இலங்கையின் பொக்கிஷம் திடீரென மாயம் : பலர் கடும் வேதனையில்!!

 

புத்தளம் உட்பட பல பிரதேசங்களில் பெய்த அடைமழை காரணமாக உப்பு உற்பத்தி முழுமையாக பாதிப்படைந்துள்ளது.

புத்தளம், சோல்டன் உள்ளிட்ட பல இடங்களில் தொடர்ந்தும் அடைமழை பெய்தமையினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் புத்தளம் உட்பட பல பிரதேசங்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டது. தற்போது அடைமழையை தொடர்ந்து வெள்ள நிலைமை ஏற்பட்டுள்ளது. இதனால் மழை நீரில் உப்பு கரைந்து விட்டதாக கூறப்படுகின்றது.

இதனால் உப்பு உற்பத்தி நடவடிக்கைகளில் ஈடுபட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. முழுமையாக உப்பு நீரில் கரைந்துள்ளது.

பொக்கிஷமாக விளையும் உப்பு இயற்கையின் மாறுபட்ட தாக்கங்கள் காரணமாக தொடர்ந்தும் பாதிப்படைந்து வருவதாக உப்பு உற்பத்தியாளர்கள் கவலை வெளியிட்டுள்ளது.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் இலங்கை அகதி பலியான பரிதாபம்!!

இலங்கை இராணுவத்தினரின் தோட்டாவுக்கு தப்பியவர் தூத்துக்குடியில் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் பலியான தகவல் வெளியாகி உள்ளது.

தூத்துக்குடி ஸடெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தின் போது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியாகினர்.

அவர்களில் கே.கந்தையா (58) என்பவரும் ஒருவர். இலங்கை அகதியான இவர் தூத்துக்குடி சிலோன் கொலனியில் மனைவி செல்வமணி (48), மகன் ஜெகதீஸ்வரன் (27). ஆகியோருடன் தங்கியிருந்தார்.

கட்டுமான வேலை செய்து வந்த இவர் ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். தனி மனித உரிமைக்காக போராடுவதில் முன்னணியில் இருந்தார்.

ஸ்டெர்லைட் எதிர்ப்பு 100வது நாள் போராட்டத்தின் போது கலெக்டர் அலுவலகம் சென்ற அவர் போலீசாரின் துப்பாக்கி குண்டுக்கு இரையானார்.

வெள்ளை வேட்டி மற்றும் வெள்ளை சட்டை அணிந்து சென்ற அவர் இரத்த வெள்ளத்தில் மண்ணில் பிணமாக கிடந்தார். இரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பது யார்? என்ற கேள்வியை எழுப்பியது. ஆனால் அவரது மனைவி செல்வமணிக்கோ தனது கணவர் துப்பாக்கி சூட்டில் பலியானது தெரிந்து விட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கதறி அழுதார்.

இதுகுறித்து அவர் கூறும் போது, தொலைக்காட்சியில் பார்த்தவுடன் துப்பாக்கி சூட்டில் பலியானது எனது கணவர் என தெரிந்து விட்டது.

இலங்கையில் இராணுவ தாக்குதலுக்கு பயந்து உயிர் பிழைக்க மற்ற தமிழர்களுடன் நாங்களும் கடந்த 1981-ம் ஆண்டு இந்தியா வந்தோம். தற்போது தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் அவர் பலியாகி விட்டார் என்றார்.

துப்பாக்கி சூட்டில் பலியான கந்தையாவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக சிலோன் கொலனியில் அவரது உருவப்படம் பொறித்த பனர் வைக்கப்பட்டுள்ளது.

ஆனால் அவரது ஒரே மகன் ஜெகதீஸ்வரனுக்கோ தனது தந்தை மரணம் அடைந்தது தெரியவில்லை. ஏனெனில் பிறவியிலேயே மனவளர்ச்சி குன்றியவர். அவரால் பேச முடியாது. ஆனால் மற்றவர்களின் நடவடிக்கையை அவரால் புரிந்து கொள்ள முடியும்.

இவர் தனது தந்தை கந்தையா மீது அதிக பாசம் கொண்டவர். அவர் ஊட்டி விட்டால் தான் உணவு சாப்பிடுவார். தற்போது அவர் உயிருடன் இல்லாததால் ஜெகதீஸ்வரன் கடந்த 5 நாட்களாக உணவு சாப்பிட மறுத்து பட்டினி கிடக்கிறார்.

இரவில் தனது தந்தையை கட்டிப்பிடித்து தான் தூங்குவார். தற்போது அவர் இல்லாததால் தூக்கமின்றி தவிக்கிறார். அவர் இறந்தது கூட தெரியாமல் பேனர் அருகேயே நிற்கிறார். இது அப்பகுதி மக்களின் நெஞ்சங்களை கனக்கச் செய்கிறது.

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு படிப்புக்கு தகுந்தபடி வேலை வழங்குவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.ஆனால் கந்தையாவின் மகன் மனவளர்ச்சி குன்றியவர். படிப்பறிவு இல்லாதவர் அவரது மனைவி குடும்ப தலைவி, அவர் தனது மகன் ஜெகதீஸ்வரனை கவனிக்க வேண்டியுள்ளது. கந்தையாவின் வருமானத்தை மட்டுமே நம்பியிருந்த அவரது குடும்பத்தை காப்பாற்ற பாதுகாவலர் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

படையெடுக்கும் விரிபுடையன் பாம்புகள் : அச்சத்தில் மக்கள்!!

