பலரை வியப்பில் ஆழ்த்திய இலங்கை மூதாட்டி : இளம் பெண்களால் முடியுமா?

வயதாகினால் உடலில் வலிமை குறைவடையும் என்ற போதிலும், இன்னமும் இளம் வயதினர் போன்று செயற்பாடும் பாட்டி ஒருவர் தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது.

இலங்கையில் உள்ள சிங்கள கிராமம் ஒன்றில் வாழும் வயோதிப பெண் ஒருவர் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்படுகிறது. அவர் மரம் ஒன்றில் கட்டப்பட்டுள்ள ஊஞ்சலில் சிறுபிள்ளை போன்று நின்று கொண்டே ஊஞ்சல் ஆடுகின்றார்.

அவர் மிகவும் வேகமாக ஊஞ்சல் ஆடும் காட்சியினை அவரது உறவினர்கள் காணொளியாக பதிவிட்டு சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர்.

இதனை வயதிலும் மிகவும் திடமாக ஊஞ்சல் ஆடும் பாட்டியின் செயற்பாடு பலருக்கு முன்னூதாரணமாக உள்ளதாகவும், நவீன கால இளம் பெண்களினால் கூட இவ்வாறு ஊஞ்சல் ஆட முடியாதென எனவும் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

பிரித்தானிய நிகழ்ச்சியில் அழகியின் முகத்தை கடித்து குதறிய நாய்!!

பிரித்தானியாவில் நாயால் தாக்கப்பட்டு படுகாயமடைந்த அழகி, கடுமையான சூழலில் இருந்த போது தனக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி என கூறியுள்ளார்.

அவுஸ்திரேலியாவில் பிறந்த சுஸெல் மக்கின்டோஷ்(23) என்ற அழகி தற்போது பிரித்தானியாவின் தலைநகர் லண்டனில் வசித்து வருகிறார்.

இந்நிலையில் பிரித்தானியாவின் ஸ்டபோர்டுஷைரில் கடந்த ஆண்டு நடந்த புத்தாண்டு நிகழ்ச்சியின் போது சுஸெல் என்ற நாயை அன்பாக தட்டிக் கொடுத்தார்.

அப்போது எதிர்பாராதவிதமாக அந்த நாய் அழகியின் முகத்தை கடித்து குதறியதால், அவர் தன் மூக்கு முகத்தில் இருந்து கிழிந்து தொங்குவதைப் போல் உணர்ந்ததாக கூறினார்.

அதுமட்டுமின்றி இந்த தாக்குதலினால் அவரின் முகம் கோரமானது. இதனால் சிகிச்சை மேற்கொண்டு வந்த அவர் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டார்.

இதையடுத்து சமூகவலைத்தளத்தில் தன் சிகிச்சை குறித்து கூறுகையில், தனக்கு தன்னம்பிக்கை ஊட்டி, மீண்டு வர காரணமாக இருந்தவர்கள் அனைவருக்கும் நன்றி எனவும் வாழ்வின் கடினமான சூழலை கடந்து செல்கையில், அன்பைப் பொழிந்து, உறுதுணையாக நின்ற அனைவருக்கும் நன்றி எனவும்ம் உங்கள் ஆதரவின்றி நான் மீண்டு வந்திருக்க முடியாது, நீங்கள் கூறிய ஒவ்வொரு ஆறுதல் வார்த்தைகளை அளவிட முடியாதது என்று கூறியுள்ளார்.

மேலும் அவர், இது போன்ற சூழலின் போது தன்னை தனியாக தவிக்கவிடாமல் அரவணைத்து செல்லும் நபர்களால் நான் எவ்வளவு அதிர்ஷ்டம் நிறைந்தவன் என்பதை உணர்வதாகவும், இவ்வளவு அக்கறை செலுத்தும் நீங்கள் எப்போதும் என்னுடனே தொடர வேண்டும் கூறியுள்ளார்.

போர்க்களமான ஜெருசலேம் : கொன்று குவிக்கப்பட்ட பாலஸ்தீனிய மக்கள்!!

