வவுனியாவில் நடைபாதையை புனரமைத்து தருமாறு மக்கள் கோரிக்கை!!

வவுனியா நகரப்பகுதிகளில் அண்மைக்காலங்களாக வீதிகளிலுள்ள நடைபாதைகளை திறந்து அதற்குள் குழாய் செலுத்தப்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால், அவ்வீதியில் செல்லும் பொதுமக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம்கொடுத்து வருவதாக கூறியுள்ளனர்.

வவுனியா நகரப்பகுதிகளில் குறிப்பாக மக்கள் வந்து செல்லும் பிரதான வங்கிகள், கடைத் தொகுதிகளுக்கு முன்னால் செல்லும் நடைபாதைகளில் இவ்வாறு திறக்கப்பட்டு குழாய் செலுத்தப்படுகின்றது.

இதனால், நடைபாதை சேதமடைந்துள்ளதாகவும், இது தொடர்பாக உரிய அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுக்குமாறும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இலங்கையின் காலநிலையில் திடீர் மாற்றம் : அடுத்த நான்கு நாட்களுக்கு ஏற்படபோகும் நிலைமை!!

தென்மேற்கு பருமழை ஆரம்பித்துள்ளதன் காரணமாக அடுத்த சில தினங்களுக்கு நாட்டிலும் நாட்டை சுற்றியுள்ள கடல் பிரதேசங்களிலும் நேற்று முதல் காற்றின் வேகம் அதிகரிக்கக் கூடும் என இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்த அறிப்பானது நேற்று மாலை 3 மணியில் இருந்து எதிர்வரும் 10 ஆம் திகதி மாலை அமுலில் இருக்கும் எனவும் திணைக்களம் கூறியுள்ளது.

இதனடிப்படையில், மேல், சப்ரகமுவை, தென், மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சபரமுகவை மாகாணத்திலும் மேல் மாகாணத்தின் களுத்துறை, தென் மாகாணத்தின் காலி, மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் சுமார் 100 மில்லி மீற்றர் கனமழைப் பெய்யக் கூடும்.

இதனை தவிர, மேல், தென், வடமேல், வடமத்திய மாகாணங்கள் மற்றும் மொனராகலை, மாத்தளை, நுவரெலியா, பொலன்நறுவை மாவட்டங்களில் அவ்வப்போது மணிக்கு 50 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசக் கூடும் எனவும் இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இலங்கையில் கொடூரமான பகிடிவதை : காட்டிக்கொடுக்க புதிய செயலி!!

இலங்கையில் பகிடிவதையை கட்டுப்படுத்த புதிய செயலி அறிமுகம் செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகங்கள், கல்வியியற் கல்லூரிகளில் பகிடிவதைகள் கொடூரமான, நேர்மையற்ற, மனிதாபிமானமற்ற செயற்பாடாகியுள்ளதாக உயர் கல்வி அமைச்சர் பேராசிரியர் விஜயதாஸ ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழக அதிகாரிகளினாலும் பகிடிவதையை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனை மேற்கொள்ளும் குழுக்கள், குற்றச் செயல்களுடன் தொடர்புபட்ட குழுக்கள் போன்று செயற்படுவதன் காரணமாக முறைப்பாடு செய்ய மாணவர்கள் அச்சப்படுகின்றனர்.

அதற்கமைய தொலைபேசிக்கான புதிய App ஒன்று அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த App ஊடாக முறைப்பாடு செய்ய முடியும் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.

இந்த முறையின் ஊடாக பகிடிவதையை நிறுத்த விட முடியாதென்ற போதிலும், இதனை விடவும் சிறப்பான செயற்பாடு ஒன்று செயற்படுத்தப்படும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

புதிய App அறிமுகப்படுத்தி வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

நீதிபதி இளஞ்செழியனின் உயிருக்கு ஆபத்து : நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய இளைஞன்!!