 

ஏறாவூர் நகரப் பிரதேசத்தில் நச்சுப் பாம்புகள் மக்கள் வாழும் குடியிருப்புக்களுக்கு படையெடுக்க ஆரம்பித்துள்ளன.

ஏறாவூர் – பதியுதீன் மஹ்மூத் வித்தியாலயத்திற்கு அருகிலுள்ள வடிகானுக்குள் பாம்புகள் நுழைந்துள்ளதாக தகவல் பரவியுள்ளது.

பின்னர் இப்பிரதேசத்தில் பரபரப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து ஏறாவூர் நகர சபையின் உப தலைவர் எம்.எல். றெபுபாசம் ஸ்தலத்திற்கு விரைந்து பிரதேச மக்களுடன் குறிப்பிட்ட வடிகான் பகுதிக்குள் பாம்புகளைத் தேடும் பணியில் ஈடுபட்டார்.

அப்போது அந்தப் பகுதி வடிகானுக்குள் இருந்து பெரிய அளவிலான விரிபுடையன் பாம்பொம்பொன்று மீட்கப்பட்டதாகவும் பாதுகாப்புக் கருதி அந்தப் பாம்மை பிரதேசத்தவர்கள் கொன்று விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

விரிபுடையன் பாம்புகள் உஷ்ணம் நிநை்த கதகதப்பான சூழ்நிலையில் தமது வசிப்பிடத்தை அமைத்துக் கொண்டு உணவு தேடிச் சென்று வாழ்பவை என்று விலங்கியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இன்னும் அந்தப் பகுதியில் பாம்புகள் நடமாடுவதாக தெரிவிக்கப்பட்ட ஊகங்களின் அடிப்படையில் மக்கள் மத்தியில் தொடர்ந்து அச்சம் நிலவி வருகின்றது.

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு சென்ற குடும்பஸ்தர் மாயம்!!

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்கு சென்ற குடும்பத் தலைவர் ஒருவர் காணாமல் போயுள்ளார். கச்சாய் வீதி கொடிகாமத்தைச் சேர்ந்த 48 வயதுடைய சிவராசா உதயகுமார் என்பவரே காணாமல் போயுள்ளார்.

இது தொடர்பில் அவரது உறவினர்கள் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

கடந்த 21ஆம் திகதி கொழும்புக்குச் செல்வதாக கூறிச் சென்ற இவர் இதுவரை வீடு திரும்பவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் வாகனங்கள் வாங்க காத்திருப்போருக்கு அதிர்ச்சியான செய்தி!!

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பல வாகனங்களின் விலை இரண்டு மடங்காக அதிகரிப்பதற்கு வாய்ப்புகள் உள்ளதாக வாகன விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

வாகனங்களுக்காக விதிக்கப்பட்டுள்ள புதிய வரி முறை காரணமாக இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

முன்னர் வாகன இயந்திரத்தின் திறனுக்கமைய வாகனங்களின் விலை அதிகரிக்கப்பட்டன. எனினும் கடந்த வரவு செலவுத் திட்டத்தில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய வரி முறைக்கமைய வரி தொடர்ந்து அதிகரித்து கொண்டே செல்வதாக சங்கத்தின் தலைவர் கிஹான் தெரிவித்துள்ளார்.

ஜப்பான், கொரியா, இந்தியா ஆகிய நாடுகளில் வாகனங்களின் விலை அதிகரித்துள்ளதாகவும், இலங்கை ரூபாயின் பெறுமதியில் ஏற்பட்ட தொடர் வீழ்ச்சி இதில் பாரிய தாக்கத்தை செலுத்தும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையின் பல இறக்குமதியாளர்கள் இதுவரையில் பழைய வரி முறையில் இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களை குறைந்த விலையிலேயே விற்பனை செய்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் எதிர்வரும் நாட்களில் வானங்களின் விலை பாரியளவில் அதிகரிக்கும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

வயோதிபரை வீதியில் கைவிட்டுச் சென்ற நபர்கள் : இலங்கையில் மீண்டுமொரு சம்பவம்!!

வாகனம் ஒன்றில் வந்த சிலர் வயோதிபர் ஒருவரை அனுராதபுரம் நகரின் வங்கி இடம் என்ற பகுதியில் உள்ள குறுக்கு வீதியில் கை விட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

இந்த சம்பவம் இன்று நடைபெற்றுள்ளது. கடும் வெயிலில் கிடந்த நபருக்கு நிழல் ஒன்றை ஏற்படுத்திக்கொடுத்த அயல் வாசி ஒருவர், சம்பவம் குறித்து பொலிஸாருக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

இதன் பின்னர் குறித்த வயோதிப நபர் மாநகர சபையின் அம்பியூலன்ஸ் வண்டியின் மூலம் அனுராதபுரம் வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்று அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வயோதிபரை நடுத் தெருவில் கைவிட்டுச் சென்ற நபர்களை அடையாளம் காண அனுராதபுரம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த சில வாரங்களுக்கு முன்னரும் மட்டக்களப்பில் முதியவர் ஒருவர் நடு வீதியில் கைவிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

300 நபர்களை படுகொலை செய்த கொடூரன் : பொலிசில் சிக்கியது எப்படி?

