தமிழகத்தில் பொலிசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டின் போது கர்ப்பிணி பெண் ஒருவர் தன் கணவனை பறிகொடுத்த வேதனையில் உள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி மக்கள் நடத்திய போராட்டம் வன்முறையாக மாறியதால் பொலிசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 13 பேர் பலியாகியிருந்த நிலையில், அதில் திருமணமான மூன்று மாதங்களில் மணிராஜ் என்பவரும் பலியாகியுள்ளார்.
இவரது மனைவி தற்போது கர்ப்பமாக உள்ளதால், கணவனின் இழப்பை தாங்க முடியாமல் மிகுந்த வேதனையில் உள்ளார்.
தூத்துக்குடி தாமோதர நகரில் காவல்குடியிருப்புக்கு எதிரே எலக்ட்ரிகல் கடை நடத்தி வந்தவர் மணிராஜ்.
இவருக்கும் அனுஷியா என்ற பெண்ணுக்கும் கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. 2 மாத கர்ப்பிணியான மனைவியை தாய் வீட்டுக்கு அனுப்பியிருந்ததால், அடிக்கடி அங்கு சென்று பார்த்துவந்த மணிராஜ் கடந்த 22ம் திகதியும் மனைவியை பார்க்கச் சென்றபோது தான் துப்பாக்கி குண்டுக்கு பலியாகியுள்ளார்.
மணிராஜின் திருமண அல்பமோ, திருமண வீடியோவோ கூட இன்னும் கைக்கு வராத நிலையில், மணிராஜ் இப்படி ஒரு கொடூர முடிவுக்கு ஆளாகிவிட்டார் என்று அவரது குடும்பத்தினர் கூறியுள்ளனர்.
சமீபத்தில் இங்கிலாந்து இளவரசர் ஹரி மற்றும் நடிகை மேகன் மார்கல் திருமணம் நடைபெற்றது உலகம் முழுவதும் உள்ள மக்களின் கவனத்தை ஈர்த்தது.
தற்போது இளவரசரை திருமணம் செய்துகொண்ட நடிகை மேகன் மார்கல் 22 வருடங்களுக்கு முன்பு பிரித்தானியா அரண்மனை முன்பு எடுத்துக்கொண்ட புகைப்படமும் சமூக வலைத்தளங்களில் பரவியது.
அதே இடத்தில் தற்போது பிரபல தமிழ் நகைச்சுவை நடிகை வித்யு ராமன் ஒரு புகைப்படத்தை எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.
“நேற்று முன்தினம் தான் புகைப்படம் எடுத்தேன்.. இன்னும் 22 வருடம் இளவரசருக்காக காத்திருக்க வேண்டியதுதான்” என கூறியுள்ளார்.
மேகன் மார்கல் போல தனக்கும் வருங்காலத்தில் இப்படி ஒரு வாய்ப்பு அமையலாம் என அவர் நகைச்சுவைக்காகவே இப்படி தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவில் உள்ள விமான நிலையத்தில் புறப்பட தயாராக இருந்த இரு விமானங்கள் ஒன்றோடு ஒன்று மோதி கொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.
Stansted விமான நிலையத்தில் உள்ளூர் நேரப்படி இன்று காலை 9.15 மணிக்கு இச்சம்பவம் நடந்துள்ளது. தற்காலிக நிறுத்துமிடத்தில் Primera நிறுவனத்தின் விமானமும், Ryanair நிறுவனத்தின் விமானமும் ஒரே நேரத்தில் புறப்பட்டன.
அப்போது Primera விமானத்தின் இறக்கை, Ryanair விமானத்தின் பின்பகுதியுடன் சொருகிகொண்டு மோதியுள்ளது. இச்சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்தவொரு காயமும் ஏற்படவில்லை.
இதையடுத்து இரண்டு விமானங்களும் லண்டன் ஸ்டான்ஸ்டட் விமான போக்குவரத்துக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டன. பின்னர் தொழில்நுட்ப பொறியாளர்கள் Ryanair விமானத்தை சோதனை செய்தார்கள்.
