ஒரே பாதையில் நேருக்கு நேர் வந்த விமானங்கள் : நடுவானில் திக் திக் நிமிடங்கள்!!

சென்னை வான்வெளியில் 2 விமானங்கள் நேருக்கு நேர் மோத இருந்தது சரியான நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டு தடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 21ம் திகதி இரவு விசாகப்பட்டினத்தில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூருவுக்கு இண்டிகோ ஏர்பஸ் விமானம் பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது.

சென்னை வான்வெளியில் இரவு 9.31 மணி அளவில் 24,000 அடி உயரத்தில் அந்த விமானம் பறந்து கொண்டிருந்தபோது, அதே உயரத்தில், 300 அடி தொலைவில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானம் ஒன்று வந்துள்ளது.

இண்டிகோ விமானத்தில் இருந்து தானியங்கி எச்சரிக்கைக் கருவி, மிக அருகில் ஒரு விமானம் மோதல் தூரத்தில் வந்து கொண்டிருப்பது குறித்து விமானிக்கு எச்சரிக்கை செய்தது.

இதனால் சுதாரித்த விமானி, அவசர, அவசரமாக விமானத்தை பாதுகாப்பான உயரத்துக்கு உடனடியாக உயர்த்தினார்.

இதனால் இரண்டு விமானங்களும் மோத இருந்தது தவிர்க்கப்பட்டது. இதை இண்டிகோ விமான நிறுவனம் உறுதிப்படுத்திப்படுத்தி உள்ளது. ஆனால், விமானப்படை சார்பில் யாரும் இதுகுறித்து கருத்து தெரிவிக்க முன்வரவில்லை.

பயணிகள் விமானம் சென்று கொண்டிருந்த பாதையில் திடீரென விமானப்படைக்கு சொந்தமான விமானம் மோதல் தூரத்தில் வந்தது குறித்து விமான போக்குவரத்து ஒழுங்குமுறை இயக்குநரகம் விசாரணை நடத்தி வருகிறது.

நடுவானில் விமானங்கள் மோதியிருந்தால், அதில் இருந்த பயணிகள் அனைவரும் உயிரிழந்து இருப்பார்கள்.

மேலும், தரைப்பகுதியிலும் விமான பாகங்கள் விழுந்தும் உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கக் கூடும் எனவும் நிபுணர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

மண்டபத்தை பூட்டிவிட்டு உள்ளே நடக்கும் திருமணங்கள் : தொடரும் தூத்துக்குடி அவலம்!!

தூத்துக்குடி மாவட்டத்தில் சில இடங்களில் மட்டும் திருமண மண்டபத்தை வெளியில் பூட்டி வைத்து விட்டு உள்ளே திருமணம் நடக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி நடந்த போராட்டத்தில் 13 பேர் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தனர். போராட்டம், துப்பாக்கிச்சூடு நடைபெற்று மூன்று நாள்கள் ஆகியும் இதுவரை அங்கு இயல்பு வாழ்க்கை திரும்பவில்லை.

இந்நிலையில், நேற்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராகப் புதிதாக பதவியேற்ற சந்தீப் நந்தூரி கூறுகையில், அமைதியை நிலை நாட்டுவதே என் முதல் வேலை, காவல்துறைக்கு அஞ்சாமல் வியாபாரிகள் கடைகளைத் திறக்க வேண்டும் எனக் கூறியிருந்தார்.

இதைத்தொடர்ந்து இன்று தூத்துக்குடி முழுவதும் சில கடைகள் மட்டும் ஆங்காங்கே திறக்கப்பட்டன. பேருந்துகள், ஆட்டோ, மினி வேன்கள் போன்றவை முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.

இன்று முகூர்த்த நாள் என்பதால், தூத்துக்குடி மாவட்டத்தில் சில இடங்களில் மட்டும் திருமண மண்டபத்தை வெளியில் பூட்டி வைத்து விட்டு உள்ளே திருமணம் நடக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

உறவினர்கள் வந்தால் மட்டும் மண்டபத்தைத் திறந்து உள்ளே அழைத்துச் செல்கின்றனர் திருமண வீட்டார். பெண் வீட்டில் சிலர், மாப்பிள்ளை வீட்டில் சிலர் மட்டுமே திருமணத்தில் கலந்துகொண்டுள்ளனர். மண்டபத்துக்கு உள்ளே திருமணம் நடப்பது வெளியில் இருக்கும் ஒருவருக்கு கூட தெரியாத வண்ணம் அவ்வளவு அமைதியாக திருமணங்கள் நடைபெற்று வருகிறது.

