பாடசாலைகளுக்கு பிள்ளைகளை அனுப்பவேண்டாம் : கல்வி அமைச்சு விடுத்துள்ள எச்சரிக்கை!!

தென் மாகாணத்தில் தற்போது பரவிவரும் வைரஸ் நோய் காரணமாக மாகாண கல்வி அமைச்சு பெற்றோர்களுக்கு சிறப்பு அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.

மாணவர்களுக்கு காய்ச்சல் மற்றும் தடிமல் காணப்படுமாயின் , அவர்களை பாடசாலைக்கு அனுப்ப வேண்டாம் என மாகாண கல்வி அமைச்சு பெற்றோருக்கு அறிவித்துள்ளது.

இதேவேளை, பரவிவரும் நோய் தொடர்பில் நாளைய தினம தொற்று நோய் பிரிவு குழுவொன்று குறித்த பகுதிகளில் தளஆய்வினை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தற்போது நாட்டின் பல பாகங்களிலும் மழை பெய்து வருவதால் காய்ச்சல் மற்றும் தொற்று நோய் பரவக் கூடிய நிலையும் ஏற்பட்டுள்ளது.

ஐரோப்பாவில் பலரை வியப்பில் ஆழ்த்திய இலங்கையரின் செயற்பாடு!!

 

ஐரோப்பிய நாடொன்றில் இலங்கையர் ஒருவரின் செயற்பாடு பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இத்தாலியில் விலை மதிப்புள்ள பொருள் ஒன்றை கண்டெடுத்த இலங்கை இளைஞன், அதன் அந்நாட்டு பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார்.

மாத்தறை பிரதேசத்தில் இருந்து இத்தாலி சென்று அங்கு பணி செய்யும் பிரபாத் பின்சர என்ற இளைஞரே இந்த செயலை செய்துள்ளார். குறித்த இளைஞனின் செயற்பாடு குறித்து இத்தாலிய பொலிஸார் மற்றும் ஊடகங்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

ரோம் நகரில் தொழிலுக்காக செல்லும் போது வீதியில் இருந்து 5000 யூரோ பெறுமதியான ரோலெக்ஸ் என்ற கைக்கடிகாரம் ஒன்றை மீட்டுள்ளார். இந்த கடிகாரத்தின் பெறுமதி இலங்கை பணத்தில் சுமார் 10 லட்சம் ரூபாய்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இத்தாலியில் தொழிலுக்காக செல்லும் இலங்கையர்களினால் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத செயற்பாடுகள் குறித்து அதிகம் விமர்சிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் குறித்த இளைஞரின் செயற்பாடு இலங்கைக்கு பெருமை பெற்றுக்கொடுத்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் பாராட்டியுள்ளன.

ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பவர்களை ஏன் எழுப்ப கூடாது என்று சொல்லுவார்கள் தெரியுமா?

நாம் ஆன்மா என்று சொல்லப்படுவதைத் தான் நாம் உயிர், ஆவி என்றெல்லாம் வேறுவேறு பெயர்களில் சொல்லுகிறோம். ஆன்மாவானது நாம் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும்பொழுது நம்முடைய உடலைவிட்டு ஆன்மா வெளி உலகத்தைச் சுற்றி வருவதாகக் கூறப்படுகிறது

நாம் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும்போது நம்முடைய ஆன்மாவானது ஊர் சுற்றிப்பார்ப்பதற்காக நம்முடைய உடலைவிட்டு வெளியே புறப்பட்டுச் செல்லுமாம். அதனால் தான் ஒருவர் தூங்கும்போது அவசரமாக அவரை எழுப்பக்கூடாது என்று சொல்கிறார்களாம்.

நல்ல ஆழ்ந்த தூக்கத்தில் இருப்பவர்களை தட்டி எழுப்பும்போது, உடலைவிட்டு, வெளியுலகத்தில் சுற்றும் ஆன்மாவானது பல லட்சம் கிலோமீட்டர் வேகத்தில் மீண்டும் உடலுக்குள் புகுந்து கொள்ளும் என்று ஆத்ம சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.

அதனால் தான் அடிக்கடி தூக்கத்தில் இருப்பவர்களை அப்படி அடிக்கடி வேகமாகவோ திடீரெனவோ தட்டி எழுப்பினால் அவர்களுக்கு மனநிலை பாதிக்கப்படக்கூடும் என்று மருத்துவர்கள் குறிப்பிடுகிறார்கள்.

நான் ஏன் நிர்வாண மொடலானேன் : ஒரு தமிழ்ப் பெண்ணின் உருக்கமான கதை!!

எனக்கு 5 வயது இருக்கும்போது சென்னையில் இருந்து மும்பைக்கு வந்தேன். எனக்கு இரண்டு சகோதரர்கள் மற்றும் மூன்று சகோதரிகள். மும்பை மஹாலஷ்மி பகுதியில் உள்ள குடிசைப் பகுதியில் நாங்கள் வசித்து வந்தோம்.

என் பெற்றோருக்கு படிப்பறிவு கிடையாது. குப்பை அள்ளுவது போன்ற வேலைகளை செய்து வந்தார்கள். சில நேரங்களில் எங்களை தெருக்களில் பிச்சை எடுக்கவும் அனுப்பி வைத்தனர்.

