கொழும்பில் இருந்து பயணித்துக் கொண்டிருந்த ரயிலில் பெண் ஒருவர் குழந்தையை பிரசவித்துள்ளார். கொழும்பில் இருந்து மட்டக்களப்பு வரை பயணித்த தபால் ரயிலில் இவ்வாறு குழந்தை பிறந்துள்ளது.
நேற்று இரவு குறித்த பெண்ணுக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குழந்தை பிரசவித்த பெண் ஹபரண வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் தம்புள்ளை வைத்தியசாலைக்கு மாற்றி அனுப்பப்பட்டுள்ளார்.
26 வயதுடைய இந்த பெண் காத்தான்குடி பிரதேசத்தை சேர்ந்த ஒருவர் என தெரியவந்துள்ளது. தாய் மற்றும் குழந்தை தற்போது ஆரோக்கியமான இருப்பதாக வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
சமகால அரசாங்கத்தில் இராஜாங்க அமைச்சராக செயற்படும் பாலித ரங்கே பண்டாரவின் மகன் குடிபோதையில் வாகனம் ஓட்டியமையினால் நேற்று விபத்து ஏற்பட்டது.
சிலாபம், புத்தளம் வீதியின் பங்கதெனிய பிரதேசத்தில் இடம்பெற்ற இந்த விபத்தில் வீட்டிற்கு பாரிய சேதம் ஏற்பட்ட நிலையில் அமைச்சரின் மகன் காயமடைந்திருந்தார்.
எப்படியிருப்பினும் தங்கள் வீட்டிற்கு ஏற்பட்ட சேதத்திற்கு நட்டஈடு வழங்கும் வரை விபத்துக்குள்ளான கெப் வண்டியை அங்கிருந்து நகர்த்துவதற்கு இடமளிக்கப்போவதில்லை என சேதமடைந்த வீட்டின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
திறன் அபிவிருத்தி மற்றும் தொழில்சார் பயிற்சி அமைச்சின் வாகனத்தை ஓட்டி சென்ற போதே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. விபத்து ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் கெப் வண்டிக்குள் இருந்த வெளிநாட்டு மதுபான போத்தல் ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் அமைச்சரின் மகனால் ஆனமடுவ, இகினிமிட்டிய பிரதேசத்தில் ஒரு குடும்பத்தை சேர்ந்த தாய், தந்தை மற்றும் இரண்டு பிள்ளைகள் மீது வாகனத்தை மோதி விபத்து ஏற்படுத்தப்பட்டிருந்தது.
இதேவேளை, அவரால் நடந்த இன்னுமொரு விபத்தில் ஆனமவ பிரதேசத்தை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்தார். அந்த சந்தர்ப்பத்தில் வாகனத்தை நிறுத்தாமல் அவர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
எப்படியிருப்பினும் இதுவரையில் அமைச்சரின் மகன் கைது செய்யப்படவில்லை எனவும் சம்பவங்கள் தொடர்பாக பொலிஸார் விசாரணை மேற்கொள்வதாகவும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
யாழ். வரணி வடக்கு சிமில் கண்ணகை ஆலய வருடாந்த தேர் உற்சவ திருவிழா தொடர்பில் இந்துக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. யாழ். வரணி வடக்கு சிமில் கண்ணகை ஆலய வருடாந்த தேர் உற்சவம் நேற்று நடைபெற்றுள்ளது.
இந்த நிலையில் குறித்த ஆலயத்தில் நேற்று காலை ஆயிரக்கணக்காண பக்தர்கள் புடை சூழ்ந்திருந்த போதும் அந்தப் பகுதியில் முதலாவது சமூக வர்க்கத்தினர் என தம்மை தாமே அடையாளப்படுத்திய சிலர் குறித்த தேரின் வடத்தை பிடித்து இழுக்கும் உரிமை ஏனைய பக்தர்களுக்கு இல்லை என தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் குறித்த தேரை இழுக்கும் சக்தி அந்த நபர்களிடம் காணப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் அவர்கள் JCB இயந்திரம் மூலம் தேர்வடம் பிடித்து இழுத்துள்ளமை பொரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் வரணி சிமில் அம்மன் ஆலயத்தின் பல வருட இதிகாசங்களை கொண்ட பூர்வீக சிறப்பை இழிவுபடுத்தியுள்ளதாக அந்தப்பகுதி அடியவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இராமேஸ்வரத்தில் இருந்து இலங்கை வழியாக அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முயற்சித்த தமிழர்கள் நால்வரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
டெல்லியில் வசித்து வரும், கமல், அவரது சகோதரர் லோகேஸ், மனைவி கங்கா மற்றும் மகள் சைனி ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அந்த செய்தியில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “கடந்த பத்து நாட்களுக்கு முன்னர் டெல்லியில் இருந்து இராமேஸ்வரம் வந்த குறித்த நால்வரும் அங்கு விடுதி ஒன்றில் தங்கி இருந்துள்ளனர்.
