பொலிஸ் நிலயத்தினுள் துஸ்பிரயோகத்திற்கு உள்ளான 15 வயதுச் சிறுமிக்கு நடந்த கதி!!

நீதிமன்றம் வழங்கிய உத்தரவின் பேரில் சிறுவர் நன்னடத்தை முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த வெலிஓய காவல் நிலையத்தினுள் துஸ்பிரயோகத்திற்கு உள்ளானதாக கூறப்படும் 15 வயது சிறுமி குறித்த முகாமில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சிறுமி தடுத்து வைக்கப்பட்டிருந்த அனுராதபுரம் – அசோக குழந்தைகள் பராமரிப்பு நிலையத்தில் இருந்து குறித்த முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளதாக காவற்துறை தெரிவித்தது.

இது தொடர்பில் அனைத்து காவல் நிலையங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக அனுராதபுரம் காவற்துறையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

குறித்த சிறுமியை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பிலான வழக்கு இன்று கெபிதிகொல்லேவ நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில் , சம்பவம் தொடர்பில கைது செய்யப்பட்டுள்ள காவற்துறை கான்டபிலை எதிர்வரும் 13ம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

பாடசாலை மாணவனுக்கு எமனாக மாறிய தென்னை மரம்!!

கம்பஹா அத்தனகல்ல – அலவல பிரதேசத்தில் மரம் ஒன்று சரிந்து விழுந்தில் 14 வயது மாணவன் உயிரிழந்துள்ளார். அலவல மகாவித்தியாலத்தில் 9 வகுப்பில் பயிலும் துலான் செனிது என்ற மாணவனே இவ்வாறு பலியாகியுள்ளார்.

இந்த மாணவன், பாடசாலையில் நேற்று நடத்தப்பட்ட பகுதி நேர வகுப்பில் கலந்து கொண்ட தனது சகோதரனை வீட்டுக்கு அழைத்து வர பாடசாலை அருகில் சென்று காத்திருந்த போது அங்கிருந்த தென்னை மரம் ஒன்று சரிந்து மாணவன் மீது விழுந்துள்ளது.

சம்பவத்தில் படுகாயமடைந்த மாணவனை அருகில் இருந்தவர்கள் வைத்தியசாலையில் சேர்த்துள்ளனர். எனினும் வைத்தியசாலைக்கு செல்லும் வழியிலேயே மாணவன் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து நிட்டம்புவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மனைவியை கொலை செய்து தானும் தற்கொலை செய்து கொண்ட கணவன்!!

மனைவியை கொலை செய்த கணவர் தானும் தற்கொலை செய்துள்ளார் என ஜா-எல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று மாலை கணவனுக்கும், மனைவிக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை தாக்கி கொலை செய்துள்ளார். பின்னர், கணவரும் தற்கொலை செய்து கொண்டதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, இருவரினதும் சடலம் மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பேருந்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து : சம்பவ இடத்திலேயே பலியான இளைஞன்!!

நாவலப்பிட்டி – கண்டி பிரதான வீதியில் பேருந்துடன், மோட்டார் சைக்கிளொன்று மோதி விபத்திற்கு உள்ளானதில் ஒருவர் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளார்.

இந்த விபத்து இன்று காலை இடம்பெற்றுள்ள நிலையில், நாலப்பிட்டி – பல்லேகல பகுதியை சேர்ந்த 24 வயதுடைய ஜயசேகர முதியன்சலாகே அமில என்ற இளைஞனே பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முந்திச் செல்ல பெருத்தமற்ற இடத்தில் மோட்டார் சைக்கிள் லொறியொன்றை முந்திச் செல்ல முற்பட்டுள்ளது.

இதன்போதே மோட்டார் சைக்கிள் வழுக்கிச் சென்று எதிரே வந்த பேருந்தில் மோதியுள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை சடலம் நாவலப்பிட்டி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பில் மேலதிக விசரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

வவுனியா மக்களுக்கு ஏற்பட்டுள்ள துர்ப்பாக்கிய நிலை!!

