வட்ஸ் அப் குரூப்பில் மனைவியின் பெயரை பகிர்ந்தவருக்கு ஏற்பட்ட நிலை!!

 

இந்தியாவில் திருமண அழைப்பிதழை வட்ஸ் அப் குரூப்பில் இளைஞர் ஒருவர் பகிர்ந்ததால், மனைவியின் பெயரை நீங்கள் எப்படி கூப்பிடுவீர்கள் என்று குறித்த இளைஞரை பலர் தொந்தரவு செய்வதாக கூறப்படுகிறது.

கேரளாவின் கோழிக்கூடு பகுதியைச் சேர்ந்தவர் Vibheesh. இவர் சமீபத்தில் தன்னுடைய திருமண அழைப்பிதழை வட்ஸ் அப் குடும்ப உறுப்பினர்களின் குரூப்பில் பகிர்ந்துள்ளார்.

அந்த திருமண அழைப்பிதழ் எப்படியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக, அதைக் கண்ட பலரும் Vibheesh-ஐ போனில் தொடர்பு கொண்டு உங்கள் மனைவியின் பெயரை எப்படி அழைப்பீர்கள், அதன் அர்த்தம் என்ன மற்றும் சிலர் அதற்கு உண்மையான அர்த்தம் என்ன என்று கேட்டு தொல்லை செய்துள்ளனர்.

அவர் மனைவியின் பெயர் Dhyanoorhanagithy என்று கூறப்படுகிறது. அவருக்கு மட்டுமின்றி Vibheesh-ன் தந்தையான Velayadhan அவர்களுக்கு தொடர்ந்து போன் வந்தபடியே உள்ளதாம்.

போன் செய்யும் ஒரு சிலர் தவறாக பேசுவதால், பொறுமை இழந்த Vibheesh இது குறித்து காவல்நிலையத்தில் புகார் கொடுக்க்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் Dhyanoorhanagithy-ன் தந்தை இலக்கியத்தில் அதிக நாட்டம் கொண்டவராம் அதன் காரணமாகவே இப்படி ஒரு பெயர் வைக்கப்பட்டுள்ளதாக உறவினர்கள் கூறியுள்ளனர்.

வவுனியா பிரதி விவசாயப் பணிப்பாளரின் இடமாற்றத்தை இரத்துச் செய்யுமாறு வடக்கு முதலமைச்சருக்கு அவசரக்கடிதம்!!

வவுனியா மாவட்டத்தின் பிரதி விவசாயப்பணிப்பாளர் தட்சணாமூர்த்தி யோகேஸ்வரனின் முறையற்ற இடமாற்றத்தை உடனடியாக இரத்துச் செய்யுமாறு வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் மற்றும் விவசாய அமைச்சர் க.சிவநேசன் ஆகியோருக்கு அவசர கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

வடமாகாணசபை உறுப்பினர்களான ப.சத்தியலிங்கம், ம.தியாகராசா, ஜி.ரி.லிங்கநாதன், இ.இந்திரராசா ஆகியோர் கையெழுத்திட்டு இந்த கடிதத்தினை அனுப்பி வைத்துள்ளனர். குறித்த கடிதத்தில்,

தற்போது வவுனியா மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளருக்கு மன்னார் மாவட்டத்திற்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக அறியப்படுகின்றது.

இவரின் இடமாற்றத்தினால் வவுனியா மாவட்ட விவசாயத்துறைசார் அபிவிருத்தி பாதிக்கப்படுமென பல விவசாய அமைப்புக்கள் தங்களிடம் முறையிட்டுள்ளன.

ஏற்கனவே கஸ்ட்டப் பிரதேசத்தில் கடமையாற்றியவர் என்ற வகையிலும் வவுனியா மாவட்ட விவசாயத்தைப் பாதிக்காத வகையிலும் இவர் தொடர்ந்து வவுனியா மாவட்டத்தில் கடமையாற்றுவதற்கு அனுமதிக்குமாறு மாவட்ட விவசாயிகள் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

நான்கு நாட்களுக்கு முன் காணாமல்போன குடும்பஸ்தர் சடலமாக மீட்பு!!