ஜெருசலேமில் அமெரிக்க தூதரகம் திறப்பதை கண்டித்து நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் இஸ்ரேலிய படைகள் 43 பாலஸ்தீனிய மக்களை கொன்று குவித்துள்ளது. குறித்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்களில் சுமார் 2,200 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும், இதனால் இறப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் அஞ்சப்படுகிறது.

ஜெருசலேமில் அமெரிக்க தூதரகம் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுமார் 35,000 பாலஸ்தீனிய மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குறித்த நிகழ்வில் இவான்கா டிரம்ப் தமது கணவருடன் கலந்து கொண்டுள்ளார்.

மொத்த நகரத்தையும் இஸ்ரேலின் ஆட்சி அதிகாரத்திற்கு கொண்டுவரும் திட்டத்திற்கு அமெரிக்க அரசு ஆதரவாக செயல்படுவதாக பாலஸ்தீனிய மக்கள் கருதுகின்றனர்.
மட்டுமின்றி காஸாவை ஆட்சி செய்யும் இஸ்லாமியவாத ஆட்சியாளர்கள் கடந்த ஆறு வாரங்களாக பெரும் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வந்தனர்.

எல்லை வேலியை தாண்டவே போராட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டங்களை நடத்துவதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

இஸ்ரேலின் டெல் அவீவ் நகரத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தை ஜெரூசலேத்திற்கு மாற்றும் டிரம்பின் முடிவு பாலஸ்தீனர்களை கோபப்படுத்தியது.

இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் சிலமாதங்களுக்கு முன்னர் அறிவித்தார்.

மேலும், டெல் அவிவ் நகரில் உள்ள அமெரிக்க தூதரகம் ஜெருசலேமுக்கு மாற்றப்படும் என்று உறுதியளித்தார். அவரது இந்த அறிவிப்புக்கு பல நாடுகள் கண்டனம் தெரிவித்தன.

இந்நிலையில், கிழக்கு ஜெருசலேம் நகரில் கட்டப்பட்டுள்ள அமெரிக்க தூதரகம் இன்று திறக்கப்பட்டது.

அமெரிக்க தூதரகம் திறப்பதை கண்டித்து காஸா மற்றும் மேற்குக்கரை எல்லையில் ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டம் வன்முறையாக மாறிய நிலையில், இஸ்ரேல் ராணுவத்தினரின் துப்பாக்கிச்சூட்டில் 43 பேர் இதுவரை பலியாகியுள்ளனர். சுமார் 2,200 பேர் படுகாயமடைந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கை வீரர் லசித் மலிங்கவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

இலங்கை கிரிக்கெட் அணியின் மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க ஆவார். இவரது பந்துவீச்சு பாணி காரணமாக “சிலிங்க மலிங்க” என்ற புனைப்பெயரால் அழைக்கப்படுகிறார். இவரது பந்துவீச்சு மட்டுமன்றி இவரது சிகை அலங்காமும் உலக மக்கள் மத்தியில் பிரலமானது.

கிரிக்கெட் விளையாட்டின் மீது இருந்த அதிகமான ஈடுபாட்டால் 11 வயதில் இருந்து கிரிக்கெட் விளையாட ஆரம்பித்தார். இலங்கை கிரிக்கெட் அணியில் இணைந்த பின்னர், 2014 ஆம் ஆண்டில் இலங்கை கிரிக்கெட் அணியில் இவரது பங்கு அளப்பறியது.

காரணம், 2014 ஆம் ஆண்டில் இலங்கை கிரிக்கெட் அணியின் டி20 போட்டி மற்றும் ஒருநாள் போட்டியின் அணித்தலைவராக இருந்த இவர், அந்த ஆண்டு இலங்கை அணி டி20 போட்டி வெற்றி பெறுவதற்கு பங்கு வகித்தார்.

தனது முகம் மற்றும் உடம்பில் ஏற்பட்ட காயங்கள் காரணமாக அணித்தலைவர் பதவியில் இருந்து விலகிய இவர், 2016 ஆம் ஆண்டில் இருந்து கிரிக்கெட் போட்டியில் பின் தள்ளப்பட்டார். அதுமட்டுமன்றி கடந்த 2017 ஆம் ஆண்டில் இந்தியாவுடன் மோதிய டி20 போட்டியில் மலிங்கவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது.

இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளில் அதிரடி ஆட்டக்காரராக இருந்து வந்த மலிங்க, இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் இடம்பெறவில்லை. மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வந்த இவரை, அந்த அணியும் இந்த ஆண்டு ஏலத்தில் எடுக்கவில்லை.

லசித் மலிங்கவின் நிகர மதிப்பு மற்றும் ஐபிஎல்லில் அவரது சம்பளம் ஆகியவற்றினை அடிப்படையாக வைத்து அவரது சொத்து மதிப்பு 8 மில்லியன் டொலர் ஆகும். 2016 ஆம் ஆண்டில் ஐபிஎல் போட்டியில் இவருக்கு வழங்கப்பட்ட சம்பளம் 1 மில்லியன் டொலர் ஆகும்.

வரதட்சணை கொடுமையால் நிறைமாத கர்ப்பிணி உயிரிழந்த சோகம்!!

தமிழகத்தில் வரதட்சனை கேட்டு கொடுமை செய்த கணவனால் 7 மாத கர்ப்பிணி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டம் அழகிரி காலனியைச் சேர்ந்தவர் பிரேமா, இவர் குடிதாங்கி சேரியை சேர்ந்த மாசிலாமணி என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார்.

இதையடுத்து பிரேமா 7 மாத கர்ப்பமக இருந்துள்ளார், இந்நிலையில் மாசிலா மணி, பிரேமாவிடம், அவர்கள் வீட்டில் வரதட்சணையாக மினிவேன் வாங்கித்தரும் படி கூறியதாக கூறப்படுகிறது.

தொடர்ந்து இதுகுறித்து மாசிலாமணி அவரை தொந்தரவு செய்து வந்ததால், மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான பிரேமா விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இதுகுறித்த தகவல் உறவினர்களுக்கு தெரியவந்ததால், அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போதும், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்துள்ளார்.

இந்த தகவலை அறிந்த பொலிசார் அவர் தற்கொலை செய்து கொண்டது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் அவரது குடும்பத்தினர் பிரேமாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி உடலை வாங்க மறுத்ததாகவும் கூறப்படுகிறது.

எங்களை கருணை கொலை செய்யுங்கள்: கண்ணீருடன் வந்த சகோதரிகள்!!

தங்களது சொந்த நிலத்திற்கு வேறு ஒரு நபர் உரிமை கொண்டாடுவதால் தங்களை கருணை கொலை செய்துவிடுமாறு சகோதரிகள் இருவர் கண்ணீர் மல்க திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் கீழ்நல்லாத்தூர் கிராமத்தில் எல்லம்மாள் என்பவருக்கு சொந்தமான 12 சென்ட் நிலம் உள்ளது. அவரது வாரிசுகளான ஜெயலட்சுமி, கன்னியம்மாள், சாரதா ஆகியோர் அந்த நிலத்திற்கு உரியவர்கள் என்ற நிலையில், சக்கரவர்த்தி என்பவர் போலி ஆவணங்கள் தயார் செய்து நிலத்திற்கு உரிமைக் கொண்டாடி வருவதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்கள் காவல்நிலையத்தில் பலமுறை புகார் அளித்தாலும், சக்கரவர்த்தி ஆயுதப்படை காவலர் என்பதால் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்தநிலையில், பாதிக்கப்பட்ட பெண்கள் தங்கள் வீட்டையும், சொத்தையும் மீட்டுக்கொடுக்க வேண்டும் அல்லது தங்களை கருணை கொலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மனைவி ஓடிப் போய்விடுவாள் : மேலதிகாரிக்கு கான்ஸ்டபிள் எழுதிய கடிதம்!!

இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் வித்தியாசமான முறையில் விடுப்பு கேட்டு அனுப்பிய கடிதம் வைரலாகி வருகிறது.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் ரிசர்வ் பொலிஸ் கான்ஸ்டபிளாக பணிபுரிந்து வருபவர் தர்மேந்திர சிங்.
அவர் கடந்த நான்கு மாதமாக விடுப்பு எடுக்காமலும், மனைவியை நேரில் சென்று பார்க்காமலும் இருந்துள்ளார்.