வவுனியாவிலுள்ளவர்களின் தேங்காய் தேவையைப்பூர்த்தி செய்து கொள்வதற்கு கிட்டத்திட்ட ஒரு நாளைக்கு 10 இலட்சம் ரூபாவிற்கு வெளிமாவட்டத்திலிருந்து தேங்காய்கள் கொள்முதல் செய்யவேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

தற்போதுள்ள தேங்காயின் தட்டுப்பாடு காரணமாகவே இந்நிலை ஏற்பட்டுள்ளது. இதேவேளை வவுனியாவிலுள்ள தேங்காய்கள் இங்குள்ளவர்களின் தேவைகளுக்குப் போதுமானவையாக காணப்படுகின்றபோதிலும் வவுனியாவிலிருந்து வெளிமாவட்டங்களுக்கு தேங்காய்கள் ஏற்றிச்செல்வதாலே இந்நிலை காணப்படுகின்றது.

கிட்டத்தட்ட ஒரு நாளைக்கு எம்மால் பயன்படுத்தப்படும் உணவுத்தேவைக்கு 3 தேங்காய் எமக்குத் தெரிந்தோ தெரியாமலோ தேவைப்படுகின்றது.

இத்தேவைகளுக்கு எமது பகுதிகளிலிருக்கும் தேங்காய்கள் போதுமானவையாகவே காணப்படுகின்றபோதிலும் இங்குள்ள தேங்காய்கள் வெளிமாவட்டங்களுக்கு அதிக விலைபேசி அனுப்பிவைக்கப்படுவதால் வவுனியாவில் தேங்காய்க்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதனால் வெளிமாவட்டங்களிலிருந்து தேங்காய் இறக்குமதி செய்யவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. நாள் ஒன்றிற்கு வவுனியாவிலுள்ள 10இலட்சம் ரூபா பணம் வெளிமாவட்டங்களுக்கு தேங்காய் கொள்வனவிற்காக செல்வதாகவும் இதன்காரணமாக வவுனியாவிற்கு வரவேண்டிய அப்பணம் வேறு மாவட்டத்திற்குச் செல்வதாக அந்த ஆய்வில் மேலும் தெரியவருகின்றது.

இதனைக்கட்டுப்படுத்தவதற்கோ அல்லது இங்கிருந்து வெளிமாவட்டங்களுக்கு தேங்காய் எடுத்துச் செல்லப்படுவதை தடுப்பதற்கும் விலையைக் குறைப்பதற்கோ எவ்வித நடவடிக்கையும் இங்குள்ள மக்கள் பிரதிநிதிகளினால் இன்றுவரையில் மேற்கொள்ளப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பெற்றோரை தவிக்க விட்டு ஐரோப்பாவில் பிள்ளைகள் சொகுசு வாழ்க்கை : பெண்ணின் அதிரடி செயற்பாடு!!

இலங்கையில் பிறந்து வெளிநாட்டில் வளர்த்த இளம் பெண்ணினால் விசேட வேலைத்திட்டம் ஒன்று கொழும்பில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வறுமை காரணமாக வெளிநாட்டவர்களுக்கு பிள்ளைகளை தத்துக் கொடுத்த தாய்மார்கள் தங்கள் பிள்ளைகளை தேடி கொள்வதற்காக இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ருவன்வெல்ல தாய்க்கு பிறந்து நெதர்லாந்தில் வளர்ந்த சந்தமாலி அல்லது பன் ரோசன் என அழைக்கப்படும் பெண்ணினால் இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

நெதர்லாந்து உட்பட ஐரோப்பிய நாடுகளிலுள்ளவர்களுக்கு தத்துக் கொடுக்கப்பட்ட பிள்ளைகளின் பெற்றோரை கண்டுபிடிப்பதற்காக இலங்கை வருகின்றனர். தங்கள் தாய்மார்களை கண்டுபிடிப்பதில் அவர்கள் பெரும் சிமரங்களை சந்திக்கின்றனர்.

சொந்த பெற்றோர்களை கண்டுபிடிப்பதுடன், தங்கள் பிள்ளைகளை கண்டுபிடிப்பதற்கு தாய்மார்கள் முயன்று வருகின்றனர். இந்நிலையில் இலகுவில் கண்டுபிடிக்கும் வகையில் நெதர்லாந்து உட்பட ஐரோப்பிய நாடுகளுக்கு அறிவித்து அவர்களின் உதவியுடன் டிஎன்ஏ வங்கி ஒன்றை ஸ்தாபிப்பதே வேலைத்திட்டத்தின் நோக்கமாகும்.

கடந்த 3ஆம் திகதி ஞாயிற்று கிழமை விஹார மகா தேவி பூங்காவில் சந்திப்பு ஒன்றை நடத்தியுள்ளார். தங்கள் பிள்ளைகளை வெளிநாடுகளுக்கு வழங்கிய தாய்மார்கள் இருப்பின் தனக்கு தகவல் வழங்குமாறு கையேடு ஒன்றை அவர் பகிர்ந்துள்ளார்.

