காரில் குழந்தையை பூட்டிவைத்து சென்ற தந்தை : துடிதுடித்து உயிரிழந்த சோகம்!!

அமெரிக்காவில் வளர்ப்பு குழந்தையை தந்தை காரின் உள்ளே வைத்து சென்று மறந்த நிலையில் குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

மாட் பார்கர் என்பவர் தனது மனைவி ஜெனி பெர்கர் மற்றும் தனது இரு பிள்ளைகளுடன் வசித்து வந்தார். இந்நிலையில் கடீரா (1) என்ற பெண் குழந்தையை சமீபத்தில் தம்பதிகள் தத்தெடுத்தனர்.

இரு தினங்களுக்கு முன்னர் பார்கர் தனது மூன்று குழந்தைகளையும் குழந்தைகள் பாதுகாப்பகத்தில் விட தனது காரில் அழைத்து சென்றார்.

இரண்டு குழந்தைகளை அங்கே விட்ட நிலையில் கடீராவை காரிலிருந்து இறக்கவில்லை. பின்னர் காரில் தனது வேலை விடயமாக பல இடங்களுக்கு சென்றுள்ளார்.

மாலை ஆனவுடன் குழந்தைகளை அழைத்து வர ஜெனி குழந்தைகள் பாதுகாப்பகத்துக்கு சென்ற நிலையில் அங்கு இரண்டு குழந்தைகள் இருந்த நிலையில் கடீரா அங்கு வரவேயில்லை என நிர்வாகிகள் கூறியுள்ளனர்.

இதையடுத்து கணவருக்கு போன் செய்த போது தான் காரின் உள்ளே கடீரா இருப்பதே அவர் நினைவுக்கு வந்தது.

இதையடுத்து பார்கர் வீட்டுக்கு வந்த நிலையில் காரை இருவரும் பார்த்துள்ளனர். அப்போது மயக்க நிலையில் குழந்தை இருந்துள்ளது, இதையடுத்து கடீராவை மருத்துவமனைக்கு தூக்கி சென்ற நிலையில் அவள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதை மருத்துவர்கள் உறுதி செய்தனர்.

காரில் உள்ள சூடு தாங்காமல் கடீரா துடிதுடித்து இறந்துள்ளது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக இன்னும் பொலிசார் பார்கர் மீது வழக்குப்பதிவு எதுவும் செய்யவில்லை.

நேரலையில் ஒரு ஆண் நபரை வர்ணித்த தொகுப்பாளினிக்கு நேர்ந்த கதி!!

குவைத்தில் தொகுப்பாளினி ஒருவர் தன்னுடன் பணியாற்றம் சக ஊழியரை பார்த்து நீங்கண் ஹேண்ட்சம் என்று வர்ணித்த காரணத்தால் அவர் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

தனியார் தொலைக்காட்சியில் நேரலை நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்கிகொண்டிந்ந்த தொகுப்பாளினி, பத்திரிக்கையாளர் நவாஃப் அல் ஷாரக்கியிடம் பேசினார்.

அப்போது நவாஃப் தனது தலைப்பாகையை சரி செய்தார். அதற்கு தொகுப்பாளினி, நீங்கள் இப்போது அழகாக தான் உள்ளீர்கள். அதனால் தலைப்பாகையை சரி செய்ய வேண்டாம், நீங்கள் ஹேண்ட்சம் என வர்ணித்துள்ளார்.

இவர், பயன்படுத்திய ஹேண்ட்சம் என்ற வார்த்தை நேரலையில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதனை கண்ட பலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதையடுத்து அந்த தொகுப்பாளினியை பத்திரிகை நிறுவனம் பணியிலிருந்து நீக்கியது.

பிள்ளைகள் கைவிட்ட நிலையில் அனாதையாக இறந்துபோன பிரபல நடிகை!!

பாலிவுட் உலகில் 100 படங்களுக்கு மேல் நடித்துள்ள பிரபல நடிகை தனது பிள்ளைகளால் கைவிடப்பட்ட நிலையில் மருத்துவமனையில் இன்று இறந்துபோனார்.