கொலம்பியாவில் ஜனாதிபதி வேட்பாளரை கொலை செய்ய முயன்ற வழக்கில் சிறை சென்று பிணையில் வெளிவந்த கொலைக் குற்றவாளியை பொலிசார் மீண்டும் கைது செய்துள்ளனர்.

கொலம்பியாவில் Popeye என அறியப்பட்டவர் Jhon Jairo Velasquez. இவர் போதை மருந்து கடத்தல் கும்பல் தலைவரான பாப்லோ எஸ்கோபரின் முக்கிய பாதுகாவலராக செயல்பட்டவர்.

முன்னாள் கொலம்பிய ஜனாதிபதி வேட்பாளரை கொலை செய்ய திட்டமிட்ட குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு, 22 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை அனுபவித்து 4 ஆண்டுகளுக்கு முன்னர் Velasquez பிணையில் வெளி வந்தார்.

இந்த விவகாரம் தொடர்பான விசாரணையில் Velasquez இதுவரை 300 பேரை படுகொலை செய்துள்ளதாக நீதிபதி முன்பு ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருந்தார்.

குறித்த சம்பவம் சர்வதேச அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் கொள்ளை, மிரட்டி பணம் பறித்த உள்ளிட்ட வழக்குகளின் கீழ் வெள்ளியன்று பொலிசார் Velasquez-ஐ கைது செய்துள்ளனர்.

ஆனால் இதுவரை விசாரணை குறித்த தகவல்கள் எதையும் பொலிசார் வெளியிடவில்லை.

56 வயதான Velasquez போதை மருந்து கடத்தல் கும்பல் தலைவாரக கோலோச்சிய பாப்லோ எஸ்கோபரின் முக்கிய பாதுகாவலராக செயல்பட்டவர்.

கடந்த 1993 ஆம் ஆண்டு கொலம்பிய பொலிசாரால் பாப்லோ எஸ்கோபர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

எஸ்கோபருக்காக Velasquez 3000 படுகொலைகளை மேற்கொண்டுள்ளார். அதில் 300 நபர்களை Velasquez தமது கைகளால் கொலை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மாணவிக்கு ஏன் இந்த கொடூரம் : படுகொலையின் பின் கதறி அழும் தாய்!!

ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தையும் கொந்தளிப்பில் கொண்டு சென்று விட்டிருக்கிறது தூத்துக்குடி படுகொலைகள். இலங்கையில் முள்ளிவாய்க்கால் என்றால். தமிழகத்தில் தூத்துக்குடி என்று கலங்கும் நிலையை ஏற்படுத்தியிருக்கிறது தமிழக காவல்துறை.

நூறு நாட்களாக தங்கள் நிலத்தையும், வளத்தையும், எதிர்கால சந்ததியினரின் நல் வாழ்க்கையையும் உறுதிப்படுத்தவும், பாதுகாக்கவும் களம் கண்டனர் தூத்துக்குடி மக்கள். நச்சுத்தன்மை கொண்ட வளத்தை அழிக்கும் அந்த ஆலையை மூடச் சொல்லி அவர்கள் பெரும் போராட்டத்தை தொடர்ச்சியாக முன்னெடுத்தார்கள்.

அவர்களின் போராட்டம் நூறாவது நாளை எட்டியதும், தங்கள் கோரிக்கையை மாவட்ட ஆட்சியரிடம் தெரிவிக்கச் சென்ற போது தான் கோரத்தாண்டவம் ஆடியிருக்கிறது தமிழக காவல்துறை. காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

இதுவரை பல இளைஞர்களைக் காணவில்லை என்று பெற்றோர்கள் முறைப்பாடுகளை தெரிவித்திருக்கிறார்கள். இன்னமும் நிலைமை சீராகவில்லை. ஆனால், இப் போராட்டம் சதிச் செயல் என்றும், தீவிரவாதிகள் உள் நுழைந்துவிட்டார்கள் என்றும் தட்டிக் கழித்துக் கொண்டிருக்கிறது தமிழக காவல்துறை. கொதித்துப் போயிருக்கிறார்கள் தமிழ் மக்கள்.

ஒவ்வொரு அடக்குமுறைகளும், வளங்களைப் புடுங்குவதும் தமிழர் பகுதிகளில் தான். இதனை தொடர்ச்சியாக செய்து கொண்டிருக்கிறார்கள். இதற்கு முடிவு கட்ட வேண்டும் என்று வளர்ந்துவரும் இளைய தலைமுறையினர் போராடத் தொடங்கியிருக்கிறார்கள். இதில் களப்பலியானவர்களில் ஒருத்தி தான் ஸ்னோலின். 18வயதே ஆகும் இந்த யுவதி படித்துக் கொண்டிருக்கிறார்.

மக்கள் போராடும் போது நாங்கள் ஏன் சும்மா இருக்க வேண்டும். இந்த மண்ணிற்காகவும் நமக்காவும் போராட வேண்டும் என்று தன் தாயையும் அழைத்துக் கொண்டு போராட்ட களத்திற்கு சென்று இருக்கிறாள் அவள்.

போராட்டக்களத்திற்குச் சென்றவள் சடலமாக திரும்பி வந்திருக்கின்றாள். தன் மகளின் இழப்பை நினைத்து கதறி அழுதுகொண்டிருக்கின்றார் ஸ்னோலின் தாயார்.

