லண்டனில் உள்ள ஈழத்தமிழர் ஒருவரின் வீட்டில் நேற்றைய தினம் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. லண்டன் வெம்பிளி பகுதியில் உள்ள வீடொன்றிலேயே குறித்த விபத்து சம்பவித்துள்ளது.
குறித்த வீட்டில் இருந்த கடவுள் படத்திற்கு ஏற்றப்பட்டிருந்த மெழுகுவர்த்தியே, வீடு பற்றி எரிந்ததற்கான காரணம் என்று தெரிவிக்கப்படுகின்றது.
நேற்றைய தினம் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. லண்டன் வெம்பிளி பகுதியில் உள்ள வீடொன்றிலேயே குறித்த விபத்து சம்பவித்துள்ளது.
பிரபல மலையாள தொகுப்பாளினி சூர்யா வாசன் வேன் விபத்தில் உயிரிழந்துள்ளார். மலையாள திரையுலகின் பிரபல தொகுப்பாளினியான இவர், நேற்று ஸ்கூட்டியில் தனது சகோதரருடன் ஆனந்தபத்மநாபன் என்ற இடத்திற்கு சென்றுள்ளார்.
அப்போது, வேன் ஒன்று இவர்களது ஸ்கூட்டியில் மோதியுள்ளதில், சூர்யா ரத்த வெள்ளத்தில் விழுந்துள்ளார். இவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர், ஆனால் இவர் உயிரிழந்துவிட்டார். இந்த சம்பவம் தொடர்பாக வேன் ஓட்டுநரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. இவரது இறப்பிற்கு திரையுலகை சேர்ந்த பல்வேறு பிரபலங்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் தலசீமியா என்ற விசித்திர நோயால் அவதியுற்று வந்த 7 வயது சிறுமியின் வாழ்க்கையை இந்திய மாநிலம் கேரளாவில் உள்ள பெண் மருத்துவர் ஒருவர் அடியோடு மாற்றியுள்ளார்.
கேரள மாநிலம் கொச்சி நகரத்தைச் சேர்ந்த மருத்துவர் கணமணி கண்ணன்(24) என்பவர் தான் அந்த மருத்துவர். ஸ்ரீமாலி பாலசூர்யா என்ற 7 வயது சிறுமி, இவர் இரண்டு மாத குழந்தையாக இருக்கும் போதே தலசீமியா என்னும் விசித்திர நோயால் தாக்கப்பட்டுள்ளார்.
ஸ்ரீமாலியின் பெற்றோர் தமது மகளை காப்பாற்றும் பொருட்டு முயற்சி செய்யாத வைத்தியம் இல்லை. மகளின் நோய் காரணமாக ஸ்ரீமாலியின் தாயார் நில்மினி தமது ஆசிரியர் பணியையும் துறந்துள்ளார்.
இந்த நிலையில் ஸ்ரீமாலியின் தந்தை ஜயந்தாவுக்கு இத்தாலிய மருத்துவர் ஒருவரின் தொடர்பு கிடைத்துள்ளது. அவர் மூலம் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள மருத்துவர் சுனில் பட் என்பவரை தொடர்பு கொண்டுள்ளனர்.
அவரது ஆலோசனையின் பேரில் கடந்த 2016 ஆம் ஆண்டு இந்தியா சென்ற ஜயந்தா குடும்பத்தினர் ஸ்டெம் செல் தானம் பெறுவதற்காக பதிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில் AIMS மருத்துவமனையில் ஜூனியராக பணியாற்றி வந்த மருத்துவர் கண்மணி கண்ணனுக்கு இந்த ஆண்டு துவக்கத்தில் தொலைபேசி அழைப்பு ஒன்று வந்துள்ளது.
அதில் ஸ்டெம் செல் தானம் பெறுவதற்கான அழைப்பு ஒன்று வந்துள்ளது எனவும், தானம் பெறுபவர் தலசீமியா நோயால் அவதிக்கு உள்ளாகிவரும் 6 வயது சிறுமி எனவும் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2013 ஆம் ஆண்டு மருத்துவ மாணவியாக இருக்கும் போது கண்மணி கண்ணன் ஸ்டெம் செல் தானம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுள்ளார்.
