பிச்சைக்காரராக மாறிய பிரபல நடிகர் : புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி!!

முன்னணி நடிகர்கள் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கினால் துணை நடிகர்களின் சம்பளம் சில லட்சங்களில் தான் இருக்கும். அவர்களுக்கு பெரிதாக திரையில் ஜொலிக்கும் வாய்ப்பும் அதிகம் கிடைக்காது. இருப்பினும் ஒரு சிலர் தங்கள் நடிப்பு திறமையை காட்ட வித்யாசமான ரோல்களில் நடிக்க தயங்குவதில்லை.

இந்நிலையில் காஞ்சனா, பைரவா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள நடிகர் ஸ்ரீமன் தற்போது ஒரு படத்திற்காக பிச்சைக்காரராக மாறியுள்ளார். சில புகைப்படங்களையும் அவர் வெளியிட்டுள்ளார்.

“என்ன பாலா படத்தில் நடிக்கிறீங்களா” என ரசிகர் ஒருவர் கேட்டதற்கு, “அவரின் அழைப்புக்காக காத்திருக்கிறேன், ஆனால் இது பாலா படம் இல்லை” என ஸ்ரீமன் பதிலளித்துள்ளார்.

பாரிசில் தீவிரவாத தாக்குதல் : ஒருவர் பலி, நால்வர் படுகாயம்!!

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதல்களில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளப்பட்டுள்ளதுடன், நால்வர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பாரிசின் ஒபெரா மாவட்டத்தில் இடம்பெற்ற இந்த தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகநபர் அந்நாட்டு பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ் தீவிரவாதிகள் அமைப்பு உரிமை கோரியுள்ளது.

மக்கள் நடமாட்டம் மிக்க ஓர் பகுதியில் இந்த தாக்குதல் சம்வம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் குறித்து அந்நாட்டு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

வவுனியாவில் கொட்டும் மழையிலும் முள்ளிவாய்க்கால் தினம் அனுஸ்டிப்பு!!

வவுனியாவில் முள்ளிவாய்க்கால் நினைவு தினம் வடமாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் தலைமையில் நேற்று (13.05.2018) மாலை 6 மணியளவில் வவுனியா மாவட்ட செயலகத்திற்கு அருகேயுள்ள பண்டாரவன்னியன் நினைவுத் தூபிக்கு முன்பாக இடம்பெற்றது.

இந் நிகழ்வில் வவுனியா நகரசபை உறுப்பினர்கள் , முன்னாள் வட மாகாணசபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரன், தமிழீழ விடுதலை இயக்கத்தின் உறுப்பினர்கள், வவுனியா மாவட்ட சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள், சமூக ஆர்வளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது முள்ளிவாய்க்காலில் இறுதி யுத்ததின்போது உயிரிழந்தவர்களுக்கான ஈகைச்சுடர் ஏற்றப்பட்டதுடன் மலர் தூவி அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

முகநூல் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட இலங்கையர்கள் : அதிரடியாக கைது செய்த பொலிஸார்!!

மிடியாகொட பிரதேசத்தில் 19 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ் தலைமையகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

அனுராதபுரம், நொச்சியாகம, தம்புத்தேகம மற்றும் கொழும்பு ஆகிய பகுதிகளிலிருந்து வந்திருந்த 150 இற்கும் அதிகமானோர் முகநூல் மூலமாக இணைந்துள்ளனர். இதன் பின்னர் ஒரு கொட்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்து இணைந்துள்ளனர்.

இந்த நள்ளிரவு கொண்டாட்டத்தில் 150 இற்கும் அதிகமானோர் கலந்துகொண்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடத்தில் கஞ்சா, போதை ஊட்டும் டொபி என்பனவும் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ள பொலிஸார், இந்த சுற்றிவளைப்புக்கு 75 பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டதாகவும் கூறியுள்ளனர்.

