பிரபல நடிகரின் தாயார் மரணம் : துடித்துப் போன நடிகர்!!

பிரபல தொலைக்காட்சி நடிகர் ராஜீவ் கந்தல்வாலின் அம்மா விஜயலட்சுமி புற்றுநோயால் மரணமடைந்துள்ளார். இது குறித்து ராஜீவ் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவிக்கையில், ஒன்றரை வருடமாக புற்றுநோயுடன் போராடிய என் அம்மா இறந்துவிட்டார்.

நாங்கள் ஒன்றாகப் போராடினோம், நாங்கள் ஒன்றாக நம்பிக்கை வைத்தோம், இப்போது அவர் என்னுள் வாழ்கிறார்.

இந்த போராட்டத்தின் போது எங்களுக்கு ஆதரவாக இருந்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன், அவர்களுக்கு நான் என்றும் நன்றி கடன் பட்டிருப்பேன் என உருக்கத்துடன் பதிவிட்டுள்ளார்.

சுவிஸில் தாதியராக பணியாற்றும் இலங்கைப் பெண்ணுக்கு கிடைத்த கெளரவம்!!

 

இலங்கையில் இருந்து சுவிட்சர்லாந்திற்குச் சென்று பிரபல வைத்தியசாலை ஒன்றில் பணிபுரிந்து வரும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வினோதா ஜெயமோகன் என்பவரின் சேவையைப் பாராட்டி சுவிஸ் அரச பிராந்திய பத்திரிகையான வைனந்தால் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

யாழ். வடமராட்சியை பிறப்பிடமாகக்கொண்ட குறித்த பெண் மட்டக்களப்பு தாதியர் பாடசாலையில் தாதியர் பயிற்சியை நிறைவுசெய்து, அதன் பின்னர் திருகோணமலை பொதுவைத்தியசாலையில் தாதிய உத்தியோகத்தராக பணிபுரிந்துள்ளார்.

இந்நிலையில், சுவிஸ் நாட்டில் pain nurse , ICU துறைகளில் உயர்கல்வியை மேற்கொண்ட இவர் தற்போது சுவிட்சர்லாந்தில் உள்ள பிரபல வைத்தியசாலையான அசான வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப்பிரிவில் சிரேஷ்ட தாதிய உத்தியோகத்தராக பணிபுரிந்து வருகின்றார்.

ஆர்காவோ மாநிலத்தில் உள்ள குறித்த வைத்தியசாலையில் உள்ள அவசர சிகிச்சைப்பிரிவின் தாதிய உத்தியோகத்தராக கடந்த ஆறு ஆண்டுகளாக கடமையாற்றிவருகிறார் .

அங்கு தற்போது Lean Management of hospital என்கிற நவீனத்துவமான திட்டம் அமுல்படுத்தப்பட்டு வருகிறது, இத்திட்டம் சுவிஸில் உள்ள பிரபல இரு வைத்தியசாலைகளிலே அமுலில் உள்ளதுடன் இத்திட்டத்தின் நோக்கம் நோயாளர்களுக்கு மிக உயர்தரமான சேவையை வழங்குவதாகும்.

இந்நிலையில், இத்திட்டம் குறித்து அறிந்து செய்தியை வெளியிடும் முகமாக வைனந்தால் பத்திரிகையாளர் நேரடியாக வைத்தியசாலைக்கு சென்று அவதானித்து இந்த செய்தியை வெளியிட்டுள்ளார்.

அந்த வகையில் அவசரசிகிச்சைப்பிரிவுக்கு பொறுப்பாக கடமையாற்றிய வினோதா ஜெயமோகன் தொடர்பில் அவதானிக்கையில், நோயாளர்களோடு அன்பாகவும், அமைதியாகவும், உயர்மருத்துவ அறிவோடும், உயர்தர மருத்துவ உபகரணங்களை கையாண்டும், நோயாளர்களுக்கு சிகிச்சையளித்து வந்துள்ளார்.

அவரின் சேவையை அவதானித்த செய்தியாளர் அவரை பாராட்டி அவற்றை அப்படியே செய்தியாக வைனந்தால் பத்திரிகையில் வெளியிட்டுள்ளார்.

நடிகர் விஜய் மேல் முட்டையை வீசிய இளம் நடிகர் : காரணம் என்ன தெரியுமா?

நடிகர் விஜய் தற்போது தன்னுடைய அடுத்த படமான தளபதி 62ல் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வருகிறார்.

