20 வயதான இளம் பெண்ணின் பலவருட பழக்கத்தால் ஏற்பட்டுள்ள விபரீதம் : அதிர்ச்சிப் புகைப்படங்கள்!!

 

பல வருடங்களாக தனது தலை முடியை உண்ண பழகிய இளம் பெண் ஒருவருக்கு மேற்கொண்ட அறுவைச் சிகிச்சை தொடர்பில் வெளிநாட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.இந்தியா – மும்பை ராஜ்வாஜ் பகுதியில் உள்ள மருத்துவமனையொன்றில் இந்த அறுவைச் சிகிச்சை இடம்பெற்றுள்ளது.

20 வயதான இந்த இளம்பெணுக்கு குறித்த அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், அவரின் வயிற்றில் இருந்த 2 இரத்தால் முடி அகற்றப்பட்டுள்ளது.இந்த பெண்ணுக்கு வாந்தி மற்றும் வயிற்று வலி ஏற்பட்டுள்ள நிலையில், சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்றுள்ள போது இந்த விடயம் தெரியவந்துள்ளது.

சத்திரச் சிகிச்சைக்கு முன் இந்த பெண் 66 இராத்தல் நிறையுடையவராக இருந்ததாக சத்திரச் சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.இவ்வாறு தமது தலை முடியை உண்பது, ரிபேன்சல் சின்ரம்ஸ் என்ற மனநோய் என மன நல மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த பெண்ணின் வயிற்றில் இருந்து எடுக்கப்பட்டுள்ள முடியின் நீளம் 10 அங்குலமும், அதன் அகலம் 4.7 அங்குலமும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த ஆகஸ்ட் 31 ஆம் திகதி மாதம் இந்த சத்திரச் சிகிச்சை இடம்பெற்றுள்ள நிலையில், அந்த இளம்பெண் தற்போது நலமாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திரையரங்க சிசிடிவி சோதனையில் அதிர்ச்சி : சிறுமிக்கு நேர்ந்த கொடுமை அம்பலம்!!

திருட்டு சம்பவத்திற்காக திரையரங்க சிசிடிவி கமராவை சோதித்த போது, அதில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த காட்சிகள் சிக்கின.

கேரள மாநிலம் மலப்புரத்தில் உள்ள திரையரங்கு ஒன்றில் கடந்த ஏப்ரல் 18ஆம் திகதி படம் ஓடிக்கொண்டிருந்தபோது, ஒருவருடைய பணப்பை திருடப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக பணப்பையின் உரிமையாளர் திரையரங்க நிர்வாகத்திடம் புகார் தெரிவித்திருந்தார்.

அத்துடன் காவல் நிலையத்திலும் புகார் தெரிவிக்கப்பட்டது. இந்த விவகாரத்திற்காக திரையரங்கில் இருந்த சிசிடிவி கேமராக்கள் அனைத்தும் அண்மையில் சோதித்து பார்க்கப்பட்டன.

இந்த சோதனையில் சில திடுக்கிடும் காட்சிகள் இருந்து, பார்ப்பவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஏனெனில் அந்தக் காட்சிகளில் திரையரங்கின் இருட்டைப் பயன்படுத்தி சிறுமி ஒருவருக்கு ஒரு நபர் பாலியல் தொந்தரவுகளை கொடுத்துள்ளார்.

அத்துடன் அந்த சிறுமியின் தாயாரும் அருகாமையிலேயே இருக்கிறார். அந்தக் காட்சிகளில் இருந்த புகைப்படத்தை தெளிவுபடுத்தி பார்த்தபோது, அதில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுக்கும் நபர் தொழிலதிபர் மொய்தீன் குட்டி (60) என்பது தெரியவந்துள்ளது.

இதையடுத்து சிறுமிக்கு நேர்ந்த கொடுமை தொடர்பாக திரையரங்க நிர்வாகத்தினர், காவல்துறையினரிடம் புகார் தெரிவித்துள்ளனர். ஆனால் காவல்துறையினர் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்ததாக கூறப்படுகிறது. அதற்குள் இந்த விவகாரம் ஊடங்களுக்கு செல்ல, தொழிலபதிருக்கு எதிராக கடும் கண்டங்கள் எழும்பியுள்ளன.