தம்மை ஆளும் அரசே கொன்று வீழ்த்தும் என்று கனவிலும் நினைத்திருக்கமாட்டாள் அவள். காந்திய தேசம் அகிம்சையின் மறுவடிவம். எங்கள் மண்ணில் இந்தக் கொடூரம் நடக்கும் என்று எண்ணியிருக்கமாட்டாள். ஆனால் நடந்தது வேறொன்று.

ஈழத்தைப் போன்றதொரு கொடூரத்தை நிகழ்த்தி வாழ வேண்டிய, சாதிக்க வேண்டிய இளம் யுவதியை படுகொலை செய்திருக்கிறது அரசாங்கம். சாதாரண மீனவக் குடும்பதை சேர்ந்த அவள், தனது சமூகத்தின் அழிவை காண முடியாமல் போராட்டத்தில் முன் நின்றாள்.

ஆனால், அவளை பரலோகம் அனுப்பியிருக்கிறது தமிழக காவல்துறை. அவள் கனவு ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும். அதன் மூலம் அடுத்த தலைமுறையினரின் வாழ்க்கை ஒளிமயமாக இருக்க வேண்டும் என்பது தான். ஆனால் இன்று அவள் உயிரோடு இல்லை. குறி பார்க்கப்பட்டு, சுட்டு வீழ்த்தப்பட்டிருக்கிறாள்.

எல்லையில் இராணுவ வீரர்கள், எதிரிகளை, தீவிரவாதிகளைக் குறி பார்த்துக் சுட்டுத் தள்ளுவதைப் போன்று செய்திருக்கிறார்கள். இந்து கொடூரம் வேறு எந்த நாட்டிலும் நடந்திருக்கிறது. இலங்கையைத் தவிர.

ஆக, தமிழகம் போராட துணியும், இளைய தலைமுறையினருக்கு ஒரு பாடத்தைப் புகட்விட்டிருக்கிறது. இனிமேல் யாரேனும் போராடத் துணிந்தால், போராட்டக் களத்தில் நின்றால் குறி பார்க்கப்பட்டு சுட்டு வீழ்த்தப்படுவீர்கள் என்று.

என்ன செய்யும் தமிழினம். சொந்த அரசும், சொந்த காவல்துறையும் சுட்டுத் தள்ளும் பொழுது, எப்பொழுது நீதியும், நியாயமும் கிடைக்கும்.

இலங்கையில் கர்ப்பிணி ஆசிரியைகளுக்கு புதிய உடை அறிமுகம் : சுற்று நிருபம் ரத்து!!

கர்ப்பிணியாக இருக்கும் ஆசிரியைகளுக்கு கவுண் உடையொன்றை அணிவதற்கான வாய்ப்பை வழங்கும் வகையில் கல்வியமைச்சு விடுத்த சுற்று நிருபம் ரத்துச் செய்யப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சினால் கடந்த வியாழக்கிழமை வௌியிடப்பட்ட புதிய சுற்றுநிருபமொன்றின் பிரகாரம் ஆசிரியைகள் கர்ப்பமாக இருக்கும் காலத்தில் கவுண் போன்ற ஆடையொன்றை அணிவதற்கு வாய்ப்பை வழங்கும் வகையில் சிபாரிசுகள் முன்வைக்கப்பட்டிருந்தன.

எனினும் கல்வியமைச்சின் சுற்றறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ள வழிகாட்டல்களின் பிரகாரம் சிபார்சு செய்யப்பட்டுள்ள கவுணை அணிவதில் சிற்சில சிக்கல்கள் இருப்பதாக பிரதமருடான சந்திப்பொன்றில் பெண் ஆசிரியைகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதனையடுத்து முன்னைய சுற்றறிக்கையை உடனடியாக ரத்துச் செய்து கர்ப்பிணி ஆசிரியைகள் எந்தவொரு வசதியான ஆடையையும் அணியும் வகையில் அவர்களுக்கு அனுமதி வழங்கி புதிய சுற்றறிக்கையொன்றை வௌியிடுமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க கல்வி அமைச்சின் செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.

கைக்குழந்தையுடன் தூங்கிய பெண்ணிற்கு நிகழ்ந்த கொடுமை : இருவரும் பலியான சோகம்!!

இந்தியாவில் உத்தரபிரேதசத்தில் இரவில் தூங்கும் போது பாம்பு கடித்தது தெரியாமல் பாலூட்டியதால் தாய், குழந்தை என இரண்டு பேரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

உத்தரப்பிரேதச மாநிலத்தில் உள்ள மண்ட்லா கிராமத்தை சேர்ந்த பெண் ஒருவர் நேற்று முந்தினம் இரவில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அவரது வீட்டுக்குள் புகுந்த விஷப்பாம்பு ஒன்று அவரை கடித்துள்ளது. இது தெரியாமல் அவர் உறங்கிக் கொண்டிருந்தார்.

இதற்கிடையே, அவரது இரண்டரை வயது குழந்தை பசியால் அழுதுள்ளது. தன்னை பாம்பு கடித்தது என்று தெரியாத அவர் தனது குழந்தைக்கு பால் கொடுத்துள்ளார். இதனால் அவர்களின் இருவரின் உடல்நிலையும் சிறிது நேரத்தில் கவலைக்கிடமான நிலைக்குச் சென்றுது.

