வவுனியாவில் முள்ளிவாய்க்கால் தினத்தில் ஆத்மசாந்தி பூசையும் நெய் தீபம் ஏற்றி வழிபடுதலும்!!

 

வவுனியாவில் முள்ளிவாய்க்காலில் மரணித்த உறவுகளுக்கான ஆத்ம சாந்தி பூசையும், நெய்தீபம் ஏற்றி வழிபடும் நிகழ்வும் நாளையதினம் (18.05.2018) வெள்ளிக்கிழமை காலை 7.30 மணிக்கு குட்செட் வீதி ஸ்ரீ கருமாரி நாகபூசணி அம்மன் ஆலயத்தில் தமிழ் விருட்சம் அமைப்பினர் மற்றும் ஆலய பரிபாலன சபை ஏற்பாட்டில் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ நா.பிரபாகர குருக்கள் தலைமையில் இடம்பெறவுள்ளது.

அனைவரும் எம் உறவுகளுக்காய் பிரார்த்திக்க வருமாறு ஏற்பாட்டு குழுவினர் கேட்டுக்கொண்டனர்.

இதேவேளை நாளையதினம் (18.05.2018) மாலை 5.30 மணிக்கு வவுனியா நகரசபைக்கு முன்பாக அமைந்துள்ள பொங்கு தமிழ் நினைவு தூபியிலும் முள்ளிவாய்க்கால் நினைவு தினம் அனுஸ்டிக்கப்படவுள்ளது.

வவுனியா நகரசபை வாயிலில் அமைக்கப்பட்டிருக்கும் பொங்குதமிழ் நினைவுத்தூபி நீண்டகாலமாக பராமரிப்பற்று காணப்பட்ட நிலையில் புலம்பெயர் உறவுகளின் நிதிப்பங்களிப்பிலும் வவுனியா சமூக ஆர்வலர்களின் ஆதரவுடனும் நினைவுத்தூபி தற்போது நகரசபைத் தலைவர் இ.கௌதமனின் வேண்டுகோளுக்கிணங்க புனரமைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

நான்கு இளைஞர்களை கொன்று தனது வீட்டிலேயே புதைத்த கொடூரன் : அதிர்ச்சிக் காரணம்!!

அமெரிக்காவில் நான்கு இளைஞர்களை கொலை செய்து தனது வீட்டு நிலத்தில் புதைத்த நபருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Pennsylvania மாகாணத்தை சேர்ந்தவர் கோஸ்மோ தினர்டோ (21). கஞ்சா விற்பனை செய்து வந்த கோஸ்மோ அது சம்மந்தமாக கடந்த யூலை மாதம் நான்கு இளைஞர்களை சந்தித்துள்ளார்.

ஜிமி பேட்ரிக், டீன் பினோர்சிரோ, தாமஸ் மியோ, மார்க் ஸ்டுர்கிஸ் என பெயருள்ள அந்த நால்வருடனும் கோஸ்மோவுக்கு திடீரென தகராறு ஏற்பட்ட நிலையில் அவர்களை சுட்டு கொன்றுள்ளார்.

பின்னர் நால்வரின் சடலங்களையும் தீயிட்டு எரித்த கோஸ்மோ அதை உலோக பெட்டியில் போட்டு தனது வீட்டு நிலத்தில் புதைத்துள்ளார்.

இதையடுத்து நால்வரும் காணாமல் போனதாக பொலிசாருக்கு புகார் தரப்பட்ட நிலையில் மோப்ப நாய்கள் உதவியுடன் சடலங்களை பொலிசார் கண்டுப்பிடித்து கோஸ்மோவை கைது செய்தனர்.

கோஸ்மோ மீதான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் அவருக்கு நான்கு ஆயுள் தண்டனை விதித்து தற்போது தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது

332 பேருக்கு பாலியல் தொல்லை : பாதிக்கப்பட்டவர்களுக்கு 500 மில்லியன் டொலர்கள் இழப்பீடு!!

 

அமெரிக்க ஜிம்னாஸ்டிக் அணி மருத்துவரால் பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாக்கப்பட்டவர்களுக்கு 500 மில்லியன் டொலர்கள் இழப்பீடு வழங்க மிச்சிகன் மாகாண பல்கலைக்கழகம் முன்வந்துள்ளது.

