செய்தித்தாளில் டீ போடும் அதிசய மனிதர் : நம்பினால் நம்புங்கள்!!

மத்தியபிரதேசத்தில் சந்தா கிராமத்தைச் சேர்ந்த அன்னுகா அன்னுபையா என்பவர் பேப்பர் பாத்திரத்தில் டீ போட்டுக்கொடுப்பது நம்பமுடியாத உண்மையாக இருக்கிறது.

12 வயதில் இருந்து டீக்கடையில் வேலை பார்த்து வரும் இவருக்கு, இவரது தந்தை இந்த வித்தையை கற்றுக்கொடுத்துள்ளார். டீ போடுவது குறித்து அவர் கூறியதாவது,

6 இஞ்ச் அகலமும், நீளமும் கொண்ட செய்தித்தாளை எடுத்துக்கொள்ள வேண்டும். அதை ஒரு பாத்திரம்போல் செய்து கொண்டு காற்றுபுகாத வகையில் காட்டுமுள்கள் கொண்டு நான்கு மூலைகளையும் குத்திவிட வேண்டும்.

இந்த வகையான பேப்பர் பாத்திரத்தைச் செய்வதற்கு அகாசியா தார்ன்ஸ், அம்பர்லா தார்ன்ஸ் வகையான முட்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

அந்தப்பாத்திரத்தை அந்த முட்கள் கொண்டு காற்றுப்புகாத வகையில் இணைத்து, பேப்பரும் நெருப்பில் எரிந்துவிடாமல் குத்திவைக்க வேண்டும்

அதன்பின் 60 மில்லி பாலை அந்த பேப்பர் பாத்திரத்தில் ஊற்றி, டீத்தூள், சர்க்கரை ஆகியவற்றைச் சேர்த்துடீ தயாரிக்கலாம். ஆனால், வழக்கான அடுப்பிலும், நெருப்பிலும் இல்லை. மாறாக, கிராமங்களில் பயன்படுத்தப்படும் ஊதுகுழல் மூலம் மெல்லிதான நெருப்பு வரும் அடுப்பில் இந்தக் காகித பாத்திரத்தைவைக்க வேண்டும்.

அவ்வப்போது நெருப்பு மேலே வரும் வகையில் வாயின் மூலம் காற்றை செலுத்திபாத்திரத்தை சூடாக்க வேண்டும். அதிகமான நெருப்பு வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

குத்தியிருக்கும் முட்கள் மூலம் நெருப்பு பட்டு சூடாகி, பாலும் சூடாகத்தொடங்கும். அதன்பின் பால் கொதிநிலையை அடைந்து, டீ தயாராகும். இந்த வகையான பேப்பர் பாத்திரம் மூலம் அதிகபட்சம் 70 மில்லிடீ தயாரிக்க முடியும். பால் கொதிநிலையை அடையும் போது, பாத்திரத்தை ஈரமாக்கும்.

அதைத் தவிர்க்கும்வகையில், அவ்வப்போது நெருப்பை அதிகமான கொண்டுவந்தால், காகிதப் பாத்திரம் ஈரமாகாது.

இதுபோன்று பேப்பர் பாத்திரத்தில் டீ போடும் முறையை நான் பொழுதுபோக்காகவே செய்து வருகிறேன். யாரேனும் ஸ்பெசலாக ஆர்டர் செய்தால் அவர்களுக்காகச் செய்து கொடுப்பேன்.

இதற்காக நான்யாரிடமும் பணம் வாங்குவதில்லை. ஏறக்குறைய 5 நிமிடங்களில் பேப்பர் பாத்திரத்தில் டீ தயாரிக்கமுடியும் என கூறியுள்ளார்.

குழியில் வீழ்ந்து குழந்தை பரிதாபமாக பலி!!

தங்கொடுவ – மெடிகொடுவ பிரதேசத்தில் குழந்தை ஒன்று வீட்டின் பின்புறமாக உள்ள குழி ஒன்றில் வீழ்ந்து உயிரிழந்துள்ளது. நேற்று காலை குறித்த குழந்தை இவ்வாறு உயிரிழந்துள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது. ஒருவருடமும் 9 மாதங்களுமான குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

குழந்தை ஒன்று வீட்டின் பின்புறமாக உள்ள குழி ஒன்றில் வீழ்ந்து உயிரிழந்துள்ளது. நேற்று காலை குறித்த குழந்தை இவ்வாறு உயிரிழந்துள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது. ஒருவருடமும் 9 மாதங்களுமான குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

எரிபொருட்களின் விலை அதிகரிப்பு : பஸ் கட்டணங்களில் மாற்றம், விலைகள் அதிகரிப்பு!!

