் ஈடுபட்டார். என்ன செய்வது என்று திணறிய அப்பெண் பெற்றோருக்கு தெரியாமல் நேபாளம் வழியாக இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக வந்துள்ளார்.

பின் காதலனை தேடி கண்டுபிடித்து பதிவு திருமணம் செய்து வாழ்ந்து வந்துள்ளனர். தன் மகள் இந்தியாவில் இருப்பதை அறிந்த அவரது தந்தை, ”என் மகள் காதலனால் கடத்தி வரப்பட்டுள்ளார்” என பொலிசாரிடம் புகார் அளித்துள்ளார்.

இதை தொடர்ந்து அப்பெண்ணை விசாரித்த பொலிசார், ’நான் என் விருப்பத்துடன் தான் காதலனுடன் வந்து திருமணம் செய்துள்ளேன்’ என்று கூறினார். எங்கள் இருவரை சேர்த்து இந்தியாவில் குடியுரிமை வழங்கி வாழவிடுங்கள் என்று அரசிடம் கேட்டுள்ளார்.

சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சிக்கு தடை : லட்சுமி ராமகிருஷ்ணன் வெளியிட்ட உண்மை!!

சொல்வதெல்லாம் நிகழ்ச்சி மக்களிடம் எத்தனை பெரிய விமர்சனங்களை பெற்றது என்பது எல்லோருக்கும் தெரிந்திருக்கும். இதை நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்நிகழ்ச்சிக்கு தடைவிதிக்கப்பட்டு ஒளிபரப்பு நிறுத்தப்பட்டதாக அண்மையில் தகவல் பரவியது. மதுரை உயர் நீதிமன்றம் இதற்கு தடை விதித்துள்ளாக சொல்லப்பட்டது. இது பலருக்கும் அதிர்ச்சி தான்.

இந்நிலையில் லட்சுமி இது பற்றி விளக்கம் அளித்துள்ளார். என்னுடைய அடுத்த படத்தில் நான் பிசியாக இருக்கிறேன். அதனால் சமூகவலைதளம் பக்கம் வரவில்லை.

இது தற்காலிக தடை தான். நாங்கள் எங்கள் தரப்பு ஞாயங்களை புரியவைத்து வருகிறோம். ஆனால் எதுவும் விவாதம் செய்ய விரும்பவில்லை. அதில் கவனம் செலுத்த போவதில்லை என கூறியிருக்கிறார்.

ரஜினியை மேடையில் வெளுத்து வாங்கிய சத்யராஜ்!!

ரஜினிகாந்திற்கும், சத்யராஜிற்கும் இன்று நேற்று இல்லை, எப்போதுமே ஆகாது. சிவாஜி படத்தில் ஷங்கர் நடிக்க அழைத்த போது கூட சத்யராஜ் மறுத்துவிட்டார்.

அப்படியிருக்க சமீபத்தில் ஒரு மேடையில் ‘அரசியலுக்கு வருவதன் நோக்கம் மக்களுக்கு பணி செய்ய தான். ஆனால், இங்கு வியாபாரம் என்று நினைத்தால், அது ஆன்மிக அரசியலாக தான் இருக்கும், நமக்கு தெரிந்த ஆன்மிக அரசியல் எல்லாம் அன்புகரம் கொண்டு அடக்கவேண்டும்.

இரும்புக்கரம் கொண்டு எப்படி அடக்குவது என்று தெரியவில்லை’ என சத்யராஜ் மேடையிலேயே ரஜினியை வெளுத்து வாங்கினார்.

திருமணம் முடிந்தும் தொல்லை : காதலன் நாக்கை அறுத்த காதலி, நாக்குடன் காவல் நிலையம் சென்ற தாய்!!

தனக்கு வேறொருவருடன் திருமணம் ஆகிய நிலையிலும் முன்னாள் காதலன் பாலியல் தொந்தரவு கொடுத்ததால், இளம்பெண் ஒருவர் நபரின் நாக்கை வெட்டிய சம்பவம் நடந்துள்ளது.

உத்தரபிரதேச இளைஞன் ஒருவன் திருமணமான தனது முன்னாள் காதலிக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

பைசாபாத் இனாயத் நகரில் வசித்து வரும் பெண்ணின் வீட்டிற்கு சென்று சண்டை போட்டுள்ளார்.