கம்பளை – மரியாவத்தை, பலாகுடமாக்க பகுதியில் நான்கு நாட்களுக்கு முன் காணாமல்போன நபரொருவர் ஆற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 79 வயதான குறித்த நபர் இன்று காலை 10 மணியளவில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சடலமாக மீட்கப்பட்டவர் 4 பிள்ளைகளின் தந்தையான டபிள்யூ.எம்.ஜெயசேன என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், ஆற்றில் சடலமொன்று இருப்பதாக பிரதேச மக்களால் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இந்த தகவலின் அடிப்படையில் குறித்த இடத்திற்கு விரைந்த கம்பளை பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர். 4 நாட்களுக்கு முன் வீட்டிலிருந்து வெளியே சென்ற இவரை உறவினர்களும், பிரதேவாசிகளும் தேடியுள்ளனர்.

அதன்பின் கம்பளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றையும் பதிவு செய்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

மரண விசாரணைகளின் பின் சடலம் வைத்திய பரிசோதனைக்காக கம்பளை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன் இது கொலையா, தற்கொலையா என பலகோணங்களில் கம்பளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த ஆண்டு சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றிய யுவதி சடலமாக மீட்பு!!

காத்தான்குடி – தாழங்குடா பிரதேச கிராமமொன்றிலுள்ள தகரக் கொட்டிலில் இருந்து யுவதியொருவரின் சடலத்தை தாம் மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தாழங்குடா, வேடர்குடியிருப்பு, கடற்கரை வீதியை அண்டி வாழும் சகாயநாதன் விதுசனா (வயது 17) என்பவரின் சடலமே இன்று மீட்கப்பட்டுள்ளது.

இவர் கடந்த ஆண்டு சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றியருந்ததாகவும், யுவதியின் தந்தை மத்திய கிழக்கு நாடொன்றில் தொழில் புரிவதாகவும் உறவினர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன் குறித்த யுவதி கடைசியாக இன்று காலை 8:30 மணிவரையில் தனது நண்பர்களுக்கு கைப்பேசியில் இருந்து குறுந்தகவல்களை அனுப்பியுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் யுவதியின் சடலம் பிரேத பரிசோதனைக்காக ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஐரோப்பாவை கலக்கும் இலங்கையை சேர்ந்த இளம் பெண்!!

 

மிஸ் இத்தாலி இறுதிப் போட்டிக்கு இலங்கையை சேர்ந்த இளம் பெண் ஒருவர் தகுதி பெற்றுள்ளார். இத்தாலி பாதுவா நகரத்தில் வாழும் இலங்கை பெண் ஒருவரே இந்த போட்டியில் தெரிவாகியுள்ளார்.

மிஸ் இத்தாலி போட்டிக்கு முன்னர் இடம்பெறும் மாகாண மட்ட போட்டியில் அவர் முதல் இடத்தை பிடித்துள்ளார். இத்தாலி நாட்டின் 28 பெண்களுடன் போட்டியிட்டு இந்த பட்டத்தை வென்றுள்ளார்.

பாதுவா நகரில் தனது பெற்றோருடன் வாழும் செவ்மி தாரகா பெர்னாண்டோ என்ற இளம் பெண் ஒருவரே இவ்வாறு பட்டத்தை வென்றுள்ளார்.

கடந்த 11ஆம் திகதி பாதுவா நகரின் கம்போஸம்பிரியோ பிரதேசத்தில் இந்த போட்டி இடம்பெற்றுள்ளது. அதற்கமைய மிஸ் இத்தாலி போட்டிக்கு இலங்கை பெண் தகுதி பெற்றுள்ளார்.

வவுனியா சிறச்சாலையில் கைதி மீது தாக்குதல்!!