“நாங்கள் பிள்ளைகளை வழங்கிய தாய்மார்களின் தகவல்களை சேகரித்து நெதர்லாந்து அரசாங்கத்திற்கு வழங்குவோம். நெதர்லாந்து அரசாங்கம் எங்களுக்கு உதவும் என நாங்கள் நம்புகின்றோம் என சந்தமாலி நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

பரிதாபமாக உயிரிழந்த சிறுவன் : ஊரே சோகத்தில்!!

மஸ்கெலியாவில் சுமார் நான்கு வயதான சிறுவனொருவன் சொக்கலெட் (chocolate) என நினைத்து மாத்திரைகளை சாப்பிட்டு உயிரிழந்த சம்பவம் அப்பகுதியை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்த சம்பவம் நேற்று இரவு 10 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சிறுவன், தந்தை கொண்டு வந்த பையினுள் சொக்லெட்டுக்களை தேடும் பொழுது சிறுவனது கையில் மாத்திரை கிடைத்துள்ளது. அதனை சொக்லெட் என நினைத்து சிறுவன் உட்கொண்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இதனையடுத்து பெற்றோர் சிறுவனை மஸ்கெலியா வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் அங்கிருந்து கிளங்கன் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

பின்பு அங்கிருந்து சிறுவன் கண்டி மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட போது உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சடலம் கண்டி மாவட்ட வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கபட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் ஸ்ரீ மனோகரன் மர்வின் என்ற சிறுவனே உயிரிழந்துள்ளதுடன், சம்பவம் தொடர்பில் மஸ்கெலியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் காயம்!!

வவுனியா மன்னார் வீதியில் இன்று (06.05.2018) காலை 8 மணியளவில் மோட்டார் சைக்கிள் முச்சக்கரவண்டி விபத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்தி வந்த பொலிஸ் உத்தியோகத்தருக்கு சிறு காயம் எற்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

மன்னார் வீதியிலிருந்து வவுனியா நகருக்கு இன்று காலை 8 மணியளவில் சென்ற மோட்டார் சைக்கிள் மன்னார் வீதி, பட்டாணிச்சூர் முதலாம் ஒழுங்கையிலிருந்து மன்னார் வீதிக்குச் சென்ற முச்சக்கரவண்டியுடன் மோதியுள்ளது.

இதில் முச்சக்கரவண்டிக்கு சேதம் ஏற்பட்டுள்ளதுடன் மோட்டார் சைக்கிலுக்கும் சிறு சேதம் எற்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிள் செலுத்தி வந்த பொலிஸ் உத்தியோகத்தருக்கு சிறுகாயம் ஏற்பட்டுள்ளது.

விபத்து இடம்பெற்ற பகுதிக்கு போக்குவரத்துப் பொலிசார் சென்று விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.

வவுனியாவிலும் கேபிள் தொலைக்காட்சி சேவைகள் பாதிப்பு !

வடமாகாணத்தில் , மின்சார இணைப்புக் கம்பங்களில் பொருத்தப்பட்டிருந்த தொலைக்காட்சி கேபிள்கள் நேற்று 05.06.2018 இலங்கை மின்சார சபையினரால் அகற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.வடமாகாணத்தில் தொலைக்காட்சி அலைவரிசைகளை கண்டுகளிக்க முடியாத நிலையை மக்கள் எதிர்நோக்கியுள்ளனர்.

நேற்றுமுதல்  வவுனியாவிலும்  கேபிள்  தொலைகாட்சி  சேவைகள்  தற்காலிகமாக   நிறுத்தப்பட்டுள்ளமையால்   தொலைகாட்சி  நிகழ்சிகளை பார்க்க  முடியாதுள்ளதாக  பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்

எவ்வாறாயினும் தொலைக்காட்சி கேபிளூடாக மின் கடத்தப்பட்டமையால் யாழில் ஏழு உயிர்கள் காவு கொள்ளப்பட்டுள்ளன.

மேலும், எதுவித அனுமதியும் பெறப்படாது மின் கம்பங்களினூடாக கேபிள் இணைப்புக்கள் பொருத்தப்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சு சுட்டிக்காட்டியிருந்ததாக குறிப்பிடப்படுகின்றது.