இதனை கண்டு அவரது உறவினர்கள் இருவரையும் அங்குள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனார். ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலே இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இது தொடர்பாக அப்பகுதி பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அங்குள்ள மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஸ்ரீதேவியின் மரணத்தில் இருந்து வாழ்க்கையை கற்றுக்கொண்டேன் : பிரபல நடிகர்!!

நடிகை ஸ்ரீதேவியின் மரணத்தில் இருந்து வாழ்க்கையை கற்றுக்கொண்டேன் என தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா கூறியுள்ளார்.அவர் மேலும் கூறுகையில், ஸ்ரீதேவி ஒரு மிகப்பெரிய நடிகை.

அவருடன் கோவிந்தா கோவிந்தா என்ற படத்தில் இணைந்து நடித்துள்ளேன், அவருடன் இணைந்து பணியாற்றது மறக்க முடியாத ஒன்று.இப்போது கூட அவர் இறந்துவிட்டார் என்பதை என்னால் நம்பமுடியவில்லை, அவரது மரணம் எதிர்பாராதது.

அவரது மரணத்திற்கு பின்னர் நான் என்னை சுற்றியிருப்பவர்களை நேசிக்க தொடங்கிவிட்டேன், வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் மகிழ்ச்சியாக கழிக்க விரும்புகிறேன் என கூறியுள்ளார்.

ரகுவரன் மரணத்தில் நடந்தது இனி யாருக்கும் நடக்கக்கூடாது : ரோகினி உருக்கம்!!

ரகுவரன் இந்திய சினிமாவின் ஈடு இணையில்லா நடிகர். இவர் வில்லத்தனத்தை ஈடுக்கட்ட இன்று வரை யாருமில்லை என்பதே உண்மை.இந்நிலையில் இவருடைய மனைவி ரோகினி சமீபத்தில் ஒரு பேட்டியில், மிகவும் உணர்ச்சிவசப்பட்டு சில கருத்துக்களை கூறியுள்ளார்.

இதில், ‘ரகுவரன் மரணத்தின் போது பத்திரிகையாளர்கள் யாரும், வீட்டின் உள் வந்து புகைப்படம் எடுக்கவேண்டாம் என்றேன்.எல்லோரும் சரி என்றார்கள், ஆனால், நான் என் மகனை அழைத்து வந்த போது அனைவரும் உள்ளே வந்துவிட்டார்கள்.

உண்மையாகவே எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது, அதை தொடர்ந்து சில வருடங்கள் நான் எந்த பத்திரிகையிலும் பேசவில்லை.அந்த நேரத்தில் கூட தனிமை இல்லையென்றால் என்ன செய்வது, இனி எந்த ஒரு இடத்திலும் இப்படி நடக்கக்கூடாது ’ என்று ரோகினி கூறியுள்ளார்.

இந்திய அழகிக்காக போட்டி போடும் 60 மணமகன்கள் : யார் அவர் : சுவாரசிய சம்பவம்!!

 

திருமணம் என்பது பெண்ணின் வாழ்வின் இறுதி கட்டமாக பார்க்கப்படுகிறது. தன் மகளை யாருக்கேனும் திருமணம் செய்து கொடுத்து விட்டால் தனது கடமை முடிந்ததாக பெற்றோர்கள் கருதுகின்றனர்.

ஆனால் இப்போது பார்க்க போகும் திருமணம் அப்படி பட்டதல்ல. குறிப்பிடப்பட்ட மணமகளுக்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரே மாப்பிள்ளை பார்த்திருக்கிறார்.அப்படிப்பட்ட அதிர்ஷ்டசாலி பெண்ணை மணக்க நான் நீ என்று போட்டி போட்டுக் கொண்டு 60 மாப்பிள்ளைகள் விண்ணப்பித்திருந்தார்கள்.

தனது ஏழு வயதில் இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு வழி தவறி சென்றிருக்கிறார் ஒரு சிறுமி. அவர் வழி தவறி சென்றாரா அல்லது யாரேனும் கடத்தி சென்றார்களா என்பது பற்றி அவருக்கே சரியாக நினைவில்லை.

இந்தியாவிலிருந்து லாகூருக்கு செல்லும் சம்ஜஹுதா எக்ஸ்பிரஸில் தனியாக அமர்ந்திருந்த இந்த சிறுமியை மீது பாகிஸ்தான் ஹோமில் சேர்த்தனர் சில நல்ல எண்ணம் கொண்ட மனிதர்கள்.

தன்னுடைய அடையாளங்கள் மற்ற விடயங்களை சொல்ல தெரியதால் அவர் அங்கேயே வளர்க்கப்பட்டார்.இருப்பினும் சிறுமி கூறிய சின்ன சின்ன தகவல்களின் படி பார்க்கையில் சிறுமி இந்தியாவிலிருந்து வந்திருக்க வேண்டும் என்பது மட்டும் உறுதியானது.

அதன்பின் இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் வந்த சிறுமியை தாய் தந்தையருடன் இணைத்து வைக்க வேண்டும் என்று அங்கொரு விருப்பம் நிலவியது.

சல்மான்கான் நடித்த பாஜிராங் பைஜான் என்கிற திரைப்படம் மூலம் அங்குள்ளோரிடம் இந்த விருப்பம் தீவிரமாகியிருக்கிறது. கதைப்படி பாகிஸ்தானில் வாழும் இந்திய சிறுமியை அவளது தாயோடு சேர்த்து வைப்பார்கள்.

