இலங்கையில் அதிர்ச்சியை ஏற்படுத்திய மாணவனின் தற்கொலை!!

 

இலங்கையில் நண்பர்களின் கிண்டல்களை தாங்கிக் கொள்ள முடியாத மாணவன் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கம்பஹா அரமங்கொட பிரதேசத்தை சேர்ந்த லசித தில்ஷான் நிஷங்க என்ற 18 வயதுடைய மாணவனே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவர் 12ஆம் வகுப்பில் விஞ்ஞான பிரிவில் கல்வி கற்றுள்ளார்.

அப்பாவியான தோற்றத்தை கொண்ட இந்த மாணவனை பலர் துன்புறுத்துவதனை வழக்கமாக கொண்டுள்ளார். கடற்படையில் பணியாற்றிய மாணவனின் தந்தை பணியில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார்.

மாணவன் லசிதவின் மூத்த சகோதரர் ருஹுனு பல்கலைக்கழகத்தில் கல்வி வருகிறார். கடந்த 9ஆம் திகதி லசிதவின் பெற்றோர் ராகம வைத்தியசாலைக்கு சென்றுள்ளனர். வீட்டில் லசித மற்றும் அவரது பாட்டியே இருந்துள்ளனர். காலை உணவு பெற்று கொள்வதற்காக பாட்டி லசிதவை அழைத்துள்ளார். இதன் போது லசித ஏதோ புத்தக்கத்தில் எழுதி கொண்டிருந்ததனை பாட்டி அவதானித்துள்ளார்.

அரை மணித்தியாலங்களின் பின்னர் மீண்டும் தனது பேரனை அழைக்க சென்ற பாட்டி அதிர்ச்சியான சம்பவத்தை ஒன்றை பார்த்துள்ளார். புத்தகத்தை மேசை மீது வைத்து விட்டு லசித் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதனையே பாட்டி அவதானித்துள்ளார்.

வைத்தியராகும் கனவில் இருந்த லசித் சாதாரண தர பரீட்சையில் 9ஏ சித்திகளை பெற்றிருந்த நிலைமையில் உயர்தரத்திற்கு விஞ்ஞான பிரிவை தெரிவு செய்துள்ளார்.

தூக்கிட்ட மாணவனுக்கு அருகில் இருந்த புத்தகத்தில் சில முக்கிய விடயங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் “ வகுப்பறையில் யாரும் எனக்கு ஒன்றும் கூறவில்லை. ஒருவருடன் பேசினால் என்ன நடந்து விடப் போகின்றது. நான் தான் வேண்டும் என்று பேசியதாக எனக்கு தொல்லை கொடுக்கின்றார்கள். நான் எந்த் தவறும் செய்யவில்லை. சத்தியமாக எனக்கு படிக்க விரும்பம் இல்லை. நான் ஒன்றும் செய்யவில்லை. எல்லோரும் என்னை மன்னித்துவிடுங்கள்.

“எனது தொலைபேசியை அக்காவுக்கு கொடுங்கள். எனது Bio Free Cardயை பிரதீப் என்பவருக்கு கொடுங்கள்” என இது போன்ற பல குறிப்புகளை அவர் தனது புத்தக்கத்தில் எழுதியுள்ளார்.

மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்ட கறுப்பு தினம் : 3வது நினைவு தினம் இன்று!!

வரலாற்றில் பல நாட்கள் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்டவை, அவற்றை நினைவுகூர்வதை யாரும் கசப்பாய் உணர்ந்ததில்லை, ஆனால் சில நாட்கள் கறுப்புதினங்களாக மாறாத வடுவை சுமந்துகொண்டு இருக்கின்றன. அந்த நாட்களை சிந்திக்கவே சற்று தயங்கிவிடும் இந்த மனித மனம்.

அப்படி ஒரு கறுப்பு தினம்தான் இன்று, இலங்கை மாத்திரமின்றி சர்வதேசத்தையும் உலுக்கிய ஒரு கொடூர படுகொலையை நினைவுகூர வேண்டிய நாள் இன்று.