அதுமட்டுமின்றி பாலியல் பலாத்காரம் செய்யவும் முயற்சிக்க ஆத்திரமடைந்த பெண் அந்நபரை தண்டிக்க முடிவு செய்துள்ளார்.

இந்நிலையில் சம்பவதினத்தன்று அப்பெண்ணின் கணவர் இல்லாத நேரத்தில் மீண்டும் குறித்த இளைஞன் வீட்டிற்கு வந்து பாலியல் தொல்லை கொடுக்க முயற்சிக்க பொறுமையிழந்த பெண் அருகிலிருந்த கத்தியை கொண்டு நாக்கை அறுத்திருக்கிறார்.
நாக்கு துண்டாகி தரையில் விழ, நபர் தப்பி ஓடி விட்டாராம்,

இதற்கிடையே குறித்த நபரின் தாயார் வந்து சண்டையிட்டு அறுபட்ட நாக்கை எடுத்துக் கொண்டு பொலிஸ் நிலையம் சென்று குறித்த பெண் மீது புகார் அளித்திருக்கிரார்.

அந்தப் பெண்ணும் காவல் நிலையத்தில் தன்னைக் காத்துக் கொள்ளவே அவ்வாறு செய்ததாக கூறியிருக்கிறார்.

தன் குழந்தையைப் பணயம் வைத்து முதலாளி மகனைக் காப்பாற்றிய தொழிலாளி : திரில் சம்பவம்!!

விருது நகரில் பட்டப்பகலில் முதலாளி மகனைக் கடத்தி வரத் தொழிலாளியின் ஒன்றரை வயது மகளை பிணைக்கைதியாக்கிய கொடூரம் நடந்தேறியிருக்கிறது.

விருதுநகர் ஆத்து மேடு பகுதியை சேர்ந்த ராஜ்திலக், தனது முதலாளி சண்முகக்கனியின் பருப்பு ஆலையில் கூலி வேலை பார்த்து வருகிறார்.

சண்முகக்கனியிடம் பணம் பறிக்க நினைத்த மூன்று பேர் கொண்ட குழு ஒன்று ராஜ்திலக்கை பயன்படுத்திக் கொள்ள நினைத்தது.

அதன்படி ராஜ்திலக் வீட்டிற்கே சென்று கத்திமுனையில் ராஜ்திலக்கை இருசக்கர வாகனத்தில் கடத்தி புதிய பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள காட்டில் வைத்து மிரட்டியிருக்கிறது அந்த குழு.

சண்முகக்கனியின் 5 வயது மகனை ராஜ்திலக் அழைத்து வர வேண்டும் என்றும் அது வரை ராஜ்திலக்கின் ஒன்றரை வயது மகளை பிணையமாக தங்களிடம் விட்டு செல்ல வேண்டும் என்று அக்கும்பல் கூறியுள்ளது.

அதன்படியே தன் மனைவியிடம் தொலைபேசி மூலம் மகளை இரு சக்கர வாகனத்தில் வரும் இருவரிடம் கொடுத்தனுப்புமாறு கூறியிருக்கிறார் ராஜ்திலக்.

மனைவியும் அவ்வாறே குழந்தையை கொடுத்து விட்டிருக்கிறார். சண்முகக்கனியின் மகனை கூட்டி வந்தபின் ராஜ்திலக்கையும் அவரது குழந்தையையும் விடுவிப்பதாக கூறியிருக்கின்றனர் கடத்தல்காரர்கள்.

தனது ஒன்றரை வயது குழந்தையை கத்திமுனையில் விட்டு விட்டு அங்கிருந்த கிளம்பிய ராஜ்திலக் நீண்ட யோசனைக்குப்பின் விருது நகர் கிழக்கு காவல் நிலையத்தில் சென்று புகார் அளித்திருக்கிறார்.

உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் ராஜ் திலக் குழந்தையோடு ஒருவர் மட்டும் இருந்ததை பார்த்துள்ளனர்.

அவரைக் கைது செய்து குழந்தையை மீட்டு ராஜ்திலக்கிடம் கொடுத்த காவல்துறையினர் அவரின் துணிச்சலை பாராட்டினர்.