சில நாட்கள் கழித்து, நாங்கள் தாராவி குடிசைப்பகுதிக்கு இடம்பெயர்ந்தோம். ஏழ்மை எங்களை வாட்டியது. அதன் காரணமாக பள்ளிப் படிப்பை தொடர முடியவில்லை.

பின்பு என் அம்மா, என்னை வீட்டு வேலை செய்ய அனுப்பினார். சாதம், பொறித்த மீன் ஆகியவற்றை சமைத்து மும்பையில் கிராண்ட் சாலை பகுதியில் உள்ள நிஷா தியேட்டருக்கு முன் விற்பனை செய்து கொண்டிருந்தோம். சிறு வயதிலிருந்தே திரைப்படங்கள் மீது எனக்கு ஆர்வம் இருந்தது.

நான் பார்த்த முதல் படம் ஷோலே.

என் தந்தைக்கு குடிப் பழக்கம் உண்டு. குடித்து விட்டு என் தாயை அடிப்பார். நான் வீட்டு வேலை செய்யும் இடத்திற்கு வந்து என்னிடம் அழுது தீர்ப்பார் என் தாய். இதனால், அங்கு என் வேலை போய்விட்டது. பின்னர், நான் இறால் விற்கத் தொடங்கினேன்.

14 வயதில் திருமணம்

என் தாய்க்கு பரிச்சயமானவர் மணி. அவர் அடிக்கடி என் வீட்டிற்கு வருவார். என்னை விட 10-12 வயது மூத்தவர். அவருக்கு என்னை திருமணம் செய்து வைத்த போது எனக்கு 14 வயது .

இந்நிலையில், எனது இரு சகோதரர்களும் வெவ்வேறு சம்பவங்களில் உயிரிழந்தார்கள். தனது குழந்தைகளை விட்டுவிட்டு என் சகோதரி எங்கேயோ சென்று விட்டாள். அதனால், அவர்களின் குழந்தைகளை நான் பார்த்துக் கொண்டேன். என் கணவருக்கு அது பிடிக்காமல் என்னை கொடுமை செய்ய ஆரம்பித்தார்.

என்னிடம் இருந்து பணம் வாங்கி, அதை வைத்து மது அருந்துவார். என் தந்தை மிகுந்த கொடுமை செய்ததால், அதனை தாங்க முடியாமல் என் தாயும் தற்கொலை செய்து கொண்டார்.

என் உடல்தான் தேவைப்பட்டது

என் மூத்த மகனுக்கு 6 வயது இருக்கும் போது, நான் மீண்டும் கர்பமானேன். அப்போது என் கணவர் இறந்துவிட்டார். குழந்தைகளை வளர்க்க வேண்டிய முழு பொறுப்பு என் தலையில் விழுந்தது.

வேலை தேடி அலைந்து கொண்டிருந்த போது, பல ஆண்கள் என்னை தவறான நோக்கத்துடன் பார்த்தனர். எனக்கு வேலைதரத் தயாராக இருந்தார்கள். ஆனால், அவர்களுக்கு என் உடல் தேவைப்பட்டது. நான் அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை.

உன் உடல் நன்றாக இருக்கிறது’

ஜெ.ஜெ கலைக் கல்லூரியில் வேலை செய்து கொண்டிருந்த ராஜம்மா என்ற பெண் எனக்கு அறிமுகமானார். எனக்கு அங்கு வேலை வாங்கித் தருமாறு கேட்டும், அவர் எனக்கு உதவி செய்யவில்லை. தான் அங்கு துப்புரவு பணி செய்வதாக அவர் என்னிடம் கூறியிருந்தார்.

ஒருநாள் ராஜம்மாவை தேடி, அக்கல்லூரிக்கு நான் சென்றிருந்தேன். அவரை அங்கு கண்டுபிடிக்க முடியாமல், ஒரு வகுப்பறை முன்பு தண்ணீர் அருந்த நின்ற போது, அந்த அறைக்குள் எட்டிப் பார்க்க, ராஜம்மாவின் கால்கள் மட்டும் தெரிந்தன.

உள்ளே சென்ற எனக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அங்கு நிர்வாணமாக நின்று கொண்டிருந்தார் ராஜம்மா. “நீ எதற்காக இங்கு வந்தாய்?” என்று என்னைப் பார்த்து கத்தினார் ராஜம்மா.

நான் வேலை தேடி வந்தேன் என்று கூற, அதற்கு அவர், இப்போது நீ இதை பார்த்து விட்டதால், நீயும் இதனை செய்யலாம். பசியால் இறப்பதை விட இந்த வேலை செய்து பிழைத்து கொள்ளலாம் என்று கூறினார். ஆனால், நான் ஒப்புக் கொள்ளவில்லை.

நாங்கள் அங்கு பேசிக் கொண்டிருக்கும் போது, இரண்டு ஆசிரியர்கள் அறைக்குள் வந்து, நான் இந்த வேலை செய்ய முடியுமா என்று கேட்டனர். ராஜம்மா நான் செய்வேன் என்று கூறிவிட்டார்.

