கருணைக்கொலைக்கு அனுமதியுங்கள் : கதறும் இந்தியப் பெண் : காரணம் என்ன?

இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஊனமுற்ற பெண்மணி ஒருவர் தம்மை கருணைக்கொலை செய்துகொள்ள அனுமதிக்க வேண்டும் எனக் கோரி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பில் ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் வசுந்தரா ராஜேவுக்கும் கடிதம் எழுதியுள்ளதாக குறித்த பெண்மணி தெரிவித்துள்ளார்.

கடந்த 2014 ஆம் ஆண்டு குறித்த ஊனமுற்ற பெண்மணியின் தந்தை இறந்த பின்னர் இதுவரை அவருக்கான ஓய்வூதிய தொகை கிடைக்கப்பெறவில்லை என அவர் வருத்தம் தெரிவித்துள்ளார்.

போதிய வருவாய் இல்லாத நிலையில், இன்னும் யாருக்கும் பாரமாக இருக்க விரும்பவில்லை என்ற காரணத்தால் தம்மை கருணைக்கொலை செய்து கொள்ள அனுமதிக்க வேண்டும் என அவர் பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் உருக்கமாக தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் மிகவும் ஊனமுற்ற நோயாளிகளுக்கு அவர்களின் கோரிக்கையை ஆராய்ந்து கருணைக்கொலைக்கு அனுமதி அளிக்கலாம் என இந்திய உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிரித்தானியாவில் இலங்கை இளைஞர் மர்ம நபர்களால் கொலை!!

பிரித்தானிய தலைநகர் லண்டனில் இலங்கை தமிழ் இளைஞர் ஒருவர் மர்ம நபர்களால் தாக்கப்பட்டு கொலையான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த துயர சம்பவம் தென் லண்டனில் அமைந்துள்ள Mitcham பகுதியில் இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

வாழ்வாதாரம் தேடி பிரித்தானியா சென்ற குறித்த இளைஞரின் குடியிருப்புக்கு அருகாமையிலேயே இந்த சம்பவம் நடந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

அத்துடன், உத்தம வில்லன் என கூறப்படும் இந்த இளைஞர் மிகவும் பணிவானவர் மற்றும் அன்பானவர் என அவரது நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உங்கள் பெயரின் முதல் எழுத்தை சொல்லுங்கள் : நீங்கள் யார் என்பதை நாங்கள் சொல்கின்றோம்!!

தமிழில் நமது பெயரை எழுதுவது போல், ஆங்கிலத்திலும் நாம் நம் பெயரை எழுதுவோம்,ஏன் தமிழகத்தில் இன்று முக்கால் வாசி பேருக்கு ஆங்கிலத்தில் தான் தங்கள் கையெழுத்தே இருக்கிறது.

அப்படி ஆங்கிலத்தில் உங்கள் பெயரின் முதல் எழுத்தை,வைத்து நீங்கள் எப்படிப்பட்ட ஆள் என்பதை பார்க்கலாம்,

A : எதிலும் ஆர்வமுடன் செயல்படுவார்கள்,இவர்களின் உடல் அமைப்பு மற்றவர்களை ஈர்க்கும் விதத்தில் இருக்கும்,நல்ல தலைமை பண்பை இவர்கள் பெற்று இருப்பார்கள்,தன் சொந்தக்காலில் நிற்க்க முயற்சிப்பார்கள்.

B : இவர்கள் மீது மற்றவர்கள் வைத்து இருக்கும் அன்பிற்கு என்றும் கடமை பட்டு இருப்பவர்.அசாத்திய தைரிய சாலியாக இருந்தாலும் கூட அன்பு அதிகம் இருக்கும்,பல நேரங்களில் உணர்ச்சி வசப்படுவார்கள்.

C : தன்னுடைய வாயை வைத்து பிழைத்துக் கொள்ளும் திறமை இவர்களுக்கு உண்டு.பல துறைகளை பற்றி தெரிந்து வைத்து இருப்பார்கள்,இவருக்கு இருக்கும் ஒரே பிரச்சனை அதிகம் செலவு செய்வது.

D : இவர்களிடம் தலைமை பண்பு அதிகம் இருக்கும், நிறைய நண்பர்களை கொண்டு இருப்பார்கள்,பாசம் காட்டுவதில் இவர்களை மிஞ்ச முடியாது,குடும்பங்களில் செல்ல பிள்ளையாக வலம் வருவார்.