வவுனியா விளக்கமறியில் சிறைச்சாலையில் இன்று (14.05) காலை கைதி ஒருவர் மீது சிறைக்காவலர்கள் தாக்குதல் நடாத்தியுள்ளனர். இதில் காயமடைந்த சிறைக்கைதி வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலம் தெரியவருகையில்,

வவுனியா சிறைச்சாலையில் விளக்க மறியலில் வைக்கப்பட்ட சிறைக் கைதி ஒருவரிடம் சிறைக்காவலர்கள் இன்று சிறைக்கு வெளியே இருந்து பொதி ஒன்று கிடைத்துள்ளதாகத் தெரிவித்து அது என்ன பொதி என்று கேட்டே குறித்த சிறைக் கைதியை தாக்கியுள்ளனர். இதில் படுகாமடைந்த சிறைக் கைதி வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சிறைக்கைதி சிதம்பரபுரம் பகுதியைச் சேர்ந்தவர் என்பதுடன் 32வயதுடைய சிறு குற்றம் ஒன்றுக்காக சிறைவாசம் அனுபவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் குடும்பநல நிலையத்தில் காத்திருந்த தாய்மார்கள் ஏமாற்றம்!!

 

வவுனியா மகாறம்பைக்குளம் பகுதியிலுள்ள தாய் சேய் குடும்ப நல நிலையத்திற்கு இன்று காலை 7.30 மணியிலிருந்து கால் கடுக்க நீண்டநேரம் காத்திருக்கும் தாய்மார்கள், சிறுவர்கள் என 30இலிருந்து 35ற்கும் மேற்பட்டோர் காத்திருந்ததுடன் இன்று தடுப்பு மருந்து எடுத்து வராததன் காரணமாக பல மணிநேரம் காத்திருந்துவிட்டு தாய்மார்கள் வீடு திரும்பியுள்ளனர்.

எனினும் குடும்பநல உத்தியோகத்தர்கள் சமூகமளித்த நிலையிலும் தடுப்பூசி வரவின்மை காரணமாக தடுப்பூசி போட முடியவில்லை என்று தெரிவித்தனர்.

பல கிராம கிராமங்களை உள்ளடக்கியதுடன் பல்லாயிரக்கணக்கான மக்களையும் உள்ளடக்கிய கிராமான மகாறம்பைக்குளம், ஆலடி பிள்ளையார் கோவில் வீதியில் அமைந்துள்ள குடும்பநல நிலையத்தில் இன்று இவ்வாறான ஒரு துயர நிலை ஏற்பட்டுள்ளது.

பல கற்பிணித் தாய்மார்கள் தமது பிள்ளைகளையும் அழைத்துக்கொண்டு வந்து வைத்தியர்கள், தடுப்பூசி கொண்டு வரவின்மை காரணமாக ஏமாற்றத்துடன் வீடு திரும்பியுள்ளனர்கள். மக்களுக்குச் சேவையாற்றும் பொறுப்புமிக்க வைத்தியத்துறையில் கடமையாற்றும் வைத்தியர்களின் இச் செயற்பாடானது மக்களை மேலும் துயரமடையச் செய்துள்ளது.

இன்று இடம்பெற்ற இச்சம்பவம் குறித்து வவுனியா சகாதார வைத்திய அதிகாரியிடம் தொடர்புகொண்டபோது, வாகனம் இன்மை காரணமாகவே இன்று தாய் சேய் நிலையத்திற்குச் செல்லவில்லை என்று தெரிவித்தனர்.

வவுனியா வைத்தியசாலையில் வைத்தியர்கள் பணிப் புறக்கணிப்பு : மக்கள் அவதி!!