பிரமாண்டமான பொருட்செலவில் சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். படத்தின் பாதி படப்பிடிப்பு பணிகள் முடிவுற்ற நிலையில் தற்போது சென்னையில் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில், நடிகர் விஜய் நடிப்பில் உருவான மின்சார கண்ணா படப்பிடிப்பு தளத்தில் நடைபெற்ற சுவாரஸ்யமான சம்பவம் ஒன்றை பகிர்ந்து கொண்டிருக்கிறார் அந்த படத்தின் ஜூனியர் ஆர்டிஸ்டாக நடித்த மாஸ்டர் மகேந்திரன். இது குறித்து அவர் கூறியதாவது,

மின்சார கண்ணா படத்தில் ஒரு சமையலறையில் ஒரு சண்டைக்காட்சி வரும். அந்த சண்டையில் நான் விஜய் சார் மீது முட்டையை வீசி அடிப்பேன். அந்த காட்சி, படப்பிடிப்பு முடிந்ததும் “நீ வேணும்னே தான என் மேல முட்டையை வீசுன..? என்று ஜாலியாக கேட்டார். அந்த படத்தில் நடித்த அனுபவம் இப்போதும் மறக்கமடியாத ஒன்றாக உள்ளது என்கிறார் மகேந்திரன்.

ஈழத் தாயின் கனவை நிறைவேற்றிய மகள் : நெகிழ வைக்கும் உண்மைச் சம்பவம்!!

இவர்தான் என் அம்மா சோதி. சிறுவயதில் இருந்தே உலகம் முழுதும் பயணிக்க வேண்டும் என்கிற கனவுகளை சுமந்தபடி யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த ஒரு சாகச மனுஷி என்று தனது அம்மாவை சிந்து அறிமுகம் செய்து வைப்பதிலேயே ஒரு சாகச கதைக்கு தயாராகிறது நம் மனது.

சிந்து பயணங்களை நேசிக்கும் பெண். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரபலமானவர். பயணத்திற்கென ஒரு பக்கம் ஆரம்பித்து அதற்கு சிந்து_பாத் என்று பெயரிட்டு அனைவர் கவனத்தையும் பெயரிலேயே ஈர்த்துள்ளவர் என்றால் மிகையாகாது.

தனது பயணத்திற்கான ஆரம்ப பாதை தனது அம்மாவிடம் இருந்து தொடங்கியதாக இவர் கூறுகிறார். இவரும் இவரது அம்மாவும் இணைந்து தென்னாப்பிரிக்கா பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.

இருவருக்கும் பிடித்த பயணம் இப்போது இன்னமும் ஆழமாக இவர்களின் பந்தத்தை வலுப்படுத்தியிருக்கிறது. சிந்து தனது அம்மாவை பற்றி அந்த கட்டுரையில் கூறியிருப்பதாவது.

வழக்கம் போல அனைத்து தமிழ்பெண்கள் போலவே தனது கனவுகளை மறந்து விட்டு குடும்பத்தை கவனிக்க வேண்டிய நிர்பந்தம் தனது அம்மாவிற்கும் ஏற்பட்டது.

ஆனால் வழக்கமான தமிழ் பெண்கள் போல் இல்லாமல் இவரது அம்மா சோதி தனக்குள் புதைத்து வைத்த பயணக்கனவை தன் மகள்களிடம் விதைத்து வைத்தார். விதைத்து வைத்தது மட்டுமல்லாமல் கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக பக்குவமாய் அந்த விதையை செடியாக வளர்க்கவும் செய்திருக்கிறார்.

தனக்கு கிடைக்காத ஒரு சுதந்திரத்தை மகள்களுக்கு தந்து தன்னால் முடியாத ஒரு விடயத்தை அவர்கள் செய்து முடித்து விட்டு வரும்போது பூரிப்புடன் அவர்களை வரவேற்பதில் முன்னோடியாக திகழ்ந்திருக்கிறார்.

அறிமுகமில்லாத இடங்களுக்கு போகும் வாய்ப்புகள் கிடைத்தால் அதனை விட்டு விட கூடாது என்று தனது அம்மா ஊக்கப்படுத்தியதால் தான் தன்னால் இப்போது இந்த வயதில் உலகம் முழுவதிலும் உள்ள 25 நாடுகளை சுற்றி பார்க்க முடிந்தது என்கிறார் சிந்து.