எரிபொருட்களின் விலை நேற்றுமுன்தினம் நள்ளிரவு முதல் அமுலுக்குவரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளதால் பஸ் மற்றும் ஓட்டோக்களுக்கான கட்டணங்களும் உடனடியாக அதிகரிக்கப்படவேண்டும் என்று தனியார் பஸ் உரிமையாளர் சங்கமும், ஓட்டோ உரிமையாளர் சங்கமும் அரசுக்கு அழுத்தம் கொடுத்துள்ளன.

தற்போதுள்ள கட்டணத்தில் 10 வீதம் அதிகரிக்கப்படவேண்டும் என்று தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுன விஜேரத்ன அரசுக்கு அழுத்தம் கொடுத்துள்ளார்.  பஸ் கட்டணத்தை உயர்த்துவதற்கான தீர்மானம் விரைவில் எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஓட்டோ உரிமையாளர் சங்கம் 20 வீதமாகக் கட்டணத்தை உயர்த்தத் தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளது. அதன்படி 50 ரூபாவில் இருக்கும் ஆரம்ப கட்டணம் 60 ரூபா வரை அதிகரிக்கப்படவுள்ளது.

எரிபொருட்களின் விலை அதிகரிப்பானது போக்குவரத்து முதல் பல்வேறு துறைகளில் தாக்கத்தைச் செலுத்தியுள்ளது. எதிர்வரும் சில நாட்களில் அத்தியாவசியப் பொருட்கள், மரக்கறி வகைகள் மற்றும் உணவுப்பொருட்களின் விலையையும் அதிகரிப்பதற்கான நகர்வுகள் இடம்பெற்றுள்ளன.

உணவு, மரக்கறி உற்பத்திகளை இடமாற்றுவதில் போக்குவரத்து முக்கிய தாக்கம் செலுத்துவதால் அடுத்த வாரமளவில் ஹோட்டல் உணவு வகைகள் மற்றும் மரக்கறி வகைகளின் விலையில் ஏற்றம் ஏற்படும் எனவும் துறைசார்ந்தவர்களிடமிருந்து அறியமுடிகின்றது.

மக்களின் வாழ்க்கைச் செலவிலும் எரிபொருட்களின் விலை தாக்கம் செலுத்துவதால் 10 15 வீதம் வரையில் வாழ்க்கைச் செலவும் எதிர்வரும் காலத்தில் அதிகரிக்கக்கூடும் என்று பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

பெற்றோல், டீசல், மண்ணெண்ணெய் ஆகிய எரிபொருட்களின் விலை நேற்றுமுன்தினம் நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதன்படி 117 ரூபாவாக இருந்த ஹொக்ரென் 92 ரக பெற்றோல் 137 ரூபாவாகவும், 128 ரூபாவாக இருந்த ஹொக்ரென் 95 ரக பெற்றோல் 148 ரூபாவாகவும் விற்கப்படுகின்றது. 20 ரூபாவால் இந்த அதிகரிப்பு இடம்பெற்றுள்ளது.

இதேவேளை, 95 ரூபாவாக இருந்த டீசல் 14 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு 109 ரூபாவுக்கும், 110 ரூபாவாக இருந்த சுப்பர் டீசல் 9 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு 119 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுகின்றன.

44 ரூபாவுக்கு விற்கப்பட்டுவந்த மண்ணெண்ணெயின் விலை 101 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. எனினும், சமுர்த்தி பயனாளிகளும், மீனவர்களும் மண்ணெண்ணெயை பழைய விலையான 44 ரூபாவுக்குப் பெற்றுக்கொள்ள முடியும் என்று அரசு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

இலங்கை இளைஞருக்கு திருமண முயற்சி : ஐரோப்பாவில் தற்கொலைக்கு முயன்ற சிறுமி!!

ஐரோப்பிய நாடான இத்தாலியில் சிறுமி ஒருவர் தற்கொலை செய்து கொள்ள முயற்சித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இலங்கை பூர்வீகத்தை கொண்ட சிறுமி ஒருவரே தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இத்தாலியின் Lecce பகுதியில் வாழும் 14 இலங்கை சிறுமி ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்து கொள்ள முயற்சித்துள்ளார்.

இலங்கையிலுள்ள இளைஞன் ஒருவருக்கு தன்னை திருமணம் செய்து வைக்க தந்தை விரும்பம் கொண்ட காரணத்தால் இந்த முயற்சியை எடுத்துள்ளார். சிறுமிக்கு பத்து வயது முதல் குறித்த இளைஞனை திருமணம் செய்து வைப்பதாக தந்தை கூறி வந்துள்ளார்.

இந்நிலையில் கட்டாயத்தில் பெயரில் தனக்கு திருமணம் செய்து வைக்கலாம் என்ற அச்சம் காரணமாக, சிறுமி தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.