இதேவேளை, இவர்களில் 7 பேரிடம் போதைப் பொருட்கள் இருந்துள்ளதாகவும், இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் 3 பேர் யுவதிகள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இலங்கை பெண் சுசானா சொன்னது பொய்யா : எங்கள் வீட்டு மாப்பிள்ளை அபர்ணதி!!

எங்கள் வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சி ஸ்கிரிப்ட் கிடையாது என்று அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அபர்ணதி கூறியுள்ளார். பிரபல தமிழ் தொலைக்காட்சியில் நடிகர் ஆர்யா பங்கு பெற்ற எங்கள் வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட 16 பெண்களில் ஆர்யா ஒருவரைத் தான் திருமணம் செய்வார் என்று கூறப்பட்டது. அதன் பின் அவர் சில காரணங்களுக்காக அந்த பெண்களில் யாரையும் திருமணம் செய்யவில்லை.

இதையடுத்து குறித்த நிகழ்ச்சி முடிந்தவுடன் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இலங்கை பெண் சுசானா ஒரு பேஸ்புக் லைவ் செய்தார்.

அப்போது அவரிடம் ஒருவர் இந்த நிகழ்ச்சி ஒரு ஸ்கிரிப்டா என்று கேட்டார். அதற்கு அவர் ஆமாம் என்று கூறியிருந்தார்.

இது பெரிதும் பேசப்பட்டது. இந்நிலையில் இதே நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அபர்ணதி என்ற பெண் பிரபல தனியார் இணையதள சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்தார்.

அதில், அவர் இந்த நிகழ்ச்சி ஒரு ஸ்கிரிப்டும் கிடையாது மன்னாங்கட்டியும் கிடையாது. இது அவரவருடைய மனதிற்கு தெரியும் என்றும், ஸ்கிரிப்ட் என்றால் என்னால் சரியாகவே பேச முடியாது, அப்படி இது மட்டும் உண்மை என்றால் என் தலைமுடியை வெட்டிக் கொள்வதாகவும் கூறியுள்ளார்.

13 வயது சிறுவனுக்கு 23 வயது பெண்ணை திருமணம் செய்து வைத்தது எதனால் : காரணம் வெளியானது!!

இந்தியாவில் 13 வயது சிறுவனை 23 பெண் திருமணம் செய்து கொண்ட சம்பவம் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவியது. அதிலும் இந்த திருமணம் பெற்றோரின் சம்மதத்துடனே நடந்ததாக கூறப்பட்டதால், எப்படி சம்மதித்தார்கள் என்ற கேள்வி பலருக்கு எழுந்த நிலையில் பெற்றோர்கள் குறித்த திருமணத்திற்கு பிறகு தலைமறைவாகிவிட்டார்கள்.

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து அருகில் இருந்தவர்கள் கூறுகையில், சிறுவனின் தந்தை ஒரு குடிகாரர். அவர் இறந்துவிட்டதால், அதன் பின் குடும்பத்தை பார்த்து கொள்ள யாருமே இல்லை என்ற கவலையில் சிறுவனின் தாய் இருந்ததாகவும், அவர் தான் கூலி வேலை செய்து குடும்பத்தை நடத்தி வந்ததாகவும் கூறியுள்ளனர்.

இவர்கள் குடும்பத்தில் இரண்டு பெண், இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். அதில் அவர் 13 வயதுடைய மூத்த மகனுக்குத் தான் திருமண ஏற்பாடுகள் செய்து வந்ததாகவும், இதனால் அவர் கர்நாடகாவில் இருக்கும் உறவினர்கள் மூலம் பெண் தேடியதாகவும், அதன் பின் இரு குடும்பத்தினரும் ஒத்துப் பேசி ஒரு முடிவுக்கு வந்த பின்னரே இந்த திருமணம் நடைபெற்றதாக கூறியுள்ளனர்.