அந்த நிகழ்ச்சியால் ஈர்க்கப்பட்டு அன்றைய தினமே ஸ்டெம் செல் தானம் தருவது குறித்து தமது பெயரையும் பதிவு செய்துள்ளார். ஸ்டெம் செல் தானம் தொடர்பில் தொலைபேசி அழைப்பு வந்ததும் உணர்ச்சிவசப்பட்ட மருத்துவர் கண்மணி,
இந்த நாள் வரையில் 2013 ஆம் ஆண்டு முதல் குறித்த ஸ்டெம் செல் தான பதிவு அட்டையை தன்னுடனே எடுத்துச் சென்று வந்ததாகவும், ஆனால் அதற்கான சரியான தருணத்தை உரிய நேரத்தில் கடவுள் தற்போது காண்பித்துள்ளார் என்றார் மருத்துவர் கண்மணி.
ஆனால் தாம் ஸ்டெம் செல் தானம் தருவதை முதலில் பெற்றோருக்கு தெரியப்படுத்தாமல் இருந்துள்ளார். கடைசியில் தமது முடிவை பெற்றோருக்கு தெரியப்படுத்தியதும் அவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இருப்பினும் கண்மணியின் சகோதரர் அவரது முடிவுக்கு உறுதுணையாக இருந்துள்ளார். இந்த நிலையில் தமது மகளின் உயிரை காப்பாற்றிய நபரை சந்திக்க விரும்பிய ஜயந்தா குடும்பத்தினர் கொச்சியில் நடந்த விழா ஒன்றில் முதன் முறையாக மருத்துவர் கண்மணியை சந்தித்துள்ளனர்.
குறித்த விழாவில் ஸ்ரீமாலி தமது உயிரை காப்பாற்றிய மருத்துவர் கண்மணியை முத்தங்களால் திக்குமுக்காட செய்துள்ளார்.
மட்டுமின்றி விழா முடிவடைந்த பின்னரும் கண்மணியின் பின்னாடியே சுற்றித் திரிந்த ஸ்ரீமாலி, நெருக்கமான நட்புறவை ஏற்படுத்திக் கொண்டுள்ளார்.
மருத்துவர் கண்மணி மட்டும் தமது மகளுக்கு வாழ்வளிக்கவில்லை என்றால் அவரது நிலை கேள்விக்குறியாக மாறியிருக்கும் என்ற ஜயந்தா,
சமீப காலமாக தலசீமியா நோயால் பலர் இலங்கையில் அவதியுற்று வருவதாகவும் பலர் இறந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் குடும்ப உறுப்பினரல்லாதவர்கள் ஸ்டெம் செல் தானம் செய்ய முடியாமல் இருந்தது. ஆனால் தற்போது அதுவும் சாத்தியமாகியுள்ளது என்றார்.
என்னுடைய கணவரை எஸ்.ஐ தான் திட்டமிட்டு ஆள் வைத்து கொன்றுவிட்டதாக காவலர் ஜெகதீஷனின் மனைவி கூறியுள்ளார்.
நெல்லையில் மணல் கொள்ளையர்கள் பற்றி விசாரணை நடத்திக் கொண்டிருந்த காவல் அதிகாரி ஜெகதீஷன் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், காவல் அதிகாரியின் மனைவியும் ஐந்து மாத கார்ப்பிணியுமான மார்க்ரெட் என் கணவரை எஸ்.பி தான் ஆள் வைத்து கொன்றுவிட்டதாக கண்ணீர் மல்க கூறியுள்ளார்.
அவர்க் கூறுகையில், இரவு என் மகனுடன் கணவர் கொஞ்சி விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென்று வந்த அழைப்பை அடுத்து சென்ற அவர் அதன் பின் சடலமாக வந்தார்.
டி.எஸ்.பி அலுவலகத்தில் இருக்கும் போது என்னுடைய கணவர் ஒரு துப்பாக்கி கொண்டு வருவார். ஆனால், எஸ்.பி. அலுவலகத்தில் இருந்த போது துப்பாக்கி இல்லை.