நான் சற்று யோசித்தேன். ஆனால் ராஜம்மா என்னிடம், “முதலில் இந்த வேலையை செய். பின்பு யோசி. இங்கு நிர்வாணமாக அமர்ந்தால், நாள் ஒன்றுக்கு 60 ரூபாய் கிடைக்கும். ஆடைகளுடன் அமர்ந்தால் 50 ரூபாய். உன் உடல் நன்றாக இருக்கிறது. அதனால், நல்ல பணம் கிடைக்கும்” என்றார்.

அன்றே நான் என் பணியை தொடங்கினேன். ஒரு மாணவர் நான் அமர மேஜையை கொண்டு வந்தார்.

முதன்முதலில் நிர்வாணமான அனுபவம்

முதலில் தயக்கமாக இருந்தது. அழத் தொடங்கி விட்டேன். அப்போது, என் மகனுக்கு இரண்டு வயது இருக்கும். என் மார்பகங்கள் பெரிதாக இருந்தன. எனக்கு சங்கடமாக இருந்தது. ஆனால், மாணவர்கள் என்னை சமாதானப்படுத்தினர்.

எப்படியோ என் ஆடைகளை களைந்து மேஜையில் அமர்ந்தேன். என் படத்தை மாணவர்கள் வரைந்து கொண்டிருக்கும் போது, என் மார்பகங்களில் இருந்து பால் வடிய ஆரம்பித்தது. அதனை எப்படி துடைப்பது என்று தெரியாமல் விழித்தேன். என் பிரச்சனையை மாணவர்கள் புரிந்து கொண்டனர்.

என்னை அன்று வீட்டுக்கு திரும்புமாறு கூறிய மாணவர்கள், அடுத்த நாள் வருமாறு சொன்னார்கள்.

60 ரூபாயிலிருந்து 100 ரூபாய் வரை

ஜெ. ஜெ கல்லூரியில் ராஜம்மாவிற்கு நல்ல மதிப்பு இருந்தது. நான் புதிதாக சேர்ந்தேன் என்பதால் எனக்கு அந்த மரியாதை கிடைக்கவில்லை.

போகப் போக மாணவர்களுடன் நல்ல பழக்கம் ஏற்பட்டது. அவர்களின் பணி குறித்து நன்கு அறிந்து கொண்டேன். கடந்த 25 ஆண்டுகளாக நான் இந்த வேலையை செய்து வருகிறேன்.

இப்போது, நிர்வாணமாக என்னை ஓவியம் வரைய 1000 ரூபாயும், ஆடைகளுடன் வரைய 400 ரூபாயும் நான் பெறுகிறேன்.

தற்போது, பல கலைஞர்கள் எனக்கு நல்ல மரியாதை அளிக்கின்றனர். என் காலை தொட்டு வணங்குகிறார்கள்.

எனக்கு பல கலைஞர்கள் உதவியும் செய்துள்ளார்கள். தவறான நோக்கத்துடன் என்னை யாரும் பார்ப்பதில்லை. அவ்வப்போது கலைஞர்களின் கண்காட்சிக்கும் நான் செல்வேன்.

Nude திரைப்படத்தின் இயக்குநர் ரவி ஜாதவ் மற்றும் அதில் நடித்த நடிகை கல்யாணி மூலே என்னை பார்க்க வந்தனர். என்னிடம் நிறைய பேசினார்கள். என் வாழ்வின் கதைதான் அந்தத் திரைப்படம். எனக்கு அந்தப் படம் பிடித்திருந்தது. ஆனால், அதன் இறுதிப்பகுதி பிடிக்கவில்லை.

Nude படத்தில் என் கதாப்பாத்திரத்தில் நடித்த கல்யாணி ஜெ.ஜெ. கல்லூரிக்கு ஒரு நிகழ்ச்சிக்காக வந்திருந்தார். அப்போது, கல்யாணியை விட, எனக்கு அதிக கைத்தட்டல் கிடைத்தது. அது என் வாழ்வின் மகிழ்ச்சியான தருணம்.

அத்திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு இருந்தது. நான் அந்தப்படத்துக்காக அதிக பணம் வாங்கினேன் என்று பலரும் நினைத்தனர். ஆனால், அதற்காக நான் பெற்றது ஒரு புடவையும், 20,000 ரூபாய் பணமும்தான். அதுவும் என் கடனை அடைக்க செலவாகிவிட்டது.

என்னை நினைத்து பெருமைப்படும் என் பிள்ளைகள்

நான் ஒரு நிர்வாண மாடலாக பணியாற்றி வந்தேன் என்று என் பிள்ளைகளிடம் கூறியதில்லை. பேராசிரியர்களுக்கு டீ போட்டு கொடுக்கும் பணியும், துப்புரவு பணியும் செய்து வருவதாகத்தான் அவர்களிடம் கூறிவந்தேன். ஆனால், இந்த திரைப்படம் வெளியாவதற்குமுன், படத்தின் கதை என்னுடைய வாழ்க்கையை பற்றியதுதான் என்பதை தெரிவித்தேன்.

