மன்னார் வளைகுடா கடல் பகுதியில் பிடிக்கப்பட்டுள்ள அரியவகை மீன்!!

பாம்பனிலிருந்து மன்னார் வளைகுடா கடலுக்கு சென்ற மீனவர்களின் வலையில் அரியவகை மீனொன்று சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சூரிய மீன் என்று அழைக்கப்படும் குறித்த மீன் அண்மையில் மன்னார் வளைகுடா பாம்பன் பகுதியில் பிடிக்கப்பட்டுள்ளது.

தற்பொழுது மரைக்காயர் பட்டிணத்தில் உள்ள மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலைய ஆய்வாளர்களின் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ள இந்த மீன் பெரும்பாலும் இந்திய பெருங்கடல் மற்றும் பசுபிக் பெருங்கடல் பகுதிகளிலேயே காணப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் அது பாம்பன் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் பிடிக்கப்பட்டுள்ளமை மிகவும் அரிதாகும் என்பதுடன் அந்த மீன் நண்டு, சிப்பிகள், இறால் ஆகியவற்றை உணவாக கொள்ளக்கூடியது. எனினும் இந்த மீன் உண்பதற்கு உகந்ததல்ல என்பதும் குறிப்பிடத்தக்கது.

முள்ளிவாய்க்காலில் இறந்தவர்களை நினைத்து கதறி அழும் உறவுகள் : சொல்ல முடியாத சோகம்!!

முள்ளியாவாய்க்கால் நினைவு தினமாகிய இன்று யாழில் ஈகைச்சுடரேற்றப்பட்டு உயிரிழந்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தப்படுகின்றது. இன்று காலை 11 மணிக்கு வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனால் ஈகைச்சுடரேற்றப்பட்டு இந்த நிகழ்வுகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

இதைத் தொடர்ந்து இறுதி யுத்தத்தில் உயிரிழந்த தமது உறவுகளை நினைத்து அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் பொது மக்களுக்கு ஒழுங்கு செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து கடந்த 4 வருடங்களில் இல்லாத அளவுக்கு பொதுமக்கள் படையெடுத்து வந்துள்ளதையும் காணக்கூடியதாக உள்ளது. இந்த நினைவேந்தல் நிகழ்வுகள் அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்புடனும், மிகவும் பிரம்மாண்டமான முறையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

தமது உறவுகளை இழந்து தவிக்கும் பொது மக்கள் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தியதுடன், கண்ணீர் விட்டு அழும் காட்சி அங்கிருப்பவர்களின் மனதை நெகிழ வைத்துள்ளது.

இந்த நினைவேந்தல் நிகழ்வுகளுக்காக வடக்கு மற்றும் கிழக்கிலிருந்து பல்லாயிரக்கணக்காண மக்கள் படையெடுத்து வந்ததுடன், யாழ். பல்கலைக்கழகத்தில் இருந்தும் மாணவர்களின் பேரணி ஒன்று முள்ளிவாய்க்கால் முற்றத்தை வந்தடைந்தது.

மதத்தலைவர்களின் பூஜை வழிபாடுகளும் இதன்போது நடைபெற்றுள்ளது. அத்துடன் ஈகைச்சுடரை சற்றி பொதுமக்கள் குவிந்திருப்பதையும் காணக்கூடியதாக உள்ளது.

வழமையாக முள்ளிவாய்க்கால் நினைவு தினம் அனுஷ்டிக்கும் போது வெயில் மக்களை சுட்டெரிக்கும்.ஆனால் இம்முறையோ இயற்கையும் தனது வழக்கத்தை மாற்றியுள்ளதாக தோன்றுகின்றது.

சுட்டெரிக்கும் சூரியன் கூட இந்த மக்களைக் கண்டு மனமிறங்கி தனது அக்கினிக்சுவாலைகளை குறைத்துள்ளதாகவே தோன்றுகின்றது.

சோகமயமாக காட்சியளிக்கும் யாழ்ப்பாணம்!!

 

முள்ளிவாய்க்கால் நினைவு தினமாகிய இன்று யாழ்ப்பாணம் முழுவது சோகமயமாக காட்சியளிக்கின்றது. யாழ்ப்பாணம் நகரப்பகுதியில் உள்ள அனைத்து வர்த்தகர்களும் வர்த்தக நிலையங்களை மூடி தமது துக்கத்தை அனுஷ்டிக்கின்றனர்.