என்னுடைய கணவரை திட்டமிட்டு கொன்றுவிட்டார்கள்.
எஸ்.ஐ தான் ஆள் வைத்து கொன்றுவிட்டார். மணல் கொள்ளையர்களை பிடிக்க எப்படி ஒருவர் மட்டும் செல்வார் மற்ற நான்கு பொலிசாரும் ஏன் தூங்கிக் கொண்டிருந்தார்கள். அவர்களும் செல்ல வேண்டியதுதானே என்று கதறி அழுதுள்ளார்.
மேலும் இந்த கொலை சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் மூன்று பேரை பொலிசார் கைது செய்துள்ளதாகவும், முக்கியமான நபர் ஒருவரை பொலிசார் தேடி வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
புத்தளத்தில் இடம்பெற்ற கோர விபத்தில் சிறுவன் ஒருவர் ஸ்தலத்தில் பலியாகி உள்ளார். இந்த விபத்து புத்தளம் – கொழும்பு வீதியின் நாகவில பிரதேசத்தில் இன்று மாலை இடம்பெற்றுள்ளது. புத்தளம், நாகவில்லுவ பிரதேசத்தை சேர்ந்த 12 வயதுடைய சிறுவன் விபத்தில் உயிரிழந்துள்ளார்.
தனது சகோதரியுடன் நாகவில்லுவ பிரதேசத்தில் அமைந்துள்ள விற்பனை நிலையமொன்றுக்கு சென்று மீண்டும் வெளியே வரும் போது இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
விபத்தை ஏற்படுத்திய வேன் வாகனத்தின் சாரதி தப்பிச் செல்ல முற்பட்ட போது பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். விபத்து தொடர்பில் புத்தளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
யாழ். நீர்வேலிப் பகுதியில் 8 பேர் கொண்ட ஆவாக்குழுவினர் இருவர் மீது வாளால் வெட்டியுள்ளனர். வாள் வெட்டுக்கு இலக்காகிய இருவரும் யாழ்.போதனா வைத்தியசாலை அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நீர்வேலி செம்பாட்டுப் பிள்ளையார் கோவில் பகுதியில் வைத்து இன்று (07.05) மாலை சரமாரியாக வெட்டியுள்ளனர். அதே இடத்தினைச் சேர்ந்த இருவர் மீதே இந்த வாள்வெட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஆவா குழுவின் தலைவர் என்று அழைக்கப்படும் வினோத் மற்றும் அவரது நண்பர்கள் 7 பேர் 4 மோட்டார் சைக்களில் சென்று இருவர் மீதும் சரமாரியாக வாளால் வெட்டியுள்ளனர்.
அண்மையில், வாள் வெட்டுக்கு இலக்கான நபர் ஆவாக்குழுவினைச் சேர்ந்த ஒருவரை தகாத வார்த்தையால் பேசியதாகவும், அந்த கோபத்தின் நிமித்தம், ஆவா குழுவின் தலைவர் என்று அழைக்கப்படும் வினோத் மற்றும் ஏனைய 7 பேரும் 4 மோட்டார் சைக்கிளில் வெட்டியுள்ளனர்.
வாள்வெட்டுக்கு இலக்காகிய மற்றைய நபர் கோவில் பகுதியில் மாடு மேய்க்கச் சென்றவர் என்றும் இந்த வாள்வெட்டுச் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றதாகவும் கோப்பாய் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
பனைவளத்தை காப்போம் என்னும் தொனிப்பொருளில் விழிப்புணர்வு நிகழ்வு ஒன்றினை வவுனியா சுயாதீன இளைஞர் அமைப்பு முன்னெடுத்துள்ளது.
