வரலாறுகாணாத வீழ்ச்சியை சந்தித்துள்ள இலங்கை ரூபாவின் பெறுமதி!!

அமெரிக்க டொலருடன் ஒப்பிடும் போது இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சியை சந்தித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. டொலருடன் ஒப்பிடும் இலங்கை ரூபாயின் பெறுமதி 159.55 ரூபாயாக பதிவாகியுள்ளது.

ரூபாவின் விற்பனை பெறுமதி இந்தளவிற்கு வீழ்ச்சியடைந்துள்ள முதல் சந்தர்ப்பம் இதுவாகும் என வங்கி குறிப்பிட்டுள்ளது.

மே மாதம் 11ஆம் திகதி டொலருடன் ஒப்பிடும் இலங்கை ரூபாயின் பெறுமதி 159.29 ரூபாவாக பதிவாகியுள்ளது. இதற்கு முன்னர் ரூபாவின் பெறுமதி அதிகளவு வீழ்ச்சியடைந்த சந்தர்ப்பம் இதுவாகும்.

இந்த வருடம் ஜனவரி முதலாம் திகதியில் இருந்து மே மாதம் 11 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் அமெரிக்க டொலருடன் ஒப்பிடும் போது 3.2 வீதம் இலங்கை ரூபாய் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளது.

ஏப்ரல் மாதத்திலேயே இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகளவு வீழ்ச்சியடைந்துள்ளதாக மத்திய வங்கி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கைக்கு அருகில் ஏற்பட்ட திடீர் மாற்றம் : கவனமாக இருக்குமாறு எச்சரிக்கை!!

இலங்கையை அண்மித்த வளிமண்டலத்தில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளதால், நாட்டு மக்களை அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களத்தினால் பெறப்பட்ட தகவல்களுக்கு அமைய, இந்த எச்சரிக்கையை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக நாட்டின் பல பகுதிகளுக்கு இன்றிரவு அடைமழை பெய்யக் கூடும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நாட்டின் பல பகுதிகளுக்கு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதி இயக்குனர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.

மத்திய, சப்ரகமுவ, தெற்கு, ஊவா, மேல், வடமேல் மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்திலும் 100 மில்லிமீற்றருக்கு அதிக மழை வீழ்ச்சி பதிவாகும் என எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு மேலதிகமாக விசேடமாக மலையத்தில் மக்கள் மண்சரிவு தொடர்பில் அதிக அவதானத்துடன் இருக்க வேண்டியது கட்டாயம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மண் சரிவு தொடர்பில் அவதானமாக இருக்குமாறும் புதிய நீரூற்றுக்களின் தோற்றம், மரங்கள் அசைவு, நிலத்தில் விரிசல் போன்றவைகள் தொடர்பிலும் மக்கள் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருடச் சென்ற இடத்தில் திருடன் செய்த வேலை : அதிர்ச்சி வீடியோ!!

 

அமெரிக்காவில் திருடச் சென்ற இடத்தில், தன்னுடைய முதல் முயற்சியிலே கடையின் கதவுகள் திறந்ததால், மகிழ்ச்சியில் திருடன் ஆட்டம் போட்ட வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள பிரபல கடை ஒன்றில் கடந்த 13ஆம் திகதி திருடன் ஒருவன் இரவு நேரத்தில் திருடச் சென்றுள்ளான்.

அப்போது தன்னுடைய முதல் முயற்சியிலியே கதவுகள் திறந்துவிட்டதால், சற்றும் இதை எதிர்பார்க்காமல் மகிழ்ச்சியின் உச்சிக்கு சென்று அந்த இடத்தில் மகிழ்ச்சியில் பிரேக் டான்ஸ் ஆடியுள்ளான்.

பிரித்தானியாவில் மர்மான முறையில் இறந்து கிடந்த இந்திய வம்சாவளிப் பெண்!!

 

பிரித்தானியாவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் மிகவும் மோசமான காயங்களுடன் வீட்டில் இறந்து கிடந்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவின் Leeds பகுதியைச் சேர்ந்த தம்பதி Mitesh(36)- Jessica Patel(34). இருவரும் Roman சாலையில் உள்ள மருந்துகடையில் வேலை பார்த்து வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த திங்கட் கிழமை இரவு உள்ளூர் நேரப்படி 08.20 மணியளவில் வீட்டில் Jessica Patel மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார்.