E : இவர்கள் மென்மையான குணத்தை உடையவர்களாக இருப்பார்கள்,நண்பர்களை எளிதில் பெற்றுவிடும் நபர்களாகவும் இவர்கள் இருப்பார்கள்.பேச்சில் சிறந்தவர்களாகவும் இருப்பார்கள்.

F : இவர்களை சுற்றி இருக்கும் அனைவரும் எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பார்கள்,திட்டமிடுவத்தில் வல்லவர்களாக இருப்பார்கள்,பிறர் நம்பிக்கையின் பாத்திரமாக இருப்பார்கள்.

G : வரலாற்றில் ஆர்வம் அதிகம் உள்ளவர்களாக இருப்பார்கள்,மற்றவர்கள் இவர்களது விஷயத்தில் மூக்கை நுழைப்பதை எப்போதும் விரும்ப மாட்டார்கள்..பயணத்தில் ஆர்வம் உள்ளவர்கள்களாக இருப்பார்கள், ஜாதிகள் இல்லையடி பாப்பா என்ற சொல்லிற்கேற்ப பழகுவார்.

H : பிறரை ஊக்குவிப்பதில் இவர்கள் வல்லவர்களாக இருப்பார்கள்,இவர்களிடம் பேசினால் நமக்கு ஒரு புத்துணர்ச்சியே வந்து விடும்.மற்றவர்களை தன் வார்த்தைகள் மூலம் சிறப்பாக கட்டுப்படுத்துவார்கள்.

I : அழகு சம்பந்தமான வேலைகளில் இவர்கள் இருப்பார்கள்,பியூட்டி பார்லர் என இவர்கள் அழகை பற்றி மட்டுமே சிந்திப்பார்கள்,மேலும் அனைத்தையும் தைரியாமாக எதிர்கொள்வார்கள்.

J : இவர்கள் எப்போதும் விடாமுயற்சியுடன் செயல்படுவார்கள்,ஒன்றை அடைய வேண்டும் என்றால் அதற்காக பல முயற்சிகளை மேற்கொண்டு சாதிப்பார்கள்,பெரும்பாலும் இவர்களின் வாழ்க்கை துணையை இவர்களே தான் தேர்ந்து எடுப்பார்கள்.

K : தன் வாழ்வை அர்தமுள்ளதாக வாழ ஆசைப் படுவார்கள்,மேலும் வெட்கப்படும் குணம் இவர்களிடம் அதிகமாக இருக்கும்,எளிதில் இவரை சீண்டி விட முடியாது,அப்படி இவரை கோபப்படுத்திவிட்டால் இவர்களின் உணர்ச்சிகளுக்கு நீங்கள் பதில் கூறியே ஆகவேண்டும்.

L : தன்னுடைய அன்பை சரியான நபரிடம் வெளிப்படுத்துவதில் இவர்கள் வல்லவர்கள்,வாழ்வில் எப்படியாவது உழைத்து முன்னேற வேண்டும் என்ற எண்ணம் இவர்களுக்கு அதிகம் இருக்கும்.

M : மற்­ற­வர்­க­ளுக்கு அருமையாக அறி­வு­ரைகள் வழங்­கு­வதில் வல்­ல­வர்­க­ளாக திகழ்வார்கள். இவர்­க­ளுக்கு சிறந்த நட்பு வட்டாரங்கள் அமையும். இவர்­களின் வாழ்க்கை துணை இவர்­க­ளிடம் மெய்யை மட்டும் வெளிப்படுத்துவார்.

N : இவர்கள் எந்த ஒரு விஷயத்தையும் முழு­மை­யாக செய்து முடிக்க வேண்டும் என முடிவோடு செயல்படுவார்கள். அனைத்திலும் விடா­மு­யற்­சி­யோடும் செயல்­படும் எண்ணம் இவர்­க­ளிடம் விசாலமாக இருக்கும்.

O : இவர்கள் படிப்பிற்கு அதிகம் முக்கியத்துவம் கொடுக்கும் நபர்களாக இருப்­பார்கள்.இதனால் எழுதுவது, ஆசிரியர், போன்ற வேலைகள் இவர்­க­ளுக்கு ஏற்றதாக இருக்கும்.இவர்கள் ஒழுக்­கத்தை அதிகம் விரும்புவார்கள்.