முதலில், நான் நகைச்சுவைக்காக கூறுவதாக என் பிள்ளைகள் நினைத்தார்கள். பிறகு என் மீது எரிச்சலைடைந்தார்கள். ஆனால், நல்லபடியாக என்னுடைய சூழலை நான் அவர்களுக்கு புரிய வைத்துவிட்டேன்.

இந்த திரைப்படம் குறித்து ஜெ. ஜெ கல்லூரியில் ஒரு பிரம்மாண்ட நிகழ்வு நடைபெற்றது. அதற்குகூட என்னுடைய குடும்பத்தை நான் அழைக்கவில்லை. நிகழ்ச்சியை தொலைக்காட்சியில்தான் என் குடும்பத்தினர் பார்த்தனர். தங்களது தாய் கெளரவிக்கப்படுவதை தொலைக்காட்சியில் பார்த்து அகம் மகிழ்ந்தார்கள். என்னைப்பற்றி பெருமைப்பட்டார்கள்.

பல ஆண்டுகளாக ஒரு நிர்வாண மாடலாக பணியாற்றி நிறைய பணம் சம்பாதித்த பிறகும், எனக்கென்று ஒரு சொந்த வீடு கூட இல்லை. நான் குர்லா பகுதியில் என்னுடைய மகன்களோடு வசித்து வருகிறேன்.

என்னால் என்னுடைய பிள்ளைகளுக்கு நல்ல கல்வியை கொடுக்க முடியவில்லை. என்னுடைய மகன்கள் சவாலான பணிகளையே செய்து வருகின்றனர். எப்போதும் பணத்தேவை என்பது இருந்துகொண்டே இருக்கிறது.

தற்போது, ஓவிய பள்ளிக்கு விடுமுறை என்பதால் பெண்கள் கழிப்பறை ஒன்றில் மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறேன். இந்த வேலைக்கு, நாள் ஒன்றுக்கு 200 ரூபாயாக வருமானம் கிடைக்கிறது.

நான் சமூகத்திலிருந்து புறக்கணிக்கப்படுவதாக உணர்கிறேன். நான் ஒரு விதவை. எனக்கு விதவைகளுக்கு தரப்படும் உதவித்தொகையும் கிடையாது. எங்களுக்கென்று எந்தவொரு அரசாங்க திட்டங்களுமில்லை.

என்னுடைய உடல் தோற்றத்துடன் இருக்கும்வரை இந்த தொழிலில் இருக்கலாம். அதன்பிறகு நான் என்ன செய்வேன்? இந்த ஒரு கேள்வியே என்னை நிலைகுலைய வைக்கிறது.

– BBC – Tamil-

பிச்சையெடுத்து பணக்காரர் ஆனவர்களின் பட்டியல் : படித்தால் வாய்பிளந்து போவீர்கள்!!

பிச்சைகாரர்கள் என்று சர்வ சாதரணமாக நினைக்கிறோம். ஆனால் அவர்களும் தாங்கள் பிச்சையெடுப்பதில் கிடைக்கும் பணத்தை சிறுக சிறுக சேமித்து வைத்து அதன் மூலம் வீடு கட்டி வசதியான வாழ்க்கை வாழ்பவர்களும் இருக்கிறார்கள்.

பரத் ஜெயின் : பரத் ஜெயின் இந்தியாவை சேர்ந்த பிச்சைகாரர். இவர் படேல் நகரில் 80 இலட்ச ரூபாய் மதிப்பிலான சொந்த வீடு வைத்துள்ளார். மும்பையில் பிச்சை எடுத்து வரும் இவர் மாதம் 75 ஆயிரம் சம்பாதிக்கிறார். இவருக்கு சொந்தமான கடைகளில் இருந்து மட்டும் மாதம் பத்தாயிரம் ரூபாய் வாடகை வருகிறதாம்.

கிருஷ்ண குமார் : இந்தியாவை சேர்ந்த மற்றுமொரு பணக்கார பிச்சைக்காரர் கிருஷ்ணகுமார். இவருக்கு சொந்தமாக ஒரு பிளாட் இருக்கிறது. ஒரு நாளுக்கு இரண்டாயிரம் ரூபாய் சம்பாதிக்கிறார்.

சர்வதியா தேவி : பாட்னாவில் அசோக் சினிமாஸ் அருகே தனக்கென ஒரு சொந்த வீடு வைத்திருக்கிறார் சர்வதியா தேவி எனும் இந்த பாட்டி. பிச்சை எடுப்பது தான் இவரது தொழில் எனிலும், நல்ல அமோகமான வாழ்க்கை தான் வாழ்ந்து வருகிறார். வருடத்திற்கு இன்சூரன்ஸ் ப்ரீமியம் மட்டுமே 36 ஆயிரம் ரூபாய் செலுத்துகிறார்.

ராங்ஃபெங் : மிகவும் ஏழ்மையில் வாடிக் கொண்டிருந்த ராங்ஃபெங் தெருக்களில் தான் படுத்து உறங்கி வந்தார். ஒரு நாள் நூடுல்ஸ் விற்கும் பெண்மணி ஒருவரை சந்தித்தார் ராங்ஃபெங். அந்த பெண்மணி ராங்ஃபெங்கிற்கு உணவு உண்ணவும், பயணிக்கவும் கொஞ்சம் பணம் கொடுத்து உதவினார்.