 

வவுனியா பொது வைத்தியசாலையின் வைத்தியர்கள் இன்று (14.05) ஒரு நாள் பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் வடமாகாணம் தழுவிய ரீதியில் நடைபெற்றுவரும் வைத்தியர்களின் பணி பகிஸ்கரிப்பானது வவுனியாவிலும் முன்னெடுக்கப்படுகிறது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் வவுனியா மாவட்டத்தின் உப தலைவர் செ.மதுரகன், 2015 ஆம் ஆண்டிலிருந்து வைத்தியர்களுக்கு விகிதாசார அடிப்படையில் சம்பள அதிகரிப்பானது அதிகரிக்கப்பட்டு வழங்கப்பட்டு வந்த நிலையில், மேலதிக கொடுப்பனவுகள் தொடர்பாக அரச சுற்றறிக்கைக்கு அமைவாக ஏனைய மாகாணங்களுக்கு சம்பள அதிகரிப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில் வடமாகாணத்திலுள்ள வைத்தியர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து அடையாள பணி பகிஸ்கரிப்பு மேற்கொள்ளப்படுகின்றது எனத் தெரிவித்தார்.

இலங்கையில் நடக்கும் விபரீதம் : நள்ளிரவில் நிர்வாணமாக இளம் யுவதிகள்!!

பேஸ்புக் சமூக வலைத்தளத்தின் ஊடாக இணைந்து நடத்தப்படும் போதைப்பொருள் விருந்து தொடர்பில் கடந்த நாட்கள் முழுவதும் செய்தி வெளியாகியுள்ளது.

இந்நிலையில் பேஸ்புக் ஊடாக அறிமுகமாகிய நண்பர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட விருந்து நேற்று நடைபெற்றது. ஹிக்கடுவ நாரிகம பிரதேசத்தில் உள்ள சுற்றுலா ஹோட்டலில் நடத்தப்பட்ட விருந்து தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

நேற்று அதிகாலை இடம்பெற்ற விருந்தில் விசேட பொலிஸ் குழுவொன்று சுற்றிவளைப்பு மேற்கொண்டுள்ளது. இதன் போது 17 இளைஞர், யுவதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நீதிமன்றத்தில் பெற்றுக் கொண்ட ஆணைக்கு அமைய சுற்றுலா விடுதி சுற்றிவளைக்கப்பட்டது. இதன்போது 250க்கும் அதிகமான இளைஞர், யுவதிகள் இதில் கலந்து கொண்டிருந்தனர்.

சுற்றிவளைப்பு மேற்கொண்ட சந்தர்ப்பத்தில் 20 பேர் தடுத்து வைத்து விசாரிக்கப்பட்ட நிலையில் 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட 17 பேரில் 3 பேர் பெண்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவர்களிடம் இருந்து கேரளா கஞ்சா மற்றும் போதை மாத்திரை தொகையும் மீட்கப்பட்டுள்ளது. ஒரு மாத்திரை கிட்டத்தட்ட 4000 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இரவு ஆரம்பிக்கும் இந்த விருந்து அதிகாலை வரை நீடிக்கும். அங்கு போதை பாவனை உச்சமடையும் போது பல்வேறு சமூக சீர்கேடுகள் நடப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

போதை தலைக்கெறிய இளம்பெண்கள் அரை நிர்வாணமாக தவறான முறையில் நடந்து கொள்வதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

திருமணம் என்ற போர்வையில் பெண்களை ஏமாற்றியவருக்கு ஏற்பட்ட பரிதாபம்!!

கிண்ணியா பகுதியில் ஏழரை பவுண் நகையையும், ஒரு இலட்சம் ரூபா பணத்தினையும் மோசடி செய்த நபரை இம்மாதம் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் சமிலா குமாரி ரத்நாயக்க முன்னிலையில் நேற்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் கிண்ணியா, நடுஊற்று பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய சந்தேகநபரொருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் இரண்டு திருமணம் முடித்து பிள்ளைகள் இருக்கும் நிலையில் மூன்றாவதாக பெண்ணொருவரிடம் சீதனமாக ஏழரை பவுண் தங்க நகையையும், ஒரு இலட்சம் ரூபாய் பணத்தினையும் பெற்று திருமணம் முடித்துள்ளார்.

