யாழ், குடாநாட்டை அச்சுறுத்தும் ஆபத்து : மக்களுக்கு விசேட எச்சரிக்கை!!

யாழ். குடாநாட்டில் இன்புளுவன்ஸா வைரஸ் தொற்று பரவி வருவதாக யாழ்ப்பாணப் பிராந்திய தொற்று நோய் தடுப்புப் பிரிவு அதிகாரி வைத்தியர் ஜி.ரஜீவ் தெரிவித்தார்.

கடந்த சில நாட்களில் யாழ்ப்பாணத்தில் வைரஸ் தொற்றுக்குள்ளான 12 பேர் இனங்காணப்பட்டுள்ளனர். அவர்களின் நோய் குறித்து மேலதிக பரிசோதனைகள் நடைபெற்று வருவதாக வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.

பன்றிக் காய்ச்சல் எனப்படும் ‘இன்புளுவன்ஸா வைரஸ்’ தொற்றுக்கான அறிகுறிகளோடு கடந்த சில வாரங்களில் 12 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களின் குருதி மாதிரிகள் பெறப்பட்டு மேலதிக பரிசோதனைகளுக்காக கொழும்புக்கு அனுப்பப்பட்டுள்ளன.

இலங்கையில் நிலவும் மாறுபட்ட காலநிலை மாற்றம் காரணமாக இந்த வைரஸ் தொற்று ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளன.

2008 மற்றும் 2009ஆம் ஆண்டுகளிலும் இந்த நோய் தாக்கம் இனங்காணபட்டது. எனினும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக வைத்தியர் தெரிவித்தார்.

தென்பகுதியில் அண்மையில் இந்த நோய் தாக்கம் இனங்காணப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்தே வடக்கில் இதற்கான அறிகுறிகள் தென்பட்டுள்ளன.

இது காற்றால் பரவும் நோயாக இருப்பதால் பொது இடங்களுக்கு அநாவசியமாகச் செல்லுதல் மற்றும் சன நெரிசலான இடங்களுக்குச் செல்லுதல் என்பவற்றை இயன்றளவு தவிர்ப்பதோடு மக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று வைத்தியர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

முன்னாள் போராளி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை!!

திருகோணமலை மூதூர் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட தெகிவத்த பிரதேசம் கங்குவேலி கிராமத்தில் முன்னாள் போராளி ஒருவர் தற்கொலை செய்துகொண்டதாக மூதூர் பொலிசார் தெரிவிக்கின்றனர்.

மூன்று பிள்ளைகளின் தந்தை, மனைவியுடனான முரண்பாட்டை அடுத்து இவ்வாறு தற்கொலை செய்திருப்பதாக ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்ததாக பொலிசார் தெரிவித்துள்ளது.

இவர் 2004 ஆண்டு புலிகள் இயக்கத்தில் இருந்து விலகி திருமணம் முடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மனைவி உயிரிழந்த சோகத்தில் தற்கொலை செய்துகொண்ட பொலிஸ் அதிகாரி!!

மனைவி உயிரிழந்ததை தாங்கிக்கொள்ள முடியாத பொலிஸ் கான்ஸ்டபில் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் ஒன்று கொகருல்ல பகுதியில் இடம்பெற்றுள்ளது.

கொகருல்ல பொலிஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த கான்ஸ்டபில் ஒருவரே நேற்று மாலை இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

தற்கொலை செய்துகொண்ட கான்ஸ்டபிலின் மனைவி நேற்று மாலை உயிரிழந்துள்ளார். வாகன விபத்தொன்றில் சிக்கி சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் நேற்று மாலை அவர் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில், மனைவி உயிரிழந்த தகவல் கிடைத்ததை தொடர்ந்து தனது உத்தியோகபூர்வ துப்பாக்கியால் தனக்கு தானே சுட்டுக்கொண்டு பொலிஸ் கான்ஸ்டபில் தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

மியன்மாரில் இந்துக்கள் 100 பேர் சுட்டுக்கொலை!!

மியன்மாரின் ராக்கைன் மாகாணத்தில் கடந்த ஆண்டு கலவரம் ஏற்பட்ட போது, ரோஹிங்கியா தீவிரவாதிகள் 100 இந்துக்களை படுகொலை செய்ததாக சர்வதேச மன்னிப்பு சபை (அம்னெஸ்டி இன்டர்நேஷனல்) குற்றம் சாட்டியுள்ளது.