இதையடுத்து மொய்தீனை கைது செய்த காவல்துறையினர், அவர் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் சிறுமிக்கு எதிராக நடந்து பாலியல் கொடுமைக்கு ஆதரவாக இருந்த, அச்சிறுமியின் தாயும் கைது செய்யப்பட்டுள்ளார். அவர்மீதும் பாலியல் கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இலங்கை இளைஞர்களுக்கு ஆபத்தா? வெளிநாட்டு பெண்களை அழைத்து வர அனுமதியா?

சிங்கப்பூருடன் செய்து கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தம் கலாச்சார சீரழிவினை ஏற்படுத்தும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்றைய தினம் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்தும் கூறுகையில்…

அரசாங்கம் எந்தவொரு தரப்பினருடனும் பேச்சுவார்த்தை நடத்தாது எதேச்சாதிகாரமாக தீர்மானங்களை எடுக்கின்றது. எனவே வேறு வழியின்றியே நாம் போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்க நேரிட்டுள்ளது.

இங்குள்ள தொழில் வாய்ப்புக்களை சிங்கப்பூருக்கு வழங்கி, மேலும் கலாச்சார ரீதியிலும் அழிவானது.
இலங்கையர் ஒருவருக்கு தற்காலிகமாக சிங்கப்பூர் பெண் ஒருவரை அழைத்து வந்து வைத்துக் கொள்ள வேண்டுமாயின் அதற்கு அனுமதி வழங்கும் வகையில் இந்த ஒப்பந்தம் உருவாக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூருக்கு எதிராக நாம் கருத்து வெளியிடவில்லை, இந்த ஒப்பந்தம் பிழையானது என்பதே எமது நிலைப்பாடு.

அண்மையில் அரசாங்கத்தை விட்டு வெளியேறிய 16 பேரும் அரசாங்கத்திற்கு எதிராகவும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிராகவும் செயற்படுகின்றனர். அவர்கள் எம்முடன் இணைந்து கொள்வார்கள் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மகளை பாலியல் தொந்தரவு செய்ய உடந்தையாக இருந்த தாய்? கிளிநொச்சியில் சம்பவம்!!

கிளிநொச்சியில் பாலியல் தொந்தரவுக்கு உடந்தையாக இருந்தார் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட பெண் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபரை கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் பதில்நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போது, அவரை எதிர்வரும் 17ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

கிளிநொச்சியில் சிறுமி ஒருவரை பொலிஸ் அதிகாரியெருவர் பாலியல் தொந்தரவுக்கு உட்படுத்த உடந்தையாக இருந்தார் என்ற சந்தேகத்தில் குறித்த பெண் இன்று கைது செய்யப்பட்டிருந்தார்.

சிறுமியின் தாயாரே இவ்வாறு கைது செய்யப்பட்டிருந்தார். இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமி, சிறுவர் நன்னடத்தை அதிகாரியிடம் செய்த முறைப்பாட்டையடுத்து அவர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முற்று முழுதாக யாழில் வடிவமைக்கப்பட்ட கார்களின் கண்காட்சி!!

முற்று முழுதாக யாழ்ப்பாணத்தில் வடிவமைக்கப்பட்ட கார்களின் கண்காட்சி யாழ். பல்கலைக்கழக மைதானத்தில் வெகு சிறப்பாக இடம்பெற்றுள்ளது. குறித்த கண்காட்சி யாழ்.பல்கலைகழக பௌதீக கல்வி அலகு இயக்குனர் கே.கணேசநாதன் தலைமையில் நேற்று காலை இடம்பெற்றுள்ளது.

இதில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் பொ.பாலசுந்தரம்பிள்ளை மற்றும் இ. பாலசுந்தரம்பிள்ளை ஆகியோர் முதன்மை விருந்தினர்களாகக் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர்.

இதன்போது யாழ். பல்கலைக்கழக ஆங்கிலப் போதனா மொழியியல் துறைப் பேராசிரியர் மகேஸ்வரக்குருக்கள், சரவணபவ ஐயர் மற்றும் அவரது குழுவினரது தயாரிப்பில் உருவான கார்கள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டன.