இந்த நிலையில் பெண் வீட்டாருக்கு குறித்த சந்தேகநபர் ஏற்கனவே இரண்டு திருமணங்கள் முடித்துள்ளதாக தெரியவரவே கிண்ணியா பொலிஸில் மேற்கொண்ட முறைப்பாடு செய்துள்ளனர்.  இந்த முறைப்பாட்டுக்கமைய பொலிஸார் கடந்த சனிக்கிழமை சந்தேகநபரை கைது செய்துள்ளனர்.

அவரால் தினமும் அழுதேன், அந்த இயக்குனரை வெட்டி கொல்ல வேண்டும் : சரண்யா பொன்வண்ணன்!!

தமிழ் சினிமாவில் உள்ள அனைத்து ஹீரோக்களுக்கும் அம்மாவாக நடித்தது என்றால் சரண்யா பொன்வண்ணன் தான். அந்த அளவிற்கு அம்மா கதாபாத்திரம் என்றாலே இவர் தான் நம் நினைவிற்கு வருவார்.

இவர் நடிப்பில் யாராலும் மறக்க முடியாத படம் என்றால் தவமாய் தவமிருந்து தான். இப்படத்திற்காக இவரை பாராட்டாதவர்கள் இல்லை.அந்த அளவிற்கு சிறப்பாக நடித்திருப்பார், ஆனால், இப்படத்தின் படப்பிடிப்பின் போது இவருக்கும், சேரனுக்கும் தினமும் சண்டை தான் நடக்குமாம்.

ஏன் என்றே காரணம் தெரியாமல் சண்டை வருமாம், தினமும் படப்பிடிப்பில் அழுவாராம், ஒரு கட்டத்தில் சேரனை வெட்டி கொல்ல வேண்டும் என்று கூட நினைத்துள்ளாராம் சரண்யா.மேலும், அந்த படத்தில் நடித்தது மிகவும் மோசமான நாட்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அதே நேரத்தில் அந்த படப்பிடிப்பு முடிந்த அடுத்த நாளே நானும் சேரனும் நல்ல நண்பர்கள் ஆகிவிட்டோம்.அது எப்படியென்றே தெரியவில்லை, இன்று வரை அவரை பார்த்தால் எனக்கு சிரிப்பு வந்துவிடும் என்றும் கூறியுள்ளார்.

திருமணத்திற்கு 2 நாள் முன்பு காதலனை சந்தித்த பெண் : பின்பு நடந்தது என்ன தெரியுமா?

காதல் எங்கே, எப்போது தோன்றும் என யாராலும் சொல்ல முடியாது. முகநூலிலேயே பேசி ஒருவருக்கொருவர் பார்க்காமல் கூட காதல் வரலாம் என்பது பலருக்கும் ஆச்சரியத்தை அளிக்கலாம். அவ்வளவு ஏன்? முகநூலில் பேசி காதலித்து திருமணம் செய்து கொள்வதை ஏற்றுக்கொள்ளாதவர்களும் உண்டு.

அவர்கள் அனைவரும் மும்பையை சேர்ந்த சினேகா சௌத்ரி மற்றும் ஹர்ஷ் மேத்தாவின் காதல் கதையை தெரிந்துக்கொள்ள வேண்டும். சினேகா சௌத்ரி எப்படி ஹர்ஷை முகநூலில் மட்டுமே பேசி காதலித்தார்? பின் எப்படி திருமணம் செய்துகொண்டனர்? என்பதை ஹ்யூமன்ஸ் ஆஃப் பாம்பே என்ற முகநூல் பக்கத்தில் தன் அழகிய வார்த்தைகளிலேயே பகிர்ந்து கொண்டுள்ளார்.