ராக்கைன் மாகாணத்தில் ரோஹிங்கியா முஸ்லிம்கள் அதிக அளவில் வசித்து வந்தனர். இவர்களுக்கும் அந்நாட்டின் சுதேச இனத்தவரான பெளத்த மதத்தினருக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்தது.

‘அரகன் ரோஹிங்கியா சல்வேஷன் ஆர்மி (ஏ.ஆர்.எஸ்.ஏ) என்ற பயங்கரவாத அமைப்பு ரோஹிங்கியாக்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு ஏ.ஆர்.எஸ்.ஏ அமைப்பினர் பாதுகாப்புப் படையினர் மீது தாக்குதல் நடத்தினர்.

இதையடுத்து, இராணுவம் பதில் தாக்குதல் நடத்தியது. இதனால் பெரும் கலவரம் வெடித்தது. இதில் முஸ்லிம்களின் வீடுகள், சொத்துகள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன.

சுமார் 7 இலட்சம் முஸ்லிம்கள் அகதிகளாக வெளியேறி, பங்களாதேஷில் தஞ்சமடைந்தனர். அங்கு முகாம்களில் அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மியன்மார் இராணுவத்தின் இந்த செயலுக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்தன.

ஆனால் ஏ.ஆர்.எஸ்.ஏ பயங்கரவாத அமைப்புதான் கலவரத்துக்குக் காரணம் என மியன்மார் கூறி வந்தது.

இந்நிலையில், சர்வதேச மன்னிப்பு சபை (அம்னெஸ்டி இன்டர்நேஷனல்) கலவரம் நடந்த பகுதியில் பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்து விசாரணை நடத்தியது. மேலும் கலவரத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை தடயவியல் பரிசோதனைக்கு உட்படுத்தியது.

அதன் அடிப்படையில் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.அதில், “கடந்த 2017 ஓகஸ்ட் 25-ம் திகதி ராக்கைன் மாகாணத்தின் வடக்கு மவுங்டாவுக்குட்பட்ட கா மவுங் சீக் கிராமத்தைச் சேர்ந்த இந்துக்கள் மீது ஏ.ஆர்.எஸ்.ஏ தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி உள்ளனர்.

குறிப்பாக ஆண், பெண், குழந்தைகள் என மொத்தம் 69 பேரை கடத்திச் சென்று கொடுமைப்படுத்தி உள்ளனர். அவர்களைக் கொடூரமாக தாக்கி உள்ளனர். இதில் 53 பேர் கொல்லப்பட்டனர்.

அதே நாளில் பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த 46 இந்துக்கள் காணாமல் போய் உள்ளனர். இந்தக் கொடூர தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கூறப்பட்டுள்ளது.

இலங்கையில் கொட்டித் தீர்க்கும் அடைமழை : இளைஞனின் அதிரடி செயற்பாடு!!

இலங்கையில் நிலவும் அடைமழை காரணமாக ஐந்திற்கும் மேற்பட்ட மாவட்டங்களில் பாரிய பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன.

அனர்த்த வேளையிலும் இளைஞன் ஒருவரின் செயற்பாடு அதிகளவு பேசப்படும் அளவுக்கு சமூக வலைத்தளங்களில் பிரபல்யம் அடைந்துள்ளது.

அடைமழையின் போது இளைஞன் ஒருவர் கண்காட்சி நடத்திய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

பியகம பிரதேசத்தில் ஏற்பட்ட வெள்ளத்தின் போது மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் ஒருவரின் புகைப்படமே ஊடக வெளியாகி பிரபலயமடைந்துள்ளது.

இடுப்பளவு நீரில் இரண்டு கால்களை தூக்கியவாறு விநோதமான முறையில் குறித்த இளைஞன் மோட்டார் சைக்கிள் ஓட்டியுள்ளது.

இந்த காட்சியை பிரான்ஸ் செய்தி சேவையில் பணியாற்றும் புகைப்பட கலைஞர் ஒருவர் புகைப்படம் எடுத்து இணையத்தில் சேர்த்துள்ளார்.

உலகின் ஆபத்தான நாடாக மாறியுள்ள இலங்கை!!