சிந்துவின் அம்மா அவருடைய கனவுகளை தனது மகள்கள் மூலம் நிறைவேற்றி கொண்டிருந்தாலும் தங்களை இவ்வளவு தூரம் சிறப்பாக மாற்றிய அம்மாவிற்கு தானும் திரும்ப ஏதாவது செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டதாக சிந்து கருதியிருக்கிறார்.

வழக்கமான பொருள்சார்ந்த அல்லது பணம் சார்ந்த பரிசுகளைத் தருவதை விட அவரது அனுபவங்களை இன்னும் அர்த்தமுள்ளதாக ஆக்கும் ஒரு பரிசை கொடுக்க விரும்பியிருக்கிறார்.

அதன்படி அம்மாவை தன்னுடன் இணைந்து பயணிக்க தயார்படுத்தினார். சிந்துவின் எண்ண ஓட்டத்தை புரிந்து கொண்ட சோதி அவருடன் பயணிக்க தயாரானார்.

சிந்து தனது பயணத் திட்டம் பற்றி கூறுகையில், நாங்கள் இருவரும் இதுவரை அறிந்திராத ஒரு கண்டத்திற்கு செல்ல விரும்பினேன், மேலும் மிக குறுகிய மூன்று வார பயணத்திற்குள் எவ்வளவு நிலவழி பயணங்கள் மேற்கொள்ள முடியுமோ அவ்வளவு மேற்கொள்ள வேண்டும் என்று விரும்பினேன்.

எங்களது சுற்றுலாவை ஒரு நிறுவனத்திடம் கொடுத்துவிட்டு நகர்ந்து கொள்ள எனக்கு விருப்பம் இல்லை. வேறு வார்த்தைகளில் சொல்வதானால் எளிதான பயணமாக இது இருந்துவிட கூடாது என்பதில் கவனமாக இருந்தேன். இருந்தாலும் உள்ளுக்குள் எனக்கொரு பயம் இருந்தது.

அம்மாவின் வயது மற்றும் உடல்நிலை இந்த பயணத்தை ஏற்றுக்கொள்ளுமா என்பது குறித்து கவலைப்பட்டாலும் அவரது தீராத தாகம் இந்த பயணத்தை அவர் மேற்கொள்ள உறுதுணை செய்யும் என்று நம்பினேன் என்றார் சிந்து .

ஆகவே ஜோகன்னஸ்பர்க் தொடங்கி கேப் டவுன் வழியாக அவர்கள் பேருந்து பயணத்தை தொடங்கினர். இந்த பயணம் இருவருக்கும் ஒரு புது அனுபவமாக இருக்கும் என்று மட்டுமே நினைத்திருந்த சிந்துவிற்கு மறக்க முடியாத பல ஆச்சர்ய தருணங்களை வழங்கியது அவர்களின் தென்னாபிரிக்க பயணம்.

இருவரும் சேர்ந்து பல அழகான இடங்களை அழகான தருணங்களை பகிர்ந்து கொள்வோம் என்றுதான் நினைத்திருந்தனர், ஆனால் போகப்போக அந்த பயணத்திலேயே மிக ஆழமாக இறங்கி விட்டிருந்தனர்.

இதுவரை டிஸ்கவெரி சேனல்களில் மட்டுமே ரசித்திருந்த மிருகங்களை நேரில் கண்ட தனது அம்மா உற்சாகத்தின் உச்சியில் இருந்ததை சாட்சியாக பார்த்து கொண்டிருந்தார் சிந்து.

குதிரை சவாரி செய்த போது அம்மா காது வரை புன்னகைத்தது அவளது சந்தோஷத்தின் உச்சியை காட்டியது அது மட்டும் இல்லாமல் இறங்கியவுடன் குதிரையோடு அவள் பேசி கொண்டிருந்தது பார்க்கையில் தனது கனவுகள் நனவாகும் நிமிடங்களில் மனிதர்கள் ஒரு குழந்தை பெற்றெடுத்ததைப் போல அவர்கள் உணர்கிறார்கள் அல்லது அவர்கள் குழந்தையை முதன்முறையாக பார்க்கும்போது எப்படி இருக்குமோ அப்படி தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்துகிறார்கள் என்கிறார் சிந்து.