தாமதத்தை தடுக்க விமானங்களில் உள்ள பயணிகள் வேறு விமானத்தில் பயணம் செய்ய ஏற்பாடு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வவுனியா – வைரவப்புளிங்குளம் சிறுவர் விளையாட்டுத்திடலை தனியார் ஆக்கிரமிப்பிலிருந்து வவுனியா நகரசபை பொறுப்பேற்க வேண்டும் என்ற அக்கினிச்சிறகுகள் அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து நேற்று நடைபெற்ற நகரசபை கூட்டத்தில் வவுனியா நகரசபையினருக்கு குறித்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
அத்துடன், தனியாரினால் அபகரிக்கப்பட்டுள்ள விளையாட்டுத் திடல்களை நகரசபையினரால் பொறுப்பேற்கப்பட வேண்டும் என்ற முடிவுகள் நகரசபை தலைவர், உறுப்பினர்களினால் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அக்கினிச்சிறகுகள் அமைப்பின் தலைவர் செ.அரவிந்தன் அறிக்கை ஒன்றும் அனுப்பி வைத்துள்ளார். குறித்த அறிக்கையில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
நகரசபை ஆளுகைக்குட்பட்ட நகரசபையின் பொறுப்பில் தனியாரினால் அபகரிக்கப்பட்டுள்ள விளையாட்டுத் திடல்களை நகரசபையினால் நேற்று முதல் பொறுப்பேற்கப்பட்டுள்ளது.
குறிப்பாக வேப்பங்குளம், வைரவப்பளியங்குளம் பகுதிகளிலுள்ள விளையாட்டுத்திடல்கள் உட்பட சில விளையாட்டுத்திடல்கள் நகரசபையினரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளது.
இந்த விளையாட்டுத்திடல்களுக்கான பெயர்ப்பலகைகள் நாட்டப்பட உள்ளதோடு இன்று முதல் நகரசபையில் விளையாட்டுத்திடலுக்குரிய வாடகைப்பணத்தினைச் செலுத்த முடியும்.
தமது அமைப்பினரால் விடுக்கப்பட்ட கோரிக்கையினை ஏற்று நகரசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதற்காக நகரசபைத் தலைவர் நகரசபை உறுப்பினர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் குழந்தையுடன் தனியாக வசித்து வந்த பெண் கொடூர முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள கருமாத்தூர்-பூசாரிபட்டியைச் சேர்ந்தவர் தங்கப்பாண்டி. இவர் கடந்த ஆண்டு நண்பர்களால படு கொலை செய்யப்பட்டதால், இவரது மனைவி மலர் இரு குழந்தைகளுடன் தனியே வசித்து வந்தார்.
இந்நிலையில் மலர் இன்று அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் கழுத்தில் கொடூர முறையில் குத்தி கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார்.
இதைக் கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக பொலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் முன்விரோதம் காரணமாக நடந்திருக்கலாம் என்று பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வவுனியா, சாந்தசோலை கிராமத்தின் பொது மயானத்திற்கென ஒதுக்கப்பட்ட ஒரு பகுதி இனந்தெரியாத நபர் ஒருவரினால் அபகரிக்கப்பட்டுள்ளதுடன் தூண்போட்டு வேலி அடைக்கப்பபட்டுள்ளதாக இன்றைய தினம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
சாந்தசோலை கிராமத்திற்கான பொது மயானத்தின் காணி கொக்குவெளியிலுள்ள பெரும்பான்மை இனத்தவரினால் அபகரிக்கப்பட்டுள்ளதுடன் தமிழ் இனத்தவர் ஒருவருக்கு முற்பணம் பெறப்பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரவிக்கப்படுகின்றது.
பொது மயானத்திற்கு இறுதிக்கிரியைகளுக்காகச் சென்ற பொதுமக்கள் பொது மயானக்காணியில் தூண்போட்டு வடக்குப் பகுதியில் இரண்டரை ஏக்கர் பரப்பளவு அபகரிக்கப்பட்டுள்ளதை அவதானித்துள்ளனர்.
தொடர்ந்து அது பொது மயானத்திற்குரிய காணி என்பதை கிராம அபிவிருத்திச்சங்கத்தினூடாக அறிந்து கொண்டபின்னர் இது குறித்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டது.