உலகளாவிய ரீதியில் காலநிலை அபாய தரவில் இலங்கை ஆபத்தான எல்லையாக பெயரிடப்பட்டுள்ளது. 2018ம் ஆண்டுக்கான புதிய அறிக்கையில், இயற்கை அனர்த்தங்களினால் அதிக ஆபத்தை எதிர்கொள்ளும் நாடுகளின் பட்டியலில் இலங்கை நான்காம் இடத்தை பிடித்துள்ளது.

அந்த அறிக்கையில் முதலாவது இடத்தில் ஹெய்ட்டி உள்ளது. இரண்டாம் மூன்றாம் இடங்களில் சிம்பாப்வே மற்றும் பீஜீ நாடுகள் உள்ளன.

1997 ஆம் ஆண்டில் இருந்து 2016 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் ஏற்பட்ட காலநிலை மாற்றங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

2016 ஆம் ஆண்டு வெளியாகியிருந்த அறிக்கையில் இலங்கை 95 வது இடத்தை பிடித்திருந்தது. எனினும் அதன் பின்னர் இடம்பெற்ற இயற்கை அனர்த்தங்கள் மற்றும் பாதிப்புகள் காரணமாக அந்த பட்டியலில் இலங்கை உயர் நிலையை அடைந்துள்ளது.

இதன் காரணமாக இலங்கை, பீஜீ, வியட்நாம் போன்ற நாடுகள் வெகு விரைவான காலப்பகுதிக்குள் பல இயற்கை அனர்த்தங்களுக்கு முகம் கொடுக்கும் என அந்த தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நீண்ட காலமாக சிம்பாப்பே வறட்சிக்கு முகம் கொடுத்துள்ளது. அத்துடன் புவி வெப்பமடைதல் காரணமாகவும் இலங்கை உட்பட குறித்த 4 நாடு பாதிக்கப்படும் என புதிய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையில் செல்பீ எடுப்போருக்கு கடும் எச்சரிக்கை!!

நாட்டில் சீரற்ற காலநிலையினால் ஏற்பட்டுள்ள அனர்த்தங்களை பார்வையிடச் செல்வதனை தவிர்க்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் இடங்களில் சென்று செல்பீ எடுப்பதனை தவிர்த்துக் கொள்ளுமாறு அனர்த்த முகாமைத்துவ நிறுவனம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் களியாட்டங்களையோ அல்லது பொழுது போக்கு நடவடிக்கைகளிலோ ஈடுபடுவதனை முழுமையாக தவிர்த்துக் கொள்ளுமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் செயற்பாட்டுப் பணிப்பாளர் பிரிகேடியர் அதுல ஆரியரட்ன தெரிவித்துள்ளார்.

அனர்த்தம் இடம்பெற்றுள்ள பகுதிகளுக்கு சுற்றுலா செல்லுதல், செல்பீ எடுத்தல், நீர் விளையாட்டுக்களில் ஈடுபடுதல், மதுபானம் அருந்துவிட்டு அந்த இடங்களுக்கு செல்லுதல் என்பவை ஆபத்தானது என கொழும்பு ஊடகங்களின் ஊடாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சில நாட்களாக நிலவி வரும் சீரற்ற காலநிலையினால் சுமார் 20 மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 32500 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

ஆடையில் புது டிரண்ட்டை உருவாக்கிய டிடி!!

டிடி என்றாலே எப்போதும் ஜாலி தான் நிகழ்ச்சிகளில். அவர் தொகுத்து வழங்குகிறார் என்றாலே ரசிகர்கள் ஆர்வமாக பார்ப்பார்கள்.

ஆனால் கமராவை தாண்டி தான் மிகவும் அமைதியான பெண் என்று அவர் நிறைய பேட்டிகளில் கூறியிருக்கிறார். இந்த நேரத்தில் எங்கிட்ட மோதாதே நிகழ்ச்சிக்கு அவர் அணிந்த உடை பற்றிய பேச்சு தான் அதிகம். சட்டை, வேஷ்டி அணிந்து வந்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியிருக்கிறார்.

ஒருசிலர் அவரின் அந்த உடையை பார்த்து இதுவும் டிரெண்டாக தான் இருக்கிறது என்று கமெண்ட் செய்கின்றனர். ஆனால் அந்த வேஷ்டியை வைத்து நடனம் ஆடும்போது கொஞ்சம் உஷாராக இருக்க வேண்டும் என்பது போல் சிலர் கமெண்ட் செய்கின்றனர்.