தனது தந்தை தனக்கு திருமணம் செய்து வைப்பதற்கு கட்டாயப்படுத்துவார் என்ற அச்சத்திலும், தனது கையடக்க தொலைபேசியை தந்தை பறித்து விட்டார் என்ற காரணத்தினாலும் சிறுமி கோபம் கொண்டுள்ளார். இதன் காரணமாக கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் தான் தனது கையின் மணிக்கட்டு பகுதியை தான் வெட்டியதாக சிறுமி தனது ஆசிரியரிடம் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு மாதத்திற்கு முன்னர் சமூக சேவை காப்பகம் ஒன்றில் தான் இருந்ததாகவும், அங்கு தான் தினமும் மனதில் உள்ளவற்றை வெளிப்படையாக பேச எண்ணியதாகும் குறிப்பிட்டுள்ளார்.

சக ஆண் நண்பர்களிடம் தான் பேசி விடுவேன் என்ற காரணத்தில் தனது கையடக்க தொலைபேசியை தந்தை பறித்தாக சிறுமி குறிப்பிட்டுள்ளார்.

விக்னேஸ்வரனின் இடத்தை நிரப்ப நான் தயார் : மாவை சேனாதிராஜா!!

எதிர்வரும் வடக்கு மாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக என்னை முன்னிலைப்படுத்தினால் அது குறித்து நல்ல முடிவெடுப்பேன். கடந்த முறை விட்ட தவறை இந்தத் தடவையும் விடமாட்டேன் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகம் ஒன்றிடம் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

போரால் பாதிக்கப்பட்ட மக்களின் கண்ணீரைத் துடைக்க தற்போதைய வடக்கின் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் மறந்துவிட்டார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் சிறு பின்னடைவைச் சந்தித்தமைக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரனின் செயற்பாடும் ஒரு காரணம் எனவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

போராட்டப் பாதையில் பெற்றுக்கொடுக்க முடியாத அரசியல் தீர்வை ஜனநாயக வழியில் பெற்றுக்கொள்வதற்காக வேண்டியாவது வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராகப் போட்டியிடுவது பற்றி முடிவெடுப்பேன். பதவிக்காக அலைபவன் நான் அல்லன்.

கடந்த 2013ஆம் ஆண்டு முதலமைச்சர் வேட்பாளராக என்னை முன்னிறுத்துவதென்று கட்சி தீர்மானித்திருந்தது. பதவியைவிட மக்களுக்குச் சேவை செய்யக்கூடிய சிறந்த அறிவுள்ள ஒருவரை முதலமைச்சராக முன்னிலைப்படுத்த விரும்பினேன்.

போராட்ட வழியில் நான் வந்ததால் என்னைவிட சட்ட நுணுக்கங்களை அறிந்த நீதியரசர் விக்னேஸ்வரனை முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தலாம் என்று தெரிவித்து அவரை முதலில் அழைத்திருந்தேன்.

அவரும் வெற்றிபெற்றார். ஆனால், தனது சட்ட அறிவைக்கொண்டு போரால் பாதிக்கப்பட்ட மக்களின் கண்ணீரைத் துடைக்க அவர் மறந்துவிட்டார். அரசையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் குறை கூறுவதில்தான் அவர் காலத்தைக் கழித்துள்ளார்.

எனவே, கடந்த முறை விட்ட தவறை இந்த முறையும் விடமாட்டேன். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூடி ஆராய்ந்து என்னை வடக்கு முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்தினால் நிச்சயமாக நல்ல முடிவை எடுப்பேன். பதவிக்காக அலைபவனாக நான் இருந்தால் 2013ஆம் ஆண்டிலேயே முதலமைச்சராக ஆகியிருப்பேன் என குறிப்பிட்டுள்ளார்.

-தமிழ்வின்-

11 வருட காதல் : கோமாவிற்கு சென்ற காதலி : சுயநலமற்ற காதலை நிரூபித்த காதலன்!!

காதல் என்ற ஒற்றைப்புள்ளியில்தான் உலகமே இயங்கிக்கொண்டிருக்கிறது. தன் குடும்பம், குழந்தைகள், உறவினர்கள், நண்பர்கள் என இப்படி யாரோ ஒருவரின் மீது நாம் கொண்டிருக்கும் காதல் தான் நம் இலக்கை நோக்கி நம்மை அனுதினமும் நகர்த்திக்கொண்டிருக்கிறது.

இப்படி தனது சுயநலமற்ற காதலால் தனது எதிர்கால இலக்கை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கிறார் வினு. 11 வருட ஆத்மார்த்தமான காதலில் காலனாய் வந்தது அந்த கோரவிபத்து.

கேரளாவின் எர்ணாகுளத்தை சேர்ந்த வினுவுக்கு 25 வயது இருக்கையில், 16 வயதான லினிசாவின் மீது காதல் ஏற்பட்டது. 11 வருடங்களாக இவர்கள் இருவரும் காதலித்துவந்தனர். இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவுசெய்தததையடுத்து, லினிஷாவின் பெற்றோரிடம் பெண் கேட்டு சென்றுள்ளார் வினு.