2015ஆம் ஆண்டு பல முயற்சிகளுக்கு பின் இந்தியா அனுப்பி வைக்கப்பட்ட அந்த சிறுமிதான் தற்போதையை மணமகள். இவருக்கு கீதா என பெயரிடப்பட்டுள்ளது. இவர் காது கேட்காது மற்றும் வாய் பேச முடியாத மாற்று திறனாளி.

இந்தியாவிற்கு வந்தபின் கீதாவை அவரது தாய்தகப்பனோடு சேர்த்து வைக்க பல முயற்சிகள் நடந்தன.இருப்பினும் பல பெற்றோர்களால் கீதாவை அடையாளம் காண முடியவில்லை, கீதாவும் பலரை நிராகரித்திருக்கிறார், இதனால் பெற்றோர் கண்டுபிடிக்கும் முயற்சி நீர்த்து போயிருந்தது.

இந்நிலையில் கீதாவிற்கு மாப்பிள்ளை பார்க்கலாம் என்கிற எண்ணம் உதித்தது. கீதாவிற்கு தகப்பன் ஸ்தானத்தில் இருந்து திருமணம் செய்து வைக்க மத்திய பிரதேச முதலமைச்சரான சிவராஜ் பாட்டிலே தயாராக இருந்தார் என்பதுதான் சிறப்பான விடயம்.

ஆகவே கீதாவை இந்தியாவிற்கு அனுமதித்த வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜும் , மத்தியபிரதேச முதலமைச்சர் சிவராஜ் பாட்டிலும் இணைந்து இந்த திருமணத்தை நடத்த முடிவு செய்தனர்.

தனிப்பட்ட அதிகாரிகளிடம் கீதாவிற்கு மாப்பிள்ளை தேடும் படலம் ஒப்படைக்கப்பட்டது. கீதாவை போலவே மணமகனும் காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத மாற்று திறனாளியாக இருக்க வேண்டும் என்பது மட்டுமே முக்கிய விதியாக இருந்தது.

இது தவிர தனது வலைதள பக்கத்திலும் அமைச்சர் சுஷ்மா கீதாவிற்கான மாப்பிள்ளை தேடல் பற்றிய விவரங்கள் கொடுத்திருந்தார்.மேலும் கீதாவை மணப்பவருக்கு அரசு வேலையும் , வீடும் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனால் ஏராளமானோர் விண்ணப்பித்திருந்த நிலையில் அவற்றில் 60 நபர்களை தேர்வு செய்தனர் .இருப்பினும் கிடைக்க போகும் அரசு வேலைக்காக ஆசைப்பட்டு பலர் விண்ணப்பித்திருந்ததால் அவர்களை நிராகரித்த குழுவினர் இறுதியாக 15 பேரை தேர்வு செய்திருக்கிறது.

இவர்களில் எழுத்தாளர், ராணுவ அதிகாரி, விவசாயி , பொறியாளர் ஆகியோரும் அடங்குவர்.அவர்களில் பெரும்பாலோனோர் ராஜஸ்தான் உத்தர பிரதேசம் , பிஹார், உத்ராஞ்சல், குஜராத் மற்றும் மத்தியபிரதேசத்தை சேர்ந்தவர்கள்.

தற்போது கீதாவின் பாதுகாவலராக மோனிகா எனும் பெண் செயல்பட்டு வருகிறார். கீதாவுக்கென்று ஒரு குடும்பத்தை ஏற்படுத்தி கொடுக்கும் இந்த வேலையானது எங்களுக்கு மிகுந்த மனமகிழ்ச்சியை தருகிறது என்கிறார்.

கீதாவிற்கான வாழ்க்கையை அவரது விருப்பப்படி சந்தோஷமானதாய் அமைத்து கொள்ள அவருக்கு தேவையான உதவிகள் அனைத்தும் செய்யப்படுவதாகவும் குறிப்பிட்டார். இருப்பினும் மணமகனை தேர்வு செய்யும் இறுதி முடிவு கீதாவின் கையில்தான் இருக்கிறது என்றும் கூறினார்.

இரு உள்ளங்கள் இணைகையில் உதடுகளின் பேச்சு தேவையே இல்லை என்பதற்கு நடக்கப்போகும் கீதாவின் திருமணம் ஒரு சாட்சியாக இருக்கக்கூடும்.

நண்பர்களுடன் தோணியில் சென்றவர் தோணி கவிழ்ந்து உயிரிழப்பு!!

மட்டக்களப்பு சந்திவெளி ஆற்றில் தோணி கவிழ்ந்ததில் நீரில் மூழ்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை (25) இரவு இடம்பெற்றுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபர் திகிலிவட்டை கிராமத்தில் நண்பரின் மரண வீட்டிற்கு செல்வதற்காக தனது இரு நண்பர்களுடன் சம்பவதினம் இரவு 10 மணியளவில் சந்திவெளி ஆற்றைக் கடக்க தோணியில் ஏறி சென்றுள்ளார்.

ஆற்றில் சென்று கொண்டிருக்கும் வேளை தோணி கவிழ்ந்ததில் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதுடன் ஏனைய இருவரும் உயிர் தப்பியுள்ளனர்.

சந்திவெளி பிள்ளையார் கோவில் வீதியைச் சேர்ந்த 21 வயதுடைய யோகராசா என்பவரே இவ்வாறு உயிரிழந்தள்ளார்.