இன்று காலை வவுனியா, நெளுக்குளம் பிள்ளையார் ஆலயம் அருகில் உள்ள பனந்தோப்பு பகுதியில் இவ்விழிப்புணர்வு செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
தமிழ் மக்களின் அடையாளமாக விளங்குகின்ற பனை வளம் அழிக்கப்பட்டு வருவதால் நீர்பற்றாக்குறை ஏற்பட்டு வரட்சி நிலை ஏற்பட்டு வருகின்றது. அதை நம்பிய குடும்பங்களின் சுயசார்ப்பு ் பொருளாதார கட்டமைப்பும் சீர்குலைந்துள்ளது. இதனால் பனைவளத்தை காத்து எமது இருப்பை பாதுகாப்போம் எனத்தெரிவித்தே இளைஞர்கள் இந்த விழிப்புணர்வு செயற்திட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
இதன்தொடர்ச்சியாக வடக்கு இளைஞர்கள் பலர் ஒன்று கூடி மாலை மன்னார், நானாட்டான் பகுதியிவல் நுங்குத்திருவிழா என்னும் பெயரில் பனைசார் உற்பத்திப் பொருட்கள், பனம்பொருட்களுடன் விழ்புணர்வு செயற்திட்டத்தை முன்னெடுக்கவுள்ளனர்.
மெக்சிகோவில் இரண்டு பாறைகளுக்கிடையே உள்ள இடைவெளியில் ஒரு உடல் கண்டெடுக்கப்பட்டதையடுத்து சைக்கிளில் உலகைச் சுற்றி வந்த Holger Hagenbusch என்னும் ஜேர்மானியரும் Krzysztof Chmielewski என்னும் போலந்து நாட்டவரும் உயிரிழந்திருக்கலாம் என்று மெக்சிகோ அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
Holger Hagenbusch என்னும் ஜேர்மானியரும் Krzysztof Chmielewski என்னும் போலந்து நாட்டவரும் சைக்கிளில் உலகை சுற்றிவரும் முயற்சியில் ஈடுபட்டிருந்தபோது தென் மெக்சிகோவின் Chiapas மாகாண பகுதியில் வரும்போது காணாமல் போயினர்.
San Cristobal மற்றும் Ocosingo நகரங்களுக்கிடையில் உள்ள மோசமான சாலையில் பயணிக்கும்போது கட்டுப்பாட்டை இழந்து அவர்கள் இந்த பாறைச் சரிவில் விழுந்து இறந்திருக்கலாம் என்று விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அது அதிகம் விபத்து ஏற்படக்கூடிய ஒரு பகுதி என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். அது மிகவும் குறுகலான ஒரு பகுதி, அது மட்டுமின்றி பாறைகளுக்கிடையில் உள்ள சரிவு 200 மீற்றர்கள் வரை ஆழமானது என்று கூறியுள்ள அதிகாரி ஒருவர் அந்த இடத்தில் சைக்கிள் ஓட்டுவது மிகவும் ஆபத்தானது என்று தெரிவித்தார்.
ஜேர்மனி மற்றும் போலந்து தூதரகங்கள் மெக்சிகோ அதிகாரிகளுடன் இணைந்து விசாரணை மேற்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இந்நிலையில் பாறைச்சரிவில் ஒரு உடல் கண்டெடுக்கப்பட்டது. புகைப்படங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது அந்த உடல் Chmielewski உடையதாக இருக்கலாம் என்று பொலிசார் சந்தேகிக்கின்றனர்.
என்றாலும் DNA பரிசோதனைகளுக்குப்பின்தான் அடையாளத்தை உறுதி செய்ய முடியும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
கண்டெடுக்கப்பட்ட உடல் மிகவும் மோசமாக அழுகிய நிலையில் இருந்ததாகவும், கொலை செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்றும், காயங்கள் எதுவும் உடலில் காணப்படவில்லையென்றும், ஆனால் மண்டையோடு உட்பட பல எலும்புகள் உடைந்திருந்ததாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
உடல் கண்டெடுக்கப்பட்ட அதே இடத்தில் ஒரு சைக்கிளும் ஒரு ஷூவும் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவை காணாமல் போன ஜேர்மானியருடையதாக இருக்கலாம் என்று சந்தேகிப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் தொடர்ந்து அந்த இடத்தில் வேறு ஏதேனும் கிடைக்குமா என தேடும் முயற்சியைத் தொடர்ந்து வருகின்றனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை Hagenbusch காணாமல் போன செய்தியை அவரது சகோதரர் பேஸ்புக்கில் பதிவிட்டு அவர் சைக்கிளுடன் இருக்கும் ஒரு புகைப்படத்தையும் பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
தென் ஆப்பிரிக்காவில் குள்ளமான ஆணும், உயரமான பெண்ணும் திருமணம் செய்து கொண்டுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
பதண்டுவா என்ற நபர் குள்ளமான உருவம் கொண்டவராவார், இவர் வேலை செய்யும் அலுவலகத்தில் நொகுபோங்கா என்ற பெண் வேலை செய்து வந்தார். நொகுபோங்கா அதிகளவு உயரம் கொண்ட பெண்ணாவார்.