திருகோணமலை மேல் நீதிமன்ற வளாகத்தில், நேற்றைய தினம் நீதிபதி இளஞ்செழியனின் உயிருக்கு ஆபத்து என கத்திய இளைஞனால் அப்பகுதியில் சற்று பதற்ற நிலை தோன்றியுள்ளது.

திருகோணமலை மேல் நீதிமன்றத்தின் நீதிமன்ற நடவடிக்கைகள் நேற்று நடைபெற்றுக்கொண்டிருக்கும்போது, நீதிமன்றத்திற்கு வெளியில் 25 வயது மதிக்கத்தக்க இளைஞன் நீதிபதி இளஞ்செழியனின் உயிருக்கு ஆபத்து என கூச்சலிட்டுள்ளார்.

வித்தியாவின் வழக்கு தொடர்பில் விசாரணை செய்த நீதிபதி இளஞ்செழியனின் உயிருக்கு ஆபத்து காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் என அவர் கூக்குரலிட்டுள்ளார்.

இந்நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த நீதிமன்ற பொலிஸார் குறித்த இளைஞனை நீதிமன்ற வளாகத்தில் உள்ள முனியப்பர் கோவிலுக்கு முன்பாக அமர வைத்துள்ளதுடன் விசாரணை செய்தனர். இதன்போது அந்த இளைஞன் புத்திசுவாதீனமற்றவர் என தெரியவந்துள்ளது.

எனினும் சம்பவம் தொடர்பான விசாரணைகளை நீதிமன்ற பொலிஸார் மேற்கொண்டதுடன், அதன் பிறகு துறைமுக பொலிஸார் இது தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

லண்டனில் கொழுந்துவிட்டெரிந்த நட்சத்திர ஹொட்டல் : நூற்றுக்கணக்கான தீயணைப்பு வீரர்கள் போராட்டம்!!

லண்டனில் Knightsbridge பகுதியில் அமைந்துள்ள 5 நட்சத்திர ஹொட்டலில் பெருந்தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து நூற்றுக்கணக்கான தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர் போராடி வருகின்றனர்.

லண்டனில் Knightsbridge பகுதியில் செயல்பட்டு வரும் 5 நட்சத்திர ஹொட்டலான Mandarin Oriental-ல் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து 15 தீயணைப்பு இயந்திரங்களுடன் நூற்றுக்கணக்கான வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விபத்து நடந்த Knightsbridge பகுதியில் கரும்புகை சூழ்ந்துள்ளதாகவும், அப்பகுதி மக்கள் அச்சத்துடன் தெரிவித்துள்ளனர்.

தீ விபத்தை அடுத்து அந்த பகுதி வழியாக செல்லும் பேருந்துகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் ஹொட்டலுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியும் துரிதமாக நடைபெற்று வருகிறது. விபத்துக்கான காரணம் குறித்து இதுவரை உறுதியான தகவல் எதுவும் வெளியாகவில்லை.

முள்ளியவளையில் பல்கலைக்கழக மாணவி தற்கொலை!!

மொரட்டுவ பல்கலைக்கழக மாணவி ஒருவர் முள்ளியவளை பகுதியில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் Information Technology and management பிரிவில் கல்விகற்று வரும் 24 அகவையுடைய இராசநாயகம் நிறோசிகா என்ற மாணவியே இவ்வாறு தற்கொலை செய்துள்ளாதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த மாணவி வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய பொங்கள் விழாவில் கலந்து கொள்வதற்காக முள்ளியவளை மூன்றாம் வட்டாரத்தில் உள்ள அவரது சொந்த வீட்டிற்கு கடந்த 26 ஆம் திகதி சென்றதாக குறிப்பிட்டப்படுகின்றது.

இந்த நிலையில் குறித்த மாணவி இன்று காலை அவரது வீட்டு முற்றத்தில் நின்ற மாமரம் ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டார் என பெற்றோர் கண்ணீருடன் தெரிவித்தனர்.

மேலும் குறித்த சம்பவம் தொடர்பில் முள்ளியவளை பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்டுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

வவுனியாவில் சட்டவிரோத வலைகள் மீட்பு!!