அதை கொண்டு சிறிதாக தொழில் துவங்கிய ராங்ஃபெங் இப்போது ஒரு பிஸ்னஸ் மேன். தனக்கு பணம் கொடுத்து உதவிய அந்த பெண்மணிக்கு 1,63,000 அமெரிக்க டாலர்களை நன்றிக்கடனாக அளித்துள்ளார் ராங்ஃபெங்.

சம்பாஜி : இவர் மும்பையில் ஒரு பிளாட்டும், சோலாப்பூரில் இரண்டு வீடுகளும் சொந்தமாக வைத்திருக்கிறார். இவர் ஒரு நாளுக்கு ஆயிரம் ரூபாய்க்கும் மேல் சம்பாதிக்கிறார் இது போக வாடகையாகவும் இவருக்கு சிலபல ஆயிரங்கள் மாத வருமானமாக வருகிறது.

பிரித்தானியாவில் இளம் பெண் படுகொலை : வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட கொடுமை!!

பிரித்தானியாவில் இளம் பெண் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் பொலிசார் ஒருவரை கைது செய்துள்ளனர். Middlesbrough நகரை சேர்ந்தவர் ஜெசிகா படேல் (34) இவர் தனது கணவருடன் சேர்ந்து மருந்தகத்தில் வேலை செய்து வந்தார்.

இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை ஜெசிகா தனது வீட்டில் படுகாயங்களுடன் சடலமாக கிடந்துள்ளார். சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த பொலிசார் குற்றவாளியை தேடி வந்த நிலையில் இதில் தொடர்புடைய 36 வயது நபரை தற்போது கைது செய்துள்ளனர்.

அவர் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார். கொலைக்கான காரணம் குறித்து இனி தான் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

யாழில் வாள்களுடன் சென்ற இளைஞர்களுக்கு நேர்ந்த கதி!!

யாழ்ப்பாணம் – கொடிகாமம் பிரதேசத்தில் வைத்து சந்தேகத்தின் பேரில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்ய்பட்டவர்கள் ஆவா குழுவை சேர்ந்தவர்களாக இருக்கலாம் எனவும் பொலிசார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

கொடிகாமம் பிரதேச காவல்துறையினரால் நேற்றைய தினம் வீதித் தடை ஏற்படுத்தப்பட்டு மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கைகளின்போது அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகத்துக்குரியவர்கள் பயணித்த இரண்டு உந்துருளிகளுடன், இரண்டு வாள்கள் உட்பட சில ஆயுதங்களும் காவல்துறை விசேட அதிரடிப் படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட ஆவா குழு உறுப்பினர்கள் 18 முதல் 25 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என விசேட அதிரடிப்படையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கைதுசெய்யப்பட்ட சந்தேகத்துக்குரியவர்கள், கொடிகாமம் நீதவான் முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்படவுள்ளனர்.

17 வயது சிறுமிக்கு 36 வயது ஆணுடன் திருமணம் செய்து வைக்க முயற்சி செய்த பெற்றோர்!!

தமிழகத்தில் 17 வயது சிறுமியை 36 வயது ஆணுடன் திருமணம் செய்து வைக்க பெற்றோர் முயற்சி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் கொந்தகைப் பகுதியைச் சேர்ந்த தம்பதி ரவி-ஜெயபிரதா. இவர்களுக்கு 17-வயதில் மகள் உள்ளார்.  அங்கிருக்கும் பள்ளி ஒன்றில் 11-ஆம் வகுப்பு படித்து வரும் அந்த சிறுமிக்கும், சிறுமியின் உறவினரான பிராகாஷ் (36) என்பவருக்கும் இன்று பெற்றோர் சம்மதத்துடன் சட்ட விரோதமாக திருமணம் நடைபெறவிருந்தது.

இது குறித்த தகவலை சமூக ஆர்வலர்கள் சிலர் மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கும், மாநில மகளிர் ஆணையத்திற்கும், சிலைமான் காவல் நிலையத்திற்கும் புகார் அனுப்பியுள்ளனர்.

அந்த புகாரில் திருமணப் பத்திரிக்கை, ஆதார் நகல் போன்றவைகளை அனுப்பியிருந்ததால், நடைபெற இருந்த சட்ட விரோதத் திருமணத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.

இது தொடர்பாக சமூக நலத்துறை அதிகாரி வசந்தா கூறுகையில், சட்ட விரோதத் திருமணம் நடைபெற இருந்த தகவல் உண்மைதான்.

எங்களுக்குக் கிடைத்த புகாரின் அடிப்படையில் அதை விசாரித்தோம். புகாரில் இருந்த தகவல் உறுதிசெய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, நடைபெற இருந்த திருமணத்தைத் தடுத்து நிறுத்தியதாக கூறியுள்ளார்.

உடல் எடையை குறைக்க முடியாததால் இளைஞர் எடுத்த அதிர்ச்சி முடிவு!!