கமலுக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதன் காரணமாக, அவுஸ்திரேலியாவில் உள்ள தனது சகோதரனிடம் செல்வதற்காக வேண்டி, சட்டவிரோதமான படகில் செல்ல முற்பட்டுள்ளனர்.
இதன்படி, இராமேஸ்வரம் வந்து அங்கிருந்து இலங்கை வழியாக படகில் அவுஸ்திரேலியா செல்ல முற்பட்டுள்ளனர். இந்நிலையிலேயே, குறித்த நால்வரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இவர்களிடம் தொடர்ந்தும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தெற்காசியாவிலேயே மிக உயரமான கட்டிடத்தை சீன நிறுவனம் ஒன்று கொழும்பில் அமைக்கவுள்ளது. இந்தக் கட்டிடத்தை அமைக்கும் பணிகள் 2021ஆம் ஆண்டில் நிறைவடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
376 மீற்றர் உயரத்தையும் 92 தளங்களையும் கொண்டதாக இந்தக் கட்டிடம் அமைக்கப்படவுள்ளது.
கொழும்பு 1, ட்ரான்ஸ்வேக்ஸ் சதுக்கத்தில் மூன்று கோபுரங்களைக் கொண்ட இந்தக் கட்டிடம் கட்டப்படவுள்ளது.
THE ONE என்று அழைக்கப்படவுள்ள இந்தக் கட்டிடம், பணியகங்கள், வதிவிடங்கள், ஆடம்பர சில்லறை வணிக வளாகம், பல மாடி வாகனத் தரிப்பிடம், மண்டபம், உலங்குவானூர்தி இறங்குதளம் உள்ளிட்ட பல வசதிகளைக் கொண்டதாக அமையவுள்ளது.
ஆப்கானிஸ்தான் – பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான டி20 தொடரை ஆப்கானிஸ்தான் அணி 2-0 என கைப்பற்றியுள்ளது.
ஆப்கானிஸ்தான் அணி இந்த போட்டித் தொடரில் பங்களாதேஷ் அணியை தோற்கடித்தமையை இலங்கை ரசிகர்கள் ஒருபக்கம் கொண்டாடி வருகின்றனர்.
காரணம் இவ்வருட ஆரம்பத்தில் நடைபெற்ற சுதந்திரக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை – பங்களாதேஷ் அணிகளுக்கிடையில் ஏற்பட்ட சில சம்பவங்கள்தான். இதில் முக்கியமாக பங்களாதேஷ் வீரர்களின் பாம்பு நடனம் இலங்கை ரசிகர்களை முற்றுமுழுதாக கோபப்படுத்தியிருந்தது என்றுதான் கூறவேண்டும்.
இந்த கோபத்தின் காரணமாக சுதந்திரக் கிண்ண இறுதிப்போட்டியில், இந்திய அணிக்கு என்றுமில்லாத அளவிற்கு இலங்கை ரசிகர்கள் ஆதரவளித்தனர். அதுமாத்திரமின்றி பங்களாதேஷ் அணியுடன் எந்த அணி விளையாடினாலும், அந்த அணிக்கு ஆதரவளித்து வருகின்றனர்.
இம்முறையும் நடைபெற்று வரும் தொடரில் இலங்கை ரசிகர்கள், ஆப்கானிஸ்தான் அணிக்கு ஆதரவு அளித்து பதிவுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆனால் தற்போது ஆப்கானிஸ்தான் வெற்றிபெற்றதால், ஐசிசி டி20 தரப்படுத்தலில் இலங்கை அணிக்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
அதாவது டி20 தரப்படுத்தலில் இலங்கை அணி தற்போது 9வது இடத்துக்கு பின்தள்ளப்பட்டுள்ளதுடன், ஆப்கானிஸ்தான் அணி 8வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
இலங்கை அணி 85 புள்ளிகளை பெற்றுள்ள நிலையில், ஆப்கானிஸ்தான் 5 புள்ளிகள் முன்னேற்றத்துடன் 8வது இடத்தில் உள்ளது.