இன்று (06.05.2018) காலை 10 மணியளவில் வவுனியாவில் உள்ள தேசிய நீர் உயிரினச் செய்கை அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் விசேட அஅதிரடிப்படையினர் இணைந்து நாடாத்திய திடீர் சுற்றிவளைப்பு ஒன்றில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்

சூடுவெந்தபுலவு மற்றும் பாவற்குளம் பகுதிகளில் நன்நீர் மீன்பிடித்தலில் சட்ட விரோதமாக தடை செய்யப்பட்ட தங்கூசி வலைகளை உபயோகித்து மீன்பிடித்தலில் ஈடுபட்டவர்களை கைது செய்யும் நோக்கில் இடம்பெற்ற இச்சுற்றிவளைப்பில் சூடுவந்தபுலவை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் ரூபா 150 000 பெருமதியான தடைசெய்யப்பட்ட தங்கூசி வலைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. கைப்பற்றப்பட்ட வலை மற்றும் நபரையும் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்

மேலும் சுற்றிவளைப்பானது வவுனியா, மன்னார் மாவட்ட நீர் உயிரின செய்கை விரிவாக்கல் அதிகாரி யோகநாதன் நிசாந்தன் தலமையிலான உத்தியோகத்தர்கள் குழு மற்றும் விசேட அதிரடிப்படையினரும் பங்கு கொண்டிருந்தனர்

ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்த வவுனியா,மன்னார் மாவட்ட நீர் உயிரின செய்கை விரிவாக்கல் அதிகாரி யோகநாதன் நிசாந்தன், தடைசெய்யப்பட்ட தங்கூசி வலைகளை உபயோகித்து மீன்பிடிப்பதன் மூலம் நன்நீர் மாசடைவதாகவும் குளங்களில் மீன்களின் உயிரிழப்புக்கள் அதிகம் ஏற்படுவதாகவும் தெரிவித்த அவர் தொடர்ந்தும் இவ்வாறான சட்ட விரோத நடவடிக்கையில் ஈடுபடுபவர்களை கைது செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவித்தார்.

வவுனியா மாணவன் தேசிய ரீதியில் கைப்பணி போட்டியில் முதலிடம் பெற்று சாதனை!!

அகில இலங்கை ரீதியில் பாடசாலை மட்டத்தில் நடைபெற்ற கைப்பணிப் போட்டியில் மிருதங்கம் ஒன்றை தயாரித்து முதலாம் நிலையினை பெற்ற வவுனியா மாவட்டத்தை சேர்ந்த மாணவனை கௌரவிக்கும் நிகழ்வு இன்று (06.06) இலங்கை திருச்சபை கலவன் பாடசாலையில் கல்லூரியின் அதிபர் இ.நவரட்ணம் தலைமையில் நடைபெற்றது.

வவுனியா குடியிருப்பில் அமைந்துள்ள இலங்கை திருச்சபை கலவன் பாடசாலையில் உயர்தர கலைப்பிரிவில் கல்வி கற்றுவரும் உதயசூரியன் துவாகரன் என்ற மாணவன் கடந்த 28.05.2018 அன்று பண்டாராநாயக்க மாநாட்டு மண்டபத்தில் மாணவனின் கைப்பணி திறமையை பாராட்டி ஜனாதிபதியினால் சான்றிதழும் பணப்பரிசிலும் (25 ஆயிரம் ரூபா) வழங்கி வைக்கப்பட்டது.

நிகழ்வில் பிரதம விருந்தினராக வவுனியா தெற்கு வலயக்கல்வி பணிப்பாளர் மு.ராதாகிருஸ்னன் கலந்துகொண்டு மாணவனை பாராட்டி வாழ்த்துரை வழங்கியிருந்தார்.

நிகழ்வில் பிரதி அதிபர் எஸ்.ஜெரோம் பிரதாபன், உப அதிபர்களான ரி.மோகன், கே.தர்மரட்ணம் பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

10வது மாடியிலிருந்து கீழே குதித்து உயிரை விட்ட மாணவி : காரணம் என்ன?

நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் ஐதராபாத் மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் ஐதபாராத்தில் ஜஸ்லின் கவுர் (18) என்ற மாணவி நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் மனமுடைந்தார்.

இதையடுத்து அபிஸ் மய்யூரி என்ற தனியார் கட்டிடத்தின் 10வது மாடிக்கு படியேறி சென்ற அவர், தற்கொலைக்கு முயன்றபோது பலர் கூச்சலிட்டனர். ஆனால் மாணவி கீழே குதித்து உயிரை மாய்த்துக்கொண்டார். இந்த காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியுள்ளது.

சம்பவம் குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். ஏற்கனவே தமிழகத்தின் பிரதீபா உட்பட சில மாணவிகள் நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் உயிரை மாய்த்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

எத்தனை முறை நான் தோல்வியை தாங்குவேன் அப்பா : தற்கொலை செய்த மாணவியின் உருக்கமான கடிதம்!!

தமிழகத்தில் நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் தற்கொலை செய்துகொண்ட பிரதீபா, தனது தந்தைக்கு எழுதிய உருக்கமான கடிதம் வெளியிடப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியைச் சேர்ந்தவர் பிரதீபா. இவர், நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் ஏற்பட்ட விரக்தியால் தற்கொலை செய்துகொண்டார்.

12ஆம் வகுப்பில் 1125 மதிப்பெண்கள் எடுத்திருந்த பிரதீபா, நீட் தேர்வில் 39 மதிப்பெண்கள் மட்டுமே எடுத்ததால் இந்த விபரீத முடிவை எடுத்தார்.

இந்நிலையில், பிரதீபா தற்கொலை செய்துகொள்வதற்கு முன்னர், அவரின் தந்தைக்கு எழுதிய கடிதம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

அந்த கடிதத்தில் அவர் கூறுகையில், ‘உங்க அம்மு உங்ககிட்ட சொல்ல விரும்புவது, இதுவே கடைசி பா. Sorry பா. என்னால் ஜெயிக்க முடியவில்லை. நீ என் மேல வச்சிருந்த நம்பிக்கையை என்னால காப்பாற்ற முடியவில்லை.

திரும்பவும் ஒரு தோல்வியை தாங்கும் சக்தி இல்லை. எத்தனை முறைப்பா நான் தோல்வியைத் தாங்குவேன். தோல்வியடைந்ததாலே என்னாலே என் School-க்கு போக முடியல. என் Teacher-ஐ பார்த்து பேசுற தைரியம் இல்லை.

என்னால் தான் அப்பா மற்றவர்கள் முன்னால இரண்டு வருஷமா தலைகுனிந்து வாழ்ந்திங்க. என் ஆசை நீ மத்தவங்க முன்னாடி தலை நிமிர்ந்து வாழணும். ஆனால், என்னால் அதைச் செய்ய முடியல. என் குடும்பம், நீங்கள் எல்லாம் எனக்குக் கிடைத்த வரம் பா. நான் உங்களுக்கு கிடைச்சது சாபம் என்று நினைக்கிறேன்.

எனக்கு தோல்வியைத் தாங்குற சக்தி இல்லை. இந்த 2 வருஷமா இந்த சக்தியைக் கொடுத்தது நீ தான் பா. ஆனால், இதுக்கு மேலயும் உனக்கு பாரம் ஆக இருக்க நான் விரும்பவில்லை. இந்த முடிவை நான் 2 வருஷத்துக்கு முன்னாடி எடுத்தப்போதே நீ என்ன தடுக்காமல் இருந்திருக்கலாம்.

அப்படி நான் செய்திருந்தால் 2 வருஷத்துல என்னை கொஞ்ச கொஞ்சமாக மறந்திட்டு இருப்பீங்க. அதனால், நான் இப்போது அதை செய்யப் போகிறேன். ஏன் என்றால் நான் உங்க எல்லாருடைய நம்பிக்கையையும் இழந்து நான் சாகப்போறேன்.