இந்நிலையில் பதண்டுவாவும், நொகுபோங்காவும் நட்பான பின்னர் டேட்டிங் சென்றுள்ளனர். இதையடுத்து இருவரும் உயிருக்கு உயிராக காதலிக்க தொடங்கிய நிலையில் சமீபத்தில் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
பொதுவாக திருமணம் செய்து கொள்ளும் தம்பதியில் ஆண் உயரமாகவும், பெண் அவரை விட சிறிது குள்ளமாகவும் இருப்பார்கள்.
ஆனால் இதற்கு எதிர்மாறாக இருந்த பதண்டுவா, நொகுபோங்கா ஜோடி திருமணம் செய்து கொண்டது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
இவர்களின் புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலான நிலையில் பலர் குள்ளமான ஆண் உயரமான பெண்ணை மணந்தது சரியெனவும், பலர் இது தவறு எனவும் கருத்து கூறி வருகிறார்கள்.
இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் பாலியல் தொழில் செய்து வந்த கல்லூரி மாணவி ஒருவர் டேட்டிங் வலைதளத்தால் அறிமுகமான இளைஞரை கொன்று புதைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்ப்பூர் நகரில் குடியிருந்து வரும் ப்ரியா சேத் என்ற 27 வயது இளம்பெண்ணே, ஏமாற்றுதல், பணம் பறித்தல், பாலியல் தொழில் மற்றும் கொலை தொடர்பில் கைதானவர்.
கல்லூரி படிப்பை இடைநிறுத்தம் செய்து கொண்ட ப்ரியா சேத் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்னர் விரைவில் பணம் சம்பாதிக்கும் நோக்கில் பாலியல் தொழிலில் இறங்கியுள்ளார்.
இந்த நிலையில் இவருக்கு துஷ்யந்த் சர்மா(27) என்ற ஜெய்ப்பூர் தொழிலதிபரின் நட்பு டிண்டர் டேட்டிங் செயலி மூலம் கிடைத்துள்ளது.
இருவரும் மிக நெருக்கமாக பழகி வந்த நிலையில் கடந்த 2-ஆம் திகதி இருவரும் சந்திக்க முடிவு செய்து ப்ரியா தங்கியிருக்கும் பாலாஜி நகர் குடியிருப்பில் துஷ்யந்த் சென்றுள்ளார்.
இந்த நிலையில் குளிர்பானத்தில் மயக்க மருந்தை கலந்து தந்து துஷ்யந்தை ப்ரியா மற்றும் அவரது காதலன் உள்ளிட்ட மூவரும் இணைந்து கயிறால் பிணைத்து ஒரு அறையில் பூட்டியுள்ளனர்.
பின்னர் துஷ்யந்தின் தந்தையை மொபைல் தொடர்பு கொண்டு 10 லட்சம் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.
இதனிடையே அந்த முயற்சி தோல்வியில் முடியவே, துஷ்யந்திடம் இருந்து பணம் எதிர்பார்க்க முடியாது என ப்ரியாவுக்கு தெரிய வந்தது.
ஆனால் அவரை வெளியே அனுப்பினால் அது தமக்கு ஆபத்தாக முடியும் என்பதால், தமது காதலர் Dikshant Kamra(20) மற்றும் அவரது நண்பர் Lakshya Walia(21) ஆகியோருடன் இணைந்து கொலை செய்து உடலை பெட்டியில் அடைத்து ஆமர் என்ற பகுதியில் புதைத்துள்ளனர்.