கண்காட்சியில் அல்ரா லைட் பிக்கப் (Ultra light Pickup), சோலர் போவரட் பேபி கார் (Solar Powered baby car), பெடல் பவர் கார் (Pedal Power car) போன்ற கார் இனங்கள் காட்சிப்படுத்தப்பட்டதுடன்.

அத்துடன், உடற்பயிற்சி செய்வதற்கான சிறிய நான்கு சில்லு சைக்கிள் போன்று ஓடும் வாகனமும், சிறிய மோட்டார் சைக்கிளும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்கதையாகிப் போன ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி!!

அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் வீழ்ச்சி தொடர்கதையாகிப் போயிருப்பதை மத்திய வங்கியின் அறிக்கையொன்று உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து மே 11ம் திகதி வரையான காலப்பகுதிக்குள் அமெரிக்க டொலருக்கு எதிரான ரூபாவின் பெறுமதி 3.2 வீதம் வரை வீழ்ச்சியைக் கண்டுள்ளது.

அத்துடன் இந்திய ரூபாய், அவுஸ்திரேலிய டொலர் போன்ற சர்வதேச நாணயச் சந்தையின் முக்கிய நாணயங்களுக்கு எதிராகவும் இலங்கை ரூபாவின் பெறுமதி கடுமையாக வீழ்ச்சியுற்றுள்ளது.

அதே நேரம் தற்போதைய நிலையில் அமெரிக்க டொலர் ஸ்திரத்தன்மையைப் பெற்றிருப்பதும் ரூபாவின் பெறுமதி வீழ்ச்சிக்கு ஒரு காரணம் என்று மத்திய வங்கியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது

அரச முகாமைத்துவ உதவியாளர் சேவையில் புதிதாக 5000 பேர் இணைப்பு!!

அரச முகாமைத்துவ உதவியாளர் சேவையில் மேலும் ஐயாயிரம் பேர் புதிதாக சேர்த்துக் கொள்ளப்படவுள்ளனர். சமீபத்தில் நடைபெற்ற வரையறுக்கப்பட்ட மற்றும் போட்டி பரீட்சையின் ஆகக் கூடிய புள்ளிகளை பெற்ற பரீட்சார்த்திகள் நேர்முக பரீட்சையின் மூலம் இதற்காக தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அரச நிர்வாக அமைச்சின் ஒன்றிணைந்த சேவைகள் பணிப்பாளர் நாயகம் கே.வி.பி.எம்.ஜி.கமகே தெரிவித்தார்.

இவர்களுக்கான நியமனக் கடிதங்கள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் அலரி மாளிகையில் எதிர்வரும் திங்கட்கழமை காலை வழங்கப்படவுள்ளது.

அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டராவும் இந்த நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளார். சேவையில் இணைத்துக் கொள்ளப்படுவோர் மாவட்ட மட்டத்தில் இரண்டு வார பயிற்சிகள் வழங்கப்படும்.

இதனைத் தொடர்ந்து நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் நிலவும் வெற்றிடங்களுக்கு இவர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று அவர் தெரிவித்தார்.

இவர்கள் சேவையில் இணைத்துக் கொள்ளப்படுவதன் மூலம் கடந்த வருடத்தில் ஜனவரி 30ம் திகதி அளவில் அரச முகாமைத்துவ உதவியாளர் சேவையில் நிலவிய அனைத்து வெற்றிடங்களும் முழுமைப்படுத்தப்படும்.

விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த இளைஞர்!!

இந்தியாவின் மராட்டிய மாநிலம் மும்பையிலிருந்து டெல்லி சென்ற விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த இளைஞரை டெல்லி பொலிசார் கைது செய்துள்ளனர்.

டெல்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில் உள்ள தனியார் விமான சேவை நிறுவன அலுவலகத்திற்குக் கடந்த 2-ம் திகதி போன் செய்த மர்ம நபர், மும்பையிலிருந்து டெல்லி செல்லும் விமானத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாகக் கூறி இணைப்பைத் துண்டித்தார்.