மேலும் இது குறித்து தாசில்தார் ஸ்ரீனிவாச ராவ் கூறுகையில், சட்டப்படி இந்த திருமணம் ரத்து செய்யப்படும். பெற்றோர்கள் மணப் பெண் மற்றும் மணமகனை இரண்டு நாட்களில் ஒப்படைக்காவிட்டால் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.

13 வயது சிறுவன் கொடூரமாக கொலை : பதறவைக்கும் காரணம்!!

இந்தியாவில் 13 வயது சிறுவன் கொடூரமாக கொல்லப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளிகள் இருவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

குஜராத் மாநிலத்தின் பனஸ்கண்டாவை சேர்ந்தவர் திரிலோக்சந்த் ஷா. இவர் மகன் ஜெய்னம் ஷா (13). கடந்த 2014-ல் ஜெய்ன் பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்து கொண்டிருந்த போது மர்ம நபர்களால் கடத்தி செல்லப்பட்டான்.

பின்னர் திரிலோக்சந்துக்கு போன் செய்த மர்ம நபர்கள் அவர் உடனடியாக 50 லட்சம் பணத்தை தங்களுக்கு கொடுக்க வேண்டும் எனவும் இல்லையெனில் ஜெய்னமை கொன்று விடுவோம் எனவும் மிரட்டியுள்ளனர்.

இது குறித்து திரிலோக்சந்த் பொலிசாருக்கு புகார் அளித்த நிலையில் பொலிசார் மர்ம நபர்களிடமிருந்து வந்த போன் நம்பரை வைத்து விசாரணை நடத்தினார்கள்.

இதை எப்படியோ தெரிந்து கொண்ட மர்ம நபர்கள் சிறுவன் ஜெய்னம் ஷாவை கொடூரமாக கொலை செய்து அங்குள்ள கால்வாயில் தூக்கி போட்டனர்.

சம்பவம் நடந்த அடுத்தநாள் பொலிசார் ஜெய்னம் சடலத்தை கைப்பற்றிய நிலையில் இச்செயலில் ஈடுபட்ட 6 பேரை கைது செய்தனர்.

அதில் முக்கிய குற்றவாளிகளான மெகுல் பிரஜ்பதி மற்றும் மாலா ரபாரி ஆகிய இருவரும் அளித்த வாக்குமூலத்தில், எங்களுக்கு சூதாட்டம் விளையாடும் பழக்கம் இருந்ததால் அதிகம் பணம் தேவைப்பட்டது.

இதோடு 6 லட்சம் அளவில் எங்களுக்கு கடன் இருந்தது. அதில் ஒன்றரை லட்சம் கடனை ஜெய்னமின் தந்தை திரிலோக்சந்திடமிருந்து வாங்கினோம்.

அவர் பெரிய கோடீஸ்வரர் என்பது எங்களுக்கு தெரியும், அதனால் அவர் மகனை கடத்தி பணம் பறிக்க திட்டமிட்டோம், அது கொலையில் முடிந்து விட்டது என கூறினர்.

இந்த ஆறு பேர் மீதான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் மெகுல் மற்றும் ரபாரிக்கு ஆயுள் தண்டனை விதித்து தற்போது நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வழக்கில் தொடர்புடைய மற்ற நால்வருக்கும் தலா ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அந்த பெண்ணை கல்யாணம் செய்யமாட்டேன் : விரக்தியில் இளைஞர் செய்த விபரீத செயல்!!

திருமணத்திற்கு பெண் பார்ப்பது பிடிக்காமல் காவலர் ஒருவர் பிளேடால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டத்தை சேர்ந்தவர் தினேஷ்குமார் (26). இவர் தஞ்சாவூரில் உள்ள ஆயுதப்படையில் காவலராக பயிற்சி எடுத்து வந்தார். 30ம் திகதி பயிற்சி நிறைவு பெறும் நிலையில் நேற்று மதியம் கழிப்பறைக்கு செல்வதாக நண்பர்களிடம் கூறிவிட்டு தினேஷ் சென்றுள்ளார்.