கடத்தல் குழுவினரில் மாட்டியவர் பெயர் வெங்கடேஷ் என்றும் மற்றவர்கள் பெயர்கள் பிரபு மற்றும் அசோக் என்றும் அவர்கள் சென்னையை சேர்ந்தவர்கள் என்றும் தெரியவந்துள்ளது.

தப்பியோடிய இருவரைத் தனிப்படை அமைத்து காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

இலங்கையில் ஒரு கிழமை தடை : இத்தனை பில்லியன் நட்டமா : அதிர்ச்சியில் அரசாங்கம்!!

இலங்கையில் சமூக வலைத்தளமான பேஸ்புக தடை செய்யப்பட்டமையினால் பல பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் 7ஆம் திகதியில் இருந்து 15ஆம் திகதி வரை இலங்யைில் பேஸ்புக் உட்பட சமூக வலைத்தளங்கள் தடை செய்யப்பட்டன.

கண்டி பிரதேசத்தில் ஏற்பட்ட வன்முறை சம்பவம் காரணமாக பேஸ்புக் உட்பட சமூக வலைத்தளங்கள் பலவற்றை முடக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்த தடை காரணமாக இலங்கை பொருளாதாரத்திற்கு 30 மில்லியன் அமெரிக்க டொலர் நட்டம் ஏற்பட்டுள்ளதாக உலக புகழ்பெற்ற அமைப்பான நெட் ப்லொக்ஸ் என்ற அமைப்பின் இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது. இந்தத் தொகை இலங்கை நாணயத்தில் 4.7 பில்லியன் ரூபாவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களின் முடக்கம் காரணமாக இந்த நட்டம் ஏற்பட்டுள்ளதாக குறித்த அமைப்பின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த தடை காரணமாக நாட்டின் சுற்றுலாத்துறை மற்றும் வர்த்தகர்களுக்கு பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

அந்நிய செலாவணிக்கு பாதிப்பு ஏற்பட்டதுடன், வெளிநாடுகளுக்கு இணைய அழைப்பு மேற்கொள்ள முடியாமல் போனமையினால் வெளிநாட்டு அழைப்புகளுக்காக பாரிய அளவு செலவிடப்பட்டுள்ளது.

இந்த நட்டங்கள் அனைத்தும் இலங்கை பொருளாதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக நெட் ப்லொக்ஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் பங்குச் சந்தை மோசடி : இலங்கை தமிழரின் மேன்முறையீட்டை நிராகரித்த நீதிமன்றம்!!

அமெரிக்காவில் பங்குச் சந்தை மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டு தொடர்பில் தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கையை பூர்வீகமாக கொண்ட தமிழர் ஒருவரின் மேன்முறையீடு நிராகரிக்கப்பட்டுள்ளது.

பங்கு சந்தை மோசடியில் ஈடுபட்ட குற்றத்திற்காக கடந்த 2011ம் ஆண்டு ராஜ் ராஜரட்ணம் என்பவருக்கு 11 ஆண்டுகள் சிறை தண்டனையை அந்நாட்டு நீதிமன்றம் விதித்துள்ளது.

இந்நிலையில், தம்மீதான பல குற்றச்சாட்டுகள் உண்மைக்கு புறம்பானவை என தெரிவித்து ராஜ் ராஜரட்ணம் மேன்முறையீடு மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

மென்ஹாட்டானில் உள்ள மேன்முறையீட்டு நீதிமன்றில் இந்த மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், குறித்த மனு நிராகரிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்களை மேற்கோள்காட்டி வெளியாகியுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலையில் வாள்வெட்டு : 6 பேர் படுகாயம்!!

திருகோணமலையில் நேற்று இரவு இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் 6 பேர் படுகாயமடைந்துள்ள நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

திருகோணமலை சல்லி கோவில் வருடாந்த உற்சவத்திற்கு சென்ற இரு குழுக்களுக்கிடையே இடம்பெற்ற மோதல், இறுதியில் வாள்வெட்டுடன் முடிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் இடம்பெற்ற முரண்பாடே, இந்த வாள்வெட்டு இடம்பெறக் காரணம் என, பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.