இந்த விவகாரம் குறித்து பாதுகாப்பு அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்படவே, குறித்த தனியார் நிறுவன விமானங்கள் சோதனைக்குள்ளாக்கப்பட்டன. அதில், வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்த டெல்லி காவல்துறை,

வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக 23 வயதான கார்த்திக் மாதவ் பட் என்பவரைக் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், குறித்த தனியார் விமான சேவை நிறுவனத்தின் புனே அலுவலகத்தில் கார்த்திக் பணிபுரிந்து வந்தது தெரியவந்துள்ளது.

மேலும், வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததையும் கார்த்திக் ஒப்புக்கொண்டார். மட்டுமின்றி பணி வாய்ப்பைத் தக்கவைத்துக் கொள்ள 3 மாதத்துக்குள் திறனை வளர்த்துக் கொள்ளும்படி குறித்த நிறுவனம் சார்பில் வாய்மொழியாக எச்சரிக்கை கொடுக்கப்பட்டதாகவும், அதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் இந்த காரியத்தைச் செய்து விட்டதாகவும் கார்த்திக் கூறியிருக்கிறார்.

இதையடுத்து, கார்த்திக்கைக் கைது செய்த டெல்லி காவல்துறை, மிரட்டலுக்குப் பயன்படுத்திய சிம் கார்டையும் அவரிடமிருந்து பறிமுதல் செய்துள்ளனர்.

வவுனியா மதினாநகரில் மாபெரும் டெங்கு ஒழிப்பு சிரமதானம்!!

வவுனியா மதீனா நகர் கிரமத்தில் நேற்று (13.05) கிராம அபிவிருத்தி சங்கம் மற்றும் அல்மதீனா விளையாட்டு கழகம் என்பன இணைந்து டெங்கு மற்றும், பாத்தீனியத்தை ஒழிக்கும் நோக்கில் சிரமதானப்பணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

சுகாதார உத்தியோகத்தர்களால் அடையாளம் காணப்பட்ட டெங்கு உற்பத்தியாகும் இடங்களில் கிராம மக்களால் சிரமதானப்பணிகள் முன்னெடுக்கப்பட்டது.

நீர் வடிகான்கள் தண்ணீர் தேங்கி நிற்காமல் வழிந்தோடும் வகையில் துப்பரவு செய்யப்பட்டதுடன் வெற்றுக் காணிகளில் கவனிப்பாரற்றுக் கிடந்த பற்றைகள், புற்கள், குப்பைகள், நீர் தேங்கி நிற்கக் கூடிய கொள் கலன்கள், டயர்கள் ஆகியன அகற்றப்பட்டு அவை தீயிட்டுக் எரிக்கப்பட்டன. அத்துடன் பெண்களும் தங்களது வீடுகளை டெங்கு நுளம்புகள் உற்பத்தியாகாத வண்ணம் துப்பரவு செய்தனர்.

குறித்த சிரமதானப் பணியில் கிராம உத்தியோகத்தர், சுகாதார பிரிவினர், குடும்பநல உத்தியோகத்தர், கிராம மக்கள், இளைஞர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

மிகவும் ஆபத்தான பயணங்களை மேற்கொள்ளும் மட்டக்களப்பு மக்கள்!!

 

மட்டக்களப்பு – கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட கிண்ணையடி கிராமத்தின் துறையடிக்கு பாதை ஒன்றை அமைத்து தருமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வாழைச்சேனை பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட கிண்ணையடிக் கிராமத்திற்கும், கிரான் பிரதேச செயலகப் பிரிவிற்கும் இடைப்பட்ட பின்தங்கிய கிராமங்களான முருக்கன்தீவு, சாராவெளி, பிரம்படித்தீவு, கிராமம் ஆகியவற்றை இணைக்கும் துறையடிக்கு பாலம் ஒன்றை அமைக்குமாறு அப்பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கிண்ணையடிக்கும் முருக்கன்தீவிற்கும் இடையிலான ஆற்றின் இடைவெளி 200 மீற்றர் தூரம் காணப்படுகின்றது. இதனை கடக்க முடியாது போனால் மக்கள் 10 கிலோ மீற்றர் தொடக்கம் 15 கிலோ மீற்றர் தூரம் சுற்றியே தமது பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என்றும் கவலை வெளியிட்டுள்ளனர்.