வீதியில் சன நடமாட்டம் குறைவாகவும், சில இடங்களில் கறுப்பு கொடிகள் பறக்கவிடப்பட்டு இருப்பதையும் காணக்கூடியதாக உள்ளது.

தமிழினப் படுகொலைகள் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் மண்ணில் இன்றைய தினம் பாரிய நினைவேந்தல் நிகழ்வுகள் நடாத்தப்பட உள்ளன.

இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், வடக்கு கிழக்கு உள்ளிட்ட பல இடங்களில் இன்றைய தினம் துக்கதினமாக அனுஷ்டிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் பெரும்பாலான வர்த்தக நிலையங்கள் வியாபார நடவடிக்கையில்!!

 

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 9ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்றைய தினம் (18.05.2018) வடக்கு, கிழக்கு பகுதிகளில் இடம் பெறவுள்ளமையினால் இன்றைய தினத்தினை துக்க நாளாக வடமாகாணசபை பிரகடனப்படுத்தியுள்ள நிலையில் வர்த்தக நிலையங்களை மதியம் 12 மணிவரை மூடி துக்க நாளாக அனுஸ்டிக்குமாறு வர்த்தக சங்கம், வர்த்தர்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தது.

இருந்தபோதும் வவுனியா நகரில் பெரும்பாலான கடைகள் திறந்து வியாபார நடவடிக்கையில் ஈடுபடுவதை காணக்கூடியதாக இருக்கிறது.

வவுனியாவிலுள்ள அனைத்து வர்த்தக நிலையங்களும் மதியம் 12 மணிக்கு பின்னர் வியாபார நடவடிக்கையில் மேற்கொள்ளுமாறும் வர்த்தக சங்கத்தினர் நேற்று கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கடவுளின் சாபம் : 12 வயதுக்கு மேல் பெண்களுக்கு வளரும் ஆணுறுப்பு!!

Dominican குடியரசு நாட்டில் இருக்கக்கூடிய பரஹோனா மாகாணத்தில் அமைந்திருக்கிறது லாஸ் சலினாஸ் என்ற சிறிய நகரம். இந்த நகரத்தில், பிறக்கும் குழந்தைகள் எல்லாம் பிறக்கும் போது பெண் குழந்தைகளாகத்தான் இருக்கிறார்கள். ஆனால் பருவ வயதை அடைந்தததும் பன்னிரெண்டு வயதிற்கு பிறகு இந்த பெண் குழந்தைகள் எல்லாம் ஆண் குழந்தைகளாக மாறுகிறார்கள்.

இதற்காக இவர்கள் சிகிச்சையோ, அல்லது மருந்து மாத்திரைகளோ எடுத்துக் கொள்வதே கிடையாது. இயற்கையாகவே பருவமடைந்ததும் இந்த பெண் குழந்தைகள் ஆண் குழந்தைகளாக மாறுகிறார்கள்.

இப்படி பன்னிரெண்டு வயதில் ஆணாக மாறுகிறவர்களை guevedoches என்று குறிப்பிடுகிறார்கள். இவர்களுக்கு எல்லாம் பருவ வயதை அடைந்தவுடன் பெண் பிறப்புறுப்பிலிருந்து ஆண் பிறப்புறுப்பு மாறும். இதனை கடவுள் விட்ட சாபம், இதனால்தான் இப்படி ஏற்படுகிறது என இந்த மக்கள் நம்பி வருகிறார்கள்.

ஆனால், சத்து குறைபாட்டால் இவர்களுக்கு இந்த பிரச்சனை ஏற்படுகிறது என கண்டுபிடித்துள்ளார் கார்னெல் மருத்துவக் கல்லூரியிலிருந்து ஜூலியானா இம்பெர்டோ ஜின்லி என்ற மருத்துவர்.