ஒரு எதிர்கால சாதனையாளர், முளையிலேயே கிள்ளி எறியப்பட்டு, அந்த குடும்பத்திற்கும் அந்த சமூகத்திற்கும் மீளா துயரினை ஓர் நயவஞ்சகர் கூட்டம் அள்ளிக்கொடுத்ததும் இதேபோன்ற ஒரு நாளில்தான்.

படுகொலை செய்யப்பட்ட யாழ். புங்குடுதீவு மாணவி வித்தியாவின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் இன்று.

கடந்த இரண்டு வருடங்களாக நீதி கிடைக்காதா என்ற அவல நிலையுடன் வித்தியாவின் நினைவுதினம் அனைவராலும் அனுஸ்டிக்கப்பட்ட நிலையில், இன்றைய தினம் நிம்மதி பெருமூச்சுடன் வித்தியாவின் நினைவு தினத்தை அனுஷ்டிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது

இலங்கைத் தமிழருடன் நடிகை ரம்பாவுக்கு காதல் மலர்ந்தது எப்படி?

 

1993 ஆம் சினிமா திரையுலகில் அறிமுகமாகி ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வந்தவர் நடிகை ரம்பா. ஆந்திராவைச் சேர்ந்த ரம்பாவின் இயற்பெயர் விஜயலட்சுமி. இவர் இலங்கை தமிழரான இந்திரன் பத்மநாதன் என்பரை காதலித்து 2010 ஆம் திருமணம் செய்துகொண்டார்.

கனடாவை சேர்ந்த மெஜிக் உட் நிறுவனத்தின் உரிமையாளர் இந்திரன் பத்மநாதன். இந்த நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிடராக ரம்பா நியமிக்கப்பட்டார். அப்போது இவர்கள் இருவருக்குள்ளும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

ஆரம்பத்தில் நட்பாக பழகிய இவர்கள் நாளடைவில் காதலர்களாக மாறினர். முதலில் இந்திரனுக்கு ரம்பாவை பிடித்துப்போனது. அதன்பின்னர், தனது விருப்பத்தை ரம்பா மற்றும் அவரது குடும்பத்தினரிடம் தெரியப்படுத்தி திருமணத்திற்கு சம்மதம் வாங்கியுள்ளார்.

திருமணத்திற்கு முன்னரே ரம்பாவுக்கு 1 கோடியே 25 லட்சம் மதிப்பிலான சொகுசு காரை இந்திரன் பரிசளித்தார். மேலும், தனது காதலை வித்தியாசமாக தெரியப்படுத்த வேண்டும் என்பதற்காக, விமானத்தில் பறந்து சென்று, நடுவானில் வைத்து தனது காதலியின் கையில் மோதிரம் மாட்டிவிட்டு, அழகிய பூங்கொத்தை கொடுத்து தனது காதலை தெரியப்படுத்தியுள்ளார்.

இருவீட்டார் சம்மதத்துடன் இவர்கள் இருவரது திருமணமும் கடந்த 2010 ஆம் ஆண்டு திருப்பதில் நடந்தது. திருமண வரவேற்பு சென்னையில் நடைபெற்றது.

திருமணத்திற்கு பின்னர் நடிகை ரம்பா நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்து கனடாவில் செட்டில் ஆனார்.
இவர்களுக்கு லாண்யா, சாஷா என இரு பெண் குழந்தைகள் உள்ளனர்.

திருமணம் நடைபெற்று 2 வருடங்களுக்கு பின்னர் இவர்களது உறவில் விரிசல் ஏற்பட ஆரம்பித்தது. இதனால் விவாகரத்து கோரிய இவர்கள், பின்னர், தனது இரு குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தனது கணவனுடன் சேர்ந்து வாழ விரும்புவதாக ரம்பா தெரிவித்தார். இதனையடுத்து இவர்கள் இணைந்தனர்.

இவர்கள் இணைந்தபின்னர் கடந்த ஆண்டு முதல் முறையாக ரம்பா, யாழ்ப்பாணத்தின் சுதுமலை பிரதேசத்தில் உள்ள தனது கணவரின் இல்லத்திற்கு சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்த கணவன் : பயத்தில் செய்த அதிர்ச்சி செயல்!!