ஆனால், தங்களது மகள் செல்லமாக வளர்ந்தவள், அதுமட்டுமின்றி அன்றாடம் கூலி வேலைபார்க்கும் வினுவுக்கு திருமணம் செய்துவைக்க மறுத்துவிட்டனர். இருப்பினும் இவர்கள் இருவரும் காதலில் உறுதியாக இருந்தனர்.

பெற்றோர் எப்படியாவது சம்மதிக்க வேண்டும் என்பதற்காக, வினு மீண்டும் பெண் கேட்டு சென்றுள்ளார். இவர்களின் காதலின் ஆழத்தை அறிந்துகொண்ட பெற்றோர் திருணத்திற்கு சம்மதம் தெரிவித்ததையடுத்து, 2016 ஆம் ஆண்டு நிச்சயதார்த்தம் நடைபெற்று ஆகஸ்ட் 28 ஆம் திகதி திருமணம் செய்ய முடிவுசெய்யப்பட்டது.

ஆனால், துரதிஷ்டவசமாக மே 30 திகதி லினிசா மற்றும் அவரது குடும்பத்தினர் சாலை விபத்தில் சிக்கினர். இதில், லினிசாவின் பெற்றோர் படுத்த படுக்கையாகினர். லினிசா கோமா நிலைக்கு சென்றுவிட்டார்.

இரண்டு ஆண்டுகளாக கோமாவில் இருக்கும் லினிசாவிடம், தான எப்போதும் பேசுவது போல தொடர்ந்து பேசிக்கொண்டே இருக்கிறார் வினு.

லினாவிடம் இருந்து எவ்வித பதிலும் கிடைக்காது என தெரிந்தும், தனது காதலியிடம் தொடர்ந்து பேசிக்கொண்டே இருக்கிறார்.

காலை 7 மணிக்கு தனது காதலியை வந்துபார்த்துவிட்து மாலை 6.30 மணிக்கு மீண்டும் வருகிறார். மீதியுள்ள நேரத்தினை தனது காதலியுடன் செலவிடுகிறார்.

இவரது வருமானத்தின் மூலம் தான் லினிசா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சிகிச்சைக்கான பணம் செலவழிக்கப்படுகிறது.

சிறிய வருமானத்தால் சிரமப்பட்ட இவருக்கு, நண்பர்கள் சேர்ந்து ரூ.1 லட்சம் நிதியுதவி பெற்றுக்கொடுத்துள்ளனர். லினிசா கோமாவில் இருப்பதால் வேறு ஒரு வாழ்க்கை துணையை தேடிக்கொள்ளுமாறு எனது நண்பர்கள் கூறினாலும், அவளது இடத்தில் வேறு யாரையும் என்னால் நினைத்து பார்க்ககூட இயலவில்லை என கூறுகிறார் வினு.

வவுனியா யுவதி விபத்தில் மரணம் : காதலன் கைது : அதிர்ச்சி சம்பவம்!!

 

திருகோணமலை சம்பூர் பொலிஸ் பிரிவிற்குற்பட்ட கட்டைப்பறிச்சான் பகுதியில் இடம் பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் காதலி உயிரிழந்துள்ளதுடன் காதலன் எதிர்வரும் திங்கள் கிழமை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

முல்லைத்தீவு அலம்பில், கெனேடியன் வீதியைச் சேர்ந்த பிரபாகரன் அனுஷன் (23வயது) என்ற இளைஞனே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

வவுனியா கிடாச்சூரி பகுதியைச்சேர்ந்த தெய்வலோகசிங்கம் விதூசிகா என்ற (17 வயது) யுவதியும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இளைஞனும் காதலித்து வந்துள்ளனர்.

குறித்த யுவதி இளைஞனின் வீட்டுக்கு வந்தவேளை முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் யுவதியை ஒப்படைத்த இளைஞனின் பெற்றோர், இளைஞனை பிரித்து சம்பூர் பகுதியிலுள்ள தனது உறவினர்களின் வீட்டுற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

அதனையடுத்து குறித்த யுவதி காதலனுக்கு தான் சம்பூரில் இருப்பதாகவும் தன்னை அழைத்துச்செல்லுமாறும் கோரியுள்ளார். இதேவேளை காதலனான குறித்த இளைஞன் சம்பூர் பகுதிக்கு சென்று தனது காதலியை மோட்டார் சைக்கிளில் ஏற்றி வந்துள்ளார்.

அவ்வேளை பெண்ணின் உறவினர்கள் குறித்த இருவரையும் மோட்டார் சைக்கிளில் துரத்தி வந்ததாக தெரியவந்துள்ளது. இதேநேரம் மோட்டார் சைக்கிளை வேகமாக போகும் போது வீதியை விட்டு விலகி மோட்டார் சைக்கிள் மின்கம்பத்துடன் மோதியதாகவும் ஆரம்பகட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.