அங்கிருப்பவர்களுக்கு என்சைம் 5 அல்ஃபா ரெடுக்டேஸ் (Enzyme 5 alpha reductase) என்ற சத்து இல்லை என்று தெரியவருகிறது. இவை தான் டெஸ்ட்டோஸ்டிரோனை (Testosterone), டிஹைட்ரோடெஸ்டோஸ்டிரோனாக (Dihydrotestosterone) மாற்றுகிறது. இந்த குறைபாடு இங்கிருக்கும் மக்களுக்கு மரபணு ரீதியாகவே தொடர்ந்து வருவதை கண்டுபிடித்தார்

அதனால் தான் XY குரோமோசோமுடன் பிறக்கும் குழந்தைக்கு போதுமான அளவு ஹார்மோன் கிடைக்காததால் பிறக்கும் போது அதன் வளர்ச்சி இல்லாமல் இருக்கிறது. பார்ப்பவர்கள் ஆணுறுப்பு இல்லை என்றதும் பெண் குழந்தை என்று சொல்லிவிடுகிறார்கள்.

பருவ வயதினை அடையும் போது அவர்களது உடலில் கூடுதலாக டெஸ்டோஸ்டிரோன் சுரக்கும். இதன் போது ஆண் குழந்தைகளின் பருவமடைந்ததற்கான அடையாளங்களாக மீசை வளர்வது, குரல் உடைவது ஆகியவை அந்த நேரத்தில் ஆணுறுப்பு வளர்ச்சிக்கான ஹார்மோன் கிடைக்கப்பெற்று ஆணுறுப்பு வளர்ச்சி அடைகிறது.

திருமணமான சில நிமிடங்களில் புதுமண தம்பதிக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி!!

பிரித்தானியாவில் திருமணமான நாளில் புதுமணத் தம்பதிக்கு சொகுசு பேருந்து தயார் செய்து கொடுக்கப்பட்டது அவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Seaham நகரை சேர்ந்தவர் கோலின் தாம்சன். இவரும் கைலீ என்ற பெண்ணும் காதலித்து வந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது.

திருமணம் முடிந்த புதுமண தம்பதி எல்லா தம்பதிகளை போல வீட்டுக்கு காரில் செல்லாமல் வித்தியாசமாக வேறு வாகனத்தில் செல்ல வேண்டும் என நினைத்தனர். அதன்படியே சொகுசு பேருந்து ஒன்று அவர்களுக்கு தயார் செய்யப்பட்டது.

இதையடுத்து தங்களது உறவினர்கள் நண்பர்களுடன் சேர்ந்து தம்பதிகள் மகிழ்ச்சியாக பேருந்தில் பயணம் செய்தார்கள்.

இது குறித்து பேசிய புதுப்பெண் கைலீ, இது எங்களுக்கு வித்தியாசமான அனுபவமாக இருந்தது. இதை வாழ்க்கையின் அற்புத தருணமாக கருதுகிறோம்.

மாலை நடைபெறவுள்ள விருந்து நிகழ்ச்சியிலும் இதே பேருந்தில் மகிழ்ச்சியாக பயணிக்கவுள்ளோம் என கூறியுள்ளார்.

தீப்பிடித்து எரிந்த வீடு : தந்தை மற்றும் மகள் உடல் கருகி இறந்த பரிதாபம்!!

கனடாவில் உள்ள ஒரு வீடு தீப்பிடித்து எரிந்த நிலையில் உள்ளே இருந்த தந்தை மற்றும் மகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். Saskatchewan மாகாணத்தின் தென் கிழக்கு பகுதியில் அமைந்திருக்கும் ஒரு வீட்டில் வியாழன் அதிகாலை 2 மணிக்கு திடீரென தீப்பிடித்தது.

தீயானது மளமளவென பரவியதையடுத்து அதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தார்கள்.

ஆனால் அதற்குள் வீட்டுக்குள் இருந்த ரயன் ராவென் என்ற நபரும் அவரின் 4 வயது மகளான டனியிலா வியிபும் தீயில் சிக்கி உயிரிழந்தார்கள்.

டனியிலாவின் தாய் டெஸ்டினி வைப்புக்கு காயம் ஏற்பட்ட நிலையில் அவர் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தீப்பற்றியதற்கான காரணம் குறித்து இன்னும் தெரியாத நிலையில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஸ்ரீதேவி மரணத்தில் அடுத்தடுத்த திருப்பங்கள்!!