நுவரெலியாவில் திடீரென ஏற்பட்ட நீரோட்டம் : பரிதாபமாக உயிரிழந்த மாணவி!!

நுவரெலியாவில் நிலவும் சீரற்ற காலநிலையால் பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார். ராகலை, சமகிபுர பிரதேசத்தில் பாடசாலை நிறைவடைந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்த சிறுமி ஒருவர் மழை நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார்.

நேற்று மாலை 2.30 மணியளவில் வீதி அருகில் இருந்த ஏரி நீரில் சிக்கியமையினால் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் உடபுஸ்ஸலாவ பிரதேசத்தை சேர்ந்த 9 வயதுடைய சிறுமி என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் தமிழ் பாடசாலை ஒன்றில் 4ஆம் ஆண்டில் கல்வி கற்று வருகிறார்.

பாடசாலை நிறைவடைந்து 5 மாணவர்களுடன் வீட்டிற்கு சென்று கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்த சிறுமியின் சடலம் நுவரெலியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் ராகல பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நேற்று மாலை மலையகத்தில் பெய்த அடைமழையை தொடர்ந்து இந்த மாணவி பயணிக்கும் வீதியில் நீரோட்டம் நிறைந்து காணப்பட்டுள்ளது.

அந்தப் பகுதியில் வழமைக்கு மாறாக நீரோட்டம் ஏற்பட்டுள்ளதாக அந்தப்ப பகுதி மக்கள் தெரிவித்துள்னர். இதன் காரணமாக மாணவி உயிர் பறி போயுள்ளதாக கவலை தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் புதையல் தோண்டச் சென்ற 5 பேர் கைது!!

வவுனியா பம்பைமடுப் பகுதியில் நேற்று (24.05) புதையல் தோண்டுவதற்குச் சென்ற 5பேரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்து பூவரசன்குளம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

அவர்களிடமிருந்து ஸ்கானர், முச்சக்கரவண்டி, கார் என்பனவற்றையும் கைப்பற்றியுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

நேற்று மாலை 5 மணியளவில் பம்மைமடு காட்டுப்பகுதியில் விசேட அதிரடிப்படையினர் சந்தேகத்திற்கிடமான முச்சக்கரவண்டியினை வழிமறித்து சோதனை மேற்கொண்டனர்.

இதன்போது புதையல் தோண்டுவதற்குப் பயன்படுத்தப்படும் ஸ்கானர் ஒன்றை மீட்டுள்ளதுடன் அவர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளின்போது காரில் வந்த இருவரையும் முச்சக்கரவண்டியில் சென்ற மூவரையும் கைது செய்து விசாரணைகள் மேற்கொண்டபோது,

தென்பகுதியிலிருந்து வந்த மூவருடன் வவுனியா பட்டாணிச்சூர் பகுதியைச் சேர்ந்த இருவரும் இணைந்து புதையல் தோண்டுவதற்குச் சென்றதாக விசாரணைகளின்போது தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட ஐவரும் முஸ்லிம்கள் என்பதுடன் முன்னாள் மௌலவி ஒருவரும் உள்ளடங்குவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இன்று மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.

கனடாவில் உணவகத்தில் குண்டு வெடிப்பு : 15 பேர் காயம் : 3 பேர் மோசமான நிலையில்!!

 

கனடாவில் உணவகம் ஒன்றில் திடீரென்று குண்டு வெடித்ததால் 15 பேர் காயமடைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கனடாவின் Ontario மாகாணத்தில் உள்ள Mississauga என்ற பகுதியில் இருக்கும் இந்திய உணவகம் ஒன்றில் திடீரென்று குண்டு வெடித்துள்ளது.

இதனால் 15 முதல் 20 பேர் வரை காயம் அடைந்திருப்பதாகவும், இதில் 3 பேர் மிக மோசமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் இச்சம்பவம் உள்ளூர் நேரப்படி இரவு 10.32 மணிக்கு நடந்ததுள்ளதாகவும், சம்பவத்தை அறிந்தவுடன் பொலிசார் மற்றும் ஆம்புலன்சுகள் அப்பகுதிக்கு விரைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி உணவகத்திற்கு சீல் வைத்துள்ள பொலிசார் அப்பகுதியை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர்.