இதனிடையே பாலியல் வழக்கு தொடர்பாக சிக்கிய ப்ரியாவிடம் நடைபெற்ற விசாரணையில் கொலை மற்றும் பணம் பறித்தல், போதை மருந்து விற்பனை உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் அம்பலமாகியுள்ளது.
தற்போது துஷ்யந்த் சர்மா கொலை வழக்கு தொடர்பில் ப்ரியா மற்றும் அவரது காதலன் மற்றும் அவரது நண்பர் என மூவரையும் பொலிசார் கைது செய்துள்ளனர்
யாழில் நஞ்சருந்தி தற்கொலைக்கு முயற்சித்த தந்தையொருவர் உயரிழந்துள்ள நிலையில், பிள்ளைகள் இருவரும் அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர்.
சம்பவம் கடந்த 30ஆம் திகதி இடம்பெற்ற நிலையில், மூவரும் ஆபத்தான நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறான சந்தர்ப்பத்தில் தந்தை சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார். இது தொடர்பில் கிராம மக்கள் கூறுகையில்,
சாவகச்சேரி – மீசாலை கிழக்கு பகுதியை சேர்ந்த குறித்த குடும்பத்தில் கணவனுக்கும், மனைவிக்குமிடையில் அடிக்கடி முரண்பாடுகள் இடம்பெற்று வந்துள்ளது.
எனினும் அவர்களின் உறவினர்கள் கணவன் மனைவியரை சமாதானப்படுத்தி ஒற்றுமையாக வாழ வைத்துள்ளனர்.
இருந்தபோதும் அவர்களுக்குள் தொடர்ந்தும் பிரச்சினைகள் இருந்தாலும் 10 வயதான மகன் மற்றும் 4 வயது மகள் ஆகியோரின் நன்மை கருதியும் சமூகத்தின் நிலைப்பாட்டாலும் ஒரே வீட்டிலேயே வசித்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் அரசியல் கட்சியொன்றின் சார்பான அமைப்பினூடாக குறித்த குடும்பப் பெண்ணுக்கென தனியானதொரு தற்காலிக வீடு அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது.
இதனால் குடும்பப்பெண் கணவரைப் பிரிந்து இரண்டு பிள்ளைகளோடு தனியாக வாழத்தொடங்கியுள்ளார்.
மனைவியும், பிள்ளைகளும் தன்னை பிரிந்து வாழ்ந்ததால் மிகவும் மனமுடைந்து விரக்திக்குஉள்ளாகியதாலேயே குறித்த குடும்பஸ்தர் தவறான முடிவெடுத்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்துள்ளனர்.
புகையிரத இயந்திர சாரதிகள் சங்கம் நாளை நள்ளிரவு முதல் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளது. சங்கத்தின் செயலாளர் இந்திக தொடம்கொட கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு இது தொடர்பில் செய்தி வெளியிட்டுள்ளார்.
வேதன முரண்பாடுகள் திருத்தம் தொடர்பில் அதிகாரிகள் இதுவரை உரிய தீர்வினை பெற்றுக்கொடுக்காததால் இவ்வாறு தொழிற்சங்க நடவடிக்கையினை முன்னெடுக்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை , மின்சார பொறியியலாளர்கள் நாளைய தினத்தில் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் பணியில் ஈடுபடும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட திட்டமிட்டுள்ளனர்.
இதன்காரணமாக, மின் உற்பத்தி நடவடிக்கைகள் பாதிக்கப்படக்கூடும் என தெரிவிக்கப்படுவதுடன், இதன் காரணமாக பொதுமக்கள் சிக்கலுக்குள் உள்ளாக்கப்படுவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
மன்னாரில் இன்று அதிகாலை ஏற்பட்ட கடும் இடி மற்றும் மின்னல் தாக்கத்திற்கு உட்பட்டு 3 வீடுகள் சேதமாகியுள்ளன. மூதூர்வீதி மற்றும் சாவக்கட்டு பகுதியில் உள்ள மூன்று வீடுகளே இவ்வாறு மின்னல் தாக்கத்திற்கு உட்பட்டுள்ளன.