ஐசிசி டி20 தரப்படுத்தலில் பாகிஸ்தான் அணி தொடர்ந்தும் முதலிடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் குடும்பத்தாரை சந்தித்து நடிகர் விஜய் ஆறுதல் கூறியுள்ளார். 13 பேரின் குடும்பத்தாரையும் சந்தித்த பின்னர் 1 லட்சம் இழப்பீடும் வழங்கினார்.
இந்நிலையில் தூத்துக்குடி புறப்படுவதற்கு முன்பாக தன்னுடைய ரசிகர் மன்றத்தினருக்கு கண்டிஷன் போட்டாராம். அதாவது, யாரும் படம் எடுக்க வேண்டாம் ப்ளீஸ் என கூறினாராம்.
நெல்லை மாவட்ட விஜய் ரசிகர் மன்றத்தினரே விஜய் ஆறுதல் சொல்ல வேண்டிய வீடுகளின் பயணங்கள் குறித்து திட்டம் வகுத்ததாகவும், சென்னையிலிருந்து மதுரைக்கு விமானம் மூலம் வந்த விஜய் அங்கிருந்து தூத்துக்குடிக்கு காரில் சென்றதாகவும் தெரிகிறது.
அங்கே விஜய்யை பார்த்த சந்தோஷத்தில், செல்போனில் படம் எடுக்க முயன்ற விஜய் மக்கள் இயக்க நிர்வாகியை சத்தம் போட்டதுடன், நான் துக்க வீட்டுக்கு வந்திருக்கிறேன், படம் எதுவும் எடுக்க வேண்டாம் என கேட்டுக் கொண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பால் குடிப்பதாகக் கனவு கண்டால் செல்வம் சேரும். பாம்பு கடித்து இரத்தம் வருவதாகவும் நாய்கடித்து இரத்தம் வருவதாகவும் கண்டால் அதிர்ஷ்டம் கூடிவரும்.
வெள்ளைநிறப் பாம்பு கையில் கடிப்பதாகக் கனவு கண்டால் செல்வம் சேரும்.
அருவருப்பான மனிதர்கள், காகம், மீன், இரத்தம், விலைமாதர் இவர்களைக் கனவில் கண்டால் செல்வம் சேரும். காளைமாடு, அரசன், பசு,குதிரை, கோவிலில் பால் அபிஷேகம் செய்யப்படுவதாக கனவு கண் குடும்பம் மேன்மை பெறும்.
பணம், சாதம், வெற்றிலை, பாக்கு, தானியம், இவைகளைப் பெறுவதாகவும், சாடால் லாபம் கிடைக்கும்.
மாம்பழம், பசு சாணம், இவைகளைக் கண்டால் பெறும் காலம் அதிர்ஷ்டமாகும். காளையை ஓட்டிச் செல்வதாகவும் காரில் தனியாக ஓட்டிச் செல்வதாகவும் குதிரையை ஓட்டிச் செல்வதாகவும் கனவு கண்டால் அதிர்ஷ்டம் அதிகரிக்கும்.
மிருகங்களுடன் சண்டையிடுவதாகக் கண்டால் அதிர்ஷ்டம் அடிக்கும். மாடிப்படியில், மரத்தில், மலைமீது ஏறுவதாகக் கனவு கண்டால் உயர்ந்த நிலை கிடைக்கும்.
அமெரிக்க ராணுவத்தில் விரைவில் எல்லா துறைகளிலும் ரோபோக்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக, அந்நாட்டு ராணுவத்துறை அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அமெரிக்க ராணுவ தலைமையிடமான பென்டகன், நீண்ட காலமாக ரோபோக்கள் குறித்த ஆராய்ச்சியை செய்து வருகிறது. Artificial Intelligence எனும் தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்படும் ரோபோக்களை பென்டகன் வடிவமைத்து வருகிறது.
அதனைத் தொடர்ந்து, அமெரிக்க ராணுவத்தில் ரோபோக்களை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் முதற்கட்டமாக, அணு ஆயுத தாக்குதலை முன்பே கணிக்கும் ரோபோக்களை உருவாக்கவும் அமெரிக்க ராணுவம் முடிவு செய்துள்ளது.