இதனால், அப்பகுதி மக்கள் , பெண்கள், விவசாயிகள் பெரும் இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். அது மட்டும் அல்ல, ஆற்றை கடப்பது மிகவும் ஆபத்தான பயணமாகவுள்ளதாகவும், மிகவும் பாரிய சவாலை எதிர்நோக்குவதாகவும் மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை, காலம் காலமாக எமது பிரதேசத்திற்கு வரும் அரசியல்வாதிகள் இவ்வாற்றை பார்வையிட்டு இவ்வாற்றுக்கான பாலத்தை அமைப்பதற்கு நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும் எனக் கூறிச் செல்கின்றார்கள் இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என மக்கள் கூறியுள்ளனர்.

எனவே இப்பிரதேசத்தில் உடனடியாக பாலம் அமைக்கப்படா விட்டாலும் பரவாயில்லை மக்கள் அச்சமில்லாமல் ஆற்றைக் கடப்பதற்கு நல்ல முறையிலான பாதை ஒன்றினை பெற்றுத் கொடுப்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வர வேண்டும் என மக்கள் கேட்டுக் கொள்கின்றனர்.

எனவே நல்லாட்சி அரசாங்கம் தமிழ் மக்களை ஏமாற்றாத வகையில் பாலங்களை அமைத்து தருவதற்கு மாவட்ட அரசியல்வாதிகள் கூடிய கவனம் செலுத்தி நடவடிக்கையை துரித கதயில் மேற்கொள்வதற்கு முன்வர வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

எனவே ஒவ்வொரு வருடமும் இப்பாலம் அமைத்து தரப்படும் என்று மக்களின் பொய்யான வாக்குறுதிகளை வழங்காமல் அதனை செயல் வடிவில் காட்டுவதற்கு அரசியல் தலைமைகள் முன்வருவார்களா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

ஸ்டேடியத்தில் அமர்ந்து நீதா அம்பானி செய்த செயல் : வைரல் வீடியோ!!

மும்பை இந்தியன்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் தொடரின் 37வது லீக் ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் மே 7 ஆம் திகதி நடைபெற்றது.

முதலில் களம் இறங்கிய மும்பை இந்தியன்ஸ் 4 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் எடுத்தது. பின்னர் 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் களம் இறங்கியது.

அப்போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வெற்றிக்கு 39 பந்தில் 67 ரன்கள் தேவைப்பட்டது. இருப்பினும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் மும்பை இந்தியன்ஸ் 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் மும்பை இந்தியன்ஸ் 10 போட்டியில் நான்கில் வெற்றி பெற்று 8 புள்ளிகளுடன் 5-வது இடத்தில் உள்ளது.

மும்பை அணியின் வெற்றிக்கு காரணம் அந்த அணியின் உரிமையாளர் நீதா அம்பானி என கூறப்படுகிறது.

என்னதான் வீரர்கள் திறமையாக விளையாடினாலும், ஸ்டேடியத்தில்அமர்ந்து போட்டியை பார்த்துக்கொண்டிருந்த நீதா அம்பானி, தனது அணி வெற்றி பெற வேண்டும் என்பதற்காக கண்ணை மூடி சாமி கும்பிட்டுள்ளார்.

இந்த வீடியோ சமூகவலைதளத்தில் வெளியிடப்பட்டு, மும்பை இந்தியன்ஸ் அணியின் வெற்றிக்கு நீதா அம்பானி சாமி கும்பிட்டதே காரணம் என கூறியுள்ளனர்.

திருகோணமலையில் காய்ச்சல் காரணமாக 20 வயது யுவதி மரணம்!!

காய்ச்சல் காரணமாக கிண்ணியா தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்ட 20 வயது யுவதி சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு உயிரிழந்த யுவதி கிண்ணியா, அண்ணல் நகரைச் சேர்ந்த என்.பாத்திமா சஹானா (20 வயது) எனவும் தெரிய வருகின்றது.