அமெரிக்க ஜிம்னாஸ்டிக் அணியின் மருத்துவராக இருந்தவர் லாரி நாஸர். சுமார் 332 பெண்கள் மற்றும் குழந்தைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக லாரி நாஸர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.

இதில் Rachel Denhollander என்ற பெண் முதன்முறையாக தைரியமாக வெளிவந்து லாரி நாஸருக்கு எதிராக குற்றம் சாட்டியதையடுத்து, 156 பெண்கள் அவருக்கு எதிராக சாட்சியம் அளிக்க முன்வந்தனர்.

சிறுவர்களின் ஆபாச புகைப்படங்களை வைத்திருந்ததற்காக அவர் கைது செய்யப்பட்டு 60 ஆண்டுகள் சிறையிலடைக்கப்பட்டுள்ளார். அவர் விடுவிக்கப்பட்டால், பாலியல் துன்புறுத்தலுக்காக 175 ஆண்டுகள் சிறையிலடைக்கப்படுவார்.

மருத்துவரால் துன்புறுத்தப்பட்ட பெண்கள் பலர், பல முறை பல்கலைக்கழக அலுவலர்களிடம் புகார் தெரிவித்தும் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

பின்னர் Rachel Denhollanderஐத் தொடர்ந்து பல பெண்கள் வெளிப்படையாக ஊடகங்களுக்கு பேட்டிகள் அளித்ததையடுத்து பிரச்சினை பூதாகரமாகியது.

இப்போதும்கூட பல பெண்கள் லாரி நாஸர் மீது இருப்பதை விட பல்கலைக்கழகத்தின்மீது அதிக கோபத்தில் இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

பிள்ளைகள் புகாரளித்தபோதே பல்கலைக்கழகம் நடவடிக்கை எடுத்திருந்தால் இவ்வளவு மோசமான நிகழ்வுகள் தவிர்க்கப்பட்டிருக்கும் என்று அவர்கள் ஆதங்கப்படுகின்றனர்.

இந்நிலையில் நடந்த துர்ச்சம்பவங்களுக்கு பொறுப்பேற்று மிச்சிகன் பல்கலைக்கழகம் பாதிக்கப்பட்டவர்களுக்கு 500 மில்லியன் டொலர்கள் இழப்பீடு வழங்க முன்வந்துள்ளது.

இந்த தொகையில் 425 மில்லியன் டொலர்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட உள்ளது.

மீதமுள்ள 75 மில்லியன் டொலர்கள் தொகை எதிர் காலத்தில் ஏதேனும் புகார்கள் வந்தால் அந்த சமயத்தில் இழப்பீடு வழங்குவதற்காக வைக்கப்பட்டுள்ளது.

தற்கொலைக்கு முயன்றவரைக் காப்பாற்றிய இலங்கைத் தமிழருக்கு கிடைத்த கௌரவம்!!

கனடாவில் ரயிலில் சென்றுகொண்டிருந்த இலங்கைத் தமிழர் ஒருவர் பாலத்திலிருந்து குதித்து தற்கொலை செய்ய முயன்ற கனடியரின் உயிரை காப்பற்றிய நெகிழ்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.

கனடாவின் ஒண்டாரியோவிலுள்ள Ryerson பல்கலைக்கழக மாணவர் Aeron Soosaipillai(20), கடந்த சில வாரங்களுக்கு முன் வழக்கம்போல ரயிலில் பயணித்துக்கொண்டிருக்கும்போது ரயில் பாலத்திலிருந்து சாலையையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டார்.

அவரைக் கண்டதும் Aeronக்கு ஏதோ தவறாகப் பட்டது. உடனடியாக ரயிலை விட்டு இறங்கிய Aeron அந்த மனிதரிடம் பேச்சுக் கொடுத்தவாறே அவரை நோக்கி வேகமாகச் சென்றார்.

Aeronஇடம் பேச விரும்பாத அந்த மனிதர் அவரை திட்டிக் கொண்டே பாலத்தின் மையப்பகுதியை நோக்கி நடக்க ஆரம்பித்தார். மிகவும் உணர்ச்சி வசப்பட்ட நிலையில் கவலையும் கோபமும் முகத்தில் தோன்ற பாலத்தின் ஓரத்திற்கே சென்றுவிட்ட அந்த மனிதரிடம் தொடர்ந்து பேச்சுக் கொடுத்தார் Aeron.