இதனால் கோபமடைந்த மனைவி, 4 மாதங்களுக்கு ஒருமுறை கூட மனைவியை பார்க்க வரவில்லை என்றால், எதற்கு திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று காட்டமாக கூறியுள்ளார்.

இதையடுத்து அவர், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு விடுப்பு கேட்டு தனது மேலதிகாரிக்கு ஒரு விண்ணப்பம் அளித்துள்ளார்.

அதில், 10 நாட்கள் விடுப்பு பெற்று வீட்டிற்கு செல்லவில்லை என்றால், மனைவி தன்னை விட்டு பிரிந்து சென்று விடுவாள். ஆதலால் தனக்கு விடுப்பு அளிக்குமாறு பணிவுடன் கேட்டுக் கொள்வதாக குறிப்பிட்டிருந்தார்.

அவரது நிலைமையையும், விடுப்பிற்கான காரணத்தின் தீவிரத்தையும் உணர்ந்த மேலதிகாரி ராணா மஹேந்திரா பிரதாப், உடனடியான அனுமதி வழங்கினார்.

இந்நிலையில் பொலிஸ் கான்ஸ்டபிளின் விடுப்பு விண்ணப்பம் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

குழந்தைகளின் உயிரைப் பறித்த மர்மமான வைரஸ்!!

காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் உள்ள சிறுவர் சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த 5 குழந்தைகள் அடையாளம் காணப்படாத வைரஸ் நோய் தாக்கத்திற்கு உட்பட்டு உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த சில தினங்களில் இந்த மரணங்கள் நடந்துள்ளதுடன் இந்த வைரஸ் காரணமாக சுகவீனமடைந்த இரண்டு குழந்தைகள் வைத்தியசாலையில் சிகிக்சைப்பெற்று வருகின்றன.

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள கராப்பிட்டிய வைத்தியசாலையின் பணிப்பாளர் ஜயம்பதி சேனாநாயக்க, கடந்த சில தினங்களில் 5 குழந்தைகள் உயிரிழந்தன. பக்டீரியா இதற்கு காரணமாக இருக்கலாம் என முதலில் நாங்கள் நினைத்தோம்.

எனினும் வைரஸ் இதற்கு காரணம் என பின்னர் கண்டறிந்தோம். அந்த வைரஸ் என்ன என்பதை எம்மால் கண்டுபிடிக்க முடியாதுள்ளது. இது சம்பந்தமாக விசேட கலந்துரையாடல்களை நடத்தியுள்ளோம். குழந்தையின் இரத்த மாதிரிகள் பரிசோதனைகளுக்காக கொழும்பு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இன்னும் சில குழந்தைகள் சுகவீனமான நிலையில் உள்ளன. நாங்கள் இது சம்பந்தமான பரிசோதனைகளை நடத்தி வருகிறோம். இதனைதான் தற்போது கூற முடியும் எனவும் ஜயம்பதி சேனாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

எச்சரிக்கை : முல்லைத்தீவில் மின்னல் தாக்கி பரிதாபமாக பலியான சிறுவன்!!

முத்துஜயன்கட்டு ஜீவநகர் அம்மன் கோவில் பகுதியில் 14 வயது மணவன் ஒருவர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளார். முத்துஜயன் கட்டு இடதுகரை அரசினர் தமிழ்கலைவன் பாடசாலையில் தரம் 9இல் கல்வி கற்கும் பி.தினேஸ்குமார் என்ற 14 வயது மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நேற்று பிற்பகல் வீட்டு முற்றத்தில் நின்ற சிறுவன் மீது மீன்னல் தாக்கியதாக தெரிவிக்கப்படுகின்றது. உடனடியாக ஒட்டுசுட்டான் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் குறித்த மாணவன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த மாணவனின் தந்தை இறுதி யுத்தத்தின்போது உயிரிழந்துள்ளதுடன் மிகவும் வறுமை கோட்டின் கீழ் வாழ்ந்து வந்துள்ளார்.