இது குறித்த தகவல் பொலிசாருக்கு தெரியவந்ததால், இது தொடர்பாக அவர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பரபரப்பு மிகுந்த இந்த பகுதியில் சம்பவ தினத்தின் போது யாரேனும் சந்தேகப்படும் வந்திருந்தால், உடனடியாக தகவல் தெரிவிக்கும் படி அங்கிருக்கும் மக்களிடம் பொலிசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அதுமட்டுமின்றி பிரேத பரிசோதனையில் அவருக்கு மிகவும் மோசமான காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதால், இது கொலையாக இருக்கலாம் எனவும், இது தொடர்பாக 37 வயது மதிக்கத்தக்க நபரை பொலிசார் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்து விசாரணை நடத்தி வருவதாகவும் உள்ளூர் ஊடங்கள் தெரிவித்துள்ளன.

நாகப்பாம்பை வைத்து தந்தைக்கு பூஜை செய்த மகன் : வீடியோ வைரலாகியதால் சிக்கிய பரிதாபம்!!

தமிழகத்தில் தனது தந்தையின் சதாபிஷேகத்தில் பாம்பை வைத்து பூஜை நடத்திய மகனை வனத்துறையினர் கைது செய்துள்ளனர். கடலூர் மஞ்சக்குப்பத்தை சேர்ந்தவர் சுந்தரேசன்(45). இவர் அங்கிருக்கும் கோவில் ஒன்றில் புரோகிதராக உள்ளார். இந்நிலையில் சுந்தரேசன் தனது தந்தைக்கு 80 வயது முடிந்ததால் அவருக்கு சிறப்பாக சதாபிஷேக விழா நடத்த முடிவு செய்துள்ளார்.

இந்த விழாவில் நாகப் பாம்பை வைத்து பூஜை நடத்தினால் ஆயுள் கூடும் என கருதிய அவர், பாம்பை வைத்து பூஜை நடத்த திட்டமிட்டுள்ளார். இதற்காக பாம்பாட்டி பழனி என்பவரின் உதவியை நாடியுள்ளார். அவரது உதவியுடன் 2 நாகப்பாம்புகள் பூஜைக்காக கொண்டு வரப்பட்டுள்ளது.

உற்றார், உறவினர் என சதாபிஷேக விழாவில் தம்பதியினரிடம் ஆசி பெற வந்த நூற்றுக்கணக்கானோர் முன்னிலையில் பழனி கொண்டு வந்த 2 நாக ஜோடிகள் வெளியே விடப்பட்டது.

அதன் பின் தனது பெற்றோர் முன்பு நாகப் பாம்பை வைத்து பூஜை விமர்சையாக நடத்தியுள்ளார். இதைக் கண்ட அங்கிருந்தவர்கள் செல்பி எடுத்துக் கொண்டும், வீடியோ எடுத்தும் மகிழ்ந்துள்ளனர்.

இதையடுத்து எடுக்கப்பட்ட வீடியோ மற்றும் புகைப்படங்கள் வட்ஸ் அப் குரூப்பில் பகிரப்பட்டதால், அது வைரலாக பரவியது.

இதை அறிந்த கடலூர் மாவட்ட வனத்துறையினர் அனுமதியில்லாமல் வனவிலங்கைத் துன்புறுத்தும் வகையில் பயன்படுத்தியதை தொடர்ந்து வன விலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சுந்தரேசனைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.

ஆஜர்படுத்தப்பட்ட அவர் நீதிமன்ற விசாரணைக்கு பின் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும் பாம்புகளை கொண்டு வந்த பழனியை பொலிசார் தேடிவருகின்றனர்.

வவுனியாவில் மோட்டார் சைக்கிள் மாயம் : பொலிசார் தீவிர விசாரணை!!

வவுனியா புதிய பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றின் முன்னால் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று காணாமல் போயுள்ளது.