திருமணம் செய்துகொள்ள வேண்டும் என சினேகா சௌத்ரி முடிவு செய்தபோது அவருக்கு வயது 28. அப்போது, தனக்கு தெரிந்த ஆண் நண்பர்களிடம் பேசி பார்த்துள்ளார். ஆனால், அவர்களிடம் காதல் உணர்வோ, திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற எண்ணமோ சினேகாவுக்கு ஏற்படவில்லை.

அந்த சமயத்தில் தான் என்னுடைய ஃபேஸ்புக்கில் ஹர்ஷ் என்பவரிடம் இருந்து நாம் இருவரும் ஒருவருக்கொருவர் ஏற்கனவே அறிந்திருக்கிறோமா? என மெசேஜ் வந்திருந்தது. அதற்கு நான் பதில் அளித்தேன். அன்றிலிருந்து நானும் ஹர்ஷூம் தொடர்ந்து ஃபேஸ்புக்கில் உரையாடினோம் என்கிறார் சினேகா.

அன்றிலிருந்து இருவரும் தங்களுடைய நண்பர்கள், வாழ்க்கை குறித்தெல்லாம் பேசியிருக்கின்றனர். அந்த சமயத்தில் ஹர்ஷ் ஆஸ்திரேலியாவில் வசித்துள்ளார். சினேகா மும்பையில் இருந்திருக்கிறார். ஆனால், எங்களுக்குள் நாங்கள் இத்தனை தொலைவை உணரவே இல்லை. எங்களின் உரையாடல்கள் உயிர்ப்புடன் இருந்தது என கூறுகிறார் சினேகா.

நாங்கள் ஒரு மாதம் தொடர்ந்து பேசினோம். ஆனால், அது எங்களுக்கு ஒரு வருடம் போல் இருந்தது. நேரம் மெதுவாக கடந்து கொண்டிருந்தது. பேசிக்கொண்டே இருந்தோம். ஆனால், எங்களுக்கு போதவில்லை. ஒரு நாள் 18 மணிநேரம் தொடர்ந்து பேசியது கூட நினைவு இருக்கிறது. செல்போன் சார்ஜ் இல்லாவிட்டால், லேப்டாப்பில் ஸ்கைப் மூலம் பேசுவோம். நான் அடிமையாகி விட்டது போன்று உணர்ந்தேன். அவருடன் எதனையும் பகிர்ந்துகொள்ளாமல் இருந்தால் அந்த நாளே எனக்கு முழுமையடையாது என்கிறார் சினேகா.

ஒருநாள் ஹர்ஷ் தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில், நான் காதலில் இருக்கிறேன் என நினைக்கிறேன் என பதிவிட்டிருக்கிறார். அதன்பிறகு சினேகாவுடன் பேசும் போதெல்லாம் நான் உன்னை காதலிக்கிறேன் என உரையாடலின் முடிவில் சொல்வது ஹர்ஷின் வழக்கமாகியிருக்கிறது. அதற்கெல்லாம், ஓகே, நன்றி என்று மட்டுமே சினேகா சொல்லி வந்திருக்கிறார்.

ஒருமுறை எனக்கு மூன்று கூழாங்கற்களின் படத்தை ஹர்ஷ் மெயில் அனுப்பியிருந்தார். நான் ஏற்கனவே பெங்குயின்கள் எப்படி நேர்த்தியான கூழாங்கற்களை தேர்ந்தெடுத்து, தன்னுடைய துணையின் காலுக்கடியில் வைத்து காதலை வெளிப்படுத்தும் என்பதை அவரிடம் சொல்லியிருந்தேன்.

அதனால் அவர் அனுப்பியிருந்த கூழாங்கற்கள் எதனைக் குறிக்கின்றன என்பது எனக்கு தெரிந்திருந்தது. அந்த கூழாங்கற்களில் என்னை திருமணம் செய்துகொள்கிறாயா? என எழுதப்பட்டிருந்தது. நான் சிறிதும் தயக்கமின்றி சம்மதித்தேன் என தன்னுடைய காதல் அனுபவத்தை பகிர்கிறார் சினேகா.