காயமடைந்தவர்கள் திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் உப்புவெளி பொலிஸார் உடன் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

படிக்க வேண்டும் உள்ளே விடுங்க : 6 வயது மாணவனின் கல்விக்கான போராட்டம்!!

திருப்பூரில் கட்டாய இலவச கல்வி சட்டத்தின் கீழ் தனியார் பள்ளியில் சேர்க்கப்பட்ட மாணவர் பள்ளியை விட்டு வெளியேற்றப்பட்ட சம்பவம் நடைபெற்றிருக்கிறது.

திருப்பூரை அடுத்த அங்கீரிபாளையத்தி சேர்ந்த பழனிகுமார் தனது மகன் காந்திஜியை ஏழை மாணவர்களுக்கென தனியார் பள்ளியில் அரசு ஒதுக்கியுள்ள இலவச கல்வி சட்டத்தின் கீழ் சேர்த்திருக்கிறார்.

வழக்கம்போல கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் தொடங்கியதும் ஒன்றாம் வகுப்பில் சேர்ந்து படிக்க காந்திஜி ஆசையாக பள்ளிக்குள் வந்திருக்கிறான்.

கடந்த ஒன்றாம் தேதி பள்ளி தொடங்கியது முதல் காந்திஜியிடம் 20000 பணம் கேட்டு வாங்கி வர சொல்லி பள்ளி நிர்வாகம் கூறி வந்துள்ளது. இந்நிலையில் இன்று காலை பள்ளிக்கு வந்த மாணவன் காந்திஜியை நிர்வாகம் உள்ளே அனுமதிக்கவில்லை.

மாணவர் நடந்த விவரங்களை தந்தையிடம் கூறிய பின் தந்தை பள்ளிக்கு வந்து நியாயம் கேட்டிருக்கிறார். கட்டாய இலவச கல்வியின் கீழ் படிப்பதால் கட்டணம் கட்ட வேண்டியதில்லை என்கிற காரணத்தையும் கூறியிருக்கிறார்.

மாணவரை உள்ளே சேர்க்காத பள்ளி நிர்வாகம் நியாயம் கேட்டு வந்த பழனிகுமாரின் வண்டி சாவியையும் பிடுங்கி விட்டு வெளியே அனுப்பியிருக்கிறது.

செய்வதறியாமல் திகைத்த பழனிக்குமார் மகனுடன் பள்ளி வாசலில் நின்று நியாயம் கேட்டு போராடினர். அந்த வழியாக வந்தவர்களும் நியாயம் உணர்ந்து பழனிகுமாரோடு இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தின் ஒருபகுதியாக தனது சிலேட்டில் பள்ளிக்கு உள்ளே விடுங்க என்று எழுதிய ஒன்றாம் வகுப்பு மாணவர் காந்திஜி அதனைக் கையில் பிடித்தபடி நின்றிருந்தது அனைவரையும் நெகிழ செய்தது.

இது குறித்து மாவட்ட கல்வி அதிகாரி சாந்தியிடம் கேட்டபோது கல்விக்கட்டணம் மட்டும்தான் அரசு செலுத்தும் எனவும் தனியார் பள்ளியின் விதிமுறைகளின் படி பெற்றோர் நடந்து கொள்ள வேண்டும் என்றது பேரதிர்ச்சியாகத்தான் இருந்தது.

இலங்கைக்கு சென்ற விமானத்தில் நடுவானில் நடந்த விபரீதம் : பெண்ணின் அதிரடி செயற்பாடு!!

இலங்கைக்கு விஜயம் செய்த பிரித்தானிய தாதி ஒருவருக்கு சிறப்பு விருது வழங்கப்பட்டுள்ளது. பிரித்தானியான Peterborough பிரதேச வைத்தியசாலையில் பணியாற்றும் தாதிக்கு அந்நாட்டு இதய அறக்கட்டளையினால் விருது ஒன்று வழங்கப்பட்டுள்ளது. தலைமை மற்றும் ஈடுபாடு என்ற பிரிவில் Julie Holroyd என்ற பிரித்தானிய தாதியே விருது வென்றுள்ளார்.