உள்ளூர் ஊடகம் ஒன்று உணவகத்திற்கு வந்த இரண்டு பேர் கையில் வெடிகுண்டுடன் வந்திருப்பதாகவும், அவர்களே இதற்கு காரணமாக இருக்கலாம் என்று தெரிவித்துள்ளது.

கண்டியில் இளம் மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன் : திகைத்துப் போன பொலிஸார்!!

கண்டியில் இளம் மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார். தவுலகல பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஹலாதிவல பிரதேசத்தில் மனைவியை கத்தியால் குத்தி கணவன் கொலை செய்துள்ளார்.

ஹேவாவிஸ்ஸ விதானாரச்சிகே பீரித்திகா யமுனா என்ற 34 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார்.

கத்தியால் குத்தி மனைவியை கொலை செய்த பின்னர் கணவர் இரத்தம் தோய்ந்த கத்தியுடன் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

கொலை செய்யப்பட்ட பெண்ணுக்கு 3 ஆண் பிள்ளைகள் பிள்ளைகள் உள்ள நிலையில், இரண்டு பிள்ளைகளின் முன்னால் இந்த கொலை சம்பவம் இடம்பெற்றள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இரண்டாவது மகனை பாடசாலையில் இருந்து வீட்டிற்கு அழைத்து வந்த சந்தர்ப்பத்தில் வீட்டில் இருந்த 44 வயதுடைய கணவருடன் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.

வாய்த்தகராறு முற்றியமையினால் கணவர் கட்டில் மீது இருந்த கத்தியை எடுத்து தலையில் குத்தியுள்ளார். பின்னர் இரத்தம் வடிந்த நிலையில் கத்தியுடன் சென்று பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

நாடாளுமன்றத்தைச் சூழ வெள்ளம் : தடுப்பு நடவடிக்கையில் முப்படையினர்!!

நாடாளுமன்றப் பிரதேசத்தைச் சுற்றிலும் வௌ்ளம் சூழத் தொடங்கியுள்ள நிலையில் நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு தொடர்பில் முப்படையினரும் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

கனமழை காரணமாக நாடாளுமன்றத்தைச் சூழவுள்ள தியவன்னா ஆற்றில் நீர்மட்டம் கணிசமான அளவில் உயர்ந்துள்ளது. அத்துடன் நாடாளுமன்ற வளாகத்திலும் ஆங்காங்கே வெள்ள நீர் தேங்கியுள்ளது.

இந்நிலையில் தியவன்னா ஆற்றின் நீர் அதிகரிப்பு தொடர்பில் ஆராய ராணுவ பிரிகேடியர் ஒருவரின் தலைமையில் நேற்றைய தினம் குழுவொன்று படகுகளில் தியவன்னா ஆற்றில் பயணித்து களநிலைமைகளை அவதானித்துள்ளது.

இதற்கு மேலதிகமாக தியவன்னா ஆற்றில் ரோந்து நடவடிக்கைகளை மேற்கொள்ளும் கடற்படையினரின் வள்ளங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும் திடீர் வெள்ளம் ஒன்று ஏற்படும் பட்சத்தில் அதனைச் சமாளித்து தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் நாடாளுமன்ற பொலிஸ் சாவடியில் கடமையில் உள்ள பொலிஸாரும் தயார் நிலையில் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு தாமரை கோபுரத்தில் திடீரென ஏற்பட்ட மாற்றம்!!

 

தெற்காசியாவின் மிகவும் உயரமான கோபுரமான தாமரைக் கோபுரம் தற்போது வித்தியாசமான நிறத்தில் காட்சியளிக்கின்றது.

நாட்டில் தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது. இலங்கையில் நிலவி வரும் சீரற்ற காலநிலையால் தென்னிலங்கை மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பு நகரில் பல பகுதிகளில் மக்கள் பெரும் இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர் இந்த நிலையில், பிரகாசமாக தென்பட்ட கொழும்பு தாமரை கோபுரம் காலநிலை மாற்றத்தால் நிறம் மங்கிய நிலையில் காணப்படுகின்றது.

சீரற்ற காலநிலை இன்றைய தினமும் தொடரும்!!

நாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலை இன்றைய தினமும் தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

மேல், தென், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களுக்கு இடைக்கிடை மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஏனைய பகுதிகளுக்கு பிற்பகல் வேளையில் மழை பெய்யும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம், மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் காலை வேளையில் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேல் மற்றும் தென் கடற்பரப்பில் மழை பெய்யும் எனவும் இன்று முதல் காற்றின் வேகமும் அதிகரிக்கும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது

இலங்கை பிரபல கிரிக்கட் வீரரின் தந்தை சுட்டுக் கொலை!!

இலங்கையில் பிரபல கிரிக்கட் வீரர் தனன்ஜய டி சில்வாவின் தந்தையான கே. ரஞ்சன் சில்வா சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

கல்கிஸ்ஸ பிரதேசத்தில் நேற்று நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ரஞ்சன் சில்வா உயிரிழந்துள்ளார். ரஞ்சன் சில்வா தெஹிவளை – கல்கிஸ்ஸ மாநகரசபையின் உறுப்பினராக கடமையாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரத்மலானை ஹரேந்திர வீதியில் வைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் மேலும் இரண்டு பேர் காயமடைந்துள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிய மூன்று பேரும் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், ரஞ்சன் சில்வா சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் கல்கிஸ்ஸ பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இதேவேளை, தனன்ஜய டி சில்வா இன்று மேற்கிந்திய தீவுகளுக்கு கிரிக்கட் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் இலங்கை அணியில் இணைந்திருந்தார்.

தந்தையின் மரணம் காரணமாக இந்த கிரிக்கட் சுற்றுப் பயணத்தில் தனன்ஜய டி சில்வா இணைந்து கொள்ள மாட்டார் என தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை தேசிய அணியின் வளர்ந்து வரும் முன்னணி வீரர்களில் ஒருவராக தன்னஜய டி சில்வா திகழ்கின்றார்.

வவுனியா முழுவதும் 2 நாட்கள் மின்தடை!!

வடக்கு மாகாண முழுவதும் மின்சாரம் தடை செய்யப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் வட பிராந்திய அலுவலகம் அறிவித்துள்ளது.

எதிர்வரும் 26ஆம் திகதி சனிக்கிழமையும், 27ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமையும் காலை 8 மணிமுதல் மாலை 5 மணிவரை மின் வழங்கல் தடைப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அநுராதபுரம், வவுனியா, மன்னார் மின்மார்க்கத்திலுள்ள திருத்த வேலைகள் காரணமாக இந்த மின் தடை ஏற்படும் என்று இலங்கை மின்சார சபையின் வட பிராந்திய அலுவலகம் தெரிவித்துள்ளது.

வவுனியா உட்பட வடக்கு மாகாண முழுவதும் எதிர்வரும் 26ஆம் திகதி சனிக்கிழமையும், 27ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமையும் காலை 8 மணிமுதல் மாலை 5 மணிவரை மின்சாரம் தடை செய்யப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் வட பிராந்திய அலுவலகம் அறிவித்துள்ளது

வடமாகாணம் முழுவதும் 2 நாட்கள் மின்தடை!!

வடக்கு மாகாண முழுவதும் மின்சாரம் தடை செய்யப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் வட பிராந்திய அலுவலகம் அறிவித்துள்ளது.

எதிர்வரும் 26ஆம் திகதி சனிக்கிழமையும், 27ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமையும் காலை 8 மணிமுதல் மாலை 5 மணிவரை மின் வழங்கல் தடைப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அநுராதபுரம், வவுனியா, மன்னார் மின்மார்க்கத்திலுள்ள திருத்த வேலைகள் காரணமாக இந்த மின் தடை ஏற்படும் என்று இலங்கை மின்சார சபையின் வட பிராந்திய அலுவலகம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 26ஆம் திகதி சனிக்கிழமையும், 27ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமையும் காலை 8 மணிமுதல் மாலை 5 மணிவரை மின் வழங்கல் தடைப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் திகில் சம்பவம் : கமராவில் சிக்கிய அரிய காட்சிகள்!!

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் மனம் கவர்ந்த இடமாக யால வனவிலங்கு பூங்கா மாறியுள்ளது. அங்கு வாழும் மிருகங்களின் செயற்பாடுகளே இதற்கு காரணமாக உள்ளது.

இந்நிலையில் அண்மையில் அங்கு சுற்றுலா பயணத்தில் ஈடுபட்டவர்ளுக்கு அரிய காட்சி ஒன்றை காண முடிந்துள்ளது. அந்த காட்சி இலங்கை புகைப்பட கலைஞரின் கமராவிலும் சிக்கியுள்ளது.