P : இவர்கள் சடசடவென பேசி­னாலும் மிகுந்த அறிவாற்றலோடு இருப்பார்கள். மற்றவருடன் எப்­படி பழக வேண்டும் என சிறப்பாக தெரிந்து வைத்­து இருப்­பார்கள்.

Q : இவர்களை பேச்­சிலும்,எழுத்­திலும் வெல்வது கடினம். கலை துறையில் தன் பாதயை வகுத்தால் முன்­னேற்றம் வரும். மேலும் பத்­தி­ரிகை துறையில் வெற்றிபெற நிறைய வாய்ப்­புள்­ளது.

R : இவர்கள் ஒரு நல்ல மனி­த­ராக இருப்­பார்கள்.அன்பும் கருணையும் மற்றவர்களுக்கு வாரி வழங்­கி கொண்டே இருப்பார்கள். சவால்கள் என்றால் இவர்களுக்கு ரொம்ப புடிக்கும்.

S : இவர்கள் இவர்களுக்கே ஆன புதிய யுக்தி மூலம் வெற்றியை அடைவார்கள். மற்றவர்களின் கவனம் இவர்­கள் மீது எப்போதும் இருக்க வேண்டும் என்ற நினைப்பு இவர்­க­ளுக்கு நிறைய உண்டு.

T : இவர்கள் எதையும் தைரியமாக எதிர்கொள்ளும் மன­வ­லிமை கொண்டு இருப்­பார்கள். வேக வேகமாக சுறுசுறுப்புடன் செயல்­படும் ஆற்றல் உள்ளவர்களாக இவர்கள் இருப்பார்கள்.

U : இவர்கள் எப்போதும் அறி­வு­பூர்­வ­மான விஷயங்களை பகிர்வார்கள், ஓவியம்,எழுத்து போன்றவற்றில் ஆர்வம் அதிகம் உள்ளவர்களாக இருப்­பார்கள். எழுத்து துறையில் இவர்கள் இருந்தால் எளிதில் முன்னேறி விடுவார்கள்.

V : இவர்கள் நடை­மு­றைக்கு ஏற்­ற­வாறு செயல்படும் குணத்தை பெற்று இருப்­பார்கள். அனை­வ­ரி­டத்­திலும் பாசத்தோடு பழகுவார்கள் மேலும் மென்மையான குணத்தை கொண்­ட­வர்­க­ளாகவும் இவர்கள் இருப்­பார்கள்.

W : இவர்கள் ஒரு புரியாத புதிராகவே இருப்பார்கள்.ஆனால் அன்பிற்கு எப்போதும் பஞ்சமே இல்லாத ஆளாக இருப்பார்கள்.

X : ஆடம்பரமாக வாழும் எண்ணம் உள்ளவர்கள் இவர்கள்,மற்றவர்களை எளிதில் கவர்வார்கள்.

Y : தைரியம் அதிகம் உள்ளவர்களாக இருப்பார்கள்,இக்கட்டான சூழ்நிலையில் துணிச்சலுடன் செயல்படுவார்கள்.

Z : மற்றவர்களை எளிதில் புரிந்து கொள்ளும் இவருக்கு,எங்கு சென்றாலும் கூட்டம் களைகட்டும்

மனிதரின் வயிற்றுக்குள் இப்படியும் இருக்குமா?

மலச்சிக்கல் மனிதனுக்கு பல சிக்கல் என்பது முற்றிலும் உண்மை.. இவற்றின் பதிப்பே இந்த புகைப்படம், ஒருவரின் மலச்சிக்கல் பாதிப்பால் அறுவை சி‌கி‌ச்சை செ‌ய்து எடுக்கப்பட்ட 28 பவுண்ட் எடையுள்ள இந்த சதை கழிவு.வாய் துர்நாற்றத்தில் தொடங்கி இருதய நோய் வரை அனைத்திற்கும் காரணமாகிறது இந்த மலச்சிக்கல்.

காலையில் எழுந்ததும் மலம் போகாவிட்டால், பலருக்கு அந்த நாள் முழுவதும் எந்த வேலையும் ஓடாது. வெறும் வயிற்றில் லிட்டர் கணக்கில் தண்ணீர் குடிப்பார்கள். சூடாக காபி, தேநீர் அருந்துவார்கள். பீடி, சிகரெட் புகைப்பார்கள்.