இந் நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக பரிதாபகரமாக இந்த மாணவன் உயிரிழந்துள்ளதாக அந்தப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

பிரபல தமிழ் திரைப்பட நடிகரின் மகன் திடீர் மரணம்!!

மறைந்த பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரனின் மூத்த மகனான பாலாஜி ரவிச்சந்திரன் உடல்நலக் குறைவால் சென்னையில் இன்று காலமானார்.

காதலிக்க நேரமில்லை படத்தின் மூலம் 1964-ம் ஆண்டு தமிழ்த் திரையுலகுக்கு அறிமுகமானவர் ரவிச்சந்திரன். இவர் ஏராளமான தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். ரவிச்சந்திரனுக்கு பாலாஜி, அம்சவர்தன் என்ற இரு மகன்களும், லாவண்யா என்ற மகளும் உள்ளனர்.

இதில் அம்சவர்தன் தமிழ் திரையுலகில் நடிகராக உள்ளார். மூத்தவரான பாலாஜி தொழில் செய்து வந்த நிலையில் சமீபகாலமாக சிறுநீரக பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் இன்று சென்னையில் பாலாஜி காலமானார், உயிரிழந்த பாலாஜிக்கு மனைவியும், மகனும் உள்ளனர்.

யாழ். மக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள விசேட அறிவித்தல்!!

யாழ்ப்பாணத்தில் போதைப் பொருள் கடத்தல் – விற்பனையை முற்றாக ஒழிக்க வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் றொஷான் பெர்னாட்டோவால் சிறப்பு பொலிஸ் செயலணி அமைக்கப்பட்டுள்ளது.

இந்தச் செயலணியின் பணிகள் யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அந்தச் செயலணி தொடர்பான விழிப்புணர்வு சுவரொட்டிகள் குடாநாட்டின் அனைத்து பொலிஸ் நிலையங்கள் ஊடாகவும் ஒட்டப்படவுள்ளன.

“யாழ்ப்பாணத்தில் மாவா போதைப் பொருள், போதைக் குளிசைகள், ஹெரோயின் மற்றும் கஞ்சா போதைப் பொருள்களின் விற்பனை அதிகரித்துள்ளது.

அவற்றை விற்பனை செய்வோருக்கும் பொலிஸாருக்கும் இடையே தொடர்பு உள்ளதாக வடக்கு மாகாண மூத்த பொலிஸ் மா அதிபருக்கு பல முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டிருந்தன. அவை தொடர்பில் விசாரணைகள் இடம்பெறுகின்றன.

இந்த நிலையில் யாழ்ப்பாணத்தில் போதைப் பொருள்களின் கடத்தல் – விற்பனையை முற்றாக ஒழிக்க சிறப்பு பொலிஸ் செயலணியை மாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் நியமித்துள்ளார்.

அந்த செயலணிக்கு பொதுமக்கள் தமது முறைப்பாடுகளை 0766093030 என்ற கைபேசி இலக்கத்தில் தொடர்புகொண்டு முன்வைக்க முடியும். முறைப்பாடுகளின் இரகசியத் தன்மை பாதுகாக்கப்படும்.

செயலணி துரிதமாக செயற்பட்டு போதைப் பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் விற்பனையாளர்களைக் கைது செய்வர். எனவே அனைவரும் இந்த செயற்றிட்டத்துக்கு ஒத்துழைக்கவேண்டும்” என்று வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ்மா அதிபரின் அலுவலகத் தகவல்கள் தெரிவித்தன.

வவுனியா வடக்கில் 4 பாலங்கள் மக்கள் பாவனைக்காக திறந்துவைப்பு!!

வவுனியா வடக்கு பிரதேச சபைக்குட்பட்ட கிராமங்களான மாறாவிலுப்பை, நெடுங்கேணி, பெரியமடு, பழையவாடி ஆகிய கிராமங்களின் பிரதான வீதிகளில் புதிதாக அமைக்கப்பட்ட 4 பாலங்கள் இன்று திறந்து வைக்கப்பட்டன.

மாகாண வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் நிதியுதவில் ஒவ்வான்றும் தலா ரூபா 28 மில்லியன் செலவில் அமைக்கப்பட்ட பாலங்கள் மக்கள் பாவனைக்காக இன்று (14.05.2018) திறந்து வைக்கப்பட்டன.