இதனையடுத்து காலை சடலம் கரையொதுங்கிய நிலையில் சடலத்தை பொலிசார் மீட்டனர். இச்சம்பவம் தொடர்பாக ஏறாவூர்ப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முகேஷ் அம்பானியின் மனைவி நீத்தா அம்பானியின் மறுபக்கம் : சுவாரசிய காதல் கதை!!

இந்திய தொழிலதிபரும், மிகப்பெரிய கோடீஸ்வரர்களில் ஒருவருமான முகேஷ் அம்பானியின் மனைவி தான் நீத்தா அம்பானி. 55 வயது கடந்த பின்னும் இன்னும் இளமையாகவும் சுறுசுறுப்பாகவும் இவர் இயங்கி வருகிறார்.

மும்பையின் புறநகர் பகுதியில் நடுத்தர குடும்பத்தில் பிறந்த நீத்தா கோடீஸ்வர குடும்பத்தில் மனைவியாக நுழைந்த கதை சுவாரஸ்யமானது.

வணிகவியலில் பட்டம் பெற்ற நீத்தா அம்பானி ஒரு தனியார் பள்ளியில் சிறு குழந்தைகளுக்கான ஆசிரியர் பணியில் வேலைக்கு சேர்ந்தார்.

கலையின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த நீத்தா அம்பானி பரதநாட்டியம் பயின்றவர். பல நாடுகளுக்கும் சென்று தன் பரதத் திறமையை வெளிப்படுத்தி அரங்கேற்றமும் செய்தவர்.

இது போன்ற ஒரு பரத நாட்டிய நிகழ்ச்சியில் தான் முகேஷ் அம்பானியின் தந்தை திருபாய் அம்பானி நீத்தாவை பார்த்திருக்கிறார்.

நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவராக இருந்தாலும் நீத்தா திருபாய் அம்பானியின் தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது சரியாக பேசவில்லை. இதன்பின் இவரது அப்பாவை தொடர்பு கொண்ட திருபாய் அம்பானி அவர் மூலம் நீத்தா வின் சம்மதத்தை கேட்டிருக்கிறார்.

மிக பெரிய தொழிலதிபர்களில் ஒருவரான திருபாய் அம்பானி தன் மகனுக்காக தன்னை பெண் கேட்டு வந்ததை அறிந்த நீத்தா அதிர்ச்சியில் உறைந்து போனார். இருப்பினும் உடனடியாக முடிவு எதையும் அவர் கூறவில்லை.

அதன் பின் முகேஷ் அம்பானியும் நீத்தாவும் பெற்றோர் சம்மதத்துடன் ஆறேழு முறை சந்தித்துள்ளனர். அப்போதும் தங்கள் திருமணம் பற்றிய முடிவுகளை இவர்கள் கூறிக் கொள்ளவில்லை.

ஒருமுறை மும்பையின் பரபரப்பான டிராபிக்கில் சிக்னலுக்காக காத்திருக்கும்போது, அதற்கு மேலும் பொறுக்க முடியாத முகேஷ் அம்பானி நீத்தாவிடம் என்னை திருமணம் செய்து கொள்வாயா என்று ப்ரபோஸ் செய்துள்ளார்.

அப்போது சிக்னலில் பச்சை விளக்கு ஒளிர்ந்தது, பின்னால் இருந்தவர்கள் ஹார்ன் அடித்துக் கொண்டிருந்தனர். முகேஷ் அம்பானியோ நீத்தாவின் பதில் தெரியாமல் தான் வண்டியை நகர்த்த போவதில்லை என அடம்பிடித்துள்ளார்.

அதற்கு பிறகு நீத்தா எஸ், நான் உங்களை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன் என்று கூறிய பின்புதான் காரை நகர்த்தியிருக்கிறார் முகேஷ்.

அதற்கு பின் திருபாய் அம்பானி இவர்களிருவருக்கும் முறைப்படி திருமணம் நடத்தி வைத்தார்.

இப்படித்தான் பெற்றோரால் பார்க்கப்பட்டு முகேஷ் அம்பானியால் காதலிக்கப்பட்டு அதன் பின் அவரின் மனைவியாகியிருக்கிறார் நீத்தா அம்பானி

கோடீஸ்வரர் மனைவி ஆனபின்னும் தனது ஆசிரியர் பணியை தொடர்ந்து செய்து வந்தார் நீத்தா அம்பானி.

ஆசிரியர் பனியின் மீதான நீத்தாவின் காதலை புரிந்து கொண்ட முகேஷ் அம்பானி தன் மனைவிக்கு ஆதரவாக இருந்து அவர் பணிபுரிவதை அனுமதித்தார்.

1987ஆம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் போது நீத்தாவின் மாணவர்களின் பெற்றோர் ஒருவர் நீத்தாவிடம் இதற்கான நுழைவு சீட்டை கொடுத்து கிரிக்கெட் காண வாருங்கள் என்று அழைத்துள்ளனர்.

இதனை வாங்க மறுத்த நீத்தா போட்டியின் போது விஐபிக்களுக்கான பார்வையாளர் பகுதியில் அமர்ந்திருந்த போதுதான் இவர் முகேஷ் அம்பானியின் மனைவி என்பதே அவர்களுக்கு தெரிந்திருக்கிறது. அந்த அளவிற்கு யாரிடமும் தன்னை பற்றி இவர் காட்டிக் கொள்ளாதவர்.