Sorry பா. I love you அப்பா. எனக்கு வேற வழி தெரியவில்லை அப்பா. நம்ம குடும்பம் என்றால் எனக்கு ரொம்ப பிடிக்கும். உங்க எல்லாருடனும் ரொம்ப நாள் சேர்ந்து வாழணும்னு ஆசையா இருக்கு.

ஆனால், எனக்கு அந்த தகுதி இல்லை. இந்த முடிவு மற்றவர்களுக்கு கோழைத்தனமா தெரியலாம். ஆனால், அடுத்தவர்கள் நம்ம மேல வெச்ச நம்பிக்கையை அழிச்சுட்டு வாழுறதை விட இந்த முடிவே மேல்.

எனக்கு ஒரே ஒரு வருத்தம் பா. என்னால் உங்களுக்கு சந்தோஷமும் தர முடியவில்லை. என்னால் எல்லா சந்தோஷத்தையும் இழந்துவிட்டீர்கள். அப்பா நீங்க எனக்கு தைரியம் கொடுத்த பிறகும் நான் இந்த முடிவு எடுக்கறது தப்பு தான்.

ஆனால், என்னால் தோல்வியை தாங்க முடியவில்லை. உங்க எல்லோரையும் விட்டுட்டுப் போகணும்னு நினைக்கும்போது ரொம்ப வலிக்கிறது. ஆனால், அதைவிட அதிகமான வலியை இந்தத் தோல்வி தந்துவிட்டது.

என்னால் மற்றவர்கள் மாதிரி கிடைத்ததை வைத்து வாழ முடியவில்லை. ஏன் என்றால் நான் அப்படி வளரவில்லை. அந்த வலியை என்னால் தாங்க முடியாது. என்னை மன்னிச்சிடுங்க அம்மா, மன்னிச்சிடுங்க அக்கா, மன்னிச்சிடுங்க அண்ணா… உங்கள் எல்லோரையும் Miss பண்றேன். I Love My Family.. But my Failure going to me deadline.. Sorry.. உங்க அம்மு’ என எழுதியுள்ளார்.

ஓடும் பேருந்தில் நடந்த துயரம் : 50 பேரின் உயிரை காப்பாற்றிவிட்டு ஓட்டுநர் மரணம்!!

சென்னையில் ஓடும் பேருந்தில் டிரைவர் மரணமடைந்த நிலையில், பேருந்தை பாதுகாப்பாக நிறுத்தியதால் 50 பேரின் உயிர் காப்பாற்றப்பட்டது.

திருவள்ளூரின் பள்ளிபட்டு அருகே கரிம்பேடு கிராமத்தை சேர்ந்தவர் அருணாசலம்(வயது 45), இவரது மனைவி ராணி(வயது 35). இவர்களுக்கு விஷால்(வயது 9), நிவாஸ்(வயது 7) இரு மகன்கள் உள்ளனர்.

ஆந்திர போக்குவரத்து துறையில் கடந்த 15 ஆண்டுகளாக அருணாசலம் டிரைவராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் நேற்று காலை திருமலையில் இருந்து சென்னைக்கு அருணாசலம் வந்துள்ளார், இரவு மீண்டும் திருமலைக்கு சென்றுள்ளார்.

அப்போது செங்குன்றம் அருகே பேருந்து சென்று கொண்டிருந்த போது லேசான நெஞ்சுவலி இருந்ததால் மருந்து கடையில் மருந்துகளை வாங்கி சாப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து ஊத்துக்கோட்டை அருகே மீண்டும் நெஞ்சு வலித்துள்ளது, அங்கேயும் மருந்துகளை வாங்கி சாப்பிட்ட நிலையில் சுமார் 100 மீற்றர் தொலையில் பேருந்தை பாதுகாப்பாக நிறுத்திவிட்டு ஸ்டீயரிங் மீது சாய்ந்துள்ளார்.

அப்படியே அவர் உயிர் பிரிந்ததும் தெரியவந்தது, இச்சம்பவம் பயணிகள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இதனை தொடர்ந்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வரும் பிச்சாட்டூர் பொலிசார், மாற்று டிரைவர் மூலம் பயணிகளை திருமலைக்கு அனுப்பி வைத்தனர்.