நான்கு நாட்களாக காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்த குறித்த யுவதி இன்றைய தினம் காலை 10.00 மணியளவில் கிண்ணியா தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

எனினும் குறித்த யுவதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதுடன் நீரிழிவு நோய் அதிகமாக காணப்பட்டதால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலை பேச்சாளரொருவர் தெரிவித்தார்.

அத்துடன் யுவதி உளநலம் பாதிக்கப்பட்டவரெனவும் உறவினர்கள் தெரிவித்தனர்.

உயிரிழந்தவரின் சடலம் விசாரணையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாகவும் வைத்தியசாலை பேச்சாளரொருவர் குறிப்பிட்டார்.

3 வயதில் திருமணம்… எனக்கும் எனது அம்மாவுக்கும் ஒரே கணவர் : ஒரு பெண்ணின் வேதனை!!

வங்கதேசத்தில் உள்ள Mandi பழங்குடியினத்தை சேர்ந்த விதவை பெண்களும், அவர்களுக்கு பிறந்த மகளும் ஒரே ஆணையே திருமணம் செய்து கொள்ளும் வழக்கத்தை பராம்பரியமாக பின்பற்றி வருகின்றனர்.

இந்த திருமண முறையால் பாதிக்கப்பட்ட Orola Dalbot (30) என்ற பெண் கூறியதாவது, நான் எனது தாய் Mittamoni மற்றும் எனது தாயின் இரண்டாவது கணவரும், எனது வளர்ப்பு தந்தையுமான Noten- ஆகிய இருவருடன் சிறு வயதில் இருந்து வசித்து வருகிறேன்.

எனது வளர்ப்பு தந்தை பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருப்பார், அவரின் சிரிப்பு எனக்கு மிகவும் பிடிக்கும். இப்படி ஒரு கணவர் கிடைத்ததால் எனது தாய் மிகவும் அதிர்ஷ்டம் செய்தவர் என்று கூட நான் நினைத்திருக்கிறேன்.

என்னை திருமணம் செய்துகொள்ளப்போகிறவர் எனது வளர்ப்பு தந்தை போன்றே இருக்க வேண்டும் என நான் எதிர்பார்த்தது உண்டு. ஆனால் நான் பருவம் அடைந்தபோது எனது காதில் விழந்த அந்த செய்தி என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

வளர்ப்பு தந்தையுடன், எனக்கு 3 வயது இருக்கும்போதே எனக்கு திருமணம் முடிந்துவிட்டது என தாய் என்னிடம் கூறியதை கேட்டு அதிர்ச்சியடைந்தேன். இதனால் வீட்டை விட்டு ஓடிவிடலாமா என்று தோன்றியது.

ஆனால், எனது தாய் இதற்கு அனுமதிக்கவில்லை. தற்போது எனது தாய்க்கு 21 வயதாகிவிட்டது என கூறுகிறார். இந்த திருமணம் குறித்து Mittamoni கூறியதாவது, எங்கள் இனத்தின் பராம்பரிய முறைப்படி திருமணமான ஒரு பெண் விதவையாகிவிட்டால் அவர் கண்டிப்பாக திருமணம் செய்துகொள்ளவேண்டும்.

அப்படி திருமணம் செய்துகொள்ளும்போது, அந்த விதவை பெண்ணிற்கு மகள் இருந்தால் அவளையும் சேர்த்து திருமணம் செய்துகொள்ள வேண்டும். எனது மகளுக்கு திருமணம் ஆகும்போது அவளுக்கு 3 வயது. தற்போது அவன் Noten-ஐ ஒரு கணவராகத்தான் கருத வேண்டும்.

இது எங்கள் பராம்பரியமான பழக்கம், இதனை நாங்கள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என தாய் கூறியுள்ளார்.

மிகவும் மோசமாக என்னிடம் நடந்து கொண்டார் : கண்ணீரோடு புகார் அளிக்க வந்த கல்லூரி மாணவி!!

தமிழகத்தில் பல்கலைகழக உளவியல் துறை தலைவர் ஆபாசமாக பேசியதாக கூறி இளம் பெண் ஒருவர் கண்ணீர் மல்க புகார் அளித்துள்ளார்.