ராணுவத்தில் குறைந்த அளவு மனிதர்களையும், அதிகளவு ரோபோக்களையும் பயன்படுத்துவதன் மூலம் உயிரிழப்பை குறைக்க முடியும் என்றும், ரோபோக்களின் மூலம் நடத்தப்படும் தாக்குதல்கள் துல்லியமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
அதேபோல, அமெரிக்காவில் பெரும்பாலான ராணுவ வீரர்கள், பாதுகாப்பு படையினர் குண்டுகளை அகற்றும் போது தான் மரணம் அடைகிறார்கள். எனவே இதனை தடுக்கும் வகையில், ரோபோக்களை பயிற்சி அளிக்கவும் அந்நாட்டு ராணுவம் முடிவு செய்துள்ளது.
அத்துடன் குண்டுவெடிப்பை தடுக்கவும், எத்தகைய குண்டுகளையும் எளிதாக செயலிழக்க செய்யும் ரோபோக்களை சோதனை செய்து வருகிறது.
இந்நிலையில், அமெரிக்க ராணுவத்தில் உள்ள ஐந்து படைகளுடன் 6வது படையாக ரோபோக்களை சேர்க்க உள்ளதாகவும், சில மாதங்களில் அதற்காக சோதனை நடத்த இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இது எவ்வாறு நடைமுறைபடுத்தப்படும் என்பது குறித்து விளக்கமாக தெரிவிக்கப்படவில்லை.
தென்கொரியாவின் சியோல் நகரில் நேற்று முன்தினம் தொழிலாளர்கள் மத்தியில் பிலிப்பைன்ஸ் அதிபர் உரையாடியபோது, கூட்டத்துக்கு வந்திருந்த இரண்டு பெண்களை மேடைக்கு அழைத்து புத்தகம் ஒன்றைப் பரிசளித்தார்.
அந்தப் பெண்கள் அவருக்கு நன்றி கூறிவிட்டு கைகுலுக்கிவிட்டுக் கிளம்பினர். அப்போது, அந்தப் பெண்களில் ஒருவரை அழைத்த பிலிப்பைன்ஸ் அதிபர், `புத்தகம் கொடுத்ததற்கு கைமாறாக எனக்கு முத்தம் கொடுக்க வேண்டும்’ என்று சொன்னார்.
உடனே அரங்கில் இருந்த அனைவரும் கைதட்டி கோஷமிட்டனர். அந்தப் பெண்ணும் சற்று தயக்கத்துடன் அதிபர் கொடுத்த முத்தத்தை ஏற்றுக்கொண்டார்.
பெண்ணுக்கு முத்தம் கொடுத்த விவகாரத்தில் பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோவுக்கு கண்டனம் தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
`பிலிப்பைன்ஸ் அதிபர் பொது மேடையில் பெண்ணுக்கு முத்தம் கொடுத்தது மோசமான செயல். 73 வயதாகும் இவருக்குப் பெண்களிடம் எப்படி நடந்துகொள்வது என்று தெரியவில்லை’ என்று உள்ளூர் அரசியல் தலைவர்கள் விமர்சித்து வருகின்றனர்.
நான் நகைச்சுவைக்காகத் தான் அப்படிச் செய்தேன். அது என் ஸ்டைல். ஒரு சின்ன முத்தத்தில் எந்தத் தவறும் இல்லை. சில பெண்கள் அமைப்பினர் இதைப் பெரிதுபடுத்தி என்மீது பழி சுமத்துகிறார்கள். என் மீதான குற்றச்சாட்டு மனுவில் அதிகளவிலான பெண்கள் கையெழுத்திட்டால், பதவி விலகத் தயாராக இருக்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
பிலிப்பைன்ஸ் நாட்டில் அதிபர் ரோட்ரிகோவின் செயலுக்குக் கண்டனம் தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும், அவரின் ஆட்சியில் நடக்கும் அனைத்து ஊழலுக்கும் எதிராகச் சீற்றம் அதிகரித்து வருகிறது.
ஒடிசாவில் பெர்ஹாம்பூர் நகரில் வசித்து வந்த பார்வதி (வயது 78) என்பவர் கடந்த திங்கட்கிழமை வயது முதிர்வால் இறந்துபோனார். இதனை தொடர்ந்து அவரது கண்களை கண் வங்கிக்கு குடும்பத்தினர் நன்கொடையாக வழங்கினர்.