கீதா கபூர் என்ற நடிகைக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மும்பையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

பிள்ளைகளும் கைவிட்ட நிலையில் இவரது மருத்துவ செலவுக்கு யாரும் முன்வராத நிலையில், நடிகர்கள் Ashoke Pandit மற்றும் Ramesh Taurani ஆகிய இருவரும் தான் மருத்துவ உதவிகள் செய்துள்ளனர்.

இந்நிலையில் இன்று காலை உயிரிழந்துள்ளார், பிள்ளைகள் தன்னை தேடி வருவார்கள் என கடந்த ஒராண்டாக காத்திருந்தவருக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.

இவரது பிள்ளைகள் இவரை வந்து பார்க்கவே இல்லை என Ashoke Pandit கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இரும்பு கம்பி, உருட்டுக் கட்டையால் தாக்கப்பட்ட பொதுமக்கள் : பொலிசாரின் வெறியாட்டம்!!

 

தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய அப்பாவி மக்கள் மீது பொலிசாரின் கொலைவெறி தாக்குதல் தொடர்பில் அதிரவைக்கும் தகவல் வெளியாகியுள்ளது.

ஸ்டெர்லைட் ஆலையை இழுத்து மூடும் வரை வீடு திரும்ப மாட்டோம் என்ற கோரிக்கையுடன் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி புறப்பட்ட பொது மக்களுக்கும், பொலிசாருக்கும் மோதல் வெடித்தது.

இதில் துப்பாக்கிச்சூடு நடத்தி 13 உயிர்களை காவு வாங்கிய தமிழக அரசு, 13 உயிர்ப்பலியுடன் 102 பொதுமக்கள் காயம், 34 காவலர்கள் காயம், 98 வாகனங்கள் சேதம் என அதிகாரப்பூர்வ அறிக்கையையும் ஈவு இரக்கமில்லாமல் வெளியிட்டுள்ளது.

சம்பவம் நடந்த அதே தினத்தில், கலவரத்தைக் கட்டுக்குள் கொண்டு வருகின்றோம் என்ற பெயரில், சாலையில் வருவோர் போவோர் மட்டுமில்லாது, வீட்டில் தூங்கியவர்களையும் இழுத்துக்கொண்டு சென்றுள்ளனர்.

தூத்துக்குடி தெற்கு காவல் நிலையத்தில் ஒன்று சேர்த்து, உருட்டுக்கட்டை மற்றும் இரும்பு ராடு, ரப்பர் டியூப் ஆகியவற்றைக் கொண்டு இழுத்துவரப்பட்ட ஆண்கள் மீது கொலைவெறி தாக்குதலை நடத்தியது காவல்துறை.

பொலிசாரின் வெறியாட்டத்தால் உருக்குலைந்த 92 நபர்களில் சுமார் 16க்கும் மேற்பட்டவர்களுக்கு மண்டையை உடைத்து வீட்டிற்கு அனுப்பியுள்ளது.

மட்டுமின்றி 65 நபர்களை புதுக்கோட்டை காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று, அங்கும் சித்ரவதை செய்துவிட்டு வல்ல நாடு துப்பாக்கிச்சூடுதளத்திற்கு அனுப்பி சட்டவிரோதக் காவலில் வைத்துள்ளது. பின்னர் சமூக ஆர்வலர்களின் முயற்சியால்  அத்தனை நபர்களும் விடுவித்துள்ளனர்.

இலங்கை சீரற்ற காலநிலையால் பறிபோன 21 உயிர்கள் : இருவரை காணவில்லை!!

தொடர்ந்து பெய்துவரும் மழையினால் நாட்டில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை 21 பேர் உயிரிழந்துள்ளனர். இரண்டு பேர் காணாமல் போயுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இரத்தினபுரி, கேகாலை, களுத்துறை மற்றும் காலி மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண் சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பு தெரிவித்துள்ளது.

இன்று மாலை 4 மணி தொடக்கம் எதிர்வரும் 24 மணித்தியாலகள் இந்த அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. இதன் காரணமாக குறித்த பிரதேசத்தில் உள்ள மக்கள் அவதானமாக இருக்குமாறு கேட்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, 40 ஆயிரத்து 17 குடும்பங்களை சேர்ந்த ஒரு லட்சத்து 53 ஆயிரத்து 712 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா ஒமந்தையில் வாகனத்தினை துரத்திச் சென்ற பொலிஸார் : ஏழு முதிரைக் குற்றிகள் மீட்பு!!