உயிரிழந்த பெண்ணின் சடலத்தை சட்ட வைத்திய பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைத்துள்ளதுடன் காயங்களுக்குள்ளான 23 வயதுடைய காதலன் திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் இனங்களுக்கிடையில் நல்லுறவை ஏற்படுத்துவதற்கான ஒன்றுகூடல்!!

 

இனங்களுக்கிடையில் நல்லுறவை ஏற்படுத்துவதற்கான கலந்துரையாடலொன்று சமூக ஆர்வலர் அருள்நாதன் நிருசா தலைமையில் இன்று (12.05) வவுனியா கோவில்குளத்தில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் நடைபெற்றது.

மூவின மக்களும் வாழும் பிரதேசங்களில் அவர்களுக்கிடையில் பரஸ்பர உறவை ஏற்படுத்தும் நோக்கத்துடன் இக்கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்படுகிறது. முக்கியமாக இளைஞர்கள் மத்தியில் வழிப்புணர்வை ஏற்படுத்துவதே இக்கலந்துரையாடலின் நோக்கமாக இருக்கிறது.

கொழும்பிலும், வவுனியாவிலும் இன்றையதினம் சமகாலத்தில் இக்கலந்துரையாடல்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், நிகழ்வில் கலைஞர்கள், ஊடக மாணவர்கள் மற்றும் தொண்டர் ஆசிரியர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் பலி : சுற்றுலா சென்ற போது கோர விபத்து!!

தமிழகத்தில் கார்கள் மோதிக்கொண்டதில், கணவன்- மனைவி மற்றும் குழந்தைகள் உட்பட 9 பேர் பலியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சீபுரம் மாவட்டம், சின்ன காஞ்சீபுரம் திருமலை நகரை சேர்ந்தவர் எஸ்.ஆர்.மோகன்(36). இவரது மனைவி லட்சுமி, மகள்கள் பவித்ரா, நவீதா மற்றும் மகன் வரதராஜன் ஆவர்.

கைத்தறி பட்டுப்புடவை உற்பத்தி தொழில் செய்து வந்த மோகன், தனது பிள்ளைகளுக்கு கோடை விடுமுறை என்பதால் கேரளாவிற்கு சுற்றுலா செல்ல முடிவு செய்துள்ளார்.

அதன்படி, தனது குடும்பத்தினர் மற்றும் அக்கா கணவர் முரளி, மற்றொரு அக்காவின் மகள் மேகலா ஆகியோருடன் நேற்று முன்தினம் காரில் சென்றுள்ளார்.

இவர்களுடன் கார் ஓட்டுநர் பிரபாகரன்(36) மற்றும் மாற்று ஓட்டுநர் பூபதி ஆகியோரும் பயணித்தனர். கார் நள்ளிரவில் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலூர் நான்கு சாலை அருகே சென்றுகொண்டிருந்தது.

அப்போது எதிர்திசையில் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய கார் ஒன்று, சாலையின் தடுப்புச்சுவரில் பயங்கரமாக மோதியது. மோதிய வேகத்திலேயே மோகன் குடும்பத்தினரின் கார் மீது விழுந்தது.

இதனால் பலத்த சேதமடைந்த மோகனின் காரில் இருந்த 8 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர், ஓட்டுநர் பூபதி மட்டும் படுகாயத்துடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார்.

இந்நிலையில், விபத்தை ஏற்படுத்திய கார் மேலும் ஒரு கார் மீது மோதியதில், அந்த காரில் இருந்த 4 பேர் காயமடைந்தனர். பின்னர், இச்சம்பவத்தை கண்ட அப்பகுதி வழியாக சென்றவர்கள் பொலிசாருக்கு தகவல் கொடுத்தனர்.

அதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விபத்தில் சிக்கிய அனைவரையும் மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், பாதி வழியிலேயே பூபதி உயிரிழந்தார்.

இந்த கோர விபத்தினால் அப்பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக பெரம்பலூர் பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

4 மாத குழந்தை பாலியல் துஷ்பிரயோகம் : குற்றவாளிக்கு தூக்குத் தண்டனை!!

இந்தியாவில் நான்கு மாத பெண் குழந்தையை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற கொடூரனுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மத்திய பிரதேசத்தின் இந்தூரில் உள்ள ராஜ்வாடா கோட்டை பகுதியில் கடந்த மாதம் 20ம் திகதி கைக்குழந்தையுடன் பெற்றோர் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த நவீன் என்பவர் குழந்தையை துக்கிச் சென்றதுடன் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

தொடர்ந்து குழந்தையின் வாயை பொத்தி துன்புறுத்தி, தரையில் வீசி அடித்துக் கொன்று தப்பியோடி விட்டார். மறுநாள் காலை குழந்தையின் சடலத்தை பார்த்த அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.