தங்கள் பயணங்களின் முழுவதிலும் சோர்வடையாமல், வனப்பகுதியில் முகாமிடுதல், நீண்ட உயர்ந்த மலை பகுதிகளில் ஏறுதல், குதிரை சவாரி செய்தல், கயாகிங், மலையில் வண்டி ஓட்டுதல், அனைத்தையும் பேக் செய்து ஒவ்வொரு 2 நாட்களுக்கு ஒரு புதிய இடத்திற்கு நகர்தல் போன்றவற்றை உற்சாகமாக செய்த இவரது அம்மா, தனது நீண்ட நேர பேருந்து பயணங்களில் தனக்கு தெரிந்த குறைந்த ஆங்கிலத்தில் அருகில் உள்ளோரிடம் உரையாடிய விதம் அவரது உள் ஒளியின் சாட்சியாக இருந்தது.

அங்குள்ளோர் அனைவருமே அவரை “மம்மா” என்றே செல்லமாக அழைத்துள்ளனர். அந்த அளவிற்கு அவரது பிரியம் மொழியறிவில்லாதவருக்கும் புரியும் வகையில் இருந்தது என்கிறார் சிந்து.

ஏற்கனவே தனது அம்மாவின் மிகப்பெரிய ரசிகையான சிந்து இந்த பயணத்தின் போது அவர் மீது ஒரு வித மரியாதையும் கௌரவமும் தனக்கு வந்ததாக கூறுகிறார்.

தானும் தனது அம்மாவை போன்றே வலிமையான தன்னலமற்ற தைரியமான பெண்மணியாக வாழ வேண்டும் என்று விரும்புவதாக சொல்லும் சிந்து, சமூக/கலாச்சார கட்டுப்பாடுகளுக்கு அப்பால் வெளியில் வந்து பயணிக்கும் தன் அம்மாவின் இந்த பயணம் யாரையும் பாதிக்காத போது தவறேயில்லை என்றும் கூறுகிறார்.

தவிர இந்த பயணத்தின் மூலம் உலகின் ஒரு துளியை மட்டுமே தன் அம்மா கண்டு ரசித்திருந்தாலும் அவரது வயது, உடல்நிலை, குடும்ப பொறுப்பு அனைத்தையும் தாண்டி தனது கனவுகளை நனவாக்கிக் கொண்ட அவரது அசாத்திய துணிச்சல் மதிப்பிற்குரியது மட்டுமல்ல அனைவருக்கும் ஒரு நல்ல உதாரணமும் கூட என்று தனது பயணக் கட்டுரையை முடித்திருக்கிறார் சிந்து.

தனியார் பேருந்து 25 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்து : 10 பேர் படுகாயம்!!

ஹட்டன் – களனிவத்தை தோட்டத்திலிருந்து பயணிகளை ஏற்றி சென்ற தனியார் பேருந்து ஒன்று விபத்திற்குள்ளானதில் 10 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்று களனிவத்தை ஆலயத்திற்கு அருகில் இடம்பெற்றுள்ளது. விபத்தில் படுகாயம் அடைந்தவர்கள் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

களனிவத்தை தோட்டத்தில் இடம்பெற்ற ஆலய நிகழ்வு ஒன்றுக்கு பயணிகளை ஏற்றி சென்ற தனியார் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி சுமார் 25 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளது.

பேருந்து சாரதியின் கவனயீனம் காரணமாகவே இந்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரிவிக்கப்படுகின்றது.

விபத்தில் காயமடைந்த 10பேரில் 6 சிறுவர்களும், 4 ஆண்களும் தொடர்ந்தும் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரியவந்துள்ளது.

மேலும், சம்பவம் தொடர்பில் ஹட்டன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவைச் சேர்ந்த இளைஞன் விபத்தில் பரிதாபமாக பலி!!

முள்ளியவளை நெடுங்கேணி வீதியில் நேற்று முன்தினம் இரவு மண் ஏற்றி சென்ற டிப்பர் வாகனம் ஒன்று விபத்துக்குள்ளாகியதில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்துள்ளதுள்ளதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதி்க்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முள்ளிவளைப்பகுதியில் இருந்து வவுனியா நோக்கி மண் ஏற்றி சென்ற டிப்பர் வாகனம் ஒன்று களிக்காட்டுப்பகுதியில் வீதியில் குறுக்கே நின்ற மாடு ஒன்றின் மீது மோதவிடாமல் விலகிசெல்ல முயற்சித்த போது டிப்பர் வாகனம் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த வாகனத்தை ஓட்டிச்சென்று கொண்டிருந்த சாரதி டிப்பரில் இருந்த மண் மூடப்பட்டு மூச்சு திணறி உயிரிழந்துள்ளார். சம்பவம் குறித்து முள்ளியவளை பொலிஸார் விசாரனைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் டிப்பர் வாகனத்தின் சாரதியான வவுனியா கல்மடு பகுதியினை சேர்ந்த 28 அகவையுடைய விவேகானந்தராசா றொபின்சன் என்பவர் உயிரிழந்துள்ளதுடன் 24 அகவையுடைய கூழாமுறிப்பினை சேர்ந்த செல்வக்குமார் தர்சன் என்ற இளைஞன் காயமடைந்த நிலையில் மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றார். இந்த விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்