மலச்சிக்கலுக்கு முக்கியக் காரணி நம் உணவு முறை. கொழுப்பு மிகுந்த மேற்கத்திய உணவு வகைகளை அதிகமாகச் சாப்பிடுவது. பால் சார்ந்த உணவு வகைகளை அதிகமாகச் சாப்பிடுவது, பீட்ஸா, பர்கர், நூடுல்ஸ் போன்ற துரித உணவு வகைகளையும் பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளையும் அதிக அளவில் சாப்பிடுவது, நார்ச்சத்துள்ள உணவு வகைகளைக் குறைவாகச் சாப்பிடுவது, தண்ணீர் குறைவாகக் குடிப்பது. காய்கறி, கீரை, பழங்களைச் சாப்பிடாதது போன்ற தவறான உணவுப் பழக்கங்கள்தான் பலருக்கும் மலச்சிக்கலை உண்டாக்குகின்றன.

அடுத்து, தினமும் மலம் கழிக்கும் முறை சரியாக அமையாவிட்டால், அது நாளடைவில் மலச்சிக்கலுக்கு வழி வகுக்கும். குறிப்பாக, மலம் வருகிற உணர்வு உண்டாகும்போது கழிப்பறை அருகில் இல்லாதது, முக்கிய வேலையில் ஈடுபட்டிருப்பது, பயணத்தில் இருப்பது போன்ற காரணங்களால் மலம் கழிப்பதைத் தவிர்த்தால் காலப்போக்கில் பெருங்குடலில் உள்ள உணர்வு நரம்புகள் செயலிழந்து மலத்தை வெளியேற்ற வேண்டும் என்கிற உணர்வைத் தெரிவிக்காது. இதன் காரணமாக மலச்சிக்கல் ஏற்படும்.

பொதுவாகவே வயது ஆக ஆக மலம் போவது குறையும். முதுமையில் உணவுமுறை மாறுவது, உடற்பயிற்சி குறைவது, தேவையான அளவுக்குத் தண்ணீர் குடிக்காதது மலச்சிக்கலுக்கு வழிவிடும். மூட்டுவலி, இடுப்புவலி உள்ள முதியவர்கள் அடிக்கடி மலம் கழிப்பதைத் தவிர்ப்பதால் அவர்களுக்கு மலச்சிக்கல் வருகிறது.

கர்ப்ப காலத்தில் மசக்கை காரணமாக தண்ணீர் அதிகமாகக் குடிக்காமல் இருப்பது, கருவில் வளரும் குழந்தை தாயின் குடலை அழுத்துவது, ஹார்மோன் மாற்றம், ஆசனவாய் சுருங்குதல் ஆகிய காரணங்களால் கர்ப்பிணிகளுக்குத் தற்காலிகமாக மலச்சிக்கல் உண்டாகலாம்.

குழந்தைகளுக்குத் தாய்ப்பாலை நிறுத்திவிட்டு செயற்கைப் புட்டிப்பால் தரப்படும்போது, மலச்சிக்கல் ஏற்படலாம். கழிப்பறையை எப்படிப் பயன்படுத்துவது என்று தெரியாத குழந்தை களுக்கு ஆரம்பத்தில் மலச்சிக்கல் வரலாம்.

வயதுக்குத் தேவையான உடற்பயிற்சி இல்லாதது, முதுமையின் காரணமாகவோ அல்லது நோயின் காரணமாகவோ படுக்கையில் நீண்டகாலம் படுத்தே இருப்பது போன்றவையும் மலச்சிக்கலை வரவேற்பதுண்டு.

தென்னிலங்கையில் வைரஸ் காய்ச்சலுக்கு 13 பேர் பலி : 600 பேர் பாதிப்பு : மக்கள் அச்சத்தில்!!

தென்னிலங்கையில் பரவி வரும் வைரஸ் காய்ச்சல் காரணமாக சிறு குழந்தைகள் உள்ளிட்ட 13 பேர் பலியாகி 600 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தென் மாகாண சுகாதாரப் பணிப்பாளர் ஜீ. விஜேசூரிய இதனைத் தெரிவித்துள்ளார்.

உயிரிழந்தவர்களில் 12 பேர் சிறுவர்கள் என்றும் மேலதிகமாக ஒரு கர்ப்பிணிப் பெண்ணும் வைரஸ் காய்ச்சலினால் உயிரிழந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் தொடக்கம் தென் மாகாணத்தின் பல்வேறு பிரதேசங்களில் பரவி வரும் குறித்த வைரஸ் காய்ச்சலின் காரணமாக சுகாதாரத்துறையினர் பெரும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர்.