நேற்று முன்தினம் (15.05) இரவு 8 மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது குறித்து வவுனியா பொலிசாருக்கு உரிமையாளரால் முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த வர்த்தக நிலையம் மற்றும் பிரதான வீதி என்பவற்றுக்கு அருகில் பொருத்தப்பட்டுள்ள சீசீடிவி கமராவின் உதவியுடன் வவுனியா குற்றத்தடுப்பு பிரிவுப் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்

காருக்கு பேன்ஸி நம்பர் வாங்க லட்சக்கணக்கில் செலவு செய்த இளைஞர் : எத்தனை லட்சம் தெரியுமா?

இந்தியாவில் இளைஞர் ஒருவர் காரில் பேன்ஸி நம்பர் வாங்குவதற்கு 16 லட்சம் செலவு செய்துள்ளார். ஜெய்ப்பூர் மாநிலத்தைச் சேர்ந்தவர் ராகுல் தனிஜா. இவர் சமீபத்தில் ஜாகுவார் வகை கார் ஒன்றை சுமார் 1.50 கோடிக்கு வாங்கியுள்ளார்.

இவ்வளவு விலை கொடுத்து கார் வாங்கிவிட்டோம், அதற்கு பேன்ஸி நம்பர் இருந்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணிய அவர், அதற்காக ஜெய்ப்பூர் ஆர்டிஓ அலுவலக அதிகாரியை அணுகியுள்ளார்.

இதற்காக ஒன்றரை மாதம் காத்திருந்த அவர் ரூபாய் 16 லட்சம் செலவிட்டு RJ 45 CG 0001 என்ற ஸ்பெஷல் எண்ணை பதிவு செய்துள்ளார்.

தனிஜாவின் கார்கள் அனைத்தும் ‘0001’ என்ற எண்ணில் தான் உள்ளது. அதேபோல், அவரது செல்போன் எண்ணில் 5 ஒன்றுகள் இருக்கும். பிரித்தானியாவின் F1 என்ற நம்பர் பிளேட் கொண்ட காரானது 132 கோடிக்கு இந்த ஆண்டு விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பலரின் வயிற்றை குளிர வைத்த நான் இன்று வயிறு எரிந்து நிற்கிறேன் : கண்கலங்கும் மாற்றுத்திறனாளி!!

தமிழகத்தில் பார்வையற்ற மாற்றுத்திறனாளி நடத்தி வந்த இளநீர் கடை அடையாளம் தெரியாத நபர்களால் தீ வைத்து எரிந்து நாசம் செய்யப்பட்டதால், அவர் கண்ணீர் விட்டு கலங்கியுள்ளார்.

மதுரை ஊமச்சிகுளம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா. சுமார் 15 ஆண்டுகளுக்கு முன் தனது பார்வையை இழந்த இவர் இளநீர் கடை நடத்திவந்துள்ளார்.

இவரது இளநீர் கடை புதுநத்தம் சாலையில் அரசு மருத்துவமனை ஊழியர் குடியிருப்பு முன்பாக சாலையோரத்தில் உள்ளது. கண்கள் இல்லை என்றாலும் இளநீரை எளிமையாக வெட்டும் பழக்கம் கொண்ட இவர் யாருடைய உதவியும் இன்றி இளநீர் கடையை நடத்தி வந்தார்.

இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 500-க்கும் மேற்பட்ட இளநீர் காய்களை இறக்கி வைத்துவிட்டு அதிகாலை வீட்டுக்குச் சென்றுள்ளார்.

அதன் பின் யாரோ அடையாளம் தெரியாத நபர்கள் இளநீர் கடைக்கு தீவைத்துள்ளனர். இதில் கடையில் வைத்திருந்த 500க்கும் மேற்பட்ட இளநீர் காய்கள், தென்னங்கூரையால் அமைக்கப்பட்ட கடை ஆகியவை தீயில் முழுவதும் எரிந்து நாசமானது.

இதனால் அவருக்கு ஆயிரம் சேதம் ஏற்பட்டுள்ளது. காலையில் கடைக்கு வந்த ராஜா, எரிந்துகிடந்த சம்பவத்தைப் பார்த்து கண் கலங்கினார்.