தமிழகத்தில் உடல் எடையை குறைக்க முடியாத காரணத்தினால் இளைஞர் ஒருவர் தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ஆவடியைச் சேர்ந்தவர் திவாகரன்(29). எம்.சி.ஏ படித்துள்ள இவர் தந்தை உயிரிழந்த காரணத்தினால் தாயுடன் ஆவடியில் வசித்து வருகிறார்.

இந்நிலையில் இவர் உடல் எடை அதிகமானதால், உடல் ரீதியான பாதிப்புகளை சந்தித்து வந்துள்ளார். இதனால் உடல் எடையை குறைப்பதற்கு பல்வேறு முயற்சிகளையும் மேற்கொண்டு வந்துள்ளார்.

இருப்பினும் உடல் எடை குறையாத காரணத்தினால் மனமுடைந்த இவர், இன்று காலை சென்னை நேப்பியர் பாலம் கூவம் ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

அப்போது அவர் குதித்த இடத்தில் ஆழம் குறைவாக இருந்ததால், திவாகரன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்.

இந்த சம்பவத்தை நேரில் கண்டவர்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்க , தீயணைப்பு துறையினர் சுமார் ஒரு மணி நேரம் போராடி அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

டுபாயில் மாட்டி கொண்ட தமிழர் : உருக்கமான வீடியோவை வெளியிட்ட இளம் மனைவி!!

டுபாய்க்கு வேலைக்கு சென்ற கணவரின் நிலை என்னவென்றே தெரியாத நிலையில் மனைவி உருக்கமான வேண்டுகோளை வைத்துள்ளார்.

தமிழ்நாட்டின் தஞ்சாவூரை சேர்ந்த சந்தியா என்ற பெண் உருக்கமான ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறுகையில், என் கணவர் பெயர் நிர்மல், துபாய்க்கு வேலை தேடி ஒரு மாதம் முன்னர் அவர் போனார்.

அங்கு அவருக்கு ஒரு நிறுவனத்தில் வேலை கிடைத்த நிலையில் இரு நாட்களுக்கு முன்னர் என்னிடம் பேசினார். அதன்பின்னர் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதையடுத்து என் கணவர் வேலை செய்யும் நிறுவனத்தின் உரிமையாளர் ரஹ்மானுக்கு போன் செய்தேன்.

அவரிடம் என் கணவர் நிர்மல் குறித்து கேட்ட போது, அவர் தற்கொலை செய்து கொண்டார் என கூறினார். எனக்கு ஒன்றுமே புரியவில்லை, என் கணவரை கண்டுப்பிடிக்க துபாயில் உள்ள தமிழர்கள் உதவ வேண்டும் என உருக்கமான கோரியுள்ளார்.

இளம் பெண்களுடன் இலங்கை அமைச்சர் : இணையத்தில் வெளியான படங்களால் சர்ச்சை!!

 

இலங்கை சுற்றுலா துறை அமைச்சர் ஜோன் அமரதுங்க, இளம் பெண்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களால் சர்ச்சை நிலை ஏற்பட்டுள்ளது. குறித்த புகைப்படங்கள் சில சமூக வலைத்தளங்களில் வெளியாகிய நிலையில் சர்ச்சை ஏற்பட்டதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

எதிர்வரும் ஜுன் மாதம் 16ஆம் திகதி சர்வதேச மட்டத்திலான மொடலிங் போட்டி இலங்கையில் இடம்பெறவுள்ளது. கொழும்பு, கலதாரி ஹோட்டலில் பீ.டீ.என்டர்டென்மன்ட் நிறுவனத்தினால் இந்த போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த போட்டிக்கு Miss Tourism SriLanka to Miss Tourism World 2018, Mister Ocean SriLanka to Mister Ocean International 2018, Global Charity Queen 2018 மற்றும் The Young Beauty of SriLanka 2018 என பெயரிடப்பட்டுள்ளது.

இந்த போட்டிகளுக்கு பயிற்சி வழங்கும் நடவடிக்கைகள் பீ.டீ.என்டர்டென்மன்ட் நிறுவனத்தின் தலைமையில் சுற்றுலா அமைச்சில் நடைபெற்று வருகின்றது.

இறுதி போட்டியில் உள்நாட்டு, வெளிநாட்டு மொடலிங் கலைஞர்கள், நடிகர்கள், நடிகைகள், IPl கிரிக்கெட் வீரர்கள் உட்பட பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.

இதன் பயிற்சியை அவதானிக்க சென்ற அமைச்சர் ஜோன் அமரதுங்க அங்குள்ள மொடலிங் கலைஞர்களுடன் எடுத்து கொண்ட புகைப்படங்கள் சில ஊடகங்களில் வெளியாகியிருந்தன.

புகைப்படங்கள் வெளியானமையினால் சர்ச்சை நிலை ஏற்பட்டது. இந்நிலையில் அதனை தெரிவுபடுத்தும் வகையில் உண்மை நிலை வெளியாகி உள்ளது.

தூக்கில் தொங்கிய நிலையில் காதல் ஜோடியொன்றின் சடலங்கள் மீட்பு!!