தற்போதைக்கு கராப்பிட்டிய போதனா வைத்தியசாலை, மாத்தறை பொது வைத்தியசாலை, கம்புறுப்பிட்டிய மருத்துவமனை, தங்காலை, வலஸ்முல்லை மருத்துவமனை போன்ற மருத்துவமனைகளில் வைரஸ் நோயாளிகள் இனம் காணப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மாகாண சுகாதாரப் பணிப்பாளர் அறிவித்துள்ளார்.

வீதியில் இறந்து கிடந்த பிச்சைக்காரியிடம் மில்லியன் கணக்கில் பணம்: அதிர்ந்த பொலிசார்!!

நாட்டில் வீதியில் பிச்சையெடுத்து வந்த பெண்மணியிடம் மில்லியன் கணக்கில் பணம் இருந்ததை பார்த்த பொலிசார் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Fatima Othman (52) என்ற பெண்மணி Beirut நகரில் அமர்ந்து சாலைகளில் பிச்சையெடுத்து வந்துள்ளார். Lebanese உள்நாட்டு போரில் இவர் தனது கால் மற்றும் கைகளை இழந்ததால், பிச்சையெடுக்க ஆரம்பித்துள்ளார்,

இந்நிலையில் நேற்று மாரடைப்பு ஏற்பட்டு சாலையில் இறந்து கிடந்துள்ளார். இவரிடம் இருந்த இரண்டு பைகளில் பணம் மற்றும் 3,300 டொலர் வங்கி குறிப்புகள் மேலும் 1.1 மில்லியன் டொலர்கள் சேமிப்பு கணக்கில் வைக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் இருந்துள்ளன,

இதனைப்பார்த்த பொலிசார் அதிர்ச்சியடைந்துள்ளனர், தற்போது இவரது உடலை, வடக்கு லெபனாலில் வசித்து வந்த அவரது உறவினர்களிடம் ஒப்படைத்துள்ளனர். இருப்பினும் இவரது பணத்தினை என்ன செய்யப்போகிர்கள் என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

ஸ்ரீவித்யா என்னுடைய காதலி : மனம் திறந்த கமல்!!

கமல்ஹாசன், கௌதமி விஷயம் இன்னும் அடங்கவில்லை. ஏனெனில் பலரும் ஸ்ருதியை குற்றம் சொல்ல, ஸ்ருதி அதற்கு விளக்கம் அளித்து முற்று புள்ளி வைத்துவிட்டார்.

இந்நிலையில் சில வருடங்களுக்கு முன் கமல் ஒரு பேட்டியில், தனக்கும் மறைந்த நடிகை ஸ்ரீவித்யாவிற்கும் காதல் இருந்ததாக கூறியுள்ளார்.

ஆனால், இதை கமல் ஸ்ரீவித்யா மரணத்திற்கு பிறகே கமல் ஒத்துக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது கூட கமல்-கௌதமி பிரிவிற்கு ஒரு நடிகையின் பெயர் தான் அடிப்படுவதாக கிசுகிசுக்கப்படுகின்றது.

காலி முகத்திடலில் நபர் ஒருவர் தற்கொலை!!

காலி முகத்திடல் கடற் பிரதேசத்தில் நபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். நேற்று முன்தினம் மாலை குறித்த நபர் இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பன்னிப்பிடிய – ருக்மலே பிரதேசத்தினை சேர்ந்த 75 வயதுடைய நபரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார். சடலம் கொழும்பு தேசிய மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்காக வைக்கப்பட்டிருந்தது.

பிரேத பரிசோதனை இடம்பெற்றுள்ளதுடன், கோட்டை பொலிசார் சம்பவம் குறித்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

பரிதாபமாக பலியான பெண் பௌத்த துறவி!!

ஹொரணை, ஹெகலவத்தை பகுதியில் மின்னல் தாக்கியதில் பௌத்த பெண் துறவியொருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார் என அப்பகுதிப் பொலிஸார் தெரிவித்தனர்.

ஹொரணை, ஹெகலவத்தையில் உள்ள தியான நிலையத்தில் 62 வயதுடைய பெண் பௌத்த துறவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் அவரின் உடல் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, நேற்று காலை வயலில் வேலை செய்துகொண்டிருந்த இருவர் குருநாகல் பகுதியில் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஒரே நேரத்தில் ராஜா ராணி தொடரிலிருந்து விலகிய 2 நாயகிகள் : இதுதான் காரணமாம்!!