“எனக்கும் நிறைய பிரச்சினைகள் இருக்கிறது, நாம் இருவரும் சேர்ந்து இந்தப் பிரச்சினையை பேசித் தீர்த்துக்கொள்ளலாம்” என்று Aeron சொல்லிக்கொண்டிருக்கும்போதே பாலத்தின் கீழே பொலிசார் போக்குவரத்தை தடை செய்யத் தொடங்கியிருந்தனர்.

அந்த நேரத்தில் அந்த மனிதன் நெஞ்சை நெகிழச்செய்யும் ஒரு காரியத்தைச் செய்தார். தன்னுடைய குழந்தையின் ஷூவை Aeronஇடம் கொடுத்த அந்த மனிதர் எனக்காக ஒரு உதவி மட்டும் செய், என் மகனிடம் நான் அவனை நேசிக்கிறேன் என்று சொல்லிவிடு என்றார்.

என்னால் அதைச் செய்ய முடியாது, நீங்கள்தான் உங்கள் மகனிடம் அதைச் சொல்ல வேண்டும், அதுவும் உங்கள் வாழ்நாளின் ஒவ்வொரு தினமும் நீங்கள் அப்படிச் சொல வேண்டும் என்றிருக்கிறார் Aeron.

அந்த வார்த்தையைக் கேட்டதும் அந்த மனிதர் அப்படியே நின்று விட்டார். டக்கென்று அவரைப் பிடித்துக் கொண்ட Aeron, அவரை பாதுகாப்பான ஒரு இடத்திற்கு அழைத்துச் செல்ல இருவரும் அமர்ந்தார்கள்.

அந்த மனிதர் அழ, Aeron அழ, ரயில் பாதையைக் காட்டி “இனி நீங்கள் அங்கேசெல்லக்கூடாது, சரியா? இனிமேல் எல்லாம் நன்றாகத்தான் நடக்கும்” என்று கூற வாழ்வை முடிக்க வந்த மனிதர் புது வாழ்வைத் துவங்கும் முடிவுடன் புறப்பட்டார்.

ரயில்வே அதிகாரிகளும் பொலிசாரும் அவரை பாதுகாப்பாக அழைத்துச் செல்ல எதுவும் நடக்காததுபோல் தனது வேலையைப் பார்க்கப் புறப்பட்டார் Aeron.

ஆனால் கனடா அரசு அவரை அப்படியே விட்டு விடவில்லை. Aeron போன்ற மனிதர்கள் உலகத்திற்கு தேவை என்று பாராட்டிய Metrolinxஇன் செய்தித் தொடர்பாளர் Anne Marie Aikins, அவரை ஹீரோ என்று வர்ணித்தார். Aeronக்கு பாதுகாப்பு விருதை அளித்து Metrolinx கௌரவித்துள்ளது.

பீடியை வைத்து மாணவர்கள் செய்த மோசமான செயல்!!

திருகோணமலை – ரொட்டவெவ பகுதியில் பாடசாலை மாணவர்களுக்கு பீடியை விற்பனை செய்த கடை உரிமையாளரை பொலிஸார் கடுமையாக எச்சரித்துள்ளனர். குறித்த சம்பவம் நேற்று மாலை வேளையில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

திருகோணமலை – ரொட்டவெவ பகுதியிலுள்ள வயோதிபர் ஒருவரின் கடையொன்றில் 10 ரூபாய்க்கு பீடி வாங்கிச் சென்ற 13 வயதுடைய மாணவர்கள், பாடசாலை வளாகத்தில் வைத்து அந்த பீடியை குடித்துக்கொண்டிருக்கும் போது பொலிஸாரிடம் வசமாக சிக்கியுள்ளனர்.

மாணவர்கள் இருவரும் பீடியை வாங்கிக்கொண்டு சென்று கஞ்சாவை பீடிக்குள் கலந்து குடித்துள்ளமை தெரியவந்துள்ளது.