இது குறித்து காவல்நிலையத்தில் புகார் தெரிவித்துள்ள இவர், எனக்கு இளநீர் வியாபாரம் தொழிலைத் தவிர வேறெதுவும் தெரியாது, சமூக விரோதிகள் என் கடையில் தீ வைக்கவில்லை என் வயிற்றில் தீயை வைத்துவிட்டனர்.

பலரின் வயிற்றை குளிரவைத்த நான் வயிறு எரிந்து நிற்கிறேன். இந்த இளநீர் கடைவருமானத்தை வைத்துதான் என் குடும்பத்தைக் காப்பாற்றிவருகிறேன். எனவே, எனது வாழ்வாதாரத்தைக் காப்பாற்றும் வகையில் மாவட்ட ஆட்சியர் உதவி செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.

கரை ஒதுங்கிய அடையாளம் தெரியாத மிகப் பெரிய உயிரினம் : நிலநடுக்கத்திற்கான அறிகுறி என பீதி!!

பிலிப்பைன்சில் அடையாளம் தெரியாத உயிரினம் ஒதுங்கியதால் நிலநடுக்கத்திற்கான அறிகுறியா என்று மக்கள் பீதியில் உள்ளனர்.

பிலிப்பைன்ஸ் நாட்டின் ஓரியண்டல் மிண்டோரோ மண்டலத்தில் சன் ஆண்டோனியோ என்ற நகரம் உள்ளது. இங்குள்ள கடற்கரையில் வழக்கத்துக்கு மாறாக உயிரினம் ஒன்று கடற்கரையில் ஒதுங்கியுள்ளது.

க்ளோப்ஸ்டர் என்றழைக்கப்படும் அந்த உயிரினத்தை பார்ப்பதற்கு மக்கள் அங்கு படையெடுத்து வருகின்றனர். அதுமட்டுமின்றி அந்த உயிரினத்தின் அருகில் நின்று கொண்டு செல்பி எடுத்தும் கொள்கின்றனர்.

இது ஒருபுறம் இருப்பினும் க்ளோப்ஸ்டரை சாபமாக, கெட்ட விடயங்களின் அறிகுறியாக மக்கள் பார்க்கின்றனர். ஏனெனில் ஆழ்கடலில் இருந்து ஏதாவது ஓர் உயிரினம் கடற்கரைக்கு இறந்து வந்தால் அதன்பிறகு அங்கு நிலநடுக்கம் நிகழலாம் எனவும் மக்கள் பீதியில் உள்ளனர்.

இதன்காரணமாக அப்பகுதியில் இருக்கும் மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் தங்களுக்காக பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள் என்றும் சமூகவலைத்தளங்களில் கூறி வருகின்றனர்.

இந்த நம்பிக்கை எல்லாம் ஜப்பானின் புராணங்களில் இருந்து வந்தவையாக இருக்கலாம் எனவும், இறந்த அரக்கன், கெட்டதை முன்கூட்டியே சொல்லும் சாபம் என்றெல்லாம் நம்பப்படும் க்ளோப்ஸ்டர் இதற்கு முன்னதாக 2017-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் தினகட் தீவின் கடற்கரையில் ஒதுங்கியுள்ளது.

அதுவும் தற்போது ஒதுங்கியுள்ளது போன்றே இருந்துள்ளது. சுமார் 4000 பவுண்ட் எடையும் 20 அடி நீளமும் உடையது. க்ளோப்ஸ்டரில் காணப்படும் முடி போன்ற பகுதி, உயிரினத்தின் உடலில் இருக்கும் தசை நார்கள். அந்த உயிரினம் இறந்தபின் அவை சிதைந்து மக்கி முடிபோன்றவையாக உருபெறுகின்றன.

இதைக் கண்ட மீனவளத் துறை அதிகாரிகள், க்ளோப்ஸ்டரின் திசு மாதிரிகளை சேமித்துச் எடுத்துச் சென்றுள்ளனர். அதை வைத்து செய்யப்படும் டி.என்.ஏ பரிசோதனை மூலம் இது என்ன உயிரினம் என்பதை அடையாளம் காணலாம் எனவும், பரிசோதனைக்கு முன்பே இவை பெரும்பாலும் திமிங்கலங்களாகத்தான் இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

மன்னார் பகுதியில் அசாதாரண நிலை : 8 பேர் அடங்கிய குழுவால் துப்பாக்கிச் சூடு!!