இளைஞர்களை கவர்ந்திழுத்த பிரியா வாரியாரின் புதிய தமிழ்ப் பாடல் : வைரலாகும் வீடியோ!!

 

புருவத்தை உயர்த்தி கண் அடித்து இளைஞர்களை சுண்டியிழுத்த பிரியா பிரகாஷ் வாரியர் நடித்து வரும் ஒரு ஆதார் லவ் படத்தில் பாடல் ஒன்று தமிழில் வெளியாகியுள்ளது.

புருவத்தை சற்றே அசைத்து, உலக அளவில் ரசிகர் பலரை பெற்றவர் பிரியா வாரியர். மளையாள திரையுலகில் விரைவில் வெளியாக இருக்கும் காதல் திரைப்படம் ஒரு ஆடர் லவ். அந்த படத்தின் இடம் பெற்றுள்ள ‘மாணிக்ய மலரே பூவி’ பாடலில் புருவத்தை உயர்த்தி கண் அடித்து இளைஞர்களை சுண்டியிழுத்தார் இவர்.

இந்த பாடலை, இன்னமும் யூ-டியூப்பில் இன்னும் வைரலாக்கிக் கொண்டிருக்கிறார்கள் பிரியாவின் ரசிகர்கள்.

இந்நிலையில் தற்போது கண்ணழகி பிரியா வாரியரின் ஒரு ஆதார் லவ் பட பாடல் ஒன்று தமிழில் வெளியாகியுள்ளது. இந்த பாடல் தற்போது சமூக வளைத்தளத்தில் மிகுந்த அளவில் வைரலாகி வருகிறது.

 

பெற்றெடுத்த குழந்தையை காலால் மிதித்து கொலை செய்த கொடூர தாய்!!

சென்னையில் பெற்றெடுத்த குழந்தையை காலால் மிதித்து கொலை செய்த தாயை பொலிசார் கைது செய்துள்ளனர். பிரியங்கா என்ற பெண்மணி தனது 14 வயதிலேயே வேரு என்பரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். வேலு வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

அதன்பிறகு தனியாக வாழ்ந்த பிரியங்கா அதே பகுதியை சேர்ந்த தினேஷ்குமார் என்ற வாலிபரோடு குடும்பம் நடத்தினார். அவர்களுக்கு ஸ்ரீமதி (வயது 3), புஷ்பம் (1½) என்ற பெண் குழந்தைகள் பிறந்தன. இந்நிலையில், அவரது 2-வது கணவர் தினேஷ்குமாரும் வழக்கு ஒன்றில் கைதாகி சிறை சென்றார்.

இந்நிலையில் சிறையில் இருந்து விடுதலையாகி வந்த முதல் கணவர் வேலுவுடன், பிரியங்கா தற்போது சேர்ந்து வாழ்ந்து வந்தார்.

வேலுவும், அவருடன் சேர்ந்து பிரியங்காவும் மது அருந்துவது வழக்கம். நேற்று முன்தினம் இரவு போதையில் இருந்த அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. பிரியங்கா பரிமாறிய பிரியாணி ருசியாக இல்லை என்று வேலு சண்டைபோட்டார்.

அந்த சண்டையால் ஏற்பட்ட கோபத்தில் பிரியங்கா குழந்தை மீது தனது கோபத்தை திசைதிருப்பியுள்ளார். தனது 2-வது குழந்தை புஷ்பத்தை கீழே தள்ளி காலால் மிதித்து அடித்துள்ளார். அதில் குழந்தையின் மூக்கு, வாயில் இருந்து ரத்தம் வடிந்தது,

இதனைத்தொடர்ந்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றும் குழந்தை பரிதாபமாக இறந்துபோனது.

குழந்தையின் உடலில் காயங்கள் இருப்பதாகவும், எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது என்றும், குழந்தையின் சாவில் சந்தேகம் இருப்பதாகவும்மருத்துவர்கள் பொலிசாருக்கு தகவல் கொடுத்தனர்.