இதனையடுத்து மாணவர்களிடம் பீடி எங்கிருந்து பெறப்பட்டது என விசாரணை செய்த போது வயோதிபரின் கடையில் வாங்கியதாக மாணவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதனையடுத்து கடை உரிமையாளரை ரொட்டவெவ பொலிஸ் நிலையத்திற்கு வரவழைத்து சிறுவர்களுக்கு இனிவரும் காலங்களில் பீடி மற்றும் சிகரெட் விற்றமை தெரியவந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை செய்து விடுவித்துள்ளனர்.

இதேவேளை மாணவர்களும் கடுமையாக எச்சரிக்கப்பட்டு பெற்றோருடன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

வவுனியாவை வந்தடைந்த முள்ளிவாய்க்கால் நினைவுச் சுடர் பவனி!!

 

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை வாரத்தில் தமிழினப் படுகொலையில் உயிர் நீத்தவர்களை நினைவு கூரும் வகையில் ‘தீபமேந்திய ஊர்தி பவனி’ இன்று (17.05.2018) மதியம் 12 மணியளவில் வவுனியாவை வந்தடைந்தது.

வல்வெட்டித்துறையில் மண்ணிலிருந்து பவனியை ஆரம்பித்த ஊர்தி யாழ்ப்பாணம் , கிளிநொச்சி , மாங்குளம் , ஒமந்தையூடாக வவுனியா நகரை வந்தடைந்தது.

இளைஞர்களால் ஒழுகமைத்து நடாத்தப்படும் தீப ஊர்திப் பவனி இன்று மாலை மன்னார் நகரை சென்றடைந்து மன்னார் – யாழ்ப்பாணம் பிரதான வீதியுடாக மல்லாவி – மாங்குளம் – ஒட்டுசுட்டான் ஊடாக நாளைய தினம் மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முற்றத்தைச் சென்றடைகிறது.

தமிழினப் படுகொலையில் உயிர்நீத்த மக்களுக்கு இந்த ஊர்தியில் அஞ்சலி செலுத்துமாறு மக்களிடம் ஏற்பாட்டாளர்கள் கேட்டுள்ளனர்.

சூப்பர் சிங்கர் பிரகதிக்கும், அசோக் செல்வனுக்கும் காதல், விரைவில் திருமணம்?

 

நடிகர் அசோக் செல்வனும், சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி புகழ் பிரகதியும் காதலிப்பதாக சமூக வலைதளங்களில் பேச்சாக கிடக்கிறது. சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமான பிரகதி நடிகர் அசோக் செல்வனின் பிறந்தநாள் அன்று தாங்கள் இருவரும் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டார்.

அவர்கள் நெருக்கமாக இருந்த அந்த புகைப்படத்தை பார்த்தவர்கள் அவர்கள் காதலிக்கிறார்கள் என்ற முடிவுக்கு வந்தனர். பிரகதி அசோக், பிரகதி காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் தற்போது மீண்டும் பேச்சு கிளம்பியுள்ளது. அவர்கள் இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வலம் வருகின்றது.

அசோக் செல்வன், பிரகதியின் புகைப்படங்களை பார்த்த சிங்கிள்ஸ் கடுப்பாகியுள்ளனர். ஜோடி சூப்பர் என்று சிலரும், இந்த ஆளுக்கு எப்படி பிரகதி செட்டாச்சு என்று சிலரும் பேசிக் கொள்கிறார்கள்.

காதல் சமூக வலைதளங்கள் பக்கம் முழுவதும் தன்னுடைய காதல் பேச்சாக இருப்பது அசோக் செல்வனுக்கு தெரியாமல் இருக்காது. இருப்பினும் அவர் இது குறித்து கண்டுகொள்ளவில்லை. திருமணம் நான் தற்போது திருமணம் செய்யவில்லை. அப்படி செய்தால் கண்டிப்பாக அனைவரிடமும் சொல்வேன் என்று பிரகதி விளக்கம் அளித்துள்ளார். அவர் பாட்டு பாடுவதிலும், அசோக் படங்களிலும் பிசியாக உள்ளனர்,

பொது மேடையில் பிரபல தொகுப்பாளரிடம் காதலை சொன்ன கீர்த்தி சுரேஷ்!!

கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமா தாண்டி தற்போது தெலுங்கிலும் கலக்கி வருகின்றார். இந்நிலையில் சமீபத்தில் ஒரு தெலுங்கு விருது விழாவில் கலந்துக்கொண்டார்.