வவுனியா ஒமந்தையில் இன்று (26.05.2018) மாலை 7.30 மணியளவில் கண்டர் ரக வாகனத்தில் சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்ட முதிரைக்குற்றிகளை ஒமந்தை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

ஒமந்தையிலிருந்து ஏ9 வீதியூடாக சட்டவிரோதமான முறையில் முதிரைக்குற்றிகளை கன்டர் ரக வாகனத்தில் கொண்டு சென்ற சமயத்தில் குறித்த வாகனத்தினை ஒமந்தையில் கடமையில் நின்ற போக்குவரத்து பொலிஸார் மறித்துள்ளனர்.

இதன் போது குறித்த கன்டர் ரக வாகனம் நிற்காமல் சென்றுள்ளது. வாகனத்தினை பொலிஸார் பின் தொடர்ந்த சமயத்தில் வாகனம் புதியவேலர் சின்னங்குளம் வீதிக்கு திரும்பி அதிவேகமாக சென்றுள்ளது.

இதன் போது கன்டர் ரக வாகனத்திலிருந்து 7 முதிரைக்குற்றிகள் வீதியில் வீழ்ந்துள்ளன. இதன் காரணமாக குறித்த வாகனத்தினை பின் தொடர முடியவில்லையென ஒமந்தை பொலிஸார் தெரிவித்தனர்.

வீதியில் வீழ்ந்த முதிரைக் குற்றிகளை பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச்செல்வதற்கான ஏற்பாடுகள் இடம் பெற்று வருவதாகவும் குறித்த வாகனத்தின் இலக்கத்தினை வைத்து வாகனத்தின் உரிமையாளரை கைது செய்து செய்வதற்குறிய நடவடிக்கைகள் இடம்பெறுவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

வவுனியாவில் வீதியினை விட்டு விலகி பேரூந்து விபத்து!!

வவுனியா செட்டிக்குளம் இலுப்பைக்குளம் பகுதியில் இன்று (26.05.2018) காலை இ.போ.ச பேரூந்து வீதியினை விட்டு விலகி விபத்துக்குள்ளானது. எனினும் பேரூந்தில் பயணித்த எவருக்கும் எவ்வித காயங்களும் ஏற்படவில்லை.

செட்டிக்குளத்திலிருந்து வவுனியா நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்துப் சபைக்கு சொந்தமான பேரூந்து வீதியின் சிரற்ற நிலை காரணமாக வீதியினை விட்டு விலகி விபத்துக்குள்ளானது.

இதன் போது பேரூந்தில் பயணம் மேற்கொண்டிருந்த பயணிகளுக்கு எவ்வித உயிர்ச்சேதங்களும் ஏற்படவில்லை.

இவ் வீதியில் சிரற்ற தன்மையே இவ் விபத்திற்கு காரணமாகவும் தினசரி 100க்கு மேற்பட்டவர்கள் இவ் வீதியுடாகவே வவுனியா நகரத்திற்கு சென்றுவருகின்றனர். மீண்டுமோரு விபத்து ஏற்படாமல் இருப்பதற்கு முன் வீதியினை செப்பனிட்டு தருமாறு பொதுமக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

வவுனியா ஒமந்தையில் புகையிரத்துடன் டிப்பர் மோதி விபத்து!!

 

வவுனியா ஒமந்தையில் இன்று (26.05.2018) மாலை 6.10 மணியளவில் ரயிலிலுடன் மோதி டிப்பர் வாகனம் விபத்துக்குள்ளானது.

ஒமந்தை அரசமுறிப்பு பகுதியில் மண் மற்றும் கல் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனம் ரயில்வே தண்டவாளத்தில் புதையுண்டது. இதன் போது கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த புகையிரதம் குறித்த டிப்பர் வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.

இவ் விபத்தில் புகையிரதம் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன் டிப்பர் வாகனத்திற்கு எவ்வித சேதங்களும் ஏற்படவில்லை

சம்பவ இடத்திற்கு விரைந்த ஒமந்தை போக்குவரத்து பொலிஸார் துரிதமாக செயற்பட்டு டிப்பர் வாகனத்தினை அவ்விடத்திலிருந்து அகற்றினார்கள்.