கேரளா மாநிலம் மலப்புரம் பகுதியை சேர்ந்தவர் ஹரிதா. இவர் கோவை பாரதியார் பல்கலைகழகத்தில் முதுகலை அறிவியல் முதலாமாண்டு உளவியல் படித்து வந்த நிலையில் பல்கலைகழக பெண்கள் விடுதியில் தங்கி வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த நவம்பர் மாதம் 14-ஆம் திகதி விடுதியில் இருந்த சக மாணவிக்கு இரவு நேரத்தில் உடல்நிலை சரியில்லாமல் போனதால், ஹரிதா அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வேண்டுமென விடுதி காப்பாளரான பிரேமாவிடம் கேட்டுள்ளார்.

ஆனால் அவர் அழைத்து செல்ல ஆம்புலன்ஸ் கொடுக்க மறுத்ததோடு, விடுதியை பூட்டியுள்ளார்.

இதனால் விடுதி தலைமை காப்பாளர் தர்மராஜ் மற்றும் உளவியல் துறை தலைவர் வேலாயுதம் ஆகியோர் ஹரிதாவை வகுப்பறையில் சக மாணவிகள் முன்னிலையில் அவமானப்படுத்தியும், வகுப்பறையில் மேஜை மீது நிற்க வைத்து தண்டித்ததாகவும் கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி துறை தலைவர் வேலாயுதம் தனது அறைக்கு அழைத்து அறையினை பூட்டி ஆபாசமாக தகாத வார்த்தைகளினால் பேசியதாகவும், வலுகட்டாயமாக மாற்று சான்றிதழ் அளித்து பல்கலைகழகத்தில் இருந்து வெளியேற்றியதாகவும் மாணவி கூறியுள்ளார்.

இதன் காரணமாக உளவியல் துறை தலைவர் வேலாயுதம், விடுதி காப்பாளர் பிரேமா மற்றும் தலைமை விடுதி காப்பாளர் தர்மராஜ் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, தமிழக ஆளுநர், காவல்துறை தலைவர், மனித உரிமை ஆணையம், கேரள முதலமைச்சர் உள்ளிட்டோரிடம் ஹரிதா புகார் கடிதம் அளித்துள்ளார்.

அதன் பின் வெளியே வந்த அவர் பத்திரிக்கையாளர்களை சந்தித்த போது, தனக்கு நடந்த அவமானங்களை மிகவும் கண்ணீரோடு கூறியுள்ளார்.

தமிழரின் வியக்க வைக்கும் புதிய கண்டுபிடிப்பு!!

 

மட்டக்களப்பு – பழுகாமத்தைச் சேர்ந்த பண்ணையாளர் ஒருவர் கால்நடைகளுக்கு தேவையான புல்லை சிறிதாக வெட்டுவதற்கான இயந்திரம் ஒன்றை கண்டுபிடித்துள்ளார். கேதீஸ்வரன் என்ற பண்ணையாளரே புல் வெட்டும் புதிய இயந்திரத்தை கண்டுபிடித்துள்ளார்.

தனது பண்ணையிலுள்ள கால்நடைகளுக்கு புல் வெட்டிக் கொடுப்பதற்காக இயந்திரம் ஒன்றைப் பெறுவதற்காக பல இடங்களிலும் தேடி அலைந்துள்ளார்.

இறுதியில் அது கிடைக்காத நிலையில் தனது முயற்சியினால் இந்த இயந்திரத்தை கண்டு பிடித்துள்ளதாக பண்ணையாளர் கூறியுள்ளார்.

இதேவேளை, எனது முயற்சி எனக்கு வெற்றியளித்தமை மிகுந்த மகிழ்ச்சியை தருவதாகவும் தெரிவித்துள்ளார்

எதிர்காலத்தில் இன்னும் சில இயந்திரங்களைக் கண்டுபிடிக்கலாம் என்றும் பண்ணையாளரான கேதீஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். மேலும், பண்ணையாளரின் புதிய இயந்திர கண்டுபிடிப்பு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

நடிகை ரஞ்சிதாவுக்கு “ஆசிரமத்தில்” நடக்கும் “கொடுமைகள் : கண்ணீருடன் கதறும் ரஞ்சிதா!!