இது உனது நாடில்லை : அமெரிக்க ரயிலில் இனவெறி!!(காணொளி)

அமெரிக்காவின் நியுயோக்கின் ரயிலொன்றில் தனது மகள் அமர்வதற்கு ஆசனத்தை வழங்காத ஆசிய நாட்டை சேர்ந்த பெண்மணியை கறுப்பின பெண்மணியொருவர் இனவெறியுடன் ஏசும் வீடியோ வைரலாகிவருகின்றது.

ரயிலில் பயணித்த பயணியொருவர் எடுத்துள்ள இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது.

வீடியோவின் ஆரம்பத்தில் குறிப்பிட்ட கறுப்பின பெண்மணி எனது மகள் கறுப்பினத்தை சேர்ந்தவள் என்பதால் ஆசிய பெண்மணி ஆசனத்தை வழங்கவில்லை என ஏசுவதை காண முடிகின்றது.

அவ்வேளை ஆசிய பெண்மணி அவரை மௌனமாகயிருக்குமாறு தெரிவிக்கின்றார்.

அதற்கு கறுப்பின பெண்மணி நான் ஏன் அமைதியாகயிருக்கவேண்டும் ? நீ எனது மகளுடன் விளையாடுவாய் நான் அதனை ஏற்றுக்கொள்ளவேண்டுமா என கேட்டு தகாத வார்த்தைகளை பயன்படுத்துகின்றார்.

அதனை தொடர்ந்து ஆசிய பெண்மணி வார்த்தைகளை கவனமாக பயன்படுத்துமாறு எச்சரிக்கின்றார்.

அதன் காரணமாக சீற்றமடைந்த கறுப்பின பெண்மணி அவரை ஏசுகின்றார்

பின்னர் தனது மகளை அந்த ஆசனத்தில் அமருமாறும் ஆசிய பெண்மணியை ஆசனத்திலிருந்து தள்ளிவிடுமாறும் மகளை கேட்கின்றார்.

மகளும் அவ்வாறே செய்கின்றார்,அதன் பின்னர் அவர் ஆசிய பெண்மணியை தள்ளி விடுவதை காணமுடிகின்றது.

இதனை தொடர்ந்து ஆசிய பெண்மணி ரயிலிற்குள் விழுகின்றார். இதன் காரணமாக சீற்றமடைந்த சக பயணிகள் கறுப்பின பெண்ணை எச்சரித்தபடி ஆசிய பெண்மணியை தூக்கிவிடுகின்றனர்.

ஆசிய பெண்மணி மீண்டும் ஆசனத்தில் அமரமுயன்றவேளை கறுப்பின பெண்மணி அவரை எச்சரிக்கின்றார். அதன் பின்னரும் இருவருக்கும் இடையிலான வாக்குவாதம் தொடர்வதை வீடியோ காண்பிக்கின்றது.

கறுப்பின பெண்மணி தகாதவார்த்தைகளை பயன்படுத்துவதுடன் இனரீதியாகவும் நிந்திக்கின்றார். ஒரு கட்டத்தில் அவர் ஆசிய பெண்மணி மீது துப்பமுயல்வதை வீடியோ காண்பிக்கின்றது.

 

70 வயதிலும் அழகுப் பதுமை : ஆச்சரியத்தில் அதிர்ந்த உலகம்!!

அவுஸ்திரேலியாவில் 70 வயதுள்ள கரோலின் ஹார்ட்ஸ் எனும் பெண் 30 வயது இளமை பெண்ணாக தோற்றமளிப்பது உலக மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.

அவுஸ்திரேலியாவின் பெர்த் நகரில் வசிக்கும் இந்த பெண் ஒரு தொழிலதிபர். இவர் தனது 70 வயதில் 30 வயது தோற்றமாக காட்சியளிப்பதற்கு, கடந்த 30 ஆண்டுகளாகச் சர்க்கரையைச் சேர்த்துக் கொண்டதில்லை என்று காரணம் கூறுகிறார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது, நான் என் நினைவு தெரிந்த நாளில் இருந்து ஆரோக்கியமான உணவு பழக்கத்தையே பின்பற்றி, தேவையான உடற்பயிற்சியை செய்து வருகின்றேன்.

கடந்த 30 ஆண்டுகளாக சர்க்கரையை எடுத்துக் கொள்ளாத நான், அதற்கு முன்பு வரை இனிப்புச் சாப்பிடுவதில் அதிக ஆர்வம் கொண்டிருந்தேன்.