பொது மயானத்திற்குச் சென்ற பொலிஸார் கிராம அபிவிருத்திச் சங்கத்திடம் கிராம சேவையாளர், பிரதேச செயலாளர், மாவட்ட அரசாங்க அதிபர் ஆகியோருக்கு முறையிடுமாறு ஆலோசனை வழங்கியுள்ளனர்.
இதையடுத்து கிராம சேவையாளருக்கு முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன் பின்னர் கொக்குவெளியிலுள்ள பெரும்பான்மை இனத்தைச்சார்ந்த ஒருவர் அக்காணியினை அபகரித்துள்ளதாகவும், காணியினை தமிழர் ஒருவருக்கு முற்பணம் பெறப்பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இதையடுத்து சாந்தசோலை கிராம அபிவிருத்திச்சங்கம் தொடர்புபட்ட அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு சென்றுள்ளது.
கிளிநொச்சி பகுதியில் உள்ள பாடசாலையொன்றில் மாணவியிடம் ஆசிரியர் ஒருவர் தகாதமுறையில் நடக்க முற்பட்டமை தொடர்பில் பாடசாலையின் அதிபர் மற்றும் சம்பந்தப்பட்ட ஆசிரியர் ஆகியோரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் இன்று மேற்கொள்ளப்பட்டதாக சிறுவர் நன்னடத்தை அதிகாரி தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி – கரைச்சி கல்வி கோட்டத்திற்குட்பட்ட, பாரதிபுரம் பாடசாலையில் கல்வி கற்கும் மாணவியொருவரை அப்பாடசாலையில் கற்பித்தலில் ஈடுபட்டு வரும் ஆசிரியர் ஒருவர் நேற்று பாடசாலை நேரத்தில் தகாத முறையில் முற்பட்டதாக பாதிக்கப்பட்ட மாணவியால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்று பாடசாலைக்கு சென்ற மாணவி குறித்த ஆசிரியரின் பாடத்திற்கு செல்லவில்லை என தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் சம்பவம் தொடர்பில் வகுப்பாசிரியரிடமும் அவரது பெற்றோரிடமும் முறைப்பாடு செய்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து குறித்த முறைப்பாடு தொடர்பில் பெற்றோர் பாதிக்கப்பட்ட மாணவி, மற்றும் சம்பந்தப்பட்ட ஆசிரியரிடம் விசாரணைகளை மேற்கொண்டு சம்பவம் தொடர்பில் வலயக் கல்விப்பணிப்பாளருக்கு தெரிவித்திருப்பதாகவும் அதிபர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான சந்தர்ப்பத்தில் இன்று காலை 10 மணிக்கு பாடசாலைக்கு சென்ற மாவட்ட சிறுவர் நன்னடத்தை அதிகாரி விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன், இது தொடர்பில் தொடர்ந்தும் விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் நடைபாதை வியாபாரிகளுக்கு நீண்டகால திட்டத்தில் ஒரு நிரந்தர இடம் ஒதுக்குவது தொடர்பாக கரிசனை கொள்ளப்பட்டுள்ளது என நகரசபை தலைவர் இ.கௌதமன் தெரிவித்துள்ளார்.
வவுனியா நகரசபையின் இரண்டாவது சபை அமர்வு நேற்று இடம்பெற்றுள்ளது. இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,
வவுனியா நகரின் வீதிகளை புனரமைத்தல், வீதி விளக்குகளை திருத்துதல் மற்றும் பொருத்துதல், பெரு மரங்களை நடுதல், பழைய விளையாட்டு மைதானங்களை புனரமைத்தல், புதியவிளையாட்டு மைதானங்களை உருவாக்குதல்,
சுற்றுலாத்துறையை விருத்தி செய்யும் வகையில் குளங்களை விரிவுபடுத்துதல் மற்றும் அழகு படுத்துதல், பூங்காக்களை விருத்தி செய்தல் மற்றும் வவுனியா வாழ் மக்களுக்குத் தேவையான விடயங்களை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு நான் முயற்சித்து வருகிறேன்.
இதற்காக அரச நிறுவனங்கள், திணைக்களங்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள், துறைசார் நிபுணர்கள், புத்திஜீவிகள், ஊடகவியலாளர்கள் மற்றும் பொதுமக்கள்
ஆகியோரை சந்தித்து வருகின்றேன்.