வெகு நேரமாகியும், அவர் திரும்பி வராததால் அங்கு சென்று நண்பர்கள் பார்த்துள்ளனர். அப்போது, பிளேடால் கழுத்தையும் வலது கையையும் அறுத்து தினேஷ்குமார் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். இதையடுத்து உடனடியாக அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் தினேஷ்குமாருக்கு திருமணம் செய்வதற்காக அவரது பெற்றோர், 20 நாள்களுக்கு முன் பெண் பார்த்துள்ளனர். அந்த பெண்னை பிடிக்கவில்லை என தினேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் பயிற்சி முடித்தவுடன் திருமணம் என பெற்றோர் கூறியதால் தினேஷ்குமார் தற்கொலைக்கு முயன்றது தெரியவந்துள்ளது.

விகாரைக்கு தானம் கொண்டு சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கதி : பிக்குவின் அட்டகாசம்!!

விகாரைக்கு தானம் கொண்டு சென்ற பெண்ணொருவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் தேரர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவின் பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் முன்னணி செயற்பாட்டாளரான சீகிரியே தம்மிந்த தேரரே கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த பிக்கு இதற்கு முன்னரும் பெண்ணொருவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்டதால், நீதிமன்றத்தினால் கடுமையாக எச்சரிக்கப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டவர் என தெரியவருகிறது.

இந்த சம்பவம் கடந்த 2016 ஆம் ஆண்டு நடந்துள்ளதுடன் அப்போது அவர் தம்புள்ளை பிரதேச சபையின் உறுப்பினராக இருந்துள்ளார்.

மகிந்த ராஜபக்ச அணியில் அங்கம் வகித்த காரணத்தினால், கிடைத்த அரசியல் ஆதரவை பயன்படுத்தி, நாகலவெவ பிரதேசத்தில் உள்ள வீடொன்றுக்குள் புகுந்து அங்கிருந்த பெண்ணை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளார்.

இதன் பின்னர் தனது அரசியல் பலத்தை காட்டி அடிக்கடி அந்த பெண்ணின் வீட்டுக்கு சென்று பெண்ணின் கணவனை திட்டி, தொடர்ந்தும் பெண்ணை வல்லுறவுக்கு உட்படுத்தி வந்துள்ளார்.

மிகவும் வறிய நிலையில் வாழும் இந்த குடும்பத்தினர் காவி உடைக்கு கொடுக்கும் மரியாதை மற்றும் தேரரின் அரசியல் பலத்தின் மீதுள்ள அச்சம் காரணமாக பொறுமையாக இருந்துள்ளனர். பிக்குவால் தொடர்ந்தும் கொடுக்கப்படும் தொல்லை தாங்க முடியாது அது குறித்து சீகிரிய பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

தம்மை தொந்தரவு கொடுக்காது வாழ விடுமாறு பிக்குவிடம் கூறுமாறு இந்த குடும்பத்தினர் பொலிஸாரிடம் கூறியுள்ளனர்.

ஏன் அப்படி கூறுகிறீர்கள் என பொலிஸார் கேட்ட போது, சம்பவங்கள் குறித்து குடும்பத்தினர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து பொலிஸார் பிக்குவை கைது செய்து தம்புள்ளை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தியுள்ளனர்.

நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட பிக்கு, தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளதுடன் நீதிமன்றம் கடுமையாக எச்சரித்து பிணையில் விடுவித்துள்ளது.

இந்த நிலையில், சீகிரிய -நாகலவெவ பிரதேசத்தை சேர்ந்த 46 வயதான மூன்று பிள்ளைகளின் தாய், கடந்த ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதி மதியம் தானத்தை எடுத்துக்கொண்டு கிராமத்தில் உள்ள விகாரைக்கு சென்றுள்ளார்.

அப்போது சந்தேக நபரான பிக்கு அந்த பெண்ணை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளார்.