நடிகை ரஞ்சிதா பெங்களூர் அருகே பிடுதி ஆசிரமத்தில் நித்தியானந்தாவிடம் தீட்சை பெற்று சன்னியாசி ஆனார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர், நித்தியானந்தாவுடன் ஆபாசமாக இருந்ததாக வெளியான வீடியோ காட்சிகளால் சர்ச்சையில் சிக்கினார் நடிகை ரஞ்சிதா.

அது குறித்தானக் காட்சிகள் சில தொலைக்காட்சிகளில் தொடர்ச்சியாக ஒளிபரப்பப்பட்டு பரபரப்பைக் கிளப்பின. தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டக் காட்சிகள் போலியானவை என நித்தியானந்தா மற்றும் ரஞ்சிதா தரப்பு விளக்கமளித்தன. இந்நிலையில் நித்தியானந்தாவின் பிறந்த தினமான நேற்று அவரிடம் தீட்சைப் பெற்று சன்னியாகி ஆகியுள்ளார் ரஞ்சிதா.

கடந்த 1992ம் ஆண்டு கார்த்திக் ஜோடியாக நாடோடி தென்றல் படம் மூலம் இயக்குனர் பாரதிராஜாவினால் அறிமுகப்படுத்தப்பட்டவர் நடிகை ரஞ்சிதா. அதனைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னட திரைப்படங்களில் பல முண்ணனி நடிகர்களுடன் நடித்து பிரபல நடிகையானார்.

திரைத் துறையில் இருந்து அவரது கவனம் சிறிது சிறிதாக ஆன்மீகத்தில் ஈடுபடத் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து, பெங்களூர் அருகே பிடுதியில் நித்யானந்தா நடத்தி வரும் ஆசிரமத்திற்கு சென்று சமூக சேவையில் ஈடுபட்டு வந்தார்.

இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நித்தியானந்தா-நடிகை ரஞ்சிதா தொடர்பான ஆபாச வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து நித்தியானந்தா கைது செய்யப்பட்டார். ரஞ்சிதா சிலகாலம் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தார். பின்னர், தொலைபேசி வாயிலாகவும், அதனைத் தொடர்ந்து நேரிலும் தன் மீது சுமத்தப் பட்ட பழி குறித்து விளக்கமளித்தார்.

இது தொடர்பான பல்வேறு வழக்குகள் விசாரணையில் தொடர்ந்து இருந்து வருகிறது. ஒரு குறிப்பிட்ட தொலைக்காட்சி நித்தியானந்தா-ரஞ்சிதா குறித்தான சித்தரிக்கப்பட்ட காட்சிகளை வெளியிட்டது உறுதி செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட தொலைக்காட்சி நிறுவனம் மறுப்பும், மன்னிப்பும் கேட்டு ஒளிபரப்பியது.

இந்நிலையில் நித்தியானந்தாவின் பிறந்த தினத்தையொட்டி பெங்களூர் அருகே பிடுதியில் உள்ள அவரது ஆசிரமத்தில் நேற்று விழா நடைபெற்றது. இந்த விழாவில் அவரது சீடர்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

அப்போது நித்தியானந்தாவிடம் இருந்து தீட்சை பெற்று நடிகை ரஞ்சிதா சன்னியாசி ஆனார். அதனை தொடர்ந்து நடிகை ரஞ்சிதா, இனி ‘மா ஆனந்தமயி’ என்று அழைக்கப்படுவார் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

அவருடன் மேலும் சில பெண் சீடர்களும் சன்னியாசியாகி தீட்சை பெற்றனர். நடிகை ரஞ்சிதா சன்னியாசியாகி தீட்சை பெற்றதற்கு கர்நாடகத்தை சேர்ந்த பல மடாதிபதிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சன்னியாசி தீட்சை பெறுவது என்பது சுலபமானது அல்ல. தியாக மனோபாவம் இருக்க வேண்டும். அதற்கென்று சாஸ்திர சம்பிரதாயங்கள் உள்ளன. அவை எல்லாம் கடைப்பிடிக்கப்படவில்லை என அவர்கள் தெரிவித்தனர்.