அதன்பின் சில ஆண்டுகளுக்கு பின் தன் ஆசிரியர் பதவியை விட்டு விலகி ரிலையன்ஸ் குழுமத்தில் இணைந்தார் நீத்தா.

தனது மனைவி ஆசிரியராக இருந்ததால் இப்போதெல்லாம் அதிக நேரம் கற்பிப்பதிலேயே செலவழிப்பதாக முகேஷ் அம்பானி விளையாட்டாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இனி வரும் ஆண்டுகளில் இவர்கள் இருவரும் இணைந்து கல்வி துறையில் கால் பதிக்க போவதாகவும் அறிவித்துள்ளார் முகேஷ் அம்பானி.

ஆசிரியையாக பணியாற்றிய போது நீத்தா வாங்கிய சம்பளம் எண்ணூறு ரூபாய் மட்டுமே. ஆனால் இப்போதோ மும்பையின் திருபாய் அம்பானி பள்ளியை இவர் நிர்வகித்து வருகிறார்.

இப்போதும் தவறாமல் ஒவ்வொரு ஆண்டும் தனது காதல் மனைவிக்கு வியக்கத்தக்க பரிசுகள் கொடுத்து அசத்தும் சூப்பர் காதலனாக முகேஷ் அம்பானி இருந்து வருகிறார்.

இவர்களின் காதல் வாழ்க்கைக்கு சாட்சியாக ஆகாஷ், ஆனந்த் என்கிற இரு மகன்களும் மற்றும் இஷா என்கிற மகளும் உள்ளனர்.

இட நெருக்கடி நிறைந்த மும்பை மாநகரில் 27 மாடிகளை கொண்ட ஒரு மாளிகையில் இவர்கள் வசித்து வருகின்றனர். உலகிலேயே மிகப் பெரிய வீடுகளில் இவரது வீடும் ஒன்று. இதன் மதிப்பு ஒரு பில்லியன் டாலர் என்று சொல்லப்படுகிறது.

என்னதான் செங்கல்லாலும் சிமெண்டாலும் கட்டப்பட்ட வீடுகள் மாளிகைகள் ஆனாலும் நீத்தா அம்பானி போன்ற பெண்கள் தான் அதனை அன்பு நிறைந்த இல்லமாக மாற்றி அமைக்கிறார்கள் என்பதுதான் உண்மை.

சூரியனை தொடும் முதல் ஆய்வு விண்கலம்: 11 லட்சம் மனித பெயர்களுடன் பயணம்!!

சூரியனை தொடும் முதல் ஆய்வு விண்கலம், சுமார் 11 லட்சம் மனிதர்களின் பெயர்களை தாங்கிக் கொண்டு பயணிக்க உள்ளதாக நாசா விண்வெளி ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.

சூரிய குடும்பத்தில் மிகப் பெரிய கோளான சூரியன், வாயுப் பொருட்களால் ஆன ஒரு நெருப்புக் கோளமாகும். இதன் விட்டம் 14,00,000 கிலோ மீட்டர் ஆகும்.

சந்திரன், செவ்வாய் மற்றும் விண்வெளி ஆய்வுகளுக்கு இதுவரை விண்கலன்கள் அனுப்பப்பட்டுள்ளன. ஆனால், சூரியனுக்கு விண்கலம் அனுப்பி ஆய்வு செய்யும் முயற்சியில் நாசா இறங்கியுள்ளது.

இதற்காக சூரியனின் சுற்றுப்புற தட்ப வெப்ப நிலையை பொறுத்து, அதனை தாங்கக் கூடிய வகையில் விண்கலம் தயாரிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

Parker Solar எனும் இந்த விண்கலம், 11 லட்சம் மனிதர்களின் பெயர்களை தாங்கி செல்ல உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.

மேலும், இதுவரை சூரியனின் வளிமண்டலத்தில் எந்த விண்கலமும் இதற்கு முன்பு சென்றதை விட, இந்த விண்கலம் சூரியனுக்கு மிக அருகில் சென்று ஆய்வு நடத்தும் என்றும் கூறுகிறது.

இதுகுறித்து விஞ்ஞானி நிக்கோலா ஃபாக்ஸ் கூறுகையில், ‘Parker சூரிய ஆய்வின் மூலம் சூரியன் பற்றிய நமது புரிதலை இன்னும் அதிகமாக்கும். ஒரே நட்சத்திரத்தை நாம் நெருங்கிப் படிக்க முடியும். மேலும், இந்த விண்கலம் பல லட்சம் மக்களின் பெயர்களை சுமந்து செல்கிறது’ என தெரிவித்துள்ளார்.

கடந்த மார்ச் மாதத்தில், ஒரு நட்சத்திரத்தை தொடுவதற்கு மக்கள் தங்கள் பெயர்களை அனுப்ப அழைப்பு விடுக்கப்பட்டனர். 2 மாதங்களில் மொத்தம் 11, 37, 202 பெயர்கள் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது உறுதி செய்யப்பட்டன.

மே 18ஆம் திகதி இந்த பெயர்கள் கொண்ட Memory card பொருத்தப்பட்ட இந்த விண்கலம், ஜூலை மாதம் 31ஆம் திகதி விண்ணில் சூரியனுக்கு அனுப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.