இலங்கைக்கு வந்த விமானத்தில் சுற்றுலா பயணி ஒருவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. அவரை தாதியொருவர் காப்பாற்றி இருந்தார். அவரை கௌரவிக்கும் வகையில் விருது வழங்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு பயணித்த விமானத்தில் நாடு வானில் பயணிக்கு மாரடைப்பு ஏற்பட்டிருந்தது. இதன்போது இதயம் செயழிலந்தவர்களுக்காக வழங்கும் சிகிச்சையை வழங்கி, குறித்த பயணியை காப்பாற்றியிருந்தார்.

அவரது திறமை மற்றும் சேவையை பாராட்டி அவருக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா நெடுங்கேணியில் உலக சுற்றாடல் தினம்!!

வவுனியா வடக்கு நெடுங்கேணியில் இன்று(05.06) உலக சுற்றாடல் தினம் பேருந்து நிலையத்தில் காலை 10 மணியளவில் வனஇலகா திணைக்களத்தின் ஏற்பாட்டில் வன அதிகாரி கே கே.நாணயக்கார தலைமையில் இடம்பெற்றுள்ளது.

இன்று 05.06.2018 உலக சற்றாடல் தினம் அனுஸ்டிக்கப்பட்டு வரும் நிலையில் வவுனியா வடக்கு நெடுங்கேணியில் இந்நிகழ்வினை வன இலகா திணைக்களம் தலைமையில் நெடுங்கேணி பிரதேச செயலகம் என்பன இணைந்து நடாத்தியிருந்தனர்.

இதன்போது சுற்றாடல் மாசாகுதல் தொடர்பான வழிப்புனர்வு கருத்தாடல்களை கலந்துகொண்ட அதிதிகள் வழங்கியிருந்தனர்.

இந்நிகழ்வில் வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் க.பரந்தாமன், வடமாகாண சபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன், வவுனியா வடக்கு பிரதேச சபைத்தவிசாளர் தணிகாசலம், உப தவிசாளர் யோகராஜா, நெடுங்கேணி வட்டார பிரதேச சபை உறுப்பினர் சத்தியநாதன், நெடுங்கேணி தலைமை பொலிஸ் உத்தியோகத்தர் சமந்த ரத்நாயக்க,

நெடுங்கேணி கிராம அலுவலகர் சுபாஸ், வவுனியா மாவட்ட வனஅதிகாரி கே.கே.நாணயக்கார, மேலதிக மாவட்ட வன அதிகாரி ஆர்.ரவிராஜ், நெடுக்கேணி வட்ட வன அதிகாரி லலித் தனசேன, மேலதிக மாவட்ட வன அதிகாரி குமார ஜீவ, நெடுங்கேணி மகாவித்தியாலய மாணவர்கள், ஆசிரியர்கள், இலங்கை வங்கு முகாமையாளர், எனப்பலரும் கலந்துகொண்டதுடன் உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு பேருந்து நிலையப்பகுதிகளில் கலந்துகொண்ட அதிதிகளினால் மரக்கன்றுகளும் நாட்டிவைக்கப்பட்டது.

மீண்டும் களமிறங்குகிறார் லசித் மலிங்க : ரசிகர்கள் உற்சாகம்!!

கனடா T20 லீக் கிரிக்கெட் தொடருக்கான அணி விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் லசித் மலிங்க உட்பட 4 இலங்கை வீரர்கள் இதில் விளையாடவுள்ளனர்.

தொடரானது ஜூன் 28ம் திகதி தொடங்கி ஜூலை 15ம் திகதி முடிவடைகிறது. இதில் மொத்தம் ஐந்து அணிகள் பங்கேற்று விளையாடவுள்ளது.

டொரண்டோ நேஷனல்ஸ், வாங்கவுர் நைட்ஸ், வின்னிபெக் ஹவுக்ஸ், எட்போண்டன் ராயல்ஸ், மொண்றியல் டைகர்ஸ் என அணிகளுக்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இதில் ஸ்டீவ் ஸ்மித், பொல்லார்ட், டேரன் பிராவோ, அப்ரிடி போன்ற முன்னணி வீரர்கள் பங்கேற்கிறார்கள். இலங்கை அணி சார்பாக நான்கு வீரர்கள் தொடரில் பங்கேற்கிறார்கள்.