சஞ்சீவ்-ஆல்யா மானசா நடிப்பில் மிகவும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் ராஜா ராணி. இந்த தொடர் அந்த தொலைக்காட்சிக்கு அதிக டிஆர்பி கொடுத்தது என்று கூட கூறலாம். இந்த நேரத்தில் தொடரில் இரண்டு இளம் நாயகிகள் விலகியுள்ளனர்.

இதுகுறித்து வைஷாலி தெரிவிக்கையில், அவருக்கு ஏதோ உடல்நலத்தில் பிரச்சனை உள்ளதாம். இதனால் மருத்துவர்கள் அவரை 3 மாதங்கள் ஓய்வு எடுக்க கூறியிருக்கிறார்களாம். அதனால் தான் தொடரில் இருந்து விலகியுள்ளாராம்.

பவித்ரா கூறுகையில், ராஜா ராணி எனக்கு பெரிய பெயர் கொடுத்தது. ஆனால் இதே தொலைக்காட்சியில் வேறொரு தொடரில் உடனடியாக நடிக்க வேண்டிய சூழல். அதனால் ராஜா ராணி தொடரில் இருந்து விலக வேண்டியதாகிவிட்டது. சீக்கிரமே புதிய தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் என்னை பார்க்கலாம் என்று கூறியுள்ளார்.

வீதியில் விழுந்து கிடந்த ஆர்யா : காரணம் என்ன தெரியுமா?

ஆர்யா ட்விட்டரில் வெளியிட்ட ஒரு புகைப்படத்தை பார்த்தவர்கள் பயந்துவிட்டனர். எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சி முடிந்து நிம்மதியாக உள்ளார் ஆர்யா. அந்த நிகழ்ச்சி என்னவோ முடிந்துவிட்டது ஆனால் ஆர்யாவையும், அந்த 3 பெண்களையும் பற்றிய பேச்சு மட்டும் இன்னும் அடங்கியபாடு இல்லை.

இந்நிலையில் ஆர்யா ட்வீட் ஒன்று போட்டுள்ளார். ஆர்யாவுக்கு நேரம் கிடைக்கும் போது எல்லாம் சைக்கிளில் எங்காவது கிளம்பிவிடுவார். இந்நிலையில் அவர் 200 கிலோமீட்டர் தூரத்தை சைக்கிளில் கடந்துள்ளார்.

ஆர்யா 200 கிலோமீட்டர் சைக்கிளில் சென்றபோது சாலையோரம் சைக்கிள் ஒரு புறமாகவும் அவர் ஒரு புறமாகவும் கிடந்த புகைப்படத்தை பார்த்தவுடன் பலருக்கும் அதிர்ச்சி தான் ஏற்பட்டது. அதன் பிறகே அவர் சும்மா தான் அப்படி படுத்துக் கிடந்துள்ளார் என்பது தெரிந்தது.

9.38 மணிநேரத்தில் 200 கிலோமீட்டர் தூரத்தை சைக்கிளில் கடப்பது ஒன்றும் சாதாரண விஷயம் அல்ல. அதை செய்துள்ள ஆர்யாவை நிச்சயம் பாராட்டியே ஆக வேண்டும்.

ஆர்யா ஜிம்மில் உடற்பயிற்சி செய்வது, சைக்கிளில் செல்வது உள்ளிட்ட புகைப்படங்களை பார்க்கும் இளம் தலைமுறையினர் தாங்களும் இவ்வாறு செய்து ஃபிட்டாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். பலர் செயலிலும் இறங்குகிறார்கள்.

குறி சொன்ன முதியவரை செருப்பால் அடித்த பொலிஸ் இன்ஸ்பெக்டர் : இதுவா காரணம்!!

தமிழகத்தில் முதியவர் குறி நன்றாக சொல்லாத காரணத்தினால் இன்ஸ்பெக்டர் அவரை செருப்பால் அடித்த சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே எமனேஸ்வரம் காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் முனியசாமி (57). ஆன்மிகத்தில் அதிக நாட்டம் கொண்ட இவர் வயதானவர்களிடம் குறி கேட்பதில் ஆர்வம் கொண்டவர் என கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் பரமக்குடி டவுன் பகுதியில் உள்ள கடையின் வாசலில் இருந்த முதியவரிடம் குறி கேட்டுள்ளார். அப்போது, நான் விரைவில் ஓய்வு பெற போவதால், உரிய பணப்பலன்கள் சிக்கலின்றி கிடைக்குமா என்று கேட்க அதற்கு அந்த முதியவர் அதெல்லாம் ஒன்றும் கிடைக்காது கொஞ்சம் பிரச்சனைகள் வரும் என்று கூற, முனியசாமி ஆத்திரமடைந்துள்ளார்.