இவ்வாறு நீண்டகால திட்டம் பற்றிய விடயங்கள் நடைபெற்று வருகின்ற அதேவேளை குறுங்கால திட்டமொன்றை வகுத்து அதுதொடர்பில் அமர்வில் கலந்துரையாடப்பட்டது.
வவுனியா நகரசபையில் காணப்படுகின்ற பாரிய ஆளணி வெற்றிடத்தை நிரப்புவதற்கு சாத்தியமான அத்தனை வழிகளையும் கையாள்வது என்று தீர்மானிக்கப்பட்டதோடு, தொழிலார்களிடம் காணப்படுகின்ற சம்பளப் பிரச்சினை தொடர்பாக ஆராய்ந்து நிரந்தர தீர்வு ஒன்றை எட்டுவதற்கு விசாரணைக்குழு ஒன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.
தெருவிளக்குகள் பொருத்துவத்தற்குரிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. வடி கால்களை புனரமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
அடுத்த மாத இறுதிக்குள் நகரை அண்டிய பகுதிகளில் விசேட வேலைத்திட்டம் ஒன்றின் மூலம் நகரை சுத்தப்படுத்தும் சிரமதானப்பணி திட்டமிடப்பட்டுள்ளது. இதில் இராணுவம் பொலிஸ் கடற்படை பாடசாலை சமூகம் பொதுமக்கள் என அனைவரையும் இணைத்துக் கொள்வதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நகரசபையின் உள்ளக பிரதேசங்களை துப்பரவு செய்து அழகு படுத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது. நகர அபிவிருத்தி அதிகார சபையின் அலுவலகம் ஒன்றினை வவுனியாவில் திறப்பதற்கான முடிவும் எட்டப்பட்டது.
சட்ட விரோத விளம்பர காட்சிப்படுத்தல்களுக்குரிய நிதியினை வசூலித்தல் பொருத்தமற்றவற்றை அகற்றுதல் என்பவற்றின் மூலம் அவற்றினை முறைப்படுத்துதல் வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நகரசபை வட்டாரங்களில் காணப்படும் குறைபாடுகளை இனங்கண்டு வரிசைப்படுத்தி முதன்மை அடிப்படையில் நிவர்த்தி செய்வதெனவும் பொது இடங்களில் குப்பைத்தொட்டிகளை நிறுவுதல் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
நடைபாதை வியாபாரிகளுக்கு நீண்டகாலத் திட்டத்தில் ஒரு நிரந்தர இடம் ஒதுக்குவது எனவும் கலந்தாலோசிக்கப்பட்டதுடன் மாதாந்தம் பௌர்ணமி விழாக்களை நடத்துவதுடன் வருடாந்தம் ஒரு பொதுப்பண்பாட்டு நிகழ்வை நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.
வவுனியா ஓமந்தைப் பகுதியில் இன்று பிற்பகல் 12.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவரின் கால் துண்டித்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ்விபத்து சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
இன்று பிற்பகல் ஓமந்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பல்சர் ரக மோட்டார் சைக்கிலுடன் டிப்பர் வாகனம் மோதியுள்ளது.
இவ்விபத்தில் இளைஞனின் கால் ஒன்று துண்டிக்கப்பட்ட நிலையில் இளைஞன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். துண்டிக்கப்பட்ட காலினை பொலிசார் 15 நிமிடங்களின் பின்னர் வைத்தியசாலைக்கு எடுத்து வந்து ஒப்படைத்துள்ளனர்.