இதன்போது, குறித்த வீடுகளில் உள்ள பெறுமதிமிக்க மின்சாதனப்பொருட்கள் சேதமடைந்துள்ளதோடு, வீட்டு மின் இணைப்புக்களும், வீட்டு உடமைகளும் சேதமடைந்துள்ளன. வீடுகளில் அனைவரும் உறக்கத்தில் இருந்தபோதே குறித்த விபத்து சம்பவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், விபத்தின் பின்னர் மன்னார் பொலிஸார், இராணுவத்தினர், பிரதேசச் செயலக அதிகாரிகள், மாவட்டச் செயலக அதிகாரிகள், அனர்த்த முகாமைத்துவ பிரிவு அதிகாரிகள் ஆகியோர், பாதிக்கப்பட்ட வீடுகளுக்குச் சென்று பார்வையிட்டு சேத விபரங்களை பெற்றுக்கொண்டுள்ளனர்.
கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் நேற்று (06.05) நிறைவுக்கு வந்த 3வது தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் வவுனியாவைச் சேர்ந்த சிவநாதன் கிந்துஷன் ஆண்களுக்கான 5000 மீற்றர் ஓட்டப் போட்டியில் வெண்கலப் பதக்கங்களை வென்று அசத்தினர்.
வடமாகாணத்திற்கும் வவுனியா மாவட்டத்திற்கும் வெண்கலப்பதக்கம் பெற்று பெருமை சேர்த்த வவுனியா மாவட்ட விளையாட்டு வீரர் சிவானந்தன் கிந்துசன் இன்று பிற்பகல் 1 மணியளவில் தனது சொந்த இடமான வவுனியா புகையிரத நிலையத்தில் வந்து இறங்கியதும் வவுனியா மாவட்ட விளையாட்டுக்கழக உத்தியோகத்தர்கள், விளையாட்டுக்கழக உறுப்பினர்கள் அனைவராலும் மலர்மாலை அணித்து வரவேற்கப்பட்டுள்ளார்.
இதன்போது கருத்துத் தெரிவித்த கிந்துசன், கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டுப்போட்டிகளில் சுவட்டு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வெண்கலப்பதக்கம் பெற்றுள்ளேன். இதையிட்டு மிகவும் மகிழ்வடைகின்றேன்.
எனது இலட்சியம் தேசிய போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றிபெறுவதே. எனக்கு பயிற்றுவித்த நவனீதன் அவர்களுக்கும் எனது நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
வவுனியா மாவட்டத்தைப் பொறுத்தவரையில் பல திறமையான விளையாட்டு வீரர்கள் இருக்கின்றார்கள். எமது திறமைகளை வெளிக்கொண்டு வருவதற்கு எமக்கு பயிற்றுவிப்பாளர் ஒருவர் கிடைத்துள்ளார். அவருக்கு மேலும் வசதிகள் செய்து கொடுக்கப்படவேண்டும்.
விளையாட்டு அமைச்சினால் எமது பயிற்றுவிப்பாளருக்கு எவ்விதக் கொடுப்பனவுகளும் வழங்கப்படவில்லை. எமது வீரர்களுக்கு எமது பயிற்றுவிப்பாளர் இலவச சேவையினையே மேற்கொண்டு வருகின்றார்.
மேலும் அவருக்கு வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கும் இடத்தில் மேலும் பல வீரர்களை எமது மாவட்டத்தில் உருவாக்க முடியும் எனவும் நம்பவதாகவும் மேலும் தெரிவித்துள்ளார்.
ஒரே ஒரு நாள் மட்டும் தீவிரவாதியாக வாழ்ந்து உயிர்விட்ட உதவி பேராசிரியர் பற்றி உருக்கமான செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்தியாவின் காஷ்மீர் மாநிலம், சோபியான் மாவட்டத்தில் உள்ள பதிகாம் சைன்போரா பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் நேற்று நடந்த தாக்குதலில் 5 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இதில் ஒருவர் கந்தர்பல் மாவட்டத்தில் உள்ள சுந்தினா பகுதியை சேர்ந்த முகமது ரபி பட் (32) என்ற , உதவி பேராசிரியர் என தகவல் வெளியாகியுள்ளது.