இந்த நிகழ்வுகளில் வடக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சரும் மா.ச.உறுப்பினருமாகிய மருத்துவர் ப.சத்தியலிங்கம், மா.ச.உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன், வவனியா வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் ச.தணிகாசலம், மற்றும் பிரதேச சபையின் உறுப்பினர்கள், மாகாண வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர், பிரதேச சபையின் செயலாளர், பொதுமக்களென பலரும் கலந்து கொண்டனர்.

வவுனியா வைரவப்புளியங்குளம் வீதியில் கழிவுகள் : மக்கள் விசனம்!!

வவுனியாவில் வைரவப்புளியங்குளம் குளக்கட்டுப்பகுதியில் கடந்த சில தினங்களாக குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றமை அதிகரித்துக்காணப்படுகின்றது. இதனைக் கட்டுப்படுத்துவதில் நகரசபையினர் பொறுப்பற்ற விதத்தில் நடந்துகொள்வதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

நேற்று வைரவப்புளியங்குளம் குளக்கட்டு வீதிகளில் இறைச்சிக்கு வெட்டப்பட்ட கோழிகளின் எச்சங்கள் ஒரு பையில் எடுத்துவரப்பட்டு நடுவீதியில் இனந்தெரியாதவர்கள் வீசிவிட்டு சென்றுள்ளனர். அப்பகுதியால் செல்லும் பொதுமக்கள் இதனால் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளனர்.

கடந்த சில தினங்களாக இவ்வாறு அப்பகுதியில் குப்பைகள் வீசப்பட்டு வருகின்றதைக்காணக்கூடியதாக உள்ளதாகவும் இதனைக்கட்டுப்படுத்தவதற்கு நகரசபையினர் நடவடிக்கை மேற்கொள்ளத் தவறியுள்ளதாகவும் நகரசபைக்கு உறுப்பினராகத் தெரிவானவர்கள் இவ்விடயத்தில் கவனம் எடுக்கத் தவறிவிட்டதாகவும்,

குறிப்பாக வைரவப்புளியங்குளம் பகுதியில் பிரசித்தி பெற்ற இந்து ஆலயம் ஒன்றும் காணப்படுகின்றது இவ்வாறு காணப்படும் ஆலயத்திற்குச் செல்லும் வீதியில் இறைச்சிக்கு வெட்டப்பட்ட கோழிகளின் எச்சங்கள் திட்டமிடப்பட்டு வீசப்பட்டு வருவதாகவும் இதனால் ஆலயங்களுக்குச் செல்லும் மக்கள் உட்பட அவ்வீதியால் பயணிக்கும் மாணவர்கள் வரை அசௌகரியத்திற்குட்படுவதாகவும்,

இக்கழிவுகளை இறைச்சிக்கடை வைத்திருக்கும் வர்த்தகர்களே இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் இதனைக் கட்டுப்படுத்தவதற்கு நகரசபை நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர்..

வெளிநாட்டில் இருந்து தாயை பார்க்க வந்த மகன் : ஒரே நாளில் உயிர் பிரிந்த சோக சம்பவம்!!

திருநெல்வேலி மாவட்டத்தில் தாய் இறந்த துக்கம் தாங்கமுடியாமல் மகனும் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கமலா மிஷியர் (வயது 69) என்பவருக்கு 3 மகன்கள் உள்ளனர். 3-வது மகனான குட்வின் (40) வெளிநாட்டில் கப்பல் ஊழியராக வேலை பார்த்து வந்தார். தனது தாயின் மீது அதிக பாசம் வைத்திருக்கும் குட்வின், தாயை பார்ப்பதற்காக 2 வாரங்களுக்கு முன்னர் விடுமுறையில் வந்துள்ளார்.

இந்நிலையில் உடல் நலம் பாதிக்கப்பட்ட கமலாவை மருத்துவமனைக்கு குட்வின் அழைத்து சென்றுள்ளார். பின்னர் ஸ்கேன் மையத்தில் ஸ்கேன் எடுத்துவிட்டு வீட்டுக்கு புறப்பட தயாரானபோது, தாயார் திடீரென மயங்கி விழுந்தார். மருத்துவர் பரிசோதித்தபோது அவர் இறந்து விட்டதாக கூறினர்.