 

புதுக்குடியிருப்பு – உயிழங்குளம், மன்னார் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தினால் அந்த பகுதியில் அசாதாரண நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எட்டு பேர் அடங்கிய குழுவினால், நேற்று இரவு ஒன்பது மணியளவில் இந்த துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மன்னார் நகரில் இருந்து 10 கிலோமீற்றர் தொலைவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

அந்த பகுதியில் வசிக்கும் வர்த்தகரான ஜேசுதாசன் சுவாம்பிள்ளை என்பவரின் வீட்டிற்கு எட்டு பேர் அடங்கிய குழுவினர் சென்றுள்ளதுடன், சுவாம்பிள்ளையை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூட்டையும் மேற்கொண்டுள்ளனர்.

எனினும் சாதுர்யமாக செயற்பட்ட சுவாம்பிள்ளை தற்பாதுகாப்பிற்காக துப்பாக்கிதாரிகளுடன் போராடியுள்ளார். இதன்போது கைத்துப்பாக்கியில் இருந்த தோட்டாக்கள் மூன்று சம்பவம் இடம்பெற்ற இடத்தில் வீழ்ந்துள்ளன.

இதனையடுத்து சந்தேகநபர்கள் தப்பிச்செல்ல முற்பட்டனர். விரைந்து செயற்பட்ட அவர்கள் தாம் வந்த காரில் தப்பிச் செல்ல முற்பட்ட போதிலும் அந்த நேரத்தில் குறித்த காரை இயக்க முடியாமல் போயுள்ளது.

இதேவேளை, சம்பவம் குறித்து சுவாம்பிள்ளை மன்னார் பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.

இதனையடுத்து அந்த பகுதிக்கு வந்த மன்னார் பொலிஸ் நிலையத்தின் குற்றப் புலனாய்வு பொலிஸார் சந்தேகநபர்கள் வந்த காரை சரிசெய்து அனுப்பி வைத்துள்ளதாக சுவாம்பிள்ளை தெரிவித்துள்ளார்.

மேலும் சம்பவம் இடம்பெறுவதற்கு முன்னர் சுவாம்பிள்ளையின் சாரதி தங்கதுரை கைது செய்யப்பட்டிருந்ததாகவும், பின்னர் சம்பவம் இடம்பெற்ற பகுதியில் தங்கதுரை விடுவிக்கப்பட்டிருந்ததாகவும், அவர் கைது செய்யப்பட்டிருந்த போது பயன்படுத்திய கைவிலங்கு அந்த பகுதியில் விட்டு செல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சந்தேகநபர்களை தப்பிக்க வைத்த குற்றப் புலனாய்வு பொலிஸ் அதிகாரிகளில் மூவரை நன்கு தெரியும் எனவும், அவர்களை அடையாளம் காட்ட முடியும் என சுவாம்பிள்ளை தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதனுக்கு அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த அவர், வடமாகாண பிரதி பொலிஸ்மா அதிபருடன் கலந்துரையாடியிருந்தார்.

இது குறித்து உடன் நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக 2006ம் ஆண்டு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் சுவாம்பிள்ளை அதிஸ்டவசமாக உயிர் தப்பியதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, நாளை முள்ளிவாய்க்கால் நினைவு தினம் வடக்கு, கிழக்கு பகுதியில் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில், இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், மக்கள் மத்தியில் ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

-தமிழ்வின்-

 

இவரைத் தெரியுமா : இலட்சங்களில் புரளும் தமிழன்!!

கிராமிய உணவுகளின் மூலம் மக்களை வெகுவாக ஈர்த்து வருகிறார்கள் தமிழ்நாட்டை சேர்ந்த ஆறுமுகம் குடும்பத்தினர். திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் கோபிநாத்(26), டிப்ளமோ படித்துள்ள இவர் தனது தந்தை ஆறுமுகம், தாய், மனைவி மற்றும் தம்பியுடன் வசித்து வருகிறார்.