இது சம்பந்தமாக பெண் சீகிரிய பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதுடன் பொலிஸ் பிக்குவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தியுள்ளனர்.

பிக்கு இதற்கு முன்னர் இதே குற்றத்தை செய்துள்ளதை கவனத்தில் கொண்டு அவரை எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளார்.

மைத்திரியின் மகளின் அதிரடி செயற்பாடு : வியந்து போன குடும்பம்!!

 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகளின் செயற்பாடு குறித்து சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்பட்டு வருகிறன. குறைந்த வருமானம் பெறும் குடும்பம் ஒன்றுக்கு ஜனாதிபதியின் மகள் சத்துரிக்கா சிறிசேன வீடு ஒன்றை கட்டி கொடுத்துள்ளார்.

ஹிங்குரங்கொட பிபில பிரதேசத்தில் வாழும் குடும்பத்திற்கே புதிய வீடு ஒன்று நிர்மாணித்து கொடுக்கப்பட்டுள்ளது. குறைந்த வருமானம் பெறும் நுவன் சேனாரத்ன என்ற குடும்பத்திற்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் வீடு அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய அனைத்து வசதிகளையும் கொண்ட வீடு நிர்மாணிக்கப்பட்டுள்ளது. நிர்மாணித்தை வீட்டினை பயனாளருக்கு வழங்கும் நிகழ்வு ஜனாதிபதியின் மகள் சத்துரிக்கா சிறிசேனவின் தலைமையில் நடைபெற்றது.

வவுனியாவில் வடிகால் சீரமைப்புப் பணிகள் மந்த கதியில் : மக்கள் விசனம்!!

வவுனியாவில் கால்வாய், வடிகால்கள் சீரமைக்கும் பணிகள் இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில் அப்பணிகள் மந்த நிலையில் இடம்பெற்று வருவதால் பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்களுக்கும் பெரும் அசௌகரியங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பாக முதலாம், இரண்டாம் குறுக்குத் தெருவின் பின்பகுதியிலுள்ள சூசைப்பிள்ளையார்குள வீதிகளில் இந்நிலை ஏற்பட்டுள்ளது.

தற்போது மாலை வேளைகளில் பெய்துவரும் மழையினால் குப்பைகள் வடிகால்களுக்குள் செல்லாது அடைத்துள்ளதால் துர்நாற்றம் வீசுவருகின்றது. இதனால் அப்பகுதியால் போக்குவரத்தினை மேற்கொள்ள முடியாமலுள்ளதாகவும் வர்த்தக நிலையங்களுக்கு பொதுமக்கள் சென்றுவருவதில் பெரும் இடரினை எதிர்கொண்டுள்ளதுடன்,

ஒரு மாதத்திற்கு மேலாக இவ்வாறான நிலை காணப்படுவதாகவும் இதனை உடனடியாக சீர் செய்வதுடன் பொதுமக்களின் பாதுகாப்பான வாழ்க்கைக்கு உறுதிப்படுத்துமாறு வியாபார நிலைய உரிமையாளர்கள் கோரியுள்ளார்கள்.

வவுனியாவில் காணாற்போன உறவுகள் போராட்டம் : விஜய் ரசிகர்களும் ஆதரவு தெரிவிப்பு!!

வவுனியாவில் காணாமற்போன உறவுகளின் போராட்டம் இன்றுடன் 444ஆவது நாளை எட்டியுள்ளது. இந்நிலையில் காணாமற்போன உறவுகள் தமது பிள்ளைகளைத்தேடி கடந்த ஒன்றரை ஆண்டுகளாக வீதியிலிருந்து சூழற்ச்சி முறையிலான உணவு தவிர்ப்புப் போராட்டத்தினை மேற்கொண்டு வருகின்றனர்.