தமிழ்நாட்டின் சென்னையில் உறவுக்கு மறுத்த மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்த கணவர் பின்னர் தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை செங்குன்றத்தை அடுத்த சென்றம்பாக்கத்தை சேர்ந்தவர் டேனியல் (48). இவர் மனைவி அம்மு (45). தம்பதிக்கு தர்மதுரை (20) என்ற மகன் உள்ளார். அம்முக்கு சிறுநீரகத்தில் கட்டி இருந்த நிலையில் இது தொடர்பாக கணவன், மனைவியிடையே அடிக்கடி சண்டை இருந்து வந்தது.

இந்நிலையில் தர்மதுரை நேற்று காலையில் வேலைக்கு சென்று விட்ட நிலையில் டேனியல் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார். அப்போது மனைவியை உறவுக்கு டேனியல் அழைத்ததாகவும் அதற்கு அம்மு மறுத்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த டேனியல் வீட்டிலிருந்த கத்தியால் அம்முவின் கழுத்தை அறுத்து கொன்றார்.
பின்னர் பொலிசுக்கு இது தெரிந்தால் தன்னை கைது செய்துவிடுவார்களோ என பயந்த டேனியல் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வேலை முடிந்து மாலை தர்மதுரை வீடு திரும்பிய நிலையில் தனது பெற்றோர் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்து பொலிசுக்கு தகவல் கொடுத்தார்.

சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் இரு சடலங்களையும் கைப்பற்றி விட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வெளிநாட்டு பிரஜைக்கு ஏற்பட்ட கோபத்தினால் இலங்கையருக்கு ஏற்பட்ட பரிதாபம்!!

முச்சக்கர வண்டி சாரதியை தாக்கியமை தொடர்பில் ரஷ்ய நாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று அதிகாலை ஹிக்கடுவ பகுதியில் வைத்து ரஷ்ய பிரஜை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதிக குடிபோதையில் இருந்த ரஷ்ய நாட்டவர் ஹிக்கடுவ, நாரிகம, பிரதேசத்தில் முச்சக்கரவண்டி சாரதி மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

தன்னுடன் வாடகை பயணம் செல்வதற்காக முச்சரவண்டி சாரதிக்கு, ரஷ்ய பிரஜை அழைப்பு விடுத்துள்ளார். அதிக குடிபோதையில் இருந்த வெளிநாட்டவரிடம் பணம் கிடைக்காதென என எண்ணிய சாரதி அந்த பயணத்தை நிராகரித்துள்ளார்.

இதனால் கோபமடைந்த ரஷ்ய பிரஜை குறித்த முச்சக்கரவண்டி சாரதி மீது கடும் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

எதிர்வரும் நவம்பர் மாதம் ஆறு மாகாணசபைகளுக்கு தேர்தல்!!

எதிர்வரும் நவம்பர் மாதம் ஆறு மாகாணசபைகளுக்கு தேர்தல் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எதிர்வரும் செப்டெம்பர் மாதம் வேட்புமனுக்கள் கோரப்பட்டு நவம்பர் மாத ஆரம்பத்தில் தேர்தல்களை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் ஒன்றுக்கு ஆயத்தமாகுமாறு சகல கட்சிகளுக்கும் தாம் எழுத்து மூலம் அறிவித்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

எவ்வாறெனினும், அனைத்து மாகாணசபைத் தேர்தல்களையும் ஒரே நாளில் நடத்துமாறு சில கட்சிகள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளன.

சப்ரகமுவ, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணசபைகளின் பதவிக் காலம் ஏற்கனவே பூர்த்தியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. எதிர்வரும் செப்டெம்பர் மாதத்தில் மத்திய, வடமேல் மற்றும் வட மாகாண சபைகளின் பதவிக் காலம் பூர்த்தியாகின்றது.

இதன்படி, ஆறு மாகாணசபைகளின் தேர்தல்களையும் நவம்பர் மாதம் நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளது.