தாயார் உடலை பார்த்து அழுதபடியே குட்வின் இருந்தார். கமலாவின் உடலை அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்தன. திடீரென குட்வின் மயங்கி விழுந்தார். உடனே அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர், அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

தாய் இறந்த துக்கம் தாங்காமல் குட்வின் மாரடைப்பு ஏற்பட்டு இறந்தது தெரியவந்தது. அன்னையர் தினமான நேற்று தாய்- மகன் இருவரது உடல்களும் ஒரே இடத்தில் அருகருகே அடக்கம் செய்யப்பட்டன.

7 வயதுச் சிறுமியை கொலை செய்த பெண் : காரணம் என்ன?

தமிழகத்தில் 7 வயது சிறுமி கொலை தொடர்பாக பெண் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர். ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்து கருமாண்டி செல்லிபாளையம் பகுதியை சேர்ந்தவர் சண்முகநாதன்.
இவரது 7 வயது மகளான தனிஷ்கா சமீபத்தில் மயக்க நிலையில் மீட்கப்பட்டார்.

உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது, பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாகவும், சிறுமியின் கழுத்து, முகம் ஆகிய பகுதியில் காயம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து பொலிசார் விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன.

அதாவது அதே பகுதியை சேர்ந்த வனிதா என்பவர் தனிஷ்காவை கொலை செய்தது தெரியவந்தது. வனிதாவின் கணவர் கமலகண்ணனுக்கும், சண்முகநாதன் மனைவிக்கும் தகாத உறவு இருந்ததாகவும், கமலகண்ணன் தனது குழந்தையை கவனிக்காமல் வனிதாவின் குழந்தையை கவனித்து வந்ததால் ஆத்திரமடைந்து தனிஷ்காவின் கழுத்தை நெறித்து வனிதா கொலை செய்திருப்பதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து வனிதாவை கைது செய்த பொலிசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மகனை மணக்கோலத்தில் பார்க்க ஆசைப்பட்டேனே : கதறி அழும் தந்தை!!

சென்னை அசோக்நகரில் உள்ள காவலர் பயிற்சிப் பள்ளியில் பணியாற்றி வரும் பாலமுருகன் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

கடந்த சில தினங்களாகப் பாலமுருகனுக்கு உடல் நலம் சரியில்லை. இதனால், அவர் விடுமுறையில் இருந்துள்ளார். நேற்று அவர் பணிக்குச் சென்றுவிட்டு, வீடு திரும்பிய இவர், இரவில் தூங்க சென்றுள்ளார்.

காலை நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படவில்லை. கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றுப்பார்த்தபோதுதான் பாலமுருகன் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டது தெரிந்தது.

இதையடுத்து, நீலாங்கரை பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பொலிசார், பாலமுருகனின் சடலத்தை மீட்டு, ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இதுகுறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து பாலமுருகனின் தந்தை விஜயரங்கன் கூறியதாவது, 3 மாதங்களுக்கு முன்பு இந்த வேலை பிடிக்கவில்லை என என்னிடம் கூறினான். வேலைக்கு செல்வதற்கு முன்பு மேடம் என்று போனில் பேசிக்கொண்டிருந்தான்.

பின்னர், வீட்டுக்கு வந்தவன் இப்படி தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டான். அவருடன் பிறந்த இரண்டு சகோதரிகளில் ஒருவருக்கு திருமணம் முடிந்துவிட்டது.

அடுத்து, பாலமுருகனுக்கு திருமணம் செய்ய ஏற்பாடு நடந்தது. ‘ஐந்து பெண்களைப் பார்த்துள்ளோம். விரைவில் மணக்கோலத்தில் அவரைப் பார்ப்போம்’ என்று நினைத்த எங்களுக்கு, அவரின் இழப்பு கடும் அதிர்ச்சி அளிக்கிறது என்று கண்ணீர் மல்க கூறியுள்ளார்.