இந்நிலையில், அடுத்த நாள் காலை பார்வதியின் மகன் காமேஸ்வர் (47) உடல் நல குறைவால் மரணம் அடைந்துள்ளார். இதனால் இரட்டிப்பு சோகத்தில் அவரது குடும்பத்தினர் மூழ்கினர்.
எனினும் அதில் இருந்து உடனடியாக மீண்ட அவர்கள் காமேஸ்வரின் கண்களையும் நன்கொடையாக வழங்கினர்.
இதுபற்றி கஞ்சம் மாவட்டத்தில் உள்ள எம்.கே.சி.ஜி. மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் மருத்துவர் நாகேஸ்வர் ராவ் சுபுதி கூறும்பொழுது, இறந்தவர்களின் கார்னியாக்கள் எடுக்கப்பட்டன.
முறையான பரிசோதனைகளுக்கு பின் இவை தகுதியானவை என கண்டறியப்பட்டால், நான்கு பேருக்கு பார்வை கிடைக்க கூடும் என கூறியுள்ளார்.
ராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டாரவின் மகனை கைது செய்ய நடவடிக்கை எடுக்க உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டாரவின் மகன் பயணித்த அரசாங்கத்திற்கு சொந்தமான கெப் வண்டி, நேற்று சிலாபம் – புத்தளம் பிரதான வீதியில் விபத்துக்கு உள்ளானது.
வேகத்தை கட்டுப்படுத்த முடியாத காரணத்தினால், கெப் வண்டி வீதியை விட்டு விலகி, அருகில் உள்ள வீடொன்றின் மீது புகுந்துள்ளது.
இதில், வாகனமும், வீடும் சேதமடைந்துள்ளதுடன், ராஜாங்க அமைச்சரின் மகன் காயமடைந்துள்ளார்.
வாகன விபத்தின் போது, காயமடைந்த ராஜாங்க அமைச்சரின் மகன் சிலாபம் வைத்தியசாலையில் இருந்து கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டிருந்ததுடன், பின்னர் அவர் தனது விருப்பத்தின் பேரில் வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளார்.
மேலும், வாகன விபத்து ஏற்படும் போது ராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டாரவின் மகன் மதுபோதையில் இருந்தமை மருத்துவப் பரிசோதனையின் மூலம் உறுதியாகியுள்ளது.
இதனால், குறித்த விடயத்தை நீதிமன்றத்தில் முன்வைத்து, அவரை கைதுசெய்ய நடவடிக்கை எடுக்க உள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
வவுனியா பிரதி மாகாண விவசாய அலுவலகக் கட்டிடம் அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று (06.06) பணிப்பாளர் அ.சகிலா பானு தலைமையில் இடம்பெற்றது.
நிகழ்வில் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண விவசாய மற்றும் மீன்பிடி அமைச்சர் க.சிவனேசன் கலந்துகொண்டு கட்டிடத்திற்கான அடிக்கல்லை நாட்டி வைத்து உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.
தொடர்ந்து நிகழ்வில் உரையாற்றிய வடக்கு மாகாண விவசாய அமைச்சர் க.சிவனேசன், வடக்கில் இராணுவத்தினர் சிவில் நடவடிக்கையில் ஈடுபடுவது குறைக்கப்பட வேண்டும். யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற மரநடுகை நிகழ்வில் வடக்கு ஆளுநரே இராணுவத்தை அழைத்திருந்தார். சிவில் நடவடிக்கையில் இராணுவத்தினரை அனுமதிப்பது சரியா? என ஊடகவியலாளர் கேட்ட போதே மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.
விவசாயமும் கமநலசேவைகளும், கால்நடை அபிவிருத்தி நீர்ப்பாசனம், மீன்பிடி நீர்வழங்கல், மற்றும் சுற்றாடல் அமைச்சின் செயலாளர் கா.தெய்வேந்திரம் மற்றும் வடமாகாண விவசாய பணிப்பாளர் சி.சிவகுமாரின்’ பங்கேற்புடன், இக்கட்டிடமானது 34.62 மில்லியன் ரூபாவில் அமைக்கப்படவுள்ளது.