செட்டிகுளம் பகுதியில் 2ஆம் படிவத்தில் வசித்துவரும் பாலசுந்தரம் நிரோசன் (வயது 22) யாழ்ப்பாணம் செல்வதாகத் தெரிவித்துவிட்டு சென்றபோதே ஓமந்தையில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
டிப்பர் வாகனம் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளையில் சாம்பல் தோட்டம் பகுதியில் மோட்டார் சைக்கிலிள் சென்ற குடும்பப் பெண் ஒருவரை பின்னால் சென்ற ஹயஸ் வான் மோதியதில் தலையில் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சாம்பல் தோட்டம் பகுதியைச் சேர்ந்த எஸ்.வாணதி என்ற (வயது 40) இரண்டு பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவ் விபத்துகள் தொடர்பான விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
துபாய் நாட்டில் இருந்து கொழும்பு நோக்கி வந்த ஸ்ரீலங்கன் விமானத்தில் மதுபோதையில் விமானப் பணிப்பெண்ணை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த முயற்சித்த வர்த்தகர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கல்கிஸ்சை பகுதியில் வசித்து வரும் 49 வயதான வர்த்தகரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த செவ்வாய் கிழமை துபாய் நாட்டில் இருந்த வந்த விமானத்தில் இந்த சந்தேக நபர் வர்த்தக வகுப்பில் பயணம் செய்துள்ளார். விலை அதிகமான மதுபானத்தை கேட்டு, இந்த வர்த்தகர் விமானப் பணிப்பெண்ணுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் கெட்ட வார்த்தைகளில் திட்டியுள்ளார்.
இதனையடுத்து அந்த விமானப் பணிப்பெண் வேறு ஒரு பணிப்பெண்ணிடம் மதுபானத்தை கொடுத்து அனுப்பியுள்ளார். மதுபானத்தை கொண்டு வந்த விமானப் பணிப்பெண்ணை சந்தேக நபர் கையை பிடித்து இழுத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்துள்ளதாக பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
சந்தேக நபர் கையை பிடித்து இழுத்த போது கையை தட்டி விட்டு தப்பிச் சென்றுள்ளார். அப்போது சந்தேக நபர் கெட்ட வார்த்தைகளால் பெண்ணை திட்டியுள்ளார்.
விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததும் பாதிக்கப்பட்ட விமானப் பணிப்பெண்கள், பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியுள்ளனர். இதனையடுத்து பாதுகாப்பு அதிகாரிகள் வர்த்தகரை கைதுசெய்து விமான நிலைய பொலிஸாரிடம் கையளித்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து கட்டுநாயக்க பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அக்கரைப்பற்று – ஆலையடிவேம்பு பகுதியில் இளைஞரொருவரை சற்றுமுன் அப்பகுதி மக்கள் கட்டி வைத்து தாக்கிய சம்பவத்தால் தற்பொழுது அங்கு பதற்றமான சூழல் நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது.
சுமார் 35 வயது மதிக்கத்தக்க யுவதியொருவரிடம், முஸ்லிம் இளைஞரொருவர் தகாத முறையில் நடந்து கொண்டதை அவதானித்த மக்களே அவரை தாக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதேவேளை, குறித்த முஸ்லிம் இளைஞரின் மோட்டார் சைக்கிளும் எரிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ள நிலையில் அங்கு விரைந்த பொலிஸார் இளைஞரை மீட்டுள்ளனர்.
மேலும் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கொல்கத்தாவில் டாக்ஸி ஓட்டுநர் ஒருவர் சிகிச்சைக்கு பணம் இல்லாமல் இறந்து போன தனது அன்பு தங்கையின் நினைவாக மருத்துவமனை ஒன்றை கட்டியுள்ளார்,
2004 ஆம் ஆண்டு சைதுல் லஷ்கரின் தங்கை மருஃபா, மார்புசளி தொற்றால் பாதிக்கப்பட்டார். இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தங்கையின் சிகிச்சை செலவு மற்றும் மருந்து வாங்க முடியாமல் சைதுல் சிரமப்பட்டுள்ளார்.
இதன் விளைவாக, சைதுல் தனது தங்கையை இழந்தார். வறுமையின் காரணமாக தனது தங்கைக்கு மருந்து வாங்கிகொடுத்து அவரது உயிரை காப்பாற்ற முடியவில்லையே என சைதுல் கவலை கொண்டுள்ளார்.
தனது தங்கைக்கு ஏற்பட்ட நிலை இனி எந்த ஏழைக்கும் ஏற்படக்கூடாது, என்னைப்போன்று இனி எந்த அண்ணனும் தங்கையை இழந்துவிடக்கூடாது என்பதற்கு தான் ஒரு மருத்துவமனை கட்டி அதில் ஏழை மக்கள் பயன்பெற வேண்டும் என முடிவு செய்தார்.