கோபிநாத்தின் தந்தை ஆறுமுகம் அசைவ உணவுகள் சமைப்பதில் கைதேர்ந்தவர். இதைவைத்து இவர்கள் குடும்பம் கடந்த ஒன்றரை வருடங்களாக லட்சக்கணக்கில் சம்பாதித்து வருகிறது.

மாட்டிறைச்சி குழம்பு, ஆட்டு குடல் குழம்பு, இறால் குழம்பு, வாத்து கறி போன்ற நாக்கில் எச்சில் ஊறும் அசைவ உணவுகளை ஆறுமுகம் சமைக்க அதை கோபிநாத் வீடியோவாக எடுத்து யூடியூப்பில் பதிவேற்றி வருகிறார்.

அவர் குடும்பம் இதற்கு உதவியாக இருக்கிறது. Village Food Factory என்னும் தனி யூடியூப் சனல் கோபிநாத்துக்கு உள்ளது. கூகுள் அட்சென்ஸ், பங்குதாரர் வலைத்தளங்கள் மற்றும் சனல்களின் விளம்பரங்கள் மூலம் வருமானம் வருகிறது.

இது குறித்து கோபிநாத் கூறுகையில், இதுவரை பலவகையான சமையல் வீடியோக்களை வெளியிட்டுள்ளோம். என் தந்தை தற்போது யூ-டியூப் பிரபலமாக வலம் வருவது மகிழ்ச்சியாக உள்ளது.

இதுவரை எங்கள் வீடியோவை மில்லியன் கணக்கான மக்கள் கண்டுரசித்துள்ளனர். முதல் மாதம் எங்களுக்கு 8000 வருமானம் தான் வந்தது. பின்னர் லட்சக்கணக்கில் வர ஆரம்பித்தது என பெருமையுடன் கூறுகிறார்.

1000 வீடியோவை பதிவேற்றுவதும், பிற்காலத்தில் ஹொட்டல் தொடங்குவதும் இந்த குடும்பத்தின் திட்டமாக உள்ளது.

அப்பாவி மாதிரி இருந்த கல்யாணப் பெண் செய்த வேலையைப் பாருங்கள்!!

திருமணம் என்பது ஒவ்வொருவரது வாழ்விலும் மறக்கமுடியாத நிகழ்வாகும். ஆம் தான் வாழ்நாள் முழுவதும் பயணம் செய்யப்போகும் ஒருநபரை தமக்கு சொந்தமாக்கிய நாள் ஆகும்.

இந்நிகழ்வினை தற்போது பல விதங்களில் கொண்டாடி மகிழ்கின்றனர். நண்பர்களுடன் ஆடல் பாடல், மணமக்களின் நடனம் என சும்மா அதிர வைக்கின்றனர்.

இங்கும் மணப்பெண் ஒருவர் மிகவும் சாதுவாக நின்று கொண்டிருந்த தருணத்தில் திடீரென நடனமாடத் தொடங்கியுள்ளார்.

வவுனியா வர்த்தக சங்கத்தின் அவசர வேண்டுகோள்!!

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 9ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நாளையதினம் (18.05.2018) இடம்பெறவுள்ளமையினால் அன்றைய தினத்தினை துக்க நாளாக வடமாகாணசபை பிரகடனப்படுத்தியுள்ளமையினாலும் நாளையதினம் கடைகளை அரைநாள் மூடுமாறு வர்த்தக சங்கம் வர்த்தர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

வவுனியாவிலுள்ள அனைத்து வர்த்தக நிலையங்களும் மதியம் 12 மணிக்கு பின்னர் வியாபார நடவடிக்கையில் மேற்கொள்ளுமாறும் வர்த்தக சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.  நாளையதினம் கடைகளை அரைநாள் மூடுமாறு வர்த்தக சங்கம் வர்த்தர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

கொழும்பில் கோர விபத்து – வெளியானது சிசிரிவி காணொளி : கொந்தளிக்கும் மக்கள்!!