நேற்று புஷ்பத்தின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டதில் குழந்தை கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது.

விசாரணையில் குழந்தை புஷ்பத்தை காலால் மிதித்ததை பிரியங்கா ஒப்புக்கொண்டார். இதனால் கொலை வழக்கில் பிரியங்காவும், கொலைக்கு உடந்தையாக இருந்ததாக வேலுவும் நேற்று இரவு கைது செய்யப்பட்டனர்.

மின்னல் வேளைகளில் அவதானம் : நாட்டில் இன்றும் கடும் மழை பெய்யக்கூடும்!!

நாட்டில் தற்போது நிலவிவரும் தென்மேற்குப் பருவமழையுடன் கூடிய காலநிலையால் பெரும்பாலான மாகாணங்களில் கடும் மழை பெய்யக் கூடிய சாத்தியக் கூறுகள் இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இதனால் இடியுடன்கூடிய கடும் மழையை மேல் மாகாணம், தென்மாகாணம், சப்ரகமுவ மாகாணம், மத்திய மாகாணம் மற்றும் வடமேல் மாகாணம் ஆகிய மாகாணங்களில் எதிர் பார்க்கலாமென வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவிக்கையில், பெரும்பாலும் பிற்பகல் 2 மணிக்குப் பிறகு சில இடங்களில் பிற்பகல் 2 மணிக்குப் பிறகு இடியுடன் கூடிய மழையை எதிர்பார்க்க முடியும்.

இதேவேளை, சப்ரகமுவ மாகாணத்தின் சில இடங்களில் அதிகமான அதாவது 150 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக மேல் மாகாணம், மத்திய மாகாணம், ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் 100 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சியை எதிர்பார்க்கலாம். இதேவேளை, இடியுடன் கூடிய மழைபெய்யும் போது வாலுவான காற்று வீசக்கூடும்.

இந்நிலையில் இடி மின்னல் வேளைகளில் பொதுமக்களை மிகவும் அவதானத்துடன் இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

கடலுக்குள் குதித்த இலங்கை இளைஞன் : பதறவைக்கும் புகைப்படங்கள்!!

 

காலி கோட்டையில் இருந்து கடலுக்குள் குதித்த இலங்கை இளைஞர்களுக்கு இந்திய இராணுவ தளபதி பிபின் ராவண் பரிசு வழங்கியுள்ளார்.

இந்திய இராணுவ தளபதி ஜெனரால் பிபின் ராவன் கடந்த நாட்களில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். அங்கு அவர் காலி பிரதேசத்திற்கு விசேட விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

அந்த விஜயத்தின் போது காலி கோட்டையில் இருந்து கடலுக்குள் பாய்ந்த இலங்கை இளைஞர்களின் திறமையை கண்டு அவர் வியந்துள்ளார்.

அத்துடன் அதனை பார்த்து ரசித்தவர் அந்த இளைஞர்களுக்கு பதக்கம் மற்றும் பரிசுகளை வழங்கி வைத்துள்ளார்.

எச்சரிக்கை : மின்னல் தாக்கி இரண்டு பேர் பரிதாபமாகப் பலி!!

பொலன்னறுவை அருகே மின்னல் தாக்கியதில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக பொலிசார் அறிவித்துள்ளனர். இந்தச்சம்பவம் சனிக்கிழமை மாலை பொலன்னறுவையின் வெலிக்கந்தை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

வெலிகந்தை, மகுல்பொக்குணை பிரதேசத்தின் வயல்வெளியில் வேலைசெய்து கொண்டிருந்த நிலையில் மின்னல் தாக்குதல் காரணமாக குறித்த இருவரும் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களில் 17 வயதுச் சிறுவன் ஒருவரும் உள்ளடங்கியுள்ளதுடன் மற்றவர் 36 வயதான நடுத்தர வயதுடையவர் என்று தெரிய வருகின்றது. இருவரும் ஒரே குடும்பமொன்றைச் சேர்ந்தவர்கள் என்று பொலிசார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

புகையிரதத்துடன் மோதுண்டு ஒருவர் பரிதாபமாக பலி!!