உடனடியாக விரைந்து வந்த பொலிஸ் அதிகாரிகள், சிசிடிவி காட்சிகயை ஆய்வு செய்த போது நவீன் குழந்தை தூக்கிச் சென்றது தெரியவந்தது. இதன்பின்னர் நவீனை கைது செய்து விசாரித்ததில் உண்மையை ஒப்புக் கொண்டார்.

இதுதொடர்பான வழக்கு இந்தூர் செசன்ஸ் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், போஸ்கோ சட்டத்தின் கீழ் தூக்கு தண்டனை விதித்து நீதிபதி வர்ஷா வர்மா தீர்ப்பளித்துள்ளார்.

விடுதியில் பெண் கழுத்தறுத்து கொலை : இளைஞர் தற்கொலை : அதிர்ச்சி சம்பவம்!!

 

தமிழகத்தில் தங்கும் விடுதி ஒன்றில் இளம் பெண்ணொருவர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டதுடன், இளைஞர் ஒருவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பேருந்து நிலையம் அருகே டி.எம்.டி என்ற தனியார் தங்கும் விடுதியில், பிரசாந்த் என்ற இளைஞர் கடந்த 10ஆம் திகதி இளம் பெண்ணொருவருடன் அறை எடுத்து தங்கியுள்ளார்.

இந்நிலையில், நேற்று மதியம் விடுதி ஊழியர்கள் பிரசாந்த் தங்கியிருந்த அறையின் கதவை தட்டியுள்ளனர். ஆனால், கதவு திறக்கப்படவில்லை. அதனைத் தொடர்ந்து, இன்று காலையும் ஊழியர்கள் அறைக்கதவை தட்டியபோதும் கதவு திறக்கப்படவில்லை.

இதனால் சந்தேகமடைந்த விடுதி ஊழியர்கள், இது தொடர்பாக பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளனர். அதன் பேரில் விரைந்து வந்த பொலிசார், அறையின் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது, பிரசாந்த் படுக்கையில் வாயில் நுரை தள்ளியபடி இறந்து கிடந்துள்ளார்.

பின்னர் குளியல் அறைக்கு சென்று பார்த்தபோது, அங்கே பிரசாந்துடன் தங்கியிருந்த பெண் கழுத்து அறுபட்ட நிலையில் பிணமாக கிடந்துள்ளார்.

இருவரது உடல்களையும் கைப்பற்றிய பொலிசார், பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த பொலிசார் விசாரணை மேற்கொண்டதில், பிரசாந்த் பதிவு செய்த முகவரி நிலக்கோட்டை கொங்கர்குளம் பகுதி என்று இருந்துள்ளது. மேலும், இது தொடர்பாக பொலிசார் தீவிர விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.

திருகோணமலையில் சிறுவனை தும்புத்தடியால் தாக்கிய நபருக்கு 2 வருட கடூழிய சிறைத் தண்டனை!!

16 வயது சிறுவனை தும்புத்தடியால் தாக்கி காயம் ஏற்படுத்திய நபருக்கு இரண்டு வருட கடூழிய சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு நேற்றைய தினம் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி அண்ணலிங்கம் பிரேம சங்கர் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இரண்டாயிரம் ரூபாய் தண்டமும், பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு பத்தாயிரம் ரூபாய் நஷ்டயீடு வழங்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

தம்பலகாமம், முள்ளிப்பொத்தானை பகுதியில் 65 வயதுடைய சிறிய தந்தையொருவர் 16 வயது மகனை கடந்த 2015ஆம் ஆண்டு மே மாதம் 08ஆம் திகதி தும்புத்தடியால் தாக்கி காயம் ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

குறித்த தாக்குதல் தொடர்பில் சிறுவனின் சகோதரி மற்றும் பொலிஸ் விசாரணை அதிகாரி, சட்ட வைத்தியதிகாரி ஆகியோர் சாட்சியமளித்த நிலையில் எதிரி மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதாக கொண்டு மேற்குறிப்பிட்ட தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிளில் கணவனுடன் பயணித்த பெண் பலி!!

சம்பூர் – கட்டைபரிச்சான் பாலத்தருகில் மோட்டார்சைக்கிளொன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்துடன் மோதி விபத்திற்கு உள்ளாகியுள்ளது. இந்த விபத்து நேற்று மாலை இடம்பெற்றுள்ளதுடன், சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற, உயிரிழந்த பெண்ணின் கணவன் படுகாயமடைந்த நிலையில் மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இருவரும் சம்பூரிலிருந்து முல்லைத்தீவு நோக்கி பயணித்துக் கொண்டிருக்கும் போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்த பெண்ணிண் சடலம் தற்போது மூதூர் தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் சம்பூர் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இளைஞரின் விபரீத ஆசை : பெண் வேடமிட்டு பேரூந்தில் பயணம் : தர்ம அடி போட்ட பொதுமக்கள்!!