இன்று அன்னையர் தினத்தை முன்னிட்டு காணாமற்போன உறவுகள் பிற்பகல் 12 மணியளவில் கந்தசாமி ஆலயத்திற்குச் சென்று தேங்காய் உடைத்து பூஜை வழிபாடுகளை மேற்கொண்டதுடன் அங்கிருந்து பேரணியாக பஜார் வீதிவழியாக ஹொறவப்பொத்தானை வீதிவழியாக இலுப்பையடி சென்று நீதிமன்ற வழியாக போராட்ட களத்தைச் சென்றடைந்து அங்கு காணாமற்போன உறவுகளினால் சத்தியப்பிரமாணம் ஒன்றினை மேற்கொண்டனர்.

இன்றைய போராட்டம் தொடர்பாக கருத்துத் தெரிவித்த உறவுகள், அன்னையர் தினத்தை முன்னிட்டு தமது பிள்ளைகளின் விடுதலையை துரிதப்படுத்தும் நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ளவேண்டும் என வலியுறுத்தும் போராட்டமாகவே அமைந்துள்ளதாகத் தெரிவித்தனர்.

இன்றைய காணாமற்போன உறவுகளின் போராட்டத்திற்கு இலங்கையின் பல பகுதிகளிலிருந்து குறிப்பாக வடக்கு கிழக்கு விஜய் ரசிகர் மன்றத்தினர் ஆதரவினை வழங்கியிருந்ததுடன் பெருமளவு இளைஞர்கள் கலந்து கொண்டு இறுதியில் மனித சங்கிலிப் போராட்டத்தினை மேற்கொண்டு வீதியின் இருபகுதிகளிலும் குழுமியிருந்து போராட்டத்தை மேற்கொண்டனர்.

தாயாருடன் வீடு திரும்பிக்கொண்டிருந்த சிறுமிக்கு நேர்ந்த கதி!!

பசறை – தெமவெலகம பிரதேசத்தில் பெய்த கனமழையுடன் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி 10 வயதான மாணவி உயிரிழந்துள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மெதவெலகம பாடசாலையில் 5ஆம் தரத்தில் பயின்று வந்த ரஸ்மிதா ரஸ்மீதாரா என்ற மாணவியே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

மாணவி புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான வகுப்புக்கு சென்று தாயாருடன் வீடு திரும்பிக்கொண்டிருந்த போது நேற்று மாலை 3 மணியளவில் அவர்கள் சென்றுக்கொண்டிருந்த குறுக்கு பாதையில் திடீரென வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியுள்ளது.

தாயும் மகளும் வெள்ளத்தில் சிக்கியுள்ளனர். பிரதேசவாசிகள் தாயை மீட்ட போதிலும் சிறுமி உயிரிழந்து விட்டதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

கூலியின்றி வேலை செய்யும் கடவுள் அன்னை : ஒரு நிமிடத்தை மாத்திரமாவது ஒதுக்குவீர்களா?

நம் கண் முன்னே நடமாடிக் கொண்டிருக்கும் தெய்வம் நம் தாய். அம்மா என்ற சொல் நம் தாய் மொழி தமிழ் போன்று புனிதமானது.

ஆம்.. நம் மொழியை கூட நாம் தாய் மொழியென்று தானே சொல்கின்றோம். தாய் என்ற இந்த சொல்லை தாங்கி இரத்தமும், சதையுமாக நமக்கு கூலியின்றி வேலை செய்யும் அன்னைக்கு இவ்வுலகத்தில் எதுவும் ஈடாகாது.

ஈரைந்து மாதங்கள் எம்மை சுமந்து ஈன்றெடுத்த ஈடு இணையற்ற நம் தாய்க்கு பெருமை சேர்க்கும் உன்னத நாள் இன்று.

இன்றைய நாளை உங்கள் தாய்க்காக ஒதுக்குவீர்களா? இல்லை வேண்டாம். இந்த பரபரப்பான உலகில் ஒரு நிமிடத்தை மாத்திரமாவது உங்கள் உயிரன்னைக்காக ஒதுக்க முடியுமா?