இதனால் உடனடியாக அவர் அங்கிருந்த செருப்பை எடுத்து முதியவரை தாக்கியுள்ளார். வலி தாங்க முடியாமல் முதியவர் கதற, அருகில் இருப்பவர்கள் தடுக்க முயன்றுள்ளனர்.

ஆனால் அவர் எஸ்ஐ என்பதால் ஏன் வீண் வம்பு என்று விலகி போயுள்ளனர். இந்த சம்பவத்தைக் கண்ட அங்கிருந்தவர்கள் சிலர் வீடியோவாக எடுத்து சமூகவலைத்தளங்களில் வெளியிட, அது வைரலாக பரவியது.

குறித்த வீடியோவைக் கண்ட பொதுமக்கள் இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இலங்கையில் காணாமல் போன சீனர் 9 நாட்களுக்குப் பின்னர் மீட்பு : அதிர்ச்சி சம்பவம்!!

இலங்கையில் அதிவேக நெடுஞ்சாலையின் பணிக்காக வந்த சீனாவை சேர்ந்த நபர் ஒருவர் கடந்த 12 ஆம் திகதி தியகொட பிரதேசத்தில் காணாமல் போயிருந்தார். 9 நாட்களுக்குப்பின் குழி ஒன்றினுள் இருந்து உயிருடன் மீட்கப்பட்டார்.

கடந்த 11.05.2018 ஆம் திகதி சீனாவில் இருந்து ஹம்பாந்தோட்டை மாத்தறை அதிவேக வீதியின் வேலைக்காக சீனாவில் இருந்து தியகொட பிரதேசத்திற்கு தொழிலாளியாக வந்த நபர் ஒருவர் காணாமல் போயிருந்தார்.

இவ்வாறு காணாமல் போயிருந்தவர் சீனாவை சேர்ந்த 35 வயதுடைய ஜிந்தாவு என்பவராவார். அதன் பின்னர் இவர் இரவு 7 மணியளவில் தான் தங்கியிருந்த வேலைத்தளத்தில் இருந்து. வெளியில் சென்று வருவதாக தன்னோடு தங்கியிருந்தவர்களிடம் கூறிவிட்டு வெளியே சென்றிருக்கிறார்.

அதன் பின்னரே இவர் காணாமல் போனதாக சந்தேகிக்கப்பட்ட தியகொட ஆரணிய ஆற்றுக்கு அருகில் வைத்து இவருடைய தொலைபேசி, பாதணி, சட்டை ஆகியவை கிடைத்தன.

இதனால் இவரை மாத்தறை தியகொட பொலிசாரும் , ராணுவத்தாரும், பொது மக்கள் பலரும் தேடும் பணியில் ஈடுப்பட்டு வந்தநிலையில் எவராலும் தேடிக்கண்டுக்கொள்ள முடியாத நிலை காணப்பட்டது.

9 நாட்களுக்குபின் நேற்று மாலை உடஹபரக்க மஹா பெவுனக அசபுவ வீதியின் பேரகுட்டிய கிராமத்தின் நிமல் என்பவரின் வீட்டுக்கு அருகில் உள்ள பாதுகாக்கப்பட்ட வனாந்தரம் ஒன்றில் உள்ள குழி ஒன்றினுள் இருந்து உயிருடன் மீட்கப்பட்டார்.

ஹேவாதுகே சுனில் என்பவர் தனது இரண்டு பிள்ளைகளுடன் மூங்கில் வெட்ட இப்பிரதேசத்திற்கு வந்தபோது சத்தம் கேட்பதை அவதானித்து இருக்கிறார். அதன் பின்னர்ஒருவர் பாலடைந்த கிணற்றில் கிடப்பதை அவதானித்த விட்டு தியகொட பொலிஸ் நிலையத்திற்கு அறிவித்திருக்கின்றார்.