லசித் மலிங்க, தஷுன் ஷனக, திசர பெரேரா, இசுரு உதான ஆகிய நால்வரும் மொண்றியல் டைகர்ஸ் அணிக்காக விளையாடவுள்ளார்கள்.

வவுனியாவில் நிதி நிறுவன ஊழியர்களால் அச்சுறுத்தல் : வீதியிலும் பெண்கள் செல்ல முடியாத நிலை!!

வவுனியாவில் கடனை வசூலிப்பதற்காக நிதி நிறுவன ஊழியர்கள் பெண்ணை பின்தொடர்ந்து வீதியில் வைத்து அச்சுறுத்தியுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

வவுனியா பூந்தோட்டம் பகுதியில் வீதியால் நடந்து சென்ற பெண்ணை பின் தொடர்ந்த நான்கு நிதி நிறுவன ஊழியர்கள் அவரை செல்ல விடது தடுத்ததுடன் கடனை செலுத்தமாறு அச்சுறுத்தியுள்ளனர். இதனால் குறித்த பெண் செய்வதறியாது திகைத்து நின்றுள்ளார்.

இந்நிலையில் அவ்வீதியால் சென்ற இளைஞர்கள் சிலர் நிதி நிறுவன ஊழியர்களோடு முரண்பட்டதுடன் கடனை செலுத்தவில்லை என்றால் நீதிமன்றில் வழக்கு தொடுக்குமாறு கூறியதுடன் ஊழியர்களை அவ்விடத்தை விட்டு அகற்றியுள்ளனர்.

அத்துடன் குறித்த பெண்ணுக்கும் புத்திமதி கூறியதுடன் பொலிஸ் நிலையத்திற்கு சென்று முறையிடுமாறும் கூறியுள்ளனர், அதன் பின் குறித்த பெண் அவ்விடத்தை விட்டு அகன்று சென்றுள்ளார்.

குறித்த பெண் நான்கிற்கும் மேற்பட்ட நிறுவனங்களில் இருந்து நுண்கடன் பெற்றுள்ளதாகவும் கிழமையின் 5 நாட்களிலும் தவணை பணத்தினை செலுத்தி வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக அப்பெண்ணின் கணவரும் பிரிந்து சென்றுள்ளமையினால் கடன்களை செலுத்துவதில் பல இன்னல்களை சந்தித்து வருகின்றார். கடனை பெறும் பொழுது கணவர் இணைந்தே இருந்துள்ளமை குறிப்படத்தக்கது.

பூந்தோட்டத்தை அண்டிய பகுதிகளான அண்ணாநகர், மகாறம்பைகுளம், காத்தார்சின்னகுளம், ஸ்ரீநகர் போன்ற பகுதிகளில் நுண் நிதி நிறுவனங்களில் கடன்களை பெறுவோரின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுவதுடன் குடும்ப சூழ்நிலைகள் வருமான மார்க்கங்கள் பற்றிய விடயங்கள் கணக்கிலெடுக்கப்படாமல் நிறுவனங்கள் கடன் வழங்கி வருவதாகவும்,

இதனால் பல குடும்பங்களிற்கிடையே பல பிரச்சனைகள் காணப்படுவதுடன், சிலர் தற்கொலை முயற்சிகளிலும் ஈடுபட்டு வருவதாக கிராம அமைப்புக்கள் விசனம் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் உலக சுற்றாடல் தினம்!!

வவுனியா மாவட்ட செயலகம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்புக்குழு என்பன இணைந்து ஏற்பாடு செய்த உலக சுற்றாடல் தினம் இன்று (05.06.2018) காலை 9.30 மணியளவில் அரசாங்க அதிபர் வாசஸ்தலத்தில் மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் உதவிப்பணிப்பாளர் எஸ்.சூரியகுமார் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் விதான பத்திரன, மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார், வவுனியா பிரதேச செயலாளர் கா.உதயராஜா, செட்டிகுளம் பிரதேச செயலாளர் எஸ்.சிவகரன் மாவட்ட திட்டப்பணிப்பாளர், மாவட்ட கணக்காய்வாளர், பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள்,

வவுனியா வளாக பல்கலைக்கழக இரண்டாம் வருட மாணவர்கள், மாணவிகள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் எனப்பலரும் கலந்துகொண்டுடதுடன் பல்கலைக்கழக மாணவர்கள் பிளாஸ்ரிக் மாசாதலை இல்லாது ஒழிப்போம் எனினும் பொருளில் வழிப்புனர்வு கருத்துரைகளை வழங்கியிருந்தார்கள்.