அதில் பிரபல தெலுங்கு தொகுப்பாளர் ப்ரதீப் கீர்த்திக்கு ஒரு டப்மாஷ் போல் ஒரு டாஸ்க் கொடுத்தார்.அந்த டப்மாஷில் கீர்த்தி ‘ஐ லவ் யூ’ என்று சொல்ல உடனே, ப்ரதீப் ‘ஓகே கீர்த்தி ஐ டூ லவ் யூ’ என்று சொல்ல மேடையே அதிர்ந்தது.

கீர்த்தியும் என்ன செய்வது என்று புரியாமல் ‘இதெல்லாம் உண்மை இல்லை, சும்மா’ என்று கூறிக்கொண்டே இருந்தார்.

காதலுக்கு எதிர்ப்பு : ஆத்திரத்தில் இளைஞரின் கண்களை தோண்டி எடுத்த குடும்பத்தினர்!!

பாகிஸ்தானில் இளைஞர் ஒருவரின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த குடும்பத்தினர், அவரது கண்களை ஸ்பூனால் தோண்டி எடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பலோசிஸ்தான் மாகாணத்தை சேர்ந்தவர் அப்துல் பகி (22), இவர் ஒரு பெண்ணை காதலித்து வந்த நிலையில் அவரையே திருமணம் செய்ய விரும்புவதாக தனது குடும்பத்தாரிடம் தெரிவித்துள்ளார்.

இதை கேட்டு கோபமடைந்த பகியின் அப்பா தோஸ்ட் முகமது (70) மற்றும் சகோதர்களான அப்துல் கியானி, அப்துல் சட்டார், அப்துல் ரகுமான் மற்றும் அப்துல் கரீம் ஆகியோர் பகியை தனி அறைக்கு தூக்கிச் சென்றுள்ளனர்.

பின்னர் ஈவு இரக்கமின்றி ஸ்பூனை வைத்து அவரின் இரண்டு கண்களையும் தோண்டி எடுத்துள்ளனர்.வலியால் துடித்த பகி தன்னை கொன்றுவிடுமாறு கெஞ்ச, அதற்கு உனக்கு தரப்பட்ட தண்டனை இந்த ஊரில் உள்ள மற்றவர்களுக்கு பாடம் என ஐந்து பேரும் கூறியுள்ளனர்.
பகியின் அலறல் சத்தம் கேட்டு அவரின் மற்றொரு சகோதரர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு பகிக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வரும் நிலையில் அவருக்கு மீண்டும் கண் பார்வை கிடைக்க வாய்ப்பில்லை என மருத்துவர்கள் கூறிவிட்டனர்.பகியை மருத்துவமனைக்கு தூக்கி சென்ற சகோதரர் அப்துல் கபர் கூறுகையில், சம்பவம் நடந்த போது நான் வீட்டில் இல்லை, அக்கம்பக்கத்தினர் பகியின் அலறல் சத்தம் கேட்டு எனக்கு போன் செய்த பின்னரே வீட்டுக்கு வந்தேன்.

அவரை மருத்துவமனையில் சேர்க்க எங்களிடம் பணமில்லாத நிலையில் அக்கம்பக்கத்தினர் 35000 பணம் கொடுத்து உதவினார்கள் என கூறியுள்ளார்.சம்பவம் தொடர்பாக பொலிசார் வழக்குபதிவு செய்துள்ள நிலையில் பகியின் அப்பா மற்றும் இரு சகோதர்களை கைது செய்துள்ளனர், மற்ற இருவரையும் தேடி வருகிறார்கள்.

தோல்வியில் முடிந்த முதல் காதல், பேட்டி எடுத்த பெண்ணால் கவரப்பட்ட ரஜினிகாந்த்!!

தமிழக அரசியலில் காலடி வைத்துள்ள நடிகர் ரஜினிகாந்த், சினிமா வாழ்க்கையில் வெற்றிகரமான மனிதர் மட்டுமின்றி தனது குடும்ப வாழ்க்கையிலும் வெற்றிகரமான மனிதர்தான்.

இவரின் அரசியல் பயணம், தமிழக அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தும் என அரசியல் வல்லுநர்கள் கணித்துள்ள நிலையில், தற்போது நடக்கும் அரசியல் குறித்து எவ்வித கருத்தும் தெரிவிக்காமல் தனது கட்சிப்பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார்.