கேக்குகளையே எனது உணவாக சாப்பிடுவேன், ஒரு கட்டத்தில் சர்க்கரையை விட்டு விட்டேன், அதன் பின் தான் என் உருவம் இளமையாகவே இருக்கிறது.

எனது உணவில் புரோட்டீன் இருக்குமாறு பார்த்துக் கொள்வேன், ஏனெனில் இது என் பசியைக் குறைத்துவிடும்.

பாதாம் பால், தேங்காய்ப் பாலைப் பயன்படுத்தி பிஸ்கெட், ரொட்டிகளை வீட்டிலேயே செய்து சாப்பிடுவேன்.

தினமும் டார்க் சாக்லெட் சிறிது சேர்த்துக் கொள்வேன். இவை தவிர ஆரோக்கியமான உணவுகளை அளவாக, குறிப்பிட்ட நேரத்தில் எடுத்துக் கொள்கிறேன்.

கடந்த 5 ஆண்டுகளாக யோகாவையும் செய்து வருகிறேன். குறைந்தது 8 மணி நேரம் இரவில் தூங்கி விடுவேன். வாரத்துக்கு 4 நாட்கள் மட்டுமே அலுவலகம் செல்கிறேன்.

மற்ற நேரங்களில் என் கணவருடன் திரைப்படங்கள் பார்ப்பேன், விளையாடுவேன், நண்பர்களைச் சந்திப்பேன், விவசாய சந்தைக்குச் செல்வேன்.

எனக்கு 70 வயது என்பதை யாரும் நம்புவதில்லை. எனது இளமையை பார்த்து பிரேசில், பெல்ஜியம், அயர்லாந்து, கொரியா போன்ற நாடுகளின் தொலைக்காட்சிகளில் பங்கேற்கும்படி நிறைய அழைப்புகள் வந்து கொண்டே உள்ளது.

எனது இளமையின் ரகசியத்தை தக்க வைக்க முதன்மைக் காரணமாக இருப்பது, ஆரோக்கியமான வாழ்க்கை முறையும் மகிழ்ச்சியான மனம் மட்டுமே என்று கரோலின் கூறியுள்ளார்.

கடலில் குதித்து தற்கொலை செய்ய முயன்ற பெண் : பிரதேசவாசிகளின் உதவியுடன் மீட்பு!!

சிலாபம் பகுதியில் கடலில் குதித்து தற்கொலை செய்ய முயன்ற பெண் ஒருவரை பிரதேசவாசிகள் மீட்டுள்ளனர். குறித்த சம்பவம் நேற்று பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

பிரதேசவாசிகளால் மீட்கப்பட்ட இந்த பெண் சிலாபம் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள பெண் யார் என்பதை அடையாளம் காணமுடியாது உள்ளதாகவும் அவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், 38 வயதான இந்த பெண் ஏன் கடலில் குதித்து தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்துள்ளார் என்பது தொடர்பில் சிலாபம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

யாழில் தொலைக்காட்சி கேபிள்கள் நீக்கம்!!

யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியில், மின்சார இணைப்புக் கம்பங்களில் பொருத்தப்பட்டிருந்த தொலைக்காட்சி கேபிள்கள் அகற்றப்பட்டுள்ளன.

குறித்த கேபிள்கள் நேற்று இலங்கை மின்சார சபையினரால் அகற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் பகுதியில் தொலைக்காட்சி அலைவரிசைகளை கண்டுகளிக்க முடியாத நிலையை மக்கள் எதிர்நோக்கியுள்ளனர்.

எவ்வாறாயினும் தொலைக்காட்சி கேபிளூடாக மின் கடத்தப்பட்டமையால் யாழில் ஏழு உயிர்கள் காவு கொள்ளப்பட்டுள்ளன.

மேலும், எதுவித அனுமதியும் பெறப்படாது மின் கம்பங்களினூடாக கேபிள் இணைப்புக்கள் பொருத்தப்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சு சுட்டிக்காட்டியிருந்ததாக குறிப்பிடப்படுகின்றது.

தன்னை விபச்சாரி என கூறியவருக்கு நடிகை கஸ்தூரி கூறிய அதிரடி பதில்!!

நடிகை கஸ்தூரி ட்விட்டரில் எப்போதும் அக்டிவாக இருப்பவர். பல்வேறு விஷயங்கள் பற்றி கருத்து பதிவிட்டு வருகிறார் அவர்.