-தமிழ்வின்-

தமிழர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ள புலம்பெயர் இளம் தமிழ் வீரரின் மறைவு!!

 

ஜேர்மன் நாட்டினைச் சேர்ந்த புலம் பெயர் தமிழரான இளம் கால்பந்தாட்ட வீரர் ஈழவன் பிரபாகரன் என்பவர் திடீரென கடந்த வியாழக்கிழமை நோய்த்தாக்கம் ஒன்றினால் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டின் பிரபல Eintracht Braunschweig என்ற விளையாட்டு கழகம் அறிவித்துள்ளது.

14 வயதுடைய குறித்த சிறுவன் சர்வதேச ரீதியிலான போட்டிகளுக்கு விளையாடுவதற்கான தகுதிகளைக்கொண்டிருந்ததாகவும் குறித்த விளையாட்டு கழகம் அறிவித்துள்ளது.

அவருடைய திறமை உலகிற்கு வெளிப்படுத்தப்படும் முன்னரே குறித்த சிறுவன் உயிரிழந்துள்ளமை அவரது குடும்பத்தினரை மாத்திரமின்றி அனைவரையும் கவலையில் ஆழ்த்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், உயிரிழந்த குறித்த வீரருக்கு கௌரவம் செலுத்தும் வகையில் நாளைய தினம் Eintracht Braunschweig அணியின் தலைவர் ஹோல்ஸ்டெயின் கொயில் தலைமையில் கால்பந்து போட்டியை நடத்தவுள்ளதாக விளையாட்டுக்கழகத்தின் பணிப்பாளர் மார்க் ஆர்னோல்ட் அறிக்கை விடுத்துள்ளார்.

சிறந்த கால்பந்தாட்ட வீரர் மற்றும் நேர்மறையான ஈழவன் பிரபாகரனின் Eintracht Braunschweig விளையாட்டுக் கழக குடும்ப என்றென்றும் நினைவில் வைத்திருக்கும் என இளையோர் அபிவிருத்தி மத்திய நிலையத்தின் விளையாட்டு மற்றும் ஒருங்கிணைப்பு தலைவர்களான ஒலிவர் ஹியின் மற்றும் டெனிஸ் குரூப்கே ஆகியோர் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், குறித்த வீரருக்கு 14 வயதெனினும் உலகத்திலுள்ள அனைத்து கால்பந்தாட்ட வீரர்களுக்கும் சவாலாய் அமையக்கூடிய ஆற்றல் கொண்டிருந்தவர் என குறிப்பிடப்படுகின்றது.

ஒரு குறிப்பிட்ட கழகம், குறித்த வீரரை பல மில்லியன்கள் கொடுத்து தனது கழகத்தில் இணைத்து கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அவரது திறமை உலகிற்கு வெளிப்படுத்தப்படும் முன்னரே அவர் உயிரிழந்துள்ளமை தமிழர் தாயகம் மாத்திரமின்றி உலகத்தின் பல முன்னணி விளையாட்டு கழகங்களைச் சேர்ந்தவர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இவ்வாறு, ஈழத்திற்கு உலகளவில் பெருமை சேர்க்க வேண்டிய ஒரு இளம் வீரர், உலகத்தினரால் அறியப்பட முன்னரே உயிரிழந்தமை ஈழத்திற்கு மாத்திரமின்றி சர்வதேச கால்பந்தாட்ட உலகிற்கே ஓர் பேரிழப்பாகும் என பொதுமக்களால் குறிப்பிடப்படுகின்றது.

இலங்கையில் ஊர் சுற்றும் பிரபல நாயகி ஜனனி ஐயர்!!

வெயில் காலத்தில் பள்ளி குழந்தைகளுக்கு மட்டும் விடுமுறையாக இருக்கவில்லை. சினிமா பிரபலங்கள் பலரும் இந்த கோடை காலத்தை வெளிநாடுகள் செல்கிறார்கள்.

அப்படி சமீபகாலமாக வெளிநாடு சென்றிருக்கும் பல பிரபலங்களில் புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியாகி வண்ணம் உள்ளது. அதிலும் நிறைய பேர் இலங்கைக்கு சென்றுள்ளனர்.