நடிகை ஸ்ரீதேவியின் மரணம் குறித்து தனிப்பட்ட முறையில் விசாரணை நடத்தி வரும் டெல்லி காவல் துறையின் முன்னாள் உதவி ஆணையாளர் புது தகவல்களை வெளியிட்டு அதிரடி திருப்பங்களை ஏற்படுத்தி வருகிறார்.

குளியல் தொட்டியில் மூழ்கி நடிகை ஸ்ரீதேவி உயிரிழந்துவிட்டார் என்றும் அவரது மரணம ஒரு விபத்து எனவும் துபாய் அரசாங்கம் சார்பில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. ஆனால், ஸ்ரீதேவி மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் ஆணையாளர், இது ஒரு திட்டமிட்ட கொலை என கூறிவருகிறார்.

குளியல் தொட்டியில் போட்டு அழுத்தி அவரை கொலை செய்துவிட்டு குற்றவாளி தப்பித்திருக்கலாம், ஸ்ரீதேவி இறந்தபின்னர் 2 நாட்கள் கழித்து அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டபோது, அவரது உடம்பில் ஆல்கஹால் இருந்துள்ளது என துபாய் பொலிசார் தெரிவித்தனர்.

ஆனால், அப்படியிருந்தும் இந்த தகவலை முழுமையாக தெரிவிக்காமல், இது ஒரு விபத்து எனக்கூறி இதனை முடித்துவிட்டனர், எனவே இதில் பல கேள்விகள் உள்ளன. மேலும், இதுகுறித்து விசாரிப்பதற்காக ஸ்ரீதேவி தங்கியிருந்த Jumeirah Emirates Towers – க்கு சென்று விசாரணை நடத்த ஆணையாளர் முயன்றுள்ளார்.

ஆனால், அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் அருகில் உள்ள ஹொட்டல் அறையில் தங்கியிருந்து விசாரணை நடத்தி வரும் இவர் ஸ்ரீதேவி மரணத்தில் இருக்கும் மர்மத்தை கண்டுபிடிப்பேன் என கூறியுள்ளார்

தன் உயிரை கொடுத்து பேத்தியை காப்பாற்றிய பாட்டி : நெகிழ்ச்சி சம்பவம்!!

சென்னையில் தனது பேத்தியின் உயிரை காப்பற்றுவதற்காக பாட்டி தனது உயிரை விட்டுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை முகப்பேரை சேர்ந்த நடராஜன் – லட்சுமி தம்பதியினர் பூ வியாபாரம் செய்து வருகின்றனர். 2 மாடிகள் கொண்ட வீட்டின் முதல் தளத்தில் வாடகைக்கு வசித்து வருகின்றனர்.

வழக்கம்போல் லட்சுமியும் நடராஜனும் வீட்டின் பால்கனியில் உட்கார்ந்து வியாபாரத்துக்காக பூ கட்டிக்கொண்டு இருந்தனர். லட்சுமியின் மடியில் அவரது பேத்தி லக்ஷனா அமர்ந்திருந்தார்.

அப்போது இரண்டாவது தளத்தின் பால்கனி திடீரென இடிந்து விழுந்தது. விபத்தில் இருந்து தனது பேத்தி லக்ஷனாவை காக்க அவரை இறுக்கி அணைத்துக்கொண்டதால், கட்டிடம் இடிந்து அவர் மீது விழுந்துள்ளது. பேத்தி லக்ஷனா சிறிய காயங்களுடன் தப்பினார். லட்சுமி மற்றும் நடராஜனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

இருவரும் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் லட்சுமி உயிரிழந்து விட்டதாக கூறினர். இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈழம் தொடர்பான படம் : நிர்வாணமாக நடித்த நடிகைக்கு கொலை மிரட்டல்!!

ஈழப்போரின் போது தமிழ்மக்கள் மீது நடத்தப்பட்ட வன்முறைகள் தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள திரைப்படம் 18.05.2009. இப்படம் ஈழப் போரின் கடைசி நாளான மே 18ல் சிங்கள இராணுவத்தால் ஈழத் தமிழ் மக்கள் மீது கட்டவிழ்க்கப்பட்ட வன்முறையைப் பற்றி பேசுகிறது.