இந்நிலையில் அவரை ஐட்டம்(விபச்சாரி) என விமர்சித்து சிலர் ட்விட்டரில் பதிவிட்டு வந்தனர். அவர்களுக்கு கஸ்தூரி தக்க பதிலடி கொடுத்துள்ளார்.

“பெண்களை மதிக்கத் தெரியாதவர்கள்……வாழ்வதற்கு தகுதி இல்லாதவர்கள்” என ட்விட் போட்டுவிட்டு, பின் கஸ்தூரியை ஐட்டம் என ஒருவர் ட்விட்டியிருந்தார். அதை பார்த்து கோபமான கஸ்தூரி “செத்துடு” என பதிலளித்துள்ளார்.

நீட் தேர்வு தோல்வியால் தற்கொலை செய்த மாணவி முன்கூட்டியே கடிதம் எழுதிவைத்திருந்தது அம்பலம்!!

தமிழகத்தின் விழுப்புரத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளியின் மகள் பிரதீபா என்ற மாணவி நீட் தேர்வில் தோல்வியடைந்த காரணத்தால் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

பிரதீபா 12ம் வகுப்பில் 1,125 மதிப்பெண்கள் எடுத்தவர். தற்போது நீட் தேர்வு முடிவில் அவர் 39 சதவீத மதிப்பெண்கள் மட்டுமே பெற முடிந்தது.இதனால் மருத்துவ படிப்பு படிக்க இயலவில்லையே என்ற கவலையால் எலி மருந்தை உட்கொண்டு தற்கொலை செய்துகொண்டார்.

அந்த மதிப்பெண்ணைக் கொண்டு தனியார் மருத்துவமனையில்தான் சேருவதற்கான வாய்ப்பு இருந்த நிலையில், பணம் இல்லாத காரணத்தால் அப்போது மருத்துவத்தில் சேரவில்லை.

இதனால் நீட் தேர்வை முழுவதுமாக நம்பியிருந்தார். இந்நிலையில் இவர் இறப்பதற்கு முன்னர் கடிதம் எழுதி வைத்திருந்தது அம்பலமாகியுள்ளது.

தமிழ் மொழியில் வினாக்கள் தவறாக மொழி பெயர்க்கப்பட்டிருந்ததால் அதற்குரிய மதிப்பெண்கள் வழங்குமாறு பிரதீபா கடிதம் எழுதி வைத்துள்ளார். எனவே பிரதீபாவின் இறப்பிற்கு வினாத்தாள் குளறுபடியும் ஒரு காரணம் என கூறப்படுகிறது.

சட்டவிரோதமாக நாட்டில் நுழைந்து இந்தியரை திருமணம் செய்த அரேபிய பெண்!!

சவுதி அரேபியாவில் சிறு நிறுவனத்தின் முதலாளிக்கு ஓட்டுநராக இந்தியாவைச் சேர்ந்த ஒருவர் வேலை பார்த்து வந்துள்ளார். முதலாளியின் மகளை கவர்ந்து காதலில் விழ வைத்துள்ளார்.

கடந்த பிப்ரவரி மாதம் இந்தியாவிற்கு திரும்பிய இளைஞனை நினைத்து வருந்தியுள்ளார் அந்த அரேபிய பெண். காதலால் தவித்து வந்த பெண் காதலனை தேடும் பணியில் ஈடுபட்டார். என்ன செய்வது என்று திணறிய அப்பெண் பெற்றோருக்கு தெரியாமல் நேபாளம் வழியாக இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக வந்துள்ளார்.

பின் காதலனை தேடி கண்டுபிடித்து பதிவு திருமணம் செய்து வாழ்ந்து வந்துள்ளனர். தன் மகள் இந்தியாவில் இருப்பதை அறிந்த அவரது தந்தை, ”என் மகள் காதலனால் கடத்தி வரப்பட்டுள்ளார்” என பொலிசாரிடம் புகார் அளித்துள்ளார்.

இதை தொடர்ந்து அப்பெண்ணை விசாரித்த பொலிசார், ’நான் என் விருப்பத்துடன் தான் காதலனுடன் வந்து திருமணம் செய்துள்ளேன்’ என்று கூறினார். எங்கள் இருவரை சேர்த்து இந்தியாவில் குடியுரிமை வழங்கி வாழவிடுங்கள் என்று அரசிடம் கேட்டுள்ளார்.