தான் டாக்ஸி ஓட்டும் பணத்தை சிறுக சிறுக சேமித்து வைத்துள்ளார், இதுதவிர தனது முயற்சியை நண்பர்களிடம் தெரிவித்து நிதி திரட்டியுள்ளார். இவ்வாறு கிடைத்த பணத்தின் மூலம், பருய்பூர் அருகின் புன்ரி கிராமத்தில் தனது தங்கை பெயரில் மருஃபா ஸ்ம்ரிதி என்ற மருத்துவமனையை கட்டியுள்ளார்.
சுமார், 12 ஆண்டுகள் இந்த மருத்துவமனையை கட்டுவதற்கு போராடியுள்ளார். 50 படுக்கை வசதி கொண்ட மருத்துவமனை அதில் எக்ஸ்ரே வசதி, ஈசிஜி என்று எல்லா முக்கிய வசதிகளுடன் இருக்கிறது. 286 நோயாளிகள் அங்கு சிகிச்சை பெறமுடியும். இதன் மூலம் 100 கிராமங்கள் பலனடைந்துள்ளது.
தற்போது, மருத்துவமனையில் 8 மருத்துவர்கள் இலவசமாக சிகிச்சை அளித்து வருகின்றனர். சைதுலின் முயற்சியை பிரதமர் நரேந்திர மோடி ‘மன் கி பாத்’ ரேடியோ நிகழ்ச்சியில் பாராட்டி பேசியது குறிப்பிடத்தக்கது.
இப்போது எனக்கு உதவிட பலர் உள்ளனர். அதனால் என் கனவை முழுவதும் அடைய இன்னும் முயற்சிக்க விரும்புகிறேன். மருத்துவமனை கட்டுவதோடு நிற்காமல் ஏழைகளுக்கு உதவ மேலும் பல நல்ல காரியம் செய்ய கனவை நோக்கி செல்லப்போகிறேன்,” என்கிறார் சைது.
லண்டனில் தங்கள் குழந்தையை கவனித்து கொள்வதற்காக வந்த பெண் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்படுவதற்குமுன் எடுக்கப்பட்ட அதிர்ச்சி புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
லண்டனில் வசிக்கும் Sabrina Kouider மற்றும் அவரது ஆண் நண்பரான Ouissem Medouni இருவரும் தங்கள் மகனைப் பார்த்துக் கொள்வதற்காக பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த Sophie Lionnet என்னும் இளம்பெண்ணை வேலைக்கு சேர்த்திருந்தனர்.
Sabrina இல்லாதவற்றை இருப்பதுபோல் கற்பனை செய்து கொள்ளும் ஒரு வகை பிரச்சனை உடையவர். அந்த பிரச்சனை பின்னர் வேலைக்கு வந்த Sophie Lionnetஇன் உயிரையே பறித்துள்ளது.
Sabrinaவுக்கு முன்னாள் காதலன் ஒருவர் இருக்கிறார். அவர் Sophie Lionnetஇன் மூலம் தன்னை உளவு பார்ப்பதாக கற்பனை செய்து கொண்ட Sabrina, அது குறித்து கேட்டு அவ்வப்போது Sophieயை அடித்துத் துன்புறுத்தியிருக்கிறார்.
அந்த நபரை தனக்கு தெரியவே செய்யாது என்று Sophie எவ்வளவோ கூறியும் கேட்காத Sabrina Kouiderவும் அவரது ஆண் நண்பரான Ouissem Medouniயும் சித்திரவதை செய்துள்ளனர்.
ஒரு நாள் தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்தும் அடித்து உதைத்தும் சித்திரவதை செய்ததில் Sophie பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடலை தங்கள் தோட்டத்தில் வைத்தே எரித்துள்ளனர் அந்த தம்பதியினர்.
ஆனால் அக்கம் பக்கத்திலுள்ளவர்கள் பிண வாடை அடிப்பதை உணர்ந்து பொலிசாருக்கு தகவல் கொடுக்க வசமாக சிக்கிக் கொண்டனர்.
தற்போது கொலை செய்யப்படுவதற்கு இரண்டு நாட்களுக்குமுன் எடுக்கப்பட்ட Sophieயின் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அதில் பட்டினி போடப்பட்டதால் மெலிந்து எலும்பும் தோலுமாக காட்சியளிக்கிறார் Sophie.
இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி, Sophieயின் பெற்றோரிடம் Sophie மீது அவளைக் கொலை செய்தவர்கள் கூறிய குற்றங்கள் எதுவும் உண்மையில்லை என்றும் அவள் ஒரு நிரபராதி என்றும் கூறி ஆறுதல் கூறினார்.
Sophieயின் தாய் கண்ணீர் விட்டுக் கதறிய காட்சி கண்போரை கலங்கச் செய்தது. ஜூன் மாதம் 26 ஆம் திகதி இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.
கனடாவில் மகள் திருமணத்துக்கு சில மணி நேரத்துக்கு முன்னர் தாய் உயிரிழந்த நிலையில் தாயின் ஆசைப்படி மகள் திருமணம் செய்து கொண்டுள்ளார்.
வான்கூவரின் Tofino பகுதியில் நடைபெறவிருந்த தனது மகள் விக்டோரியா இமோன் திருமணத்தில் கலந்து கொள்ள அவர் தாய் அன் விட்டன்பெர்க் இரு தினங்களுக்கு முன்னர் வந்தார்.
திருமணம் நடைபெற சில மணி நேரங்களே இருந்த நிலையில் அன் அங்குள்ள கடற்கரைக்கு சென்ற நிலையில் அங்குள்ள தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விடயம் மணப்பெண்ணான விக்டோரியாவுக்கு தெரியவந்த நிலையில் அவர் அதிர்ச்சியடைந்தார். ஆனாலும் தாய்க்கு இறுதி சடங்குகளை செய்த பின்னர் அடுத்த நாள் விக்டோரியா திருமணம் செய்து கொண்டுள்ளார்.
இது குறித்து விக்டோரியா கூறுகையில், எந்த சூழலிலும் நமது குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதே எனது விருப்பம் என என் தாய் அன் அடிக்கடி கூறுவார்.
இதன் காரணமாக கனத்த இதயத்துடன் தாய் இறந்த நிலையிலும் அவர் விருப்பம் போலவே திருமணம் செய்து கொண்டுள்ளேன். அவரின் ஆசிர்வாதம் எனக்கு எப்போதும் இருக்கும் என நம்புகிறேன் என உருக்கத்துடன் கூறியுள்ளார்.
இந்தியாவின் ஆந்திரா மாநிலத்தில் 12 வயது சிறுமியை மிரட்டி 5 சிறுவர்கள் தொடர் 2 மாதம் வரை பாலியல் பலாத்காரம் செய்து துன்புறுத்திய சம்பவம் வெளிச்சத்துக்கு வந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த சிறுவர்களில் இருவரை வீடு புகுந்து தாக்கிய கும்பல் ஒன்று, அவர்களின் ஆடைகளை களைந்து கொடூரமாக தாக்கிய நிலையில் பொலிசார் அவர்களை மீட்டுள்ளனர்.
எஞ்சிய மூவரையும் பின்னர் பொலிசார் கைது செய்துள்ளதாக கூறப்படுகிறது. பின்னர் 5 சிறுவர்களையும் உள்ளூர் நீதிமன்றம் ஒன்றில் சமர்ப்பித்து சிறுவர் சீர் திருத்த பள்ளிக்கு அனுப்பியுள்ளனர்.
சித்தூர் பகுதியில் உள்ள பகத்சிங் நகரில் குடியிருக்கும் குறித்த சிறுவர்கள் 5 பேரும் அதே பகுதியில் குடியிருக்கும் சிறுமியை மிரட்டி பாலியல் துன்புறுத்தல் அளித்துள்ளனர்.
குறித்த சிறுவர்கள் 5 பேரும் ஆபாச படங்களுக்கு அடிமையானவர்கள் எனவும், தங்களது மொபைல் போனில் பல எண்ணிக்கையிலான ஆபாச வீடியோக்களையும் சேகரித்து வைத்திருந்ததாகவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பில் சிறுமியின் தாயார் மற்றும் உறவினர் ஒருவர் பொலிசாரிடம் புகார் அளித்துள்ளதாகவும், ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.
ஆனால் பொதுமக்கள் ஒன்றிணைந்து அந்த சிறுவர்களை கொடூரமாக தாக்கியதன் பின்னரே பொலிசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.