வழக்கறிஞர் கனவுகளுடன் வலம் வந்த இளம்பெண் துப்பாக்கிக்குண்டுக்கு பலியான பரிதாபம்!!

 

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் பரிதாபமாக உயிரிழந்த போராட்டக்காரர்களில் ஒருவர் ஸ்னோலின். தூத்துக்குடி மினி சகாயபுரத்தைச் சேர்ந்த ஸ்னோலின் பிளஸ் டூ முடித்துவிட்டு தேர்வு முடிவுக்காக காத்திருந்த மாணவி.

17 வயதான ஸ்னோலின், வீட்டிற்கு ஒரே மகள். தாய், தந்தையின் அன்பாலும், அண்ணன்களின் பாசத்தாலும், அண்ணியின் கொஞ்சலிலும் வளர்ந்தவர் ஸ்னோலின்.

மண்ணின் உரிமைக்காக உற்சாகத்துடன் போராடச்சென்ற இந்த இளம் பெண், துப்பாக்கிக் குண்டுகளுக்கு இரையாகிவிட்டார்.

வழக்கறிஞராக வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்த ஸ்னோலின், தனது தாய், அண்ணி, அண்ணனின் குழந்தை என அனைவரையும் உற்சாகப்படுத்தி போராட்டத்திற்கு அழைத்துச் சென்றிருக்கிறார்.

கையில் கொடி பிடித்தபடி முன்னேறிச்சென்று முழக்கமிட்ட ஸ்னோலின், கலவரத்தின்போது திடீரென கையை விட்டுவிட்டதால் அவரும் பாதுகாப்பான இடத்திற்கு சென்றுவிட்டார் என்றுதான் எண்ணியிருக்கிறார் போராட்டத்தின்போது உடன் சென்ற அண்ணி மெரில்டா.

போராட்டக்காரர்கள் முன்னே சென்றுகொண்டிருக்கும்போதே, மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் வாகனங்களுக்கு தீ வைத்தது எப்படி என்ற கேள்வியை எழுப்பும் இன்பென்டா,

தன்னை காப்பாற்ற வந்த ஸ்னோலின் துப்பாக்கிக்குண்டுக்கு பலியாகிவிட்டதாக வேதனையுடன் கூறுகிறார். படித்து வழக்கறிஞராக வேண்டும் என்று ஆசைப்பட்ட ஸ்னோலின்,

தனது மண்ணுக்காகவும், வருங்கால சந்ததியினரின் வளமான வாழ்க்கைக்காகவும் சிந்திய ரத்தம் தூத்துக்குடி மண்ணில் உறைந்திருக்கிறது.

ஓயாமல் பேசிக்கொண்டே இருந்த மகள் வாயில்‌ சுடப்பட்டு கொடூரமாக ‌உயிரிழந்ததை தாங்கிக்கொள்ள முடியாமல் பரிதவிக்கிறது அவரது குடும்பம்.

காதலைதுண்­டித்த காதலனின் நாக்கை கடித்து துண்டித்த காதலி!!

தன்­னு­ட­னான காதல் உறவை முறித்துக் கொண்ட தனது காத­லரைத் தண்­டிக்­கும் முக­மாக அவ­ரது நாக்கை கடித்து அவரை நகரவிடாது வலியால் துடிக்க வைத்த சம்பவமொன்று கிழக்கு சீனாவில் அன்­ஹுயி மாகா­ணத்­தி­லுள்ள கியன்ஷான் நகரில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

ஸொயு என்ற 26 வயது பெண்ணே தனது காத­ல­ரான லியு என்ற 23 வயதுடைய இளை­ஞரின் நாக்கை விடாது இறுகக் கடித்து அவரை வலியால் துடிக்க வைத்­துள்ளார். ஸொயுவும் லியுவும் பல வருட கால­மாக காத­லித்து வந்த நிலையில் அண்­மை­யி­லேயே லியு அவ­ரு­ட­னான உறவை முறித்துக்கொண்­டார்.

சம்­பவ தினம் தனது காத­லரை வீதியில் கண்ட அந்தப் பெண் அவரை வழி­ம­றித்து அவ­ரிடம் இறு­தி­யாக முத்­த­மொன்றைப் பகிர்ந்துகொள்ள விரும்­பு­வ­தாக தெரி­வித்­துள்ளார்.