நகைச்சுவை நடிகர் சதீஷ், கணேஷ் வெங்கட்ராமன்-நிஷா, தொகுப்பாளினி பிரியங்கா, பிக்பாஸ் புகழ் ரைசா என இவர்கள் இலங்கைக்கு சமீபத்தில் சென்றனர்.

தற்போது பிரபல நாயகி ஜனனி ஐயரும் இலங்கை சென்றிருக்கிறார். அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

பொம்மை போல் நினைத்து கடித்து குதறிய நாய் : தாக்குதலுக்கு ஆளான பெண்ணின் கண்ணீர்!!

 

கனடாவில் துணிப்பொம்மை போன்று நாய் கடித்து குதறியதாக தாக்குதலுக்கு ஆளான இளம்பெண் ஒருவர் தெரிவித்துள்ளார்.

பிரிட்டிஷ் கொலம்பியாவை சேர்ந்த இளம்பெண் ஒருவர் கடந்த செவ்வாயன்று இரவு Aldergrove ரயில் நிலையம் வந்துள்ளார். அங்கே நின்று கொண்டிருந்த நாய் ஒன்று முறைத்து பார்த்தபடி, அவரை தாக்கத் தொடங்கியுள்ளது, காலில் கடித்து குதறிய நிலையில், தப்பிக்க முடியாமல் அவதிப்பட்டுள்ளார். அவர் வலியால் கத்த, விசில் சத்தம் கேட்டவுடன் நாய் அங்கிருந்து சென்றதாக தெரிவித்துள்ளார்.

உடனடியாக அருகிலிருந்தவர்கள் இளம்பெண்ணை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர், அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வரும் நிலையில், உடல் நலம் தேறி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதலுக்கு ஆளான போது நடந்த சம்பவம் குறித்து பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் சிசிடிவி காட்சிகளை கொண்டு நாயின் உரிமையாளரை கண்டுபிடிக்கும் முயற்சியில் பொலிசார் ஈடுபட்டுள்ளனர்.

இனிமேல் இதுபோன்ற நடக்காமல் இருக்க பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்க வேண்டும் என்றும், நாயின் உரிமையாளர்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும் எனவும் அவரது குடும்பத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

காதலை நிறுத்திக்கொள்வதற்கு 10 கோடி வாங்கிய காதலி!!

சீனாவில் காதலை பிரேக் அப் செய்து கொள்வதற்காக காதலிக்கு 4 கோடிக்கு மேல் பணம் கொடுக்க சூட்கேஸ் நிறைய பணம் கொண்டு வந்த காதலனை பொலிசார் கையும் களவுமாக பிடித்துள்ளனர்.

சீனாவின் Hangzhou பகுதியில் உள்ள மதுபான விடுதிக்கு கடந்த திங்கட் கிழமை இரவு காதல் ஜோடிகள் வந்துள்ளனர். அப்போது காதலன் மிகப் பெரிய சூட்கேஸ் கொண்டு வந்ததாக கூறப்படுகிறது.

அதில் கட்டு கட்டாக பணம் இருந்துள்ளது. சுமார் 2 மில்லியன் யுவான்(இலங்கை மதிப்பு 4 கோடிக்கு மேல்) இருந்ததைக் கண்ட மதுபான விடுதி ஊழியர்கள் சந்தேகப்பட்டு பொலிசாருக்கு உடனடியாக தகவல் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிசார் இருவரையும் பிடித்து காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

அப்போது காதலனிடம் பொலிசார் விசாரணை மேற்கொண்ட போது தங்களுடைய காதலின் பிரிவிற்காக சுமார் 2 மில்லியன் யுவான் கொண்டு வந்ததாக கூறியுள்ளார்.

அதே சமயம் அந்த பெண்ணிடம் பொலிசார் விசாரித்த போது நான் அந்த பணத்தை கேட்கவே இல்லை, எடுத்துக் கொண்டு போ என்று தான் சொன்னேன் என்று கூறியுள்ளார்.