கொழும்பு – கண்டி பிரதான வீதியில் இடம்பெற்ற கோர விபத்து தொடர்பான சிசிரிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. குறித்த வீதயில் பயணித்த பேருந்துடன் லொரி ஒன்று நேருக்கு நேர் மோதியதினால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. கொழும்பு – கண்டி பிரதான வீதியின் ரண்வல சந்தியில் கடந்த வாரம் இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இலங்கையில் அண்மைக்காலமாக வீதி விபத்துக்களினால் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சாதாரணமாக நாளொன்று மூன்று முதல் ஐந்து வரை பேர் விபத்துகள் காரணமாக உயிரிழப்பதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வீதி போக்குவரத்துகளை மதிக்காமல் வாகனங்களை செலுத்தி விபத்துக்களை ஏற்படுத்தும் சாரதிகளை சட்டத்திற்கு முன் நிறுத்த வேண்டும் எனவும், அவர்களுக்கு உரிய தண்டனை பெற்று கொடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வவுனியாவில் இறந்த எருமை மாட்டை இறைச்சியாக்கிய இருவர் கைது!!

வவுனியா காத்தார்சின்னக்குளம் பகுதியில் இறந்த எருமை மாடு ஒன்றினை இறைச்சியாக்கி விற்பனை செய்வதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சி விசேட அதிரடிப்படையினரால் முறியடிக்கப்பட்டுள்ளதுடன் இரு சந்தேக நபர்களையும் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்த 90கிலோ இறைச்சியும் மீட்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

காத்தார்சின்னக்குளம் பகுதியிலுள்ள வசித்துவந்த நபர் ஒருவரது எருமை மாடு ஒன்று கயிறு கழுத்தில் இறுக்கி உயிரிழந்துள்ளது. அவரது உறவு முறையான ஒருவரிடத்தில் நடந்த விடயத்தைத் தெரிவித்து உயிரிழந்த எருமை மாட்டினைக் கொடுத்துள்ளார்.

உயிரிழந்த எருமை மாட்டினைப் பெற்றுக் கொண்டவர் அவரது நண்பனையும் அழைத்துக் கொண்டு உயிரிழந்த எருமை மாட்டினை வெட்டி இறைச்சியாக்க முற்பட்டபோது விசேட அதிரடிப்படையினர் இவர்களை கையும் மெய்யுமாக பிடித்து 90 கிலோ வெட்டிய இறைச்சியுடன் வனஜீவராசிகள் திணைக்களத்தின் உத்தியோகத்தர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான விசாரணைகளை வனஜீவராசிகள் திணைக்களம் மேற்கொண்டு வருவதுடன் கைது செய்யப்பட்ட இருவரையும் கைப்பற்றப்பட்ட 90 கிலோ இறைச்சியையும் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவில் இனப்படுகொலை ஊர்தியில் தீபமேற்றிய வெளிநாட்டுப் பிரஜை!!

வவுனியாவை வந்தடைந்த முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை தீபமேற்றிய ஊர்தியில் இன்று பிற்பகல் வேளையில் பஜார் வீதியில் பொதுமக்கள், வர்த்த நிலையங்களிலுள்ள வர்த்தகர்கள் சுடர் ஏற்றுவதற்கு நிறுத்தப்பட்டிருந்தபோது அவ்வீதியால் சென்ற வெளிநாட்டு பெண் பிரஜை ஒருவர் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவு சுடர் ஏற்றி பலருக்கு முன்னுதாரணமாக விளங்கியுள்ளார்.

வல்வெட்டித்துறையிலிருந்து நேற்று ஆரம்பமான குறித்த வாகன ஊர்தி கிளிநொச்சி, மாங்குளம், ஓமந்தை ஊடாக இன்று பிற்பகல் 12 மணியளவில் வவுனியாவை வந்தடைந்தது.

பழைய பேருந்து நிலையத்திலிருந்து பஜார் வீதியூடாக சென்றபோதே குறித்த வெளிநாட்டு பிரஜை ஒருவர் வாகனத்தில் ஏறி முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை தீபமேற்றிய நினைவுச்சுடரினை ஏற்றி பலரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.