இவரது அரசியல் பயணத்திற்கு இவரது குடும்பத்தினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். தனது கணவர் எந்த முடிவு எடுத்தாலும் அதற்கு நாங்கள் பக்கபலமாக இருப்போம் என ரஜினியின் மனைவி லதா கூறியுள்ளார்.

இத்தனை ஆண்டுகால தனது கணவரின் சினிமா வாழ்க்கைக்கு பக்கபலமாக இருந்த லதா, தற்போது அரசியல் வாழ்க்கைக்கும் துணையாக இருப்பார் என கூறப்படுகிறது.

சிறுவயதிலேயே தாயை இழந்த ரஜினிகாந்துக்கு முன்னின்று தனது மகளை திருமணம் நடத்தி வைத்தது லதாவின் தாய்தான். இதனை எம்ஜிஆர் சிலை திறப்பின்போது நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.

எத்திரராஜ் கல்லூரியில் ஆங்கில இலக்கியம் படித்து வந்த லதாவிற்கு தனது கல்லூரியின் சார்பில் ஒரு வேலை கொடுக்கப்பட்டது. அது, முன்னணி நடிகரான ரஜினிகாந்தை பேட்டி எடுக்க வேண்டும் என்பதுதான்.

தில்லு முல்லு படப்பிடிப்பில் ரஜினிகாந்த் இருந்தபோதுதான், லதா அவரை முதல் முறையாக நேரில் சந்தித்துள்ளார்.

பேட்டியின் போது பல்வேறு கேள்விகளை லதா கேட்டுள்ளார். இது ரஜினிகாந்திற்கு பிடித்துள்ளது. பேட்டியின் போதே தனது காதலை சொல்லாத ரஜினி, நேரடியாக என்னை திருமணம் செய்துகொள்கிறாயா? என கேட்டுள்ளார்.

இந்த கேள்வியை சற்றும் எதிர்பார்க்காத லதா, நான் எனது வீட்டில் கேட்டுவிட்டு சொல்கிறேன் என்று கூறியுள்ளார்.

இதன்பின்னர் தான் ரஜினியின் சகோதரர் சத்யநாராயணன் லதாவின் பெற்றோரை சந்தித்து, திருமணத்திற்கு சம்மதம் வாங்கியுள்ளார். இந்த திருமணத்தை லதாவின் தாயே முன்னின்று நடத்தி வைத்துள்ளார்.

1981-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 26-ம் திகதி இருவரும் திருப்பதி கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டார்.

எல்லோருக்கும் முதல் காதல் என்பது மற்க்க முடியாது ஒன்று. அப்படியொரு காதல் ரஜினியின் வாழ்க்கையிலும் இருந்துள்ளது.

பள்ளிப்பருவத்தில் ஒரு பெண்ணை காதலித்துள்ளார். ஆனால் அது தோல்வியில் முடிந்துவிட்டதாக சமீபத்தில் நடந்த நட்சத்திர கலைவிழாவில் ரஜினி தெரிவித்தார்

ரோசி சேனநாயக்காவின் மலசலகூடத்தால் வெடித்தது சர்ச்சை!!

இந்த மலசலகூடம் 4 ஆண்டுகளாகப் பயன்படுத்தப்படவில்லை. அதைச் சீரமைக்க இப்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கூறினார் மேயர் ரோசி சேனநாயக்க.

கொழும்பு மாநகர மேயர் ரோசி சேனநாயக்கவின் உத்தியோகபூர்வ இல்லத்தின் மலசல கூடத்தைச் சீரமைக்க 57 லட்சம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகின்றது. இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கொழும்பு மாநகர சபையின் அமர்வு நேற்று நடைபெற்றது. அதில் ஜே.வி.பியின் மாநகர சபை உறுப்பினர் சுமித் பாசப்பெரும கருத்துத் தெரிவித்தார்.

கொழும்பு மாநகர சபையின் புதிய மேயர் ரோசி சேனாநாயக்க தனது உத்தியோகபூர்வ இல்லத்தின் மலசலகூடத்தை நவீன முறையில் சீரமைக்க 57 லட்சம் ரூபாவை ஒதுக்கியுள்ளார்.