இவ்வருடம் இலங்கையில் உலக சற்றாடல் தினம் பிளாஸ்ரிக் மாசாதலை இல்லாது ஒழிப்போம் எனினும் தொனிப்பொருளில் இடம்பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

நிகழ்வின் இறுதியில் அரசாங்க அதிபர் வாசஸ்தலத்தின் வளாகத்தில் அதிதிகள், பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்களினால் மரக்கன்றுகள் நாட்டிவைக்கப்பட்டது.

வவுனியாவில் தூக்கில் தொங்கிய நிலையில் பெண் சடலமாக மீட்பு!!

வவுனியா கூமாங்குளம் பாடசாலைக்கு அருகில் இன்று (05.06) பிற்பகல் 4.30 மணியளவில் தூக்கில் தொங்கி உயிரிழந்த நிலையில் குடும்பப் பெண் ஒருவரின் சடலம் மீட்க்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

வவுனியா கூமாங்குளம் பாடசாலைக்கு அருகில் வசித்து வந்த இரவிச்சந்திரன் புனிதவதி என்ற 48வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயரே இன்று பிற்பகல் 4.30 மணியளவில் அவரது வீட்டில் தூக்கில் தொங்கி உயிரிழந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

இவர் எற்கனவே வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்றுள்ளதுடன் சற்று மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்துள்ளார். ஏற்கனவே நஞ்சருந்துவதற்கு முயற்சித்துள்ளார். எனவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

சடலம் வைத்தியசாலையில் மருத்துவப் பரிசோதனைகளுக்காக வைக்கப்பட்டுள்ளது. உயிரிழப்பு தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

குளிக்கும்போது இறந்து போன 17 வயது மாணவி : பள்ளிக்கு கிளம்பும் முன் ஏற்பட்ட பரிதாபம்!!

அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் குளிக்கும்போது ஏற்பட்ட விபத்தினால் பள்ளி சிறுமி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் ஏற்பட்டுள்ளது.

பிரையன் மேரி ராப் (17) எனும் சிறுமிக்கு கடந்த வெள்ளிக்கிழமை காலை 6.45 மணிக்கு பள்ளி செல்வதற்காக கிளம்பி கொண்டிருந்தாள்.

அதற்காக குளிக்க சென்ற போது தலைமுடி பாத்டப்பில் உள்ள ஓட்டையில் சிக்கி கொண்டது. தலைமுடியை எடுப்பதற்குள் பாத்டப் நிறைந்து விடவே மூச்சு திணறி அங்கேயே இறந்திருக்கிறார் பிரையன்.

அவரது அன்னை எழுந்து வந்து பார்க்கும் போது பாத் டப்பிலிருந்து நீர் வழிந்த நிலையில் பிரையனின் முடி அதன் நீர் விழும் ஓட்டையில் சிக்கியிருப்பதையும் பிரையன் நீரில் மூழ்கி இறந்திருப்பதையும் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

மேலும் தைராய்ட் பிரச்னைக்காக மாத்திரைகள் எடுத்துக் கொண்டிருக்கிறார் பிரையன். அதனால் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்கிற கோணத்திலும் காவல்துறையினர் இந்த வழக்கை ஆராய்ந்து வருகின்றனர்.

மேலும் அவரது தந்தை கூறுகையில், பிரையனிற்கு குளிக்கும் போது மயக்கம் ஏற்பட்டு அதனால் இவ்வாறு நடந்திருக்கலாம் என்று தான் சந்தேகிப்பதாக கூறியிருக்கிறார்.

பிரையனின் உடல் தற்போது உடற்கூறாய்வு பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதன் முடிவுகள் வந்தபின்தான் இறப்பின் காரணம் தெரிய வரும் என்கிறார்கள் காவல்துறையினர்.

பள்ளிக்குத் தயாரான சிறுமி திடீரென மரணித்த நிகழ்வு அங்குள்ளோரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.