தமது குழந்தைகளுக்காக எவ்வளவு கஷ்டங்களையும் பொறுத்துக் கொண்டு கள்ளமற்ற, எதிர்பார்ப்பற்ற அன்பு காட்டுவதே நமது அம்மா.

தனது பிள்ளைகளுக்காகவே வாழ்ந்து கொண்டிருக்கும் தாயின் மகத்துவத்துவத்திற்கு மதிப்பளிக்கும் முகமாகவே அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது.

இந்த அன்னையர் தினம் பண்டைய காலத்திலிருந்தே கொண்டாடப்பட்டு வருவதற்கான சான்றுகள் பல உள்ளன.

அந்த வகையில், வசந்த காலத்தின் துவக்கத்தை கிரேக்கர்கள் கொண்டாடிய போது அந்த கொண்டாட்டத்தில் தாய் தெய்வத்தை வணங்குவதையும் ஓர் அங்கமாக கொண்டிருந்தனர்.

அவர்கள் க்ரோனஸின் மனைவி, ரேஹாவை தாய் தெய்வமாக வழிபட்டு வந்தார்கள். அதே போன்று ரோமர்களும் வசந்த கால கொண்டாட்டத்தின் போது தாய் தெய்வத்தை வணங்குவதையும் அவருக்கு மரியாதை செய்வதையும் வழக்கமாக கொண்டிருந்தனர்.

இவ்வாறு பண்டைய வரலாற்றின் பின்னணியே அன்னையர் தினம் தோன்றுவதற்கு வித்திட்டது என கூறப்படுகிறது.

இருப்பினும், இந்த அன்னையர் தினம் தோன்றுவதற்கு காரணமாக இருந்தவர் அமெரிக்காவின் மேற்கு வேர்ஜினியா மாநிலத்தில் கிராப்டன் (GRAFTON) என்ற கிராமத்தில் வாழ்ந்து வந்த ஜார்விஸ் என்பவரேயாவார்.

இவர் அமெரிக்காவில் நடந்த யுத்தமொன்றில் பலியாகிய அமெரிக்க வீரர்களின் குடும்பங்களின் நல்வாழ்க்கைக்காக தன்னை அர்ப்பணித்து அதற்காகாவே பாடுபட்டு 1904இல் உயிர்நீத்தார்.

இந்த நிலையில் இவரது மகளான அனா ஜார்விஸ் (Anna Jarvis) தனது தாயின் நினைவாக மே மாதத்தில் ஓர் ஞாயிற்றுக்கிழமையன்று சிறப்பு வழிபாட்டினை நடத்தினார்.

இதைத் தொடர்ந்து தன் தாயாரின் நினைவாகவும், தத்தம் வீடுகளில் அவரவர் அன்னையர்களும் கெளரவிக்கப்பட வேண்டும் என்ற தன்னுடைய எண்ணத்தை பென்சில்வேனியா மாநில அரசுக்குத் தெரிவித்தார்.

அரசும் அவர் கருத்தை ஏற்று 1913ஆம் ஆண்டு முதல் தாய்மாரை கௌரவிப்பதற்கான தினத்தை அன்னையர் தினம் என அங்கீகரித்து அறிவித்தது.

இருந்தும் இதில் திருப்தியடையாத அவர் அமெரிக்கா முழுவதும் இந்த அன்னையர் தினம் கொண்டாடப்பட வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதிக்கும் இதேவேண்டுகோளை விடுத்தார்.

இந்த கோரிக்கையின் நியாயத்தன்மைக்கு முக்கியத்துவம் கொடுத்த அன்றைய அமெரிக்காவின் ஜனாதிபதி வுட்ரோ வில்சன் 1914ஆம் ஆண்டு தொடக்கம் வருடம் தோறும் மே மாதம் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமையை அதிகாரப்பூர்வமாக அன்னையர் தினமாகவும், அன்றைய நாளை விடுமுறை தினமாகவும் அறிவித்தார்.