வாழைச்சேனையில் காதல் ஜோடியொன்றின் சடலங்கள் தூக்கில் தொங்கிய நிலையில் இன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

திகிலிவெட்டை கிராமத்தின் முருகன் கோயில் வீதியைச் சேர்ந்த தங்கவடிவேல் தினேஷ்குமார் மற்றும் நூலகர் வீதியைச் சேர்ந்த நாகராஜா நிரோஜினி ஆகியோரின் சடலங்களே மீட்கப்பட்டுள்ளன. சம்பவம்பற்றி மேலும் தெரியவருவதாவது,

கோராவெளி – நாவலடி ஊற்று பகுதியில் நீண்ட நேரமாக மோட்டார் சைக்கிளொன்று அநாதரவாக நிறுத்தப்பட்டிருந்ததை நோட்டமிட்ட அந்தக் காட்டுப் பகுதியில் ஆடு மேய்க்கும் பெண்ணொருவர் பிரதேச சபை உறுப்பினருக்கு அழைப்பை ஏற்படுத்தி விபரத்தை தெரிவித்துள்ளார்.

அதன் பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த பிரதேச சபை உறுப்பினரும், கிராமவாசிகளும் ஆடு மேய்க்கும் பெண்ணுமாக இணைந்து பற்றைக் காடுகள் அடர்ந்த பகுதிகளில் தேடுதலை மேற்கொண்டுள்ளனர்.

அப்பொழுது இரு சடலங்கள் தூங்கில் தொங்கியபடி காணப்பட்டுள்ளன. சடலங்களாக மீட்கப்பட்ட இருவரும் காதலர்கள் எனவும், காதலி 5 மாத கர்ப்பிணி எனவும் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில், திருமணம் செய்து கொள்வதற்காக தங்கள் பெற்றோரின் அங்கீகாரம் கிடைக்கப் பெறாத நிலையில் விரக்தியுற்று இருவரும் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

சடலங்கள் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு பிரேத பரிசோதனைகளின் பின் உறவினர்களிடம் கையளிக்கப்படவுள்ளது. இந்த நிலையில் சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

விடுதலைப் புலிகளின் சீருடைக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது தொடர்பில் பொலிஸார் விசாரணை!!

முள்ளிவாய்க்காலில் விடுதலைப் புலிகளின் சீருடைக்கு அஞ்சலி செலுத்தியமை தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். இது குறித்து பொலிஸார் இன்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.

தெற்கில் யுத்தவெற்றியை கொண்டாடும் நோக்குடன் சில இளைஞர்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் கொடிகளை நேற்று நடுவீதியில் போட்டு கால்களினால் மிதித்து எரித்துள்ளனர்.

இந்த நிலையில் அடையாளம் தெரியாத நபர்களினால் நேற்று மாலை முள்ளிவாய்க்கால் பகுதியில் விடுதலைப் புலிகளின் சீருடைக்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

-தமிழ்வின்-

காலணிகளின் மதிப்பு 6.5 கோடி, மிரட்டும் பண்ணை வீடு, சொகுசு வாழ்க்கையால் உலக கவனம் ஈர்த்த சிறுவன்!!

 

துபாயின் பிரபல தொழிலதிபர் அஹ்மத் பெல்ஹாசாவின் மகன் தனது சொகுசு வாழ்க்கையால் உலக மக்களை தன்பக்கம் ஈர்த்துள்ளான்.

தனது தந்தையின் சம்பாதித்து வைத்துள்ள சொத்துக்கள் மூலம் ரஷித் பெல்ஹாசா என்ற இச்சிறுவன் சொர்க்க வாழ்க்கை வாழ்ந்து வருகிறான்.

அதற்கு காரணம், இச்சிறுவன் தனது சமூகவலைதளங்களில் பதிவிடும் புகைப்படங்கள் தான். ஷாருக்கான் தொடங்கி ஜாக்கிசான் வரை எந்த பிரபலங்கள் துபாய்க்கு சென்றாலும் அவர்களோடு புகைப்படம் எடுக்காமல் விடமாட்டான்.

இந்த சிறுவனை இன்ஸ்டா பக்கத்தில் பார்க்கலாம். ஷாருக்கான், சல்மான்கான், ஷில்பா ஷெட்டி, ஜாக்கிசான், மெஸ்ஸி என அனைவருக்கும் ரஷித் பெல்ஹாசா நண்பராவார்.

ரஷித் பெல்ஹாசா பயன்படுத்தும் ஸ்நீக்கர் ஷூ கலக்ஷனின் மதிப்பு மட்டுமே 6.5 கோடி. ஒரு Berari கார் வைத்திருந்தாலே அவர் பெரிய செல்வந்தர். ரஷித் பெல்ஹாசாவிடம் 3 Berari கார்கள் உள்ளன.

ரஷித் பெல்ஹாசாவிற்கு சொந்தமாக ஒரு பண்ணை வீடு இருக்கிறது. உண்மையில் அது ஒரு சுற்றலா தளம் என்றே கூறலாம். அந்த பண்ணை வீட்டை ஒரு வீடியோ எடுத்து வீடியோ டூராக யூடியூப்பில் பதிவு செய்துள்ளார் ரஷித் பெல்ஹாசா.

ரஷித் பெல்ஹாசா பெயரிலேயே தனி மில்க்ஷேக் பானம் இருக்கிறது. இது போக இவரது பெயரில் ஒரு ஸ்கூல் பேக் ஷோரூம் வைத்துள்ளார் தந்தை. அஹ்மத் இது துபாயில் பிரபலமான ஷோரூம்.