அதுவரை சினேகாவும் ஹர்ஷூம் ஒருமுறை கூட நேரில் பார்த்தது இல்லை. அதன்பிறகு தான் ஹர்ஷ் ஆஸ்திரேலிலியாவில் இருந்து மும்பை வந்துள்ளார். எப்போது தெரியுமா? அவர்களுடைய திருமணத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு தான். பெற்றோர்கள் சம்மதமின்றி சட்டப்படி பதிவு செய்து திருமணம் செய்துகொண்டனர்.

திருமணமாகி 3 வருடங்களாகின்றன. நிறைய சாலை வழிப் பயணங்களை மேற்கொள்கிறோம். 90களின் இசையை கேட்கிறோம். நிறைய கேள்விகளை கேட்டுக் கொள்கிறோம். அதில் ஒன்று ஃபேஸ்புக்கில் யார் முதலில் நட்பு அழைப்பைக் கொடுத்தது என்பது என மகிழ்ச்சியுடன் தன் காதல் கதையை முடிக்கிறார் சினேகா.

4 வயது சிறுவன் மீது கல்லை எறிய வைத்த கொடூர ஆசிரியை : கதறி அழுத பரிதாபம்!!

அமெரிக்காவில் விதிமுறைகளை மீறியதாக கூறி, நான்கு வயது சிறுவன் மீது மற்ற மாணவர்களை வைத்து கல்லை வீச செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் Arkansas பகுதியின் Forrest சிட்டியில் அமைந்திருக்கும் ஒரு நர்சரி பள்ளியில் கடந்த ஏப்ரல் மாதம் 26-ஆம் திகதி ஆசிரியர் ஒருவர் விதிமுறைகளை மீறியதாக கூறி, அவருக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என்பதற்காக, மற்ற மாணவர்களை வைத்து தண்டனை கொடுத்துள்ளார்.

அதாவது அந்த நான்கு வயது சிறுவனை பள்ளியில் இருக்கும் விளையாட்டு மைதானத்தில் நிற்க வைத்துவிட்டு, அதன் பின் 6 மாணவர்களையும் குறித்த மாணவன் மீது கல்லை விட்டு எரியும் படி கூறுகிறார்.

ஆசியருக்கு பயந்து அந்த மாணவர்களும் குறித்த மாணவன் மீது கல்லை வீசுகின்றனர். அப்போது கல்லானது சிறுவனின் முழங்காலில் பட்டதால், வலி தாங்க முடியாமல் கதறி அழுதுள்ளார்.

இதைக் கண்ட அந்த ஆசிரியர் இது உனக்கு ஒரு பாடம் என்று கூறுகிறார். இந்த காட்சியை மற்றொரு ஆசிரியர் வீடியோவாக எடுத்து பொலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

அதன் பின் பொலிசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும், ஆனால் அவரை கைது செய்யவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேன்ஸ் திரைப்பட விழா: ரசிகர்களை ஆடையால் கிறங்கடித்த ஐஸ்வர்யா ராய்!!

பிரான்சில் உலக புகழ்பெற்ற கேன்ஸ் திரைப்பட விழா தொடங்கியுள்ளதால் அதில் பல்வேறு திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன.இதில் உலக நாடுகளை சேர்ந்த பல்வேறு நடிகர், நடிகைகள் கலந்துகொண்டார்கள். இந்த விழாவில் ஒவ்வொரு ஆண்டும் நடிகைகள் அணிந்துவரும் ஆடைகள் பிரபலமாகும்.

சிவப்பு கம்பள வரவேற்பில் விதவிதமான ஆடையில் வரும் நடிகைகளை படம்பிடிப்பதற்காக புகைப்படக்காரர்கள் வரிசையில் காத்திருப்பர்.இதில் இந்தியாவில் இருந்து பல்வேறு நடிகைகள் கலந்துகொண்டாலும் முன்னால் உலக அழகி ஐஸ்வர்யா ராய் ஒவ்வொரு ஆண்டு சிவப்பு கம்பள வரவேற்பில் கலக்குவார்.