இவ் விபத்துச்சம்பவம் காரணமாக சுமார் 30 நிமிடங்களின் பின்னரே புகையிரதம் யாழ்ப்பாணம் நோக்கி பயணித்தது.

பிரித்தானியாவில் சாதனை படைத்த இலங்கைப் பெண்!!

 

பிரித்தானியாவில் இலங்கையை சேர்ந்த பெண்மணி ஒருவர் சாதனைகுரிய விருது ஒன்றை பெற்றுள்ளார்.

பிரித்தானிய கவுன்சிலின் முதலாவது குளோபல் அலுமினி விருதுகளில் தொழில்முறை சாதனைக்கான விருதினை ஆஷா டி வொஸ் (Asha de Vos) வென்றுள்ளார். இலங்கை கடல் உயிரியல் நிபுணராக ஆஷா டி வொஸ் செயற்பட்டு வருகிறார்.

21 பிராந்தியங்களை சேர்ந்த 62 போட்டியாளர்கள் விருதுக்கு பிரேரிக்கப்பட்ட நிலையில், பிரித்தானிய அலுமினி விருதுகளுக்கான மூன்று சிறந்த வெற்றியாளர்களில் ஒருவராக ஆஷா தெரிவாகியுள்ளார்.

வெற்றியாளர்கள் பிரித்தானியாவிலுள்ள பல்கலைக்கழகங்களின் முன்னாள் மாணவர்களாகும். இவர்கள், மூன்று நாடுகளையும் நான்கு பிரித்தானியாவின் உயர் கல்வி நிறுவனங்களையும் பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

ஆஷா ஒரு கடல் உயிரியலாளர் ஆவார். உலகின் பெருங்கடல்கள் பாதுகாக்கப்படுவது மற்றும் வட இந்திய பெருங்கடலில் நீல திமிங்கிலம் ஆராய்ச்சியில் அதிகம் ஆர்வம் கொண்டுள்ளார்.

அவர் இலங்கையின் முதலாவது கடல் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் கல்வி நிறுவனமான Oceanswellஇன் நிறுவனர் ஆவார்.

உலகின் கடற்பாதைகளின் பாதைகளை மாற்றுவதற்கும், மக்களை காப்பாற்றுவதற்கும் மக்களுக்கு ஆற்றல்களை ஊக்குவிப்பதற்கும் ஆஷா டி வொஸ் உதவுகின்றார்.

டுபாய்க்கு பணிக்கு சென்று கொடுமையை அனுபவித்த தமிழர்கள் : இறுதியில் நடந்தது என்ன?

டுபாயில் தவித்த புதுக்கோட்டை இளைஞர்கள் ஈமான் அமைப்பின் முயற்சியால் சொந்த ஊருக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

டுபாயில் உள்ள ரோஷினி எலக்ட்ரோ மெக்கானிக்கல் ஒர்க்ஸ் என்ற நிறுவனத்துக்கு புதுக்கோட்டையை சேர்ந்த ராஜாக்கண்ணு மற்றும் சிவக்குமார் என்ற இரு இளைஞர்கள் கடந்தாண்டு மார்ச் மாதம் கொத்தனார் வேலைக்கு வந்தனர்.

இந்நிறுவனத்தை மேலூரை சேர்ந்த சேவுகன் என்பவர் நடத்தி வருகிறார். அங்கு இருவருக்கும் கம்பி கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு வேலைகளும் கொடுக்கப்பட்ட நிலையில் அவர்களால் செய்யமுடியவில்லை.

இதையடுத்து சொந்த ஊருக்கே செல்வதாக சேவுகனிடம் ராஜக்கண்ணுவும், சிவக்குமாரும் கூறிய நிலையில் அதனை அனுமதிக்காத அவர் இருவரையும் அடித்து உதைத்து வேலை வாங்கியுள்ளார்.

இந்த தகவலை இருவரும் ஊரில் உள்ள பெற்றோரிடம் கூறிய நிலையில் அவர்கள் ஆட்சியரிடம் புகார் அளித்தனர். இதையடுத்து ரோஷினி நிர்வாகத்திடம் துபாய் இந்திய துணைத் தூதரக அதிகாரிகள் அழைத்து விசாரித்தனர்.