காஷ்மீர் பல்கலைக்கழகத்தில் சோசியாலஜியில் உதவி பேராசிரியராக பணியாற்றி வந்த இவர், கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை முதல் காணாமல் போனார். இதுதொடர்பாக அவர் குடும்பத்தினர் பல்கலைக்கழகத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், அவர் ஹிஜ்புல் முஜாகிதின் தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்துவிட்டதாக தகவல் வெளியானது.
இந்நிலையில் நேற்று நடந்த துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட 5 தீவிரவாதிகளில் அவரும் ஒருவர் என தெரிய வந்துள்ளது. பாதுகாப்பு படையால் சுட்டுக் கொல்லப்படுவதற்கு முன்பாக தனது தந்தையிடம் செல்ஃபோனில் பேசியுள்ளார், முகமது ரபி.
அப்போது, உங்களை கஷ்டப்படுத்தி இருந்தால் மன்னித்து விடுங்கள். இதுதான் என் கடைசி அழைப்பு. நான் அல்லாவை சந்திக்கச் செல்கிறேன்’ என்று கூறியுள்ளார்.
கொல்லப்பட்ட முகமது ரபிக்கு திருமணமாகிவிட்டது. தீவிரவாத இயக்கத்தில் சேருவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு வரை கல்லூரியில் பாடம் நடத்தியுள்ளார்.
காஷ்மீர் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வு மாணவராக இருக்கும் முடாசிர் ரசூல் மிர் என்பவர் கூறும்போது, இது அதிர்ச்சியாக இருந்தது. ஒருபோதும் தீவிரவாத குழுக்கள் பற்றி எங்களிடம் அவர் விவாதித்ததே இல்லை. அல்லது அது தொடர்பான எந்த அடையாளத்தையும் அவர் காண்பித்ததும் இல்லை என்றார்.
அவரிடம் படித்த மாணவர்களும் முகமது ரபியை புகழ்கின்றனர். தீவிரவாத இயக்கத்தினர் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களை மூளைச் சலவை செய்து தங்கள் இயக்கத்துக்கு இழுப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.
அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சி மாணவர் ஒருவர் கடந்த ஜனவரி மாதம் முதல் காணாமல் போனார். அவரும் ஏதாவது ஒரு தீவிரவாத அமைப்பில் இணைந்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
இந்தியாவில் இருந்து இலங்கையின் யாழ்ப்பாணத்திற்கு படகில் தப்பி செல்ல முயன்ற 12 பேர் கைது செய்யப்பட்டனர். இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு போர் காரணமாக அங்கு வசித்த தமிழர்கள் பலர் இந்தியாவுக்கு தப்பி வந்த நிலையில் அவர்கள் இந்தியாவில் உள்ள அகதிகள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.
இலங்கையில் போர் முடிவுக்கு வந்ததையடுத்து, அகதிகள் முகாம்களில் உள்ளவர்கள் மீண்டும் இலங்கைக்கு தப்பிசெல்ல முயற்சிகள் செய்து வருகின்றனர். அவர்களை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைக்கின்றனர்.
இந்நிலையில், இலங்கையின் காங்கேசன் துறைமுகம் அருகே பாக் கடல் பகுதியில் இலங்கை கடற்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது சந்தேகத்துககுரிய வகையில் நின்று கொண்டிருந்த ஒரு படகை அவர்கள் சோதனையிட்ட போது அதில் சிலர் முறையான ஆவணங்கள் இல்லாமல் பயணித்தது தெரியவந்தது. உடனே அனைவரும் கைது செய்யப்பட்டனர்.
படகில் பயணம் செய்த நான்கு குழந்தைகள் உட்பட 12 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். பின்னர் அவர்கள் காங்கேசன் துறைமுகத்தில் உள்ள கடற்படை முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டு, பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்களை 19-ஆம் திகதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.