இந்த ஆண்டு, ஊதா நிறத்திலான சிண்ரெல்லா ஆடை அணிந்து, ஆடையின் பின்புறத்தில் மீனின் செதில்கள் போன்று வடிவமைக்கப்பட்டிருந்தது.இந்த ஆடையை Michael Cinco’s என்பவர் வடிவமைத்துள்ளார். மகள் ஆரத்யா சிவப்பு நிறத்திலான கவுன் அணிந்திருந்தார்.

44 வயதான இவர், ஒவ்வொரு ஆண்டும் தனது ஆடை மற்றும் முக ஒப்பனைகளால் இளமையாக காட்சியளிக்கிறார். கடந்த ஆண்டும் கேன்ஸ் விழாவில் கலக்கிய ஐஸ்வர்யாவின் வயது 10 வயது குறைந்து காணப்பட்டதாக பார்வையாளர்கள் கருத்து தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நள்ளிரவில் காதலியை திருமணம் செய்து கொண்ட பிரபல இசையமைப்பாளர்: காரணம் இதுதான்!!

பிரபல திரைப்பட இசையமைப்பாளர் ஹிமேஷ் ரேஷமய்யா தனது காதலியை நள்ளிரவில் திருமணம் செய்துள்ளார்.கமல்ஹாசன் நடித்த தசாவதாரம் திரைப்படத்துக்கு இசையமைத்தவர் ஹிமேஷ் ரேஷமய்யா.

அவர் தனது நீண்ட நாள் காதலியான சோனியா கபூரை மும்பையில் உள்ள தனது வீட்டில் வைத்து திருமணம் செய்துள்ளார்.இந்த திருமணம் நள்ளிரவில் நடைபெற்றுள்ளது.

இரவு 1.30 மணிக்கு தான் நல்ல நேரம் என்று ஜோதிடர் தெரிவித்த நிலையில் இருவீட்டார் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் அந்த நேரத்தில் திருமணம் நடந்துள்ளது.ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்ற ஹிமேஷுக்கு இது இரண்டாவது திருமணம் என்பது என்பது குறிப்பிடத்தக்கது.

எரிபொருள் விலையை மேலும் அதிகரிக்க நடவடிக்கை : புதிய பெற்றோல் அறிமுகம்!!

இலங்கையில் தற்போது விற்பனை செய்யப்படும் சுப்பர் பெற்ரோல் மற்றும் சுப்பர் டீசலை சந்தையில் இருந்து அகற்ற இலங்கை பெற்ரோலிய கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது.

அதற்கமைய சர்வதேச தரம் வாய்ந்த புதிய எரிபொருள் வகை ஒன்றை சந்தையில் அறிமுகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதற்கமைய யூரோ போ என்ற பெற்ரோல் மற்றும் டீசல் வகைகள் இலங்கையில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

இந்த யூரோ போ என்ற எரிபொருளுக்கு சர்வதேச தரத்தில் உயர் வரவேற்புகள் உள்ளது. அதில் எவ்வித கழிவுகளும் கலக்கப்படவில்லை என இலங்கை பெற்ரோலிய கூட்டுத்தாபனத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜுலை மாதம் முதலாம் திகதியில் இருந்து இந்த எரிபொருளை எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தற்போது ஒரு லீற்றர் ஒன்டென் 95 ரக சுப்பர் பெற்ரோல் 148 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது. ஒரு லீற்றர் சுப்பர் டீசல் 119 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்றது.

எப்படியிருப்பினும் அறிமுகப்படுத்தி வைக்கப்படவுள்ள புதிய யூரோ போ என்ற பெற்ரோல் மற்றும் டீசலின் விலை மேலும் அதிகரிக்க கூடும் என இலங்கை பெற்ரோலிய கூட்டுத்தாபனத்தின் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.