தூக்கில் தொங்கிய கணவன் : காதல் மனைவியே கொன்றுவிட்டதாக கதறும் குடும்பத்தார்!!

இந்தியாவில் இளைஞர் ஒருவர் தூக்கில் சடலமாக தொங்கிய நிலையில் மனைவி தான் அவரை கொலை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டை சேர்ந்தவர் விபுல் பரியா (25) மருத்துவரான இவர் தனது மனைவி பூஜா சவ்டாவுடன் வசித்து வந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் வீட்டில் தூக்கில் சடலமாக தொங்கியுள்ளார்.

சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் சடலத்தை கைப்பற்றிவிட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் பூஜா தனது குடும்பத்தாருடன் சேர்ந்து விபுலை கொலை செய்துவிட்டதாக விபுலின் அண்ணன் திலிப் குற்றஞ்சாட்டியுள்ளார்.

அவர் கூறுகையில் விபுலை கொன்றுவிட்டு தூக்கில் தொங்கவிட்டுள்ளார்கள், இது குறித்து விசாரிக்க வேண்டும் என கூறியுள்ளார்.

பொலிசார் கூறுகையில், பிரேத பரிசோதனை முடிவுக்காக காத்துள்ளோம், சமீபகாலமாக விபுலும், பூஜாவும் தொடர்ந்து சண்டை போட்டுள்ளார்கள் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக கூறியுள்ளனர்.

லண்டன் மாப்பிள்ளை : லட்சக்கணக்கில் சம்பளம் : பெண்ணை ஏமாற்ற திட்டம்போட்ட இளைஞர்!!

சென்னையை சேர்ந்த இளைஞர் ஒருவர் ஹொட்டல் அதிபரின் மகளை திருமணம் செய்துகொள்வதற்காக லண்டன் மாப்பிள்ளை என பொய்கூறியுள்ளார்.

சென்னை சேர்ந்த அமுக்குடியான் அமானுல்லாவின் மகன் முகமது அஸ்லம் என்பவர், அதே பகுதியைச் சேர்ந்த ஹொட்டல் அதிபர் சையது இப்ராகிமின் மகளை தனக்கு பெண் கேட்டுள்ளார்.

அஸ்லம் எம்பிஏ படித்துவிட்டு லண்டனில் மாதம் ஒரு லட்ச ரூபாய் ஊதியம் வாங்குவதாகவும் அவரும் அவரது பெற்றோரும் கூறியுள்ளனர். அதை நம்பி தனது மகளின் புகைப்படத்தை சையது இப்ராகிம் கொடுத்துள்ளார்.

ஆனாலும் சந்தேகத்தின் பேரில் விசாரித்தபோது முகமது அஸ்லம் 9ஆம் வகுப்பு வரையே படித்தது தெரியவந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த இப்ராகிம் தனது மகளை மணம் முடித்துக் கொடுக்க மறுத்துள்ளார்.

இதனால் கோபமடைந்த முகமது அஸ்லம், தனக்கு நஷ்ட ஈடாக 50 லட்ச ரூபாய் வேண்டும் என்றும், தர மறுத்தால் பெண்ணின் புகைப்படத்தை மார்பிங் செய்து இணையதளத்தில் வெளியிட்டு விடுவேன் என்றும் மிரட்டியுள்ளார்.

இதுகுறித்து இப்ராகிம் அளித்த புகாரின் பேரில், முகமது அஸ்லமை கைது செய்த காவல்துறையினர் புழல் சிறையில் அடைத்தனர்.

தயவுசெய்து உதவுங்கள் : தமிழ் மக்களிடம் கண்ணீர் விட்டு கதறும் குடும்பம்!!

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண் ஜெஸ்னா, இவர் கஞ்சரபள்ளியில் உள்ள கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த மார்ச் 22ம் திகதியில் இருந்து ஜெஸ்னாவை காணவில்லை, கடைசியாக முக்குகுத்தட்டு பேருந்து நிலையத்தில் ஜெஸ்னாவை பார்த்ததாக சிலர் தெரிவித்துள்ளனர்.