அதற்குக் காதலர் இணங்கவும் காதலி அவரை முத்­த­மி­டு­வது போன்று பாவனை செய்து திடீ­ரென அவ­ரது நாக்கை இறுகக் கடித்­துள்ளார். வலி தாங்­காது அந்தக் காதலர் கூச்­ச­லிட்டு காத­லி­யி­ட­மி­ருந்து விடு­பட முயற்­சித்த போது, இந்தக் காட்­சியைப் பார்த்து அதிர்ச்­சி­ய­டைந்த அவ்­வ­ழி­யாகச் சென்ற பாத­சா­ரிகள் பொலி­ஸா­ருக்கு அழைப்பு விடுக்­கவும் சம்­பவ இடத்­திற்கு வந்த பொலிஸார் அந்தப் பெண்ணின் மீது மிளகுத் தூள் பிர­யோ­கத்தை மேற்­கொண்டு பெரும் போராட்­டத்தின் மத்­தியில் அவ­ரி­ட­மி­ருந்து அந்தக் காத­லரை மீட்­டுள்­ளனர்.

இத­னை­ய­டுத்து அந்தக் காதலர் மருத்­து­வ­ம­னைக்கு கொண்டு செல்­லப்­பட்டார். மேற்­படி சம்­ப­வத்தை அவ்வீதி வழி­யாகச் சென்ற சிலர் தமது கைய­டக்கத் தொலை­பேசி புகைப்­ப­டக்­க­ரு­வியைப் பயன்­ப­டுத்தி காணொ­ளிப்­ப­ட­மெ­டுத்து வெளி­யிட்­டுள்­ளனர்.

சிறுமியை கத்தியால் குத்திவிட்டு சிறிய தந்தை தன்னைத்தானே எரியூட்டி தற்கொலை!!

அக்கரைப்பற்று – பட்டியடிப்பிட்டி பகுதியில் சிறுமியொருவரை அவரின் சிறிய தந்தை கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளார். 14 வயதான சிறுமி ஒருவரே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளார். நேற்று காலை 5.30 அளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சிறுமியின் கழுத்தில் கத்தியால் குத்திய சிறிய தந்தை, பின்னர் தன்னைத் தானே எரியூட்டிக்கொண்டுள்ளார்.

சம்பவத்தில் காயமடைந்த இருவரும் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், சிறுமியின் சிறிய தந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த நபர் சிறுமியை பாலியல் ரீதியில் துன்புறுத்தியமையே இந்த சம்பவத்தின் பின்னணி என பொலிஸார் தெரிவித்தனர்.

பாடசாலை முடிந்து வீடு திரும்பிய மாணவிக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!!

ராகல – சமகிபுர பிரதேசத்தில், பாதையை ஊடறுத்து பாய்ந்த நீரில் இழுத்துச் செல்லப்பட்டு மாணவியொருவர் உயிரிழந்துள்ளார். நேற்று முன்தினம் பிற்பகல் 2.30 மணியளவில் பாடசாலை முடிந்து வீடு திரும்பிய வேளையே இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது.

உடபுசல்லாவ பிரதேசத்தை சேர்ந்த 4 ஆம் தரத்தில் கல்வி பயிலும் 9 வயதான மாணவியே சம்பவத்தில் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சடலம் நுவரெலிய மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதோடு, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ராகல காவல்துறை மேற்கொண்டு வருகிறது.

தனஞ்சய டீ சில்வாவின் தந்தை படுகொலை : வௌியாகியுள்ள அதிர்ச்சித் தகவல்கள்!!

இலங்கை கிரிக்கட் அணியின் துடுப்பாட்டவீரர் தனஞ்சய டீ சில்வாவின் தந்தை ரஞ்சன் டீ சில்வா சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில், சீ.சீ.ரி.வி காணொளி ஊடாக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கல்கிஸ்ஸ காவல்நிலையத்தின் உயர் அதிகாரி ஒருவர் இதனை தெரிவித்துள்ளார். இதற்கு அமைய துப்பாக்கிதாரி தொடர்பிலான தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ரத்மலானை ஞானேந்திர வீதியில், நேற்று முன்தினம் இரவு 8.30 மணியளவில் வெள்ளை நிற வானில் பயணித்த சிலர் துப்பாக்கி சூட்டை மேற்கொண்டனர்.