 

பெண் போல உடை அணிந்து வேலூரில் இருந்து சென்னைக்கு பேருந்தில் வந்த இளைஞரை பொதுமக்கள் உதைத்தனர். வேலூர் மாவட்டம் எல்.ஐ.சி காலனியை சேர்ந்தவர் எபினேசன். இவர் வேலூரில் உள்ள தனியார் கலைக் கல்லூரி ஒன்றில் இளங்கலை பட்டம் முடித்துள்ளார்.

இந்நிலையில் வேலூரில் உள்ள பஜார் தெருவுக்கு சென்ற எபினேசன், அங்கு 650 ரூபாய்க்கு இஸ்லாமிய பெண்கள் அணியும் பர்தாவை வாங்கியுள்ளார். அந்த ஆடையை அணிந்துகொண்ட அவர், தனது அம்மாவின் கைப்பையை எடுத்துக்கொண்டு பெண் போல பேருந்து நிலையம் சென்றுள்ளார். பின்னர் பேருந்து நிலையத்தில் நின்றுகொண்டிருந்த சென்னை செல்லும் பேருந்தில் ஏறிக்கொண்டார்.

நடத்துனரிடம் சென்னை செல்ல வேண்டும் என பெண் குரலில் பேசி டிக்கெட்டை வாங்கிக்கொண்டு, ஒரு பெண்ணிற்கு அருகே அமர்ந்துள்ளார். அவரது குரலைக் கேட்கும் போது நடத்துனருக்கு சற்று சந்தேகம் வந்துள்ளது. பேருந்து பயணம் தொடர, ஒரு கட்டத்தில் காற்று வீசி எபினேசன் அணிந்திருந்த முகத்திரை விலகியுள்ளது.

அப்போது அவர் ஆண் என்பதை அறிந்த பக்கத்திலிருந்த பெண், அய்யயோ இது பெண் இல்லை. ஆம்பளை… ஆம்பளை’ எனக் கத்தியுள்ளார். அந்தப் பெண்ணின் கூச்சலைக் கேட்டு பேருந்து நிறுத்தப்பட்டது. பேருந்தில் இருந்தவர்கள் எபினேசனை திருடன் என நினைத்து உதைத்துள்ளனர்.

பின்னர் அவரை பிடித்துக் காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். காவல்துறையினர் விசாரித்த போது, ‘பெண் போல ட்ரெஸ் பண்ணி பேருந்தில் போகனும்னு எனக்கு ரொம்ப நாளா ஆசை’ என்று கூறியுள்ளார். இதையடுத்து காவல்நிலையத்திற்கு வந்த எபினேசனின் உறவினர்கள் மற்றும் பெற்றோரும் அதையே கூறியுள்ளனர்.

அவரைக் கண்டித்த காவல்துறையினர், ‘ஊரெல்லாம் குழந்தை கடத்தல் என்று மக்கள் புதிய நபர்கள தாக்குறாங்க. நீ பத்திராம இரு தம்பி. இனிமே இப்புடி பண்ணாத’ என்று புத்திமதி கூறி அனுப்பியுள்ளனர்.

ஆணாய் மாறிய பெண்ணும் பெண்ணாய் மாறிய ஆணும் காதல் திருமணம் : சுவாரஸ்ய சம்பவம்!!

கேளராவில் ஜாதி மதங்களை கடந்து, இந்த சமூகம் வைத்துள்ள கட்டமைப்புகளை உடைத்து திருநம்பியாக மாறிய இஷானும், திருநங்கையாக மாறிய சூர்யாவும் சட்டப்படி திருமணம் செய்து கொண்டனர்.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் இஷான். பெண்ணாக பிறந்த இவர் தனக்குள் இருந்த ஆண் உணர்வால் திருநம்பியாக மாறியவர். அதனைப்போல ஆணாக பிறந்த சூர்யா தனக்குள் பூத்த பெண் உணர்வால் திருநங்கையாக மாறியவர்.

பொதுவாகவே மூன்றாம் பாலினத்தவரை ஒதுக்கி தள்ளும் இந்த சமூகத்தில் இஷானும்- சூர்யாவும் ஜாதி மதங்களை கடந்து, இந்த சமூகம் ஏற்படுத்தி வைத்துள்ள கட்டமைப்புகளை உடைத்து காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

மூன்றாம் பாலினத்தவர்கள் என்றால் இந்த சமூகம் ஒதுக்கும். குடும்பங்களும் அவர்களை ஏற்க முன்வராது. பொது இடங்களில் கழிவறை வசதி கிடையாது என ஏகப்பட்ட பிரச்னைகளை அவர்கள் சந்திக்க நேரிடும். ஆனால் தங்களுக்கு இருந்த தடைக் கற்களை உடைத்து அவர்களை காதல் இணைத்துள்ளது.