இந்த மலசலகூடம் 4 ஆண்டுகளாகப் பயன்படுத்தப்படவில்லை. அதைச் சீரமைக்க இப்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கூறினார் மேயர் ரோசி சேனநாயக்க.

மேயர் தனது உத்தியோகபூர்வ இல்லத்தின் மலசல கூடத்தைச் சீரமைக்க இந்தளவு பெரிய தொகையைப் பயன்படுத்துகின்றார். ஆனால் கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பொது மலசல கூடங்கள் திருத்தப்படவில்லை. அதைக் கவனத்தில் எடுக்காதது வருந்தத்தக்க விடயம் என்று சுமித் பாசப்பெரும கூறினார்.

கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பொது மலசல கூடங்கள் ஏற்கனவே சீரமைக்கப்பட்டுள்ளன என்று பதிலளித்துள்ளார் ரோசி சேனநாயக்க.

இலங்கையில் பாடசாலையொன்றில் இடம்பெற்ற பயங்கரம்!!

மொனராகலை சியம்பலாண்டுவ மகா வித்தியாலயத்தில் தரம் 11ல் கல்வி கற்கும் மாணவரொருவர் அதே வகுப்பை சேர்ந்த மற்றுமொரு மாணவரை கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளார்.

இதனால் படுகாயமடைந்த குறித்த மாணவர் சியம்பலாண்டுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மொனராகலை பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இவ்வாறு கத்திக்குத்துக்கு இலக்கான மாணவர் சில மாணவர்களுடன் இணைந்து தாக்குதலை மேற்கொண்ட மாணவரை கேளி செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனால் சினம் கொண்ட குறித்த மாணவர் இந்த கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்டுள்ளார்.

பாடசாலை நிறைவடைந்து வீடு நோக்கி மாணவர்கள் சென்று கொண்டிருந்த போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

எவ்வாறாயினும், கத்திக்குத்துக்கு இலக்கான மாணவரின் நிலை கவலைக்கிடமாக காணப்படுதாக தெரிவிக்கப்படுகிறது

வட மாகாணத்தின் அனைத்து பாடசாலைகளுக்கும் விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு!!

வடக்கு மாகாணத்தின் அனைத்துப் பாடசாலைகளிலும் நாளை வெள்ளிக்கிழமை, வடக்கு மாகாண சபையின் கொடியை அரைக் கம்பத்தில் பறக்கவிடுமாறும், அன்று காலை பதினொரு மணிக்கு அனைத்து பாடசாலைகளிலும் அனைவரும் அகவணக்கம் செலுத்துமாறும்,

அனைத்து அதிபர்களையும் கேட்டுக்கொள்வதாக, வடக்கு மாகாண கல்வி அமைச்சர் க.சர்வேஸ்வரன் கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பில் அவர் அனுப்பி வைத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

 

11 வயது சிறுமியை 60 முறை கொடூரமாக குத்திய தாய் : சிரித்து கொண்டே பொலிசாருடன் சென்ற சோகம்!!

 

அமெரிக்காவில் பெற்ற மகளையே தாய் 60 முறை கொடூரமாக குத்தியதால், அந்த சிறுமி தற்போது உயிருக்கு போராடி வருகிறார். அமெரிக்காவின் Oklahoma-வின் Tulsa பகுதியைச் சேர்ந்தவர் Taheerah Ahmad. 39 வயதான இவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.

குழந்தைகளால் கடும் கோபத்தில் இருந்த இவர், தன்னுடைய மூன்று குழந்தைகளின் கைகளை கட்டிவிடுவது, அவர்களை ஒரு இடத்தில் அடைத்து வைப்பது என்று இருந்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த 11 வயது மகள் ஏன் அம்மா இப்படி செய்கிறீர்கள் என்று கேட்டதால், ஆத்திரத்தில் அந்த சிறுமியை கத்தியை வைத்து 50-லிருந்து 60 முறை கொடூரமாக குத்தியுள்ளார்.

அதன் பின் கோடாரியில் முட்ட வைத்து, வீட்டின் சமயலறையை எரித்துவிட்டு, வீட்டின் பின்புறம் உள்ள பார்க்கிங்கில் தன்னுடைய 8 வயது மகளுடன் ஓடிச் சென்று சுமார் 17 மணி நேரம் ஒளிந்துள்ளார்.