இது குறித்து அங்கிருக்கும் உள்ளூர் ஊடகம் ஒன்று, குறித்த பெண் காதலை பிரேக் அப் செய்து கொள்வதற்காக சுமார் 10 மில்லியன் யுவான் கேட்டுள்ளதாக (இலங்கை மதிப்பு 10 கோடிக்கு மேல்) தெரிவித்துள்ளது.

மேலும் இது குறித்து பொலிசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும், இதன் பின்னணியில் இளைஞர் ஒருவர் இருப்பதாகவும், அவர் குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருவதாக கூறியுள்ளனர்.

இளம்பெண்ணை உயிரோடு எரித்துக் கொன்ற கொடூரன் : ஒரே வாரத்தில் 3வது சம்பவம்!!

இந்தியாவின் மத்தியபிரதேச மாநிலத்தில் வீட்டில் தனியாக இருந்த இளம்பெண்ணை பலாத்காரம் செய்து உயிருடன் எரித்து கொலை செய்த சம்பவம் பொதுமக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்தியபிரதேஸத்தின் சாகர் மாவட்டத்தில் குறித்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.

வீட்டில் தனியாக இருந்த 16 வயது இளம்பெண்ணை வீடு புகுந்து வலுக்கட்டாயமாக இளைஞர் ஒருவர் பலாத்காரம் செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இதனையடுத்து தமது பெற்றோரிடம் நடந்த சம்பவத்தை தெரிவிப்பேன் எனக் கூறிய இளம்பெண்ணை அந்த நபர் கொடூரமாக தாக்கி, உயிருடன் எரித்து கொலை செய்துவிட்டு தப்பியுள்ளார்.

ஜார்கண்ட் மாநிலத்தில் இதேபோன்று ஒரு சம்பவம் இந்த வாரத்தில் நடந்துள்ளது. 17 வயது இளம்பெண்ணிடம் இளைஞர் ஒருவர் திருமண கோரிக்கையுடன் பல முறை தொல்லை தந்துள்ளார்.

ஆனால் குறித்த இளம்பெண் தமக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை என மறுத்துள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த அந்த இளைஞர், குறித்த இளம்பெண்ணை உயிருடன் நெருப்பு வைத்துவிட்டு தப்பியுள்ளார்.

ஆனால் அதிர்ஷ்டவசமாக குறித்த பெண்ணை மீட்டு மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளதால் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் சமீப காலமாக பாலியல் தொடர்பான வன்முறைகள் அதிகரித்து வருவது பொதுமக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 8 வயது சிறுமியை கும்பல் ஒன்று போதை மருந்து தந்து தொடர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி, பின்னர் கல்லால் அடித்தே கொலை செய்த சம்பவம் நாடு முவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இந்த விவகாரத்தில் தொடர்புடைய 8 இந்து சமுதாயத்தினர் கைதாகினர். ஆனால் அவர்களுக்கு ஆதரவாக பாஜக அமைச்சர்கள் இருவர் போராட்டத்தில் ஈடுபட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

ஐபிஎல்லில் மோசமான சாதனையை படைத்த டோனி!!

ஐ.பி.எல் தொடரில் எதிர்முனையில் விளையாடும் துடுப்பாட்ட வீரர்களை ரன்-அவுட் ஆக்கியதில் டோனி முதலிடம் பிடித்துள்ளார்.

ஐ.பி.எல் தொடரின் 43வது லீக் ஆட்டம் நேற்று முன்தினம் ஜெய்ப்பூரில் நடந்தது. இந்த போட்டியில், ராஜஸ்தான் ரோயல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின.

முதலில் துடுப்பாட்டம் செய்த சென்னை அணி 4 விக்கெட் இழப்புக்கு 176 ஓட்டங்கள் எடுத்தது. பின்னர் ஆடிய ராஜஸ்தான் அணி 6 விக்கெட் இழப்புக்கு 177 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.

முன்னதாக, சென்னை அணி துடுப்பாட்டம் செய்தபோது கடைசி ஓவரை டோனி – சாம் பில்லிங்ஸ் எதிர்கொண்டனர். இந்த ஓவரின் 4வது பந்தில் பில்லிங்ஸ் ஓட்டம் எடுக்க முயன்றார்.