நிகழ்வில் வடக்கு மாகாணசபை உறுப்பினர்களான ஜி.ரி.லிங்கநாதன், ம.தியாகராஜா, வவுனியா நகரசபை தலைவர் இ.கௌதமன், மற்றும் மாகாண பிரதி விவசாய அலுவலகத்தின் உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
இலங்கையின், தற்போதைய வயது நிலை தொடர்ந்தால், அடுத்த 23 ஆண்டுகளில் நாட்டின் மொத்த சனத்தொகையில் 25 வீதமானவர்கள், 60 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிதியமைச்சின் அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“1981ஆம் ஆண்டில், 60 வயதுக்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கை மொத்த சனத்தொகையில், 6.6 வீதமாக இருந்தது. 2012ஆம் ஆண்டு, இது 12.4 வீதமாக அதிகரித்தது.
2016ஆம் ஆண்டு, 60 வயதுக்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கை, 15.5 வீதமாக உயர்ந்தது. இந்தநிலை தொடர்ந்தால், 2041ஆம் ஆண்டில், சனத்தொகையில் 24.8 வீதமானோர், 60 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருப்பர்.
இதன் மூலம், நாட்டின் மொத்த சனத்தொகையில் நான்கில் ஒரு பங்கினர் வேலை செய்யும் வயதைக் கடந்தவர்களாக இருப்பார்கள். இதனால் பல்வேறு நிதி சார்ந்த பிரச்சினைகள் தோன்றும்.
வருமான வரி மூலம் பெறப்படும் வருமானம் குறையும். சுகாதாரம், ஓய்வூதியம், முதியோர் பராமரிப்பு, போன்றவற்றுக்கான மீண்டெழும் செலவினங்கள் அதிகரிக்கும்” என அந்த அறிக்கை கூறுகிறது.
கம்பஹாவில் திடீரென ஏற்பட்ட புகை மண்டலத்தினால் அந்தப் பகுதியில் பரபரப்பு நிலை ஏற்பட்டது. பியகம பகுதியில் திடீரென புகைமூட்டம் ஒன்று ஏற்பட்டு வீதி முழுவதும் புகையினால் மூடியுள்ளது.அண்மையில் பண்டாரவத்தை, பியகம, கடுவெல வீதியில் பண்டாரவத்தை சந்தியில் இந்த சம்பவம் இடம்பெற்றள்ளது.
சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு சென்று பார்த்த போது அது பேருந்தில் இருந்த வந்த புகை என தெரியவந்துள்ளது. பேருந்தின் இயந்திரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இவ்வாறு புகைமூட்டமான நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவத்தின் போது எடுக்கப்பட்ட காணொளி ஒன்று தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
எனினும் திடீரென ஏற்பட்ட புகைமண்டலத்தை பார்த்த பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேகக் கூட்டங்கள் திடீரென தரையிறங்கியதாக எண்ணிய பலரும் அதனை காணொளியாக பதிவு செய்ததாக குறிப்பிட்டுள்ளனர்.
உலகின் மிக அழகான இயற்கை காட்சிகளை கொண்ட குளியலறைகள் சிலவற்றை பிரித்தானிய ஊடகமொன்று பட்டியலிட்டுள்ளது. குளியலறை அமைந்துள்ள இடத்தை சுற்றி சிறப்பான இயற்கை காட்சிகள் அமைந்திப்பதனை கொண்டே இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
சுற்றுலா பயணிகள் தங்களுக்கு விருப்பமான முறையில் தங்கள் பயணிக்க வேண்டிய இடங்களை தெரிவு செய்வதற்கு இந்த பட்டியல் உதவியாக இருக்கும் என கருதப்படுகின்றது.
அதற்கமைய இந்த பட்டியலில் இலங்கை குளியலறை ஒன்றும் இடம்பிடித்துள்ளது. அண்மையில் கொழும்பில் திறக்கப்பட்ட Movenpick என்ற 5 நட்சத்திர ஹோட்டலின் குளியலறையே இந்த பட்டியலில் இடம்பிடித்துள்ளது.
24 மாடிகளை கொண்ட இந்த ஹோட்டலில் மொத்தமாக 219 அறைகள் உள்ளது. ஒவ்வொரு அறைக்கும் தனியான ஒரு குளியலறை உள்ளது. அந்த குளியலறையில் இயற்கை அழகு நிறைந்த காட்சிகள் அமைந்துள்ளது. இதனாலேயே இந்த பட்டியலில் இடம்பிடிக்க இலங்கைக்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.