ஆனால் இரண்டு பேரும் தங்கள் நிறுவனத்திடமிருந்து ஓடிவிட்டதாக நிர்வாகம் கூறியுள்ளது. இதன் காரணமாக இரண்டு பேரும் கடந்த மூன்று மாதங்களாக தங்க இடமில்லாமல் தவித்ததுடன் உணவுக்கும் சிரமப்பட்டுள்ளனர்.

மேலும், பொலிஸ், தொழிலாளர் நலத்துறை, இந்திய துணைத் தூதரகத்தில் தங்களை தமிழ்நாட்டுக்கு திரும்ப அனுப்ப கோரியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இந்த முயற்சிகளுக்கு பலன் கிடைகாத நிலையில் ஈமான் அமைப்பின் நிர்வாகிகளை உதவி செய்யுமாறு ராஜாக்கண்ணு மற்றும் சிவக்குமார் கோரிக்கை வைத்தனர்.

இதனையடுத்து துபாயில் உள்ள அல் வஹா நிறுவனத்தின் தலைவர் அல்ஹாஜ் நிறுவன உரிமையாளர் சேவுகனிடம் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் அவர்களது விசா ரத்து செய்யப்பட்டது.

பின்னர் இருவரும் நேற்று மாலை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

கர்ப்பிணி மகளை துடிதுடிக்க கொலை செய்த தாய் : பதறவைக்கும் சம்பவம்!!

அமெரிக்காவில் பெற்ற மகளை தாய் கொடூரமாக கொலை செய்த வழக்கில் அவர் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கிரீனி கவுண்டியை சேர்ந்த வோண்டா ஸ்டார் ஸ்மித் என்ற பெண் தனது மகள் ஜெசி மோரிசன் (21) உடன் வசித்து வந்தார்.

இந்நிலையில் கர்ப்பிணியாக இருந்த தனது மகள் ஜெசியை கடந்த 2016-ஆம் ஆண்டு ஸ்மித் கொடூரமாக கொலை செய்துள்ளார்.

பின்னர் மகளின் சடலத்தை சாலையோரத்தில் தூக்கிபோட்ட நிலையில் பொலிசார் கண்டெடுத்துள்ளனர்.

இதையடுத்து பொலிசார் நடத்திய விசாரணையில் ஸ்மித் தான் கொலையாளி என முடிவு செய்து அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்கள்.

ஸ்மித் மீதான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் அவர் மீதான இரண்டு கொலை வழக்குகளும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

அதாவது ஜெசியுடன் சேர்த்து அவர் வயிற்றில் இருந்த கருவையும் அவர் கொன்றது உறுதியானது.

குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட ஸ்மித்துக்கான தண்டனை விபரம் இனி தான் வெளியிடப்படவுள்ளது.

திருமணநாளில் தற்கொலை செய்து கொண்ட புதுமாப்பிள்ளை!!

தமிழ்நாட்டில் திருமணம் நடக்கவிருந்த நாளில் இளைஞர் தற்கொலை செய்து கொண்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் கொடுமுடியை சேர்ந்தவர் விக்னேஷ் (25). மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்துள்ள இவர் சென்னையில் உள்ள ஒரு கார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

இதற்கிடையே விக்னேசுக்கு திருமண ஏற்பாடுகள் நடந்த நிலையில் நேற்று திருமணம் நடைபெற இருந்தது.

திருமணத்தையொட்டி கடந்த ஒரு வாரத்துக்கு முன்பே சென்னையில் விடுப்பு எடுத்து புது மாப்பிள்ளை விக்னேஷ் ஊருக்கு வந்தார். திருமணம் நடப்பதையொட்டி நேற்று ஊரில் உள்ள தனது நண்பர்களை வரவழைத்து பார்ட்டியும் கொடுத்துள்ளார்.

இந்நிலையில் கொடுமுடி ரெயில்வே தண்டவாள பகுதியில் விக்னேஷ் தலை துண்டிக்கப்பட்டு பிணமாக கிடந்தார். அவர் தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது பற்றி தகவலறிந்த பொலிசார் விக்னேஷின் சடலத்தை கைப்பற்றியுள்ளார்கள்.

அவர் தற்கொலை செய்ய காரணம் என்ன? திருமணம் பிடிக்கவில்லையா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என பொலிசார் விசாரித்து வருகிறார்கள்.