ஆனால், பந்து Bat-யில் படாமல் விக்கெட் கீப்பரிடம் சென்றது. அப்போது டோனி ஓடுவதற்கு முயன்றார். இதனால் சாம் பில்லிங்ஸ் வேகமாக ஓடினார். ஆனால், டோனி திரும்பி சென்றதால் விக்கெட் கீப்பர் பில்லிங்ஸை ரன்-அவுட் செய்தார்.

இதன்மூலம், ஐ.பி.எல் தொடரில் 12 முறை எதிர்முனை துடுப்பாட்ட வீரர்கள் ரன்-அவுட் ஆக டோனி காரணமாக இருந்துள்ளார். இதனால் அதிக முறை எதிர்முனை துடுப்பாட்ட வீரர்கள் ரன்-அவுட் ஆக காரணமாக இருந்த ரோஹித் ஷர்மாவுடன், டோனி முதல் இடத்தை பிடித்துள்ளார்.

பரபரப்பான போட்டியில் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த டோனியின் மகள்!!

 

ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியின் போது வீரர்கள் எந்த அளவிற்கு திரையில் காட்டப்பட்டார்களோ அந்த அளவிற்கு போட்டியை பார்க்க வந்த வீரர்களின் மனைவிகளும் திரையில் காண்பிக்கப்பட்டனர்.

ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியின் போது டோனி தலைமையிலான சென்னை அணியும், ரஹானே தலைமையிலான ராஜஸ்தான் அணியும் மோதின.
பரபரப்பாக சென்ற இப்போட்டியில் ராஜஸ்தான் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்நிலையில் இப்போட்டியை பார்ப்பதற்கு சுரேஷ் ரெய்னா மனைவி பிரியங்கா, ஹர்பஜன் சிங் மனைவி கீதா பஸ்ரா, டோனி மனைவி சாக்‌ஷி ஆகியோர் தங்கள் மகள்களுடன் வந்திருந்தனர்.

சுரேஷ் ரெய்னா மகள் கிரேஸியா, ஹர்பஜன் சிங் மகள் ஹினயா, டோனி மகள் ஜிவா ஆகியோர் போட்டி நடந்து கொண்டிருந்த போது ஒவ்வொரு ரியாக்‌ஷன் கொடுத்தனர்.

அதிலும் குறிப்பாக டோனியின் மகளான ஜீவா போட்டியின் பரபரப்பான கட்டத்தின் போது, அம்மா சாக்‌ஷியிடம் கூலாக விளையாடிக் கொண்டிருந்தார்.

இதைக் கண்ட வர்ணனையாளர்கள் பரபரப்பு மத்தியில் ஒரு அழகான விளையாட்டு என்று கூறி, அடிக்கடி அவர்களை மைதானத்தில் இருந்த பெரிய திரையில் காண்பித்து கொண்டிருந்தனர்.

அப்படி எடுக்கப்பட்ட புகைப்படம் தான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

காலா திரைப்பட நடிகை வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்!!

பிரபல திரைப்பட நடிகையான ஹூமா குரேஷி படுக்கைக்கு அழைப்பது குறித்த பிரச்சனைகளை சந்தித்துள்ளதாக கூறியுள்ளார். பிரான்சில் 71வது கேன்ஸ் திரைப்படவிழாவின் போது பிரபல திரைப்பட நடிகையான ஹூமா குரேஷி, கருத்து சுதந்திரம் இந்தியாவில் பெண்கள், அவரது சொந்த அனுபவங்கள் போன்றவைகள் குறித்து கூறினார். அப்போது, இந்தியாவிலும் உலகின் மற்ற இடங்களிலும் பெண்கள் துன்புறுத்துதலுக்கு எதிராக பேசும் அமைப்பு உருவாகி விட்டது.

பெண் அவளுடைய அறநெறி பற்றி, அவள் அணிந்திருக்கு ஆடைகள் பற்றியும் அத்தகைய அனைத்து விஷயங்கள் குறித்து நான் நியாயமற்றது என்று நினைக்கிறேன்.