இத்திரைப்படத்தில் சுபாஷ் சந்திர போஸ், பிரபாகரன். நாகிநீடு, தான்யா, ஜேக்கப், ஸ்ரீராம், பாலாஜி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இசைஞானி இளையராஜா இசையமைத்திருக்கிறார்.

இன்று இத்திரைப்படம் வெளியாகிறது. இந்நிலையில் இந்த படத்தில் நடித்துள்ள நடிகை தன்யாவுக்கு, போர்க்கள காட்சியில் நிர்வாணமாக நடித்திருப்பதாக கூறப்படுகிறது.

தற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தொலைபேசி வாயிலாக பேசிய ஒரு மர்ம நபர் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததோடு, நடிகையை ஆபாசமாகவும் திட்டியிருக்கிறார்.

தந்தை இல்லாத நிலையில் தாயுடன் வசித்து வரும் தன்யா, இந்த கொலை மிரட்டல் தனக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதால் உயிருக்கு பாதுகாப்பு வழங்குமாறு சென்னை கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.

-தமிழ்வின்-

மின்னல் தாக்கி இளைஞரொருவர் பரிதாபமாக உயிரிழப்பு!!

திருகோணமலை – தம்பலகாமம் பகுதியில் வயல் வெளியில் வேலை செய்து கொண்டிருந்த இளைஞரொருவர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் நான்காம் வாய்க்கால் பகுதியை சேர்ந்த என்.எம்.முனீஸ் எனும் 20 வயது இளைஞரே உயிரிழந்துள்ளதாக தம்பலகாமம் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதுடன், உயிரிழந்தவரின் சடலம் கந்தளாய் தள வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை உறவினர்களிடம் சடலத்தினை கையளிப்பதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன், மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.

இலங்கையில் வியப்பூட்டும் அபூர்வ சம்பவம்!!

இலங்கையில் மயில் குஞ்சுகள் இரண்டினை கோழி ஒன்று பாதுகாக்கும் அபூர்வ சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. தம்பதெனிய, சாலியாய ஸ்ரீ வர்தனாராம விகாரையில் வாழும் கோழி ஒன்று தனது இனத்திற்கு சொந்தமல்லாத மயில் குஞ்சுகளை பாதுகாத்து வருகிது,

தனது பிள்ளைகளை போன்று மிகவும் அன்புடன் இந்த கோழி, மயில் குஞ்சுகளை பாதுகாப்பதாக அந்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த மயில் குஞ்சுகளுக்காக கோழி உணவு தேடி வழங்கி வருகிறது. மக்கள் சமூகத்தில் பார்க்க முடியாத அபூர்வ சம்பவங்களையும், உலகத்திற்கு எடுத்துக்காட்டான சம்பவங்களையும் மிருகங்கள் மத்தியில் இன்று பார்க்க முடிகின்றதென மக்கள் தெரிவித்துள்ளனர்.

வெள்ளவத்தையில் ஒருவருக்கு ஏற்பட்ட அதிர்ச்சி!!

வெள்ளவத்தையில் வாகனத்தை நிறுத்த சென்ற நபருக்கு சில நாட்களில் பேரதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. வெள்ளவத்தையிலுள்ள வாகன நிறுத்தும் இடம் ஒன்றில் 30 ரூபாய் கட்டணத்தை செலுத்த தவறிய ஒருவருக்கு 10000 ரூபாய் அபராதம் செலுத்த நேரிட்டுள்ளது. 13 நாட்களுக்கு பின்னர் குறித்த நபருக்கு 10,120 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் 25ஆம் திகதி வெள்ளவத்தையில் தனது காரை நிறுத்தியிருந்த குறித்த நபர், வாகன நிறுத்தும் இடத்திற்கு அருகில் உள்ள இயந்திரத்தில் 30 ரூபா பணத்தை செலுத்த மறந்துள்ளார்.

இயந்திரத்தின் ஊடாக பணம் செலுத்தப்பட வேண்டும் என அந்த நபர் அறிந்திருக்கவில்லை என தெரிவித்துள்ளார். பணம் அறவிட ஒருவரும் அந்த இடத்தில் இல்லாமையினால் ஒரு மணித்தியாலத்திற்கு 30 ரூபா என்ற கட்டணத்தை செலுத்தாமல் அவ்விடத்தை விட்டு அவர் சென்றுள்ளார்.