எமக்கு தூய்மையான அன்பை தரும் அன்னையர்களை மகிழ்விப்பதற்காகவும் அவர்களது மகத்துவத்தையும், பெருமையையும் உலகறியச் செய்யும் வகையில் தற்போது அன்னையர் தினம் பரவலாக உலகின் பல நாடுகளிலும் கொண்டாடப்பட்டு வருகிறது.

எனினும் அன்னையின் மகத்துவத்தை அறியாத பலரும் நம் மத்தியில் வாழந்து கொண்டு தான் இருக்கிறார்கள். அதற்கான சாட்சி தான் நம் நாட்டிலுள்ள முதியோர் இல்லங்கள்.

கருவிலிருந்தே தன் குழந்தைக்காக உணவு, உறையுள், உயிர் என அனைத்தையும் தியாகம் செய்து, தன் சேய் பூவுலகில் நீண்ட நாள் வாழ பிரார்த்திக்கும் அன்னையை பலரும் ஒரு பொருளாகவே பார்க்கின்றார்கள்.

ஆம் நம் தேவை முடிந்ததும் தூக்கி போடும் பொருளாக.. இந்த நிலை நாளை நமக்கும் வரலாம் என்பதையும் மறந்து..

இந்த நிலையானது இன்றுடன் முடிவிற்கு வர வேண்டும் என்பதே எனது அவா. நம் முதல் காதலும், எம் மீது முடிவில்லா காதலை கொண்டவளும் அன்னையே.

கொழும்பு பொலிஸாருக்கு அதிர்ச்சி கொடுத்த நாட்டாமை!!

கொழும்பு, புறக்கோட்டையில் நாட்டாமையாக செயற்பட்ட நபரை கைது செய்த பொலிஸார் அதிர்ச்சி அடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

நாட்டாமையாக செயற்பட்ட நபர் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டார் என்ற சந்தேகத்தின் பேரில், பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

100 கிராம் ஹெரோயின் போதைப்பொருளை கையில் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட போதும், அவரை விசாரணை செய்த பொலிஸாருக்கு அதிர்ச்சி கிடைத்துள்ளது.

குறித்த சந்தேகநபரின் வீட்டினை சோதனை செய்த போது சுமார் 2.268 கிலோகிராம் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் பெறுமதி 2.45 கோடி ரூபாய் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சுனில் ஷாந்த வீரக்கொடி என்ற இந்த சந்தேக நபர் பல கொள்ளைச் சம்பவங்களுக்கு தொடர்புபட்டுள்ளதாகவும், அவருக்கு எதிராக நீதிமன்றத்தில் 7 பிடியாணைகள் உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபரை ஹொரனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது எதிர்வரும் 25ஆம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நிதிபதி உத்தரவிட்டுள்ளார்

கொழும்பில் நவீன மயமாகும் ரயில் பயணம் : பயணிகளுக்கு மகிழ்ச்சி!!

பொது போக்குவரத்து சேவையை அபிவிருத்தி செய்யும் நோக்கில் கொழும்பில் ரயில் பயணங்கள் நவீனமயமாக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதற்கமைய கொழும்பு மற்றும் அதனை சுற்றியுள்ள பிரதேசங்களை இணைக்கும் ததாசன்ன ரயில் கட்டமைப்பினை அபிவிருத்தி செய்யும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதன் ஊடாக ரயில்வே திறனை அதிகரிப்பதற்காக அனுமதி பத்திரம் மற்றும் ஆசனங்களை முன்கூட்டியே ஒதுக்கி கொள்வதற்கு நவீன கட்டமைப்பு ஒன்று உருவாக்கப்படவுள்ளது.

பயணிகளுக்கு தொலைதொடர்பு சேவைகள் (WiFi உட்பட) வழங்குவதற்காக நவீன கட்டமைப்பு, ரயில் நிர்வாகம் மற்றும் செயற்பாட்டு மையம் நிர்மாணித்தல் போன்ற பல்வேறு வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.