அலவ்வ – கபுவர்ன அருகாமையில் புகையிரத வீதியில் புகையிரதத்துடன் மோதுண்டு ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று காலை குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கண்டி தொடக்கம் கொழும்பு நோக்கி பயணித்து கொண்டிருந்த புகையிரதத்துடன் மோதுண்டு உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை காலி – தெவவ பிரதேசத்தில் வாகனம் ஒன்றுடன் மோதுண்டு ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

வெலிமட பிரதேசத்தினை சேர்ந்த 67 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக காவற்துறை குறிப்பிட்டுள்ளது.

முள்ளிவாய்க்காலில் ஒன்பது ஆண்டுகளாய் கதறி அழும் தந்தை : பார்த்தவர்கள் கூட விம்மி அழுத சோகம்!!

முள்ளிவாய்க்கால் படுகொலையின் 9ஆம் ஆண்டு நினைவேந்தல் நேற்றைய தினம் முள்ளிவாய்க்கால் மண்ணில் உணர்பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என பெருமளவானோர் வாகனப்பேரணியாக சென்று முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்டதுடன், வடக்கின் ஐந்து மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டிருந்தனர்.

முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட பொதுமக்களுக்கான பிரதான நினைவுச்சுடரை வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் எடுத்துக்கொடுக்க இறுதிப்போரில் தனது தாய் தந்தையை இழந்த யுவதி ஒருவர் சுடர் ஏற்றினார்.

இதனைத் தொடர்ந்து முள்ளிவாய்க்கால் நினைவிட வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த சுடர்களை உறவுகளை இழந்தவர்கள் ஏற்றி வைத்திருந்தனர்.

உறவுகளை இழந்தவர்கள், கண்ணீர் விட்டும், கதறியும், முள்ளிவாய்க்கால் மண்ணில் அழுது புரண்டு தமது ஆற்ற முடியா துயரை வெளிப்படுத்தினர்.

இதன்போது அங்கு ஒன்றுத்திரண்டிருந்தவர்கள் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது தனது மகனை இழந்த தந்தையொருவரின் கூக்குரல். தனது பிள்ளையை எண்ணி அவர் கதறி அழுதபோது அங்கிருந்தவர்கள் அனைவரும் சேர்ந்து அவர் துயரில் பங்கெடுத்ததுடன், அவரை எண்ணி அனைவரும் அழுதுள்ளனர்.

இறுதி யுத்தத்தில் தனது பிள்ளையை இழந்த குறித்த தந்தை 9 வருட காலமாக மீளாத்துயரில் இருப்பதுடன், தனது பிள்ளையை எண்ணி ஒவ்வொரு கணமும் துடிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

அவர் கதறி அழுத அந்த நிமிடம் அங்குள்ளவர்கள் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியிருந்ததுடன், இரத்தத்தில் குளித்த முள்ளிவாய்க்கால் கண்ணீரில் நனைந்த தருணமாக அது பார்க்கப்பட்டது.

தீவை கேட்டு இலங்கைக்கு நெருக்கடி கொடுக்கும் சீனா!!

நீண்டகால குத்தகைக்கு சீனாவுக்கு வழங்கப்பட்டுள்ள ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு அருகில் நிர்மாணிக்கப்பட்டுள்ள செயற்கை தீவை தமக்கு வழங்காவிட்டால், துறைமுக கொடுக்கல் வாங்கல் சம்பந்தமான அடுத்த தவணை பணத்தை கொடுக்க போவதில்லை என சீன நிறுவனம், இலங்கை அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளதாக தெரியவருகிறது.

500 மில்லியன் அமெரிக்க டொலருக்கு தீவை தமக்கு வழங்கும் தவணை பணத்தை சீன நிறுவனம் நிறுத்தி வைத்துள்ளது.

சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில் மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் 60 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் 110 ஹெக்டேயர் பரப்பளவை கொண்ட இந்த தீவு உருவாக்கப்பட்டது. இந்த தீவின் இன்றைய சந்தை பெறுமதி 500 மில்லியன் அமெரிக்க டொலர்கள்.

இந்த தீவில் சுற்றுலா விடுதிகள், களியாட்ட நிலையங்களை நிர்மாணிப்பது என முன்னர் தீர்மானிக்கப்பட்டிருந்தது. ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு குத்தகைக்கு வழங்கிய பின்னர், இந்த தீவும் உடன்படிக்கைக்கு உட்பட்டது என சீனா கூறி வருகிறது.

இந்த தீவு இலங்கையின் எல்லைக்குரிய தீவு என வர்த்தமானியில் அறிவிக்க வேண்டும். இதற்கு தென் மாகாண சபையின் அனுமதியும் அவசியம்.