இந்த துப்பாக்கி பிரயோகம் ரி56 ரக துப்பாக்கியினால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்துடன் பாதாள குழுவினர் சம்பந்தப்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

ஒரு விக்கெட்டுக்கு ஒரு கோடி வாங்கிய ஐபிஎல் வீரர்!!

இந்தியாவில் இந்தாண்டு நடைபெற்று வரும் உள்ளூர் தொடரான ஐபிஎல் தொடர் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்று வருகிறது.

இந்த ஐபிஎல் தொடரில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீரர்களில் ஒருவர் தான் ஜெயதேவ் உடன்கட். ராஜஸ்தான் அணி இவரை 11.5 கோடிக்கு விலைக்கு எடுத்தது.

இவரையே பந்து வீச்சில் அதிகம் நம்பியிருந்தது. ஆனால் ராஜஸ்தான் அணிக்கு 15 போட்டிகள் விளையாடியுள்ள இவர் 11 விக்கெட்டுகள் மட்டுமே எடுத்தார்.

இதை கணக்கில் வைத்து பார்த்தால் அவர் ஒரு விக்கெட்டிற்கு 1 கோடி என்ற அளவிற்கு வாங்கியுள்ளார்.

அதுமட்டுமின்றி இவருடைய பந்து வீச்சின் சராசரி 44.18 என்ற மோசமான சராசரியை வைத்துள்ளார். நேற்றைய கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியிலும் ஒரு ஓவருக்கு சராசரி 16.50 ஓட்டங்களை வாரி வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அழுக்கான உடை, வறியவர் போன்ற தோற்றம் : துரத்தி விட்ட விற்பனையாளர்களுக்கு பதிலடி தந்த முதியவர்!!

ஆள் பாதி ஆடை பாதி என்றொரு பழமொழியை வெகுகாலமாகவே இந்த உலகம் நம்பி வந்திருக்கிறது. எவ்வளவோ நாகரிகமாக உடை அணிந்த மனிதர்களுக்குள் அநாகரிகமான விஷயங்கள் இருந்து கொண்டுதான் இருக்கின்றன என்பதற்கு சாட்சியாக இந்த நிகழ்வை சொல்லலாம்.

தாய்லாந்து நாட்டில் ஒரு வயதான முதியவர் அழுக்கான தன் அளவிற்கு பொருந்தாத கிழிசல் ஆடைகளுடன் ஹார்ட்லி டேவின்சன் பைக் விற்பனை செய்யப்படும் கடைகளுக்கு சென்றிருக்கிறார்.

ஹார்ட்லி டேவின்சன் என்பது மதிப்பில் பல லட்சத்தை தாண்டும் மிக விலை அதிகமான பைக் வகைகள்.

இந்த இடத்திற்கு விஜயம் செய்த முதியவரை அவரது உடையை பார்த்து ஒதுங்கி இருக்கின்றனர் விற்பனையாளர்கள். அவரை மதிக்கவே இல்லை. அவரும் யாரேனும் நம்மை விசாரிப்பார்கள் என்று காத்திருக்க, யாரும் வரவில்லை. இப்படியே ஒவ்வொரு ஹார்ட்லி டேவிட்சன் பைக் விற்பனை நிலையமாக இவர் சென்றிருக்கிறார்.

இவரது கிழிந்த ஆடைகளையும் சாதாரண செருப்பையும் பார்த்த விற்பனையாளர்கள் யாருமே இவரை கண்டுகொள்ளாத நிலையில் ஒரு கடையில் அதன் முதலாளியை அழைத்திருக்கிறார். விற்பனையாளர்கள் கண்டு கொள்ளாத நிலையில் நல்ல வேலையாக முதலாளி அவரை அணுகி நட்பான முறையில் அவரது தேவையை கேட்டிருக்கிறார்.

இறுதியாக தனக்கு பிடித்த ஹார்ட்லி டேவிட்ஸன் பைக்கை தேர்ந்தெடுத்த முதியவர் தனது கிழிந்த ஓட்டைகள் விழுந்த பெரிய காலுடைகளில் இருந்து அதற்கான பணமான 12லட்ச ரூபாய்களை எடுத்து கொடுத்து இந்த பைக்கை ஓடி சென்றிருக்கிறார்.