முதலையும் பாரிய பாம்பும் மோதிக்கொள்ளும் காட்சியே இவ்வாறு பதிவாகியுள்ளது. அந்த மோதலின் இறுதியில் பாம்பு முதலையிடம் தோற்று உயிரிழந்துள்ளது.

இதன்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் ஊடகங்களில் பிரபல்யமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா நகரப்பிரதேச முன்பள்ளிகளின் மழலைகள் விளையாட்டு விழா!!

 

வவுனியா நகரப்பிரதேச முன்பள்ளிகளின் மழலைகள் விளையாட்டு விழா நேற்று (24.05.2018)
கூமாங்குளம் சுப்பார் ஸ்ரார் விளையாட்டுக்கழக மைதானத்தில் திருமதி.M.பத்மகலைவாணி தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக (முன்பள்ளி உதவிக்கல்விப்பணிப்பாளர் வவுனியா தெற்கு வலையம்) திரு.K.தர்மபாலன், சிறப்பு விருந்தினராக S.பாலச்சந்திரன் (சித்தி விநாயகர் வித்தியாலய அதிபர்), முன்னாள் கோட்ட இனணப்பாளர் திருமதி அருள்வேல்நாயகி ஆகியோரும்,

கௌரவ விருந்தினராக M.அதிஸ்டசெல்வம் (பிரதேச சபை உறுப்பினர்), திருமதி V.சசிகலா (கோட்ட இணைப்பாளர்),  திருமதி S.சுஜனிதா (கிராம சேவையாளர்), J.தியாகசெல்வம் (சுப்பர் ஸ்ரார் வி.கழகம்) , N.ஸ்ரீரீதரன், M.குருசாமி (லட்சுமணன் ஏற்பாட்டுக் குழுத் தலைவர்) மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து சிறப்பித்திருந்தார்கள்

-பிரதீபன்-

சண்டையை விலக்கிவிட வந்த நபரின் காதை கடித்து விழுங்கிய நபர் : அதிர்ச்சி சம்பவம்!!

இந்தியாவில் குடித்துவிட்டு போதையில் ரகளையில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்த வந்தவரின் காதை கடித்து விழுங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியைச் சேர்ந்தவர் ஜிதேந்தர் குமார். டிரைவரான இவர் இரவு வீட்டுக்குச் செல்லும் போது சுல்தான்பூர் சாலையில் இரண்டு பேர் குடித்துவிட்டு ரகளையில் ஈடுபட்டுள்ளதைக் கண்டுள்ளார்.

இதனால் அவர் உடனடியாக அவர்களை சமாதானப்படுத்த முயன்றுள்ளனர். ஆனால் சண்டையிட்ட நபர்களில் ஒருவன் ஆத்திரத்தில் ஜிதேந்தர் குமாரின் காதை கடித்துள்ளார்.

அப்போது காது துண்டாகிய நிலையில், எதிர்பார்தவிதமாக காதை கடித்த நபரே அதை விழுங்கியுள்ளார். இதையடுத்து உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜிதேந்தர் குமாருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

அதன் பின் இந்த சம்பவத்தை அறிந்து மருத்துவமனைக்கு வந்த பொலிசார், ஜிதேந்தகுமாரிடம் விசாரணை மேற்கொண்டு அதன் பின் இந்த சமப்வத்திற்கு காரணமான சந்தோஷ் (43) மற்றும் தீபக் (23) ஆகியோரை கைது செய்துள்ளனர்.

இவர்கள் மேல் இந்திய தண்டனைச் சட்டம் 324 மற்றும் 34 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

வவுனியா பேரூந்து நிலையத்திற்கு அருகே தீப்பற்றி எரியும் வர்த்தக நிலையம்!!

 

வவுனியா ஏ9 வீதியில் புட்சிட்டிக்கு எதிராக அமைந்துள்ள ஆடை விற்பனை நிலையம் இன்று (24.05.2018) இரவு 9.30 மணியளில் திடீரேன ஏற்பட்ட தீ காரணமாக பற்றி எரிகின்றது.

சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா நகரசபை தீயணைப்பு படையினரின் உதவியுடன் வவுனியா பொலிஸாரும் இணைந்து தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்குறிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தீ விபத்திற்க்கான காரணம் இது வரையில் கண்டறிப்படாத நிலையில் வவுனியா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் இலங்கை மின்சார சபையினர் மின்சாரத்தினை துண்டிக்கும் நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளனர் என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.