இவர்களின் காதல் கதை மிகவும் சுவாரஸ்யமானது. இஷானும், சூர்யாவும் கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர்தான் ஒருவரையொருவர் சந்தித்துள்ளனர். முதலில் நண்பர்களாக பழகிய அவர்கள் நாளடைவில் தாங்கள் சந்திக்கும் பிரச்னைகள் குறித்து ஒருவருக்கொருவர் பகிர்ந்துள்ளனர்.

ஒருகட்டத்தில் இஷானுக்கு சூர்யா மீது காதல் ஏற்பட அதனை எப்படி வெளிப்படுத்துவது என தயங்கியிருக்கிறார். சூர்யா தனது மனைவியாக வந்தால் வாழ்வும் சிறக்குமே என நினைத்த இஷான், தனது காதலை ஒருவழியாக சூர்யாவிடம் வெளிப்படுத்திவிட்டார்.

எப்போது காதலை அவர் சொல்வார் என காத்திருந்த சூர்யாவுக்கும், இஷான் காதலை வெளிப்படுத்திய அந்த நிமிடம் ஆயிரம் வாட்ஸ் பல்ப். உடனே ஒகே சொல்லிவிட்டார். தற்போது காதல், கல்யாணத்தில் முடிந்துள்ளது. இது கேரளாவில் சட்டப்படி பதிவு செய்யப்பட்டுள்ள முதல் திருநங்கை- திருநம்பி திருமணம் ஆகும்.

இதுகுறித்து இஷானும் சூர்யாவும் பேசும்போது, “ எங்கள் திருமணத்திற்கு எந்த பிரச்னையும் இல்லை. இருவர் வீட்டின் சம்மதம் மற்றும் உறவினர்கள் என அனைவரின் மத்தியிலும் தான் எங்கள் திருமணம் நடந்து முடிந்துள்ளது. எங்கள் இருவரின் குடும்பத்தினரும் எங்களை புரிந்துக் கொண்டனர். அதனால் திருமணத்திலும் சிக்கல் இல்லை. ஊரறிய கோலாகலமாக திருமணம் நடைபெற்றுள்ளது” என மகிழ்ச்சியில் பூரிக்கின்றனர் அந்த தம்பதியினர்.

23 வயது பெண்ணுடன் 13 வயது சிறுவனுக்கு நடந்த திருமணம் : வைரலாகும் வீடியோ!!

 

13 வயது சிறுவன் 23 வயது பெண்ணை திருமணம் செய்து கொண்ட சம்பவம் இணையத்தில் வைரலாக வருகிறது.  காதல் எப்போ எப்படி வரும் என்று யாருக்கும் தெரியாது தான். ஆனால் இது காதலா?

ஆந்திர மாநிலத்திலுள்ள கர்னூல் மாவட்டம் கவுதாளம் உப்பரஹால் கிராமத்தை சேர்ந்த 13 வயது சிறுவன் தன் அக்காள் மகளான 23 வயது இளம்பெண்ணை கடந்த மாதம் 27ம் திகதி அதிகாலை 3 மணிக்கு இந்த திருமணம் நடைபெற்றுள்ளது.

சிறுவனும் அந்த பெண்ணும் அடிக்கடி வீட்டிற்கு சென்று வரும் போது இருவருக்கும் காதல் ஏற்பட்டதன் காரணமாகவே பெற்றோர்கள் திருமணம் செய்து வைத்ததாக கூறப்படுகிறது.

சிறுவனும், அந்த பெண்ணும் திருமணம் செய்து கொண்ட புகைப்படம் தற்போது சமூகவலைத்தளங்களில் பரவி வருகிறது. இப்படி ஒரு திருமணம் நடைபெற்றிருக்கிறது. இந்திய சட்டத்தின் படி 18 வயதிற்கும் குறைவான பெண் அல்லது 21 வயதிற்கும் குறைவாக ஆணிற்கு நடந்த திருமணம் செல்லாது.

இந்நிலையில், 13 வயது சிறுவன் மைனர் என்பதை அறிந்தும் 23 வயது இளம்பெண்னுடன் அவரது பெற்றோர்கள் எப்படி திருமணம் செய்து வைத்தார்கள் என்ற சர்ச்சை எழுந்துள்ளது.

இதைத்தொடர்ந்து, முதலிரவுக்கு ஏற்பாடு செய்யப் பட்ட நிலையில் பொலிசார் வந்ததால் சிறுவன் மற்றும் அவரது பெற்றோர்கள் தலைமறைவாகி உள்ளனர். மணப்பெண் மட்டும் சிக்கியுள்ளார். இப்படி ஒரு திருமணத்தை செய்து வைத்த பெற்றோரை உடனடியாக கைது செய்ய வேண்டும் கருத்து வலுத்து வருகிறது.

இதே போன்று கடந்த சில மாதங்களுக்கு முன் 18 வயது இளம்பெண் 17 வயது சிறுவன் தன்னை காதலித்து திருமணம் செய்ததாக கூறப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் இது போன்ற சம்பவம் நடந்துள்ளதால் பரபரப்பு நிலவியுள்ளது.