தந்தையின் குடிப்பழக்கத்தை நிறுத்தக்கோரி உயிரை விட்ட பாடசாலை மாணவன்!!

குடிப்பழக்கத்தை தந்தை விட மறுத்ததால் 9ம் வகுப்பு பள்ளி மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூரை சேர்ந்தவர் பிரகாஷ் (38). இவர் மனைவி பேபி (34). தம்பதிக்கு ஹரிஹரன் (14) என்ற மகனும், 9 வயதில் மகளும் உள்ளனர்.

குடிப்பழக்கத்துக்கு அடிமையான பிரகாஷ் தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து பேபியுடன் சண்டை போட்டுள்ளார். மது குடிப்பதை பிரகாஷ் நிறுத்த வேண்டும் என பேபியும், ஹரிஹரனும் அவரிடம் பலமுறை கெஞ்சியும் கேட்கவில்லை.

இந்நிலையில் பிரகாஷ் வழக்கம்போல நேற்று குடித்து விட்டு வீட்டுக்கு வந்து மனைவியுடன் சண்டை போட்டுள்ளார்.

இதனால் விரக்தியடைந்த அவர் மகன் ஹரிஹரன் அருகில் உள்ள பாட்டி வீட்டுக்கு சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டான்.

சம்பவம் குறித்து தகவலறிந்த பொலிசார் ஹரிஹரன் சடலத்தை கைப்பற்றி விட்டு இது குறித்து விசாரித்து வருகிறார்கள்.

ச்சீ த்தூ : என் கணவரை பூரிக்கட்டையாலே அடிச்சிருப்பேன் : நடிகை ஆர்த்தி ஆவேசம்!!

நெஞ்சை நிமிர்த்தி நிற்காதீங்க… நீங்க சுட்டுக் கொன்றது உங்க அண்ணன், தம்பி, தங்கச்சிகளை… ச்சீ த்தூ!’ என தூத்துக்குடி துப்பாக்கி சூட்டிற்கு எதிராக நடிகை ஆர்த்தி தனது டுவிட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த துப்பாக்கி சூட்டிற்கு எதிராக கண்டனம் தெரிவித்து வீடியோ வெளியிட்ட நடிகை மீது வழக்குபதிவு செய்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள இவர், கருத்துச் சொல்றவங்களை வழக்கு போடுவோம்னு சொல்லி மிரட்டுறதெல்லாம் பண்ணட்டும், எத்தனை நாளைக்குப் பண்றாங்கனு பார்க்கலாம்.

அம்மாவோட குணம், ஆளுமை, தைரியத்தைப் பார்த்து நான் அதிமுகவில் சேர்ந்தேன். அவங்க எப்போ மறைஞ்சாங்களோ, அப்பவே நானும் அந்தக் கட்சியில இருந்து விலகிட்டேன்.

ஒரு தொலைக்காட்சி நடிகை வீடியோ வெளியிட்டா வழக்கு போடுறீங்களே, பெரிய ஆளுங்க எத்தனைபேர் இது பற்றிக் கருத்து சொல்லியிருக்காங்களே, அவங்கமேலேயும் வழக்கு போடுங்களேன்.

அம்மாவின் கட்சி என சொல்லிக்கொண்டு இத்தனை பேரை கொன்று குவிச்சிருக்காங்க, மேலும் என் கணவர் பாஜகவில் இருந்திருந்தா, அவர் வீட்டுல இருக்க முடியாது. பூரி தேய்க்கிற கட்டையைக் கொண்டே அடிச்சு மண்டையை உடைச்சிருப்பேன்.

என்னை மாதிரி அவரும் இப்போ எந்தக் கட்சியிலேயும் இல்லைங்க. பாரதிய ஜனதாவுல போய்ச் சேர்ந்தது உண்மைதான். ஆனா, அந்தக் கட்சியோட நடவடிக்கைகள் பிடிக்காததுனால ஒதுங்கிட்டார்.

கட்டுப்பாடின்றி அப்பல்லோவில் அதிக இனிப்புகளை சாப்பிட்ட ஜெயலலிதா : திடுக்கிடும் தகவல்!!

ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது அவருக்கு கட்டுப்பாடின்றி இனிப்பு வகைகள் வழங்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016 டிசம்பர் -ஆம் திகதி காலமானார். அதற்கு முந்தைய 75 நாட்கள் அப்பல்லோ மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வந்தார்.

அந்த சமயத்தில் லட்டு, குலோப்ஜாமுன், ரசகுல்லா ஆகியவற்றை ஜெயலலிதா அதிக அளவில் உட்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த தகவல் ஆறுமுகசாமி ஆணையத்தில் அப்போலோ நிர்வாகம் தாக்கல் செய்துள்ள மருத்துவ அறிக்கையில் இடம்பெற்றுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அவர் சுமார் 20 ஆண்டுகளாக சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் ஆணையத்தில் சிலர் கூறியுள்ளனர்.

குறிப்பாக, நவம்பர் 22ஆம் திகதி அவர் அதிகளவு இனிப்புகள் சாப்பிட்டதாகவும், டிசம்பர் 2 மற்றும் 3ஆம் திகதிகளில் அப்பிள், ஸ்ட்ராபெர்ரி, வாழைப்பழ மில்க் ஷேக்கை அவர் பருகியதாகவும் தெரிகிறது.

மருத்துவமனை நிர்வாகம் ஜெயலலிதாவுக்கு இனிப்பு வகைகளை கொடுத்ததா, அல்லது மருத்துவர்களின் அறிவுரையை மீறி ஜெயலலிதா இனிப்பு வகைகளை கேட்டு சாப்பிட்டாரா?

யார் அவருக்கு இனிப்பு வகைகளை வரவழைத்து கொடுத்தது? என்பது குறித்து ஆறுமுகசாமி ஆணையம் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது

பகலில் பாகனை கொன்று விட்டு இரவில் தேடிய யானை : நெஞ்சை உருக்கும் சோக சம்பவம்!!

தமிழகத்தின் திருச்சி சமயபுரம் கோயிலில், மசினி என்னும் கோயில் யானை தனது பாகனை காலால் மிதித்து கொன்றுவிட்டு, இரவில் அவரை காணாமல் தேடிய சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் சமயபுரம் மாகாளிக்குடி அக்ரஹாரத்தைச் சேர்ந்த கஜேந்திரன், மசினி என்று பெயரிடப்பட்ட யானையை கடந்த 10 ஆண்டுகளாக பராமரித்து வந்தார்.

இந்த யானை, தனது தோழி யானைகளான விஜயா, ஜெயா ஆகியவற்றுடன் காவிரி ஆற்றுக்கு சென்று நீராடிவிட்டு வரும். பிறகு, கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு ஆசி வழங்கும்.

இந்நிலையில், நேற்றைய தினம் கோபமடைந்த மசினி யானை, பாகன் கஜேந்திரனை தள்ளிவிட்டது. பின்னர், அவர் எழுந்து வந்து அங்குசத்தால் அதன் காலில் குத்தியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, தனது துதிக்கையால் கஜேந்திரனை காலுக்குள் இழுத்த மசினி யானை, அவரது மார்பில் காலால் மிதித்துள்ளது, இதனால் அவர் பரிதாபமாக மரணமடைந்தார்.

அதன் பின்னர், அவரின் உடலை இரண்டு மணிநேரத்திற்கும் மேலாக, அங்கும் இங்கும் தள்ளி விட்டு அந்த யானை, தனது தந்தத்தால் கஜேந்திரனின் உடலை குத்தியது.

அதனைத் தொடர்ந்து, அங்கு வந்த வனத்துறை அதிகாரிகள், கால்நடை மருத்துவர்கள், கோயில் ஊழியர்கள் அனைவரும் மசினியின் தோழி யானைகள் உதவியுடன் அதனை அமைதி நிலைக்கு கொண்டு வந்தனர்.

அதன் பின்னர், சகஜ நிலைக்கு திரும்பிய மசினி யானை, தனது பாகனை கொன்றது தெரியாமல் அவரை இரவில் தேடியது. அப்போது அதன் கண்களில் கண்ணீர் வழிந்ததாகக் கூறப்படுகிறது.

இரவு 9 மணியளவில் மசினி யானை மாகாளிக்குடி கொட்டகையில் அடைக்கப்பட்டது. கோயில் ஊழியர்கள் அதன் நடவடிக்கையை கண்காணித்தனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.