அதன் பின்னர் பொலிசார் 1990 990 சேவைக்கு அழைத்து குறித்த நபரை கிணற்றில் இருந்து மீட்டு மாத்தறை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

இவரை காப்பாற்றும் பணியில் மாத்தறை வைத்தியசாலையின் வைத்தியர்கள் பாரிய முயற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆனால் 9 நாட்கள் இவர் எந்தவிதமான உணவும் இன்றி குழிக்குள் சிக்கி உயிருடன் மீட்கப்பட்டது அனைவரையும் ஆச்சரியத்திற்குள்ளாக்கியுள்ளது. இருந்தும் இவர் தனது நண்பரை காணதான் வர்த்தக விசா மூலம் இலங்கை வந்துள்ளார்.

கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் அடைமழை : 9 மாவட்டங்களுக்கு அவசர எச்சரிக்கை!!

 

இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலை தொடர்பில் வளிமண்டவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நாட்டின் பல பாகங்களில் 150 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகக் கூடும் என திணைக்களம் இன்று விசேட அறிக்கை ஒன்றை விடுத்துள்ளது.

கொழும்பு, கம்பஹா, பதுளை, நுவரெலியா, குருணாகல், இரத்தினபுரி, கேகாலை மற்றும் களுத்துறை மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலங்களில் 75 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகி உள்ளது.

பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மலைக்கு அருகில் உள்ள பிரதேசத்தில் மண் சரிவு ஏற்படும் ஆபத்து உள்ளதாக கட்டட ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து மக்கள் மிகுந்த அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கை நாளை மாலை 3 வரை அமுலில் இருக்கும் என கட்டடம் ஆராய்ச்சி நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.

மலைகளுக்கு அருகில் உள்ள பிரதேசங்களில் திடீரென நிலத்தில் விரிசல் ஏற்படும் அபாயம், மரங்கள் விழுதல், மின்சார தூண்களில் மின்சார கசிவு போன்ற ஆபத்துக்கள் இருப்பின் உடனடியாக அவ்விடத்தை விட்டு செல்லுமாறு பொது மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த மூன்று பெண்களுக்கு நேர்ந்த கதி!!

திருகோணமலை ரொட்டவெவ பகுதியில் கஞ்சா போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதாக கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து சோதனைகளை மேற்கொள்வதற்கு சென்ற பொலிஸ் சார்ஐன் உட்பட சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தரை தாக்கியதுடன் அவர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்த மூன்று பெண்கள் உட்பட ஆணொருவரையும் இன்று காலை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் அதே இடத்தைச் சேர்ந்த 48, 28, மற்றும் 29, 39 வயதுடையவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் குறித்து தெரியவருவதாவது,

ரொட்டவெவ பகுதியிலுள்ள குறித்த வீட்டில் கஞ்சா போதைப்பொருள் விற்கப்பட்டு வருவதாக பொலிஸாருக்கு வழங்கிய இரகசிய தகவலையடுத்து,

அவ்வீட்டை சோதனை செய்து கஞ்சாவை மீட்ட போது அங்கு சென்ற பொலிஸ் சார்ஐன் உட்பட சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தரொருவரை தாக்கியதாகவும் தெரியவருகின்றது.

குறித்த இருவரும் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தாக்குதல் மற்றும் கடமைக்கு இடையூறு விளைவித்தமை தொடர்பில் இவர்களை கைது செய்துள்ளதாகவும் இன்னுமொரு சந்தேக நபர் தலைமறைவாகியுள்ளதாகவும் மொறவெவ பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்களை இன்று திருகோணமலை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் மொறவெவ பொலிஸார் தெரிவித்தனர்.

வாகன விபத்தில் ஒருவர் பரிதாபமாகப் பலி!!

மட்டக்களப்பு – கொழும்பு பிரதான வீதியில் இன்று மதியம் 1.30 மணியளவில் ஓட்டமாவடி பஸார் பள்ளிவாயலுக்கு முன்பாக இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் காயமடைந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.

ஓட்டமாவடியில் மீன் சந்தையில் இருந்து ஏறாவூர் நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளும், வாழைச்சேனையில் இருந்து ஓட்டமாவடிக்கு சென்ற முச்சக்கர வண்டியும் நேருக்கு நேர் மோதியதில் இவ்விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணையில் இருந்து தெரிய வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்தில் வாழைச்சேனை ஹைறாத் வீதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான முச்சக்கரவண்டி சாரதி ஏ.எல்.எம்.ஹனீபா (வயது 57) என்பவரே உயிரிழந்துள்ளதுடன், ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் மஞ்சுள (வயது 34) என்பவர் காயமடைந்து வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன மேலும் தெரிவித்தார்.