இந்தியாவில் சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யபடும் சம்பவங்கள் ஒரு பெரிய மாற்றத்திற்கான தேவையை காட்டுகின்றன.

இதற்கு சட்டங்கள் மட்டும் இருந்தால் போதாது, மாற்றம் மிகவும் ஆழ்ந்ததாக இருக்க வேண்டும், தன்னார்வமாகவும் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

மேலும் பெண்களை படுக்கைக்கு அழைப்பது திரைத்துறையில் மட்டுமல்ல, எல்லாத் துறையிலும் உள்ளது, இதை நானும் சந்தித்து உள்ளேன் என்று கூறியுள்ளார்.

நடுவானில் நேருக்கு நேர் வந்த விமானங்கள் : மயிரிழையில் விபத்து தவிர்ப்பு!!

 

இந்தியாவில் இரண்டு விமானங்கள் நடுவானில் நேருக்கு நேர் மோத இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  கடந்த 2ஆம் திகதி, இண்டிகோ விமானம் ஒன்று கொல்கத்தாவில் இருந்து அகர்தாலா நகருக்கு சென்று கொண்டிருந்தது. அப்போது அகர்தாலாவில் இருந்து கொல்கத்தாவுக்கு ஏர் டெக்கான் விமானம் வந்து கொண்டிருந்தது.

இந்த இரண்டு விமானங்களும், வங்கதேச தலைநகர் டாக்கா வான்பகுதியில் நேருக்கு நேர் வந்தன. மிகவும் நெருங்கி வந்ததால், இரண்டு விமானங்களிலும் அபாய ஒலி எழுந்தது.

இதனைத் தொடர்ந்து, விமான நிலைய Control Room-யில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால் விமானிகள் பரபரப்பாகினர். பின்னர், விமானத்தின் பறக்கும் உயரம் உடனடியாக மாற்றியமைக்கப்பட்டது. இதனால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதுடன் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

செல்ஃபி மோகம் : எஸ்கலேட்டரில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த 10 மாதக் குழந்தை!!

 

இந்தியாவில் வணிக வளாகம் ஒன்றில் செல்ஃபிக்கு போஸ் கொடுத்த தாயாரின் கைகளில் இருந்து தவறி விழுந்த 10 மாத குழந்தை எஸ்கலேட்டரில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கங்காநகர் பகுதியில் அமைந்துள்ள வணிக வளாகம் ஒன்றிலேயே குறித்த கோர சம்பவம் நடந்துள்ளது.

குறித்த வணிக வளாகத்தில் தங்களது 10 மாத குழந்தையுடன் கணவன் மனைவி இருவர் சென்றுள்ளனர். இந்த நிலையில் எஸ்கலேட்டரில் சென்று கொண்டிருக்கும் போது மனைவியிடம் செல்ஃபிக்கு போஸ் தர கேட்டுள்ளார் கணவன்.

இதனையடுத்து கணவன் மனைவி இருவரும் செல்ஃபி எடுத்துள்ளனர். இதனிடையே நிலைத்தடுமாறிய குறித்த பெண்ணின் கைகளில் இருந்த 10 மாத குழந்தையானது தவறி கீழே விழுந்துள்ளது.

அதில் பாதுகாப்பு கம்பியில் மோதி குழந்தையானது சுவருக்கும் எஸ்கலேட்டருக்கும் இடைவெளியில் சிக்கி பின்னர் தரையில் மோதியுள்ளது.

குறித்த சம்பவத்தை நேரில் பார்த்து அதிர்ச்சியுற்ற பார்வையாளர்கள் விரைந்து சென்று குழந்தையை காப்பாற்ற முயற்சி எடுத்துள்ளனர்.

இதனிடையே சம்பவம் நடந்த பகுதியில் இருந்து குழந்தையை மீட்டு பொதுமக்களும் குழந்தையின் பெற்றோரும் மருத்துவமனைக்கு விரைந்தனர்.

ஆனால் குழந்தை தரையில் விழுந்த உடனையே இறந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.