இச்சிறுவன் செல்லப்பிராணிகளாக நாய், பூனையை வளர்ப்பதில்லை. மாறாக சிறுத்தையை வளர்த்து வருகிறான்.

Money Kicks” என்ற பெயரில் இன்ஸ்டாகிராமிலும், யூடியூப் சேனலிலும் இயங்கி வருகிறான் ரஷித் பெல்ஹாசா. இவர் பதிவு செய்த பல வீடியோக்கள் லட்சக்கணக்கிலான பார்வையாளர்கள் பார்வையிட்டுள்ளனர்.

இளவரசர் ஹரியின் இதயத்தை கவர்ந்த அனாதைச் சிறுவன் : நெகிழ்ச்சியில் ஆழ்த்திய திருமண நிகழ்வு!!

ஆப்பிரிக்காவில் உள்ள அனாதை சிறுவனுக்கு இளவரசர் ஹரி தனது திருமண அழைப்பிதழை அனுப்பி சிறப்பித்துள்ளார். Lesotho நகரில் செயல்பட்டு வரும் ஹரியின் தொண்டு நிறுவனத்தில் அதிகமான அனாதை குழந்தைகள் உள்ளனர். இந்த குழந்தைகளில் Mutsu Potsane என்ற சிறுவன் ஹரியின் இதயதுக்கு மிகவும் நெருக்கமானவன்.

14 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த சிறுவனை ஹரி சந்தித்துள்ளார். எப்போதும் இளவரசர் சென்றாலும் அவரை அன்போடு அணைத்துக்கொள்வார்.

அதுபோன்று, இச்சிறுவனும் இளவரசர் ஹரி வந்துவிட்டால், அவரை அன்போது சென்று வரவேற்பார். சிறு வயதில் ஹரியை சந்தித்த இச்சிறுவனின் வயது தற்போது 15.

தற்போது, இச்சிறுவன் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டதாக, தொண்டு நிறுவனத்தின் செயலாளர் தெரிவித்துள்ளார். தனக்கு திருமண அழைப்பிதழ் வந்தது குறித்து மிகவும் சந்தோஷம் அடைந்த இச்சிறுவன் திருமணத்திலும் கலந்துகொண்டு சிறப்பித்துள்ளான்.

இச்சிறுவனோடு சேர்ந்து இளவரசர் ஹரி அதிகமாக சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் அவ்வப்போது வைரலானது குறிப்பிடத்தக்கது.

கணவர் கண் எதிரில் மனைவிக்கு நடந்த கொடூரம்!!

தமிழ்நாட்டில் பைக் மீது காரை ஏற்றி பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டுள்ளார்.

வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (32). இவருக்கு சுமதி (28) என்ற மனைவியும், இரு பிள்ளைகளும் உள்ளனர். மணிகண்டனின் தாயார் ராஜம்மாளின் தம்பி ஜெயக்குமார். இவரது மகன் வசந்தகுமார் (31). கோவையில் போர்வெல் லொறி டிரைவராக வேலை செய்யும் வசந்தகுமாருக்கு திருமணம் ஆகவில்லை.

இவர், அடிக்கடி ஊருக்கு வந்து செல்வதோடு, மணிகண்டன் உறவினர் என்பதால் அவர் வீட்டுக்கு அடிக்கடி செல்வார்.

அப்போது மணிகண்டன் மனைவி சுமதிக்கும், வசந்தகுமாருக்கும் இடையில் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. மேலும் வசந்தகுமார், சுமதிக்கு பல்வேறு உதவிகளை செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த தவறான உறவு வேண்டாம் என மணிகண்டனை சுமதி கண்டித்த நிலையில் சில மாதங்களாக கள்ள உறவை சுமதி விட்டுள்ளார்.

இதையடுத்து செலவுக்கு மட்டும் நான் வேண்டுமா? இப்போது நான் தேவையில்லையா என சுமதியிடம் வசந்தகுமார் கேட்டுள்ளார்.

இந்நிலையில் வசந்தகுமாரின் சகோதரிக்கு இன்று திருமணம் நடக்கவிருந்த நிலையில் அதில் கலந்து கொள்ள மணிகண்டனும், சுமதியும் பைக்கில் நேற்று சென்றுள்ளனர்.

அப்போது அந்த வழியாக காரில் வந்த வசந்தகுமார் மணிகண்டனையும், சுமதியையும் சேர்ந்து பார்த்த ஆத்திரத்தில் வேகமாக அவர்கள் மீது காரை மோதியுள்ளார்.

இதில் சம்பவ இடத்திலேயே கணவர் கண்முன்னால் சுமதி உயிரிழந்தார். மணிகண்டன் பலத்த காயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

காரை ஏற்றி கள்ளக்காதலியை கொன்ற வசந்தகுமார் அங்கிருந்து நேராக காவல் நிலையத்திற்கு சென்று சரண் அடைந்தார். வசந்தகுமார் மீது வழக்குப்பதிவு செய்த பொலிசார் அவரை கைது செய்துள்ளனர்.