அதன் பின் இது குறித்த தகவல் பொலிசாருக்கு தெரியவந்ததால், பொலிசார் அவரை கைது செய்துள்ளனர்.

இது குறித்து பொலிசார் கூறுகையில், குழந்தைகளாள் கடும் அதிருப்தியில் இருந்த இவர், குழந்தைகளின் வாயில் டேப்பை வைத்து ஓட்டிவிடுவது, கையை கட்டிவிடுவது என்று செய்துள்ளார்.

இதை 11 வயது சிறுமி எதிர்த்து கேட்டதால், இது போன்ற சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த சம்பவத்தைக் கண்ட மற்றொரு 9 வயது மகள் அங்கிருந்து தப்பி தங்களுடைய உறவினரின் வீட்டில் சென்று கூறியுள்ளார்.

அதன் பின்னர் அவர்கள் வந்து பார்த்த பின்பு பொலிசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து வந்த நாங்கள் அவரை தேடிய போது கிடைக்கவில்லை, சுமார் 17 மணி நேரத்திற்கு பின்னர் வீட்டின் பின்புறம் ஒளிந்திருப்பதாக அக்கம்பக்கத்தினர் தகவல் தெரிவித்த பின்பே அவரை கைது செய்தோம்.

அவருடன் இருந்த 8 வயது சிறுமையை மீட்டுள்ளோம். விசாரணையிலும் அவர் தான் 60-வது முறை குத்தியதை ஒப்புக் கொண்டுள்ளார் என்று பொலிசார் கூறியுள்ளனர்.

இதில் கவனிக்கப்பட வேண்டிய விடயம் என்னவென்றால், மகளை கொடூரமாக குத்தியதன் காரணமாக பொலிசார் அவரது கையில் விளங்கை மாட்டி அழைத்துச் சென்ற போது சிரித்த படி சென்றுள்ளார்.

பிரபல திரைப்பட நடிகை மரணம்!!

பிரபல நடிகை அய்ஷத் அபிம்போலா மார்பக புற்றுநோய் காரணமாக தனது 46வது வயதில் உயிரிழந்துள்ளார்.

நைஜீரியன் திரைப்படங்கள் பலவற்றில் நடித்து புகழ்பெற்றவர் அய்ஷத் அபிம்போலா, இவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் நோய் பாதிப்பிலிருந்து மீள கனடா மருத்துவமனையில் அய்ஷத் சிகிச்சை பெற்று வந்தார், சிகிச்சை பலனின்றி அவரின் உயிர் நேற்று பிரிந்தது.

அய்ஷத்தின் மறைவுக்கு நைஜீரியா நடிகர் சங்கம் சார்பில் இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சங்கத்தலைவர் எமிகா ரோலஸ் கூறுகையில், அய்ஷத்தின் இழப்பு திரையுலகில் பெரிதாக உணரப்படும்.

அவரின் குடும்பத்தினருக்கும், உலகெங்கிலும் உள்ள அவரின் ரசிகர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.

பரீட்சையில் தோல்வி : விரக்தியில் மாணவி தற்கொலை!!

+2 பொதுத்தேர்வில் தோல்வி அடைந்ததால் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நேற்று காலை +2 தேர்வு முடிவுகள் வெளியாகின, மொத்த தேர்ச்சி விகிதம் 91.1 சதவிகிதமாகும்.

விழுப்புரத்தின் கள்ளக்குறிச்சியை அடுத்த நல்லாத்தூர் கிராமம் காமராஜ் நகரை சேர்ந்தவர் ஆறுமுகம், இவரது மகள் இளமதி. வெளியான +2 தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்று தெரியவந்ததும், மனமுடைந்த இளமதி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதனை தொடர்ந்து வழக்கு பதிவு செய்த கச்சிராப்பாளையம் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதே மாவட்டத்தை சேர்ந்த தனலட்சுமி, அறிவழகன் தற்கொலைக்கு முயன்ற நிலையில் காப்பாற்றப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கோவை மாவட்டத்திலும் பிரியா என்ற மாணவி, குறைவான மதிப்பெண் பெற்றதால் 4வது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, பெற்றோர் அவரை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.