ஜெஸ்னா மாயமானது குறித்து பத்தனம்திட்டா பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். 50 நாட்களுக்கு மேலாகியும் வழக்கு விசாரணையில் எந்த முன்னேற்றம் இல்லை.

இதனையடுத்து ஜெஸ்னா குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு ரூ.2 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று கேரள காவல்துறை அறிவித்துள்ளது.

இந்நிலையில் ஜெஸ்னாவின் குடும்பத்தார் மற்றும் அக்கா ஜெபி, தமிழக ஊடகங்கள் மற்றும் மக்களிடம் வாயிலாக தங்கள் என் தங்கைய கண்டுபிடிங்க. தயவுசெய்து உதவுங்க என கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதனால் ஜெஸ்னாவை தேடும் பணியை கேரள காவல்துறை முடுக்கிவிட்டுள்ளது. இதற்காக 125 பேர் கொண்ட தனிப்படை கேரள மாநிலம் இடுக்கி வனத்துறையில் தேடுதல் வேட்டை நடத்தி வருகிறது.

திருவல்லா மாவட்ட துணைக் கண்காணிப்பாளர் சந்திரசேகர் தலைமையிலான இந்தத் தனிப்படையில், 5 காவல்

கண்காணிப்பாளர்களும் இடம்பெற்றுள்ளனர். தற்போது எருமேலி, முன்டக்கயம், பீர்மேடு மற்றும் குட்டிக்கனம் ஆகிய வனப்பகுதிகளில் தீவிர தேடுதல் நடைபெற்று வருகிறது.

பொலிஸ் நிலயத்தினுள் துஸ்பிரயோகத்திற்கு உள்ளான 15 வயதுச் சிறுமிக்கு நடந்த கதி!!

நீதிமன்றம் வழங்கிய உத்தரவின் பேரில் சிறுவர் நன்னடத்தை முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த வெலிஓய காவல் நிலையத்தினுள் துஸ்பிரயோகத்திற்கு உள்ளானதாக கூறப்படும் 15 வயது சிறுமி குறித்த முகாமில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சிறுமி தடுத்து வைக்கப்பட்டிருந்த அனுராதபுரம் – அசோக குழந்தைகள் பராமரிப்பு நிலையத்தில் இருந்து குறித்த முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளதாக காவற்துறை தெரிவித்தது.

இது தொடர்பில் அனைத்து காவல் நிலையங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக அனுராதபுரம் காவற்துறையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

குறித்த சிறுமியை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பிலான வழக்கு இன்று கெபிதிகொல்லேவ நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில் , சம்பவம் தொடர்பில கைது செய்யப்பட்டுள்ள காவற்துறை கான்டபிலை எதிர்வரும் 13ம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

பாடசாலை மாணவனுக்கு எமனாக மாறிய தென்னை மரம்!!

கம்பஹா அத்தனகல்ல – அலவல பிரதேசத்தில் மரம் ஒன்று சரிந்து விழுந்தில் 14 வயது மாணவன் உயிரிழந்துள்ளார். அலவல மகாவித்தியாலத்தில் 9 வகுப்பில் பயிலும் துலான் செனிது என்ற மாணவனே இவ்வாறு பலியாகியுள்ளார்.

இந்த மாணவன், பாடசாலையில் நேற்று நடத்தப்பட்ட பகுதி நேர வகுப்பில் கலந்து கொண்ட தனது சகோதரனை வீட்டுக்கு அழைத்து வர பாடசாலை அருகில் சென்று காத்திருந்த போது அங்கிருந்த தென்னை மரம் ஒன்று சரிந்து மாணவன் மீது விழுந்துள்ளது.

சம்பவத்தில் படுகாயமடைந்த மாணவனை அருகில் இருந்தவர்கள் வைத்தியசாலையில் சேர்த்துள்ளனர். எனினும் வைத்தியசாலைக்கு செல்லும் வழியிலேயே மாணவன் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து நிட்டம்புவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.