ஆச்சர்யத்தில் வியந்து போயிருக்கின்றனர் அங்கிருந்தவர்கள். இதற்கு முன் இவர் சென்று இதுவரை கண்டுகொள்ளாமல் விட்ட பைக் விற்பனையாளர்களுக்கு தற்போது இதனை கேட்டு நெஞ்சு வலி வந்திருக்க கூடும்.

இந்த நிகழ்வுகளை புகைப்படம் எடுத்த முதியவரின் சகோதரி தனது முகநூல் பக்கத்தில் இதனை பகிர்ந்துள்ளார். பகிர்ந்த சில மணிநேரங்களிலேயே பரவலாக வாசிக்கப்பட்ட இந்த செய்தி அனைவராலும் பகிரப்பட்டு இணையதளம் முழுக்க வளம் வருகிறது.

அனைவரையும் அதிசயிக்க வைத்த இந்த முதியவர் பெயர் லுங் டெச்சா .அடிப்படையில் மெக்கானிக்கான இவர் நேர்மையான மற்றும் கடுமையான உழைப்பாளி.புகை குடி சூதாட்டம் போன்ற எந்த கெட்ட பழக்கமும் இல்லாத இவர் இவ்வளவு காலமாக சேமித்து வைத்திருந்த பணத்தில் தனக்கு பிடித்த பைக்கை வாங்கியிருக்கிறார்.

எந்த ஒரு புத்தகத்தையும் அதன் அட்டையை கொண்டு முடிவு செய்ய கூடாது என்னும் பழமொழிக்கேற்ப இந்த முதியவரின் உடைகளைக் கொண்டு அவரை மதிக்காத மற்ற விற்பனையாளர்களுக்கு மட்டுமல்ல நமக்கும் கூட இந்நிகழ்ச்சி ஒரு பாடம்தான்.

நாட்டை காக்க வேண்டும் என்பவனை கொன்றுவிட்டதே பொலிஸ் : கதறித் துடிக்கும் தந்தை!!

இராணுவ உடை அணிந்து நாட்டை காக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்த என் மகனை பொலிசார் இப்படி கொன்றுவிட்டனரே என்று தந்தை கதறியுள்ளார்.

தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து பொதுமக்கள் நடத்திய போராட்டத்தின் போது, பொலிசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டின் காரணமாக தற்போது வரை 13 பேர் பலியாகியுள்ளனர்.

நூற்றுக்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் பொலிசார் நடத்திய இந்த துப்பாக்கிச் சூட்டில் ரஞ்சித் என்ற தன்னுடைய ஒரே மகனை இழந்து பாஸ்கர் என்பவர் தவித்து வருகிறார்.

இது குறித்து ரஞ்சித்தின் தந்தை பாஸ்கர் கண்ணீர் மல்க கூறுகையில், என் மகன் இராணுவத்தில் சேர ஆர்வமுடன் இருந்தான்.

அதுவே அவனுடைய ஒற்றைக் கனவாகவும், இலக்காவும் இருந்தது. சமீபத்தில் கூட ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற ராணுவ ஆட்சேர்ப்பில் பங்கேற்றான்.

ஆனால் அதில் அவன் தேர்ச்சி அடையவில்லை. அப்போது நான் எல்லோரும் முதல் முறையே வெற்றி பெறுவதில்லை, வருத்தப்படாதே என்று நான் கூறினேன.
அவன் நான் மறுபடியும் முயற்சி செய்கிறேன் அப்பா என்று கூறினான்.

அவனது முழு உலகமும் ஜிம்முக்கு செல்வதிலேயே இருந்தது. துப்பாக்கிச் சூடு நடந்தநாளில் கூட வீட்டில் காலை சாப்பாட்டை முடித்துவிட்டு 11.30 மணிக்குதான் கிளம்பினான்.

அவன் போராட்டத்தை தான் பார்க்க போகிறான் என்பது எங்களுக்கு தெரியாது. ஆனால் சுமார் 1 மணி நேரத்தில் அதாவது 12.30 மணிக்கு அவன் இறந்துவிட்டான் என எங்களுக்கு அழைப்பு வந்தது என்று வேதனையுடன் கூறியுள்ளார்.

மேலும் பிணவறையில் மகனைப் பார்த்த போது பாஸ்கரன், என்னுடைய ஒரு மகனை இழந்துவிட்டேனே என்று கதறி அழுதுள்ளார்.