எனினும் தீவை வர்த்தமானியில் அறிவித்து, சீனாவுக்கு வழங்குவதை தென் மாகாண சபை கடுமையாக எதிர்த்து வருவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக இந்த தீவு தொடர்பான பிரச்சினை பாரிய நெருக்கடியாக மாறியுள்ளது.

-தமிழ்வின்-

வவுனியா நெடுங்கேணி வீதியில் விபத்து : ஒருவர் பரிதாபமகாக பலி!!

முள்ளியவளை நெடுங்கேணி வீதியில் நேற்று இரவு மண் ஏற்றி சென்ற டிப்பர் வாகனம் ஒன்று விபத்துக்குள்ளாகியதில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்துள்ளதுள்ளதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதி்க்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முள்ளிவளைப்பகுதியில் இருந்து வவுனியா நோக்கி மண் ஏற்றி சென்ற டிப்பர் வாகனம் ஒன்று களிக்காட்டுப்பகுதியில் வீதியில் குறுக்கே நின்ற மாடு ஒன்றின் மீது மோதவிடாமல் விலகிசெல்ல முயற்சித்த போது டிப்பர் வாகனம் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த வாகனத்தை ஓட்டிச்சென்று கொண்டிருந்த சாரதி டிப்பரில் இருந்த மண் மூடப்பட்டு மூச்சு திணறி உயிரிழந்துள்ளார். சம்பவம் குறித்து முள்ளியவளை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் டிப்பர் வாகனத்தின் சாரதியான வவுனியா கல்மடு பகுதியினை சேர்ந்த 28 அகவையுடைய விவேகானந்தராசா றொபின்சன் என்பவர் உயிரிழந்துள்ளதுடன் 24 அகவையுடைய கூழாமுறிப்பினை சேர்ந்த செல்வக்குமார் தர்சன் என்ற இளைஞன் காயமடைந்த நிலையில் மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றார். இந்த விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

வவுனியா வைரவப்புளியங்குளத்தில் சண்டையிடும் மாணவர்கள் : வேடிக்கை பாரக்கும் பொலிசார்!!

வவுனியா வைரவப்புளியங்குளம் யங்ஸ்ரார் விளையாட்டு மைதானத்திற்கு அருகே தினசரி மாலை வேளைகளில் வீதியோரங்களில் பாடசாலை மாணவர்கள் நின்று வீதியில் செல்லும் பெண்களை கிண்டல் செய்வதுடன் வீதியில் புகைப்பிடிக்கின்றனர்.

இவ் விடயம் தொடர்பாக பல தடவை வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டங்களில் தெரியப்படுத்தி வைரவப்புளியங்குளம் யங்ஸ்ரார் விளையாட்டு மைதானத்திற்கு அருகே பொலிஸ் காவல் அரணை அமைக்குமாறு வடமாகாண சபை உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்த நிலையிலும் பொலிஸார் அசமந்தபோக்காக செயற்படுகின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன் வீதியோரத்தில் பாடசாலை மாணவர்கள் சண்டையிடும் காட்சி எமது கமராவில் இவ்வாறு பதிவாகியுள்ளது. பாடசாலை மாணவர்கள் சண்டையிட்ட சமயத்தில் குருமன்காட்டில் நின்ற பொலிஸாரிடம் மேற்குறிப்பிட்ட சம்பவத்தினை தெரிவித்த போதிலும் பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருகை தரவில்லை

பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் இவ்விடயம் தொடர்பாக கருத்து தெரிவிக்கையில், வைரவப்புளியங்குளத்தில் மாலை வேலையில் இளைஞர்கள் வீதியோரங்களில் நின்று சண்டை பிடிப்பது, தலைக்கவசமின்றி வேகமாக மோட்டார் சைக்கிலில் செல்வது என பல்வேறு விதமான செயல்களின் ஈடுபட்டு வருகின்றனர்.

ஊடகங்கள் மூலம் செய்திகள் வெளிவந்தால் அடுத்த நாள் பொலிஸார் காவலில் நிற்பார்கள். பின்னர் நிற்கமாட்டார்கள். பொலிஸார் இளைஞர்களின் செயற்பாட்டிற்கு உடந்தையாக செயற்படுகின்றனரா? என சந்தேகம் எழுந்துள்ளது. பெற்றோர்களே உங்கள் பிள்ளைகள் மீது சற்று அக்கறை செலுத்துங்கள் என தெரிவித்தனர்.