13 நாட்களுக்குப் பிறகு, தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்ட நிறுவனத்தால் 10,120 ரூபாய் செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்ட போதிலும் அவர் அதனை செலுத்த தவறியுள்ளார்.

பின்னர் அவர் கொழும்பு மாநகர சபையின் உத்தரவுக்கு அமைய குறித்த அபராத தொகையை செலுத்தியுள்ளார்.

 

தமிழர்களை கடத்தும் மர்மநபர்கள் : அதிர்ச்சி காணொளியை வெளியிட்ட பொலிஸார்!!

 

திருகோணமலையில் கடந்த ஜனவரி 5 ஆம் திகதி இளைஞன் ஒருவரை கடத்திச் சென்று 25 லட்சம் ரூபா கப்பம் பெற்ற சம்பவத்துடன் தொடர்புடைய பெண் மற்றும் இரண்டு ஆண்களை கைது செய்ய பொலிஸார் பொதுமக்களின் உதவியை கோரியுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் திருகோணமலை மஹாமாயாபுர பகுதியை சேர்ந்த தோனி என அழைக்கப்படும் இனோகா நில்மினி, அவரது காதலன் மற்றுமொரு நபரை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்த சந்தேக நபர்கள் பற்றிய தகவல் அறிந்தால், அது குறித்து 026 -2222222/3 ஆகிய தொலைபேசி இலக்கங்கள் மற்றும் திருகோணமலை பொலிஸ் தலைமையகத்தின் பொலிஸ் பரிசோதகரின் 071- 8591174 என்ற தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புக்கொண்டு அறிவிக்குதாறு கோரப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக ஏற்கனவே மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்தவர்களுக்கு சுடரேற்றி அஞ்சலி!!

 

முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த மக்களுக்கான சுடரேற்றி அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று (18.05.2018) காலை 7.30 மணியளவில் வவுனியா குட்செட் வீதியில் அமைந்துள்ள கருமாரியம்மன் ஆலயத்தில் தமிழ் விருட்சம் அமைப்பினர் மற்றும் ஆலய பரிபாலன சபை ஏற்பாட்டில் நடைபெற்றது.

முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த மக்களுக்கான ஆத்மா சாந்தியடைய வேண்டி ஆலயத்தின் பிரதம குரு சிவஸ்ரீ பிரபாகர குருக்கள் பூஜை வழிபாடுகளை மேற்கொண்டிருந்தார். நிகழ்வில் சுட்டிகளில் நெய்விளக்கேற்றி உயிர் நீத்தவர்களை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந் நிகழ்வில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடக்கு மாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம், முன்னாள் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகதாரலிங்கம், முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் எஸ்.மயூரன், வவுனியா நகரசபை உப நகரபிதா எஸ்.குமாரசாமி, தமிழ் விருட்சம் சமூக ஆர்வலர் அமைப்பின் தலைவர் எஸ்.சந்திரகுமார் , பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டு சுடரேற்றி அஞ்சலி செலுத்தினர்.

வவுனியா மாவட்ட அந்தணர் ஒன்றியத்தால் முள்ளிவாய்க்கால் அஞ்சலி நிகழ்வு!!

முள்ளிவாய்க்கால் நினைவு தினம் வடக்கு கிழக்கு பிரதேசமெங்கும் அனுஸ்டிக்கப்பட்டு வரும் நிலையில் வவுனியா மாவட்ட அந்தணர் ஒன்றியத்தினால் இன்று (18.05.2018) காலை குருமன்காட்டு சித்தி விநாயகர் ஆலயத்தில் அஞ்சலி பிரார்த்தனை நிகழ்வு இடம்பெற்றது.

அ ந்தணர் ஒன்றியத்தின் செயலாளர் மயூரசர்மா தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் முத்து ஜெயந்திநாதக்குருக்கள் ஆத்மசாந்தி பிரார்த்தனையை நடத்தியிருந்தார்.

இதனையடுத்து அஞ்சலிச்சுடர்கள் ஏற்றப்பட்டு இறந்த ஆத்மாக்களுக்காக பொதுமக்கள், அந்தணர்கள், ஆலய நிர்வாகத்தினர் நெய் விளக்கேற்றி அஞ்சலி செலுத்தினர்.